Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சேது என்றொரு திட்டம் போட்ட மணல் திட்டம் ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | April 18, 2012 | , , , ,


மீசை அரும்பாத வயதில் ஆசை அரும்பியது. ஃபோட்டோ எடுப்பதில் அன்று  கோடாக் ஃபிலிமை (Kodak Film) கேமராவில் செறுகிக் கொண்டு (இப்போ ஃபிலிம் ரோலுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது) எங்கு போனாலும் கேமராவும் கையும்தான். (இப்போ மட்டும் என்ன வாழுதாம் என்று யாசிர் கத்துவது  பாம்பன் பாலத்தில் பட்டு எதிரொலிக்கின்றது) அப்போது ரோட்டில் போன ஒருவர் நாங்கள் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்த வித்தையைப் பார்த்து "இவனுவ எப்புடி எப்புடி எல்லாம் ஃபோட்டோ எடுக்குறானுவோ இன்னும் பறந்துக்கிட்டு மட்டும்தான் ஃபோட்டோ எடுக்கலே" என்று ஒரு கமெண்ட் அடித்தார். அவரின் அந்த அதிசய வார்த்தைகள் மனதுக்குள் விதையாய் இருந்தது அதுபோல் திருச்சியில் இருந்து கொழும்பு வழியாக விமானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள் தான் உங்கள் பார்வைக்கு விரித்து வைத்திருக்கிறேன். 


இந்த இடம் சேது-சமுத்திர திட்டம் "நடக்கப்போகும்" /  "நடைபெற்றுக்கொண்டிருக்கும்" / "நடைபெறும்" எக்காலத்திற்கும் பொருந்தும்  இடம்தான் இது. இத்திட்டத்தைப் பற்றி பேசாத ஆளே கிடையாது  அந்த அளவுக்கு இந்த திட்டம் நாறிப்போய்விட்டது கடலில் பிடிக்கும் மீன் தான் நாறிப்போகுதுன்னா நம் அரசியல்வாதிகளால் கடலில் திட்டமும் நாறித்தான் போகுதே!.

இந்த திட்டத்தைத் தீட்டியவர் இந்திய கடற்படையைச் சார்ந்த ஏ.டி.டெய்லர் என்ற ஆங்கிலயேர் 1860 ம் வருஷம் இந்த திட்டத்தை வடித்தார்(!!?) இத்திட்டம் இதுநாள் வரை செயல் படுத்த முடியாமல் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறது (இதனை யாரவது கின்னஸ் சாதனையில்   சேர்த்துவிடுங்களேன்!)

இன்னும் நம் கொள்ளு பேரன்கள் காலத்திலும் இது பற்றிய விவாதமும் சர்ச்சையும் நடைபெரும் என்பதில் எவ்வித ஐயமும் யாருக்கும் வேண்டாம் காரணம் இந்த திட்டம் அடிமேல் அடி வைத்து கோர்ட் படி(க்கட்டுகள்) ஏறியிருக்கிறது.  


இந்த சேது-சமுத்திர திட்டம் பலவகையான ஊனமுற்ற அரசியல்வாதிகளுக்கு அரசியல் நடத்த ஊன்றுகோலாய் உதவி செய்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் தி.மு.க. வின் முக்கிய கூக்குரலான வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற கோஷத்துக்கு இது உதவியது. இதன் சகோதரிதான் சேலம் இரும்பாலைத்திட்டம். இந்த இரு திட்டங்களும் வரவேண்டுமென்று அண்ணா எழுச்சி நாள் கொண்டாடினார். அதன்படியே சேலம் இரும்பாலை ஒரு வழியாக வந்து விட்டது. ஆனால் இரும்பை உருக்க மின்சாரம்தான் இல்லை !

சேது-சமுத்திர திட்டமும் பல்வேறு அரசியல் பேரங்களுக்கிடையில் அன்றைய பிரதமர் வாஜ்பாய்தான் அடி(யில்)க்கல் நாட்டார் (அதாவது கடலுக்குள் கல்லை போட்டார்) அதன் பின்பு மன்மோகன் தொடங்கிவைத்தார். ஓடாத இரயிலுக்கு கொடி காட்டினார் அதிரையில் இரயில் நிலையத்தில் பதவி ஏற்ற நினைப்பில் !

இப்படி இந்தியாவின் இரு பெரும் தேசிய கட்சிகளின் பிரதமர்களின் ‘கை’பட்ட இத்திட்டம் (இப்படி இன்னும் எத்தனை பேர் நம்பிக்’கை’ பாடுபட போகுதோ தெரியலே) மத நம்பிக்கை என்ற பெயரில் சிலரின் தூண்டுதலால் இப்போது நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்துக் கிடக்கிறது (லேசுலே தீர்ப்பு வருமா அப்படியோ வந்தாலும் உருப்படியான தீர்ப்பா இருக்குமா? மூன்று பங்கிட்ட தீர்ப்பாக இருந்திட்டால்???) அதற்குள் தூர் வாறிய இடங்களில் எல்லாம் மறுபடியும் மண் விழுந்து விட்டது (திட்டத்தில் இன்னும் மண் விழவில்லை) என்று அறிக்கைகள் வருகிறது.  


இங்கே அரசியல் – ஓரு பாலம் இருந்ததாம் அது இடிக்கப்படுமாம் என்று, சொல்பவர்களின் புராணங்கள் போன்றே கற்பனையான இல்லாத ஒன்றை எப்படித்தான் இடிக்கப்படுமோ என்று தெரியவில்லை . அது ஒரு மணல் மேடாக கடலுக்குள் ஒரு திட்டாக தென்படுகிறது. கடத்திச் செல்லப்பட்ட புராண நாயகியை இவ்வழியேதான் இலங்கையில் இருந்து வால் கொண்ட ஒரு இனம் வைத்து பாலம் கட்டி மீட்டு வந்தார்களென்று புராண கதையாகத்தான் சொல்லப்படுகிறது. (அப்படின்னா கடத்தியவன் எந்த வழியாக கடத்திக்கிட்டு போனானாம், சரி இது எதற்கு நமக்கு இப்போ அவர்களின் விருப்பத்திற்கே ஏற்றார்போல் அமைத்துக் கொண்ட புராணம் அது). தாவித் தாவி பாய்பவரின் உதவியுடன் கட்டிய இந்த பாலம் இன்றளவும் இருந்தால் இலங்கை படை அதன் வழியாக வந்து நமது மீனவர்களை அடித்துப் போட்டுவிட்டு போய்விடுவானே.

ஒரு சிறு மண்மேட்டை வைத்து இன்று ஆன்மீக அரசியல் செய்வதனால் இந்த திட்டம் இன்னும் ஆழ்ந்த கிடப்பில் கிடக்கிறது. நல்ல வேலைங்க அந்தப்பக்கமே போன அவர் துபாய் ஜுமைரா பீச் பக்கமெல்லாம் வரவில்லை. அப்படி வந்திருந்தாக ‘அந்த-’புராணத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு வரியிட்டு இருந்திருந்திருந்தால் உலகப்புகழ்பெற்ற பாம்ஜுமைரா திட்டமெல்லாம் கூட நிறைவேற்ற எதிர்ப்பு அரசியல் இந்தியாவில் கிளப்பி இருப்பார்கள் இந்த ஆன்மீக அரசியல் பிற்போக்குவாதிகள்.

மண் அள்ளும் திட்டத்திலும் மண்ணை அள்ளிப் போடுகின்றார்களே இந்த ஆன்மீக அரசியல் வாதிகள் இவர்கள் அனைவரும் மண்ணறை (!??) பயமற்ற மண்சட்டிகள் தலையில் இருப்பதை எப்படி கடலுக்கு அடியில் தூர்வாற அனுமதிப்பார்கள் ? இந்த துரோகத்திற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

-Sஹமீத்

19 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சார் பறந்து பறந்து படம் புடிச்சிருக்கீங்க...

பள்ளம் தோண்டிட பாதகர்கள் பாலம் இருக்குன்னு சொல்லுறாய்ங்களே !

கூல் டவுன்(னு) அப்படின்னா கீழே இறங்கி வாங்கன்னு சொல்றேனாக்கும் !

இன்றை மின்னஞ்சலில் கவிக் காக்கா டிவிட்டியது...

//கவி ட்விட்டர்ஸ்:

மெத்தப் படிச்சிட்டா – பின்னூட்டமிடு
தமிழ் தெரியாதா ? – பதிவு எழுது


//

இதுக்கு போய் குதறல் கொடச்சல்ன்னு கொடி தூக்குனா... கொடி தூக்கிய கொமரன்னு கூப்பிடுவேன்...

Ahamed irshad said...

படம் பிடிக்கிறதுல பிஹெச்டியே வாங்கினமாதிரியான துல்லியமான ஃபோட்டோக்ராபி... அசத்தல் சாஹீல் காக்கா.... விளக்கங்களுடன் நம்ம ஊர் நக்கலுடன் அருமை.... மூனு பத்தியையும் தாண்டி ஈர்க்கிறது புகைப்படங்கள்... தொடர்ந்து கலக்குங்க....

sabeer.abushahruk said...

சூப்பர்ப் ஃபோட்டோகிராஃபி.

கலக்கிட்டீங்க ஹமீது.

KALAM SHAICK ABDUL KADER said...

படமும் பாடமும்
பாடலைப் போல் ஈர்த்தன;
பறந்து கொண்டே
படம் பிடித்தீராதலால்
வாழ்த்துகளை
என் வார்த்தைகள்
கோர்த்தன.

Unknown said...

"இவனுவ எப்புடி எப்புடி எல்லாம் ஃபோட்டோ எடுக்குறானுவோ இன்னும் பறந்துக்கிட்டு மட்டும்தான் ஃபோட்டோ எடுக்கலே" என்று ஒரு கமெண்ட் அடித்தார். அவரின் அந்த அதிசய வார்த்தைகள் மனதுக்குள் விதையாய் இருந்தது
-------------------------
So,what would be the next?..space!!!!!!!!!!


சேது-சமுத்திர திட்டமும் பல்வேறு அரசியல் பேரங்களுக்கிடையில் அன்றைய பிரதமர் வாஜ்பாய்தான் அடி(யில்)க்கல் நாட்டார் *(அதாவது கடலுக்குள் கல்லை போட்டார்*
------------------------------------
Original Brand Comedy.........Crystal photos

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பறந்தும் படம்
அவர்களின் நாடகம் அம்பலம்.

அழகு தமிழ், குளிரும் காட்சி!

அதிரை சித்திக் said...

சீதையை மீட்டிக் கொண்டு வந்தாச்சு.. பிறகு எதற்கு பாலம் ...

ரானுவ நடவடிகைக்கு பிறகு தற்காலிக பாலம் பெயர்த்து எடுப்பதுபோல்

மணல் திட்டை பெயர்த்து எரிய வேண்டியது தானே ...நம்பிக்கைக்கும் ஒரு அளவு வேண்டும்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கடல் சார்ந்த பாலத்தை அரசியல் வாதிகளினால் தகர்க்க முடியவில்லை என்றாலும்.ஹமீது காக்காவால் எங்கள் கண்களுக்கு அள்ளிதந்தமைக்கு வாழ்த்துக்கள்.

நல்ல வேலை நம்ம ஊரில் இந்த பாலம் இல்லை.அப்படி இருந்திருந்தால் கப்சா சட்டியும்,மந்தி சட்டியும்தான் பாலத்தை ஆக்கிரமித்திருக்கும்.

ZAEISA said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ.,S ஹமீது.நீங்க அழகா படம்பிடித்து சேது திட்டம் தொடங்கிய முதல்
இன்று வரையிலான நிலையை நம்மூர் பாணியில சொன்னதும் அருமை.
சேது சமுத்திர திட்டம் இரவு,பகல் பாராது பணி நடந்து வெகு விரைவாக
நிறைவேறி இருக்கும்.இதுவரை நிறைவேறாது இருக்கக் காரணம் நாம்தான்.
ஏனென்றால்,மேற்படியானுவளுக்கு முன்பே,எதாச்சும் முஸ்லிம் பெரியவர்
இந்தவழியாகத்தான் போனார்கள் ஆகவே, அதை இடிக்கக்கூடாது என்று நாம்
கொடிபிடித்திருந்தால் அரசியல் வேறுபாடின்று நிறைவேற்றி இருப்பார்கள்தானே.............?


"இவனுவ எப்புடி எப்புடி எல்லாம் ஃபோட்டோ எடுக்குறானுவோ இன்னும் பறந்துக்கிட்டு மட்டும்தான் ஃபோட்டோ எடுக்கலே" என்று ஒரு கமெண்ட் அடித்தார். அவரின் அந்த அதிசய வார்த்தைகள் மனதுக்குள் விதையாய் இருந்தது// இப்படி உங்களை கேட்டவருக்கும் நன்றி.
நான்; எப்புடி,எப்புடியெல்லாம் பறந்து பறந்து ஃபோட்டோ எடுக்கிரானுவோ..
இன்னும் கடலுக்குள்ளே போய்தான் ஃபோட்டோ எடுக்கல.

அப்துல்மாலிக் said...

காக்கா முதலில் அந்த ஃபோட்டோவுக்கு நிறைய பாராட்டு, ஃபிளைட்லேர்ந்து படம் எடுத்து இவ்வளவு தெளிவா வந்தது பெரிய விசயம் அதுக்கு மெனக்கெட்ட்துக்கும் சேர்த்து

ராமர் கோயிலே ஒரு புராணக் கதைதான், அதை தெளிவுப்படுத்த எந்த விதமான ஆதாரமும் இல்லை அதை போராட்டம் செய்து மறைக்கிறாய்ங்க, அரசியல் வியாதிகள் நினைத்தால் எதை வேணாலும் அரசியல் பண்ணலாம்....

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

படமிட்டு காட்டியமைக்கு நன்றி சகோ ஹமீது

பண்டைய தமிழர்கள் என அனைவரின் ஒட்டுமொத்த விருப்பமே 150 அண்டுகால கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டம் துவக்கப்பட்டபோது அகமகிழ்ந்த தமிழ் சமுதாயம் இன்றைய அரசியலார்களின் அரசியலாகிவிட்டதை எண்ணி மனமுடைந்த நிலையில் உள்ளனர்.

எத்தனை ஆய்வுகள்

1860 ல் கமாண்டர் டெய்லர்
1861 ல் டவுன் சென்ட்ஸ்
1862 ல் பாராளுமன்ற குழு
1863 ல் சென்னை கவர்னர் சர் வில்லியம் டென்னிசன்
1871 ல் ஸ்டாட்டர்ஸ்
1872 ல் பொறியாளர் ராபர்ட்சன்
1884 ல் சர் ஜான் கோட்ஸ்
1903 ல் தென்னக ரயில்வே பொறியார்களின் ஆய்வு
1992 ல் சர் ராபர்ட் பிரிஸ்ட்டோ ( தெளிவானதும், விரிவானதுமான அறிக்கை)

பிற்காலங்களில் இத்திட்டத்திற்கு இன்னும் பல ஆய்வுகள் காத்துகிடக்கின்றது

சேது சமுத்திர திட்டத்தை முடக்க வேண்டும் என்ற மலிவான எண்ணத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் வழக்கறிஞர்களின் வாதத்தை மத அரசியலுக்காகவும், தேர்தலுக்காகவும் தங்களின் தேவைக்கேற்ப சில அரசியல்வாதிகள் பலவிதமான அறிக்கைகளை வெளியிட்டு மக்களை திசை திருப்ப முயன்று வருகின்றனர்.

சேது சமுத்திர திட்டத்தின் மணல் அள்ளும் பணிகளுக்காக மட்டும் இதுவரைக்கும் 699 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்தை கொட்டி செலவழித்த இந்த திட்டத்தை நிறைவேற்ற, அதிகாரிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ அல்லது மத்திய அரசோ என எந்த தரப்புக்குமே ஆர்வம் காட்டாமல் உள்ளது சரியா என்பதே முக்கிய கேள்வி.

Anonymous said...

நம்ம ஊரில் பாலம் இல்லாவிட்டாலும் கப்சா சட்டியும், மந்தி சட்டியும் போகத்தான் செய்கிறது. பாம்பன் பாலத்திற்கு போகாவிட்டாலும் ராஜாமடம் பாலத்திற்கு மந்தி சட்டியும், கப்சா சட்டியும் போகுது.

எவ்வளவு பறந்து பறந்து படம் பிடித்தாலும் சேது சமுத்திர திட்டம் தீர போவதில்லை. ஹமீது காக்கா அவர்கள் மிக அழகாக படத்தை பிடித்து கட்டியிருக்கிறார்கள் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

Noor Mohamed said...

சகோ. ஹமீது அவர்களின் இந்த படப்பிடிப்பால் எதிர்கால நம் ஏக்கங்களை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால், நம்மூர் வழியாக சேதுரோடு செல்வதால், நம் அதிரை மக்கள் எதிர்காலத்தில் ஏற்றுமதி வாணிகத்தில் ஏற்றம் பெற பல வாய்ப்புகள் உள்ளன.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சிந்திக்க வேண்டி அவர்கள் கூற்றுப்படியே ஒரு கேள்வி: சிறுவனாய் இருக்கும் பொழுது அவர்கள் ஒளிபரப்பிய அந்த மெகா சீரியலில் பார்த்த ஒரு காட்சி இலங்கை மன்னன் ராவணன் இந்தியாவில் இருக்கும் ராமனின் மனைவி சீதையை தன் மாயாஜால, மந்திர‌ வார்த்தைகளிலும் அடிபணியச்செய்து தன் ஆகாய விமானம் போன்ற ஒரு வாகனத்தில் அமரச்செய்து இலங்கைக்கு வான்வழியில் கடத்திச்சென்று அங்கு சிறை வைத்து விடுகிறான். சீதையை அங்கிருந்து மீட்டு வர ராவணனை விட பலமும், சாதுர்யமும் நிறைந்ததாக அவர்களால் கருதப்படும் ராமன் மற்றும் அனுமனுக்கு இந்தியாவின் கடைக்கோடியிலிருந்து பாலம் அமைத்து இலங்கை சென்று வர வேண்டியதன் அவசியம் என்ன?

நாட்டின் வளர்ச்சிக்காவும், முன்னேற்றத்திற்காகவும் சாலைப்போக்குவரத்து மிகவும் இன்றியமையாதது. அப்படி நாட்டில் தேசிய‌ நெடுஞ்சாலைக‌ள் போட‌ திட்ட‌மிட்டு ப‌ணி தொட‌ங்கும் பொழுது வ‌ழியில் சில‌ பழைய‌ கோவில், ம‌சூதி, தேவால‌ய‌ங்க‌ள் காணப்படும் பொழுது அப்ப‌குதி ம‌க்க‌ளின் ஒப்புத‌ல்/ச‌ம்ம‌த‌த்துட‌ன் இடித்து வ‌ள‌ர்ச்சி திட்ட‌த்திற்கு எவ்வித‌ இடையூறும் இல்லாம‌ல் மத்திய,மாநில அர‌சுக‌ள் பார்த்துக்கொள்வ‌து போல் இதையும் ஏன் ம‌க்க‌ள் ஏக‌ ம‌ன‌தாக‌ ஏற்றுக்கொண்டு ந‌ம் நாட்டு அர‌சிற்கும், நாட்டின் வ‌ள‌ர்ச்சிக்கும் உத‌வ‌க்கூடாது?

உதார‌ண‌த்திற்கு இய‌ற்கை பேரிட‌ர்க‌ள் சுனாமி, க‌ட‌லில் பூக‌ம்ப‌ம் வ‌ந்து அந்த‌ இட‌மே சுவ‌டு தெரியாம‌ல் அழிக்க‌ப்ப‌ட்டு ம‌ண் திட்டுகளெல்லாம் ம‌றைந்து ஆழ‌மான‌ க‌ட‌ல்ப‌குதியாக அது மாறி விட்டால் அத‌ற்கு கார‌ண‌மான‌ இய‌ற்கை சீற்ற‌த்தின் மீது எந்த‌ நீதி ம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு தொடுத்து வாதாடுவீர்க‌ள்?

அலாவுதீன்.S. said...

அழகிய படங்கள்!

மணல் திட்டை
பாலம் என்பதெல்லாம்
அரசியலுக்காக
வந்தேறிகளின்
கட்டுக்கதைகள்!

Yasir said...

சேது பற்றி சிந்திக்கவேண்டிய பல விசயங்களை சாதுவாய் / கண்ணைக்கவரும் புகைப்படங்களுடன்...( எப்படி எடுத்தீங்க தனி விமான பிடித்தா ) விளக்கிய சாவன்னா காக்கா அவர்களுக்கு ஒரு ஜெ.ஜெ !!!

Yasir said...

// (இதனை யாரவது கின்னஸ் சாதனையில் சேர்த்துவிடுங்களேன்!)// உலக மாகா நக்கல்......நானும் வழிமொழிறேன்

அப்துல்மாலிக் said...

//எத்தனை ஆய்வுகள்

1860 ல் கமாண்டர் டெய்லர்
1861 ல் டவுன் சென்ட்ஸ்
1862 ல் பாராளுமன்ற குழு
1863 ல் சென்னை கவர்னர் சர் வில்லியம் டென்னிசன்
1871 ல் ஸ்டாட்டர்ஸ்
1872 ல் பொறியாளர் ராபர்ட்சன்
1884 ல் சர் ஜான் கோட்ஸ்
1903 ல் தென்னக ரயில்வே பொறியார்களின் ஆய்வு//

இந்த காலகட்டத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்றினார்களானால் பயன் கிட்டிருக்கும், இனிமேல் கொள்ளுப்பேரன் காலத்துலேயும் இப்படியே பேசிக்கிட்டிருப்பானுங..., இப்போ ஊட்டிக்கு ரயிலு விட்டது, இந்தியா முழுமைக்கும் ரயிலுவிட்டது, பாம்பன் பாலம் கட்டியது இப்படி எந்த திட்டமும் ஆங்கிலேயர் காலத்துலே நிறைவேற்ரி இருக்காட்டி இப்பவும் அதையெல்லாம் அனுபவிக்காக நாடாக இருந்திருக்கும்.........

Ebrahim Ansari said...

இன்டோ-லிங்க்காம் - வைஷ்ணவா நெட்வொர்க் என்ற பார்ப்பன நிறுவனம் ராமன் பாலம் இருப்பதாக நாசா சொன் னதாக ஒரு கதையைக் கட்டிவிட்டது.

இந்தக் கட்டுக் கதையைக் கேள் விப்பட்ட மாத்திரத்தில் சேது சமுத் திரத் திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி அமெரிக்காவில் உள்ள நாசா நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கேட்டார். நீங்கள் வெளி யிட்டுள்ள படத்தால் இங்குப் பிரச்னை எழுந்துள்ளது. ஆதாம் பாலம் செயற்கையாகக் கட்டப் பட்டதா? அல்லது இயற்கையாக அமைந்த மணல் மேடா? என்று கேட்டார். அன்று மாலையே நாசாவிடமிருந்து தகவல் வந்துவிட்டது. இந்தியா இலங்கைக்கிடையே உள்ள பாலம் இயற்கையான மணல் படிவுகளால் உருவான மணல் திட்டுதான் என்று முகத்தில் அறைந் தாற்போல் பதில் கூறிவிட்டதே!

இந்தத் தகவலை சேது சமுத் திரத்திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி செய்தியாளர்களிடம் தெரி வித்துவிட்டாரே. (தினமலர் 26-.7.-2007 பக்கம் 5)

அவாளின் தினமலரில் வெளிவந்த சேதிதான் இது!

உண்மை இவ்வாறு இருக்க சோ ராமசாமி துக்ளக்கிலும் திருவாளர் இல.கணேசன்வாள் சன் தொலைக் காட்சியிலும் புளுகுகிறார்களே! புளுகுதல் என்பது அவாளுக்கு புளியோதரையோ!

இராமநாதபுரத்திற்கும் இலங்கைக் கும் இடையே உள்ள மணல்திட்டு ராமன் கட்டிய பாலம் என்றால் ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே ஆயிரம் மைல் நீளத்திற்கு மேல் இருக்கும் மணல் திட்டை ராமன் தம்பி லட்சுமணன் கட்டினானோ!

இந்தக் கேள்விக்கு இந்த அறிவு ஜீவிகள் இது வரை பதில் சொல்லாதது ஏன்?

அண்டப் புளுகு பேசுவதில் அக்கிரகார ஆசாமிகளை அடித்துக் கொள்ள அன்டார்டிகாவில் தேடினா லும் கிடைக்கமாட்டார்கள்.

SORRY FOR COMING LATE.DUE TO HEALTH PROBLEM. ....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு