Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஐ.பி.எல். மேட்ச் – அசிங்கங்களின் அரங்கேற்றம் ??? !!! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | April 14, 2012 | , ,


எனக்குத் தெரியும் தலைப்பைக் கண்டதும் பல கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் மட்டைகளுடன் என் இடத்தைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள் என்று அவர்கள் என்னதான் நொங்கு நொங்குன்னு நொங்கினாலும் நான் நல்லாத் தாங்குவேன், ஏனென்றால் உண்மையே சொல்பவனுக்கு மனதில் உறுதி இருப்பதால் உடம்பில் வலிக்காது. நான் ரொம்ப ”நல்லவேன்”ண்டு” நீங்கள் சொல்றது காதிலே விழுது. சில வீடுகளில் சாந்தியிழந்த விசயத்திற்கு வருவோம், இக்கட்டுரை யாரையும் புண்படுத்தும் நோக்கோடு எழுதப்படவில்லை, அப்படியே புண்பட்டாலும் நல்லதச் சொல்றதில எனக்கு சங்கடமில்லை. கிரிக்கெட்டை பார்க்காதவர்களில் நானும் ஒருவன் என்ற முழுத்தகுதியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன் (பார்க்காமல் என்னத்த எழுதப் போகிறே என்று கேட்பவர்கள் இருப்பின் இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு மீண்டும் கேளுங்களேன் இதே கேள்வியை).

கிரிக்கெட்

இன்று பல்லாரயிரக்கணக்கான மாணவர்களின், இளைஞர்களி்ன், ஏன் கூடிய விரைவில் வாழ்வின் நிறைவு கண்டு விசா ஸ்டாம்பிங்கை எதிர்பார்த்து காத்திருக்கும் வயதானவர்களின் வாழ்க்கையைக்கூட சுழல் காற்றுபோல் சுழற்றி சுழற்றி அடித்துக் கொண்டு இருக்கின்றது. கிரிக்கெட் பலரின் வாழ்க்கையைத் தரிகெட்டு போக வைத்திருக்கின்றது. உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியம் இல்லாத விளையாட்டு மட்டையை எடுத்து விளையாடும் மட்டமான விளையாட்டுதான். குளிர்காலங்களில் சிறிதேனும் கை கால்களை அசைக்க வேண்டி ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆனால் இன்று அனல் தெரிக்கும் வெயிலிலும் கழுதை உப்பளத்திற்குச் சென்ற கதையாக மண்டைகாய விளையாடப் பட்டுக்கொண்டு இருக்கின்றது.11 மடையர்கள் விளையாட அதனை 11 கோடி முட்டாள்கள் பார்த்துக்கொண்டிருக்கார்கள் என்று யாரோ ஒரு ஆங்கிலேய யாசிர் (!!?) சொன்னதாக படித்ததுண்டு. பெரும்பாலும் தீவிர கிரிக்கெட் (நான் சொல்வது தீவிர கிரிக்கெட ரசிகர்களை மட்டுமே) ரசிகனை பாருங்கள் அவன் அணி தோற்றுவிட்டால் ”ஜின்” அடித்த மாடுபோல் ஒரே பரபரப்பாகத் திரிவான். அந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மாயை இந்த கிரிக்கெட்டிற்கு உண்டு,

கிரிக்கெட் பைத்தியம் பிடித்த ஒருவனிடம் அவன் நண்பன் கவலையாகச் சொன்னானாம், என் வாழ்வில் ”விதி விளையாடிவிட்டது” அதற்கு அவன் “ எத்தனை ஸ்கோர்” என்று கேட்டானாம், நிச்சயம் இவன் கீழ்பாக்க மருத்துமனை அருகில் பிளாட் பிடித்து தங்க வேண்டியவன் தான்.

சூதாட்டம்

கிரிக்கெட் விளையாடுபவன் திரைக்கு முன்னால் பெயருக்காக கிரிக்கெட் விளையாடிவிட்டு,திரைக்குப்பின்னால் சூதாட்டம் எனப்படும்,கோடிக்கணக்கான பணம் புழங்கும் விளையாட்டில் புகுந்து ஆடுகின்றான். ரசிகர்களை முட்டாளாக்கி வேடிக்கை பார்க்கின்றான், நாட்டுப்பற்றை விட அவனுக்கு நோட்டுப்பற்று அதிகமதிகம் ஒரு சிலர் சாதனை செய்ய வேண்டும் என்பதற்காக தன் அணி சோதனையைச் சந்தித்தாலும் பரவாயில்லை தன் புகழ் ஓங்க வேண்டும் என்ற வக்கிர எண்ணம் கொண்டவர்களையும் கொண்டதுதான் இந்த கிரேட் கி(று)ரிக்கெட்டு.

