Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள் - ஏற்றம் - 11 22

ZAKIR HUSSAIN | April 07, 2012 | , ,



நம்மோடு ஒருவர் [எப்போதும்] வருபவரை எப்போதாவது கண்டித்திருக்கிறோமா?....பெரும்பாலும் அவருடன் தோற்றுப் போகிறோம். அவரே உங்களை அநியாயத்துக்கு இயக்குகிறார். ஆனால் வெளியில் நாம் "எனக்கு மற்றவர்களை பின்பற்றுவது துப்புறவா பிடிக்காது... எனக்கு என ஒரு தனித்தன்மை இருக்கிறது, அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமுடியாது... மாட்டேன் என்று வீராப்பு பேசுவதோடு சரி.

சரி கொஞ்சம் புரியும்படி எழுதுகிறேன். உங்களுடன் ஒருவர் 24 மணிநேரமும் தங்கியிருக்கிறார். அவர் உங்கள் ரூம்மேட். அவர் நீங்கள் என்ன செய்தாலும் கமெண்ட் செய்வார்.

# எதுக்கும் யோசனை செய், உடனே உன்னால் மாற முடியுமா?

# காலு லேசா வலித்தாலும் C.T ஸ்கேன், MRI எல்லாம் பார்த்துவிடுவது நல்லது.

# நெஞ்சு லேசா வலித்ததா?...எதற்கும் ஒரு Angiograms  பார்த்துடேன்!!

வீட்டுக்கு டெலிபோன் போடும்போது யாரும் எடுக்கலெ.... நிச்சயம் யாருக்கோ  வீட்லெ பிரச்சினை!!!

போய் பேசுன பிஸ்னஸ் பிக்-அப் ஆய்டுமா?..ஊத்திக்குமா?...

இப்படி தொடர்ந்து ஒருவர் உங்கள் பக்கத்திலேயே இருந்து பேசிக்கொண்டிருந்தால் என்ன சொல்லத்தோன்றும்? ' தரித்திரம் புடிச்சவனே, வாய மூடு' என்றுதானே.?.

இப்போதைக்கு மனோவியல் ரீதியாக பார்த்தால் அதிகம்பேர் இதுபோன்ற 'மைன்ட் வாய்ஸ்' உடன் தான் அலைகிறார்கள். இவர்கள் இதை காலையில் டாய்லெட்டில்  உட்கார்ந்திருக்கும்போதே மைன்ட் வாய்ஸ் பேசும்போது கட்டுப்படுத்திவிட்டால் அந்த நாள் முழுதும் நல்ல நாளாக மாற்றிவிடலாம். இது செய்யும் தொழிலை / வேலையை பாதிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். உங்களுக்குள் ஒலிக்கும் அந்த குரலை எப்போது அடக்க தெரியுமோ அப்போதுதான் மனித வாழ்க்கையில் ஒரு படி மேல் நோக்கி போவதாக அர்த்தம். மனதுக்குள் ஒலிக்கும் அந்த மைன்ட்வாய்ஸை அறியும் ஒரு பயிற்சி இருக்கிறது. ஒரு சுவற்றை நோக்கி உங்கள் முகம் பார்க்க வைத்து சுவற்றோடு நெருக்கமாக அமர்ந்து [ ஏறக்குறைய 30 நிமிடம் , ஒரு மணி நேரம் ] நமக்குள் என்னென்ன கேள்விகள் / உரையாடல்கள் தொடர்ந்து கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி தொடர்ந்து ஒடிக்கொண்டிருக்கிறது என்பதை கவனமாக observe செய்ய வேண்டும். இதை செய்யும்போது உங்களுக்கு உடம்பில் சில இடங்கள் வலிக்கும். சரியாக தொடர்ந்தாற்போல் உட்கார முடியாது [ நீங்கள் எவ்வளவு இளமையானவராக இருந்தாலும் சரி] அதற்காக பயப்பட வேண்டாம். இது தொடர்ந்து செய்பவர்கள் பிறகு  ஒருவிதமான தெளிவு கிடைப்பதை உணர முடியும். இதுபற்றி அங்கு சொல்லப்பட்டிருக்கிறது / முன்னால் "டமிலன்" கண்டுபிடித்தது என்று சொல்வதால் புண்ணியம் நஹி.

செயல்களில் கவனம் தேவைதான் அதற்காக எதற்கெடுத்தாலும் பயந்தாங்கொள்ளியாக செயல்படுவது நமக்கு அழகல்ல.

Failure teaches success.

உங்களுக்கும் ஒரு செக்கிங்!!

உங்கள் மீது உங்கள் மனைவி / மக்கள் எவ்வளவுதான் பாசம் வைத்திருந்தாலும் உங்களுடைய முன்னேற்றத்துக்கு ஒரு ப்ராக்ரஸ் கார்டு வைத்து உங்களை எப்படி செம்மை படுத்த முடியும் என்பதை இதுவரை செய்திருக்கமுடியாது...இனிமேலும் செய்யப்போவதில்லை. நீங்களே உங்களுக்காக செய்யாமல் மற்றவர்கள் எப்படி செய்வார்கள்,.

இன்றுவரை கார்ப்பரேட் பயிற்சிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் டெக்னிக்[S.W.O.T]  analysis.  Strength / Weakness / Opportunity / Threat.

சிலர் இதை படிப்பதில் காட்டும் ஆர்வம் அதற்காக ஒரு பேப்பரை எடுத்து எழுதிப்பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது. பலர் ஒரு லைப்ரரி மாதிரி எல்லாவிசயமும் தெரிந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள், கடை பிடிக்கும்போதுதான் பல்டி அடித்து விடுகிறார்கள். எனவே நடமாடும் லைப்ரரிகளால் மனித சமுதாயத்துக்கு என்ன கிடைக்க போகிறது.?

மேற்குறிப்பிட்ட விசயம் [SWOT analysis] படிக்கும் மாணவர்களுக்கும் பயன்படும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் பயன்படும், தொழில் / வேலை செய்பவர்களுக்கும் பயன்படும்.

Strength
முதலில் உங்களின் பலம் எது என்பதை எழுதிப்பாருங்கள். பலர் உங்களை 'பிடிவாதம்" பிடித்தவன் என்று சொன்னாலும் அதை பலமாக மாற்ற முடியும்.பிடிவாதத்தை உங்களின் இலக்கை / வெற்றியை அடைய பயன்படுத்திக்கொள்ளலாமே நீங்கள் நன்றாக பேசக்கூடியவரா அது கூட பலம்தான் [ சிலர் வீட்டில் பெண்களிடம் எல்லாம் தான் ஒரு வீரபராக்கிரமன் என்று காட்டிவிட்டு ஒரு தாலுக்கா ஆபிசில் சர்டிபிகேட் பேசி வாங்க கூட வக்கில்லாமல் அலைவதை நான் ஊரில் பார்த்திருக்கிறேன்.]

Weakness
உங்களின் பலவீனம் எது என்பதை தெரிந்துகொள்வதன் காரணம் மூலையில் உட்கார்ந்து ஒப்பாரி வைக்க அல்ல [பலர் இப்போது பல வெர்சனில் ஒப்பாரி வைக்கிறார்கள். ஒப்பாரிகள் தனக்கு சரியான படிப்பு இல்லை என்பதில் ஆரம்பித்து மாமனாருக்கு பேங்க் பேலன்ஸ் விசேசமாக இல்லை என்பதுவரை பல வகைப்படும். சரியான ஒப்பாரிகள் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நம் ஊர் பக்கம் பல வருடம் வெட்டியாக திரியும் மருமகன் களின் ஸ்டேசனுக்கு உங்கள் ட்யூனரை சரிசெய்து கொள்ளவும்....இவர்களுடைய டேக்லைன் தான் " கேளுங்க ...கேளுங்க கேட்டுகிட்டே இருங்க "  கால ஒட்டத்தில்  FM Stations சுட்டுவிட்டதாக கேள்வி.

உங்களின் பலவீங்களை பார்க்க ஆரம்பித்து விட்டாலே தானாகவே அவைகள் மாறத்தொடங்கும். ஏனெனில் மனிதன் அப்படித்தான் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன். அதை விட்டு குலப்பெருமை எல்லாம் பேசி ' நாங்க யார் தெர்யும்ல....' என ஆரம்பித்தால் வாழ்வியலின் உண்மைகள் உங்களுக்கு ஓட்டுபோடாது.

Opportunity
வாய்ப்புகள் நோக்கி எப்போதும் கவனம் தேவை. வாய்ப்புகள் திடீரென வரலாம். பயன்படுத்தி கொள்பவர்களே சிறந்தவர்களாகிறார்கள். காரணம் சொல்பவர்கள் கவனிக்கப்படாமலேயே ஒதுக்கப்பட்டுவிடுகிறார்கள். உயிரோட்டம் இல்லாத வாழ்க்கை வாழ்பவர்கள் பூமியின் வெளிப்பிரதேசத்துக்கு வருவதே இல்லை. அவர்கள் வெளியில் இருந்தாலும் புதைக்கப்பட்டவர்களுக்கு சமம்.கடல் உயிரோட்டமில்லாத எதையும் தன்வசம் வைத்துக்கொள்ளாமல் அதை தன் கரைகளில் துப்பி விட்டு போய்விடுகிறது. பூமியின் சவால்களை சமாளித்தவர்களுக்கே சிலை வைக்கப்படுகிறது. காரணங்கள் சொன்னாலே வாழ்ந்துவிடலாம் என தப்புகணக்கு போடுபவர்கள் தன்குடும்பத்தினராலேயே ஒதுக்கப்பட்டுவிடுகிறார்கள்.  ரத்தம் சூடாக இருக்கும்வரை I Don’t Care  சொல்லலாம். அதற்கு பிறகு  Somebody Must take care you.  உங்களை அவர்கள் பார்த்துக்கொள்ள அவர்களுக்கு நீங்கள் என்ன செய்து இருக்கிறீர்கள்.?

Threat
அடுத்தது பயம்...இது பற்றி முன்பே எழுதிவிட்டதால்...skip…இருப்பினும் பயத்தை எதிர்கொண்டால்தான் அதை வெள்ள முடியும். அதை விட்டு தற்காலிக நடவடிக்கைகள் எதற்கும் உதவாது.

இந்த SWOT analysis ஐ பற்றி தம்பி யாசிர் முன்பே ஒருமுறை எழுதியிருந்ததை படித்து இருக்கிறேன். சரியான விசயங்கள் நம் சமுதாயத்துக்கு தெரிவிக்கப்பட்டிருப்பது கண்டு மகிழ்ச்சி.

ஈடுபாட்டுடன் செயல்படும் விசயங்களில் கவனம் சிதறும்போது நாம் ஆத்திரப்படுகிறோம். நல்ல சீரியல் ஒடிக்கொண்டிருக்கும்போது வரும் விருந்தாளிகள் "விழுந்து பிராண்டப்பட்டதால்' விருந்தாளிகளின் வரத்தும் பல வீடுகளில் செல்போன் டவர் உள்ள இடங்களில் சிட்டுக்குருவி இல்லாமல் போனமாதிரி வெரிச்சொடி விட்டதாம்.

இருப்பினும் இதை ஏன் சொல்கிறேன் என்றால் நீங்கள் உங்களுக்கான Goal setting செய்து விட்டீர்கள், பொருளாதார ரீதியில் முன்னேர கடுமையான கடப்பாடுகளுடன் ஆரம்பித்து விட்டீர்கள் உங்கள் வேலையை / தொழிலை....இருப்பினும் யார் வந்து கூப்பிட்டாலும் எப்படி உங்களுக்கு உங்கள் தொழிலை/ வேலையை  தூக்கிபோட்டு விட்டு மற்றவர்களின் பின்னால் ஒட முடிகிறது?...சீரியலுக்கு கொடுக்கும் சீரியஸ்னஸ் கூட கொடுக்க முடியாத அளவு உங்கள் இலக்கு அவ்வளவு பலவீனமானதா?

See you in next episode…
-ZAKIR HUSSAIN

22 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒரே மூச்சில் படித்து விட்டு கருத்திடலாம்னு நினைச்சுகிட்டு படிக்க ஆரம்பித்ததும்... வேலைத் தடங்கள் (!!?) இடையிடையே வந்து விடுகிறது...

//# எதுக்கும் யோசனை செய், உடனே உன்னால் மாற முடியுமா?//

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பலன் தரும் முன்னேற்ற படிகள்!

மன ரீதியாக நம்மை நாமே மாற்றிக்கொள்வதன் மூலம் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியுமென்பதற்கு நல்ல பக்குவமான விளக்கம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

IPL ஏலம் எடுத்தது கிரிக்கெட் வீரர்களை அல்ல அப்பாவி ரசிகர்களை... முடக்கி விட்டதே !

எத்தனை தடவை தோல்வியுற்றாலும் ரிப்லேயிலையாவது அல்லது ரிக்கார்டட் மேட்சிலாவது ஜெயிக்க மாட்டோமா என்ற கிரிகெட்டமேனிய வியாதிதான் காரணம் !

அலாவுதீன்.S. said...

////நம்மோடு “ஒருவர்” [எப்போதும்] வருபவரை எப்போதாவது கண்டித்திருக்கிறோமா?....பெரும்பாலும் அவருடன் தோற்றுப் போகிறோம். அவரே உங்களை அநியாயத்துக்கு இயக்குகிறார்.////
**********************************************************************

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நம்மோடு ஒருவர் இருப்பது நண்பராக இருக்கலாம். அனுபவ சாலியான முதியவராக இருக்கலாம். நாம் செய்யப்போகும் காரியங்களில் அவர்களிடம் ஆலோசனை கேட்டு நம்முடைய மனம், மூளையை கொண்டு முடிவெடுத்தால் காரியங்கள் நலமாக அமையும்.

அதே நேரத்தில் அவர் நம்மை இயக்குவதற்கு விடக்கூடாது. நிறைய இடங்களில் மற்றவர்கள் இயக்கத்தில் நடித்து தோற்றுப் போவதும் உண்மையே!

படிக்கட்டுகள் - 11 - தெளிவு

KALAM SHAICK ABDUL KADER said...

//வாய்ப்புகள் நோக்கி எப்போதும் கவனம் தேவை. வாய்ப்புகள் திடீரென வரலாம். பயன்படுத்தி கொள்பவர்களே சிறந்தவர்களாகிறார்கள். காரணம் சொல்பவர்கள் கவனிக்கப்படாமலேயே ஒதுக்கப்பட்டுவிடுகிறார்கள்.//


காலம்


நிகழ்வுகளை
நினைவுகளாய்ப்
பதிந்து வைக்கும்
ஒலிநாடா

இன்றைய செய்திகளை
நாளைய வரலாறுகளாய்ப்
பாதுகாத்து வைக்கும்
பேரேடு

துக்கங்கள் யாவும்
மறந்து போக வைக்கும்
மாமருந்து


வாய்ப்புகளாய்
வாசற்கதவினைத் தட்டும்
உருவமில்லா ஓர்
உற்ற நண்பன்

காத்திருத்தல்
தவப் பயனாய்
பொறுமை தரும்
வரம்

மேலும் கீழுமாய்ச்
சுழற்றிப் போடும்
சக்கரம்


பிறப்பு, இறப்பு
மறுமை யாவும்
மறைத்து வைத்துள்ள
இரகசியப்
பெட்டகம்

"கவியன்பன்” கலாம்.

நன்றி: சத்யமார்க்கம்

அன்புத் தம்பி ஜாஹிர் ஹுஸைன், அஸ்ஸலாமு அலைக்கும்.

காலமெனும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி அடிமட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு உயர்ந்த ஓர் உதாரணமாக என் வாழ்வும் அமைந்திருப்பது உங்களின் இக்கட்டுரையின் “படிக்கட்டுகளில்” நின்று கொண்டு உரக்கக் கூறுவதில் எனக்கொன்றும் தற்பெருமை இல்லை; மாறாக வெற்றி பெற நாடும் உள்ளங்கட்கு ஓர் அரிய பாடம்; அஃதே என் பாடல்! என்னைப் போல் எல்லாரும் முன்னேற்றப் படிகளில் ஏற வேண்டும் எனபதை மட்டும் உளத்தூய்மையுடன் சொல்லிக் காட்டுவதும் ஓர் “இக்லாஸ்” என்பதும் அறிந்தால் போதும்! தாங்களும் அவ்வண்ணம் ஓர் உளத்தூய்மையான எண்ணம் வைத்து இப்படிக்கட்டுகளைக் கட்டி வருகின்றீர்கள் என்பதும் கண்கூடான உண்மை!!

sabeer.abushahruk said...

S.O.W.T. விளக்கங்கள் எனக்கு இப்போதுதான் அறிமுகம். நல்லாருக்கு. இன்னும் டீட்டைலா தந்திருக்கலாம். பிரின்ஸிப்ல், வழிமுறைகள், உதாரணங்கள் என்று விரிவுபடுத்தியிருக்கலாம்.

கிரானைட் படிக்கட்டுகள் ஜாகிர்.

இப்னு அப்துல் ரஜாக் said...

பல மரம் பார்க்கும் தச்சன்,ஓர் மரமும் அறுக்கான், இந்த பழமொழி நினைவுக்கு வருகிறது,ஜாகிர் காக்காவின் கட்டுரையி வரும்

//# எதுக்கும் யோசனை செய், உடனே உன்னால் மாற முடியுமா?

# காலு லேசா வலித்தாலும் C.T ஸ்கேன், MRI எல்லாம் பார்த்துவிடுவது நல்லது.

# நெஞ்சு லேசா வலித்ததா?...எதற்கும் ஒரு Angiograms பார்த்துடேன்!!

# வீட்டுக்கு டெலிபோன் போடும்போது யாரும் எடுக்கலெ.... நிச்சயம் யாருக்கோ வீட்லெ பிரச்சினை!!!

# போய் பேசுன பிஸ்னஸ் பிக்-அப் ஆய்டுமா?..ஊத்திக்குமா?//
இதைப் படித்த பிறகு.நான் எழுதுன பழமொழி சரியா?

Ebrahim Ansari said...

//S.O.W.T. விளக்கங்கள்//

அனைவரும் அறிய வேண்டிய அத்தியாவசிய படிப்பினைகள். கார்பரேட் பயிற்சிகளில் பங்கெடுத்துகொள்ள முடியாதவர்களை ஜாகிரின் எழுத்துக்கள் பயிற்றுவித்தால் நலம்.

கவிஞர் சபீர் அவர்கள் சொன்ன

//இன்னும் டீட்டைலா தந்திருக்கலாம். பிரின்ஸிப்ல், வழிமுறைகள், உதாரணங்கள் என்று விரிவுபடுத்தியிருக்கலாம்.//

இதே கோரிக்கையை நானும் வைக்க ஆசைப்படுகிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பான ஜாஹிர் காக்கா,

SWOT analysis பற்றி எல்லோருக்கும் புரியும்படி எடுத்துச்சொன்னவிதம் மிக அருமை காக்கா..

// மேற்குறிப்பிட்ட விசயம் [SWOT analysis] படிக்கும் மாணவர்களுக்கும் பயன்படும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் பயன்படும், தொழில் / வேலை செய்பவர்களுக்கும் பயன்படும்.//

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் SWOT analysisயை எல்லா துறைகளுக்கும் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்பது அனுபவபூர்வமான உண்மை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Ebrahim Ansari சொன்னது… இதே கோரிக்கையை நானும் வைக்க ஆசைப்படுகிறேன்..///

swot analysis இன்னும் விரிவாக உதாரணங்களுடன் தெரிந்துக்கொள்ள வேண்டிய technic..

நானும் இந்த கோரிக்கையை வழிமொழிகிறேன் இபுறாஹின் அன்சாரி காக்கா...

N. Fath huddeen said...

//கடல் உயிரோட்டமில்லாத எதையும் தன்வசம் வைத்துக்கொள்ளாமல் அதை தன் கரைகளில் துப்பி விட்டு போய்விடுகிறது.//

மிக அருமையான வரிகள். வாழ்த்துக்கள்!

PLEASE CONTINUE...

Yasir said...

முத்து முத்தான வார்த்தைகள்,கருத்துபொதி சுமக்கும் வரிகள்....இதனை நாம் படியாக எண்ணி ஏறுவதைவிட மனதில் பக்கவாக நிறுத்தினால் அல்லாஹ்வின உதவியால் வெற்றிபெற்றி உருப்பட்டு உண்ட சோறு வாங்கலாம் ...சூப்பர்ப் ஜாஹிர் நானா

//உங்களுக்குள் ஒலிக்கும் அந்த குரலை எப்போது அடக்க தெரியுமோ அப்போதுதான் மனித வாழ்க்கையில் ஒரு படி மேல் நோக்கி போவதாக அர்த்தம்./// வைர வரிகள்

Yasir said...

தாஜுதீன் சொன்னது…//எல்லா துறைகளுக்கும் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்பது அனுபவபூர்வமான உண்மை./// ......அல்லாஹ்வின் உதவியால் இம்முறையால் எங்கள் வியாபரத்தில் நாங்கள் 90% வெற்றி பெற்று இருக்கின்றோம்....எந்த ஒரு காரியத்திலும் உள்ள நெளிவு,சுளிவுகளை முன்கூட்டிய அறிய முற்பட்டு அதற்க்கெற்றார்போல் செயல்படுவது தான் SWOT

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

\\விருந்தாளிகளின் வரத்தும் பல வீடுகளில் செல்போன் டவர் உள்ள இடங்களில் சிட்டுக்குருவி இல்லாமல் போனமாதிரி வெரிச்சொடி விட்டதாம்.//

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே அது இதுதானா மிக அருமையான விழிப்புணர்வு

செல்போன் டவர் கதிர்வீச்சால் மட்டுமே சிட்டுக்குருவிகள் இனம் அழிந்துவருவதாக நாம் கருத முடியாது. சென்னை போன்ற பெருநகரங்களில் நீர்நிலைகளை காண்பதே அரிதாகிவிட்டது. மேலும், விளைநிலங்களும் இல்லை. யாரும் வீட்டிலும் தானியங்களை காயவைப்பது கூட இல்லை. அனைத்து தானிய வகைகளையும் நாம் கடைகளிலேயே பாக்கெட் செய்து வாங்கி வருகிறோம்.

இதனால், தானியங்கள் மற்றும் நீர்நிலைகள் இல்லாமல் சிட்டுக்குருவிகள் நகர்புறங்களை விட்டு சென்றுவிடுகின்றன.

S.O.W.T. விளக்கம் மிக அருமை...படிக்கட்டுகளின் ஏற்றம் ஒவ்வொரு பதிவிலும் முடிவில்லா படிகளாகவும் அதேபோல் பயனுள்ள படியாகவும் உள்ளது நன்றி சகோ ஜாகிர்

Yasir said...

//சென்னை போன்ற பெருநகரங்களில் நீர்நிலைகளை காண்பதே அரிதாகிவிட்டது. மேலும், விளைநிலங்களும் இல்லை. யாரும் வீட்டிலும் தானியங்களை காயவைப்பது கூட இல்லை. /// இதுதான் உண்மையான காரணம் ......தம்பி இர்ஃபான் இதனைப்பற்றி நீங்கள் ஒரு ஆக்கம் எழுதலாமே

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அஸ்ஸலாமு அழைக்கும்

\\இதுதான் உண்மையான காரணம் ......தம்பி இர்ஃபான் இதனைப்பற்றி நீங்கள் ஒரு ஆக்கம் எழுதலாமே//

..நெடுங்காலமாக இதனை பற்றி எழுத/பதிய வேண்டும் என்று நினைத்ததுண்டு..இன்ஷா அல்லாஹ் என்னால் தெரிந்த / (இன்னும்) தெரிந்து பதிய முயற்சிகள் செய்கிறேன் யாசிராக்கா...

அப்துல்மாலிக் said...

//S.W.O.T. விளக்கங்கள்// அருமை காக்கா
இதைதான் பிரஷெண்டேஷன் என்ற பெயரில் பிஸினெஷ் பற்றி பவர்பாய்ண்ட்லே நுனி நாக்கு இங்க்லீஷ்லே புரஜெக்டர் வெச்சி ஏசி ரூமுக்குள்ளே சொல்லித்தாரானுவோ, அதுக்கு கட்டணமாக ஒரு கொள்ளை வேறு, தாங்கள் விளக்கம் அருமை

சகோ. யாஸிர் தாங்கள் எழுதிய அந்த S.W.O.T. அந்த லின்க் கிடைக்குமா, நன்றி

ZAKIR HUSSAIN said...

Since most of our brothers asking, I will write about SWOT analysis in separate article [ Insha Allah]

Shameed said...

பெரிய பெரிய விசயங்களை எளிதாக புரியும் "படி" சொன்ன விதம் அருமை

sabeer.abushahruk said...

//Since most of our brothers asking, I will write about SWOT analysis in separate article [ Insha Allah]//

நெம்ப நன்றிங்கய்யா, ஆனா, அது சுகி சிவம்(தாஜுதீனுக்கு மூக்கில வேர்க்குமே) ஸ்டைலில் பாடம் எடுப்பதுபோல் இல்லாமல் உங்கள் பாணியில் கொஞ்சம் நகைச்சுவையோடு இழைத்துக் கொடுங்கண்ணா. இல்லேன்னா, கடுசாத்தான் சொல்வேன்னா, என்னிக்குன்னு சொல்லிடுங்க; அன்னிக்கு நான் சிரியாக்குப் போய் போராட்டக்காரங்ககூட சேர்ந்துடறேன்.

ZAKIR HUSSAIN said...

அபு இப்ராஹிம்...உங்கள் கமென்ட்ஸில் தெரிகிறது உங்கள் பிசி..

சகோதரர் அபுல்கலாம்...உங்கள் கவிதையை கண்டு வழக்கம்போல் சிலாகிக்க முடியவில்லை..காரணம் காலத்தை உங்கள் தமிழில் படித்த பிறகு "ஏதாவது உருப்படியா செய்யனும்ங்கற மாதிரி தோனுது"

அலாவுதீன்...அடிக்கடி Profile Photo வை மாத்திடற மாதிரி தெரியுது. மற்றும் என் பதிவை முழுமையாக படிப்பதில் எனக்கு சந்தோசம்.
\ To Bro Ara Ala.
//பல மரம் பார்க்கும் தச்சன்,ஓர் மரமும் அறுக்கான், இந்த பழமொழி நினைவுக்கு வருகிறது,//

I think this is the best proverb for "Decision Making"

To brother Ebrahim Ansari, Thajudeen, Abdul malik ..thanx for your comments.

யாசிர்...நான் எழுதிய மிக மிக மிக முக்கியமான வரியை அடையாளம் கண்டு பாராட்டியதற்கு நன்றி. நான் எழுதிய அந்த வரிகளை புரிந்து கொள்வது / அனுபவிப்பது அவ்வளவு எழிதல்ல. Every body need lot of practice on this aspect. I can assure you that no body can get that by overnight.

இர்ஃபான்...இன்னும் உங்கள் ஆர்டிகிள் வரலெ...நாங்கள் காத்திருக்கிறோம்.

சாகுல்...இப்படி 'ஹத்து" எழுதறமாதிரி எழுதும்போதேதெரியுது.நீங்க இந்த வாரம் பிசி.

சபீர் நீ சொன்னபடி எழுதிடறேன். அதில் இன்னும் 4D Processம் சேர்த்து எழுதிகிறேன். [ 4D process also good for Leadership Quality]

Thanks To ALL

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சாகுல்...இப்படி 'ஹத்து" எழுதறமாதிரி எழுதும்போதேதெரியுது.நீங்க இந்த வாரம் பிசி.//

ஒடுக்கத்து புதன் என்று சொல்லி ஏதோ கரைக்கப்படுமே அதுவா ?

அதெல்லாம் முன்னோர்கள் செய்தவையாச்சே... தப்பு காக்கா 'ஹத்து' மாதியெல்லாம் எழுதாதிய ! பிளாக்கில் நிரப்பமா பாக்ஸ் நிறைகிற மாதிரி கருத்து எழுதுங்க s.ஹமீத் காக்கா !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு