[முன் குறிப்பு : எதிர்வரும் 24 ஏப்ரல் 2012 காலை 11:30க்கு சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெறவிருக்கும் நிகழ்வை இன்றே வெளியிடுவதில் பெருமையடைகிறோம். நிகழ்வுகளை முந்தித் தருவது நமது தளமே - பதிப்பாளர் குழு]
மூணு தபா பேரு கூப்டாங்க. எயிந்து போயி நின்னுக்கினேன்.
"20.4.2012
ராத்திரி 11 மணி சுமாருக்கு TN49 AD 0999 பஸ்ஸோட முன்கண்ணாடிய கல்லெடுத்து அட்ச்சி ஒட்ச்சியா?"
"ஜட்ஜய்யாக்கு ஒரு ரிக்கோஸ்ட்டு. நானு ஆமான்னு ஸொன்னதும், 'த்ரீ அண்ரட் ருபீஸ் ஃபைன் கட்டிட்டுப் போ'ன்னு பட்டுனு ஸொல்டாத. மேட்ரு இன்னான்னு டீட்டேலா நானு ஒங் கைல ஸொல்லோனும்"
"டைமில்லே, சுருக்கமா ஸொல்லு"
"ட்டாங்ஸு! அன்னிக்கு நானு ட்ரெய்ன் புட்ச்சிப் ஊர்க்குப் போறதா கீறச்செ..... ஒரு தோஸ்த்து கைல மாட்டிக்கினேன். 'இன்னிக்கு ட்ரெய்னு டிக்கெட்டுக் கெடிக்காது; வீக் எண்டு; பஸ்ஸுல போய்க்க'ன்னு ஐடியா குட்த்து, நாலஞ்சி போன் போட்டு அல்லா பஸ்ஸுக்காரங்க கைலயிம் பேஸ்னாரு.
கட்ச்சீல ஒரு ஏஜண்டாண்ட இட்டுனு பூட்டாரு. அங்கப் போனா ..... ஊருக்குத் துரூ பஸ்ஸுல ஸீட்டு இல்லேன்னாங்கோ. அப்பால நானு போர்டு பட்ச்சிட்டு, தஞ்சாவூருக்கு கீதான்னு பாக்க ஸொன்னனா ... கீதுன்னு 320 ரூபா துட்டு வாங்கினு, ராஹத் பஸ்ஸுல ரெண்டாம் நம்பரு ஸீட்டுப் போட்டுக் குட்தாங்க. $தோ பாரு பாதி டிக்கெட்டு.

"ம்"
'எங்கர்ந்துபா பஸ்ஸு'ன்னு கேட்டனா ..... ' ஐக்கோர்ட்டுப் பின்னாடி நைட்டு எட்ர மணிக்கி வா'ன்னாங்கோ. அன்னிக்கி எட்டு மணிக்கி மின்னாடியே மவனோட வண்ட்டனா ..... பஸ்ஸுங்க ஒன்னுத்தியும் காணம். ஏஜண்டுக்குப் போன் போட்டனா ..... அவ்ரு, 'அங்கியே வெய்ட் பண்ணு, பஸ்ஸு வந்துடும்'னாரு. பஸ்ஸு கரீட்டா எட்டரைக்கி வந்துதா ..... டைவரண்ட போயி, 'தஞ்சாவூரு போற பஸ்ஸா?'ன்னு கேட்டனா ..... 'தஞ்சாவூரு பஸ்ஸு ட்டீ நகர்லேந்து போவுது, இது அதிராம்பட்னம் பஸ்ஸு'ன்னாரு.
திரியிம் ஏஜெண்டுக்கு போனு. 'இந்த பஸ்ஸுக்காரங்க ஒன்னிய ட்டீ நகர் வரிக்கும் ஏத்திகினு போயி தஞ்சாவூரு பஸ்ஸுல ஜாயின் பண்ணி விட்ருவாங்க'ன்னு ஏஜெண்டுக்கார ஆளு ஸொன்னாரு. டைவரண்ட போயி மேட்ரு ஸொல்லி கன்ஃபாம் செஞ்சிக்கினேன். அந்தப் புண்ணியவானும் ரெஸ்பேட்டா என்னிய ஏத்திக்கினு போயி ட்டீ நகர் ஏஜெண்ட்டு ஆபீஸுக்கு எதிர்ல கீற ஸ்டாப்புல எறிக்கி வுட்டு, 'தஞ்சாவூரு போற பஸ்ஸு இன்னும் வர்ல ..... வந்ததும் நானு ஸொல்றேன்'ன்னு அவ்ரும் வெய்ட் பண்ணாரு. நல்ல மன்ஸம்பா அவ்ரு. தஞ்சாவூரு போற பஸ்ஸு .... அத்தான் நீயி நம்பர் ஸொன்னியே ..... அந்த பஸ்ஸு பத்துக்கு வந்திச்சிபா.
'தோ ..... ஒம் பஸ்ஸு வந்தாச்சி; அதில போயி குந்திக்க'ன்னு அதிராம்பட்னம் பஸ்ஸு டைவரு டீஜெண்டா என்னாண்ட ஸொன்னாரு. நானு கேர்ஃபுல்லா கீறவனா ..... தஞ்சாவூரு போற அந்த பஸ்ஸு கண்டக்டரு டோரண்ட நின்னுகினு பாசஞ்சருங்க கைல டிக்கெட்டக் காட்ட ஸொல்லி ஏத்தினுர்ந்தாரா .... அவ்ராண்ட போயி, என்னோட டிக்கெட்டக் காட்டி, 'இது தஞ்சாவூரு போற ராஹத் தானபா?'ன்னு கேட்டேன்.
டிக்கெட்டெ வாங்கிப் பாத்துட்டு, 'டிக்கெட்டு எங்க எட்த்தே'ன்னு கேட்டாரு. 'மண்ணடி ஏஜெண்டு .................... கைல'ன்னேன். 'ஏறி குந்திக்க'ன்னாரு. குந்திக்கினம்பா. மணி பத்தர ஆச்சி. பஸ்ஸ எட்த்தாங்க. ஸொமாரா ஒரு மைலு தாண்ற நேரத்லே ஒரு செக்கர் பு**கி வந்தான் ....."

"இது கோர்ட்டு. இங்க இதுமாரில்லாம் பேசக்கூடாது"
"மேட்ரு இன்னான்னு டீட்டேலா கேட்டீன்னா ஜட்ஜய்யா நீயே, 'அவம் மொகரய்ல எம் பீச்சாங்கைய வெய்க்க'ன்னுவே. ஆங் ..... இன்னா ஸொல்லிக்கினுருந்தேன் ..... ஆங் ..... ஒரு செக்கர் பு**கி வந்தானா ..... என்னாண்ட இருந்த டிக்கெட்ட வாங்கிப் பாத்துட்டு, "இது, இந்த பஸ்ஸு டிக்கெட்டு இல்லே ..... அது பின்னால வருது. எறங்கிக்கிங்க'ன்னாம்பா.
'இன்னாபா ..... நானு வண்டில ஏறுமின்னாடி கண்டக்டரண்ட டிக்கெட்டெ காட்டி அவ்ரு ஏறிக்கன்னு சொன்னத்துக்க அப்பாலத்தான் ஏறுனேன். நீயி கன்பீஸ் பண்றியே'ன்னு கேட்டம்பா. 'மன்ச்சிக்க நைனா. நானு ஒம் பஸ்ஸு டைவரருக்கு மெஸேஜ் குட்கிறேன். அந்த வண்டி நீயி இந்த வண்டி ஏறுன ஸ்டாப்பாண்ட நிக்கிது. எறங்கிப் போயி ஏறிக்க ..... இல்லனா வண்டி மூவாகி வந்ததுண்ணா கைகாட்டு ..... நிறுத்தி ஏத்திணு போவாங்க'ன்னான்.
நானு எறங்கினு 'ஸூரா?'ன்னு கேட்டம்பா. அவனும் 'ஸூரு, ஏத்தாம போமாட்டாங்க'ன்னு ஊத்துனாம்பா. அங்கியே கொஞ்ச நேரம் நின்னுகினு பாத்துனே கீறேன் ...... ஒரு வண்டியிம் வர்ர மாரி இல்லியா ..... பொட்டிய தூக்கினு அங்கேர்ந்து நடந்தம்பா. எது வரிக்கும்? நானு பஸ்ஸு ஏறுன ஷ்டாப் வரிக்கும் நடந்துபோயி பாத்தா ட்டீ நகர் ஏஜெண்டு போர்டு லைட்டுல்லாம் ஆஃப் பண்ணிட்டு கணுக்குப் பாத்தினிருந்தாரு. அவ்ராண்ட போயி, 'தஞ்சாவூரு போற பஸ்ஸு எதுனா வரவேண்டி கீதா?'ன்னு கேட்டேன்.
அவ்ரு என்னிய மேலயிம் கீலயிம் பாத்துட்டு, 'இதுக்கு மேல எந்த பஸ்ஸும் இல்லபா. எல்லா பஸ்ஸும் பூட்ச்சே'ன்னாரு. நானு பேஜாராயிப் போயி மண்ணடி ஏஜெண்டு ஆபீஸுக்குப் 0444XXXXXX போன் போட்டேன். எவனும் எடுக்கல. அப்பால டிக்கெட்ட பாத்து அதுலர்ந்த மொபைலுக்கு 98400XXXX போட்டேன். அடிக்குது அடிக்குது அட்ச்சினே கீதுபா. தோ பாரு ..... நம்பருங்க அப்பால டைமெல்லாம் கரீட்டா கீதான்னு பாத்துக்கோ!"

ஐஎஸ் ஓ 2003 நோக்கியா 6100 ஜட்ஜிடம் கொடுக்கப்பட்டது.
"அப்பத்தான் ரொம்ப நாளா உள்ளார தூங்கினிருந்தவன் கண்ண முயிச்சி எயிந்து குந்திக்கினான். எனுக்கு பத்திக்கிச்சி. தோஸ்த்து போன்ல புட்ச்சி, 'இவ்னுங்கள்ளாம் ட்ராவல்ஸு நடத்துறானுங்ளா இல்லாங்காட்டி ம** பு****றானுங்களா?'ன்னு சத்தம் போட்டேன். கேட்டுனுர்ந்த ட்டீ நகர் ஏஜெண்டு வெளிய வந்து என்னிய கூல் பண்ணி டீட்டெய்லு கேட்டாரா ..... அவ்ரு கைல மேட்ரு ஸொல்லி டிக்கெட்டக் காட்னனா ..... 'ஜல்தி போன் போடு, நம்பர் ஸொல்றேன் 9750XXXXX'ன்னாரு.
அவ்ரு ஜெண்டில்மேன்பா. நம்பர் போட்டு அவ்ரு கைல போனக் குட்த்தனா ..... என்னிய எறக்கி வுட்டுட்டுப் போன டைவர காச்சிட்டு, 'வண்டிய கப்புனு நிறுத்திட்டு எடஞ் சொல்லு'ன்னு கட்டன் ரீட்டா கேட்டாரு.
அப்பாலிக்கா ஒரு ஆட்டோவ நிறுத்தி 'கண்ணம்மா பேட்ட ப்ரிஜ்ஜாண்ட நம்ப வண்டி நின்னுனு கீது அதுல இந்தப் பெரீவர கொண்டுபோயி விட்று'ன்னாரு. ஆட்டோக்காரரு என்னியக் குந்திக்க ஸொன்னப்ப 'உனுக்கு ஆரு ச்சார்ஜ் குடுப்பான்னு கேட்டுக்கபா'ன்னேன்.
'அந்த பஸ்ஸுக் கண்டக்டரு குடுப்பான்'னு ட்டீ நகரு ஏஜெண்டு ஸொன்னாரா..... நானு குந்திக்கினு போயி ஆட்டோவ விட்டு எறங்கினப்ப எனிக்கு உள்ளார தூங்கினுருந்தவன் எயிந்து நின்னுக்கினானா..... ஒரு கல்லெடுத்து கண்ணாடிய ஒட்ச்சம்பா'.

"பொதுச் செத்தச் சேதம் பண்றது குத்தம். தெரீமா ஒனுக்கு?"
"இன்னா ஜட்ஜு திரியிம் உல்ட்டா வுடுரே? பொதுச் சொத்துன்னா உன்னுது ஒரு பைசாவாச்சிம் என்னுது ஒரு பைசாவாச்சிம் மிக்ஸாயிரிந்தாத்தான் அதுக்குப் பேரு பொதுச் சொத்து. அது கவ்ருமெண்டு பஸ்ஸில்லே ..... ஆம்னி மல முலுங்கிக்காரனோட தனியாரு பஸ்ஸு"ன்னு ப்பாயிண்டு எடுத்து வுட்டனா .....
"சரி, சரி, ந்யூஸென்ஸ் கேசு. த்ரீ பிப்ட்டி கட்டிட்டுப் போ"ன்னு ஜட்ஜு ஸொல்ட்டாருபா.
___________________________________________________________________________
ஒரு $இலிருந்து இன்னொரு $வரை நடந்தவை, கடந்த 20.4.2012 அன்று சென்னையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள். பிற கற்பனை - அதாவது இனியொரு முறை நடந்தால் நிச்சயமாக நிகழ்வாக மாறத்தக்கக் கற்பனை.
திருந்தி வாழனும்னா விட்றானுங்களா? பழையபடி சென்னையின் சேரி வாழ்க்கைக்கே திரும்பிப் போனால்தான் இவனுங்களத் திருத்த முடியும் போலிருக்கிறது.
-ஜமீல் M. சாலிஹ்
10 Responses So Far:
அப்பால பழகு மொழி வகுப்பாண்ட போய்ட்டு வந்தாக்க...
இன்னா இது!?
கண்ணம்மா பேட்டை ஸ்கூலாண்டா வண்டி ஸ்டாப்பாச்சு !
ஆமா ! தலீவா அந்த தோஸ்து கிட்டே பேசனுமே !.
////
இதுக்குப் பேருதான் மொழி பெயர்ப்பா !
செலுத்திய கட்டணத்திற்கேற்ப குறைந்தபட்ச கடமையைச் செய்யத் தவறிய நிறுவனம் நம்மவர்களுடையது என்பது ஒருபக்கம் வேதனையாக இருந்தால், இன்னொரு பக்கம் நியாயமான சேவையை எதிர்பார்த்துச் சென்று ஏமாந்த நமதூர் சகோதரரின் மன உளைச்சல்!
பிரயாணக்காரன்-பைத்தியக்காரன் என்பதன் உள்ளர்த்தம், பிரயாணி பல்வேறு குறுக்கீடுகளையும் சரிசெய்து ஒழுங்காக இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கில் ஏற்படும் தடுமாற்றங்களைக் கருத்தில் கொண்டே இவ்வாறு சொல்லப்படுகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களும் ”பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும் பானத்தையும் உறக்கத்தையும் தடுத்து விடுகிறது.எனவே,ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.புஹாரி : 1804 அபூஹுரைரா (ரலி).
கட்டணம் வசூலிப்பதில் கறாராக உள்ளவர்கள் கொஞ்சம் பயணிகளின் அசெளகரியங்களையும் கருத்தில்கொண்டு, இத்தகைய சிரமங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த பதுவா விலிருந்து தவிர்த்துக்கொள்வதே அறிவார்ந்தது.
தன் பயணத்தில் ஏற்பட்ட கஷ்டத்தை ..சுவை யாய்
சென்னை தமிழில் கூறுனீர்கள் ..தங்களின் அனுபவத்தினை
நம்மவர்கள் பாடமாக எடுத்துகொள்ள வேண்டும் ..முன் பதிவு
செய்த இடத்திலிருந்து பஸ் புறப்படுகிறதா அல்லது வேறு இடம்
சென்று பஸ் ஏற வேண்டுமா ..என்பதை உணர்ந்து செயல் பட வேண்டும்
ஏஜெண்டை நம்பவே கூடாது ..
அதுவும் சென்னையில் சொல்லவே தேவையில்லை
கோயம்பேடு சென்றால் அடிக்கடி ..தஞ்சாவூர் .கும்பகோணத்திற்கு
பஸ் கிடைக்குமே ஈஸியாக போய் கொண்டே இருக்கலாம் ...
அஸ்ஸலாமு அலைக்கும்.
வித்தியாசமான பதிவாளரிடமிருந்து ஒரு மிக வித்தியாசமான பதிவு. உணமைகளை பிரதிபலிக்கும் சுட்டுகள் மட்டுமல்ல., சூடுகளும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
பழகு மொழியிலே பாடம் நடத்திப்புட்டு.வாயிலே நுழையாத பாசையிலே எழுதியதால் மாணவர்கள் நாங்கள் குழம்பி போய் இருக்கிறோம்.
ஏஜெண்டு காரங்க முன் பதிவு செய்து கையிலே காசு காசு வாங்குற வரையிலும் நல்லா இழிக்குராங்க.வண்டியிலே உட்கார்ந்ததும் கடித்து துப்புறாங்க.
தாங்களின் பயணத்தின் வேதனையான அனுபவத்தை அலுப்பு படாமல் அறிய தந்தமைக்கு நன்றி....
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தமிழ் (பழகுமொழி) நடை ரொம்ப அருமை இதை மற்றவர்கள் எழுதியிருந்தால் அதிகமான தவறுகள் நிகழ்ந்திருக்கும் ஆனால் நீங்கள் பேசியதுபோல் எழுதியது ரொம்ப அருமை தொடரட்டும் உங்கள் பழமை
பதிவு நல்லா ஈக்கிது போல இருக்கு (மாமே) ..கொஞ்சம் டைம் கொடு(ங்க) ஆபீஸ்ஸாண்டே ஸொல்லிட்டு வந்துட்டு படிக்கிறேன்.....
பழகு மொழி தரும்போது இங்கே ஏன் சே(ரி)ற்று மொழி வேறு?
லெ.மு.செ.அபுபக்கர் அவர்களே எத்துண தடைவ ரஹாத் பஸ்ல இந்த மாத்ரி சிரமத்துக்கு ஆலநிங்க ?
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஓர் ஆக்கம் எந்த மொழியில் எழுதப்பட்டது என்பதைவிட, யாருக்காக எழுதப்பட்டது என்பதே முக்கியம்.
கடந்த வெள்ளிக்கிழமை ராஹத் நிறுவன முதலாளி என்னை அலைபேசியில் அழைத்து, எனக்கு ஏற்பட்ட இன்னல்களுக்காகத் தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு இனிமேல் அதுபோல் நடவாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தார். அவருக்கு எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டேன்.
நான் முன்பதிவு செய்யப்போனபோது, "பஸ் நம்பர் என்ன?" எனக் கேட்டதற்கு "நம்பரெல்லாம் இல்லை" என்று சொன்னார்கள். இனிமேல் டிக்கெட்களில் பஸ்ஸுடைய ப்ளேட் நம்பர் எழுதிக் கொடுப்பது குழப்பத்தைக் குறைக்க உதவும்.
அகால வேளையானாலும் அழைத்தால் பதிலளிக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே முன்பதிவு டிக்கெட்டில் மொபைல் நம்பர் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பதிவு செய்துள்ளவர்கள் கொடுத்திருக்கும் மொபைலிலிருந்து அழைப்பு வந்தால் கட்டாயம் பதில் தரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். பதில்தரத் தாமதமாவதற்கு உரிய காரணங்கள் இருக்கக்கூடும். ஆனால், மொபைலில் மிஸ்டு கால் வகையில் எண்களிலிருப்பின் அவற்றை அன்றைய நாளின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களிலாவது ஒப்பிட்டுப் பார்த்து, என்ன ஏது என்று விசாரிக்கத் தவறக் கூடாது.
எதையும் மறைத்து எழுதவேண்டிய தேவை எனக்கில்லை. மூனா கீனாவிடம் என்ன பேசினேனோ அதைத்தான் எனது பழைய மொழியில் எழுதியிருந்தேன்.
அடி பட்டவனுக்குத்தான் வலி தெரியும். நான் அடிபட்டவன் - ஆனால் அடிபடுபவன் மட்டும் அல்லன்.
நன்றி!
Post a Comment