ஐபிஎல்

இங்கிலாந்தில் புகழ்பெற்று, ஒரு விளையாட்டு எப்படி இருக்கவேண்டும் என்ற விதிமுறையுடன் பல நாட்டு கிரிக்கெட் வீரர்களையும் வரவழைத்து ஒரு நியாயமான தொகையைக் கொடுத்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டி ஆரம்பிக்கப்பட்டதுதான் ”கவுண்டி” மேட்ச்கள், அதனைக் காப்பியடித்து அதில் என்னென்ன சேர்த்தால் இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்த முடியும் என்று ஆராய்ந்து (!) அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ஐ.பி.எல் (Indian Pathetic League???)

ஐ.பி.எல்-லின் லட்சணம் அதன் உரிமையாளர்களைப் பார்த்தாலே தெரியும், குடிகாரர்களும், கூத்தாடிகளும்தான் அதன் முதலாளிகள், அவனுங்ககிட்டேதானே பணம் பயங்கரமா பாதாளம் வரை புழங்குது. ஐபிஎல்-லை சிலர் பார்ப்பதே அங்கு அங்கங்கள் மட்டும் காட்டத்தெரிந்த டான்ஸ் என்றாலே என்னவென்று தெரியாத ”cheer ladies” என்ற குமரிகள்(!!?) போன்று மேக்கப் செய்யப்பட்ட கிழவிகள் துள்ளுவதைக் காணத்தான்.

அதுமட்டுமன்று ”பகலிலே ஆட்டம் இரவினில் கிறக்கம்” என்பதுபோல். கிரிக்கெட் வீரர்களும்,நடுவர்களும், அணி முதலாளிகளும் இன்னும் சில நாதாரிகளும் ஆட்டத்திற்குப் பிறகு இரவுப் பார்ட்டி என்ற பெயரில் போதையேற்றிய தண்ணிரை(!!!!!??????) முழுவதுமாக அடித்துவிட்டு தனக்குப் பிடித்த உற்சாகப் பெண்களையோ, நடிகைகளையோ அழைத்துக் கொண்டுபோய் அடுத்த மேட்ச்சுக்கு தயாராகும் கேலவமான செயல் நடை பெறுவதும் இந்த ஐ.பி.எல் மேட்சில்தான். இது Indian Premier League-க்கா அல்லது International Prostitution League-க்கா என்று என்று கேட்கும் அளவிற்கு மது/மாது-வை மட்டும் தலைமைப் போட்டியாளர்களாக களமிறக்கி விபச்சாரத்தையும் இன்ன பிற அநாச்சாரங்களையும் அரசின் ஆசிர்வாதத்துடன் மேடை போட்டு கோலாகலமாக நடத்திக் கொண்டு இருக்கின்றது இந்த ஐ.பி.எல். இதன் இன்னபிற திரைக்குப்பின் நடக்கும் விசயங்களை எழுத ஆரம்பித்தால்..தொடர்தான் போட வேண்டி வரும். ஆனால் அன்சாரி மாமாவின் தொடர்போல் இது அறிவிற்கு விருந்து தராத விசயம் என்பதால் இத்தோடு முடித்துக் கொள்வோம்

ஐ.பி.எல். இது உறங்குபவனை உசுப்பிவிட்டு ஊளையிட வைக்கிறது, படிப்பவனை பள்ளம் தோண்டி பாய்ந்திட வைக்கிறது, வேலைக்குச் சென்றவனை வேண்டியவன் போல் துரத்தி துரத்தி இழுக்கிறது.

இதில் மின்சாரம் பற்றாக் குறை !? இருளில் இந்திய குடிமக்கள் இரவு வெளிச்சத்தில் இந்த  குடி மக்கள்.

விளக்கு புடிச்சுதான் விளையடனும்னு அப்படி என்னதாங்க தலையெழுத்து !?

இந்த விளையாட்டுக்கு செலவு செய்ததை பரீட்சை நேரத்தில் எத்தனை வீடுகளில் விளக்கு இல்லாமல் மாணவர்கள் தவித்தார்கள் அந்த வீடுகளுக்கு இப்படி இலவச மின்சாரம் கொடுத்திருந்தால் கல்விக்கு விளக்கு போட்ட புன்னியமாவது கிடைத்திருக்குமே !

இதனையெல்லாம் பார்க்கும்பொழுது இக்காலத் தலைமுறைக்கு இதுதான் நல்லது / கெட்டது என்று சொல்லிக் கொடுக்கத்தான் ஆளில்லை, ஆனால் கெட்டவிசயங்களை நல்லது போன்று காட்டும் செயல்களை ஊக்கபடுத்தாமல் இருப்பார்களா இந்த கயவர்கள்.

சிந்தனையும், ஆக்கமும்...

-முகமது யாசிர்

22 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கரண்டுதான் இல்லையே எங்கே மேட்ச் பார்க்கிறதாம் ஊரில்(!!??)...!

எனக்கு தெரிஞ்சு... ஒரு அணி ஜெயிக்கும் நினைச்சு மேட்ச் பார்த்தேன்னா அவ்வளவுதான்... அது கண்டிப்பா தோத்துடும்...

அதுனால இந்த ஐ.பி.எல். நல்லா நடக்கும்னு (நினைச்சுகிட்டு இருக்கேன்)... ஆனா ஊத்திகிடுமோ !?

அதெப்படி தம்பி பார்க்காமலே... ஆட்டத்தை(??) பற்றி அழ்ழ்ழ்ழ்க்கா சொல்லியிருக்கீங்க ! :)

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

சகோ. யாசிர்: நானும் உங்கள் கட்சிதான். நான் பல ஆண்டுகளாக கிரிக்கெட் வெறிபிடித்த நண்பர்களிடமும், உறவுக்கார இளைஞர்களிடமும் இது சூதாட்டம் என்று சொல்லி விட்டேன். யாரும் கேட்பதாக இல்லை.

இது விளையாட்டுத்தானே ஏன் வினையாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

அதிகம் பேசினால் நம்மை பைத்தியம் என்ற ரேஞ்சில் பார்க்கிறார்கள். நேரத்தை சாப்பிடும் இந்த வீண் விரய விளையாட்டை பார்க்கத்தான் வேண்டுமா? தேவைதானா? மாற்றி யோசி என் இளைஞர் சமுதாயமே!

Ebrahim Ansari said...

மருமகனார் யாசிர் அவர்களே!

காலத்துக்கேற்ற கருத்துப்பதிவைத் தந்து இருக்கிறீர்கள்.

இங்கிலாந்து போன்ற பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் - தனிநபர் வருமானம் அதிகம் உள்ள நாடுகளில் இப்படிப்பட்ட விரயம் செய்யும் பொழுது போக்குகள் தேவைப்படலாம். குடிக்க தண்ணீர்- படிக்க மின்சாரம் இல்லாத நமது நாட்டில் இப்படியெல்லாம் மூலவளங்களை விரயம் செய்வது சகிக்க முடியாதது.

அயிரை மீனுக்கு ஏன் விலாங்கு மீன் சேட்டை?

முன் ஐ. பி.ஏ.எல். தலைவர் லலித் மோடி என்பவர் அடிக்க வேண்டிய கொள்ளையும் அடித்துவிட்டு, சுருட்ட வேண்டியதையும் சுருட்டிக்கொண்டு லண்டனில் ஒளிந்து வாழ்கிறார். இவரை கைது செய்து கொண்டுவரும் திராணி இந்த அரசுகளுக்கு இல்லை.

மத்திய அரசின் அமைச்சர் ( சரத் பவார்), பெரும் தொழில் அதிபர்கள் ( டி. வி.எஸ், இந்தியா சிமிண்ட்ஸ்) போன்றவர்கள் இந்த சமுதாய, பொருளாதார சீரழிவை தங்களின் தன்னலத்துக்காக முன்னெடுத்து செல்கிறார்கள். அத்துடன் கருப்பை வெள்ளையாக்க திரைப்பட நடிகர் நடிகைகள் இதில் முதலீடு செய்கிறார்கள்.

ஒருத்தனுக்கு எந்திரிச்சி நிக்கவே வக்கு இல்லையாம். ஒம்பது பொண்டாட்டி கேட்டுச்சாம். என்பது போல்தான் இருக்கிறது ஐபிஎல் மற்றும் இந்தியாவின் நிலைகள்.

( மருமகன் ஷாகுல்! ஹத்து போல் பின்னூட்டம் எழுத்தும் ரகசியத்தை எனக்கும் சொல்லித்தா வாப்பா நீ நல்லா இருப்பே )

Noor Mohamed said...

தம்பி யாசிர் அவர்களுக்கு,

இதுவரை என் வாழ்நாளில் அரைமணி நேரம்கூட ஒழுங்காக உட்கார்ந்து கிரிகெட் பார்த்ததில்லை. ஏனோ இந்த விளையாட்டு எனக்கு அறவே பிடிக்காது. இந்த ஆட்ட நிபந்தனைகளும் எனக்கு தெரியாது.

ஆனால்! கிரிக்கெட்டை பார்க்காதவர்களில் நானும் ஒருவன் என எழுதும் நீங்கள்,//”cheer ladies” என்ற குமரிகள்(!!?) போன்று மேக்கப் செய்யப்பட்ட கிழவிகள் துள்ளுவதைக் காணத்தான்.// என்பதை எப்படி கூர்ந்து கவனித்தீர்கள்?!

அதுமட்டுமா! IPL க்கு ??International Prostitution League ?? என்ற அழகான அப்ரிவேசனையும் கொடுத்துள்ளீர்கள். நன்றி!

தமாஷுக்காக கொடுத்த பின்னூட்டம் தம்பி.

Yasir said...

நூர் முகமது காக்கா...இந்தக்கேள்வி வரும் என்று அறிந்து வைத்திருந்த நான்.....அது உங்களிடம் இருந்துதான் வரும் என்று கணிக்க தவறிவிட்டேன்.... :):)
நான் பார்ப்பது இல்லையென்றுதானே காக்கா சொன்னேன்....நாளேடுகளை ஒன்றுவிடாமல் படித்துவிடுபவரில் நானும் ஒன்று....அதில் படித்ததுதான் காக்கா :) ........................அப்ப்பா மூச்சு வாங்குது......சமாளிச்சுட்டேனா ?? :)

KALAM SHAICK ABDUL KADER said...

சமீபத்தில் ஒரு நகைச்சுவைத் துணுக்குப் படித்தேன்:

“சட்டசபையில் நீலப்படம் தானே பார்க்கக் கூடாது என்று தானே அலைபேசி கொண்டு வரக்கூடாது என்று தடை செய்தார்கள்; ஆனால் ஐ.பி.எல் கவர்ச்சி நடனம் பார்க்கலாம்; அதனால் அலைபேசி கொண்டு செல்ல்லாம்” என்றாராம் ஒரு சட்டமன்ற உறுப்பினர்!

அதிரை சித்திக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் தம்பி யாசிர் ...,.

தமது மேலான கருத்துக்கு முதலில் பாராட்டுகிறேன் கிரிகெட் என்கிற விளையாட்டில் எந்த குற்றமும் இல்லை .ஆனால் கிரிகெட்டை ஒரு சூதாக விளையாடும் வீணர்களை சாடினால் அதனை வரவேற்பேன் ..விளையாட்டினை வணிகமாக்கி நன்றாக விளையாடும் விளையாட்டு வீரனுக்கு அளவுக்கு அதகமான பணம் விளம்பர கம்பெனிகளின் ஹீரோவாக்கி அவர்களை பணத்தில் திக்குமுக்காட விடுவதெல்லாம் மிகமிக மோசம் .....

விளையாட்டு
1.மனிதவாழ்வில் இளமை பருவம் \ பல வகையான தேடல்களை கொண்டது ..அதாவது எதையும் ஈர்க்கும் தன்மை கொண்டது 5 வயது வரை தாயின் அரவணைப்பு சொந்தங்களின் பாசம் 5 வயதுக்கு மேல் அது என்ன இது என்ன என்று கேள்விகள் கேட்க்கும் தன்மை வந்துவிடும் அந்த சந்தர்ப்பத்தில் நாம் கூறு கின்ற பதில்தான் அந்தபிள்ளையின் ஆரம்பம் 5 வயதில் சுயமாக நேரங்களை செலவு செய்ய ஆரம்பிக்கும் அப்போது தன் பிள்ளை எங்கே என்று தேட ஆரம்பிப்பதை அன்றாடம் காண இயலும் பக்கத்துக்கு வீட்டு சபீரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறான் அப்போ சரி என தாய் சமாதானமாகுவதை காணமுடியும் இப்படியாக காலம்செல்ல செல்ல பிள்ளையின் நேரம் எப்படி செலவாகிறது என்பதை பார்க்கவேண்டும் ...நான் முன்பே சொன்னது போலதேடல் பருவம் அல்லவா எதையும் கிரஹிக்கிற தன்மை கொண்ட சிறு உள்ளத்திற்கு படிப்பு போக மீதியுள்ள நேரத்தை ஏதாவது ஒரு வகையில் செலவழிக்க வேண்டும் அது மூளைக்கு மன அழுத்தத்தை கொடுக்ககூடியதாக இருக்ககூடாது மனசிற்கும் உடல் வலிமைக்கும் உஹந்ததாக இருக்க வேண்டும் ..அது எந்த விளையாட்டாக இருந்தாலும் சரிதான் வொவ்வொரு கால கட்டத்திலும் ஒரு விளையாட்டு பிரபலமாக இருக்கும் தற்காலத்தில் கிரிகெட் எனவே .தம்பி யாசிர் .உங்களின் ஆக்கத்தினை மதிக்கிறேன் ,,,இளம் சிறார் சிறகடித்து பறக்கும் அச்சிறு பருவம் எல்லா குழந்தைகளும் உல்லாசமாக இருக்கவேண்டும் என்பதே எனது அவா ...மனித வாழ்வில் விளையாட்டு மிக முக்கிய மான ஒன்று ...கற்காலத்திலிருந்து மெல்லே மெல்ல நாகரீக யுகத்திற்கு செல்ல மனித கண்டுபிடுப்புகள்அவசியமாக இருந்தது விளையாட்டு என்ற ஒன்றை ஐரோப்பா அறிஞ்சர்ஒருவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது என்பது கூடுதலானசெய்தி

Canada. Maan. A. Shaikh said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

சகோ. யாசிர்: நானும் உங்கள் கட்சிதான், என் வாழ்நாளில் 30 நிமிடம் கூட ஒழுங்காக உட்கார்ந்து கிரிகெட் பார்த்ததில்லை. ஏனோ இந்த விளையாட்டு எனக்கு அறவே பிடிக்காது. நடபது ஐ.பி.எல் விளையாடா அலலது ஐ.பி.எல் அர்கச்ட்ரவா? விபட்சாரம் கலந்த இந்த சூதாடதை இந்திய அரசு தடை செய்யும் நால் வெகுதுலவில் இல்லை

Shameed said...

//நடிகைகளையோ அழைத்துக் கொண்டுபோய் அடுத்த மேட்ச்சுக்கு தயாராகும் //
//விளக்கு புடிச்சுதான் விளையடனும்னு அப்படி என்னதாங்க தலையெழுத்து !?//


ஆகா ஒவ்ஒரு வரியும் போஃரும் சிக்சருமா பறக்குதே!

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…
( மருமகன் ஷாகுல்! ஹத்து போல் பின்னூட்டம் எழுத்தும் ரகசியத்தை எனக்கும் சொல்லித்தா வாப்பா நீ நல்லா இருப்பே )

நான் க(ஹ)த்து குட்டி மாமா

sabeer.abushahruk said...

மந்திரிச்சி விட்ட மாதிரில்ல இருக்கு!  இதுக்குப் பதிலாக எங்களைக் கூப்பிட்டு வச்சு சாணியக் கரைச்சி ஊத்தி இருக்கலாம்.
 
யாசிர், கிரிக்கெட்டை பந்தாகவும் பேட்டாகவும் ஃபோராகவும் ஸிக்ஸாகவும் மட்டுமே பார்க்கிற ஆளு நானு.  அதன் பின்னணிகளை ஆராய்வதில்லை.  பின்னணிகளை ஆராய முற்பட்டால் அரசியலைவிட, அரசாங்க அலுவலகங்களைவிட, அரசியல்வாதிகளைவிட மோசமான பின்னணி வேறு எதற்கும் உண்டா? ஆயினும், அவற்றைப் புறக்கனிக்காமல் நாமும் ஒவ்வாமையினூdee கலந்துதான் வாழ வேண்டியிருக்கிறது.
 
கிரிக்கெட்டை  ஒரு ரோலர் கோஸ்ட்டர் பயணம்போல, அலையாடும் கடலின் படகு பயணம்போல, ஜாகிர் ஓட்டும் ட்டி வி எஸ் 50 யின் பின்னால் உட்கார்ந்து பயணம் செல்வது போல ஒரு த்ரில்லான அனுபவத்திற்காக மட்டும் பார்த்தோமேயானால் நமக்கு க்ரிக்கெட் சூதாட்டம் பற்றிய கவலையெல்லாம் தோன்றாது.

 நேரமும் வாய்த்து மூளை கொஞ்சம் ரிலாக்ஸ் என்று கதறும்போது மட்டுமே கிரிக்கெட் பார்ப்பதுண்டு.  செம ஜாலியா இருக்கும்.

it all depends upon the way you like a game.  Haven't you heard of deaths of fans of 2 countries when watched soccer?  Lets stop watching football then?

sabeer.abushahruk said...

Yasir,
I jes came from Dubai Internationall Peace Convention which was a great moment and witnessed huge crowd who came to see Zakir Naik and many International Islamic spokesmen.

And thats why couldnt speak in detail about this posting.

talk to you t'morrow.

இப்னு அப்துல் ரஜாக் said...

அப்பட்டமான் ஒரு சூதாட்டமே இந்த கிரிக்கெட்.


//I jes came from Dubai Internationall Peace Convention which was a great moment and witnessed huge crowd who came to see Zakir Naik and many International Islamic spokesmen.//
அத பத்தி ஒரு கட்டுரை எழுதலாமே,காக்கா

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மனித வளம் (மூளை வளம் என்று தான் சொல்ல வேண்டும்) மிக்க நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம் நாட்டில் அதையே முதலீடாகக்கொண்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், பெரியவர்களும் அவர்களின் வருமானங்களையும், வாழ்வாதாரங்களையும் பெருக்கிக்கொள்வதுடன் பல சாதனைகள் மூலம் நம் நாட்டிற்கு உலகில் பரவலாக நல்ல பெயரை ஏற்படுத்தித்தருகிறார்கள் என்றால் அது மிகையில்லை. அப்படி இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள் சராசரியாக நல்ல மூளைத்திறனுடன் பிறப்பதாலும் அது வளர்ந்து பிற்காலத்தில் வாழ்வில் ஏதேனும் துறையில் சிறந்து விளங்கி ஜொலிப்பதாலும் அதை அமெரிக்கா, ஐரோப்பிய வல்லரசு நாடுகள் கட்டுப்படுத்துவதற்காகவும், மட்டுப்படுத்துவதற்காகவும், அவர்களின் மூளைத்திறனை மெல்ல, மெல்ல மலுங்கச்செய்வதற்காகவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளும், சினிமா, சீரியல் கலாச்சார சீரழிவுகளும் என்பதே என் வாதம்.

உல‌க‌ நாடுக‌ளே நில‌ அதிர்விலும், பூக‌ம்ப‌த்திலும் அதிர்ச்சிய‌டைந்து கொண்டிருக்கும் இந்த‌ வேளையில் எவ்வித‌ ச‌ல‌ச‌ல‌ப்பும், க‌டின‌ போராட்டமும் இன்றி நேற்றைய ஆட்டத்தில் பூனே வாரியர்ஸிடம் தோற்றுப்போன சென்னையை ஊடகங்கள் "பூனே அணியிடம் சென்னை அதிர்ச்சி தோல்வி" என்று மிகைப்படுத்தி கொக்கரித்துக்கொண்டிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...............

இங்கு 'உண்மையான அதிர்ச்சியே அதிர்ந்து போகும் அதிசயமல்லாவா அரங்கேறுகிறது?"

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

அப்துல்மாலிக் said...

இந்தியாவில் இந்த ஏப்ரல்-மே மாதம் ”விளையாட்டு திருவிழா” மாதமாம், திருவிழா (கூட்டுராவு) என்றாலே “எல்லாமே(?)” இருக்கதானே செய்யும். எனவே வீணா டென்ஷனாகி நம் உடல்தான் பாதிக்கப்படும்....

Yasir said...

//ஆட்டத்தை(??) பற்றி அழ்ழ்ழ்ழ்க்கா சொல்லியிருக்கீங்க ! :)/// எல்லாம் படித்து அறிந்து கொண்டதுதான் காக்கா

//அதிகம் பேசினால் நம்மை பைத்தியம் என்ற ரேஞ்சில் பார்க்கிறார்க/// ஆமா காக்கா அதேபோல்தான் பார்க்கிறார்கள் என்ன செய்வது....கிரிக்கெட் பார்க்காத நீயெல்லாம் மனுசான என்றும் கேட்கின்றார்கள்

//காலத்துக்கேற்ற கருத்துப்பதிவைத் தந்து இருக்கிறீர்கள்./// நன்றி மாமா..உங்கள் கண் ஆபரேஷன் வெற்றிக்கரமாக முடிய எங்கள் துவாக்கள்..மறக்கமுடியாத மீன் பிரியாணி மாமா

//இந்த விளையாட்டு எனக்கு அறவே பிடிக்காது. /// சந்தோஷமாக இருக்கின்றது நூர் முஹம்மது காக்கா

தங்கள் கருத்துக்கு நன்றி கவியன்பன் காக்கா அவர்களே

///மன அழுத்தத்தை கொடுக்ககூடியதாக இருக்ககூடாது மனசிற்கும் உடல் வலிமைக்கும் உஹந்ததாக இருக்க வேண்டும்//// தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி சித்திக் காக்கா.....கிரிக்கெட்டில் அதிக பிரஸ்ஸர் இருப்பதாக வே உணர்கிறேன்.....4 பாலுக்கு 10 ரன் அடிக்க வேண்டும் என்ற சுழ்நிலை வரும்போது...வீரனுக்கு உள்ள பிரஸ்ஸரைவிட நம்ம ஆட்கள் கை நகங்களை பொரியரிசி போல தீங்கும் டென்ஷன் அதிகம்

//சகோ. யாசிர்: நானும் உங்கள் கட்சிதான்,// கட்சியின் உறுப்பினர்கள் அதிகரித்து வருவதால் சீக்கிரம் தேர்தல் நடத்திட வேண்டியதுதான்..நன்றி தங்களின் கருத்துக்கு

Yasir said...

//ஆகா ஒவ்ஒரு வரியும் போஃரும் சிக்சருமா பறக்குதே!// தங்களின் ஆக்கத்தின் ராக்கெட் வேகத்தைவிட இது கொஞ்சம் கம்மிதான்

Yasir said...

கவிக்காக்கா தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி....கிரிக்கெட்டின் பிண்ணனியில் எத்தனை கயவாலிதனங்கள் நடக்கிறது என்பதையும்....அதற்க்கு அடிமையாகி தங்களின் பொன்னான நேரங்களை வீணடித்து வரும் இக்கால இளைஞர்களின் சுழநிலையை சுட்டிக்காட்டவே இவ்வாக்தை எழுத விழைந்தேன்...ஆர்வமாக இருப்பது வேறு அடிமையாக ஆவது வேறு...

//Lets stop watching football then?//
அப்படி சொல்லமுடியாது காக்கா...கால்பந்து போட்டியில் தேசப்பற்று அதிகம் இருக்கும்....கால்பந்து விளையாடும் முறையை கவனித்தால் சூதாட்டதிற்க்கான சான்ஸ் மிகக்குறைவு என்றே கூற முடியும்......கால்பந்து போட்டியில் ரசிகர்களுக்கு எதுவும் நடந்தால் ஒகே..அவன் நாட்டுப்பற்றின் காரணமாக இதனை செய்துவிட்டான் என்று கூறலாம்...ஆனால் நோட்டுபற்று கொண்ட கிரிக்கெட்டில் ரசிகனுக்கு பாதிப்பு...... விளையாட்டு வீரனுக்கோ பெரும்பாலான மேட்சில் செமகட்டுதான்..சூதாட்டம் மூலம்...அதிகப்படியான விளம்பரங்கள் மூலமும்

Yasir said...

//அப்பட்டமான் ஒரு சூதாட்டமே இந்த கிரிக்கெட்.//...தங்களின் கருத்துக்கு நன்றி சகோ.

//உண்மையான அதிர்ச்சியே அதிர்ந்து போகும் அதிசயமல்லாவா /// கிரிக்கெட் செய்தியை போட்டால் தானே அவர்களுக்கு விளம்பரமும் வருமானமும் கிடைக்கும்

//எனவே வீணா டென்ஷனாகி நம் உடல்தான் பாதிக்கப்படும்..// கரெக்கட்....விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேண்டும்...பணம் கொட்டும் மேகமாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகின்றது

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அருமையான காலத்திற்கேற்ற ஒரு ஆக்கம்

கிரிக்கெட் மோகத்தில் அலைந்தவர்கள் பட்டியலில் இவ்விடத்தில் நிறைய பேர் உள்ளனர், பெரும்பாலோர் பலதையும் இழந்தவருக்கு மிஞ்சியது ஒண்ணுமே இல்லை என்பது யாவும் அறிந்ததே

விளையாட்டை பற்றி தவறுதாலாக இவ்விடத்தில் கூற வேண்டாம் அதை நடத்த படுவதை சுட்டிக்காட்டுவதே சிறந்தது மிக தெளிவாக சுட்டிகாட்டிய யாசிராக்கா அவர்களுக்கு நன்றி

(லலித்) மோடிக்கு மறு பெயர் கேடி என்று சொல்வதே நன்று! (ட்ரேக் எங்கோ போகிறது நம் விசயத்திற்கு வருவோம்)

தொழிற்துறை முதலாளிகளை ஈர்த்த கிரிக்கெட்டின் பெரும் வர்த்தகம்!

உலகக் கோப்பை கிரிக்கெட்டும், இந்தியத் துணைக் கண்டத்தின் சந்தை மதிப்பும், கிரிக்கெட்டை இந்திய முதலாளிகளின் ஆதிக்கத்தின் கீழ் தவிர்க்க முடியாத வண்ணம் கொண்டு சேர்த்தன. மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த 2007 உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் இந்திய அணி குறைந்த பட்சம் அரையிறுதிக்காவது தகுதி பெறும் என்று பெரும் மூலதனத்தை முதலீடு செய்திருந்த முதலாளிகள் பின்னர் இந்திய அணி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியதால் கையை சுட்டுக் கொண்டனர்.

அந்தக் காலத்தில் ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளை வானொலி மூலம் பெருமைபடக் கேட்கும் கூட்டத்தினர் மேற்கண்டவர்களின் வழியில் கிரிக்கெட்டின் இரசனையை கீழே வரை பரப்பினர். பின்னர் அறிவியல் தொழில் நுட்பப் புரட்சியின் காரணமாக நேரடி ஒளிபரப்பு சாத்தியமானதும் கூடவே ஒரு நாள் பந்தயங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. தொலைக்காட்சி விளம்பரங்களும், இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருந்த மிகப்பெரிய சந்தையும் இணைந்து இதன் வர்த்தக மதிப்பை ஆயிரக்கணக்கான கோடிகளில் எகிற வைத்தன.

ஆளும்வர்க்கங்களின் ஆசியுடன்தான் ஐ.பி.எல் மோசடிகள்!

இன்று ஐ.பி.எல் மோசடிகளை இந்திய அரசு பயங்கரமாக புலனாய்வு செய்வதாக நடிக்கிறது. எட்டு அணிகளை வைத்தே இவ்வளவு கொள்ளையடிக்க முடியுமென்றால் இன்னும் எத்தனை அணிகளை சேர்க்க முடியுமோ அத்தனையும் கொள்ளை இலாபம்தான் என்பதை முதலாளிகள் உணராமலில்லை. இப்படித்தான் கொச்சி, புனே அணிகள் ஏலமிடப்பட்டு தலா 1,500 கோடிகளுக்கு விலை போயிருக்கின்றன. இனி ஆண்டுக்கு 90 பந்தயங்களாம்.

ஐ.பி.எல்லின் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பு என்பது அவனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து அவனுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பணம்தான் என்பது அவனுக்குத் தெரியாது.

ஃபோரும் சிக்ஸரும் மட்டுமே எண்களில்லை. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் 32 கோடி மக்களும், ஊட்டச்சத்து இல்லாமல் சாகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் இந்தியாவும், ஒரு ரூபாய் அரிசிக்காக ரேஷன் கடை செல்லும் ஒரு கோடி தமிழகக் குடும்பங்களும், பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காக துரத்தப்படும் மத்திய இந்தியாவின் பல்லாயிரம் பழங்குடி மக்களும், அவர்களுக்காக தங்களது உயிர்களை அன்றாடம் பலிகொடுக்கும் மாவோயிஸ்ட்டுகளும் கூட எண்களாகத்தான் செய்திகளில் பதிக்கப்படுகிறார்கள்.

“ஆண்டு முழுதும் நடக்கட்டும்
மண்ணில், விண்ணில், பேச்சில், எழுத்தில்
அதுவே பேசப்படட்டும்.
ஆட்டங்களில் சூடு பறக்கட்டும்
ஆரவாரங்களில் போதை ஏறட்டும்
குமரிகளின் ஆட்டங்களில் இளைஞர் கெடட்டும்
விறுவிறுப்பில் நாடு மறக்கட்டும்
விளையாட்டில் தேசம் திருடப்படட்டும்”


இந்த ஐ பி எல் ஒரு வேண்டாதொரு விளையாட்டு என்பது என்னுடைய கருத்தும்

kaja nazimudeen said...

செம தெனாவட்டான Article எழுதிய உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை! என்னுடைய அபிப்ராயப்படி இந்த Cricket ஒரு தீவிரவாத விளையாட்டே!!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு