Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும்..! - தொடர் - 3 24

அதிரைநிருபர் பதிப்பகம் | July 24, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்.

சென்ற அத்தியாயத்தில் ஈமானில் உறுதிமிக்கவர்களாக அல்லாஹ் குறிப்பிட்ட இரு பெண்மணிகளில் ஃபிர்அவ்னுடைய மனைவி ஆசியா அவர்கள் பற்றிய வரலாற்று சம்பவங்களில் அவர்களுடையை ஈமானின் உறுதியை கண்டோம்.

இஸ்லாமிய வரலாற்று ஏடுகளைப் புரட்டி பார்த்தால் இஸ்லாத்தின் பண்புகளுக்கும், தியாங்களுக்கும் முன்னுதாரணமாக இருப்பவர்கள் நம்முடைய ஈமானிய தாய்மார்கள். இபுறாஹீம் (அலை) அவர்களின் மனைவி அன்னை ஹாஜரா(அலை) அவர்கள், ஈசா (அலை) அவர்களின் தாய் மர்யம் (அலை) அவர்கள் என்று தொடர்ந்து அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மனைவியர்களில் அன்னை கதீஜா (ரலி) அவர்களை தொடர்ந்து இன்னும் ஏராளமான ஈமானிய, வீரமிக்க தியாகப் பெண்மணிகளின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து பெறவேண்டிய படிப்பினைகள் நிரம்பி இருக்கிறது.

நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹிரா குகையில் வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்களின் மூலம் அல்லாஹ்வால் நபி(ஸல்) அவர்கள் நபித்துவம் (வஹீ) கிடைக்கபெற்றது, நபித்துவம் பெற்ற நபி(ஸல்) அவர்கள் உள்ளம் நடு நடுங்கியவர்களாக, தன் அருமை மனைவி அன்னை ஹதீஜா அவர்களிடம் “என்னை போர்த்துங்கள் என்னை போர்த்துங்கள்” என்று சொல்லியவர்களாக நபி(ஸல்) அவர்கள் பதற்றமான நிலையுடன் வருகிறார்கள். அன்று அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் முஸ்லீமாக இருக்கவில்லை, ஆனால் அல்லாஹ்வை வாயளவில் நம்பியவர்களாக இருந்தார்கள், அல்லாஹ் தான் நம்மை படைத்தான் அவன் தான் நம்மை பாதுகாப்பான் என்ற நம்பிக்கை கொண்ட மக்காவாசிகளில் ஒருவராக மட்டுமே இருந்தார்கள். அல்லாஹ்வின் இல்லம் கஃபத்துல்லாவை இடிக்க வந்த அப்ரஹா என்ற மன்னனை, அபாபீல் பறவை கொண்டு அல்லாஹ் அழித்ததை மக்காவின் மலைகளில் நின்று அல்லாஹ்வின் வல்லமையை இலவசமாக கண்டுகழித்த அந்த மக்கத்துவாசிகளில் ஒருவராக அல்லாஹ்வை நாவளவில் நம்பியவர்களாக இருந்தார்கள்.

தன்னுடைய கணவர் பதற்றத்துடன் வேர்த்து விறுவிறுத்து வருகிறார், இங்கு அன்னை ஹதீஜா(ரலி) அவர்களின் அனுகுமுறை தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பெரும்பாலான மார்க்க அறிஞர்களால் எடுத்துரைக்கப்படுகிறது.

இது போன்ற நியாயமான சந்தர்ப்பத்தை நம்முடைய வாழ்வில் நடைபெறுவதை கொஞ்சம் நாம் அவதானிக்க கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ்வுடைய பள்ளியில் மார்க்கத்துக்கு விரோதமான காரியம் நடைபெறுகிறது, அதனை ஒருவர் தடுக்கிறார் அல்லது கண்டிக்கிறார். இதனால் பிரச்சினைகள் ஏற்படுகிறது. பள்ளிவாசலை விட்டு தன் வீட்டிற்கும் வருகிறார். உடனே செய்தி கேள்விபட்ட வீட்டிலுள்ளோர்களின் அடுத்த்டக்கட்ட கேள்வி அல்லது கண்டிப்பு “உங்களுக்கு / உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை? யாரு எக்கேடு கெட்டு போனால் என்ன? ஏன் இந்த ஊர் வம்பு?” என்று சொல்லி அல்லாஹ்வின் மார்க்கத்தை மற்றவர்கள் குழி தோண்டி புதைத்தாலும், நமக்கு கவலையில்லை நாம் பிரச்சினையில்லாமல் சந்தோசமாக இருந்தால் போதும் என்று சுயநலவாதிகளாக அல்லவா நாம் உள்ளோம்.

ஆனால் நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட அந்த இறுக்கமான ஒருவித மனநிம்மதியற்ற சூழலில் தனக்கு ஏதோ தீங்கு நடந்து விட்டது என்று எண்ணி வருந்திய நிலையில் இருந்தார்கள். அந்த சந்தர்பத்தில் தான் அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் கூறினார்கள். “நீங்கள் நினைப்பது போல் உங்களுக்கு எந்த தீங்கும் வரவில்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அல்லாஹ் உங்களை இழிவுபடுத்த மாட்டான், அவன் உங்களை கேவலப்படுத்த மாட்டான். ஏழைகளுக்கு உதவி செய்கிறீர்கள், பிரச்சினைகளில் அவதியுறுபவர்களுக்கு உதவி செய்கிறீர்கள், அனாதைகளை ஆதரிக்கிறீர்கள், குடும்பத்தவர்களை அனுசரித்து நடக்கிறீர்கள், விருந்தாளிகளை கண்ணியப்படுத்துகிறீர்கள். இப்படிப்பட்ட நல்ல மனிதரை அல்லாஹ் நிச்சயம் இழிவுபடுத்தமாட்டான்” இப்படியாக அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் ஆறுதல் கூறியதோடு அல்லாமல். ஒரு முக்கியமான வேலையைச் செய்கிறார்கள், முந்தைய வேதமான இன்ஞ்சீல் வேதத்தை கற்றறிந்த தன்னுடைய சிறிய தந்தையின் மகனார் ‘வரகத்து இப்னு நவ்ஃபுல்’ அவர்களிடம் அழைத்து சென்றார்கள்.

வரகத்து இப்னு நவ்ஃபல் அவர்கள் நபி(ஸல்) அவர்களைப் பார்த்து சொல்கிறார், “உங்களிடம் மூஸாவிடம் வந்த நாமூஸ் என்ற ஜிப்ரீல் வந்திருக்கிறார்”. என்று இஞ்சீல் வேதத்தில் உள்ள உண்மையை எடுத்துச் சொல்லி, முஹம்மதே நீங்கள் ஜிப்ரீல் கொண்டு வரும் இறை செய்தியை வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும், அப்படி நீங்கள் பிரச்சாரம் செய்யும் போது உங்கள் மக்களை உங்களை ஊரைவிட்டு விரட்டுவார்கள் என்ற மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தியைச் சொல்கிறார் அந்த வரகத்து இப்னு நவ்ஃபல். நபி(ஸல்) அவர்கள் என் மக்கள் என்னையுமா ஊரைவிட்டு துரத்துவார்கள் என்று ஏங்கியவர்களாகக் கேட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தில்தான் அன்னை ஹதீஜா(ரலி) அவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். 

நம்முடைய பெண்களாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? “உங்களுக்கு ஏதோ பேய் பிசாசு பிடித்திருக்கிறது” தட்டு தாயத்து என்று குஃப்ரின் பக்கம் இழுத்துச் செல்லப்பட்டிருப்போம், ஜின் வைத்தியம் என்று போலி வைத்தியங்களுக்கு நம்முடைய ஈமானை பறிகொடுத்திருப்போம். ஆனால் வார்த்தை அளவில் அல்லாஹ்வை நம்பிய அந்த ஈமானியப் பெண் அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு ஆறுதல் கூறி இஸ்லாத்தை ஏற்றதோடு அல்லாமல் தன்னுடைய செல்வத்தாலும், உடமைகளாலும், உள்ளத்தாலும் தூய இஸ்லாத்திற்காக தியாகம் செய்தார்கள். 

அன்னை ஹதீஜா(ரலி) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த பரிசு என்ன தெரியுமா? அன்னை ஹதீஜா அவர்களுக்கு சலாம் சொல்லச் சொல்லி ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ் கூறி, அவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு அமைதியான மாளிகை கட்டப்பட்டுள்ளது என்று நன்மாராயம் கூறுங்கள் என்று அல்லாஹ் தன்னுடைய உண்மை அடியார் மீது அருள் பொழிந்தான் என்று வரலாறுகளில் படிக்கும் போது நம் கண்கள் கலங்குகிறது. 

ஒரு ஊரின் பெரியவர், அல்லது நல்ல அந்தஸ்தில் இருப்பவர், ஏன் மார்க்க பிரச்சாரம் செய்யும் ஆலிம் யாராவது நம் ஊருக்கு வந்திருந்து நம்மைக் கண்டதும் அவர் சலாம் சொல்லும் போதும் எப்படி நம்முடைய உள்ளம் சந்தோசப்படும், இது ஒரு இயல்பான அன்றாட நடவடிக்கைகள், ஆனால், யார் யாருக்கு சலாம் சொல்வது?  இந்த உலகில் இறுதி இறைத்தூதர் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மூலம் உலகின் முதல் பெண்மணியாக இஸ்லாத்தை ஏற்ற அன்னை ஹதீஜா(ரலி) அவர்களுக்கு அல்லாஹ் சலாம் சொன்னான் என்றால், இந்த பாக்கியம் அவர்களுக்கு எதனால் கிடைத்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 

இஸ்லாத்திற்காக இவ்வுலக இன்பங்களை இழந்தார்கள், தன்னிடம் இருந்த அனைத்து பொருளாதாரத்தையும் இஸ்லாத்திற்காக அற்பனித்தார்கள் அந்த செல்வ சீமாட்டி. அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மிகவும் பிரியமான மனைவி அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள். அல்லாஹ்விடமிருந்து சலாத்தையும், சொர்க்கத்தில் தனக்கான வீட்டையும் பெற்றுக் கொண்டவர்கள்.

நம்மில் ஓவ்வொரு இஸ்லாமிய சகோதரனும், சகோதரியும் தங்களுடையை மனசாட்சியைத் தொட்டு சிந்தித்துப் பாருங்கள். மார்க்க விசயத்தை பேசும்போது பிரச்சினை என்று வந்தவுடன் வீட்டில் உள்ளோர் தனது பிள்ளையைப் பார்த்தோ, மனைவி தன் கணவனை பார்த்தோ அல்லது ஒரு கணவன் தன் மனைவியை பார்த்தோ  “அல்லாஹ்வின் மார்க்கத்தை தானே பேசினீர்கள், குர்ஆன் ஹதீஸை தானே பேசினீர்கள், ஹக்கை தானே எடுத்துச் சொன்னீர்கள் அல்லாஹ் உங்களைக் கைவிட மாட்டான், அல்லாஹ் உங்களை பாதுகாப்பான் என்று சொல்லும் பிறப்பின் அடிப்படையில் முஸ்லீம்களாக வாழ்ந்து வரும் பெண்களையும் / ஆண்களையும் இன்று பார்க்க முடியுமா?

நபித்துவத்தின் 10ம் ஆண்டு நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய அருமை மனைவி அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் மரணமடந்த போது நபி(ஸல்) அவர்கள் மிகவும் கவலையுற்றார்கள். இஸ்லாத்தில் அந்த ஆண்டை கவலைக்குரிய வருடம் என்று வர்ணித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் எத்தனையோ நெருக்கமானவர்களை இழந்திருக்கலாம், எத்தனையோ சொத்துக்களை இழந்திருக்கலாம், ஆனால் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக தன்னுடைய பொருளாலும், உடலாலும், உணர்வுகளாலும் பாடுபட்ட ஒரு சொத்தையை அல்லவா நான் இழந்துள்ளேன் என்று சொல்லி கவலையுற்றார்கள் நபி(ஸல்) அவர்கள். செல்வங்கள் நிறைந்த பெண்களாக உள்ள மனைவிமார்கள் இஸ்லாத்திற்காக தங்களுடைய பொருளாதாரத்தை செலவழித்த அன்னை ஹதீஜாவுக்கு எடுத்துக்காட்டாக வாழ்கிறார்கள் என்று நம் பெண்கள் யாரையாவது உதாரணமாக இன்று காட்ட முடியுமா?

அன்னை ஹதீஜா(ரலி) அவர்களின் வாழ்வின் மூலம் நமக்கு மிகப்பெரும் படிப்பினைகள் உள்ளது.

இவ்வுலகில் முஸ்லீமாக வாழும் போது பல இன்னல்கள், சிரமங்கள் ஏன் நம் சகோதரர்களின் உயிர் பறிப்போகும் நிலை ஏற்பட்டாலும் நம்முடைய ஈமானை பறிகொடுத்து விடக்கூடாது.

அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் வாழ்வைப் போல் வாழ்ந்து அவர்களின் நற்கருமங்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, இஸ்லாத்திற்காக தியாகம் செய்து மரணிக்க வேண்டும், எப்படி நபி(ஸல்) அவர்கள் ஹதீஜா(ரலி) அவர்கள் மரணித்தபோது கவலையுற்றார்களோ அதுபோல். என் கணவரும் என்னுடைய மரணித்திற்கு பிறகு பொருளாலும், உடல் உழைப்பாலும், அறிவாலும் இஸ்லாத்திற்காக நான் செய்த தியாகத்தை நினைத்து என் நினைப்பில் அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும் என்று என்றைக்காவது நம் இஸ்லாமிய பெண்மணிகள் எண்ணத்தில் துளிர்த்ததுண்டா? ஆம் நாம் நினைக்க வேண்டும்.

அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் போல் இஸ்லாத்திற்காக பொருளாலும், அறிவாலும், உடலுழைப்பாலும் உள்ளத்தாலும்  தியாகம் செய்யும் பெண் / ஆண் மக்கள் உருவாக வேண்டும்.

இஸ்லாமிய உறுதியில் அன்னை ஹதீஜா (ரலி)அவர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்தார்கள் என்று சொன்னால் மிகையில்லை.

அல்லாஹ் நம் எல்லோரையும் இது போன்ற ஈமானியத் தாய்மார்களிடமிருந்து நல்ல படிப்பினை பெற்று நன்மக்களாக ஆக்கி அருள் புரிவானாக. ஆமீன்.

M தாஜுதீன்

24 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல் படிப்பினைத் தொகுப்பு!

இன்சா அல்லாஹ் நாமும் அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் போல் இஸ்லாத்திற்காக பொருளாலும், அறிவாலும், உடலுழைப்பாலும் உள்ளத்தாலும் தியாகம் செய்பவர்களாக நாமும் ஆவோமாக, ஆமீன்.

sabeer.abushahruk said...

வாழ்வின் ஈடேற்றத்திற்கான போதனைகள் தொடர் நெடுகிலும் நம் குர் ஆன் ஹதீஸ்களிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்டு வருவது நமக்கு மிகவும் பலனுள்ளதாக இருக்கின்றது.

வாழ்த்துகள் தாஜுதீன்.

Ebrahim Ansari said...

வாழ்வின் ஈடேற்றத்திற்கான போதனைகள் தொடர் நெடுகிலும் நம் குர் ஆன் ஹதீஸ்களிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்டு வருவது நமக்கு மிகவும் பலனுள்ளதாக இருக்கின்றது.

வாழ்த்துகள் தாஜுதீன்.

نتائج الاعداية بسوريا said...

இஸ்லாத்திற்காக தன் சொத்து சுகம், அனைத்தையும் தியாகம் செய்து , அல்லா ஒருவனின் பொருத்தமே குறிக்கோளாக வாழ்ந்து காட்டிய அன்னை கதீஜா (ரலி)
அவர்களின் தியாகம் நம் சமுதாய பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி ஒரு நல்ல முன்மாதிரி.

தன் கணவன் பதட்டத்துடன் வெளியிலிருந்து வரும்போது, காரணம் அறியாமல் அவர்களுக்கு கூறிய ஆறுதல் வார்த்தைகள் , அனைத்து பெண்ணினமும் , புருவம் உயர்த்தி , பாராட்டி பின்பற்றப்படவேண்டிய ஒன்று.

அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உரக்கச் சொல்ல வேண்டியவைகள் ! இந்த தொடரின் கருப் பொருள் !

Iqbal M. Salih said...

நம் அன்னை கதீஜா (ரலி) அவர்களின் அசைக்கமுடியாத ஈமானையும் அன்னை அவர்களின் ஒப்பற்ற தியாகத்தையும் தம்பி தாஜுத்தீன் அவர்கள் எளிமையாக எடுத்துரைத்து இருப்பதனைத்தும் சத்தியமான வார்த்தைகள்!

மாஷா அல்லாஹ்!

نتائج الاعداية بسوريا said...

// ஃபிர்அவ்னுடைய மனைவி ஆசியா//

எந்தக்கிரந்தங்களிலும் , இதற்க்கு ஆதாரம் இருப்பதாக நான் இதுவரை கேட்டதுமில்லை,பார்த்ததுமில்லை.

பிரவுனின் மனைவி என்று மட்டுமே குர்ஆனில் வருகின்றது. ஆசியா என்ற பெயர் எதிலும் இருப்பதாக தெரிய வில்லை. தெரிந்தவர்கள் ஆதாரம் தந்தால் நானும் நாலு பேருக்கு எடுத்துச்சொல்வேன்.

அபு ஆசிப்.

aa said...

@அபு ஆசிப்

//பிரவுனின் மனைவி என்று மட்டுமே குர்ஆனில் வருகின்றது. ஆசியா என்ற பெயர் எதிலும் இருப்பதாக தெரிய வில்லை. தெரிந்தவர்கள் ஆதாரம் தந்தால் நானும் நாலு பேருக்கு எடுத்துச்சொல்வேன். //

كَمُلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ إِلَّا آسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ، وَمَرْيَمُ ابْنَةُ عِمْرَانَ، وَخَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ، وَإِنَّ فَضْلَ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَام»

It is confirmed in the Two Sahihs from Abu Musa Al-Ash`ari that the Messenger of Allah said,

(Many men have reached the level of perfection, but none among women have reached this level except Asiyah -- Fir`awn's wife, Maryam--the daughter of `Imran, and Khadijah--the daughter of Khuwaylid. And no doubt, the superiority of `A'ishah to other women is like the superiority of Tharid to other meals.)

ஆதாரம்: தஃப்ஸீர் இப்னு கதீர்
பார்க்க: http://abdurrahman.org/qurantafseer/ibnkathir/

aa said...

தமிழாக்கம்:

3411. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லாவகை உணவுகளை விடவும் 'ஸரீத்' உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்."
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புஹாரி
Volume :4 Book :60
பார்க்க: http://tamililquran.com/bukharidisp.php?start=3406

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.மிக அருமையான ஆக்கம் தொடர அல்லாஹ் துணை புரிவானாக ஆமீன்.

Yasir said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.மிக அருமையான ஆக்கம் தொடர அல்லாஹ் துணை புரிவானாக ஆமீன்.

Shameed said...

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் அரியதொரு ஒப்பீடு

Unknown said...

Mr. Ahmed Firdous,

Inshaa Allaah I will clarify with this Holy verses and hadeeth with well known aalims those who are guiding us with only pure hadeeth without any bidath.

Thank you for quoting those verses and hadeeth.

abu asif.

aa said...

@Abu Asif

You are most welcome. Kindly post the updates here after you get the required clarification.

//aalims those who are guiding us //

If you don't mind, May I know who are those aalims guiding you? This is just for my information. :)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அனைவருக்கும் வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்),

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கு, வாசித்த அனைத்து சகோதரர், சகோதரிகளுக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா..

சகோதரர் ஃபிர்தவ்ஸ் ஹதீஸ் ஆதாரத் சுட்டி மற்றும் தகவலுக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரா..

தம்பி ஃபிர்தவ்ஸ், எந்த ஆலிமிடம் பாடம் படித்தீர்கள்? என்ற கேள்வி இந்த பதிவிற்கு தொடர்புடையதாக தெரியவில்லை. ஏதாவது ஒரு ஆலிம் பெயரை அப்துல் காதர் காக்க சொல்ல... அந்த ஆலிம் அந்த கொள்கை, எந்த கொள்கை என்று விவதாகமாக போக வாய்ப்புள்ளதால், உங்கள் உரையாடலை தொடர உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிந்துவிட்டு அப்துல் காதர் காக்காவிடம் தனி மின்னஞ்சலில் கேட்டுக்கொள்ளுங்கள். இது என் அன்பான வேண்டுகோள்.

Unknown said...

//. “நீங்கள் நினைப்பது போல் உங்களுக்கு எந்த தீங்கும் வரவில்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அல்லாஹ் உங்களை இழிவுபடுத்த மாட்டான், அவன் உங்களை கேவலப்படுத்த மாட்டான். ஏழைகளுக்கு உதவி செய்கிறீர்கள், பிரச்சினைகளில் அவதியுறுபவர்களுக்கு உதவி செய்கிறீர்கள், அனாதைகளை ஆதரிக்கிறீர்கள், குடும்பத்தவர்களை அனுசரித்து நடக்கிறீர்கள், விருந்தாளிகளை கண்ணியப்படுத்துகிறீர்கள். இப்படிப்பட்ட நல்ல மனிதரை அல்லாஹ் நிச்சயம் இழிவுபடுத்தமாட்டான்” //

என்னே ஒரு ஆறுதலான வாரத்தைகள்,
இப்பேர்ப்பட்ட பெண்மணிகள் மனைவியாக அமைந்தால்,
அந்த ஆண்மகனின் வாழ்வே ஒரு வசந்தம்தான்.

இத்தகைய பெண்மணிகள் , குடும்பத்துக்கு ஒன்று இருந்தாலே போதும் , ஊரில் உள்ள அனைத்து பித்னாக்கள், குழப்பங்கள், கோள், புறம், பொய்,மற்றும் அனைத்து அனாச்சார விஷயங்களும் ஊரை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு விடும்.

அபு ஆசிப்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

மார்க்க விசயத்தை பேசும்போது பிரச்சினை என்று வந்தவுடன், மனைவி தன் கணவனை பார்த்து “அல்லாஹ்வின் மார்க்கத்தை தானே பேசினீர்கள், குர்ஆன் ஹதீஸை தானே பேசினீர்கள், ஹக்கை தானே எடுத்துச் சொன்னீர்கள் அல்லாஹ் உங்களைக் கைவிட மாட்டான், அல்லாஹ் உங்களை பாதுகாப்பான் என்று சொல்லும் பிறப்பின் அடிப்படையில் முஸ்லீம்களாக வாழ்ந்து வரும் பெண்களையும் இன்று காண்பது மிக மிக அறிதே

aa said...

//தம்பி ஃபிர்தவ்ஸ், எந்த ஆலிமிடம் பாடம் படித்தீர்கள்? என்ற கேள்வி//

நான் அப்படி கேட்கவே இல்லை தாஜுத்தீன் காக்கா. :)

தன்னுடைய கணவன் வழிகேடனாகவும், கொலைகார கொடுங்கோலனாகவும் இருந்த போதிலும் யாருக்கும் அஞ்சாமல் சத்தியத்தைச் ஏற்று அசத்தியத்திற்கெதிராக அல்லாஹ்விடம் இறைஞ்சி உலக மக்களுகே முன்மாதிரியாக திகழ்ந்த ஆசியா அம்மையாரின் மனோதிடத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் நசீபாக்குவானாக.

அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி
ahamed.firdhous@gmail.com

Unknown said...

Dear Mr. Firdous,

Due to obey Mr.Thajudeen's instruction on this comments,and to keep the respect between this comments, Inshaa Allah We will meet at other e-mail contact to clear our doubts on this issue.

By the mercy of almighty i will be with you with quran verses and saheeh hadeeth to make gentle talk on this matter Inshaa Allah.

I invocate Allah for you and me and other our friends for strongest EEMAAN and to shower his blessings until our death.

adiraimansoor said...


"இது போன்ற நியாயமான சந்தர்ப்பத்தை நம்முடைய வாழ்வில் நடைபெறுவதை கொஞ்சம் நாம் அவதானிக்க கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ்வுடைய பள்ளியில் மார்க்கத்துக்கு விரோதமான காரியம் நடைபெறுகிறது, அதனை ஒருவர் தடுக்கிறார் அல்லது கண்டிக்கிறார். இதனால் பிரச்சினைகள் ஏற்படுகிறது. பள்ளிவாசலை விட்டு தன் வீட்டிற்கும் வருகிறார். உடனே செய்தி கேள்விபட்ட வீட்டிலுள்ளோர்களின் அடுத்த்டக்கட்ட கேள்வி அல்லது கண்டிப்பு “உங்களுக்கு / உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை? யாரு எக்கேடு கெட்டு போனால் என்ன? ஏன் இந்த ஊர் வம்பு?” என்று சொல்லி அல்லாஹ்வின் மார்க்கத்தை மற்றவர்கள் குழி தோண்டி புதைத்தாலும், நமக்கு கவலையில்லை நாம் பிரச்சினையில்லாமல் சந்தோசமாக இருந்தால் போதும் என்று சுயநலவாதிகளாக அல்லவா நாம் உள்ளோம்."


தான் பொதுநல வாதியா அல்லது சுயனநலவாதியா என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள ஓவ்வொரு மூமினுக்கும் இந்த செய்தி திரும்ப திரும்ப காதில் ஒலித்துக்கொண்டே இருக்கவெண்டு

adiraimansoor said...

தான் பொதுநல வாதியா அல்லது சுயனநலவாதியா என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள ஓவ்வொரு மூமினுக்கும் இந்த செய்தி திரும்ப திரும்ப காதில் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்

adiraimansoor said...

//நம்முடைய பெண்களாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? “உங்களுக்கு ஏதோ பேய் பிசாசு பிடித்திருக்கிறது” தட்டு தாயத்து என்று குஃப்ரின் பக்கம் இழுத்துச் செல்லப்பட்டிருப்போம், ஜின் வைத்தியம் என்று போலி வைத்தியங்களுக்கு நம்முடைய ஈமானை பறிகொடுத்திருப்போம். ஆனால் வார்த்தை அளவில் அல்லாஹ்வை நம்பிய அந்த ஈமானியப் பெண் அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு ஆறுதல் கூறி இஸ்லாத்தை ஏற்றதோடு அல்லாமல் தன்னுடைய செல்வத்தாலும், உடமைகளாலும், உள்ளத்தாலும் தூய இஸ்லாத்திற்காக தியாகம் செய்தார்கள். //

தலைப்பை ஒட்டிய சரியான எடுத்துக்காட்டுகள்
"அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும்" மிகவும் அருமை

Anonymous said...

//"உங்களுக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை? யார் எக்கேடு கெட்டு"......?//

இது சுய பாதுகாப்பு தேடிக்கொள்ளும் கூட்டம் சொல்லும் சொல் இருந்தாலும் இது பரவாயில்லை!. ஆபத்தான இன்னொரு கூட்டம்மும் ஒன்று இருக்கிறது. இஸ்லாத்தின் பெயரில் இரண்டு பக்கமும் தீமூட்டி' எரியும் வீட்டில் எடுத்ததெல்லாம் மிச்சம்' என்று கிடைத்ததை யெல்லாம் மூட்டை கட்டிய கூட்டம் அது ''நீ அவல் கொண்டு வா! நான் உமி கொண்டு வர்றேன்!. ஊதி-ஊதி பிரிச்சு உமி உனக்கு அவல் எனக்கு'' என்று இஸ்லாமிய ஆதரவாளர்களை ஏமாற்றி அதை தன் வளர்ச்சிக்கு பயன் படுத்திக்கொண்ட 'ஆட்டுத் தோல் போர்த்திய நரியும்' உண்டு. இஸ்லாதிற்காக தியாகம் செய்பவர்களை ஏமாளிகளாக ஆக்கி தன் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டவர்களும் மலிந்த காலம் இது. இருந்தாலும்.சுறா மீன்கள் நிறைந்த கடலில் நீந்தத் தூண்டும் கட்டுரை இது. துணிவோடு நீந்துவோம். அல்லாஹ் வெற்றி கரை காட்டுவான் ஆமீன்.

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

aa said...

@Abu Asif

Allaahumma aameen.

You are most welcome for the private email conversation. Looking forward for your request.

Ahamed Firdhous Salafi
ahamed.firdhous@gmail.com

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு