Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதி அழகுடன் ஓர் அழகிய மாலை - காணொளி ! 11

அதிரைநிருபர் | April 01, 2012 | ,


அதிரை ஜமீல் M.சாலிஹ் என்ற தனி நபர் இனிமேல்தான் அறியப்பட வேண்டியவர் என்பதல்ல. அனைத்து தரப்பினராலும் நன்கு அறியப்பட்ட, அதி அழகு காக்கா என்று எங்களால் அன்போடு அழைக்கப்படும் இவர்களை மையப்படுத்தி ஓரு நிகழ்வு.

ஜமீல் காக்காவின் வளைகுடாவிலிருந்து பணி மூப்பெய்து விடைபெறும் நிகழ்வல்ல இது, மாறாக எங்களோடு இருந்த ஒர் உறவு, உடன்பிறந்தவர்களோடு ஊரோடு இருந்திட பயணிக்கும் முன்னர் அவர்களின் நினைவலைகளை நட்புகளோடு அசைபோடும் நிகழ்வு.

இந்த காணொளியே காண்பிக்கும் கேமராவின் நடைபயிற்சியும் அதன்  காட்சிகளின் பசுமையை, உணர்வுகளை, கவிதையை, நன்றிப் பெருக்கை... இன்ஷா அல்லாஹ் !


இடம் : மம்சார் பூங்கா - துபாய்

-அதிரைநிருபர் குழு

11 Responses So Far:

sabeer.abushahruk said...

எந்த வசதியும் இல்லாத சூழ்நிலையில் தயாரிக்கப்பட்ட இந்தக் காணொளியில் ட்டெக்னிக்கல் ட்டீமின் அபரிதமான உழைப்பும் அர்ப்பனிப்பும் தெரிகிறது, வாழ்த்துகள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

எல்லாப்புகழும் இறைவனுக்கே!

புகழத் தகுந்த பாராட்டப்பட வேண்டிய அதி அழகு காக்காவும்,காணொளியும்.

தலைத்தனையன் said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஜமீல் காக்கா அவர்களின் கருத்தை நான் முழுமையாக ஏற்றுகொள்கிறேன். புகழத் தகுந்தவன் அல்லாஹ் ஒருவனே. எல்லா புகழுக்கும் உரியவன் அவனே. ஜமீல் காக்கா அவர்களின் அறிவும் அனுபவமும் நம் சமுதாயத்திற்கு மிக அவசியம். இதை நமதூர் மக்கள் உணர்ந்து அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு மனிதரை அவர் முன்னால் புகழ்வதால் அவர் மனத்தில் ஏற்படும் பெருமை, சலனம், அவரது நல்லறங்களை, அவருக்கு இறைவனிடமுள்ள உயர்ந்த அந்தஸ்தை பாதிக்கலாம். பெருமையை இறைவன் தனது ஆடை என்று சொல்கிறான். பெருமை கொள்வது, பெருமைக்கு ஆளாக்கப்படுவது இறைவனின் ஆடையை பிடித்து இழுப்பதுபோன்றதாகும்.

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நாடினால் ஓரிரு வருடங்களுக்குள் ஊர் திரும்பி, நன்மக்களோடு சேர்ந்து அழைப்புப் பணிகளில் ஈடுபடவேண்டும்.

முஹம்மது தமீம்

அதிரை என்.ஷஃபாத் said...

இந்த நிகழ்வை பதிந்து பகிர்ந்ததற்கு நன்றி.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

மனதுக்கு மிகவும் நிறைவானதும் நெகிழ்வானதுமான் நிகழ்ச்சி. பல நண்பர்களை சந்திக்கும் விதத்தில் அமைந்தது.

பல காலங்களுக்குப்பிறகு உங்களைப் பார்த்துவிட்டு உடனே பிரிவது நான் உணர்ந்த வேதனை சகோதரர் ஜமீல் அவர்களே.

கவிகளின் கவித்துவ உரைகளை கேட்க முடியாமல் தாமதமாக வந்தோம் .ஆனாலும் காணொளி அக்குறையைப்போக்கிவிட்டது.

நினைவுப்பரிசை என்னை வழங்கவைத்த அன்புக்கு அனைவருக்கும் ஜசக்கல்லாஹ் ஹைரண்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

'பல்லாண்டு காலம் உடனிருக்கும் பொழுது குற்றம்,குறை கண்டு பிடித்து காலம் ஓட்டிய மனசு பிரிவு என்று வந்துவிட்டால் பரிதவித்து நின்று கண்களை கசிய வைத்து விடுகிறது'.

இது வாழ்வின் உள்ளத்தை கண்ட, துண்டமாக்கிய நான் கண்ட அனுபவங்கள். என்ன தான் வாழ்வில் நமக்கு பல இடைஞ்சல்களையும், தொல்லைகளையும் தந்த நபராக எவரேனும் இருந்திருந்தும் நிறுவனத்தை விட்டோ அல்லது உலகை விட்டோ அவர் பிரியும் சமயம் மனம் சொல்லாத்துயரை அடைந்து சொல்ல வார்த்தைகளின்று மெளனமாய் சோர்ந்து விடுகிறது.

அண்மைக்கால கட்டுரைகள் மூலம் நமதூர் அதி அழகு ஜமீல் காக்காவை பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் பணி ஓய்வு மூலம் இனி அமைதியான, சந்தோச வாழ்க்கை பிறக்கட்டுமாக... அதன் மூலம் சமுதாயப்பணி சிறக்கட்டுமாக. என இறைவனை பிரார்த்தித்த‌வ‌னாக‌.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

அப்துல்மாலிக் said...

சகோதரர் ஜமீல் அவர்களுக்கு, அதிரை நிருபர் தளம் மூலம் உங்களையும் தாங்களின் திறமைகளையும் அறிய நேர்ந்தது, பிரிவு ஒன்றே மாறாதது, அதிரை அனைத்து முகல்லா மாநாட்டில்தான் தாங்களை முதன்முதலில் சந்திக்க நேர்ந்தது, அல்லாஹ் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை தந்து, மேலும் இந்த சமுதாயத்துக்கு உழைத்திட உறுதுணை செய்வானாகவும், ஆமீன்

இணைய வழித்தொடர்பில் தொடர்ந்து இணைந்திருப்போம், இன்ஷா அல்லாஹ்

ZAKIR HUSSAIN said...

எங்கள் ப்ரியமான ஜமீல் நானாவுக்கு....

1970 களின் தொடக்கத்தில் 122 கடற்கரைத்தெருவில் வெள்ளை கைலி/வெள்ளை பனியனில் எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கும் நீங்கள், கால ஒட்டத்தில் ரிட்டையர்மன்ட் வயதை தொட்டது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

இருப்பினும் உங்கள் எண்னங்களும் , சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் எனும் விடாமுயற்சியும் என்றும் உங்களிடம் இளமையாகவே இருக்கிறது.

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum!!!
Dear Brother Thajudeen, I am extremely happy to watch the recorded interaction with my dearest brother Jameel Kakka. Zazakkallah Hairan.
Actually as Sabeer has rightly pointed out, I know Jameel Kakka as the brother of My dear brother Iqbal. We shared a lot of information about Jameel kakka even before I met him. I always had strong affection and respect upon Jameel Kakka because, he was an affectionate son to his parents, he was a responsible brother (as a father) of his siblings, he had strong conviction towards the Islamic faith and above all he never compromised to anybody or anything for this worldly benefits. I know he is a living example to the perfect Islamic Principle and I am confident that those who listen to his words and follow him will be benefited in this world and the hereafter. I wish him to continue his second innings in our home town and bring our community under one fold that is the way of our holy Prophet (SAW).
Inshya Allah we will meet again and spend more time in sharing the holy principles of our Deen.
Wassalam
N.A.Shahul Hameed

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அஸ்ஸலாமு அழைக்கும்

இனிய மாலை பொழுதில் நானும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டு இத்தளத்தின் பல பெருந்தலைகளை (சீனியர்) நேரில் சந்திக்க வாய்பாகவும் மகிழ்வாகவும் இரு(அமை)ந்தது...

நானும் என்னுடன் வந்த மற்ற நண்பர்களும் ஆரம்பத்தில் வராமல் மிக தாமதமாக வந்ததால் ஏமாற்றமே மிஞ்சியது சகோதரர்களை அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டது எதோ மனதோறத்தில் சிறு மகிழ்வே...அல்ஹம்துலில்லாஹ் ....

நிறைய தெரிந்த/தெரியாத முகங்களை என்னால் பார்த்து சந்தோஷக்கடலில் முழ்கச்செய்த அ நி க்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.....

அன்புடன் புகாரி said...

ஜமீல் நானா இளமையாகவே இருக்கிறார். அன்று கண்ட... கேட்ட... அத்தனையும் அப்படியே இருக்கின்றன அச்சு மாறாமல். என்றால் இளமை நீடிக்கிறது என்றுதானே பொருள். அதிசயித்தவண்ணம் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜமீல் நானா இன்று என்னையும் கண்டு ஏதேனும் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. அடுத்த இந்தியப் பயணத்தில் கடற்கரைத் தெருவில் ஒரு வலைவீசுவேன் அலைகளின் உரையாடல்களுக்காக.

அன்புடன் புகாரி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு