(அப்பா பகலுணவு சாப்பிட்டபின் பரிமாறியவற்றை அப்புறப்படுத்த பேரன் வருகிறார்)
பேரன்: அப்பா நல்லா சாப்பிடீங்களா.....? பொறிச்சமீனெல்லாம் அப்படீயே இரிக்கிது.........?
அப்பா: அல்ஹம்துலில்லாஹ்! நல்லா சாப்புட்டேன், பொறிச்சா மீனெல்லாம் அப்டீத்தான் இரிக்கும்... ஓடாது. நீங்க வெரசா அந்தவிசிறியை எடுத்து தாங்கம்மா. (பேரன் சிறிது நேரத்தில் விசிறியுடன் வர )
தொடர்ந்து...
அப்பா: என்னா நீங்க இந்நேரத்துல வூட்ல இரிக்கிரிய..
அப்பா: அப்பாமேலே உங்களுக்கு ரொம்ப வொஹ்ப்புதான் சரி வீசுங்க(மனதிற்குள் புள்ளக்கி லீவு அதுவுமா காசு மொடயாயிருக்கும்)... அன்னக்கி உங்கள வெரட்டிவுட்டது தலைல தொப்பி இல்லைண்டுதானாம் அந்த தம்பி சொன்னுச்சு.அது உங்க குத்தம்தானே...?
பேரன்: தொப்பி போடாட்டி தேவலாம்னு சொல்றாங்களே....
அப்பா: சும்மா பத்தியத்துக்கு கேட்டமாரி தேவலாம்னு சொல்லாதிய.. போட்டா எந்த கேடுமில்லையே... சங்கைதானே.... ஏன்னா.... நாம இந்த ஊர்ல பெரும்பாலாயிருந்தாலும், இந்த நாட்டுல சிறுபான்மையா இருக்கிறோம். மேலும், இந்த ஒலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு அடையாளமுண்டு. அது மாதிரி ஒலகத்துல நம்ம முஸ்லிம்களை எங்கேப்பாத்தாலும் பொதுவா தலைய மூடித்தான் பாக்கிறோம்.அப்புறம் தொழுகைக்கு முன் உங்களை சங்கையாக்கிக் கொள்ளுங்கன்னும் சொல்றாங்க..!
தொப்பி போடறதால சங்கை இரிக்கிதா..?இல்லையா..? ஒரு சபைக்கிப் போனாலும் நமக்கும் அழகு..சபைக்கும் அழகுதானே.... தொழுகையில் எல்லோரும் ஒரே மாதிரியா தலையை மூடி இருக்கும்போது ஒரு அந்துசு இரிக்கிதா..? இல்லையா..? நா ஒன்னும் தொப்பிக் கடைக்கு வக்காலத்தா பெசுறேண்டு நினைக்காதியோ... ஒருத்தன உன்னுடைய மதம் என்னாண்டு கேட்டா ஒடனே சொல்லிடுவான். நா இன்ன மதம்னு. ஆனா இந்த யஹூதி மட்டும் நாம எல்லாம் மனுசர்கள்தாநென்று மழுப்புவான். அவன் ஒரு நாசுவக்கிண்ணி மாதிரி தொப்பி போட்டிருப்பான்.
அதைப்பார்த்து நாம அடையாளம் கண்டுக்கலாம்.எதுக்கு நா சொல்றேண்டா அவனவனுக்கு ஒரு அடையாளம் இருக்கும்போது, உண்மையான ஒசத்தியும், கண்ணியமான நம்ம இஸ்லாத்தில் இருக்கும் நாம் ஒரு முஸ்லிம் என்று தெரியப்படுத்துவது தவறல்லவே....? தொப்பி கட்டாயமல்லதான் ஒத்துக்கிறேன். ஆனா நம்ம ஒடம்புக்கு பிரதானமா உள்ள தலைய மூடுவதில் நிறைய சௌகரியம் ஈக்கிரதொட, தீமையில்லதானே.... ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு தலையை மூடி நிக்கிம்போது ஒரே சீராக கண்ணியமாக தெரியலையா..?
பேரன்: என்ன அப்பா சங்கையா உடுப்பு உடுத்துரதும் அப்படித்தானே...
அப்பா: ஆமா ! இப்ப நாம உடுத்துற வேட்டி ராஹத்தானதா, இல்ல பேன்ட் ராஹத்தா..?
பேரன்: வேட்டிதானப்பா ராஹத்தானது.
அப்பா: ஆங்.. அப்புடி ராஹத்தான வேட்டி உடுத்துரவ.... ஏறப்புலான்ல பயணம் போம்போது எப்போதும் உடுத்துரமாதிரி வேட்டியை உடுத்திக்கிட்டு ப்ளேன்ல ஏறுனா இறக்கியா உட்டுருவாணுவ... இல்லையே..... பின்னே எதுக்கு பினாயில் விக்கிரவனாட்டம் பேன்ட் போடணும் .ஏனுண்டு கேட்டா அது போகிற எடத்துக்கும் போரவளுக்கும் அந்துசுன்டுதானே...?அதுபோலத்தான் சங்கையான எடத்துல நாமும் சங்கையா நடந்துக்கிடணும்.
பேரன்: நீங்க இப்படி சொல்ரியலே.... அரபு தேசங்களான, எகிப்து, சிரியா, லெபனான், ஈராக், இன்னும் பல முஸ்லிம்களெல்லாம் தொப்பியில்லாமதானே தொழுவுறாங்க......?
அப்பா: ஆமா, அதான் ரொம்ப நிம்மதியா இறிக்கிறாங்க...இப்போ நீங்க ஒரு இந்திய முஸ்லிம்னு அவங்கள்ட சொல்லிப் பாருங்க ஒரு ஏளனமா பாப்பாங்க. நாம ஒரு முஸ்லிம்னு சொல்லிப்புட்டு என் வாப்பா,உம்மா கூட முஸ்லீம்னு சொன்னியண்டா அப்டீயே வாயப்பொலந்துடுவாங்க காரணம் அங்கே அவளவு லேடுபாடு.... அட இங்கேதா பாருங்க.... தொப்பி ஒரு கட்டாயமில்லை என்று என்னக்கி நமக்கு தெரிய வந்துச்சோ ஒரு பெருநாளைக்கு பதிலா ரெண்டு, மூணு பெருநாள் வருது. நமக்கென்று 10, 12 எம்.எல்.ஏ வரை இருந்தது ஒன்னுமில்லாம போச்சு... சரியா... !!
அப்புறம் இன்னொன்னு சொல்றேன், மொதல்ல, நம்மூர் பக்கம் டீ.வி சனியன் ஒவ்வொரு வூட்லேயும் தல காட்ட ஆரம்பிக்கும்போது, ஆலிம்சாமார்கள் டீ.வி இருக்கிற வூடா போய் இந்த முசீபத்த வூட்ல வைக்காதியனு கால்லவுழுவாத கொறையா கெஞ்சினாங்களே அப்ப.... டீ.வி பாக்ககூடாதுனு நபி சொன்னாங்களா என்று திருப்பிக்கேட்டாங்க நம்ம ஜனங்கள். இப்ப பாருங்கள் வூட்டுலேந்து பள்ளியாசளுக்கு போறது என்னமோ 4 வது, 5 வது வார்டு பக்கம் போற மாதிரில இருக்குது.
நடு கூடத்துல இருந்து குரான் ஓதிக்கிட்டு இருந்த வூட்டுல நாடகத்துல சாமிக்கி பூஜை நடக்கிற மணி சத்தம் கேக்குது.இன்னொரு வூட்டுல அடுப்படிக்கிபோன ராத்தாவை ,ஆதி வந்துட்டான் வெரசா வந்துபாரு என்று தங்கச்சிக்காரி கூப்புடுறா.இதெல்லாம்தேவையா..? இப்ப இருந்துக்கிட்டு டீ.வி பாத்து பொம்புள எல்லாம் வீனாப்போச்சுண்டு அடிச்சிக்கிரியலே... புரியுதா அன்னக்கி ஆலிம்சா எவ்வளவு தொல நோக்கோட கெஞ்சினது.
அதனால நம்ம ரசூலுல்லாஹ் அவர்கள் பேணிய எதிலும் இம்மியளவு பிசகு இருக்காது. தெரிஞ்சிக்கோங்கோ. நன்மையே.. மொத்தத்துல சொல்றாயிருந்தா.... ஒருத்தன் ஒரு காரியத்துல இறங்கும் போது இது நம் நபி வழிக்கு பொருந்துமா என்று நெனச்சு இறங்கினான் என்றால் அவனுக்கு எந்த சேதாரமும் இல்லை. நஷ்டவாளி என்று ஒருவனை பார்க்க நேர்ந்தால் ஏதோ ஒருவழியில்நபிவழி பேனாதவனாக இருப்பான். [அஷர் பாங்கு ஒலிக்கிறது]
பேரன்: அப்பா... பாங்கு சொல்லுறாக...... நா போவட்டா.... போவட்டா... போவட்டாப்பா..
அப்பா: கேக்குறது வெளங்குது.... இந்தாங்க பணம். தொழுவிட்டு போய் கபாப் வங்கி தின்னுங்க. [அப்பா அஷர் தொழுகைக்கு தயார் ஆகிறார்கள்]
மேலும்...
அப்பா: சரி, பாங்கு சொல்லிட்டாக ஒரு ஆபத்திலிருந்து தொப்பியைக் கொண்டு அல்லாஹ் காப்பாத்துனுத இன்னொரு நாளைக்கி சொல்றேன்.
-ZAEISA
31 Responses So Far:
//ஒரு பெருநாளைக்கு பதிலா ரெண்டு, மூணு பெருநாள் வருது. நமக்கென்று 10, 12 எம்.எல்.ஏ வரை இருந்தது ஒன்னுமில்லாம போச்சு... சரியா... !!//
சரியான தொப்பியடி
முன்னோர்கள் முட்டாள்கள் அல்லர் என்பதை அழுத்தம் திருத்தமாக அப்பா சொன்னாலும், பேரன்களை "மூளைச் சலவை" செய்ய முல்லாக்கள் பெயரில் கல்லாக் கட்டும் ஆட்கள் இயக்கங்களாய்ப் பிரிந்து, சமுதாயத்தைக் கீறிப் போட்டு நாறிப் போய் நாதியற்றவர்களாய் நாத்தியவாதிகளின் பின்னே அணி வகுக்கும் பிணியினை உருவாக்கிக் கொண்டு தானே இருக்கின்றார்கள். வெயிலின் தாக்கத்திலிருந்துத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தொப்பி அணீயும் மாற்று மத ஆண்கள்; துப்பட்டாவைத் தலைக்கு மேல் போட்டுக் கொள்ளும் மாற்று மதப் பெண்கள் ஆகியோரின் படங்களை செய்திதாள்களில் காணும் பொழுது என் மனம் கூறும், " நம் முன்னோர்கள் ஒவ்வொன்றையும் எவ்வளவு முன்னெச்சரிக்கையாக நமது இஸ்லாமிய மார்க்கத்தில் நடை, உடை பாவ்னைகளில் ஓர் அழகிய முன்மாதிரியினை நடைமுறைப் படுத்தி நமக்கு வழிகாட்டி விட்டுச் சென்றிருக்கின்றார்கள்!" என்று வியப்புடன் எண்ணுவேன். இக்கட்டுரையில் அப்பாவின் அறிவுரைகள் வழியே "முன்னோர்கள் முட்டாள்கள் அல்லர்" என்பதை நிரூபிக்க முயல்வதும் கண்கூடு.
தொப்பி வாங்கிக்கிட்டு வந்துறேன் .....
அப்பா!
மெய்யாலுமே எங்க அப்பாவை(யெல்லாம்) ஞாபகப்படுத்திட்டீய !
இதனை சலுகை என்பதா ? அல்லது சல்லை என்பதா ? என்று குழம்ப வைத்திருக்கும் இயக்க பிரிவினைகளால்...
கலாச்சார அணிகலனை மார்க்கமாகவும் பார்க்கக் கூடாது...
ஊருக்குச் சென்றால் தலையில் தொப்பி இல்லாமல் நடத்தால் தலை காலியாக இருப்பது போன்ற ஃபீலிங் உண்டாக்கியது என்னவோ பாரம்பரிய, பெரியவர்களின் அதட்டலான தொனியுடன் கூடிய கண்கானிப்பே !
அப்பா ஏதோ சொல்ல வருகிறமாதிரி தெரியும் அது என்னான்னுதான் பார்ப்போமே...
அப்பா சொல்லுற தொப்பியின் மகத்துவம் மிகச்சரி.அது இன்று படிப்படியாக எடுபட்டு போவது வேதனையின் சாதனை என்றே சொல்ல வேண்டும்.அந்த தொப்பியைக் கொண்டு கிடைத்த பலனையும் சீக்கனம் சொல்ல வாங்க!
"அப்பா...அப்பாஆஆஅ....அப்பாஆஆஆஆ...(வரவர அப்பாக்கு காது வேற சரியா கேக்கமாட்டிக்கிது)"
"யா(ன்) பேராண்டி இப்பிடி சங்கு ஊதுறிய? காத அடைக்கிது. மொல்ல பேசுங்க?"
"(முனகலாக... இந்த எகத்தாளத்துக்கு மட்டும் குறைச்சலில்ல). அப்பா வேட்டி ராஹத்துத்தான்ப்பா. ஆனா, அத டிஸைன் செஞ்சதில ஒரு பெரிய டிஃபெக்ட் இருக்குதுப்பா"
"என் பேராண்டி விஞ்ஞானியா வருவான்டு அப்பவே சொன்னேன். போக்காளிதான் டாக்ட்டரா வருவான்டா. என்ன குத்தம் கண்டிய பேராண்டி?"
"ச்சும்மா வெடைக்காதிய அப்பா. வேட்டில ஒரு பாக்கெட் கூட இல்ல. ஒரு ஜிப்போ பட்டனோ இல்லாததால ஆத்திர அவசரத்துக்கு மித்தமா வழிக்க வேன்டி ஈக்கிது. வேட்டி ஃபெயிலியர் மாடல்ப்பா. இதப்பாருங்க... பெர்முடாஸ். மொத்தம் 6 பாக்கெட். ஒரு ஜிப்பு. நாலு பட்டன்..."
"இவ்ளோவ் பாக்கெட்டா? ஊசிமணி ஊக்கு விக்கிறனுவ மாதிரில ஈக்கிது. யான் வேட்டில எக்கல்ல சின்ன சாமான வைக்கலாமே. ரொம்ப சாமான்டா கச்சல் கட்டி வைக்கலாமே. ஆமா உடுப்பு உடுத்தவா லக்கேஜ் வைக்கவா?"
சபீர்; அப்பா வேட்டியிலே பாக்கெட்டல்லாம் இல்லையப்பா...?அதெல்லாம்
பாக்கெட்டெல்லாம் இல்லாமே ரொம்ப இம்முசா இரிக்கிதே...பேன்ட்.
பெர்முடாஸ் போட்டுக்கிட்டாதான் என்னா............?
அப்பா;ஆடைக்கும்,கோடைக்கும் வேட்டிதாம்மா நல்லது.அப்படி பாக்கெட்
வேணும்னா அதான் உங்க உசுரு கூட்டாளிட்டே சொல்லி ஒரு
பச்சபெல்ட் தருவிச்சு கட்டிக்கிட்டாப் போச்சு.உங்க இஷ்டப்படி
பெருமுடாஸ்...அது இதுன்னு ஊருல போட்டிய அப்புறம்.........வேலி
அடைக்க கூப்பிடப் போராக......எனக்கித் தெரியாது...ஆமா.
// ரொம்ப சாமான்டா கச்சல் கட்டி வைக்கலாமே. ஆமா உடுப்பு உடுத்தவா லக்கேஜ் வைக்கவா?"//
ஆமா காககா, அப்பாவின் யோசனைதான் போலும். பசங்க மாரம் ஏறிட்டு கீழே இறங்கியதும் கச்சல் மட்டும் ஏன் நிரம்புது !?
// அதான் உங்க உசுரு கூட்டாளிட்டே சொல்லி ஒரு பச்சபெல்ட் தருவிச்சு கட்டிக்கிட்டாப் போச்சு.//
அப்பா சரியாச் சொல்லிட்டீங்க, அடிக்கடி பரிசு தர பச்சை பெல்ட்டும் கோடாலி சாப்பும், பச்சை தயிலமும் அறிவுப்பு வருது ஒன்னும் வந்த பாடில்லை கவி(ப்) பேராண்டி உடுத்தினாத்தான் அந்த பரிசெல்லாம் வரும் போல...
அப்பாவுக்கு ஞாபகசக்தி அதிகம்லா(!!!)
உங்க இஷ்டப்படி
பெருமுடாஸ்...அது இதுன்னு ஊருல போட்டிய அப்புறம்.........வேலி
அடைக்க கூப்பிடப் போராக......எனக்கித் தெரியாத//
ஜாயிரு,
நீ பச்ச பெல்ட்டு அனுப்பாட்டிக்கூட பரவால்ல... ஆனா இந்த கம்பெனி ரொம்பதான் மெரட்டுது. வந்து "அப்பாலா இனி மச்சான் ஒராங்" அப்பிடி மலேசிய பாஷைல என்னானு விசாரி. அடங்க மாட்ட்றாரு அவ்வூட்டு அப்பா.
வேலி அடைக்கவாம்ல? பெர்முடாஸை இத விட கேவலமா யாரும் சொல்லியிருக்க மாட்டாக.
ச்சே இனி பெர்முடாஸ் போடும்போதெல்லாம் யாராவது வெலி அடைக்க க்கூப்பிட்டுடுவாங்களோன்னுல பயமா இருக்கும் :(
அதிரை நிருபரின் ஃப்ளாஸ் நியூஸ்:
(சற்றுமுன் கிடைத்த செல்ஃபோன் தகவலின்படி) யாசிர், பெர்முடாஸ் அணிந்துகொண்டு பிள்ளைகளோடு அல்க்கான் பீச்சுக்கு நீந்த சென்றுள்ளார். அவர் ரசிகர்கள் அங்கு சென்றால் அவரை அடிக்கலாம்...சாரி...பிடிக்கலாம்.
(யூகமான செய்தியின் அடிப்படையில்) ஹமீது,வேட்டி கலஞ்சதுகூட தெரியாமல் இன்னும் தூங்கிக்கொண்டு இருக்கிறார்.
(அசரீரித் தகவல்படி) ஜாகிர், சீரியஸாக படி கட்டிக்கொண்டிருக்கிறான். நாமல்லாம் நல்லாருக்க அவன் மண்டை காய படிக்கட்டுவதாகத் தகவல்.
(துபாய் ரூல்ஸ்படி) அபு இபுறாகீம், கைல கால்ல மூக்குல முதுகுல என்று எங்கும் வைஃபை இணைப்புகளோடு பல்லுகூட வெலக்காம பதிவுகளப் பார்வையிட்டுக்கொண்டிருக்கார்.
(அனுமானத்தின் அடிப்படையில்)இ.அன்சாரி காக்கா, தேங்காப்பால் கஞ்சியும் தொட்டுக்கரியும் சமைத்துக்....சாரி...சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
(நேரலையின்படி)நான், ஆங்காங்கே தென்படும் வெள்ளையர்களை வெளியேற்றி மீசைக் கத்தரித்து ஷேவிங் செய்ய ஆயத்தமாகிறேன். அப்புறம் ட்டீ போட்டுவச்சிக்கிட்டு மனைவியை எழுப்புவேன் என்றெல்லாம் கிராஃபிக்ஸ் செய்துவிடாதீர்கள்.
ZAIESA: சற்றுமுன் கிடைத்த தகவலின்படி, பேராண்டி அபு ஈஸாவுக்கு தொப்பி வாங்க புறப்பட்டுப் போனார்.
//அதிரை நிருபரின் ஃப்ளாஸ் நியூஸ்://
கவிக் காக்கா, பார்த்து நியூஸ் வாசிங்க... எங்கே சொந்தக்காரங்க கிட்டேயிருந்து செய்தி எடுத்து வாசித்ததா ஃபோன் வந்திடப்போவுது !!
சின்ன திருத்தம் "கால்"போடாமல் இருந்திருந்தால் !
அஸ்ஸலாமு அலைக்கும். தம்பி சபீர்.
சீக்கிரமே எழுந்துவிட்டீர்களா? நானும்தான் ஆனால்
//(அனுமானத்தின் அடிப்படையில்)இ.அன்சாரி காக்கா, தேங்காப்பால் கஞ்சியும் தொட்டுக்கரியும் சமைத்துக்....சாரி...சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.//
ஆனால் உங்கள் அனுமானம் அனுமானமே. FASTING- BLOOD SUGAR TEST- AL NAHDHA NMC HOSPITAL . போய்விட்டு மீண்டும் இரண்டு மணிநேரம் கழித்து இரண்டு குழாய் இரத்தம் கொடுத்துவிட்டு இப்போதுதான் வந்தேன். யாசீர் கடலில் குளிப்பதை அறிந்த நீங்கள் இந்த காக்காவிடம் எப்படி தொடர்பில் இருக்கிறீர்கள் என்று நீங்களே பாருங்கள்.
ஆமா. தேங்காய்ப்பால் கஞ்சி, தொட்டுக்கறி ரெம்ப நாளாச்சு. ஆர்டர் செய்ய வேண்டியதுதான்.
ஊருக்குப்போகிறவர்கள் அனைவருக்கும் அதிரை நிருபர் சார்பாக இலவச தொப்பி வழங்கும் திட்டத்தை அறிவியுங்களேன். நிகழ்ச்சியை மம்ஜார் பார்க்கில் வைத்துகொள்ளலாம். என் தலைக்கு டபுள் எக்செல் சைஸ் வைத்துக்கொள்ளுங்கள்.
வஸ்ஸலாம்.
“அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.) (அல்குர்ஆன்: 5:104)
********************************************************************
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தொப்பி அணிந்த போது பிரச்சனையில்லை.
தொப்பி அணியாத போது பிரச்சனை ஆரம்பித்து விட்டது என்ற கருத்தை வரவேற்க முடியவில்லை.
மார்க்கத்தில் இல்லாத காரியங்கள் அனைத்தையும் எல்லோரும் ஒற்றுமையாக செய்தபொழுது எந்தப்பிளவுகளும் ஏற்படவில்லை.
தூய மார்க்கத்தை அறிந்து பின்பற்ற ஆரம்பித்த பொழுதுதான் பிளவுகள் வந்ததது.
அல்லாஹ்வும், நபி(ஸல்) அவர்களும் காட்டித்தராத வழிகளை பின்பற்றக்கூடாது என்ற ஏகத்துவ பிரச்சாரம் எடுத்துச்சொன்ன பொழுதுதான் பிளவுகளும் பிரச்சனைகளும் ஆரம்பித்தது.
தூய மார்க்கத்தை கடைபிடிக்க தடைகள் வந்தால் தடைகளை பொருட்படுத்த வேண்டியதில்லை.
பிளவுகள் ஏற்படுகிறது, பிரச்சனைகள் வருகிறது என்று மார்க்கத்தை அறிந்தவர்கள் பின்வாங்கினால் வல்ல அல்லாஹ்விடம் குற்றவாளியாக நிற்க நேரிடும்.
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்...
நான் தொப்பின் அவசியத்தை குர் ஆன் சுன்னாவின் அடிப்படியில் தெளிவுபடுத்தவே கேட்டேனே தவிர கதை கேட்கவில்லை!
* இஸ்லாத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை. சுன்னத், பர்ள் போன்ற எந்த ஒன்றும் பின்பற்றப்படாத பொழுதும் எத்திவைப்பது மட்டுமே நம் மீது கடமையே தவிர அதை தினிப்பது என்பது இஸ்லாதில் இல்லாத ஒன்று. அல்லாஹ்விடத்திலே கூலி தருகிற ஒன்றையே எவர்மீதும் தினிக்கக்கூடாது என்கிறபோது கலாச்சாரத்திற்கு மார்க்கச் சாயம் பூசுவது அல்லாஹ்விடத்திலே பெரும் கோபத்திற்குறிய செயலாகும்.
* மார்க்கம் இல்லை ஆனால் உலகில் நலம் தரும் என்றால் அதையும் எத்திவைக்க மட்டுமே வேண்டும்.
* தலைக் கவசம் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பதுகாப்பானது என்பதற்காக வாகனம் ஓட்டாத நேரத்தில் அணிவது கேலிக்கூத்து.
* குளிர் சட்டையும் தான் குளிரிலிருந்து மனிதைக் காக்கிறது அதற்காகா குளிர் சட்டையை நமதூரில் சாதாரனமாக அணியும் பழக்கமில்லை என்பதற்காக முன்னோர்களை முட்டாளாக்கிவிட முடியுமா?
அப்பா இப்போ குர் ஆன் ஹாதீஸ் எல்லாம் தமிழிலே மொழிபயர்த்து விக்கிறாங்க அத வான்ங்கிப் படிங்க. மார்க்க விசயத்து சுய விளக்கம் கதையெல்லாம் சொல்லக்கூடாதுண்டு உங்க அப்பா உங்களுக்கு சொல்லித்தரலையா?
//ஒரு பெருநாளைக்கு பதிலா ரெண்டு, மூணு பெருநாள் வருது//
ஒரு பெருநாளை ஒரே குடும்பத்திலுள்ள மூன்று பேர்கள் மூன்று நாட்கள் தனித்தனியாக பெருநாள் கொண்டாட குர் ஆன் சுன்னாவின் அடிப்படியில் ஆதாரமுண்டா?
இதில் வேடிக்கையும் வேதனையும் என்னவெனில், மூன்று பேர்களும் தத்தம் தலைவர்கள் கூறிய விளக்கங்களை, குர் ஆன் ஹதீஸ் தமிழ் மொழி பெயர்ப்பை, அவரவர்களுக்கு தகுந்தாற்போல் விவரிக்கின்றனர். இதில் எந்த இயக்கம் கூறும் குர் ஆன் சுன்னாவின் அடிப்படை சரியானது?
இப்படி அவரவர்கள் குர் ஆன் சுன்னா முத்திரையை கையில் எடுத்துக் கொண்டு மக்களை குழப்பிக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் கால குழப்பவாதிகள்.
அப்பா பேரன் நல்ல உரையாடல் ...
தொப்பி அணியாதது நேற்று குற்றம் ,இன்று நடைமுறை ,நாளைய வழக்கம்
அஸ்ஸலாமு அலைக்கும்,
அப்பா; ஜனாப்.AbuEasa அவர்களே தங்களுக்கு உங்க அப்பா சொல்லித் தந்ததுப்போல் எனது ரெண்டு அப்பாவும் சொல்லித்தரவில்லை.காரணம்
இந்தப்பாவி காணக்கொடுத்து வைக்கவில்லை.இந்தவகையில் நீங்க கொடுத்து வைத்தவர்கள் என்று நினைக்கிறேன்.மேலும்,நீங்க குர் ஆன்,
மற்றும் ஹதீஸ் யாவும் ரொம்பவும் படித்து அறிந்து வைத்திருக்கீர்கள்.
அல்ஹம்துல்லில்லாஹ்..நான்தான் படிக்கவில்லைஎன்று நினைக்கிறேன்.
மேலும்,தொப்பிபோட்டாதான் முஸ்லிம் என்று சொல்லவில்லை.அறியவும்.
தமிழில் மொழிபெயர்த்து குர் ஆன், ஹதீஸ் வந்திருப்பதாகவும்,வாங்கி
படிக்கச் சொல்லியுளீர்கள். படிக்கிறேன் யார் மொழிபெயர்த்ததை வாங்கினால்
தேவலாம்...............?
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்..
காக்கா தாங்களின் கருத்து ஏதோ நான் அதிகம் படித்தவனென்றும், நீங்கள் அதியாதவர் போலும் நான் சொன்னதைப்போல் சித்தரிக்கிறது! நான் அப்படிச் சொல்லவில்லை. பிறரை குறைத்து மதிப்பதை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
ஒரு கருத்தைப் பதியும்போது அதனால் சமுதாயத்தில் என்ன நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ற அறிவுரையை குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமில்லாமல் சொன்னால் இம்மை மறுமை வெற்றிக்கு அது உகந்ததாய் அமையும்.
தொப்பியால் இன்று சமுதாயத்தில் எத்தனை உரிமை மீரல்கள், எத்தனை அவமானங்கள். இஸ்லாமிய வாழ்க்கை இல்லாதா, வழுக்க சிரைத்தவனுக்கு கிடைக்கும் ஒரு மரியாதை இஸ்லாமிய வாழ்க்கை வாழக்கூடிய, தாடி வைத்து தொப்பி இல்லாத ஒருவனுக்கு கிடைப்பதில்லை.
தொப்பி போடாமல் ஒருவன் தொழுகை நடத்தினால் பின்பற்றி தொழ மக்களுக்குத் தயக்கம்!?
தொப்பி அணியாதவன் ஏதோ தொழுநோயாலி போல் பார்க்கப்படும் அவலம்.
மக்களுக்கு மார்க அறிவின்மையின் காரனமாக, எது மார்க்கம் என்பதைத் தீர்மானிப்பதில் ஏகப்பட்ட குழப்பம்.
இந்த நிலையில் பேரனைத் தொப்பி இல்லை யென்று விரட்டிய அன்சாரிக்கு புத்தி சொல்லாமல் பேரனைத் தொப்பி போடச்சொன்ன அப்பா!?
ஒரு செயலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டும் என்று மார்க்கத்தின் அடிப்படையில் சொல்ல வேண்டுமென்றால் அதற்கு குர்ஆன் சுன்னாவுடைய வழிகாட்டுதல் வேண்டும். இஷ்டத்திற்கு மனம் விரும்பியதை யெல்லாம் மார்க்கமாக்க இஸ்லாம் ஒன்றும் நாம் உருவாக்கிய மார்ர்கம் அல்ல.
//யார் மொழிபெயர்த்ததை வாங்கினால்
தேவலாம்//
யார் மொழிபெயத்ததாயினும் சரி. எதையும் தாய்மொழியில் படிக்கும் போது நாம் புரிந்துகொள்வது எளிதாய் அமையும். குறிப்பிட்ட ஒருவருடைய மொழிபெயர்ப்பை படிக்கும்படி பரிந்திரைக்க நான் ஒன்றும் பலருடைய மொழிபெயர்ப்பையும் ஒத்துப் பார்த்தவனல்ல.
மஅஸ்ஸலாம்
அபு ஈசா
//மூட மூதாதையர்களை//
அர அல,
நம் மூதாதையர்களை மூடர்கள் என்பது அதிகப்பிரசங்கித்தனம்.
எனக்கு கலிமாச்சொல்லி, இஸ்லாத்தை எத்திவைத்து, நல்லொழுக்கங்களைச் சொல்லித்தந்த மூதாதையர் மூடர்களா?
யோசித்துப்பாருங்கள். உங்கள் அப்பா மூடராயிருந்து சிலை வணங்கப் போயிருந்தால் நீங்கள் முஸ்லிமாகவாப்பிறந்திருப்பீர்கள்?
அலாவுதீன் / அபு ஈஸா. / அல அல.
அப்பாவின் "யாருடைய வழிகாட்டலைப் பின்பற்ற? யாருடைய மொழி பெயர்ப்பு சரி?" எனும் ஸைசாவின்/நூர் காக்காவின் கேள்விக்கு நேரிடையாகப் பதில் சொல்வதைத் தடுப்பது எது?
sabeer.abushahruk சொன்னது…
அலாவுதீன் / அபு ஈஸா. / அல அல.
அப்பாவின் "யாருடைய வழிகாட்டலைப் பின்பற்ற? யாருடைய மொழி பெயர்ப்பு சரி?" எனும் ஸைசாவின்/நூர் காக்காவின் கேள்விக்கு நேரிடையாகப் பதில் சொல்வதைத் தடுப்பது எது?
முன்னோர்களை நாம் திட்ட வேண்டியதில்லை. அவர்கள் செய்தது அவர்களுக்கு, நாம் செய்தது நமக்கு. யாரைப்பற்றியும் யாரிடமும் கேள்வி கிடையாது.
நேரிடையாகப் பதில் சொல்வதை எதுவும் தடுக்கவில்லை புரிதலில் உள்ள கோளாறுதான் காரணம்.
சகோதரியே! நான்காம் அத்தியாயத்தில் முன்னோர்களின் வழிமுறையைப்பற்றி எழுத இருக்கிறேன். இதைப்பற்றியும் தெளிவாக்கப்படும் இன்ஷா அல்லாஹ்! காத்திருக்கவும்.
//மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?//
சபீர் காக்கா,இந்த குரான் வசனத்தில் உங்கள் கேள்விக்கும்,சம்பந்தமில்லாமல் முடிச்சு போடுவதற்கும் பதில் இருக்கிறது.
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்...
//அலாவுதீன் / அபு ஈஸா. / அல அல.
அப்பாவின் "யாருடைய வழிகாட்டலைப் பின்பற்ற? யாருடைய மொழி பெயர்ப்பு சரி?" எனும் ஸைசாவின்/நூர் காக்காவின் கேள்விக்கு நேரிடையாகப் பதில் சொல்வதைத் தடுப்பது எது?//
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்..
தாங்கள் அனைவரும் இவர்கள் இன்னாருடைய மொழிபெயர்ப்பை படியுங்கள் என்பார்கள் என்று எதிர்பார்த்து ஏமார்ந்ததைப் போல் தெரிகிறது.
தமிழாக்கம் இருக்கிறது படியுங்கள் என்றால் யாருடைய தமிழாக்கம் என்று கேட்பது குதற்க வாதத்திற்கு தூண்டில் போடும் யுக்தி.
கிடைக்கும் தமிழாக்கத்தை வாங்கிப் படிக்க வேண்டியது தான். இது போன்ற கேள்வி முஃப்தி உமர் ஷரிஃப் அவர்களிடம் கேட்கப்பட்ட போது எதன் மீது அதிகமான சர்சை இல்லையோ அதை வாங்கிப் படியுங்கள் என்றார். தாங்கள் விரும்பினால் இவ்வழிமுறையை தெரிவு செய்யலாம்.
//ஒரு பெருநாளை ஒரே குடும்பத்திலுள்ள மூன்று பேர்கள் மூன்று நாட்கள் தனித்தனியாக பெருநாள் கொண்டாட குர் ஆன் சுன்னாவின் அடிப்படியில் ஆதாரமுண்டா?
இதில் வேடிக்கையும் வேதனையும் என்னவெனில், மூன்று பேர்களும் தத்தம் தலைவர்கள் கூறிய விளக்கங்களை, குர் ஆன் ஹதீஸ் தமிழ் மொழி பெயர்ப்பை, அவரவர்களுக்கு தகுந்தாற்போல் விவரிக்கின்றனர். இதில் எந்த இயக்கம் கூறும் குர் ஆன் சுன்னாவின் அடிப்படை சரியானது?
இப்படி அவரவர்கள் குர்ஆன் சுன்னா முத்திரையை கையில் எடுத்துக் கொண்டு மக்களை குழப்பிக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் கால குழப்பவாதிகள்.//
குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்ட ஒருவருடைய ஆய்வின் முடிவு தவராய் இருப்பினும் அதற்கு ஒரு நன்மையுண்டு என்பதாக அல்லாஹ்வின் தூதர் கூறியுள்ளார்கள். மனோ இச்சைகளை மார்க்கமாக்குபவரே கடும் தண்டனையைச் சுவைக்க நேரிடும்.
மூன்று பெருநாட்கள் வந்தாலும் அனைவரும் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலேயே முடிவு செய்து அவர்களுடைய ஆய்வின் முடிவு தாவராய் இருப்பினும் அதற்கும் ஒரு நன்மை உண்டு என்பதை அறிக.
மாறக முன்னோர்கள் செய்தார்கள், நாங்கள் சார்ந்திருக்கிற இயக்கத் தலவர்கள் செய்ததையே நாங்களும் செய்வோம் என்பவர்களின் முடிவு சரியாக இருந்தாலும் அவர்களுடைய செயல் குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றியதாக அமையாது.
செயல்களுக்கான கூலி எண்ணத்தின் அடிப்படையிலேயே அமையும் (சஹீஹ் புகாரி - 0001)
நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்த்தவன்
மஅஸ்ஸலாம்
அபு ஈசா
தொப்பிபோட்டு தொழுதாலும்,போடாமல் தொழுதாலும் நம்மை அதற்க்காக குற்றம் பிடிக்கமாட்டான்.....ஆனால் அந்த தொப்பிக்காக சமுதாயத்தை பிளவுபடுத்தி வைத்திருக்கும் கூட்டத்தாரரை அல்லாஹ் நரகத்திற்க்கு கொள்ளிக்கட்டையாக பயன்படுத்துவான்...இரு சாராரும் தொப்பிக்காக நேரத்தை ஒதுக்கி சண்டை போட்டு,வீண் விவாதம் செய்து குழப்பம் ஏற்படுத்துவது தவிர்க்கபட வேண்டும்....
//மூன்று பெருநாட்கள் வந்தாலும் அனைவரும் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலேயே முடிவு செய்து அவர்களுடைய ஆய்வின் முடிவு தாவராய் இருப்பினும் அதற்கும் ஒரு நன்மை உண்டு என்பதை அறிக//
இப்படியாக குர்ஆன் சுன்னா என்று சொல்லிக் கொண்டு, உங்கள் ஆய்வையும் உங்கள் இயக்கத் தலைவர்கள் கருத்துக்கேற்ப மாற்றிக் கொண்டு வரும் காலங்களில் மூன்று நாட்களுக்கு பதிலாக துல்ஹஜ் மாதம் 30 நாட்களிலும் பெருநாள் கொண்டாடுவதற்கு குர்ஆன் ஹதீஸ் தர்ஜுமா வைத்து ஆதாரம் கூறுவீர்கள்?! ஏன் குர்ஆன் ஹதீஸை ஆய்வு செய்து ஒற்றுமையுடன் ஒருநாளில் ஒரு வீட்டிலுள்ளவர்கள் பெருநாள் கொண்டாட இஸ்லாம் ஒற்றுமையை வலியுறுத்த வில்லையா? இவர்கள்தான் மூளை சலவை செய்யப் பட்ட நாளைய மூதாதையர்கள் என்பதை அறிக.
//செயல்களுக்கான கூலி எண்ணத்தின் அடிப்படையிலேயே அமையும் (சஹீஹ் புகாரி - 0001 //
குழப்பவாதிகளுக்கும் கூலி உண்டு தானே.
தொப்பிபோடுவதை / போடததை விடுங்கள்.....விருப்பட்டவர்கள் செய்யலாம் .....பேண்ட் மாட்டிக்கிட்டு திரியிரிங்களே...அது யாருடைய வழிமுறை.......யூதர்கள்தான் பேண்டை முதன் முதலில் போண்டானுங்க....இன்னைக்கு அது இல்லாமே நீங்க வெளியே செல்ல முடிகிறதா ??
//தொப்பிபோடுவதை / போடததை விடுங்கள்.....விருப்பட்டவர்கள் செய்யலாம் .....பேண்ட் மாட்டிக்கிட்டு திரியிரிங்களே...அது யாருடைய வழிமுறை.......யூதர்கள்தான் பேண்டை முதன் முதலில் போண்டானுங்க....இன்னைக்கு அது இல்லாமே நீங்க வெளியே செல்ல முடிகிறதா ??//
தம்பி யாசிர், குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரிட்ட கொடியை கையில் பிடித்துக் கொண்டு, யூதர்களுக்கு ஆதரவாகத்தானே குழப்ப வாதிகள் கல்லாக் கட்டுவதற்கு கோஷம் போடுகிறார்கள்.
சிலவற்றை விளங்கி கொண்டுதான் பதிலளிக்கவேண்டும்.....தெரியவில்லையென்றால் விளக்கம் கேட்க வேண்டும்
ஒரு ஊரில் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு தொழுகை நடத்தப்பட்டது...இமாம் ஒரு பெரிய சூராவை ஓதினார்...வந்தவர்கள் கால்கடுக்க நின்று கொண்டு தொழுகை முடிந்ததும் இமாமிடம் இப்ப என்ன சூரா ஓதீனிர்கள் என்று கேட்க: சூரத்துல் பகரா “ மாட்டைப்பற்றிய சூரா.... அடுத்த தொழுகையில் என்ன சூரா ஒதுவீர்கள் என்று கேட்க” சூரா அஃபாபில்” யானைகளைப்பற்றிய சூரா...அடுத்த தொழுகையில் ஒரு ஆளையும் காணவில்லை...வியந்த இமாம் அவர்களின் வீடுகளுக்கு சென்று ஏன் தொழுக வரவில்லை என்று கேட்க அவர்கள் மாடு சிறியது அதற்கே இவ்வளவு நேரம் ஓதினீர்கள்.....யானை மிகப்பெரியது அதற்க்கு எவ்வளவு நேரம் ஓதுவீங்கண்டு நாங்கள் வரவில்லை என்றனர்.....இங்கு எங்கே தப்பு நடந்திருக்கு விளக்கமும்,விளங்கி கொள்ளளும் நடபெறவில்லை
அல்லாஹ் மூதாதையர்கள் என்று கூறி இருப்பது...நம் வாப்பா - வாப்பாட வாப்பாவை அவருடைய வாப்பாவை அல்ல......இஸ்லாம் தோன்றுவதற்க்குமுன் பல உருவங்களை வணங்கி கொண்டிருந்தவர்களை பற்றி..... அவர்கள் செயல்கள் இஸ்லாத்திற்க்கு விரோதமாக இருந்ததால் அப்படி சொல்லி இருக்கின்றான்.......இவ்வசனம் இப்படிதான் புரியப்பட்டிருக்கவேண்டும்...அல்லாஹ் நன்கறிந்தவன்
ஆங்கிலேயன் வகுத்துத் தந்த கல்வியையும், ஆங்கில மொழியையும் கற்பதற்கு, ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு சீட் வாங்குவதற்காக அலைகின்றார்களே, இதை சரி காண எந்த தர்ஜுமாவை புரட்ட வேண்டும்? அமரிக்காவில் ஸ்கூலில் படிக்கும் நம் பிள்ளைகள் குர்ஆன் சுன்னா அடிப்படையிலா கல்வி கற்கின்றார்கள்?
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்...
நூர் முகம்மது காக்கா! உள்ளத்தை அறிந்தவன் அல்லாஹ்! செயல்களுக்கான கூலி கொடுப்பவனும் அவனே! நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மையாயின் அதை அல்லாஹ் பார்த்துக்கொள்வான்.
ஒரு விசயத்தில் மார்கத்தின் நிலையைச் சொல்லும் போது சம்பந்த மில்லாத வேறு விசயத்தைக் கொன்டுவந்து வீன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நலம்.
உங்களுடைய பதில் பலி சுமத்துவதாய் அமைந்த்திருக்கிறது!? அல்லாஹ் போதுமானவன்
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து அதன்படி வாழ்ந்து மரனிக்க அல்லாஹ் அருள்புரிவானாக! அவன் பொருந்திக்கொன்ட நன் மக்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக!
மஅஸ்ஸலாம்
அபு ஈசா
அன்பு சகோதரர்களே..
பதிவுக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்கள் இங்கு பதியப்படுவதால், வீண் விதண்டாவாதம் செய்து நேரத்தை வீணடிப்பதைவிட்டு தவிர்த்துக்கொள்ளும் நல்ல எண்ணத்தில் மேலும் கருத்துக்கள் இங்கு பதிவு செய்யும் சேவையை இந்த பதிவிற்கு மட்டும் நிறுத்தி வைக்கிறோம்.
அல்லாஹ் நம் எல்லோரையும் நேர்வழி படுத்துவானாக..
Post a Comment