Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை பட்டுக்கோட்டை சாலையில் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2013 | , , , , ,

ஜூலை 29, பட்டுக்கோட்டையிலிருந்து  வந்து கொண்டிருந்த ஆட்டோவும் அதிரையிலிருந்து சென்ற SRM தனியார் பேருந்தும் அதிரை பட்டுக்கோட்டை சாலை காளிகோயில் அருகே  நேருக்கு நேர் மோதிக்கொண்டன  இதில் நிலை தடுமாறி சாலையோர மின்சார கம்பத்தில் மோதிய பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் செய்த பலர் காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

விபத்துக்குள்ளான ஆட்டோ மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது வெளிநாட்டிலிருந்து இன்று பட்டுக்கோட்டை வந்து அங்கிருந்து ஆட்டோவில் அதிரைக்கு வந்து கொண்டிருக்கும்போது இந்த  விபத்து நேர்ந்துள்ளது ஆட்டோ டிரைவரும் அதில் பயணம் செய்தவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படிருக்கிறார்கள்.

காயம்பட்டவர்கள் விரைவில் குணமடையவும் இழப்பிலிருந்து அவர்கள் அனைவரும் மீளவும் பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ் !






தகவல் : Sஹமீது

6 Responses So Far:

نتائج الاعداية بسوريا said...

காயம்பட்டோர் அனைவரும் உடல் நலம் பெற்று வீடு திரும்ப
இறைவனை பிரார்த்திப்போம்.

adiraimansoor said...

யா அல்லாஹ்
இது போன்ற கோர விபத்துக்களிலிருந்து எங்களையும் எங்கள் குடும்பத்தார்களையும்
ஊர் மக்களையும் காப்பாற்றுவாயாக
இழந்த உயிர் திரும்ப வராது

தனியார் பேருந்துகள் பட்டுக்கோட்டை தஞ்சை சாலை. நமதூர் சாலை அனைத்து வழிகளிலும் அளவுக்கு அதிகமான வேகத்துடன் செல்வதை காண முடிகிறது. இவற்றில், பரணி,எஸ்ஸாரம், எஸ்கே நாதன் போன்ற பேரூந்துகளின் போக்கு இன்னும் எத்துனை உயிரை குடிக்கப்போகின்றதோ தெரியவில்லை அல்லாஹ் காப்பாற்றவேண்டும்.

வாகன ஓட்டுனரின் கவனக்குறைவால் தான் இதுபோன்ற கோரங்கள் ஏற்ப்படுகிறது. காவல் துறையினர் தான் தீவிர கண்காணிப்பில் இருந்து அதிவேகமாக செலுத்தப்படும் வாகனங்களைப் பிடித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்..

காவல்துறையும் இதைகண்டுகொள்வதாக தெரியவில்லை

தனியார் பஸ்ஸின் பண முதலைகளுக்கும் தெரியும் தன்னுடைய பஸ் எத்தனை வேகத்தில் ஓடுகின்றது என்று
அவர்களுக்கு ட்ரைவரின் உயிரை பற்றியோ அல்லது பொதுமக்களின் உயிரை பற்றியோ கவளை இல்லை அவர்களுக்கு கல்லா நிறைந்தால் போதும்
பிறகு யார்தான் பார்ப்பது முழுக்க முழுக்க காவல்துறைதான் பொறுப்பு
தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை வரும் தனியார் பேருந்துகள் அத்தனையும் அப்படித்தானே வருகின்றனர். மக்களும் அதைத்தானே விரும்புகின்றனர்
தனியார் பஸ்ஸும், சிஆர்சி பஸ்ஸும் நிற்கும் முதலில் கிளம்புவது சிஆர்சியாக இருக்கும் 15, 20 நிமிடம் கழித்து தனியார் பஸ்ஸு புறப்பட்டாலும் தனியார் பஸ்ஸு புறப்படும் வரை காத்திருந்து தனியார் பஸ்ஸில்தான் பயணிக்கின்றார்கள் காரனம் சிஆர்சி போய் சேற்வதற்கு முன்பாக தனியார் பஸ் போய் சேர்ந்துவிடுகின்றதை நாம் ஒவ்வொருவரும் விரும்ம்பி அதில் ஏறுகின்றோம்
உயிருக்கு உத்திரவாதம் இருக்கின்றதா என்றால் எங்குதான் கேள்விக்குறி
ஆனபடியால் இதற்கு ஒரே வழி காவல்துறையின் கயூட்டுப்பெறாத கடுமையான சட்டம் கொண்டு வந்தாலே அன்றி இப்படிபட்ட விபத்துக்களையும் இழப்புக்களயும் தவிற்க்க முடியாது

அதிரைமன்சூர்

Unknown said...

நமதூர் பொது மக்கள் சார்பில் பேருந்துகளின் வேகத்தை கட்டுபடுத்த மாவட்ட ஆட்சித்தலைவர்,RDO, கோட்ட மேலாளர் கும்பகோணம் ஆகியோரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.இதற்கான முயற்சியை AAMF முன்னின்று செய்ய வேண்டும்.பாதிப்புக்கு முன் விழித்துக்கொள்ள வேண்டும்.எல்லாம் வல்ல ரஹ்மான் அனைத்து பிரச்சனைகளிருந்தும் நம்மை காத்தருள துஆ செய்கிறேன்
------------------
இம்ரான்.M.யூஸுப்
மக்கள் தொடர்பு செயலாளர்
அமீரக சமூகநீதி அறக்கட்டளை

Shameed said...

எல்லா விசயங்களும் சீக்கிரம் நடக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் காணப்படுகின்றன பெரும் பாலான விபத்துக்களுக்கு இந்த மாதிரியான எண்ணங்களே காரணம்

3:200 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
3:200. முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

எங்கோ, வேறு ஏதேனும் காரணத்திற்காக துரதிஸ்டவசமாக‌ எவரேனும் கொல்லப்பட்டாலோ அல்லது அரசில் காரணங்களுக்காக குண்டு வெடிப்பு நடத்தப்பட்டாலோ கண்ணை மூடிக்கொண்டு இஸ்லாமிய சமுதாயத்தின் மீது எவ்வித காரண,காரியமும் இல்லாமல் குற்றம் சுமத்தும் காவல்துறையும், ஊடகங்களும், பாசிச சக்திகளும் ஆயிரமாயிரம் நம்மைச்சுற்றி இருந்து விட்டு போகட்டும். நம் மார்க்கம் போற்றும் இது போன்ற உரிய நேரத்தில் பிரதிபலன் ஏதும் பாராமல் செய்யப்படும் மனிதநேயம் மிக்க பணி சமுதாய சொந்தங்களால் என்றும் தொய்வின்றி தொடரட்டுமாக.........

இவ்விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் இறைவன் விரைந்து சுகத்தை தந்து நல்லருள் புரியட்டுமாக...ஆமீன்.

அப்துல்மாலிக் said...

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் பூரணம் நலம் பெற என் பிரார்த்தனைகள்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு