Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் (குடி) தண்ணீர் - பரிந்துரை ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2013 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

அண்மைய அதிரை வலைப்பதிவுகளில் தண்ணீர்…தண்ணீரென குடிநீர்ப் பற்றாக்குறை, நிலத்தடி நீரை சேமிக்காததால் வறண்ட நமதூர் நீர்வளம் குறித்த தகவல்களைக் காண நேர்ந்தது.

ஊரில் மழையே இல்லாமல் குடிநீர்க்குழாயில் நீர் வராதிருந்தபோது "எனக்கு குளிக்கக் குடிநீர் கிடைக்கவில்லை" என கருத்திட்டதையும் கண்டு சிரிக்காமலிருக்க இயலவில்லை!

நேற்றைய அரை நாள் அதிரைப் பயணத்தின்போது, சேதுச்சாலையில் ஹாஜா நகர்/கடற்கரைத்தெரு துவக்கத்திற்கெதிரே பேரூராட்சி இலவசக் குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் அருகிலுள்ள குட்டையில் விரயமாகும் காட்சி (காணொளியாக இணைப்பில்).

குறுகிய கால அவகாசமே இருந்ததால் உரிய தடுப்பேதும் செய்ய இயலவில்லை. சில நேரம் கழித்து இரண்டொரு பெண்கள் அங்கு தண்ணீர் சேகரிக்க குடங்களுடன் வந்து விட்டனர்!

இதுபோல் நீர் விரயமாவதைத் தடுக்க, நகரங்களில் உள்ளது போன்று இலவசக் குடிநீர்க் குழாய்களுக்கு பூட்டுப் போட்டு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பொதுமக்கள் பயன்படுத்துமாறு சேவையாற்ற அந்தந்த பகுதி பேரூராட்சி உறுப்பினர்களையோ அல்லது குடிநீர் நிலையப் பணியாளர்களையோ அதிரை பேரூராட்சி நிர்வாகம் பணிக்கலாமே.

Shafi M.I.

7 Responses So Far:

Anonymous said...

இந்த மாதிரி தண்ணீர் வீண் விரயமாகும் குழாய்களில் நாம் சரியான வால்வு வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஃபர்ஸ்ட் எய்டுக்கு இருக்கவே இருக்கு கொஞ்சம் "தேங்காச்சம்பை" எடுத்து தற்காலிக அடைப்புக்காக அடைத்துக்கொள்ளலாம்.

நாம் உலகில் வறண்ட/இருண்ட கண்டம் ஆப்பிரிக்கா என்று உறுதியாய் நம்பியிருக்கிறோம். ஆனால் நம் நாட்டில் சரியான தொலைநோக்கு திட்டங்கள் அமலில் இல்லாததால் பரவலாக தண்ணீர் பங்கீடு பெரும் பிரச்சினையாக இன்று உருவெடுத்துள்ளது. ஊட்டச்சத்து குறைவோடு பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு விகிதம் ஆப்பிரிக்காவை விட நம் நாட்டில் அதிகமாம் யுனெஸ்கோ கூற்றுப்படி.

சமீபத்தில் மத்திய அரசு நமது தஞ்சை டெல்டா விவசாய நிலங்களில் "மீத்தேன்" வாயு எடுக்கிறேன் பேர்வழி என்று சொல்லி ஆழ்துளைக்குழாய்களை பல நூற்றுக்கணக்கான அடி ஆழத்தில் இறக்கி அங்குள்ள தண்ணீரை உறிஞ்சி அப்புறப்படுத்தி விட்டு இந்த பாழாய்ப்போன மீத்தேன் வாயுவை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதனால் அப்பகுதி விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் வற்றி ஏற்கனவே பொய்த்துப்போன பருவ மழையால் வெந்து போய் இருக்கும் விவசாயிகளின் வாழ்வில் நன்கு வேலைப்பாய்ச்சி இருக்கிறது.

இயற்கையின் முதுகெலும்பை முறித்து விட்டு அதன் பின் செயற்கையாய் வரும் நம் நாட்டின் வளர்ச்சி யாருக்குத்தான் தேவையோ???

இதில் வறுமைக்கோட்டின் இலக்கணத்தை வரையறுப்பதில் நம் நாட்டின் அரசாலும் அரசியல்வாதிகள் அவ்வப்பொழுது தமாசு பண்ணிக்கொண்டிருக்கின்றனர் இப்படி ஒரு ரூபாயில் ஒரு மனிதன் நன்கு சாப்பிட முடியும். வெறும் 36 ரூபாயில் ஒரு குடும்பம் ஒரு நாளை ஓட்டி விட முடியும் என்று.

இன்றொரு விசயத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நம் ஊரில் எவ்வளவோ அரசின் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த வேண்டி இருக்க தெருவுக்கு தெரு, முடுக்குக்கு முடுக்கு சிமெண்டால் ஆன காண்க்ரீட் தரையை கொஞ்சமும் மண் தரை தெரியாத படி முற்றிலும் பூசி போட்டு விட்டனர். இதனால் வாகனத்தில் செல்பவர்கள் வேகமாக முறுக்கிக்கொண்டு செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் ஒரு புறமிருக்க பருவ காலங்களில் பெய்யும் மழை நீர் மண்ணால் உறிஞ்சப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு அதனால் நம் சுற்று வட்டார நிலத்தடி நீரின் அளவு வறண்ட மாவட்டங்கள் போல் நூற்றுக்கணக்கான அடி அதளபாதாளத்திற்கு சென்று வருங்காலங்களில் பெரும் தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தி விடுமோ என இப்பொழுதே நாம் அஞ்ச வேண்டியுள்ளது.

தொடரும் 1/3

Anonymous said...

தொடர்கிறது 2/3

சமீபத்தில் முகப்புத்தகத்தில் படித்த ஒரு செய்தி : கத்தார் நாட்டைச்சார்ந்த ஒரு இளம் தம்பதியர் தங்களுடைய வாகனத்தில் சுற்றுலா போல் அருகில் உள்ள சவுதி அரேபியாவிற்கு வந்து வரும் வழியில் ஒரு பெரும் பாலைவனம் குறிக்கிட அத்தம்பதியினர் டிசர்ட் சஃபாரி என்னும் பாலைவனச்சவாரிக்காக பாலைவனத்திற்குள் வண்டியை செலுத்தி கொஞ்ச தூரம் சென்றதும் அவர்களால் திரும்பி மெயின் ரோட்டை அடையும் வழியை கண்டு பிடிக்க முடியவில்லை. சுற்றிலும் எங்கு பார்த்தாலும் ஆள் ஆரவாரமில்லா மணற்குவியல்கள். வண்டியும் இடத்தை விட்டு நகர மறுக்க பிறகு மனைவியை மட்டும் வாகனத்தில் இருக்க வைத்து விட்டு கணவன் வாகனத்திலிருந்து இறங்கி அங்குமிங்கும் சுற்று இருக்கிறான் பல மணி நேரம். வாகனத்தில் கொண்டு வந்த தண்ணீரும் தீரவே இருவரும் கடும் தாகத்தால் மெல்ல,மெல்ல சுயநினைவிழந்து மயக்கமுற்று பிறகு மனைவி வாகனத்திற்குள்ளும் கணவன் கொஞ்ச தூரம் மணலிலும் அப்படியே மரணித்து கிடந்திருக்கிறார்கள். இன்னொரு விசயம் இது போன்ற வனாந்திரத்தில் கையில் எடுத்துச்செல்லும் செல்ஃபோன்களும் அதன் தொடர்பு எல்லையை தாண்டி சென்று நமக்கு உதவாமல் போய் விடும்.

சில சமயம் தொலைக்காட்சிகளில் பார்க்கும் அந்த வெள்ளிப்பனிமலையே உருகி பெரும் நீரோட்டமாய், வெள்ளப்பெருக்காய் ஆர்ப்பரித்து செல்லும் நதிகளும், நீரோடைகளும் தேவையுடைய இடங்களிலெல்லாம் இப்படி ஓடினால் எப்படி வளங்களாய் அது மாறி செழிக்கும் என் இறைவனே! என மனதிற்குள் கேட்டுக்கொள்வேன்.

தண்ணீரைக்கண்டால் ஆனந்தம் வராதோர் எவருமுண்டோ? அதே தண்ணீரே இமயமலை சுனாமியாய் பெருக்கெடுத்து வந்தும் சில வேளை மானுடத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.

ஒரு சமயம் நம்மூரில் சும்மா நச்சு நச்சுண்டு பெய்யும் மழையைக்கண்டு மக்கள் வெறுப்படைவர். ஆனால் அப்படி பெய்யும் மழை தான் மண்ணுக்கு சொட்டு நீர் பாசனம் போல் மெல்ல, மெல்ல ஊடுருவிச்சென்று நமக்கு கிணற்றிலும், ஆழ்துளைக்கிணறுகளிலும், குளங்களிலும், கண்மாய்களிலும் முன்பெல்லாம் வருடம் முழுவதும் நீர்தேக்கத்தை வற்றாமல் கொடுத்துக்கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது பார்க்கும் சந்து,பொந்துகளிலெல்லாம் சிமெண்ட் தரைகள். தரிசாய் கிடந்த வீட்டு மனைகளிலெல்லாம் மாடி வீடுகள். வயல்வெளிகளெல்லாம் ரியல் எஸ்ட்டேட்டுகள் என இப்படி மனிதன் அபகரிக்கும் நிலங்களின் அளவு பெருகிக்கொண்டே போனால் காலப்போக்கில் அரபு நாடுகளின் அடித்தட்டில் பரந்து கிடக்கும் கச்சாய் எண்ணெய்களும் அதன் உடன்பிறப்புகளான வாயுக்களும் நம் ஊர் பக்கம் நகர ஆரம்பித்து அரபு நாடுகள் பக்கம் நம் மண்ணின் நீரோட்டம் நகர்ந்து அல்லாஹ்வின் நாட்டத்தில் ஒரு பெரும் பூகோல மாற்றம் வருங்காலங்களில் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தொடரும் 2/3

Anonymous said...

தொடர்கிறது 3/3

இங்கு பள்ளிகளில் வெளியில் ஒழுச்செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பைப்புகளில் சொட்டும் நீரை எங்கிருந்தோ பறந்து வந்து குழாயின் முகத்து வாரத்தில் குனிந்து குடித்துச்செல்லும் சிட்டுக்குருவிகளைக்காணும் பொழுது இப்படி வீணாய் பெருக்கெடுத்து யாருக்கும் பயனில்லாமல் எங்கோ ஓடிக்கலக்கும் இந்த நீரைக்கொண்டு எத்தனை ஆயிரம் சிட்டுக்குருவிகளும், வாயில்லா ஜீவன்களும் பருகி தன் தாகத்தை தீர்த்துக்கொள்ள முடியும் என உள்ளம் கொஞ்சம் அவ்வப்பொழுது கணக்குப்போடும்.

இப்படி தண்ணீரின் தேவையை எழுதிக்கொண்டே போகலாம்.

எனவே இயன்றவரை தண்ணீரை சேமிப்போம் கண் மூடி மண் மூடுமுன்.

கண்ணீரும் தண்ணீர் தானே........

வஸ்ஸலாம்.

மு.செ.மு.நெய்னா முஹம்மது

sabeer.abushahruk said...

தண்ணீரை இப்படி வீண்விரயம் செய்துகொண்டே நிலத்தடிநீர்மட்டத்தைப் பற்றி கவலைப்படும் மனசு நம் நாட்டு மக்களுக்கு.

பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளப் பரிந்துரையே நல்ல தீர்வு.

நன்றி, தம்பி ஷஃபி.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அப்படி என்றால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இஸ்டம் போல் வாழ்ந்து கொள்ளுங்கள் (எதற்கு தேவையில்லாத கருத்துக்களும், கட்டுரைகளும் which we can't follow in our life those all are only time pass) என சொல்ல வருகிறீர்களா???

sabeer.abushahruk said...

இல்லை எம் எஸ் எம். நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள்.

நிலத்தடி நீர்மட்டம் குறித்து கவலையுறும் நாம் இந்தப் பதிவில் சொல்லியுள்ளதுபோல தண்ணீரை வீண் விரயம் செய்வதற்கெதிராக எந்த காரியமும் ஆற்றுவதில்லை என்பதே என் கருத்தின் சாராம்சம்.

தண்ணீர் விநியோகத்தைச் சீராக்க கட்டுரையாளரின் கருத்தோடு ஒத்துப்போகிறேன் என்கிறேன்.

نتائج الاعداية بسوريا said...

உண்மையிலேயே இந்த வீடியோவை பார்க்கும்போது மனது பதறுகின்றது.
பைப்பை மூட கை வீடியோவை நோக்கி செல்கின்றது.

ஒவ்வரு சொட்டு தண்ணீரும் அல்லாஹ்வின் அருட்கொடை.
"வீண் விரயம் செய்பவர்களை அல்லா நேசிப்பதில்லை.
வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள்."

இத்தண்ணீர் விரயத்திர்க்குக் காரணமானவர்களும் அவன் சகோதரர்களே.

அபு ஆசிப்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு