Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படைத்தவனின் வேதம் - அல்குர்ஆனின் சிறப்பு ! - காணொளி 13

அதிரைநிருபர் பதிப்பகம் | July 21, 2013 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

யா அல்லாஹ் ! எங்களுக்கு அருளியிருக்கும் அனைத்து செல்வங்களுக்கும் சகலவசதிகளுக்கும் உனக்கு நன்றிக் கடன் உடையவர்களாக இருக்கிறோம். எங்கள் பார்வையாலும், ஒவ்வொரு செய்கைகளாலும் உன்னுடைய திருப்பொருத்தத்தை அடையக்கூடிய உண்மையான விசுவாசியாக எங்களை நிலைத்திருக்க வைத்திடுவாயக !

அல்லாஹ் அக்பர் !

யா அல்லாஹ் ! உன்னுடைய அருட்கொடையால் உலகில் ஏதோ ஒரு மூலையில் எங்களில் ஒரு சகோதரன் தனக்கு பார்வை திறன் இல்லை என்ற குறை தெரியாமல் அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடையே என்று உன் புகழையே போற்றும் அந்த சிறுவயது சகோதரன் முஆஃத் உடைய அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வாயாக !

மாஷா அல்லாஹ் ! அல்குர்ஆனை கண்பார்வை இல்லாத நிலையிலும் மனனம் செய்து திடமான மனதுடன் கொண்ட ஈமானில் அழுத்தமாக உரையாடும் இந்த சகோதரனின் காணொளி நம் அனைவருக்கும் ஒரு படிப்பினையே !

அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனை இங்கே பதிக்கப்படுகிறது,


அதிரைநிருபர் பதிப்பகம்

13 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அல்லாஹு அக்பர்

சகோதரன் முஆதுக்கு கண்ணொலிக் குறை ஒரு பொருட்டாக இல்லாமல் இவ்வுலக வாழ்க்கை மற்றவர்களை போல சகஜமாக இருக்க அல்லாஹ் உதவிடுவானாக!

Adirai pasanga😎 said...

மாஷா அல்லாஹ் !

இந்த சிறுவனின் துஆவை அங்கீகரித்து அருள் புரிவாயாக. எங்களுக்கும் எங்களின் பிள்ளைகளை இந்த துனியாவுடைய கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட உனது மார்க்கத்தின் குர் ஆனின் கல்வியில் சிறந்து விளங்கிட நல்லருள் புரிவாயாக!

ZAKIR HUSSAIN said...

எனது கண்பார்வையை தரும்படி இறைவனிடம் கேட்க மாட்டேன் என்று சொன்ன இந்த சகோதரனின் காரணம் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நம் கண்ணை திறக்கும் இந்த சிறுவனின் அறிவும் ஈமானும் நமக்கும் வாய்க்க அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன். இந்த சிறுவனுக்கு சொர்கம் அல்லாஹ் கபூலாக்குவானாக ஆமீன்.

ZAEISA said...

அல்லாஹ் அக்பர்....எனது கண்பார்வையை தரும்படி இறைவனிடம் கேட்க மாட்டேன் என்று சொன்ன இந்த சகோதரனின் காரணம் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பதிவில் கண்ட பிரார்த்தனையும், பின்னுட்டத்தில் இட்டவர்களின் பிரார்த்தனையும் என்னதாக இருக்கட்டும் !

உருக வைத்த முஆத்தின் உறுதிமிக்க வார்த்தைகள் !

அல்லாஹ் அக்பர் !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

எனது கண்பார்வையை தரும்படி இறைவனிடம் கேட்க மாட்டேன் என்று சொன்ன இந்த சகோதரனின் காரணம் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

இதனை மொழிக்கம் செய்து வெளியிட வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் படிப்பினை, திருக்குர்ஆன் கற்று புரிந்துக்கொள்ள மிகவும் எளிதானது ஆர்வத்துடன் முயற்சி செய்தால்.

sabeer.abushahruk said...

இந்தச் சகோதரனின் ஈமானின் திடம்தான் இவனை ஹாஃபிழ் ஆக்கியிருக்கிறது. தன்னை முழுதும் இறைவனுக்கு அர்ப்பணித்து இம்மை வாழ்க்கையை முற்றிலும் புறக்கணித்தால் மட்டுமே பார்வையை வேண்டாம் என்று சொல்வது சாத்தியம்.

மாஷா அல்லாஹ்...

அல்லாஹ் இவன் அகப்பார்வையை இன்னும் பிரகாசமாக்கட்டும்.

Unknown said...

முஆத்

ஊனமுற்றோர் என்ற சொல்லை தகர்த்தெறிந்த ஒரு இளவல்.
வயது முதிர்ந்தும் ஒதெத்தேரியவில்லையே என்று ஏங்கி நிற்கும் இன்றைய இஸ்லாமிய முதியவர்களுக்கு கூட ஒரு முன்னோடியாக முயர்ச்சியும் அல்லாஹ்வின் நட்டமும் ஒன்றிணைந்தால் யாராலும் குரான் ஒதெத்தெரிவதென்ன, கண் பார்வை இன்றி மனனம் செய்து ஹாபிழ் கூட ஆகமுடியும் என்று நிரூபித்து இருக்கின்றான் இந்த இளவல்.

ஒரு கையில் இறைவேதம், மறு கையில் நபி போதம் இருந்தும்
பார்வை உள்ள குருடராகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நம் முயர்ச்சியும் அல்லாஹ்வின் நாட்டமும் ஒன்றிணைந்தால்.இவ்வுலகில் எதுவும் சாத்தியமே.

எடுத்துக்காட்டு : இளவல் முஆத்

அபு ஆசிப்.

KALAM SHAICK ABDUL KADER said...

புறப்பார்வையைப் புறக்கணித்து
அகப்பார்வையால் அல்லாஹ்வின்
ஆற்றலை உணர்ந்துப்
போற்றியதால் பேறு பெற்றார்!

மாஷா அல்லாஹ்!

விழியிருந்தும் குருடர்களாய்
வாழும் நமக்கு அல்லாஹ்வின் அத்தாட்சி;
இவ்விழியத்தின் நாம் கண்ட காட்சி!

அப்துல்மாலிக் said...

அல்லாஹ் மிகப்பெரியவன்...

Saleem said...

எனது கண்பார்வையை தரும்படி இறைவனிடம் கேட்க மாட்டேன் என்று சொன்ன இந்த சகோதரனின் காரணம் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு