Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மூளைக்கு வேலை 8

அதிரைநிருபர் பதிப்பகம் | April 06, 2012 | , ,

மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் எளிய கணக்குகள். இதோ...

1. பாக்டீரியா தினமும் இரண்டு மடங்காக பல்கிப் பெருகக் கூடியது.

ஒரு கண்ணாடிப்பெட்டியில் ஒரு பாக்டீரியா வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் நாள் அந்த ஒரு பாக்டீரியா இரண்டாக வளர்ந்திருக்கிறது. மூன்றாம் நாள் இரண்டு நான்காகவும், நான்காம் நாள் எட்டாகவும் பாக்டீரியா வளர்ந்துகொண்டிருக்கிறது. பத்தாம் நாளில் கண்ணாடி பெட்டி முழுவதிலும் பாக்டீரியா நிரம்பி விடுகிறது. அப்படியானால், கண்ணாடிப்பெட்டி பாதிப் பெட்டியாக நிரம்ப எத்தனை நாட்கள் ஆகியிருக்கும்?

2. ஒரு பெரிய மரத்தின் கிளை 12 அடி அளவு, 12 துண்டுகளாக வெட்டப்படுகிறது. மரத்தின் ஒரு துண்டை வெட்ட ஒரு நிமிடம் எடுத்துக்கொண்டால், 12 துண்டுகளையும் வெட்ட எவ்வளவு நிமிடங்கள் ஆகியிருக்கும்?

3. ஒரு விவசாயி கழுதையை ரூ.50க்கும், வெள்ளாட்டை ரூ.40க்கும், செம்மறி ஆட்டை ரூ.25க்கும், பன்றியை ரூ.10க்கும் வாங்கியிருக்கிறார். சராசரியாகப் பார்க்கும்போது அவர் ஒரு விலங்கை ரூ.30க்கு வாங்கியிருக்கிறார் எனில், மொத்தம் எத்தனை விலங்குகளை வாங்கியிருப்பார்?

4. ஒரு பையில் 25 பைசா நாணயங்கள், 50 பைசா நாணயங்கள் மற்றும் ஒரு ரூபா நாணயங்கள் சமமாக மொத்தம் ரூ.700 இருக்கின்றன. அப்படியானால், ஒவ்வொரு நாணயமும் எவ்வளவு இருக்கும்?

5. ராமு சந்தைக்குச் செல்கிறார். சந்தைக்குச் செல்லும் வழியில் எதிரில் ராமுவின் நண்பர் வருகிறார். நண்பருக்கு நான்கு மனைவிகள். ஒவ்வொருவரின் கையிலும் ஒவ்வொரு நாய். ஒவ்வொரு நாய்க்கும் நான்கு குட்டிகள். அப்படியானால், சந்தைக்குச் சென்றது மொத்தம் எத்தனை பேர்?



நன்றி: புதிய தலைமுறை கல்வி வழிகாட்டி புத்தகம்
பகிர்தல்: அதிரை என்.ஷஃபாத்

8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மெய்யாலும், என் மூளைக்கு வேலை கொடுத்த பதிவு (விடைகளை கிளிக் செய்ய வைத்த) அது ஐந்தே நிமிடங்களானாலும் இனிவரும் காலங்களிலும் அதன் பலனால் பயனே...

நல்ல பகிர்வு தம்பி !

Noor Mohamed said...

இதுபோன்ற கணக்குகள் சர்விஸ் கமிஷன் எழுதும் மாணவர்களுக்கு கண்டிப்பாக தேவை. ஆனால்! நமதூரின் எந்த தளத்திலும் மாணவர்கள் பங்கேற்பதில்லை என்பது கவலைக்குரிய ஒன்றாகும்.

என்னுடைய எளிய கணக்கு எல்லோருக்கும்;

ஒரு கிணற்றில், தரை மட்டத்திலிருந்து 30 அடி ஆழத்தில் நீர் உள்ளது. அதில் ஒரு தவளை ஒரு நாளைக்கு 3 அடி மேலே சென்று 2 அடி கீழே இறங்கி விடுகிறது எனில், அந்த தவளை தரைமட்டத்தை எட்ட எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளும்?

குறிப்பு: இக்காலத்தில் கிணறும் இல்லை, 30 அடி ஆழத்தில் நீரும் இல்லை. 1978 ல் ரயில்வே சர்விஸ் கமிஷன் எழுதிய போது, கேட்கப்பட்ட வினாக்களில் இதுவும் ஒன்று.

sabeer.abushahruk said...

ஷஃபாத்,

நானு 3/5 ; பரவால்லயா?

நூர் காக்கா; 28 நாட்களா? (சரின்னா பப்ளிக் பண்ணுங்க; தவறுன்னா ஹி ஹி நமக்குள்ள இருக்கட்டும்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இதெல்லாமா கேள்வியா கேட்கிறாங்க ? அங்கே !

கிணற்று தவளை (!!) மேலே வராதுன்னு சொல்லுவாங்களே !

இருந்தாலும் யோசிக்காம சொல்றேன் N.M.காக்கா... 30 நாள் !

Noor Mohamed said...

//நூர் காக்கா; 28 நாட்களா?//

தம்பி சபீர் 28 நாட்களே.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எப்புடி ?

சொல்லுங்களேன்... !

ஒரு சின்ன (தவளை)கணக்கு கூட தெரியலையே கேட்கப்படாது ! :)

Noor Mohamed said...

//எப்புடி ?
சொல்லுங்களேன்... !
ஒரு சின்ன (தவளை)கணக்கு கூட தெரியலையே கேட்கப்படாது ! :) //

தவளை ஒரு நாளைக்கு 3 அடி மேலே சென்று 2 அடி கீழே இறங்கி விடுகிறது எனில் ஒரு நாளைக்கு 1 அடி உயர்கிறது. இவ்வாறாக 27 அடி உயர 27 நாட்கள் தேவை. 28 வது நாள் 3 அடி மேலே சென்றதும், 30 அடி எட்டிவிட்டது, அதுவே தரைமட்டம்.

அதிரை என்.ஷஃபாத் said...

விடுகதைகள் சொல்லி விடை கேட்டல், கணக்குகள் கொடுத்து தீர்வு காண பணித்தல் என்பவை குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு பெரிதும் உதவக் கூடியன.

வேளைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பெரிய நிறுவனங்களெல்லாம், கீழ்க்காணும் தகுதிகளின் அடிப்படையிலேயே ஆட்களைத் தேர்ந்தெடுக்கின்றன.

1. தீர்க்கும் திறன் (Solvability)
2. ஆராயும் திறன் (Analytical Ability)
3. தீர்மானிக்கும் திறன் ( Decision Making skills)
4. வழிநடத்தும் திறன் (Leadership)
5. மொழித் திறன் ( Communication Skills)
ஆகிய ஐந்தும் இன்றியமையாதவை. இவற்றில் முதல் இரண்டினை தர வல்லது இதுபோன்ற புதிர்களும் கணக்குகளும். பள்ளி விடுமுறைகளில் நமது குழந்தைகளுக்கு இது போன்ற புதிர்களை கொடுத்து விடை காணும்படி பணிக்கலாம். உபயோகமான விளையாட்டு.

போட்டித்தேர்வுகள் எழுதுவோர் எல்லோரிடமும் இருக்கும்/இருக்க வேண்டிய புத்தகங்கள் இவை.

1. Shakuntala Devi's "Puzzles to Puzzle you"
2. R.S. Agarwal's "Quantitative Aptitude"

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு