Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் நிறைவுகிறது ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | July 03, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

கடந்த பதிவில் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) ஃபாத்திமா(ரலி) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) போன்ற சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களின் பிரிவை எண்ணி அழுத சம்பவங்களையும் பார்த்தோம் படிப்பினைகளை அறிந்து கொண்டோம்.

இதுவரை நாம் வாசித்த பதிவுகளின் சாரம்.

திருக்குர் ஆன் 17:107, 108, 109 வசனங்களில் அல்லாஹ் கூறியது அல்லாஹ்வின் வேதம் ஓதப்பட்டால் இறை விசுவாசிகள், உடனே சூஜூதில் விழுந்து அழுது அல்லாஹ்வைப் புகழ்வார்கள். http://adirainirubar.blogspot.com/2013/04/blog-post_4.html

சூரத்துன்னிஸாவின் 41வது வசனத்தை இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் ஓதியவுடன் நபி(ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்காக நாளை மறுமையில் தம்மை சாட்சியாக நிறுத்தி அல்லாஹ் அழைப்பான் என்று எண்ணி அழுதுள்ளார்கள்.

“உள்ளத்தில் உள்ளதை வெளிபடுத்தினாலும் மறைத்தாலும் அல்லாஹ் அதனை விசாரிப்பான் என்ற திருக்குர்ஆன் 2:228 வது வசனம் இறங்கியவுடன் இப்னு உமர் (ரலி) அவர்கள் அழுதுள்ளாகள். http://adirainirubar.blogspot.com/2013/04/2.html

வஹி நின்று விட்டதே என்று எண்ணி அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு தாய் உம்மு அய்மன்(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள்.

அல்லாஹ் இஸ்லாத்தை பரிபூரணமாக்கிவிட்டான் என்ற திருக்குர்ஆன் வசனம் 5:3 அருளப்பெற்றவுடன் இனி வஹி வருவது நின்றுவிடுமே என்று அமீருள் முஃமினீன் உமர்(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள். http://adirainirubar.blogspot.com/2013/04/3_18.html

தன்னை வளர்த்து ஆளாக்கிய தன்னுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் கலிமா சொல்லாமல் மரணிக்க போகிறாரே என்று அண்ணல் நபி(ஸல்) அழுதுள்ளார்கள்.

தன்னுடைய தந்தை இஸ்லாத்தில் இணைவதை காட்டிலும் நபி(ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை இஸ்லாத்தில் இணைவதையே விரும்புகிறேன் என்று சொல்லி அண்ணல் நபி(ஸல்) அவர்களின் ஆருயிர் தோழர் அபூபக்கர்(ரலி) அழுதுள்ளார்கள். http://adirainirubar.blogspot.com/2013/04/4.html

வல் முர்ஸலாத்தி என்ற அத்தியாத்தை தன் மகன் ஓதும் போது ஓதுவதை நிறுத்து மகனே, இது தான் நபி(ஸல்) அவர்கள் கடைசியாக ஓதிய அத்தியாயம் என்று உம்முல் பழ்லு(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள்.

லம் யகுனில்லதீன என்ற திருக்குர்ஆனின் 98வது அத்தியாத்தை அல்லாஹ் தன்னுடைய பெயரைச் சொல்லி ஓதச்சொன்னான் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னவுடன் உபை இப்னு கஃப் (ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள்.

திருக்குர்ஆன் வசனம் ஓதினால் என்னுடைய தந்தை அழுது விடுவார்கள் யா ரசூலுல்லாஹ் என்று தன் தந்தையின் ஈமானின் உறுதியை நபி(ஸல்) அவர்களிடம் முஃமீன்களின் அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் சொன்னார்கள். http://adirainirubar.blogspot.com/2013/05/5.html

தன்னுடைய மகன் இபுராஹீம்(ரலி) அவர்களும், தன்னுடைய ஒரு மகள் ஒருவரின் குழந்தை ஒன்று இறந்த போதும், மன கஷ்டங்கள் ஏற்படும்போதும் நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள்.

ஸஃத் (ரலி) அவர்கள் நோயிற்று வேதனையில் இருந்தபோது தனக்கு பிடித்தமான அந்த தோழரைப் பார்த்து நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள்.

இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஒப்பாரி வைத்து அழுபவர்களை உமர்(ரலி) அவர்கள் கம்பினால் அடிப்பார்கள். http://adirainirubar.blogspot.com/2013/05/6.html

நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னோடு பால்குடித்த பால்குடி சகோதரியை சந்தித்த சந்தோசத்தில் நன்றி மறவாத கருணையில் சிகரம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள்.

இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக, தன்னுடைய அனைத்து செல்வ செழிப்பையும் இழந்த முஸ்ஹப் இப்னு உமைர் (ரலி) அவர்களின் ஏழ்மை நிலையைப் பார்த்து அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள்.

அதே முஸ்ஹப்(ரலி) அவர்கள் உஹதுப்போரில் ஷஹீதான பிறகு நபி(ஸல்) தன் தோழர்களிடம் முஸ்ஹப்(ரலி) அவர்களின் தியாகத்தைச் சொல்லிக்காட்டி அழுதுள்ளார்கள். http://adirainirubar.blogspot.com/2013/05/7.html

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் உணவின்றி பசியோடு வயிற்றில் தன்னுடைய வாழ்வை கழித்தார்கள். இதனைக் கண்ட அனஸ்(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள். பின்னர் தன்னுடைய தாயின் மூலம் நபி(ஸல்) அவர்களுக்கும் பிற சஹாபாக்களுக்கும் உணவளித்தார்கள்.

தானும், தன் குடும்பமும், தன் தோழர்களும் பசியோடு இருந்த அந்த சந்தர்பத்தில் அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்கள் வீட்டில் விருந்து உணவருந்திவிட்டு, சாபிட்ட அந்த உணவுக்காக நாளை அல்லாஹ்விடம் இதற்கும் பதில் சொல்லியாக வேண்டும் என்று தக்வாவுடையவர்களின் தலைவர் நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள். http://adirainirubar.blogspot.com/2013/05/8.html

“யா அல்லாஹ் நீ வேதனை செய்தால் அவர்கள் உன் அடிமைகள், நீ மன்னித்தால் நீ மிகப்பெரும் கிருபையாளன்” 5:118 என்ற திருக்குர்ஆன் வசனத்தை சூஜூதில் இருந்து ஓதிக்கொண்டே நாளை மறுமையில் என்னுடைய சமுதாயத்திற்கு என்ன நிலை என்பதை நிலை என்பதை எண்ணி நபி(ஸல்) அழுதுள்ளார்கள்.

பத்ரு போர்களத்தில் அல்லாஹ்வின் கையேந்தி இந்த போரில் நாங்கள் தோற்றால் உன்னை வணங்க இந்த பூமியில் ஆளில்லாமல் போய்விடுமே” என்று அல்லாஹ்விடம் துஆ செய்தவர்களாக நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள். http://adirainirubar.blogspot.com/2013/05/9.html

தன் உயிர் போனாலும் பரவாயில்லை நபி(ஸல்) அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்று சுராக்கா துரத்தி வரும்போது அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தான் “அல்லாஹ்விடம் உள்ளதை தேர்ந்தெடுத்து விட்டேன்” என்று சொன்னவுடன், தன்னுடையை தாய் தந்தை அனைத்து செல்வத்தையும் தந்துவிடுகிறேன், எங்களை விட்டும் பிரிந்து விடாதீர்கள் யா ரசூல்லுல்லாஹ் என்று சொல்லி தான் வயதில் மூத்தவராக இருந்தாலும் நபி(ஸல்) அவர்கள் மேல் வைத்திருந்த பாசத்தால் அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள். http://adirainirubar.blogspot.com/2013/06/10.html

யமன் நாட்டிற்கு மார்க்க பிரச்சாரம் செய்ய தன்னை வழியனுப்ப வந்த நபி(ஸல்) அவர்கள். நீங்கள் திரும்பி மதீனா வரும் போது நான் இருக்க மாட்டேன் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னவுடன் தேம்பி தேம்பி முஆத் பின் ஜபல்(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள்.

தம்மோடு வாழ்ந்துவரும் நபி(ஸல்) அவர்களோடு சொற்கத்தில் இருக்க வேண்டுமே என்று எண்ணி ஷஃபான் (ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள். திருக்குர்ஆன் வசனம் 4:69 நபி(ஸல்) அவர்களுக்கு இறங்கிய பிறகே ஷஃபான் ஆறுதல் அடைந்தார். http://adirainirubar.blogspot.com/2013/06/11.html

நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த நெகிழ்வூட்டும் சம்பவங்கள், நமக்கு கண்ணீர் வரவழைத்தது.

நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் பழி தீர்க்க சொன்ன போது, ஒரு சஹாபி “ நான் பழிதீர்க்க வேண்டும்” என்று சொல்லி நபி(ஸல்) அவர்கள் மேனியை முத்தமிட்டு அழுத கண்கலங்கும் சம்பவம்.

தன் தந்தையின் மரண வேதனையைப் பார்த்து தாங்க முடியாமல் சொர்க்கத்து பெண்களின் தலைவி என்று நபி(ஸல்) அவர்கள் நன்மாராயம் கூறப்பட்ட அவர்களின் பாசம் நிறைந்த அருமை மகளார் ஃபாத்திமா(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள். http://adirainirubar.blogspot.com/2013/06/12.html

தன்னுடைய உற்ற தோழர், உடன் பிறவா சகோதரர், மருமகன் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் ஜனாசாவை பார்த்து இஸ்லாத்தின் முதல் கலீபா அபூபக்கர்(ரலி) அவர்கள் “ யா ரசூலுல்லாஹ் நீங்கள் உயிரோடு இருக்கும் போது மனம் கமழ்ந்தீர்கள், இறந்த பின்பும் மனம் கமழ்கிறீர்கள்” என்று சொல்லி அழுதுள்ளார்கள்.

“அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொண்ட என்னுடைய அருமை தந்தையே” என்று சொல்லி நபி(ஸல்) அவர்கள் அருமை மகளார் ஃபாத்திமா அழுதுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்பு முதல் ஜும்மா உரை நிகழ்த்திய போது நபி(ஸல்) அவர்களை நினைத்து ஜும்மா மேடையில் கலீபா அபூபக்கர்(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள்.

நான் எல்லாம் உயிரோடு இருக்கும் போதே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்களே என்று சொல்லி உமர்(ரலி) அவர்கள் அழுதுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பிறகு நபி அவர்களின் பெயரை அழைக்க தெம்பு இன்றி பாங்கு சொல்லாமல் இருந்த பிலால் பைத்துல் முகத்திஸில் பாங்கு சொன்னவுடன் கூடியிருந்த அனைத்து சஹாப்பாக்களும் அழுதுள்ளார்கள். http://adirainirubar.blogspot.com/2013/06/13.html

மேலே குறிப்பிட்ட அனைத்து நிகழ்வுகளையும், கடந்த 13 தொடர்களில் வாசித்ததோடு அல்லாமல். நம்மை நாம் சுய பரிசோதனை செய்யும் விதமாக நாம் எதற்கெல்லாம் அழுகிறோம் என்ற ஒப்பீட்டு கேள்விகளும் வைக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு தொடரின் நிறைவிலும் நாம் உறுதிமொழியை வைத்தோம் என்பதையும் இங்கு நினைவூட்டுகிறேன். மேற்சொன்ன ஒவ்வொரு சம்பவங்களில் இருந்து நாம் நிறைய படிப்பினைகள் பெற வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் “ நான் அறிந்ததை நீங்கள் அறிந்தால் குறைவாக சிரிப்பீர்கள், அதிகமாக அழுவீர்கள்”

“தனிமையில் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்காக அழுதால், கரந்த பால் எப்படி திரும்ப மடி புகாதோ அது போல் அவர் நரகம் செல்ல மாட்டார்”

"யார் ஒருவர் தனிமையில் அல்லாஹ்வை நினைத்து அழுகிறாரோ, அவர்கள் மறுமையில் அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலில் நிற்க தகுதிபெற்றவர்கள்"

“அல்லாஹ்வுக்கு பிடித்த துளிகள் இரண்டு, ஒன்று அல்லாஹ்வுக்காக பேரிடும் போது நம் உடம்பிலிருந்து பீரிட்டு பாயும் இரத்த துளி, இரண்டாவது அல்லாஹ்வுக்காக தனிமையில் அழும்போது வரும் கண்ணீர் துளி”

என்று அல்லாஹ்வுக்காக அழும்போது வரும் கண்ணீருக்கு எவ்வளவு முக்கியத்துவம் நபி(ஸல்) அவர்கள் கொடுத்துள்ளார்கள் என்பதை நாம் ஹதீஸ் தொகுப்புகளில் பார்க்கும் போது. இந்த உலக ஆதாயத்திற்காகவும், பொய் கற்பனை கதாபாத்திரங்களின் காட்சி நிகழ்வுக்காகவும் நாம் எவ்வளவு கண்ணீரை வீண் விரையம் செய்திருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எதற்கெல்லாம் நம் தலைவர் நபி(ஸல்) அவர்களும் அந்த சத்திய சஹாபாக்களும் அழுதுள்ளார்கள் என்பதை நம்முடைய வாழ்வின் பல சந்தர்பங்களில் சிந்திக்க வேண்டும்.

நாம் எத்தனயோ ரமளான் மற்றும் பிற நாட்களில் ஏராளமான அமல்கள் செய்திருப்போம், இன்னும் செய்கிறோம். நாம்முடைய அமல்களை வைத்து நாளை நாம் சொர்க்கம் செல்ல முடியுமா? என்று எண்ணி என்றைக்காவது நம் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்திருக்குமா? நம்முடைய அமல்களை நினைத்து, மறுமையை நினைத்து என்றைக்காவது இரவில் தனிமையில் இருக்கும்போது அழுதிருப்போமா? 

ஒவ்வொரு நாளும் நாம் அன்று அறிந்தோ அறியாமலோ செய்த நம்முடைய பாவத்தை நினைத்து அல்லாஹ்விடம் தவ்பா செய்து என்றாவது ஒரு நாள் அழுதிருக்கிறோமா?

இன்றைக்கு ஒரு வேலை தொழுகை தொழவில்லை, ஜமாத்தோடு தொழவில்லை, முன் பின் சுன்னத் தொழவில்லை, தொழுது முடித்தவுடன் தஸ்பீஹ் செய்யவில்லை, குர்ஆன் ஓதவில்லை என்று நினைத்து என்றைக்காவது அல்லாஹ்வுக்காக அழுதிருக்கிறோமா?

நம்மைவிட்டு சைத்தானை தூரமாக்கி அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கிக் கொண்டு இறையச்சமுடைய நல்லடியார்களாக மறுமையில் வெற்றியடைய வேண்டுமானால், நாம் அல்லாஹ்வுக்காக நம் பாவங்களை நினைத்து தனிமையில் அழவேண்டும்.

ஆம்! நாம் அழவேண்டும், அல்லாஹ்வுக்காக, இஸ்லாத்திற்காக அர்த்தத்தோடு அழவேண்டும், நாளை மறுமையில் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்து அழவேண்டும் என்பதற்காகத்தான் இந்த தலைப்பில் உருக்கமான  இஸ்லாமிய வரலாற்று சம்வங்களில் நபி(ஸல்) அவர்களும், சத்திய சஹாபாக்களும் எதற்காக கண்ணீர் சிந்தினார்கள் என்று தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

நிறைவாக:
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பல சிரமங்களுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி இந்த தொடர் எழுத உதவிய வல்ல அல்லாஹ்வுக்கே முதலில் எல்லா புகழும். இந்த பதிவுகளை எழுத பேருதவியாக இருந்த இரண்டு மார்க்க சொற்பொழிவாளர்களின் (சகோ. கோவை அய்யூப், சகோ. ஜமால் மதனி) பயான்கள். அவர்கள் இருவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக. இந்த இரண்டு மார்க்க சொற்ப்பொழிவுகளின் மூலம் என்னால் முடிந்தவைகளை தொகுத்து தந்துள்ளோன். நீங்கள் அனைவரும் கேட்க வேண்டிய மார்க்க சொற்பொழிவுகள் அவைகள்.

http://www.youtube.com/watch?v=tOopR9xSYgA

http://www.youtube.com/watch?v=T9ftHK6A4L8

வாரந்தோறும் தொடர்ந்து வாசித்து கருத்திட்டு ஊக்கமளித்த அனைத்து சகோதரர்களுக்கும், மேலும் வாசித்துவிட்டு கருத்திடாத இயலாத அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வல்ல ரஹ்மான் நல்லருள் புரிவானாக. ஆமீன்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் முதல் “அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும்” தொடரில் சந்திக்கலாம்.

M தாஜுதீன்

13 Responses So Far:

نتائج الاعداية بسوريا said...

உங்களின் "அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் " தொடர் எங்களைவிட்டு கண்ணீரோடு விடைபெறுகின்றது,

இதை தொடராகத்தந்த உங்களுக்கும், இதை படித்து பயன் பெற்ற அனைவருக்கும்,
அல்லாஹ் பரகத் என்னும் புலனுக்கெட்டாத அருளையும் , அவனுடைய கிருபையையும் தர போதுமானவன்.

ஆமீன் !

அபு ஆசிப்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அல்ஹம்துலில்லாஹ் மிக பயனுள்ள பதிவு மாற்று மதத்தினர் புரிந்து சிந்தனையை தூண்டும் பதிவு

இத்தொடரை புத்தகமாக வெளியிட்டு நாலப்பக்கம் இத்தகவல் சென்றடையச் செய்வது அ.நி யின் பொறுப்பு

தங்களின் நேரத்தை ஒதுக்கி எங்களுகாக இத்தொடர் அளித்த சகோ.தாஜுதீன் காக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் ஜசக்கல்லாஹ் ஹைர்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல அரிய பயனுள்ள நன்மையான தொடரை நந்தமைக்கு நன்றி.
இன்னும் அடுத்த தொடர் நீளமான, பல வாசகர்களை கவரும் வகையில் நன்மையாக அமையட்டுமாக, அதை தொடர ஆரோக்கியத்துடன் தெளிவான ஞானத்தை அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.
-----------------------------------------------------------------------

ஷஃபான் பிறை 23 / 1434

sabeer.abushahruk said...

சிறப்பாகத் தொகுக்கப்பட்டு நேர்த்தியாக வழங்கப்பட்டத் தொடர்.

நெகிழ வைத்த தாஜுதீனுக்கு நன்றி.

புதியத் தொடருக்கு வரவேற்பும் து ஆவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இணைய பயன்பாட்டின் இலகுவும் வலைப்பூக்களின் வருகையும் நம் மக்களை அதிகமதிகம் வாசிக்கவும் எழுதவும் வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை !

வாசிப்பது, எழுதுவது என்று எல்லோரும் செய்தாலும் அதில் தான் சார்ந்த சமூகத்திற்கு பயனுள்ள வகையில் அதனை வசப்படுத்திக் கொண்டவர்கள் சிலரே !

அவ்வகையில் தன்னைச் சார்ந்த சமூகத்திற்கு பயனளிக்கும் தேடல்களில் ஈடுபட்டு இயல்பிலேயே பக்குவம் பேணும் எனது தம்பி எழுதிய இந்தத் தொடர் இணையத்தில் வெளிவர வேண்டும் இன்னும் பிற தொடர்கள் அல்லது பதிவுகளுக்கு நிகராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் அல்லாமல், பலவகையான கலந்துரையாடலுக்குப் பின்னர் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக தொடரப்பட்ட முயற்சி இது, அல்ஹம்துலில்லாஹ் !

ஒரு கட்டுரை எழுதுவதற்கு பல்வேறு கோணங்களை அலசி ஆராய்ந்து எழுதும் நமது சகோதரர்கள் எவ்வாறெல்லாம் சிரத்தை எடுக்கிறார்கள் என்பதை நன்கறிந்ததினால், தொடர் என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் பிரமிப்பும் இருக்கும்.

பல்வேறு வேலைப்பளுவுக்கு இடையே இந்த தொடரை ஒவ்வொரு அத்தியாயமாக எழுதி குறித்த நேரத்திற்குள் பதிவுகளாக வெளிவர உதவிய என் சகோதரனுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்து வகையிலும் அருள் புரிவானாக !

இந்தத் தொடர் தொய்வின்றி 13 வாரங்கள் வெளிவர பின்புலமாக இருந்த சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக, அவர்களின் மார்க்க ஞானத்தையும், சமுதாய சிந்தனையையும் வளமுடன் இருக்கச் செய்வானாக !

Anonymous said...

'அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்' தொடர் தொடர்ந்து நம் கண்களை நனையவைத்து விட்டது. ரசூலுல்லாஹ் அவர்களும் அவர்களின் சகாபாக்களும் நமக்காக அழுதததையும் அழகோடு வரிசை படுத்தி எழுதிய எழுத்து நடையில் ஒரு வசீகர சக்தியை கண்டேன்.

கண்கள் மட்டும் அழவில்லை நெஞ்சும் நெடுங்கண்நீர் வடித்தது. நபிகள் நாயகமும் அவர்கள் தோழர்களும் நமக்காக அழுதார்கள். இன்றைய தலைவர்களோ அவர்களின் சுகத்துக்காக மக்களை அழவைக்கிறார்கள்.

அன்றய நிலை அது; இன்றைய நிலை இது.

இந்தப் பதிவை பல அலுவல்களுக்கு இடையில் ஒரு கடமையென ஏற்று செவ்வனே செய்த தம்பி தாஜூதீனுக்கும் தேவையான ஆலோசனைகளும் உதவியும் அளித்த சகோதரர் அபூஇப்ராஹீம் ஆகிய இருவருக்கும் அவர் தம் குடும்பங்களுக்கும் அல்லாஹ் தன்அன்பையும் அருளையும் கனிவையும் பொழிய எல்லாம்வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்... அமீன்

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவையும், இந்த தொடரின் அனைத்து பதிவுகளையும் வாசித்து கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும், வாசித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

"அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்" என்ற இந்த தொடர் பதிவுகளின் மூலம் யாராவது பயனடைந்திருந்தால், அதன் மூலம்அனைத்து நன்மைகளிலும், என்னை தொடந்து ஊக்கப்படுத்திய உங்கள் அனைவருக்கும் நிச்சயம் அதில் பங்கு உண்டு. அதற்காக துஆ செய்கிறேன்.

இன்ஷா தொடர்ந்து அடுத்த அதிமுக்கியம் வாய்ந்த "அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும்" என்ற நம் மனசாட்சியை உரசிப் பார்க்கும் ஒப்பீடு தொடரில் சந்திக்கலாம்.

ஜஸக்கல்லாஹ் ஹைரன்.

:)

Abdul Razik said...

கவலையுடன் கூடிய கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சிந்திய கண்ணீர்களை ஆழமாகவும் மிகத்தெளிவாகவும் விளக்கிக்கூறிய இத்தொடர், ரமளானிலும் தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தொடர்ச்சியாக மற்றொரு தொடர் வருவதும் சிறப்பாக அமைய துஆவும் வாழ்த்துக்களும்

Abdul Razik
Dubai

Ebrahim Ansari said...

அன்புத் தம்பி,

அஸ்ஸலாமு அலைக்கும்.

எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. அல்லாஹ் உங்களுக்கு இன்னும் பல தொடர்கள் எழுத வல்லமையும் வாய்ப்பும் தருவானாகவும்.

வஸ்ஸலாம்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.கவலையுடன் கூடிய கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சிந்திய கண்ணீர்களை ஆழமாகவும் மிகத்தெளிவாகவும் விளக்கிக்கூறிய இத்தொடர், ரமளானிலும் தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தொடர்ச்சியாக மற்றொரு தொடர் வருவதும் சிறப்பாக அமைய துஆவும் வாழ்த்துக்களும்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.கவலையுடன் கூடிய கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சிந்திய கண்ணீர்களை ஆழமாகவும் மிகத்தெளிவாகவும் விளக்கிக்கூறிய இத்தொடர், ரமளானிலும் தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தொடர்ச்சியாக மற்றொரு தொடர் வருவதும் சிறப்பாக அமைய துஆவும் வாழ்த்துக்களும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அல்லாஹ்வுக்காக கண்ணீர் சிந்தி பழக சரியான தருணம் நாம் எதிர்நோக்கும் ரமழானுடைய நாட்கள். இந்த கண்ணீர் தொடரில் படித்தவைகள் நிச்சயம் ரமழானில் நல்ல பயனுல்லதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Yasir said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.கவலையுடன் கூடிய கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சிந்திய கண்ணீர்களை ஆழமாகவும் மிகத்தெளிவாகவும் விளக்கிக்கூறிய இத்தொடர், ரமளானிலும் தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தொடர்ச்சியாக மற்றொரு தொடர் வருவதும் சிறப்பாக அமைய துஆவும் வாழ்த்துக்களும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு