Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பாலஸ்தீனப் படுகொலைகளும், பிரஞ்சு ஷூட்டிங்கும் 26

அதிரைநிருபர் பதிப்பகம் | April 04, 2012 | , , ,

அல்லாஹ்வின் பெயரால்…

இஸ்லாம் அமைதியைப் போதிக்கும் மார்க்கம் நபி(ஸல்) அவர்கள் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் வாளெடுத்துப் போர் புரிவதைக் கடைசி வாய்ப்பாகத்தான் பயன்படுத்தினார்கள். அன்பினாலும், அமைதியாலும் பரப்பப்பட்டது இஸ்லாம் என்று நமக்கெல்லாம் தெரியும். 

சில இஸ்லாமிய விரோதிகளால் தவறாகச் சித்தரிக்கப்பட்டாலும், அதனை எல்லாம் தூசு போல துடைத்தெறிந்துவிட்டு “இஸ்லாம்” இன்று உலகிலயே அதிக மக்களால் வாழ்வியல் நெறியாக கடைபிடிக்கப்பட்டு, மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து தழுவி தவறாகச் சித்தரித்தவர்களின் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். சத்தியம் ஜெயிக்கும் அசத்தியம் என்றாவது ஒருநாள் மண்ணோடு மண்ணாக அழிந்துவிடும். அல்லாஹ் போதுமானவன். இஸ்லாம் தீவிரவாதத்தை எள்ளளவும் விரும்பவில்லை, ஆதரிக்கவும் இல்லை.

பாலஸ்தீனம்

சுற்றிலும் அரபு நாடுகளின் அன்பு கரம் பற்றி அமைதியாகவும், கண்ணியத்துடனும் இருந்த “பாலஸ்தீனம்” என்ற நாட்டை, அந்த அரபுகளின் அமைதியைக் குலைக்க வேண்டியும்,மத்திய கிழக்கு ஆசியாவின் அதிகாரத்தைத் தன் கைக்குள் கொண்டுவர வேண்டியும், அந்நாடுகளுக்கு வல்லோன் வாரி வழங்கி இருக்கும் வளத்தைச் சுரண்டவேண்டியும் நினைத்த சில வல்லரசுகள் “ஜெருசலம்” என்ற புனித நகரை மையமாகக் கொண்டு இறைவனால் உயர்ந்த குலம் என்று கூறப்பட்ட (தன் துரோகச் செயல்களால் அதே இறைவனால் சபிக்கப்பட்ட, தான் உண்டு வாழும் வீட்டிற்கும் நாட்டிற்கும் துரோகம் செய்ததால் உலக முழுவதும் வெறுக்கப்பட்ட, அந்த துரோகத்திற்காக அடையாளம் தெரியாமல் வேரறுக்கப்பட்ட) “இஸ்ரேலியர்களை பாலஸ்தீனம் என்ற நாட்டில் குடியேற்றி, வந்தேறிகளுக்கு ஆயுதமும், நிதியும் கொடுத்து, அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த அரபுகளைச் சீண்டி, ரத்தக் களறியை ஏற்படுத்தி "பாலஸ்தீனம்" என்ற நாட்டை உலக வரைபடத்தில் இருந்து எடுத்து விட்டு “இஸ்ரேல்” என்ற துரோகத்தின் சின்னத்தை மேப்பில் ஏற்றி தீயைப்பற்ற வைத்தன. அரபுகளின் அமைதியைக் குலைத்தன. இந்த வரலாற்றை இங்கு எழுத ஆரம்பித்தால் கல் நெஞ்சமும் கண்ணீர் விட்டு கதறி அழும்.

கொடுமைகள்

எத்தனையோ வகையில் தண்டிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் டி.என்.ஏ யிலும் கலந்துவிட்டிருந்த ”இஸ்லாமிய வெறுப்பு” என்ற நெருப்பைக் கொண்டு தான் விரும்பும் போதெல்லாம் தன் வான்படையைப் பயன்படுத்தி குறிபார்த்து, முக்கியமாக ஆண் குழந்தைகளே வருங்காலப் பாலஸ்தீன தலைமுறையில் இருக்கக்கூடாதென்ற குறிக்கோள் கொண்டு சின்னஞ்சிறு பாலகர்களையும், இந்த உலகையே காணாத சிசுக்களையும் கொன்று குவித்து அழிக்கும் அரக்க குணம் படைத்த இஸ்ரேலுக்கு மேற்கத்திய நாடுகள் அரண்போல நின்று பாதுகாக்கின்றன. தன் சொந்த நாட்டிலிலேயே வந்தேறிகளால் சிறுமைப் படுவதைக் கண்டு ரசிக்கின்றன, அரபு நாடுகளின் வளங்களைச் சுருட்டி அவர்களை அழிக்கப் பயன்படுத்துகின்றன இந்த அழுக்குப்பிடித்த வல்லரசுகள், கொன்று குவிக்கும் பாலஸ்தீன இளைஞர்கள் உடற்பாகங்களை வெட்டி எடுத்து விற்கின்றது இந்த ஈன இஸ்ரேல்,

ஆப்கானிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம் போன்ற இடங்களுக்கெல்லாம் பொய் காரணங்களைச் சொல்லி சென்ற இடங்களிலெல்லாம் நிராயுதபாணிகளையும், பெண்களையும், முஸ்லிம் சமுதாயத்தை வேரறுக்கும் நோக்கோடு வருங்கால செல்வங்களான குழந்தைகளையும் கொன்றுகுவிப்பது எந்த வகையில் நியாயம்? ஏன் இந்த உலகநாடுகள் அதனைத் தட்டிக் கேட்கவோ,தண்டிக்கவோ முன்வரவில்லை?. முஸ்லிம்களின் இரத்தம் அந்த அளவிற்கு மலிவானதா? அல்லது இந்த காட்டேரிகளுக்கு சுத்தமான முஸ்லிம்களின் இரத்தம்தான் பிடித்திருக்கின்றதா ?

இந்தச் சம்பவங்களைக் கண்டு முஸ்லிம்களாகிய ஒரு சிலபேர் கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்றோம் பலர் அல்லாஹ்விடம் துவாச் செய்துகொண்டு, இருக்கின்றோம், ஆனால் கண் |முன்னால் தன் நாட்டின் பிஞ்சுக் குழந்தைகளும், தலைமுறைகளும்,அழித்தொழிக்கப்படுவதை கண்டு வேதனையுற்று உணர்ச்சி வசப்பட்ட ஒரு இளைஞன் பிரான்சில் உள்ள இஸ்ரேலியப் பள்ளிக்குச் சென்று தன்|கோபத்தை துப்பாக்கி மூலம் கொந்தளிக்க வைத்தான். அதில் சில பெரியவர்களும், இரண்டு சின்ன குழந்தைகளும் கொல்லப்படுகின்றனர். பாலஸ்தீனப்பள்ளியில் பாஸ்பரஸ் குண்டு போட்டு பல குழந்தைகளை அழித்தும்,இன்னும் சிலரை நிரந்தர ஊனப்படுத்தியும் கொக்கரித்த இஸ்ரேலிய அரசின் இனப்படுகொலைக்கு மத்தியில் இதெல்லாம் சிறு கடுகுக்கு சமம்தான்

இலட்சக்கணக்கான பிஞ்சுகளைத் தங்களின் வலிமையான ஆயுதங்கள் மூலம் துளைத்தெடுத்த அரசுகள் இச்சம்பவத்தால் அலறுகின்றன..ஏனென்றால் சிந்தியது யூத இரத்தம்,சுட்டுவிட்டு தன் கருத்தைச் சொன்ன அவ்விளைஞன் ”நான் கொண்டு சென்ற வெடிமருந்துகளை முழுவதுமாக பயன்படுத்தி இருந்தால் மொத்த பள்ளியையும் என்னால் அழித்திருக்க முடியும்,ஆனால் அது என் நோக்கமன்று,என் சகோதரர்கள் பாலஸ்தீனத்திலும், ஈராக், ஆப்கானிஸ்தானிலும் படும் சித்ரவதைகளையும் தாம் பெற்ற பிஞ்சுக் குழந்தைகளை இழந்துவாடும் வேதனையையும் நீங்களும் சிறிதளவிலாவது உணர வேண்டும் ”என்று கூறி தன் உயிரை விட்டான், ஒரு அரசாங்கமே இனப்படுகொலையை முன்னின்று நடத்தும்போது,தனிப்பட ஒருவன் இச்செயல் செய்தது கடலில் கலக்கபடும் ஒரு கரண்டி உப்புக்குச் சமம்

வன்முறையும், தீவிரவாதமும் என்றுமே வெற்றிபெற முடியாது, அமைதியாக எங்கள் சகோதர்களை அவர்கள் குழந்தைகளுடன் வாழ விடுங்கள், எறும்புகள்கூட தான் நிம்மதியைக் கெடுக்கும் ஜந்துக்களை எதிர்த்து போரடுகிறது, பாலஸ்தீனபடுகொலைகளைத் தடுத்துநிறுத்துங்கள் அது நிறுத்தப்படாதவரை உணர்ச்சிவசத்தால் இதுபோன்ற சம்வங்களும் நடப்பதைத் தவிர்க்கமுடியாது.

(அப்பாவிகளையும்,குழந்தைகளையும், பெண்களையும், போரில் கூட கொல்வதை தடைசெய்கிறது இஸ்லாம். அதேநேரத்தில் நம்மோடு எதிர்த்து நின்று போரிடுவோருக்கு பதிலடி கொடுக்கவும் சொல்கிறது. ஆனால் இப்படி அப்பாவிகளை உணர்ச்சி வசப்பட்டு கொல்வது இஸ்லாம் காட்டிய வழி முறை கிடையாது).

-முஹம்மது யாசிர்

26 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இக்கட்டுரை ஆயுதமேந்தி போராடுபவர்களுக்கு ஓர் ஆதரவுக்கரமல்ல; வேதனையின் விசும்பல்.....

நெஞ்சம் பொறுக்குதில்லையே இந்த சுயநலமிக்க உலகை நினைக்கையிலே....

கடுகளவேனும் அநீதி இழைக்காமல் நீதி காப்பது அந்த அல்லாஹ்வால் மட்டுமே அன்றி வேறு எவராலும் இயலாது என்பதே நிதர்சனமான உண்மை.

சகோ. யாசிர் இக்கட்டுரை மூலம் கலக்கிட்டீங்க என்று சொல்வதை விட எம் கண்களை கலக்கிட்டீங்க என்று சொல்வதே ஏற்றம்.

வாழ்த்துக்கள்....

Abdul Razik said...

Mr. Yasir, please issue this kind of articles until our community awaken. Allah will save our society from Jews.

Ebrahim Ansari said...

ASSALAAMU ALAIKKUM.

அன்புள்ள மருமகன் யாசிர் அவர்களுக்கு, பாராட்டுக்கள்.

சமூகம் சீர்கெடக் காரணம் செயல்படும் கெட்டவர்கள் மட்டும் அல்ல ; செயல்படாத நல்லவர்களும்தான்.

மீண்டும் பதிகிறேன். என் நண்பர் அபூ ஹஷிமாவின் கவிதையை.

காபூலின் திராட்சைகளில் வடிகிறது
தலிபான்களின் ரத்தம்!
கால்நடைகளுக்கும் உபயோகப்படாத
கழிவுநீர்க் குளங்களாய்
தேங்கிக் கிடக்கிறது
குஜராத் முஸ்லிம்களின்
களவாடப்பட்டக் கண்ணீர்!
டைக்ரீஸ் நதியின் தண்ணீரில்
கொழுந்துவிட்டு எரிகிறது
ஏகாதிபத்தியத்தின் நெருப்பு!
காஷ்மீரின் பனிக்குடங்களில்
கருக்கலைப்பு நடத்துகின்றன
பாசிச ஆயுதங்கள்!
இஸ்ரேலின் சவச்சாலைகளுக்கு
சரளைக் கற்களாய் பதிக்கப் படுகின்றன
பாலஸ்தீனியர்களின் பிணங்கள்!

மேலைநாட்டின்
மாய சொர்கங்களுக்காக
ஈமானை அடமானம் வைத்து
நரகங்களில்
மயங்கிக் கிடக்கும்
அரபு நாட்டுச் சீமான்கள்!
வல்லூறுகளின் வாய்ப்பட்ட
விருந்தின் எச்சங்களாய்
இன்னும் மிச்சமிருக்கும்
எங்கள் கூட்டம்
எட்டாவது அதிசயம்!

மொத்தமும் அழிந்திருந்தால்
சுன்னத்
தௌவ்ஹீத்
சொர்கவாதி
நரகவாதி என்று
எங்களை நாங்களே
அழித்துக் கொள்ளும்
ஒன்பதாவது அதிசயத்தை
நிகழ்த்திக் காட்டுவது
யார்?

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்
வேதனையும் சோதனையும் தனக்கு வராதவரை எந்த மனசுக்கும் வலிக்கப்போவதில்லை - என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்,

Noor Mohamed said...

தம்பி யாசிர்
அஸ்ஸலாம் அலைக்கும்.

தூங்குபவர்களை தட்டி எழுப்பலாம்,அல்லது
தண்ணீர் தெளித்து எழுப்பலாம், அல்லது
தண்ணீர் கொட்டி எழுப்பலாம், அதற்கும்
எழவில்லை எனில் அது மையத்துதான்.

ஆனால்! இங்கே நெருப்பை கொட்டி எழவைக்கின்றீர்
உலக்கையால் இடித்து உதைத்து எழவைக்கின்றீர்
அப்போதும் எழவில்லையே! என்ன செய்வது?

இந்த உறக்கம் உடல் நலனுக்காக அல்ல! அவர்களின் உடல் சுகத்திற்காகவே!!

Shameed said...

யாசிர் "கள்" மட்டும் சிந்திக்க வேண்டிய விசயமல்ல அனைத்து தரப்பு மக்களும் சிந்திக்க வேண்டிய விஷயம்

அலாவுதீன்.S. said...

/////வன்முறையும், தீவிரவாதமும் என்றுமே வெற்றிபெற முடியாது, அமைதியாக எங்கள் சகோதர்களை அவர்கள் குழந்தைகளுடன் வாழ விடுங்கள், எறும்புகள்கூட தான் நிம்மதியைக் கெடுக்கும் ஜந்துக்களை எதிர்த்து போரடுகிறது, பாலஸ்தீனபடுகொலைகளைத் தடுத்துநிறுத்துங்கள் அது நிறுத்தப்படாதவரை உணர்ச்சிவசத்தால் இதுபோன்ற சம்வங்களும் நடப்பதைத் தவிர்க்கமுடியாது.//////

சகோதரர் முஹம்மது யாசிர்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

பாலஸ்தீன சோக வரலாறு இரத்தத்தால் எழுதப்பட்டு கொண்டு இருக்கிறது.

எண்ணிக்கையில் அரபு நாடுகள் 52 என்று சொல்கிறார்கள்.

ஒரு நாட்டிலிருந்து கூட வலுவான குரல் ஆதரவாக எழ வழியில்லாமல் இருக்கிறது.

உணர்ச்சிவசத்தால் அப்பாவி மக்களை பழி வாங்குவது இஸ்லாத்தின் நடைமுறை அல்ல.

என்னை அடித்தவனை பழி தீர்ப்பதை விட்டு விட்டு சம்பந்தமில்லாதவர்களை பழி தீர்க்கலாமா?

காலம் ஒரு நாள் மாறும். யூத கூட்டங்கள் நடுங்கி வாழும் நேரமும் ஏற்படும்.

வல்ல அல்லாஹ் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறான். அல்லாஹ்வின் பிடியிலிருந்து அநியாயக்காரர்கள் தப்ப முடியாது.

sabeer.abushahruk said...

யாசிரின் ஆதங்கம் ஒவ்வொரு முஸ்லீமுக்கும் வேண்டும். பாலஸ்தீனத்தில் போரெனும் போர்வைக்குள் அரங்கேறும் படுகொலைகள் குலை நடுங்கச் செய்பவை.

ஒன்னா சேர்ந்தாங்கன்னா அரபுகளை யாராலும் வெல்ல முடியாது. ஆனால், இவங்க ஒன்னுபடமாட்டாங்க என்பதும் உலகறிந்ததே.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மீண்டும் மீண்டும் நினைவு படுத்தப்பட வேண்டிய வரிகள் இவை:-

//வன்முறையும், தீவிரவாதமும் என்றுமே வெற்றிபெற முடியாது, அமைதியாக எங்கள் சகோதர்களை அவர்கள் குழந்தைகளுடன் வாழ விடுங்கள், எறும்புகள்கூட தான் நிம்மதியைக் கெடுக்கும் ஜந்துக்களை எதிர்த்து போரடுகிறது, பாலஸ்தீனபடுகொலைகளைத் தடுத்துநிறுத்துங்கள் அது நிறுத்தப்படாதவரை உணர்ச்சிவசத்தால் இதுபோன்ற சம்வங்களும் நடப்பதைத் தவிர்க்கமுடியாது.

(அப்பாவிகளையும்,குழந்தைகளையும், பெண்களையும், போரில் கூட கொல்வதை தடைசெய்கிறது இஸ்லாம். அதேநேரத்தில் நம்மோடு எதிர்த்து நின்று போரிடுவோருக்கு பதிலடி கொடுக்கவும் சொல்கிறது. ஆனால் இப்படி அப்பாவிகளை உணர்ச்சி வசப்பட்டு கொல்வது இஸ்லாம் காட்டிய வழி முறை கிடையாது).//

Adirai Iqbal said...

சகோதரர் யாசிர் அவர்களுக்கு ,அருமையான ஆக்கம் .
பாலஸ்தீன், ஈராக் , ஆப்கானிஸ்தான் இன்னும் செச்சன்யா என்று முஸ்லிம்களும் , இலங்கையில் ஈழத்தமிழர்களின் மேல் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் , உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை , இவை எல்லாம் நிகழாமல் இருக்க ஒரு உலகளாவிய தலைமை வேண்டும் . அது நிச்சயமாக இஸ்லாமியத்தலமையாக மட்டுமாகவே இருக்க வேண்டும் . அந்த கிலாபா மூலமாகவே உலகில் நீதியை நிலை நாட்ட முடியும் .

Yasir said...

//வேதனையின் விசும்பல்....// சரியாக சொல்லி இருக்கின்றீர்கள் நண்பரே தங்களின் கருத்துக்கு நன்றி

//Mr. Yasir, please issue this kind of articles // Insha Allah bro...will do so ...thanks for your valuable comments

//யாசிர் அவர்களுக்கு, பாராட்டுக்கள்// உங்கள் பாராட்டுக்கள் என்னை மேலும் பண்படுத்தும் மாமா

//வேதனையும் சோதனையும் தனக்கு வராதவரை// கரெக்ட் சகோதரரே பட்டவனுக்குதான் வலி தெரியும்

//இங்கே நெருப்பை கொட்டி எழவைக்கின்றீர்// இந்த நெருப்பு ஒரு நாள் யூத சாம்ராஜ்யத்தை வேரறுக்கும்

//அனைத்து தரப்பு மக்களும் சிந்திக்க வேண்டிய விஷயம்// அனைத்து தரப்பு மக்களும் சிந்தித்து இருந்தால் ப்ல்லாயிரகணக்கான நம் மக்களின உயிர்கள் காப்பாற்ற பட்டு இருக்கும்

//என்னை அடித்தவனை பழி தீர்ப்பதை விட்டு விட்டு சம்பந்தமில்லாதவர்களை பழி தீர்க்கலாமா?// கூடாதுதான்...எதிரிகளும் அவ்வாறு நினைக்கவேண்டும்..நாங்கள் என்ன கிள்ளிக்கீரைகளா ??

/காலம் ஒரு நாள் மாறும். யூத கூட்டங்கள் நடுங்கி வாழும் நேரமும் ஏற்படும்// ஆமீன் யாரப்பல் ஆலமீன்

//இவங்க ஒன்னுபடமாட்டாங்க/// சரிதான் கவிக்காக்கா....இஸ்லாம்தான் ஒற்றுமை என்ற கயிற்றை பற்றிபிடித்து கொள்ளுங்கள் என்றது...ஆனால் நடப்பது தலைகீழ்....

//மீண்டும் மீண்டும் நினைவு படுத்தப்பட வேண்டிய வரிகள் இவை:-/// நாம் எல்லாரும் நினைவில் நிறுத்தவேண்டிய வரிகள்தான்...ஆனாலும்.....

//யாசிர் அவர்களுக்கு ,அருமையான ஆக்கம்// . நன்றி சகோதரரே..உங்கள் எண்ணமும்தான் என் எண்ணமும் ...நாம் அனைவரும் தூவாச்செய்யும்

Unknown said...

மேலே உள்ள புகைப்படமே போதும் இந்த கட்டுரையின்
உண்மையினை உரைக்க ..நல்ல அலசல் பிரதர்

KALAM SHAICK ABDUL KADER said...

யாசிப்போம் வல்ல இறைவனிடம் மட்டுமே
யாசிர்சொல் மெய்யென வாகு

KALAM SHAICK ABDUL KADER said...
This comment has been removed by the author.
ZAKIR HUSSAIN said...

யாசிர்...உங்களின் எழுத்து ஒரு புது டைமென்சனில் உருவாகியிருக்கிறது . பிறப்பால் மிகவும் வீரமான மக்களாக கருதப்படுபவர்கள் அரபிகள். ஒரு சின்ன ஒத்துழைப்பு இல்லாமல் பலகீனமானவர்களிடம் அடிவாங்கும் சமுதாயமாகிவிட்டார்கள் இப்போது.

இப்னு அப்துல் ரஜாக் said...

ஒரு உலக தலைமை இல்லாமையே இதுக்கெல்லாம் காரணம்.இன்ஷா அல்லாஹ் இறுதி வெற்றி முமீன்களுக்கே

அப்துல்மாலிக் said...

நிச்சயம் நம்மாள் என்ன செய்யமுடியுமோ அதை இந்த சமுதாயத்துக்காக செயல்படுத்த முயற்சிக்க வேண்டும், வெளிநாடு வந்து பார்த்தால்தான் நமக்குள்ளேயே எவ்வலவு பொறாமை, சண்டைகள் என்று. நாம் மட்டும்தான் கத்திக்கினு இருக்கோம் மற்ற முஸ்லிம் வளைகுடா நாடுகள் இது பத்தி வாய தொறக்கல, கேட்டால் அவனுங்களுக்கு வேணும், அவன்க்க நடத்தை அப்படினுனு சொல்லுதானுங்க.. அல்லாஹ் காப்பாத்தனும், ஆமீன்

Yasir said...

//இந்த கட்டுரையின் உண்மையினை உரைக்க // இதனைவிட மனதை நெருடவைக்கும் உண்மைபுகைப்படங்களும் உள்ளன...நெறியாளர் கொஞ்சம் பிடியை இருக்கி விட்டதால் பதிய முடியவில்லை

//யாசிப்போம் வல்ல இறைவனிடம் மட்டுமே// அணுவைத்துளைத்து குறுகத்தறித்ததாம் குறள் ...உங்கள் நவீன குறள் நியூக்லியஸை பிளந்து எடுத்தது போன்ற உள்ளது அந்த அளவிற்கு பவர்ஃபுல்

//உங்களின் எழுத்து ஒரு புது டைமென்சனில் உருவாகியிருக்கிறது// எல்லாம் உங்களைப்போன்றவர்களின் நிழல்களை தொடர்வதால்

//அல்லாஹ் இறுதி வெற்றி முமீன்களுக்கே// ஆமீன் சகோதரர் அப்துல் லத்தீப் அவர்களே

//இந்த சமுதாயத்துக்காக செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்,/// நல்ல கவலை....இறுதிநாளுக்கு முன் ஈடேற வேண்டும்

KALAM SHAICK ABDUL KADER said...

ஜஸாக்குமுல்லாஹ் கைரன் யா யாசிர்!

பாலஸ்தீன இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத் உயிருடன் இருந்தால் இக்கட்டுரையினை மொழிபெயர்த்து அனுப்பினால், பெயருக்குப் பொருத்தமாக பாலஸ்தீன விடுதலை உணர்ச்சிப் பொங்கிடுதற் கண்டு வியந்திடுவார்!

ஆனைப் படைகள் இறையின்
***ஆல யத்தை நெருங்க
சேனை களாக அபாபீல்
***சிறுகற் களாற்றான் தாக்கும்
ஊனை உருக்கும் நிகழ்வை
உணர்வி லேற்றிச் சிறார்கள்
ஈனப் பிறவி களான
இஸ்ரா யீலர் மீதும்

கற்கற் கொண்டே தாக்கும்
***கடின போரின் காலம்
நிற்கா மலோடி கடந்தும்
***நீதி கிடைக்கா மக்கள்
தற்காப் புப்போ ராளி
***தாயும் தந்தை யுமின்றி
நிற்கும் அனாதைக் கூட்டம்
***நீதான் உதவு வாயே

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாவற்றுக்கும் உணர்சி வசப்படாமல் கருத்தை எழுதலாம். ஆனால் பல முறை முயற்சித்தும் நம் சகோதர,சகோதரிகளின் சிந்தும் இரத்த நிகழ்வுகளை வார்தையில் வடிக்ககூடிய மனனிலை எனக்கு இல்லை! என் அருமை சகோதரர் யாசிர் என்றுமே நம் சமூக அக்கறை உள்ளவர். அவரின் எழுத்தில் மெத்தபடித்த பண்பாளர் என்ற தொனி கவனித்து பார்த்தால் தெரியும் ஆனால் அப்பாவி போலவே ந(டித்து)டந்து கொள்வார்!இது போல நினைவூட்டல் அவசியம் நம் துஆக்களின் மூலம் வல்ல அல்லாஹ்விடம் கேட்பதைத் தவிர நாம் ஏதும் செய்யவியலாத நிலையில் இருப்பது நிதர்சன உண்மை. கண்ணீர்களுக்கு கருத்து மட்டுமே எழுதி விட முடியாத சோக உண்மை இ ந் நிகழ்வுகள்.
கண்ணீர் அள்ளித்தரும் சோகம் முடிவுற அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக!

sabeer.abushahruk said...

***தாயும் தந்தை யுமின்றி
நிற்கும் அனாதைக் கூட்டம்
***நீதான் உதவு வாயே

சோகத்தைச் சொற்களாக்கிய லாவண்யம்!!! கவியன்பனின் சாதுர்யம்.

கிரவுனின் உணர்வுகளுக்குள் உயிரோட்டம்.

(யாசிர், உங்களுக்காக நானே ஏற்புரை எழுதிவிட்டேன். வீக் என்டும் அதுவுமா..தூங்குங்க)

Yasir said...

//எல்லாவற்றுக்கும் உணர்சி வசப்படாமல் கருத்தை எழுதலாம்.// சகோதரர் கிரவுன்..... என் ஆக்கத்திற்க்கு நீங்கள் வந்து ஒரு வரிகள் எழுதினாலே என் மொத்த ஏக்கமும் பறந்துவிடும்.....ஆஹா நான் லக்கி....நிறைய வரிகள்.. ஒரு பல்கலைக்கழகமே திரண்டு வந்து டாக்டர்பட்டம் கொடுத்த மகிழ்ச்சி உங்களின் கருத்தை படித்தவுடன்

//கண்ணீர் அள்ளித்தரும் சோகம் முடிவுற அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக!// ஆமீன்

Yasir said...

//கற்கற் கொண்டே தாக்கும்
***கடின போரின் காலம்// அல்லாஹ் அக்கல்லில் ராக்கெட்டின் சக்தியை கொடுக்கட்டும்

Ebrahim Ansari said...

மனித நாகரிக வரலாற்றில் காயப்பட்டதும் களங்கப்பட்டதுமான அத்தியாயம்தான் பாலஸ்தீனத்தின் வரலாறு.

இதை யாரும் பகிரவில்லையே என்ற ஒரு எண்ணம எனக்கு இருந்தது.

மருமகன் யாஸிர் அவர்களின் பகிர்வும் அதைதொடர்ந்து அனைத்து நண்பர்களின் கரிசனமும் அனுதாபமும் மிக்க கருத்துக்கள், மற்றும் சிகரம் வைத்தாற்போல் வரிக்கு வரி 'வாரே வா''போடவைத்த கவியன்பன் கவிதையும் இந்த பிரச்னையின் முக்கியத்துவத்தைப் பதிந்துள்ளன.

இதில் இன்னும் புதைந்து கிடக்கும் செய்திகளை வெளிக்கொண்டுவரும் வண்ணம் தொடர்ந்து இது பற்றி பல் கோணங்களிலும் பதியும்படி அன்புக்கட்டளையாக மருமகன் யாசிர் அவர்களை கோருகிறேன்.

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Yasir said...

///கோணங்களிலும் பதியும்படி அன்புக்கட்டளையாக // இவ்வரலாறு அனைவரும் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டியது...இன்ஷா அல்லாஹ் நாம் இனைவரும் சேர்ந்து தொடராக பதிவோம் மாமா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு