Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முன்னாள் ஹஜ் கான்சலருடன் சந்திப்பு! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | July 07, 2013 | , , , , , , ,


இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் ஹஜ் கான்சலாக சகோதரர் முபாரக் அவர்களும் துணை ஹஜ் கான்சலாக சகோதரர் S.D.மூர்த்தி அவர்களும் நியமிக்கப்பட்டு அற்புதமான பணிகளைச் செய்தனர்.

சகோதரர் மூர்த்தி ஐயா அவர்களால் ஹஜ் டூட்டியை எப்படி ஹாஜிகளுக்கான ஏற்பாடுகள் செய்ய இயலும்" என விக்கித்துப்போன அனைவரும் வெட்கித்துப் போகும் அளவிற்கு ஹாஜிகளுக்கு ஜித்தா ஏர்போட்டில் அத்தனை ஹித்மத்துகளை (பணிகள்), குடிதண்ணீர் விநியோகம், லக்கேஜ்கள் நகர்த்தி, பஸ்களில் ஏற்றி / இறக்கி இந்திய ஹாஜிகளை மாநில வாரியாக பிரித்து முஅல்லிம் - குரூப் லீடர்ஸ்களிடம் அனுகி சேவைகளை சிறப்புடன் செய்த சிறந்த அதிகாரி. 

பிறகு Community Welfare Consul-ஆக பொறுப்பேற்று பொதுமக்களுக்கு சிறப்பான சேவையும், தொண்டர்கள் மற்றும் நற்பணி அமைப்புகளுடன் நல்ல நெருக்கமான தொடர்புகள் கொண்டு பெயர் பெற்றுச் சென்ற தமிழர்.

பணிமூப்பு பெற்று இங்கிருந்து இலங்கைக்கு மாற்றலாகியுள்ள சகோதரர் மூர்த்தி ஐயா அவர்கள் தற்போதைய சவூதியின் அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு NITAKAT / AMNESTY க்காக SPECIAL RESCUE TASK FORCE OFFICER-ராக குறுகிய காலத்திற்காக மீண்டும் ஜித்தா-இந்திய தூதரகத்திற்கு வருகை தந்துள்ளதை பெருமையுடன் வரவேற்றோம்.

ராஃபியா 
வாழ்க வளமுடன், நலமுடன்

6 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இந்த மாதிரி அடிக்கடி சந்தியுங்க!
முன்ன மாதிரி அடிக்கடி எழுதுங்க! மச்சான்.
என்றும் நலமே தொடர துஆ!

Unknown said...

இதே போல் மாற்று மத நண்பர்களையும் நம் உடன்பிறப்பு போல் என்னும்போது,
நம் சமுதாயக் கண்மணிகளின் நல் குணங்களைப் பார்த்து கூட அவர்கள் இஸ்லாத்தின் மான்பைப்பார்த்து அல்லாஹ் ஹிதாயத் என்னும் நேர்வழிக்கு வரும் ஒரு வாய்ப்பாக கூட அமைக்கலாம்

ஜித்தாவின் இந்திய தூதரகத்திற்கு மீண்டும் பணிக்காக நியமிக்கப்படும் அளவுக்கு ஏற்க்கனவே தன் பணியை செவ்வனே செய்திருந்தால் தான் இதே போல் வாய்ப்புகள் யாருக்கும் வாய்க்கும்.

அல்லாஹ் இந்த சகோதரரின் பணியை செம்மைப்படுத்தி, மேலும் இஸ்லாத்தின்
போதனைகளும், மற்றும் இஸ்லாமிய நெறிமுறையும் இவரை இஸ்லாத்தின் பால் ஈர்க்க நாம் இறைவனை இறைஞ்சுவோம்.

அபு ஆசிப். ( மு. செ. மு )

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நல்ல சந்திப்'பூ'க்களால் நம் சமுதாயம் மலர்ந்து பாரெங்கும் நறுமணம் வீசச்செய்யட்டும்.....

ZAEISA said...

ரஃபி நீ அடிக்கடி அதிரை நிருபரில் எழுத வேண்டியதுதானே...உனக்கு நேரமில்லை என்றாலும்
காமென்டாச்சும் எழுது.....உனது நலத்திற்க்காக வேண்டி விரதமிருந்த அந்த 21குடும்பஙகளுக்கும் நானும் நன்றி சொன்னதா சொல்லிவிடு.....

Shameed said...

போட்டோவில் நான்கு பேர் இருக்கின்றார்கள் இதில் யார் சகோதரர் முபாரக் அவர்கள் .யார் S.D.மூர்த்தி ஐயா அவர்கள் யார் சகோ ராஃபியா அவர்கள் என்பதனை சுட்டி காட்டினால் நன்றாக இருக்கும்

Meerashah Rafia said...

//Shameed சொன்னது…
போட்டோவில் நான்கு பேர் இருக்கின்றார்கள் இதில் யார் சகோதரர் முபாரக் அவர்கள் .யார் S.D.மூர்த்தி ஐயா அவர்கள் யார் சகோ ராஃபியா அவர்கள் என்பதனை சுட்டி காட்டினால் நன்றாக இருக்கும்//


இடது புறம் முதல் நபர் - பச்சை தமிழனாக தெரிவது Welfare Consul திரு.மூர்த்தி அவர்கள்.
இரண்டாவது - ஹாஜா முகைதீன், ஜித்தா இசுலாமிய அழைப்பகத்தில் செயற்குழு உறுப்பினராகவும், சுயதொழிலும் புரிந்து வருகின்றார்
மூன்றாவது - சகோ.ரஃபியா (என் வாப்பா)
நான்காவது - உங்கள் அன்பு தம்பி (நானேதான்)

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு