Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

செயற்கை 'கோள்' - மூட்டல் தொடர்கிறது... 38

அதிரைநிருபர் பதிப்பகம் | July 08, 2013 | , , , ,


செயற்கை விண்கோள் என்றால் என்ன இது மனிதனால் வடிவமைக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும் செயற்கை சாதனமே செயற்கை கோள் ஆகும்.

விண்ணில் ஏவப்படும் எந்த பொருளாக இருந்தாலும் அது பூமியின் இழு விசை காரணமாக கிழே இழுக்கப்படும் அப்படி அது கிழே இழுக்கப் படாமல் இருக்க வேண்டுமானால் பூமியின்  ஈர்ப்பு விசையை தாண்டி அந்த கோள்களை செலுத்த வேண்டும் (பூமியின் ஈர்ப்பு விசையானது பூமியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் வரை இருக்கும்).

அதனால், செயற்கை விண்கோள்கள் புவியின் ஈர்ப்பு சக்தியைக் கணக்கில் கொண்டு பூமிக்கு திரும்ப வராமலும் அதே நேரம் பூமியின் இழு சக்தியின் நீள்வட்டப் பாதையின் உள்ளிருந்தே பூமியை சுற்றிவரும் தொலைவிற்குள் செலுத்தப்படுகின்றன இது குறைந்தது 200 கி.மீ தூரத்தில் இருந்து அதிகபட்சமாக 35,000 கி.மீ தூரத்தில் பெரும்பாலான  செயற்கைக் கோள்களும் சுற்றி வருமாறு செலுத்தப் படுகின்றன.

விண்கோள்களை புவியின் ஈர்ப்பு சக்தியைத் தாண்டி அனுப்புவதற்கு தேவைப்படும் சாதனமே ராக்கெட் என்று பெயர். இது பொதுவாக விண்கலங்களை அல்லது செயற்கை கோள்களை தேவையான உயரத்திற்கு தூக்கி சென்று வானில் ஈர்ப்பு விசையை தாண்டி செலுத்திவிடும்.

ஏவுகணைகள் உயரத்திற்கு ஏற்றது போல் பலவிதமான அடுக்குகளாக செயல்படும். உதாரணத்திற்கு மூன்று அல்லது அதற்கு அதிகமான ஏவுகணைகள் செயற்கைகோளை சுமந்து கொண்டு பூமியிலிருந்து புறப்படும். ஒவ்வொரு ஏவுகணையும் அதனுள் செலுத்தப்பட்ட எரிபொருள் தீரும் வரை விண்கலத்தை மேலே தூக்கிக்கொண்டு போகும் எரிபொருள் தீர்ந்ததும் அது செயற்கை கோளில் இருந்து பிரிந்து கிழே விழுந்துவிடும். 

முதலாவது ஏவுகணையின் எரிபொருள் தீர்ந்துவிடும்போது இரண்டாவது ஏவுகணை செயல்பட ஆரம்பித்து விடும். இரண்டாவது ஏவுகணையின் எரிபொருள் தீரும்பொழுது, மூன்றாவது ஏவுகணை செயல்படத் தொடங்கிவிடும். ஒவ்வொரு ஏவுகனையும், ஒன்று முடிவுறுவதற்கு முன்னதாக தானியங்கி முறையில் தொடர்ந்து செயல்பட்டு குறிப்பிட்ட உயரத்திற்கு விண்கோளை எடுத்துச் சென்று விடும்.

ஏவுகணைகள் வானில் அதிக தொலைவு செல்வதற்கு ஏதுவாக இரண்டு விதமான எரிபொருள்களை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். ஒன்று திரவ ஏரிபொருள் மற்றொன்று திடஎரிபொருள். திரவ எரிபொருளில் ஹைட்ரஜன், கெரசின் (மண்ணெண்ணெய்) மற்றும் ஆக்சிஜன் மூன்றும் பயன்படுத்தப்படுகின்றன. திட எரிபொருளில் அலுமினிய மாவும், (இடியப்ப மாவு அல்ல) அம்மோனியம் நைட்ரேட் அல்லது அம்மோனியம் பெர்குலேரேட் என்ற வேதியியல் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதில் திட எரிபொருட்களே ஆபத்தில்லாமல் ஏவுகணையை செலுத்துவதற்கு ஏற்றது.

எல்லாம் சரிங்க கோடி கோடியா செலவு பண்ணி எதுக்காக அதை மேலே சுத்த உடுறாங்கன்னு மேலே சுத்துரத கிழே பார்ப்போம்.

விண்கோள்கள் இரண்டு விதமாக பூமியைச் சுற்றி வருகின்றன. ஒன்று ஈக்குவேட்டர் ஆர்பிட் என்று அழைக்கப்படும் கிழக்கு மற்றும் மேற்கு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருபவை. இன்னொன்று போலார் ஆர்பிட் என்று அழைக்கப்படும் வடக்கு மற்றும் தெற்கு சுற்றுவட்டப் பாதையில் தொடர்ந்து சுற்றி வருகின்றன.

இதை மாற்றி இப்படியும் சொல்லலாம் பூமத்திய ரேகையில் சுற்றி வருபவை சில. பூமியின் துருவங்களைச் சுற்றி வருபவை சில. இரண்டுக்கும் இடைப்பட்ட வீதிகளில் சுற்றி வருபவை சில. செயற்கைக் கோள்கள் வட்ட வீதியிலும் நீள் வட்ட வீதியிலும் பலவாறாக சுற்றி வருகின்றன.

ஈக்குவேட்டர் பாதையில் சுற்றிவரும் விண்கோள்கள் 35,000 கி.மீ உயரம் வரை செலுத்தப்படுவதால் ஈக்குவேட்டர் விண்கோள்கள் சற்று அதிகமான உயரத்தில் பூமியை ஒரு சுற்றி வருவதால் ஏறக்குறைய 24 மணிநேரம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு தகுந்தாற்போல் உள்ள வேகத்திலும் உயரத்திலும் சுற்றி வரும்படி . இதன்  வேகத்தை அமைத்துக்கொள்வார்கள்  35,000கி.மீ. தொலைவில்   சுற்றிவரும் விண்கோளை ஜியோஸ்டேஷனரி சேட்டிலைட் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். (தமிழில் எப்படி  என்று தெரியவில்லை )

இது பூமியைச் சுற்றிவரும் விண்கோளைப் போன்று இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பூமியின் மேல்பரப்பில் எப்போதும் நின்று கொண்டிருப்பது போல் தோன்றும். இவ்வாறு ஒரே நிலையில் நிற்பதுபோல் தோன்றும் விண்கோள்களின் உதவியால்தான் தொலை தொடர்பு மற்றும் தொலைகாட்சி சாதனங்கள் (சீரியல் பார்த்து கண்ணீர் வடிப்பவர்களுக்கு இது தெரியுமா) ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு ஒளிபரப்பப்படுவதும் இது போன்ற செயற்கை கோள்கள்தான்.

மேலும் இந்தவகை கோள்களே புயல், இயற்கை சீரழிவுகளுக்கான எச்சரிக்கைகள் செய்யவும்,(ரமணன் நினைவுக்கு வருவாரே, அவரைச் சுத்தலில் விடும் கோள்கள்) வானிலை ஆராய்ச்சிகளுக்கும், பூமியின் நிலவளங்கள், கனிமங்கள் மற்றும் நீர் நிலைகளை அறிந்துக் கொள்ளவும் உதவுகின்றன.

போலார் ஆர்பிட் என்று அழைக்கப்படும் வட்டப் பாதையில் சுற்றிவரும் செயற்கை கோள்கள் பூமிக்கு அருகாமையிலேயே சுற்றிவரும் உயரத்தில் அதாவது 200 கி.மீ தொலைவில் மட்டுமே செலுத்தப்படும். இவைகள் பெரும்பாலும் பூமியை ஒரு சுற்று சுற்றி வர இரண்டு மணி நேரமே எடுத்துக் கொள்ளும், அது மட்டுமல்லாமல் அதிகமான இடங்களையும் சுற்றி வந்துவிடும். இவ்வகையான செயற்கை கோள்கள் பெரும்பாலும் உளவு பார்க்கும் பணிக்காகவே செலுத்தப் படுகின்றன.

வசதிமிக்க நாடுகள் இது போன்ற செயற்கை கோள்களை எதிரி நாடுகள் மற்றும் தனக்குப் பிடிக்காத நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார செயல்பாடுகளை உளவு பார்க்கும் நோக்கத்துடன் மட்டுமே வானில் செலுத்துகின்றன. போலார் ஆர்பிட்டில் சுற்றிவரும் கோள்கள் சூரிய வெளிச்சத்தைக் கணக்கில் கொண்டு பகல் முழுக்க தான் சுற்றிவரும் பகுதியை ஸ்கேனிங் செய்தபடி நிலக் கட்டுப்பாட்டுத் தளத்தினுடன் தொடர்பு கொண்டு புகைப்படங்களையும், இன்னும் பிற ரேடார் சமிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருக்கும். போர்க்காலங்களில் இந்த செயற்கைக் கோள்களின் செயல்பாடுகள் மிகவும் அவசியமானதாக இருக்கும். காரணம் எதிரி நாட்டு ராணுவ அசைவுகளை கண்காணிக்க இது போன்ற செயற்கை கோள்கள் உதவியாக இருக்கும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் வானில் ஏவப்பட்ட செயற்கை கோள்களின் பட்டியலை கொஞ்சம் பார்த்துடுவோம்... ஏதும் விற்பனைக்கு வந்தால் மாடல் என்னவென்று தெரிந்து கொள்ள உதவும்.

07-Jun-1979 - பாஸ்கரா-1, எடை 442 கிலோ
31-May-1981 - ஆர்.எஸ். டி-1, எடை 38 கிலோ
20-Nov-1981 - பாஸ்கரா - 2, எடை 444 கிலோ
17-May-1983 - ஆர்.எஸ். டி-2 - எடை 41.5 கிலோ
17-Mar-1988 - ஐ.ஆர்.எஸ்.-1-எ. - எடை 975 கிலோ
13-Jul-1988 - ஸ்ரோஸ்-2 - எடை 150 கிலோ
20-Aug-1991 - ஐ.ஆர்.எஸ்.-1-பி. - எடை 975 கிலோ
20-Sep-1993 - ஐ.ஆர்.எஸ்.-1-இ. - எடை 846 கிலோ
15-Oct-1994 - ஐ.ஆர்.எஸ்.-பி-2. - எடை 804 கிலோ
28-Dec-1995 - ஐ.ஆர்.எஸ்.-1-சி. - எடை 1,250 கிலோ
21-Mar-1996 - ஐ.ஆர்.எஸ்.-பி-3. - எடை 920 கிலோ
27-Sep-1997 - ஐ.ஆர்.எஸ்.-1-டி. - எடை 1,250 கிலோ
26-May-1999 - ஐ.ஆர்.எஸ்.-பி-4 (ஒசென்சாட்-1). - எடை 1,050 கிலோ
22-Oct-2001 - டி.இ.எஸ்.(தி டெக்னாலஜி எக்ஸ்பைரிமெண்ட் சாட்டிலைட்) - எடை 1,108 கிலோ
15-Oct-2003 - ரிசோர்ஸ்சாட்-1. - எடை 1,360 கிலோ
05-May-2005 - கேர்டோசாட்-1. - எடை 1,560 கிலோ
10-Jan-2007 - கேர்டோசாட்-2. - எடை 650 கிலோ (64 ஜீபி கொள்ளலவு கொண்ட பதிவுப் பெட்டகம் உள்ளடக்கம்)
24-Apr-2008 - கேர்டோசாட்-2-எ. - எடை 690 கிலோ
28-Apr-2008 - ஐ.எம்.எஸ்.(இந்தியன் மினி சாட்டிலைட்)-1 - எடை 83 கிலோ
20-Apr-2009 - ரிஸாட்-2 (ரேடார் இமேஜிங் சாட்டிலைட்). - எடை ___ கிலோ
23-Sep-2009 - ஓசென்சாட்-2. - எடை 960 கிலோ
12-Apr-2010 - கேர்டோசாட்-2-பி. - எடை 694 கிலோ
20-Apr-2011 - ரிசோர்ஸ்சாட்-2. - எடை 1,206 கிலோ
12-Oct-2011 - மெகா டிரோபிக்குஸ் (இந்தோ பிரெஞ்ச் கூட்டு) - எடை 998 கிலோ
26-Apr-2012 - ரிஸாட்-1 (ரேடார் சாட்டிலைட்). - எடை 1,858 கிலோ
25-Feb-2013 - சாரல் (இந்தோ பிரெஞ்ச் கூட்டு) - எடை 407 கிலோ

இதுவரைக்கும் ஏவப்பட்டது அவ்வளவுதான் !

கோள்(கள்) சொல்வதை நம்பும் நாடுகள் இருக்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரம் !?

Sஹமீது

38 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இயற்கை வளங்களை கண்டறிய செயற்கையாய் ஒரு கோள் அனுப்பி எம்மை வியப்புடன் வியர்க்க வைக்கும் விஞ்ஞானமே மானுடத்திற்கு இறைவன் அருளிய பகுத்தறிவின் உச்சநிலை.

கேள்வி: ஆம்மா, பீகார் புத்தகயாவில் சமீபத்தில் நடாத்தப்பட்ட குண்டு வெடிப்பு தகவல்களை முன்கூட்டியே உளவுத்துறைக்கு தெரிவிக்க ஏதேனும் வசதிவாய்ப்புகள் இந்த செயற்கை கோளுக்கு உண்டா?

பதில் : அதான், பீகார் முதல்வர் நித்தீஸ் குமாருக்கு விரைவில் சரியான பாடம் புகட்டப்படும் என்று மோடி சொல்லிட்டாரே இங்கே எதற்கு செயற்கைகோளின் உதவி???

ஆகையால் இந்தியன் முஜாஹித்தீன் அமைப்பிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று அரசு மற்றும் ஊடகத்துறையால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹ‌மீத் காக்காவின் வ‌ழ‌க்க‌ம் போல் அழ‌கிய‌ விஞ்ஞான‌ விள‌க்க‌ம் இவ்வாக்க‌ம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கேள்வி: ஆம்மா, பீகார் புத்தகயாவில் சமீபத்தில் நடாத்தப்பட்ட குண்டு வெடிப்பு தகவல்களை முன்கூட்டியே உளவுத்துறைக்கு தெரிவிக்க ஏதேனும் வசதிவாய்ப்புகள் இந்த செயற்கை கோளுக்கு உண்டா?

பதில் : அதான், பீகார் முதல்வர் நித்தீஸ் குமாருக்கு விரைவில் சரியான பாடம் புகட்டப்படும் என்று மோடி சொல்லிட்டாரே இங்கே எதற்கு செயற்கைகோளின் உதவி???..//

எம்.எஸ்.எம்(என்):

அதானே ! அயோக்கிய வடநாட்டு தொலைக்காட்சிகளின் செய்தி வாசிப்பவனும்/வளும் ஏற்கனவே ஊட்டிக் கொடுத்த தகவல்களை சேகரித்து அனுப்புவது போன்ற அடிவயிறு எக்கி எக்கி சொல்லும் அதன் செய்தியாளனு/ளும் இருக்கும்போது....

வேற எதுக்குங்க சாட்டிலைட் அனுப்பி இல்லாத ஒன்றை கண்டு பிடிக்கனும் !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

என்னக்கி ஐக்கிய(அயோக்கிய) முற்போக்கு(பிற்போக்கு) கூட்டணியிலிருந்து மோடி தேர்தல் குழு தலைவராக்கப்பட்ட பின் பீகார் முதல்வர் நித்தீஸ் குமார் விலகி வெளியேறினாரோ அன்றிலிருந்து அவர்களின் குண்டு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கும்.

குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கிழிந்து போன தொப்பி, தசுமணி, குர்'ஆன் தாளு கெடச்சிருக்குமே???

இந்த குண்டு வெடிப்பில் டபுள் கேம் ஆடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒன்று சமீபத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகிய பீகார் முதல்வர் நித்தீஸ் குமாருக்கு குண்டு வெடிப்பால் மக்கள் மத்தியில் அச்சமும், அதிருப்தியும் ஏற்படுத்தி பாடம் புகட்டுவது. இரண்டாவது புத்தரின் கோவிலுக்கு அருகில் நடத்தப்பட்டு மியாண்மர், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்கனவே புத்தர் போதித்த அகிம்சையை கழட்டி வைத்து விட்டு ஆயுதங்களை கையிலெடுத்து திரியும் பெளத்தர்கள் மத்தியில் இன்னும் வெறுப்பை வரவழைத்து முஸ்லிம் இனம் அவர்களால் அழிக்கப்பட அவர்களுக்கு வழிவகை செய்து கொடுப்பது.

ஆகையால் இந்திய முஜாஹித்தீன் அமைப்பிடமிருந்து தரமான ஒரு மின்னஞ்சல் இந்திய அரசு மற்றும் ஊடகங்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

உலக அநியாய,அட்டூழியங்களையும், அநீதி அக்கிரமங்களையும், அத்துமீறல் அடக்குமுறைகளையும், பசி பட்டினிச்சாவுகளையும் விண்ணிலிருந்து வேடிக்கைப்பார்க்கும் இந்த செயற்கைகோள்கள் எல்லாம் இறைவன் முன் செயலிழந்த கோள்களே........

நாமெல்லாம் இப்படி உலகின் எங்கோ ஒரு மூலையிலிருந்து கொண்டு இணையத்தினூடாக எழுத, பேச, பார்க்க, படிக்க‌ நமக்கெல்லாம் எளிமுறையில் வழிவகை செய்து தந்துள்ளது செயற்கைகோள்களின் பெரும் அளப்பரிய பணியானாலும் அதை இன்றைய வல்லரசுகள், வளர்ந்த நாடுகள் தவறாக பயன்படுத்துவது தான் வேதனையளிக்கிறது.

குவைத்திலும், ஈராக்கிலும், ஆப்கனிலும், லிபியாவிலும் மக்கள் புரட்சி என்ற பெயரில் களம் இறங்கி பணியாற்றி அங்குள்ள அரசுகளை அப்புறப்படுத்திய‌ மேற்கத்திய நேட்டோ படைகள் அதைவிட கொடுமைகள் தினந்தோறும் நாட்டின் அரசாலேயே, ராணுவத்தாலேயே மக்களுக்கெதிராக அரங்கேற்றப்படும் சிரியாவில் அதன் அட்டூழியங்களை சும்மா வெளியில் இருந்து கொண்டு மட்டும் ஊடகத்தில் அமெரிக்க, வல்லரசு நாடுகள் விவாதிப்பதால் அங்கு எண்ணெய் வளங்கள் ஒன்றும் இல்லை போல் தோன்றுகிறது.

சும்மாவெல்லாம் சோழியன் குடுமியை ஆட்ட முடியதுல்ல.......

Ebrahim Ansari said...

சாகுலுக்குப் பாராட்டுக்கள்.

இப்போ போட்டாருங்க திக விஜய் சிங் ஒரு போடு. புத்த கயாவில் குண்டுவைக்கத்தூண்டியது நரேந்திர மோடியாகவும் இருக்கலாம் என்று .

sabeer.abushahruk said...

நல்ல தகவல்கள், ஹமீதின் செல்ல நடையில்.

விஞ்ஞானத்தை விளங்க வைத்தல் சிரமம். அதை இலகுவாகவும் நகைச்சுவையாகவும் சொல்வதால் சிரமமின்றி விளங்குகிறது.

வாழ்த்துகள் ஹமீது.

M.B.A.அஹமது said...

அஸ்ஸலாமு அழைக்கும் சாகுல் காக்கா ...அதிரை அசத்தும் மொழிஹளுக்கு அப்புறமா எங்கடா சாகுல் காக்காவை காணாமே என்று தேடிகொண்டிருந்த எனக்கு துபாய் புகைப்படங்களையும் மலேசியா புகைப்படங்களையும் வேறு பதிவர்கள் பதிர்ந்துதார்கள். இருந்தாலும் சாகுல் காக்காவின் பதிவை காணாமல் ஒரு ஏக்கம் இருந்தது எழுத்தாளர் சுஜாதாவிற்கு பிறகு ஒரு அறிவியல் கட்டுரையை மிக தெளிவாக புகை படத்துடன் விளக்கி என்னை வியக்க வைத்துவிட்டீர்கள்..... சுஜாதா ஜனாப் அப்துல்கலாம் அவர்களின் காலேஜ் மேட் இருவரும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் பிறகு I I T யிலும் ஒன்றாக பயின்றவர்கள்.... .......ஒரு சயிண்டிஸ்ட்க்கு இணையாக இருந்தது இந்தபதிவு புதுமையாகவும் இருந்தது தொடர வாழ்த்துக்கள் புனித ரமலான் மாதம் நாளை தொடங்குகிறது ஏற்றமுடன் வரவேற்போம் இந்த புனித ரமலான் மாதத்தில் அல்லாஹ் நாம் அனைவருடைய பாவங்களையும் மன்னித்து அருள்வானாக ஆமீன்

M.B.A.அஹமது said...

///போலார் ஆர்பிட்டில் சுற்றிவரும் கோள்கள் சூரிய வெளிச்சத்தைக் கணக்கில் கொண்டு பகல் முழுக்க தான் சுற்றிவரும் பகுதியை ஸ்கேனிங் செய்தபடி நிலக் கட்டுப்பாட்டுத் தளத்தினுடன் தொடர்பு கொண்டு புகைப்படங்களையும், இன்னும் பிற ரேடார் சமிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருக்கும்.///

இப்படி சொல்லிட்டு சும்மா இருந்துட்டா எப்படி அதிரைக்கு வெகேசன் போகலனாலும் பரவா இல்லை .....தமாம் ஹார்பர் புகைப்படங்களையாவது சுட்டு அனுப்புங்கள் நான் சுட சொன்னது கேமராவில்

M.B.A.அஹமது said...

ஆம் 80 களில் முகம் பாத்து பேச தொலைபேசி வரும்மா வந்தால் நல்லா இருக்கமே என்று கனவு கண்ட நமக்கு இன்று அதற்க்கு வாய்ப்புக்கள் .இன்று ஸ்கைப்.... உவூ ...இன்னும் பலவகை அத்தனையும் இந்த சேட்டிலைட்டுகள் தானே ஒரு காலத்தில் நாம் அதிரையிலிருந்து தஞ்சைக்கு போன் பேச வேண்டும் என்றால் நமது வீட்டு தொலைபேசியில் இருந்து கால் புக் பன்னி ஒரு மணி நேரம் காந்திருந்து தொலைபேசி எக்செஞ்சிளிருந்து லைன் கொடுத்த பிறகுதான் பேச முடியும் அதற்கும் நீங்க ஒரு ஹலோ சொல்லிவிட்டு வைத்து விட்டு வைத்தால் கூட 5 ரூபாய் சார்ஜ் இன்று உங்கள் தொலை பேசியில் இருந்து தஞ்சை என்ன உலக நாடுகளில் எந்த மூளைக்கும் யாருடைய உதவியும் இல்லாமல் நினைத்த நேரத்தில் அதுவும் குறைந்த கட்டணத்தில் நேரடி தொடர்பு வசதி இந்த செயற்கைகோளின் உதவி தானே

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. S.Hameed,

A short and useful article about satellites. The picture is having amazing clarity!!!

UAE has now initiated satellite based internet. Its become an alternative to under sea cable based internet, in case if it is cut.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

M.B.A.அஹமது said...

//செயற்கை கோள் மூட்டல் தொடர்கிறது //

கோள்(கோல்)(கள்) சொல்வதை நம்பும் நாடுகள் இருக்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரகோல்ம் !?

ரமலான் மாதம் வருகிறது இப்ப யான் போய் இந்த கோல்

ZAKIR HUSSAIN said...

இஸ்ரோவில் என்ன ஆராய்ச்சி விசயங்கள் வந்தாலும் சாகுல் இ-மெயிலுக்கு ஒரு cc வந்து விடுகிறதா?

இருப்பினும் எங்களுக்கு தெரியும்படி புரிய வைத்து எழுதுவது சிரமம்தான். அதில் சாகுல் சிறப்பாக செய்து இருக்காப்லெ.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ராக்கெட்டு கீழேர்ந்து மேலே சீறிக்கிட்டு போவும் பொழுது ஒவ்வொரு சாமானா தட்டுதட்டா கழண்டுருதே யான்??? மேலே நெறைய ராக்கெட்டு ரிப்பேராகி எசவு பண்ண எலாம‌ அங்கேயே கெடக்குதாமுல்ல???

Shameed said...

M.B.A.அஹமது சொன்னது…

//இப்படி சொல்லிட்டு சும்மா இருந்துட்டா எப்படி அதிரைக்கு வெகேசன் போகலனாலும் பரவா இல்லை .....தமாம் ஹார்பர் புகைப்படங்களையாவது சுட்டு அனுப்புங்கள் நான் சுட சொன்னது கேமராவில் //


இப்ப நா அதிரையிலே இருக்கேன்

Yasir said...

செயற்க்கை கோள்களைப்பற்றி கொள்ளை அழகு ஆக்கம்....எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுவது எங்கள் காக்காவின் கைவந்த கலை.....நிரப்பமான ஆக்கம் நீண்ட நாளைக்கு பிறகு



Shameed said...

எப்புடி கேட்டும் யாருன்னே சொல்லாம இருக்கும் M.B.A.அஹமது போன்றவர்களை கண்டு பிடிக்க வேண்டி அதிரை நிருபர் சார்பா ஒரு ராக்கெட் விடனும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

விஞ்ஞானியாக்கா வருடத்துக்கு ஒரு ராக்கெட் கட்டுரை பத்தாது. மாதம் ஒரு ராக்கெட் கட்டுரை வேண்டும்.

நல்ல தகவல் காக்கா.

Shameed said...

தாஜுதீன்சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்

//விஞ்ஞானியாக்கா வருடத்துக்கு ஒரு ராக்கெட் கட்டுரை பத்தாது. மாதம் ஒரு ராக்கெட் கட்டுரை வேண்டும்.

நல்ல தகவல் காக்கா//


வலைக்கும் முஸ்ஸலாம்

என்னதான் நாம வேகமா கட்டுரை ரெடி செய்தாலும் ஒவ்ஒரு விசைக்கும் எதிர் விசை உண்டு என்ற அறிவியல் கூற்றுப்படி பல விசயங்கள் நம்மை பின்னோக்கி இழுத்து விடுகின்றன

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//வலைக்கும் முஸ்ஸலாம்

என்னதான் நாம வேகமா கட்டுரை ரெடி செய்தாலும் ஒவ்ஒரு விசைக்கும் எதிர் விசை உண்டு என்ற அறிவியல் கூற்றுப்படி பல விசயங்கள் நம்மை பின்னோக்கி இழுத்து விடுகின்றன//

:) :)

M.B.A.அஹமது said...

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு அறிவியல் ஆலாசகர் ஆள் தேவைபடுகிறதாம் அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அவர்களுக்கு நிறைய வேலை இருக்கிறதாம் நம்ம சாகுல் காக்காவை அனுப்பி வைக்க வேண்டியது தான் ....... பொன்ராஜ் பற்றி சிறு குறிப்பு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பாரதிதாசன் பல்கலைகழகத்தின் முதல் msc கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர் .........அந்த முதல் மாணவர்களில் நமதூர் காதர் முகைதீன் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை பேராசிரியர் மல்லிபட்டினம் சேக் அப்துல் காதரும் (குள்ள காதர்) ஒருவர் ..பொன்ராஜும் காதரும் திருச்சி பாரதி தாசன் பல்கலையில் 87-89 ல் msc ஒன்றாக பயின்றவர்கள்

m.liyakat ali said...

அதிரை விஞ்ஞானி சகோதரர் சாகுல் அவர்களிடமிருந்து நிறைய விஞ்ஞான கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்

ibrahim said...

சகோதரர் சாகுலின் செயற்கை கோள் மூட்டல் அவரது புகைப்படத்திலேயே தெரிகிறது அக்கினியை கக்கி கொண்டு ராகட் புறப்படுவது எதோ கோள் மூட்டத்தான் என்று

Shameed said...

M.B.A.அஹமதுசொன்னது…
//முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு அறிவியல் ஆலாசகர் ஆள் தேவைபடுகிறதாம் அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அவர்களுக்கு நிறைய வேலை இருக்கிறதாம் நம்ம சாகுல் காக்காவை அனுப்பி வைக்க வேண்டியது தான் .....//


எப்படியோ இங்க இருந்து ஆளை தொலைத்து விட்டால் சரி என்ற முடிவுக்கு வந்தமாதிரி தெரிகின்றது


மல்லி பட்டிணம் காதர் சார்ன்னு சொன்னா எங்களுக்கு தெரியாதா அவர் சைசயுமா சொல்லணும் வாங்க காதர் சார்ட போட்டு குடுத்துறேன்

shamsul huq said...

அம்மாடியோ ராகெட் பற்றி செயற்கை கோள் பற்றி அதிரையிலிருந்து கட்டுரையா சகோதரர் சாகுல் அவர்களே எதுக்கும் ஜாக்கிரிதையாக இருங்கள் அமெரிக்க காரன் நாசாவிலிருந்து ராகெட்அனுப்பி உங்களை கண்காணிக்க போறான் ஏற்கனவே ஒரு ராமேஸ்வறது அபுல்க்கலாமையே சமாளிக்க முடியல இன்னொரு கடல்கரையோர விஞ்ஞானி என்று . எதுக்கும் வீட்டில் சொல்லி சுத்தி போட சொல்லுங்கள் கண்ணு பட்டுருக்க போவுது .... அங்க யாரோ தஸதக்கீர் சவுண்ட் விடுவது தெரிகிறது விஞ்ஞான காலத்திலும் ராகட் காலத்திலும் இன்னும் கண்ணு கத்தரிக்காய் என்று .....இருந்தாலும் நம்மூரு பழக்க தோஷம்

M.B.A.அஹமது said...

///மல்லி பட்டிணம் காதர் சார்ன்னு சொன்னா எங்களுக்கு தெரியாதா அவர் சைசயுமா சொல்லணும் வாங்க காதர் சார்ட போட்டு குடுத்துறேன்///



இது தான் செயற்கை( கோல்) மூட்டலோ

Unknown said...

செயற்கைக்கோள் ,

பெயரிலேயே செயற்கை, இவை இயற்க்கைக்கு முன் நிற்குமா. சூரியன், சந்திரன்,
இன்னும் எத்தனையோ கோள்களை இறைவன் சர்வசாதரணமாக படைத்து அவைகளை காலம் காலமாக அந்தரத்தில் தொங்கவிட்டு, அவைகள் மூலம் இவ்வுலக வுயிர்களை பலனடையச் செய்து ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு அவைகளையெல்லாம் அழிக்கக் காத்திருக்கும் இறைவனுக்கு முன் இவைகள் அந்த ரப்புல் ஆலமீன் முன் ஈயின் இறக்கைக்கு கூட சமம் கிடையாது.

அந்த செயற்கையிலும், அழிவுக்கும் ஆக்கத்திர்க்குமுண்டான நோக்கத்தில்தான் மனிதன் தன் ஆற்றலை செயல் படுத்துகின்றான். ஆனால் படைத்த இறைவனின் நோக்கம் ஆக்கத்திற்கும், தன் ஆற்றலின், சக்தியின், நேர்த்தியின், அருமையின், அழகின்,அருமையை மனிதன் உணர்ந்து அதன் வெளிப்பாடாக அவனுக்கு நன்றிக்கடன் செய்யவேணும் என்பதுதான்.

ஆனால் ஒருநாள் அவை அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். அத்துடன், மனிதனின் செயர்க்கைக்கும் , இறைவனின் இயற்கைக்கும் அல்லாஹ் ஒரு முடிவு கொண்டு வருவான்.அப்பொழுது அல்லாஹ்வின் இயற்கையே வெல்லும்.
அப்பொழுது. சூரியன் என்னும் கோள் மட்டுமே இறவன் நாட்டப்படி, அவன் கொடுத்த வேலையைச்செய்ய மிஞ்சி இருக்கும் ஒரு கோளாகும்.

அது தன் வேலையை (இன்றைய சூரியனைப்போல் அல்ல) செய்ய (பல நூறு மடங்கு வெப்பத்தில் )ஆரம்பிக்கும் அந்த நாள் வருமுன் , அந்த நாளுக்கான தயாரிப்பை ஏற்படுத்திக்கொள்வோம்.

அபு ஆசிப்.

KALAM SHAICK ABDUL KADER said...

தலைச்சுற்றாமல் கோள்சுற்றலைப் பாடம் எடுக்கும் ”சுட்டும் விழிச்சுடர்”க்கு இதுவெல்லாம் கைவந்த கலை!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கோள் மூட்டலால் லேட்டு!

விஞ்ஞனியாக்கா மூலம் விந்தையான தகவல்!

M.B.A.அஹமது said...

////தலைச்சுற்றாமல் கோள்சுற்றலைப் பாடம் எடுக்கும் ”சுட்டும் விழிச்சுடர்”க்கு இதுவெல்லாம் கைவந்த கலை!////

கவிகாகாவின் ஹை கூ அருமை.... நீண்ட கவிதை இல்லாமல் ரெண்டே வரியில் நச் ஹை கூ சொன்ன கவி காகா சாகுல் காக்கவிற்கு மித பெரிய பாராட்டை தெரிவித்துவிட்டார்கள்

M.B.A.அஹமது said...

///இப்போ போட்டாருங்க திக விஜய் சிங் ஒரு போடு. புத்த கயாவில் குண்டுவைக்கத்தூண்டியது நரேந்திர மோடியாகவும் இருக்கலாம் என்று///

இப்ராகிம் அன்சாரி காக்கா அஸ்ஸலாமு அழைக்கும் ரமலான் முபாரக் .....காகா மோடிக்கு பதில் சொல்ல திக் விஜய் சிங் மாதிரி ஆட்கள் தேவை உள்ளது காக்கா .... நமது மீடியாக்கள் எது ஒன்று என்றாலும் உடனே ஹிஜாபுல் முஜஹிதீன் என்று ரொம்ப ஈஸியா சொல்லிரானுங்க அதுக்கு ரிபீட் அடிக்க திக் விஜய் சிங் தேவை

.

Ebrahim Ansari said...

தம்பி எம். பி. ஏ அஹமது , அலைக்குமுஸ் ஸலாம்.

நீங்கள் சொல்வது சரி. ஆனால் இப்படி மறைந்து இருந்து சொல்லும் மாயம்தான் சரி இல்லை.

அப்துல்மாலிக் said...

விஞ்ஞானி சாகுல் காக்கா அவர்களின் தெளிவான விளக்கத்துக்கு நன்றிகள்

M.B.A.அஹமது said...

எங்கே எங்கள் மூத்த சகோதரர் முகம்மது பாரூக் காக்காவை காணாம் அவங்க வந்து பின்னூட்டம் மின் அஞ்சல் மூலமாக இட்டால் தான் இந்த விஞ்ஞான கட்டுரை சிறப்பா இருக்கும்

Ebrahim Ansari said...

//எங்கே எங்கள் மூத்த சகோதரர் முகம்மது பாரூக் காக்காவை காணாம் அவங்க வந்து பின்னூட்டம் மின் அஞ்சல் மூலமாக இட்டால் தான் இந்த விஞ்ஞான கட்டுரை சிறப்பா இருக்கும்//

தம்பி அஹமது அவர்களே! வாப்பாவும் மகனும் பிசியாக கலந்துரையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

Anonymous said...

//எங்கே மூத்த சகோதரர் பாரூக்காக்கவை காணோம்//

அன்புத்தம்பி M.B.A அஹ்மத் அவர்கள் என்னை பாசத்தோடு தேடுவது தெரிகிறது.

மகனார் விட்ட 'கோள்' சரியான பாதையில் இலக்கு நோக் கிபோகிறதா? 'என்று தந்தை நாசா விலிருந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்பத்தான் முதல்கட்ட எரிபொருள் முடிந்து இரண்டாம் கட்ட எரிபொருளை தொட்டிரிக்கிறது.

.ரமலான் பிறையை பாத்துடுச்சாம், பாத்தியாவும் ஓதிடுச்சாம், இப்பத்தான் ஸிக்னல் வந்தது.

இப்ப இங்கே நான் ஒரு பிரச்னையில் மாட்டிக்கிட்டேன் ''பாத்தியா'' என்றால் என்ன? என்று அமெரிக்கன் சைன்டிஸ்ட் கேக்குறான். ஏதோ ரகசிய Code Word என்று சந்தேகப் படுகிறான். எனக்கு தெரிஞ்ச 'இங்க்ளிஷ்'லே சொல்லியும் கைகர்ணம் காட்டியும் நம்ப மாட்டேங்றான் ''What is that fathiyaa? I can't understand'' என்கிறான்.''

If you can't understand better try to upstand.' என்று சொன்னேன். என்னை' பார்த்து முறைக்கிறான். யாராவது அமெரிக்கன் இங்க்லீஷ் தெரிஞ்ச ஆலிம்சாவா பாத்து அனுப்ப முடியுமா? Please help me!

.S.முஹம்மதுபாரூக் - NASA.USA

Ebrahim Ansari said...

//மகனார் விட்ட 'கோள்' சரியான பாதையில் இலக்கு நோக் கிபோகிறதா? 'என்று தந்தை நாசா விலிருந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்பத்தான் முதல்கட்ட எரிபொருள் முடிந்து இரண்டாம் கட்ட எரிபொருளை தொட்டிரிக்கிறது.//

ரெம்பத்தான் லொள்ளு.ஆனாலும் எங்கள் மனதை அள்ளுதே ஒரு அள்ளு.

shamsul huq said...

அப்படி என்ன கருத்துதான் இந்த m b a அகமது சொல்றாருப்பா நெறியாளார் அவரது கருத்தைஅடிக்கடி\ நீக்கி விற்றுடாறு அவரு நல்லவரா கெட்டவரா தெரியலையப்பா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு