Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தொட்டால் தொடரும் ! - குறுந்தொடர்-1 21

அதிரைநிருபர் பதிப்பகம் | April 19, 2012 | , ,


இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் பலர் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ரங்கூன் போன்ற நாடுகளுக்கு "திரை கடலோடி திரவியம் தேடச் சென்றார்கள். அப்படிப் போன பலபேருடைய குடும்பம் "நல்லா" இருந்தது. அவர்கள் "ஜக்காத்" கொடுத்தார்கள். மற்றவர்கள் வாங்கினார்கள். அவர்கள் "ஹஜ்" செய்தார்கள், மற்றவர்கள் அவர்களை "ஹாஜியாரே" என்று அழைத்தார்கள். அவர்கள் புதிய வீடு கட்டினார்கள்., கார் வாங்கினார்கள், பிள்ளைகளை டாக்டராகவும் இஞ்சினியராகவும் படிக்க வைத்தார்கள். வயல், தோப்பு, மனைகள் வாங்கிப் போட்டார்கள். 


அந்தக்குடும்பங்களில் பல குடும்பங்கள் இன்றும் நல்ல நிலையில் இருக்கின்றன. அவர்களுக்கு சமுதாயத்தில் அந்தஸ்து வழங்கப் பட்டது. சென்ற இடமெல்லாம் அவர்களை கவுரவிக்க பலர் காத்திருந்தார்கள். அங்கேஅவர்களின் "பணம்" அவர்களின் தகுதியைப் பேசியது. பலர் அவர்களை அண்டி வாழ்ந்தார்கள், மற்றும் சிலர் அவர்களைப் பார்த்து பொறாமைப் பட்டார்கள். தங்களுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது என்பதே அதற்குக் காரணம். ஏனென்றால் சிங்கப்பூர், மலேசிய நாடுகளின் கதவுகள் அடைபட்டு விட்டன. புதிதாக யாரும் அங்கே போக முடியாது. உள்ளூரில் அந்த "முதலாளிகளின்" கடைகளில் பலர் வேலைப் பார்த்தார்கள். பெரும்பாலான மக்கள் கூலி வேலையும் "சாப்பாடு கழிந்தால் போதும்" என்ற அளவுக்கு வருமானமுள்ள வேலையும் பார்த்தார்கள். 

அந்த வசதிமிக்கக் குடும்பத்திலும் பல பிரச்சினைகள். பணம் தேடச் சென்றவர்கள் அங்கே மற்றொரு பெண்ணை மணமுடித்து அங்கேயும் பல பிள்ளைகளைப் பெற்றார்கள். தங்கள் ஊரிலுள்ள மனைவி மக்களை மறந்து போனார்கள். அவர்களின் பணம் அங்கேயும் கவுரவமாகத்தான் பேசப்பட்டது. கணவனால் மறந்துபோன குடும்பப் பெண்கள் பட்ட துன்பத்துக்கு அளவே கிடையாது.கிட்டத்தட்ட "கைம்பெண்கள்" போல் அவர்கள் வாழ்வு அமைந்தது. சிலர் "அங்கேயும் இங்கேயும்" நீதமாக நடந்து கொண்டார்கள். அந்தக் குடும்பகளுக்கு பாதிப்பில்லை.இவ்வளவு பிரச்சினைகள் சமுதாயத்தில் இருந்தபோதும் "வரம்பு மீறுவது" "வேலி தாண்டுவது" போன்ற "கலாச்சாரங்கள்" குறைவாகத்தான் இருந்தது.

சமுதாயம் ஏழைகளால் நிரம்பி இருந்தது. இந்த ஏழைகளுக்கு பல குழந்தைகள். அவர்களை படிக்க வைக்கும் அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லை. S .S .L .C . பாசான சிலர் அரசு வேலைக்குப் போனார்கள். அன்றைய நிலையில் "வக்கத்தவனும் வகையத்தவனும்" தான் அரசு வேலைக்குப் போவார்கள் என்ற பேச்சு மக்களிடம் இருந்தது. சம்பளம் மிகவும் குறைவு என்பது அதற்கொருக் காரணம். இப்படி பல ஏற்றத் தாழ்வுகள் அன்றைய மக்களிடம் இருந்தது. பணக்கார பிள்ளைகள் பெரிய படிப்பும் பாவப்பட்ட பிள்ளைகள் சாதாரண பள்ளிப் படிப்பும் படித்தார்கள். தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் தங்கள் வாழ்க்கை வசதிகளை வகுத்துக் கொண்டார்கள். வாழ்க்கை நெருடலில்லாமல் எல்லோருக்கும் இனிமையாகத்தான் அமைந்தது.

மக்களிடம் அன்பு, பணிவு, ஒற்றுமை, ஆடம்பரமின்மை, இபாதத்து, இக்லாசு எல்லாம் செல்வமாக இருந்தது. வரதட்சணை மோகம் இல்லை. பளிங்கு மண்டபத்தில் நாட்டம் இல்லை. டிவி கிடையாது. கூட்டுக் குடும்பம். மொத்தத்தில். "இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்தார்கள்" 

வழக்கம்போல் தங்கள் கடமைகளை முடித்து உறங்கப்போன அந்த மக்களை திடீரென்று வீசிய "புயல்" திக்கு முக்காட வைத்துவிட்டது. தங்கள் வாழ்விலும் இப்படி ஒரு "வசந்தச் சூறாவளி" வீசும் என்று தெரியவே தெரியாத அந்த மக்களை இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வீசியப் "பாலைவனப் புயல்" எங்கேயோ கொண்டுபோய் உட்கார வைத்து விட்டது.......

(இன்ஷா அல்லாஹ் ---- தொடரும்)
-அபூஹாஷிமா

21 Responses So Far:

அன்புடன் புகாரி said...

அதிரை அன்பர்களே,

வெகுகாலமாக என்னிடம் இருக்கும் ஒரு கேள்வி!

அ-திரையிலிருந்து எல்லோரும் திரைகடலோடித்தான் தீர வேண்டுமா? எத்தனை யுகங்களாய் இந்த நிகழ்வு?

கட்ட வெளக்கமாறா இருந்தாலும் கப்ப வெளக்கமாறுதான் வேண்டும் என்று ஏன் பெண்களும் சொல்கிறார்கள்?

கணவன் ஒரு நாட்டிலும் மனைவி ஒரு நாட்டிலும் என்பது என்ன தலையெழுத்து?

அன்புடன் புகாரி

ZAKIR HUSSAIN said...

வாழ்க்கையை ஓரளவு முன்னெற்றியதும்..சில வகையில் பின்னேற்றியதற்கும் வலைகுடா நாடுகளின் அறிமுகம் ஒரு காரணம்....எல்லாம் ஓட்டுறவன் ஒழுங்கா இருந்தா வண்டி ஒழுங்கா ஓடும்

அதிரை சித்திக் said...

'கட்ட வெலக்கமாராக இருந்தாலும் கப்ப வெலக்கமாராக இருக்கவேண்டும் .....

நம்ம ஊரு பழமொழி ...புதிய தகவல் எனக்கு ....

அரசு உத்தியோகத்திற்கு ஒரு பழமொழி உண்டு..எனக்கு நினைவுக்கு வரவில்லை ...

KALAM SHAICK ABDUL KADER said...

வருடும் வரிகளில்
நெருடலானத்
தொடர்!

உள்ளதை உள்ளபடி
உடைத்துச் சொல்லும்
மறைக்க முடியாத
உண்மைகள்!

மனசாட்சி நீதிமன்றத்தில்
மனு செய்ய்ப்பட்ட
வாதம்!

அதிரையர்களை
அதிகமாக யோசிக்க வைத்த
அதிவேக யுக்தி!

நாணப்பட வைக்கும்
பேனா யுத்தம்!

விடையறியா வினாவன்று;
விடையறிந்தும் விழிக்கும்
தடைபோடும் தந்திரம்
உடைக்கும் எந்திரம்!

பார்த்தேன்;
படித்தேன்;
ஆனால்,
விடுப்பில் ஊரில்
கேட்போர் நேரில்
“அப்பமா? தோசையா”
அப்பொழுதுதான் வந்திறங்கி லுஹர் தொழுகைக்கு உளு செய்ய ஹவுளுக்குள் கை நனைக்கு முன்பாக இக்கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டுமாம்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பார்த்தேன்;
படித்தேன்;
ஆனால்,
விடுப்பில் ஊரில்
கேட்போர் நேரில்
“அப்பமா? தோசையா”
அப்பொழுதுதான் வந்திறங்கி லுஹர் தொழுகைக்கு உளு செய்ய ஹவுளுக்குள் கை நனைக்கு முன்பாக இக்கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டுமாம்!//

கலாம் காக்கா அவர்களின் மவுனமாக உருட்டியெடுக்கும் உள்ளத்தை... ஆனால் இதுக்கு பதில் சொல்ல வேண்டுமென்றால்...

தொட்டுக்க ஈரல் / நுரையிரல் / மூளை பெறட்டல் என்ன இருக்குன்னு சொல்லுங்க எதனை அதோடு சாபிடலாம்னு சொல்கிறேன் என்று சொல்ல வேண்டியதுதான் (நம் பதில்) :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தொன்று தொட்டு வரும் உண்மைகளின் உரசல் இந்த பதிவு...

sabeer.abushahruk said...

ஓர் ஆய்வு போன்றதொரு தொணி தொக்கி நிற்கிறது இந்தப் பதிவில். எல்லாம் சொல்லி தீர்வையும் சொல்லி முடிக்க சகோதரர் அபுஹாஷிமா அவர்களுக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நெடுநாட்களாக கச்சல் கட்டி/மல்லுக்கட்டி நின்று வரும் கேள்வியும், அன்றே ஓடி ஒளிந்து கொண்ட பதிலும், திரை கடல் தாண்டி ஓடும் பொழுது கீழே தவறி விழுந்து மூழ்கடிக்கப்பட்ட அக்கால அதிரையின் சந்தோசங்களும் பல நூற்றாண்டுகளுக்குப்பின் ஊர்/உலகம் டைட்டானிக் கப்பல் போல் மீட்டெடுத்து நம் பெருமையை பறைசாற்றி மகிழ்ந்து கொள்ளுமோ? படைத்த இறைவனுக்கே வெளிச்சம்.

2, 3 வார விடுமுறையில் ஊர் செல்ல திட்ட மிட்டு அது நெருங்கிய சிலருக்கு தெரியவந்து டெலிபோனில் தொடர்பு கொண்டு நம்மிடம் கேட்கும் பொழுது லீவில் தானே போகிறாய்??? அத்துடன் நாட்களையும் கேட்டு எம்மை கதிகலங்க வைத்து விடுகின்றனர். பெற்றோர்கள் கூட சில வேளை இப்படி கேட்டு விடுகிறார்கள்..எவ்வளவு நாட்கள் ஊரில் தங்குவாய்???

பிறகு அப்பமா? தோசையா? வண்டப்பமா இல்லை வட்லப்பமா? என்று கேட்பவர்கள் பற்றி என்னெத்த சொல்ல??????

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நிஜமான நிகழ்வுகளை நிழலாய் வடித்து தந்தமைக்கு சகோ. அபுஹாஷிமா அவர்களுக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்.

// சமுதாயம் ஏழைகளால் நிரம்பி இருந்தது. இந்த ஏழைகளுக்கு பல குழந்தைகள். அவர்களை படிக்க வைக்கும் அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லை. S .S .L .C . பாசான சிலர் அரசு வேலைக்குப் போனார்கள்.//

அன்றோ வசதிகள் இல்லாத காலத்தில் மனித தன்மை நிறைந்த வாழ்க்கை .
இன்றோ வசதிகள் உள்ள காலத்தில் மிரு தன்மை நிறைந்த வாழ்க்கை.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// //பார்த்தேன்;
படித்தேன்;
ஆனால்,
விடுப்பில் ஊரில்
கேட்போர் நேரில்
“அப்பமா? தோசையா”
அப்பொழுதுதான் வந்திறங்கி லுஹர் தொழுகைக்கு உளு செய்ய ஹவுளுக்குள் கை நனைக்கு முன்பாக இக்கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டுமாம்! //

நமதூரில் சரியாக (சூழ்நிலை)அடுப்பு எரியாததளால் அப்பமோ,தோசையோ பண்ண முடியவில்லை என்று அவசர படுவோருக்கு ஆறுதல் வார்த்தயயை கூறுங்கள் கையை நனைத்தாலும் பரவாயில்லை மறக்காமல் சொல்லிவிடுங்கள் கலாம் காக்கா.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அபூ ஹாஷிமா அவர்களுக்கு விழிப்புனர்வுமிகுந்த நல்ல ஆக்கம் வாழ்த்துக்கள்

உண்மையான செல்வம் திருப்தியே. அது இருந்து விட்டால் வாழ்க்கையின் நிறைவு குறைவதில்லை. அது இல்லா விட்டால் உலகில் உள்ள அனைத்து செல்வங்களைக் கொண்டு வந்து நம்மிடம் கொட்டினாலும் நாம் நிறைவு அடையப் போவதில்லை. ஓட்டைக் குடத்தில் எத்தனை தண்ணீர் ஊற்றினாலும் அது எப்படி நிறைந்திருப்பதில்லையோ அதே போல் தான்.

பெறுகின்ற செல்வங்களுள், அறிவுடைய மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்ததாகப் பிற எதையும் நாம் கருதுவதில்லை. - குறள்

ஒவ்வொரு வரியிலும் பலதரப்பட்ட மக்களின் கண்ணீர் கரைந்தோடியது,
ஒவ்வொரு வார்த்தைகளையும் அருமையாக இணைத்து ஒரு ஆக்கமாக வடித்துள்ளீர்...நன்றி

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

\\விடையறியா வினாவன்று;
விடையறிந்தும் விழிக்கும்
தடைபோடும் தந்திரம்
உடைக்கும் எந்திரம்!//

இந்த வார்த்தை ஒரு (கவி)மந்திரம் என்னவொரு கற்பனை கவியன்பரே

அப்பமா? தோசையா? ---என்ற கேள்விக்கு "இடியாப்பம்" என்று சொல்வதே சிறந்தது

இப்போதுள்ள நிலைமையில் எந்நேரத்தில் (இடியாப்ப) சிக்கல்/தகவல் வருமென்பதே விடுப்பில் வந்தவர் மனதோரத்தில் பயம் கம்பெனியை எண்ணி

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பு நண்பர் அபூ ஹஷிமா அவர்களே,

அறிவு ஜீவிகள் சஞ்ச்ரிக்கும் அதிரை நிருபர் தளத்துக்கு அன்புடன் சலாம் கூறி வரவேற்கிறேன்.

உங்களுடைய சில கவிதைகள் ஏற்கனவே மேற்கோள்களாக எனது ஆக்கங்களில் இடம் பெற்று இருக்கின்றன. இப்போது ஒரு குறுந்தொடர் தொடங்கி இருப்பது உங்களை அறிந்தவன் என்ற முறையில் மிகவும் மகிழ்வைத்தருகிறது.

வஸ்ஸலாம்.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பு நண்பர் அபூ ஹஷிமா அவர்களே,

அறிவு ஜீவிகள் சஞ்ச்ரிக்கும் அதிரை நிருபர் தளத்துக்கு அன்புடன் சலாம் கூறி வரவேற்கிறேன்.

உங்களுடைய சில கவிதைகள் ஏற்கனவே மேற்கோள்களாக எனது ஆக்கங்களில் இடம் பெற்று இருக்கின்றன. இப்போது ஒரு குறுந்தொடர் தொடங்கி இருப்பது உங்களை அறிந்தவன் என்ற முறையில் மிகவும் மகிழ்வைத்தருகிறது.

வஸ்ஸலாம்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

தொட்டால் தொடரும் :
நம் சமுதாயம்!
அன்றும்! இன்றும்!
என்பதை அலச இருக்கிறது
என்று நினைக்கிறேன்.

சகோதரரை வரவேற்கிறோம்!
வாழ்த்துக்கள்!

Ebrahim Ansari said...

//மனசாட்சி நீதிமன்றத்தில்
மனு செய்ய்ப்பட்ட
வாதம்!

அதிரையர்களை
அதிகமாக யோசிக்க வைத்த
அதிவேக யுக்தி!//

கவியன்பன் அவர்களின் மேற்கண்ட வரிகள் காலத்தை வென்று நிற்கப்போகும் வரிகள்.

இந்த ஆக்கம் தந்துள்ள நண்பர் அபூஹஷிமா அவர்கள் குமரி மாவட்டம் கோட்டாறு என்ற ஊரைசேர்ந்தவர். பலகாலம் சவூதியில் பணியாற்றியவர்.

"பெட்டகம்" - குமரிமாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றுப் பொக்கிஷம் - என்ற ஒரு நூலை 2001 இல் வெளியிட்துள்ளார். "இந்தியா டுடே" பத்திரிக்கை அளவில் A4 சைசில் கிட்டத்தட்ட நானூறு பக்கங்கள் கொண்ட மிகப் பிரமாண்டமான புத்தகம் அது. குமரிமாவட்ட வரலாறு மட்டுமல்ல, இந்தியாவிலும் தமிழகத்திலும் இஸ்லாம் தோன்றிய வரலாறு, இறைநேசர்களின் வருகை, அவர்களின் வரலாறு, முஸ்லிம்களின் கலை,கலாசாரம்,சமூகம்,பொருளாதாரம்,கல்வி,ஆன்மிகம் உட்பட அனைத்து விசயங்களும் அதில் பதிவு செய்யப் பட்டுள்ளன. சில பல்கலைக் கழகங்களில் அது வரலாற்று மேற்படிப்பு மாணவர்களுக்கான ஆராய்ச்சி நூலாக இடம்பெற்று இருக்கிறது. அதை ஆராய்ச்சி செய்து பலர் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

2002 இல் "அண்ணலே யா ரஸூலல்லாஹ்" என்ற தலைப்பில் அண்ணல் நபிகளாரின் அற்புதமான வாழ்க்கை வரலாறை புதுக் கவிதையில் எழுதியுள்ளார். மேத்தா எழுதிய "நாயகம் ஒரு காவியம்" பாதி வரலாறுதான். வலம்புரி ஜான் எழுதியதில் பல வரலாற்றுப் பிழைகள். தமிழில் முதன் முதலில் வந்த முழுமையான நபிகளாரின் புதுக் கவிதைக் காவியம் இதுதான்.

இன்நூல" என் வாழ்வில் எனக்கு இறப்புவரை இன்பம் தருகின்ற இனிமை இதுதான். அல்ஹம்துலில்லாஹ். என்று அபூஹஷிமா அவர்கள் கூறுகிறார்.

தமிழறிந்த நல்லுலகின் தமிழ் அறிஞர் பெருமக்களுடன் தொடர்ந்த தொடர்புள்ளவர். எனக்கும் நண்பர்.

சமுதாயம் சம்பத்தப்பட்ட கருத்துப்பரிமாற்றங்கள் மாவட்டங்கள் கடந்து செய்து கொள்ளப்படவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்- பரவிக்கிடக்கும் அறிவுஜீவிகளை அனைவருக்கும் அறிமுகப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இததகைய பதிவுகள் பரிமாறப்படுகின்றன.

இதற்கு வழிவகுத்த நெறியாளர் தம்பி அபூ இப்ராஹீம் அவர்களுக்கும், தம்பி தாஜுதீன் அவர்களுக்கும் மிக்க நன்றி. ஜசக்கல்லாஹ்.

Yasir said...

சகோ.அபூஹஷிமா அவர்களின் ஏதார்த்தமான இப்பதிவு பல ஆயிரம் அர்த்தங்களை கொண்டு நம் அனைவரையும் சிந்திக்க வைக்கின்றது....மேலும் பல் ஆக்கங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்

Yasir said...

please read if you have time

http://www.thesun.co.uk/sol/homepage/features/4273340/Diamond-Jubilee-derailed-by-Queens-love-for-Muslim.html

abu haashima said...

அதிரை வலைத்தளம்

எனக்குப்

புது அறிமுகம்!

அறிமுகப் படுத்தியவர் நண்பர்

இப்ராஹீம் அன்சாரி மஸ்தான் சமத் அவர்கள்.

நன்றியோடுதான் உள் நுழைகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு....

அதிரைத் தளம் உண்மையில்

அதிர வைக்கும் தளமாக இருக்கிறது!

எத்தனை அறிவு ஜீவிகள்

எத்தனைக் கவிஞர்கள்

எத்தனை வித்தகர்கள்

அத்தனைபேரும் முகமன் கூறி வரவேற்கும்போது

சிலிர்த்துப் போகிறேன் !

மனம் லயித்துப் போகிறேன்!

முகம் தெரியாதவர்கள் நீங்கள்!

உங்கள் அகவரியை

வருடி விட்டதால் உங்கள்

முகவரியைத் தந்து

முன்னுரை தந்து விட்டீர்கள்!

இது -

உங்களின் வரலாறு மட்டுமல்ல

என்னுடைய "இறந்த" காலமும்

இங்கே புதைந்து கிடப்பதால்

கொஞ்சம் தோண்டிப் பார்க்கும் ஆசை!

கிணறு வெட்ட பூதம்

கிளம்பியதுபோல்

பிரிவுகளும் ஏக்கங்களும்

தனிமையும் தவிப்புகளும்

எதிர்பார்ப்புகளும்

ஏமாற்றங்களும்

சகோதரர்களின் பதில் பதிவுகளில் இருந்து

கிளம்பிக் கொண்டேயிருக்கின்றன!

கடப்பாறையாய்

சம்மட்டியாய்

வந்து விழுகின்ற

ஒவ்வொரு அடிகளும்

இதயத்தை இடம்பெறச் செய்கின்றன!

"நிச்சயமாக இறைவன்

பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்"

நம்மிடம் பொறுமை இருப்பதால்

இறைவன் நம்மோடு இருக்கிறான்!

இன்ஷா அல்லாஹ்

புன்னகையோடு வாருங்கள்

வாழ்வு

நம்மை வரவேற்காமல் இருக்காது!

......நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அபு ஹாஷிமா

(மூன்று அத்தியாயங்கள் போட்டு விட்டேன். அவற்றையும் படித்துப் பாருங்கள்.

மேலும் தொடரும்.உங்கள் கருத்துக்களையும் மறவாமல் பதிவு செய்யுங்கள்)

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// அதிரைத் தளம் உண்மையில்
அதிர வைக்கும் தளமாக இருக்கிறது! //

வலைத்தளங்கள் பல இருந்தும்.திறமை மிக்கவர்களின் பண்பட்ட ஆக்கங்களால்.அறிமுகம் இல்லாத அன்பானவர்களை தன்கத்தே உள் வாங்கி கொள்ளும் தளம் என்பதில் சந்தேகமே இல்லை சகோ.அபு ஹாஷிமா அவர்களே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு