Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சகோதரியே! - 4 31

அதிரைநிருபர் பதிப்பகம் | April 17, 2012 | , ,

 அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).

நம் முன்னோர்கள் மார்க்கத்திற்கு முரணாக நமக்கு காட்டித் தந்த வழி முறைகளை அவசியம் பின்பற்ற வேண்டுமா??? என்று சென்ற அத்தியாயத்தில் கேட்ட கேள்வி உணர்ச்சிப் பூர்வமானதாக இருந்ததால் கருத்துக்களும் பதில்களும் உணர்ச்சிப் பூர்வமாகவே தாங்களால் பதிவு செய்யப்பட்டிருந்தது.

நான் கேள்வி கேட்டது முன்னோர்களை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. அவர்கள் நமக்கு கலிமா சொல்ல வைத்து, ஓதிக் கொடுத்து தொழுகையையும் கற்றுக் கொடுத்தார்கள் உண்மைதான். அதே நேரத்தில் முன்னோர்களில் ஒரு பகுதியினர் தொழாத, ஓதாத வழி வழி முஸ்லிம்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. முன்னோர்களில்  அதிகம் பேர் சேர்ந்து வாழ்ந்த ஊர்களில் மார்க்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிற மத மக்களோடு சேர்ந்து வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் அதிகமாக மார்க்கம் பிரதிபலிக்கவில்லை. (இன்றும் இதே நிலைமையை சில இடங்களில் பார்க்க முடிகிறது).

நாமும் பல காரியங்களை மார்க்கம் என்று செய்து வந்திருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. மார்க்கம் காட்டித் தரவில்லை என்று விளங்கிய பிறகு நாம் அதிலிருந்து அல்லாஹ்வின் அருளால் விலகி (முழுவதுமாக விலக வில்லை) விட்டோம் அல்ஹம்துலில்லாஹ்!. நம் சகோதர, சகோதரிகளும் அவ்வாறு உண்மை மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் என் அனுபவத்தையும், நான் புரிந்து கொண்டதையும் இந்த  அத்தியாயத்தில் விளக்குகிறேன்.

இதுவும் இஸ்லாம்தான்:
தர்கா வழிபாடு, சுன்னத் கல்யாணம், வரதட்சணை, மௌலூது, இறந்தவர்களுக்கான பாத்திஹா, வயதுக்கு வந்த சடங்குகள், தாயத்து, போன்றவைகள் அனைத்தும் மார்க்கம் காட்டித்தரவில்லை. முன்னோர்களிடம் இந்த பழக்கங்கள் இருந்தது என்பதும் உண்மை. இவையெல்லாம் மார்க்கம் என்ற பெயரால் இவர்களுக்குக் கற்றுக் கொடுத்தது யார்???

முன்னோர்கள்:
நமது முன்னோர்கள் இஸ்லாத்தைத் தழுவி தங்களுக்குத் தெரிந்த அளவு நம் வரை அவர்கள் புரிந்து பின்பற்றிய இஸ்லாத்தை தந்திருக்கிறார்கள் என்பது உண்மை. மார்க்கத்தில் இல்லாத ஒன்றை முன்னோர்களுக்கு யார் கற்றுக் கொடுத்தார்களோ? அவர்கள்தான் இறைவனிடம் குற்றவாளியாக நிற்க நேரிடும். படிப்பறிவு குறைந்த சமுதாயமாகவும்; குர்ஆன், ஹதீஸ் மொழிபெயர்ப்புகள் இல்லாத காரணத்தாலும் எந்த வகையிலும் (அவர்கள் புரிந்து பின்பற்றிய இஸ்லாத்தில் மார்க்கம் காட்டித்தராத காரியங்கள் இருந்தாலும்)  அவர்களை நாம் குற்றம் சுமத்த வழியில்லை. வல்ல அல்லாஹ் முன்னோர்களின் பாவங்கள்   அனைத்தையும் மன்னித்து அவர்களுக்கு  நல்லருள் புரியட்டும்.

தாங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் முன்னோர்களை (இறந்தவர்களை குறை சொல்வதை மார்க்கம் தடுத்துள்ளது) குறை சொல்லாதீர்கள். வல்ல அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.

தொழுகை, ஓதுதல்:
ஒரு முஸ்லிம் ஓதி விட்டால், தொழுது விட்டால் மற்றும் முஸ்லிமாகி விட முடியுமா? காலையில் தொழுது விட்டு அல்ஹம்து சூராவில்:  இறைவனிடம் உதவி தேடி விட்டு அதே கையோடு பள்ளியை ஒட்டியிருக்கும் தர்காவிலும் கையேந்தி துஆ கேட்கிறார்கள்.(இது நான் நேரில் கண்ட காட்சி) இது தவறு என்று தொழ வைத்த இமாமால் தடுக்க முடியவில்லை.

தர்கா வழிபாடு:
தர்கா வழிபாடு வல்ல அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் காரியம், நிரந்தர நரகம் என்பதை  இங்கு செல்லும் மக்களுக்கு புரிய வைக்க வேண்டாமா? முன்பை விட பிறமத திருவிழாக்களுக்கு இணையாக விதவிதமான கொண்டாட்டங்களுடனும் ஷைத்தானின் துணையுடனும் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. எல்லா தர்கா நிர்வாகிகளும்  சேர்ந்து தர்காவிற்கு என்று கமிட்டியும் அமைத்துள்ளார்கள். தர்காவில் கையேந்தி துஆ கேட்க வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தியது யார்???

இஸ்லாத்தில் நுழைந்த ஷைத்தான்கள்:
சூஃபியிஸம், தரீக்கா, முரீது, பைஜி, சர்க்கார், கல்வத்.(எனக்குத் தெரிந்து இவைகள்) இதெல்லாம் இந்த சங்கராச்சாரியார்களின் கொள்கை பெயர்கள் (குருவின் பெயராகவும் இருக்கிறது). இவர்களுடைய அடிமைகள் இன்றளவும் யு.ஏ.இயிலும், ஊரிலும் இருக்கிறார்கள் (எல்லா நாடுகளிலும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்). இந்த வழிகெட்ட கொள்கைள் அனைத்திலும் நல்ல வேலையில் இருப்பவர்களும், பணக்காரர்களும் அதிகமாக இருப்பதை காண முடிகிறது. 

அபுதாபியில் ஒரு வியாழன் மாலை நண்பரைச் சந்திக்க சென்றிருந்தேன். அவர் அந்த ஃபளாட்டின் ஹாலுக்கு அழைத்துச் சென்று இங்கு பாருங்கள் கூத்தை என்றார். ஹால் முழுவதும் விரிப்பு விரித்து நிறைய தட்டுக்களில் பழங்கள், இனிப்பு வகைகள் எல்லாம் இருந்தது. ஊதுபத்தியும் கொளுத்தி வைத்து இருந்தார்கள். என்ன விருந்தா? என்றேன்.

இல்லை இன்று வெள்ளி இரவு, நான்கு சதுர வடிவில் நின்று கொண்டு கையைக் கோர்த்துக் கொண்டு ஹா. . . ஹூ... என்று கத்திக் கொண்டு இருப்பார்கள். இந்த காரியத்திற்கு தரீக்கா (இருட்டு திக்ர்) என்று சொல்வார்கள், என்று சொன்னார். இதை யாரிடம்? இருந்து கற்றார்கள்? இந்த முஸ்லிம்கள்?.

இன்னொரு முஸ்லிம் சகோதரர்:
அவர் சொல்வதை கேட்போம். நான் துபாயில் இருந்தபொழுது பைஜி (முழுபெயர் மறந்து விட்டது) மார்க்க மேதை வந்திருக்கிறார் என்றார்கள். நான் இஸ்லாத்தைப் பற்றி அறியும் மாணவனாக இருந்து கொண்டு இருந்தேன். அவர் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அஸர் நேரம் வந்தது, நான் அந்த இடத்தில் ஒழுச் செய்து தொழுது விட்டேன். உடனே என்னை அழைத்துச் சென்றவரும் கூடி இருந்தவர்களும் எப்படி நீ தொழலாம் பைஜி தொழுத பிறகுதான் நாம் தொழ வேண்டும் என்றார்கள். பிறகு அந்த பைஜி ஒழுச் செய்தார் அந்த தண்ணீரை அடித்து பிடித்துக் கொண்டு அங்கு இருந்தவர்கள் வாங்கிக் கொண்டார்கள். அப்போது என் மனதிற்கு நெருடலாக இருந்தது.

பிறகு பைஜியிடம் என்னை அழைத்துச் சென்றார்கள். அவர் என் கையைப் பிடித்தார் பிறகு அவர் கையால் என் நெஞ்சில் அழுத்தினார். எனக்கு மயக்கம் வந்து விட்டது. சிறிது நேரம் கழித்து எழுந்தவுடன். உனக்கு முரீது வழங்கி விட்டேன். இனிமேல் என்பெயரை உன்பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ள வேண்டும். அதாவது என்னை நீ திருமணம் செய்து கொண்டாய் என்றார். (மனதுக்குள் என்னாங்கடா? இந்த கிழவன் இப்படி சொல்கிறானே! என்று நினைத்தாராம்).

இது ஒரு போலிக் கூட்டம் என்பது மனதிற்குத் தோன்றியது. அல்லாஹ் காப்பாற்றினான். பிறகு நபிவழியை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த பைஜி கூட்டத்தின் பக்கம் நான் தலை வைத்தே படுக்கவில்லை அல்ஹம்துலில்லாஹ்!  என்றார்.

என் அலுவலகத்தில் சில வருடங்களுக்கு முன் ஒரு சகோதரர் இருந்தார். அவரும் பைஜியிடம் முரீது வாங்கியவர்தான். அவர் புரிந்து கொண்ட இஸ்லாத்தைப்  பாருங்கள்: அவர் இது என்ன என்றார் தண்ணீர் குடிக்கும் கிளாஸ் என்றேன். இது என்ன என்றார் மானிட்டர் என்றேன். இதற்கு முன்னால் என்ன பொருளாக இருந்தது, அதற்கு முன்னால்  அதன் மூலப்பொருள் என்ன  இப்படியே கடைசியில் அல்லாஹ்விடம் போய் சேரும் என்றார். என்ன சொல்ல வருகிறார் எல்லாப் பொருட்களிலும் அல்லாஹ்வை நான் பார்க்கிறேன். (மானிட்டரிலும், கிளாஸிலும், எந்தப் பொருளானாலும் அல்லாஹ்வை அதில் பார்ப்பாராம் : இவர் குருநாதர் பைஜி சொல்லிக் கொடுத்ததாம்) அவர் லாஜிக் எனக்கு மூளையை குழப்பியதுதான் மிச்சம். (இவர் கூறியது அத்வைதக் கொள்கை : இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பது).

அவருடைய பைஜி ஊரில் இருக்கிறார்.  அவரிடம் இருந்து அடிக்கடி கடிதம் வரும். அதில் வணங்கும் முறைகள், தஸ்பீஹ்கள் எல்லாம் எழுதி வரும் அதன்படி தஸ்பீஹ் செய்வார். பள்ளிக்கு வந்து தொழுதும் கொள்வார். அந்த பைஜியைப் பற்றி ஒரு புகழ்மாலை: நாங்கள் அறியாமல் இருந்தோம் ரோஜாவே! நீங்கள் எங்களுக்கு நேர்வழி காட்டி விளங்க வைத்த பைஜிஷாவே! இப்படி போகுது புகழ்மாலை. சில பேர் ஊருக்குச் சென்றால் முதலில் ஊரில் உள்ள பைஜி வீட்டுக்குச் சென்று அவரிடம் பொட்டியைப் பிரித்துக் காட்டி அவருக்குத் தேவையானதை கொடுத்து விட்டு பிறகுதான் தன் சொந்த ஊருக்குச் செல்வார்களாம். இப்படி ஒரு சிறு கூட்டம் இஸ்லாத்தில் இருக்கிறது.

இவரிடம் முரீது வாங்கி விட்டால் நாளை மறுமையில் முரீதுகள் அனைவரின் கையையும்  பிடித்துக் கொண்டுப் போய் சொர்க்கத்தில் விட்டு விடுவாராம். தற்பொழுது ஊரில் ஒரு பைஜி இறந்து விட்டார். அவர் பையன் அவருக்கு தர்கா கட்டி வசூல் வேட்டையை நடத்தி வருகிறார்.

இன்னொரு போலி குரு சர்க்கார்:
என் நண்பன் இந்த கூட்டத்தில் மாட்டிக் கொண்டு இன்று வரை வெளி வரவில்லை. இவரும் துபாயில் இருக்கும்பொழுது இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டு நடக்க வேண்டும் என்ற தேடலில் துபாய்க்கு வந்த இஸ்லாமிய பெயர் தாங்கி சர்க்கார் என்ற பைஜியிடம் முரீது வாங்கி அந்த கிழவனின் போட்டோவை வீட்டிலும் மாட்டி வைத்துள்ளார். போதவில்லை என்று குருவின் போட்டோவை எப்பொழுதும் தன் சட்டைப் பையில் வைத்திருப்பார். இவருடைய 4வயது பையனுக்கும் குருவின் புகழ்மாலையை சொல்லிக் கொடுத்து அவனும் சர்க்காரே சர்க்காரே  நாங்கள் ஈடேற்றம் பெற வந்தவரே! என்று பாடுகிறான். இன்னொரு நண்பனிடம் இவன் இஸ்லாத்தில் இல்லை சங்கராச்சாரியார் கூட்டத்தில் போய் மாட்டிக் கொண்டு, இஸ்லாம் என்று சொல்கிறான் என்றேன். நீ வேறே அவனிடம் பேசிப்பார் இந்த குருவை பின்பற்றி நடப்பதுதான் உண்மையான இஸ்லாம் என்று சொல்கிறான். தொடர்ந்து பேசினால் நம்மையும் இந்த கூட்டத்தில் சேர்த்து விடுவான் என்று சொன்னான். இன்று வரை வழி கெட்ட கொள்கையில் இருக்கின்றான். (வல்ல அல்லாஹ் அவனுக்கும், அவன் குடும்பத்திற்கும் நேர்வழி காட்டட்டும்).

குர்ஆன் மட்டும் போதும்:
குர்ஆன் மட்டும் போதும் என்று கூறும் ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்தக் கூட்டத்தோடு (அபுதாபியில்) நடந்த விவாதத்தைக் காண நேர்ந்தது. அவர்கள் குர்ஆன் மட்டும்தான் மார்க்கம் என்றும், எதிர் தரப்பு குர்ஆனும், நபிவழியும்தான் மார்க்கம் என்ற விவாதம்.

அவர்கள் சொன்னது அல்லாஹ் 3 வேளைதான் தொழச் சொல்லி குர்ஆனில் உத்தரவிட்டுள்ளார் என்று சொல்லியும் நபிவழி தேவையில்லை என்றும் வாதாடினார்கள்.

குர்ஆன் மூலம் வைத்தியம்:
சென்னையில்  நல்ல ஆயுர்வேத டாக்டர் இருக்கிறார், இவரிடம் அல்சருக்கு மாத்திரை கேட்டுப்பாருங்கள் என்று ஒரு சகோதரர் சொன்னார். சரி என்று போன் செய்து அல்சர் விபரத்தை சொல்லிக் கேட்டதற்கு எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டார். நீங்கள் 5ஆயிரம் ரூபாய் அனுப்புங்கள் என்றார். சரி அனுப்புகிறோம், மாத்திரையை எப்படி அனுப்புவீர்கள் கூரியரிலா, போஸ்டிலா என்று கேட்டேன். மாத்திரை எல்லாம் கிடையாது, இது குர்ஆன் வைத்தியம் என்றார் (குர்ஆன் நேர்வழி பெறத்தானே வந்தது). அப்படி என்றால் என்ன என்று கேட்டதற்கு நீங்கள் டிராப்ட் எடுத்து அந்த நம்பரை எங்களுக்குச் சொன்னவுடன் நாங்கள் குர்ஆன் மூலம் வைத்தியத்தை ஆரம்பித்து விடுவோம். எங்கள் கையில் டிராப்ட் கிடைக்கும் நேரத்தில் உங்கள் அல்சர் குணமாகிவிடும் என்றார்.(அடப் பாவிகளா? என்று சொல்லி விட்டு, இந்த போலிக் கூட்டத்திடம் இருந்து தப்பித்தேன்). இவர்கள் ஒரு பத்திரிக்கையும் நடத்தி வருகிறார்கள். இந்த பத்திரிக்கையில் நபி(ஸல்) அவர்கள் தேவையில்லை என்பது பற்றித்தான் அதிகம் எழுதுவார்கள்.

அறியாமைக்கால மக்கள்:
ஒரு காலத்தில் சினிமா நடிகர்கள், தர்கா, மற்ற அநாச்சாரங்களின் பின்னால் சென்று கொண்டு இருந்த இளைஞர்களும், கற்பனை கதைகளை மார்க்கம் என்று பின்பற்றி வந்த மக்களும் உண்மையான தலைவர் நபி(ஸல்)அவர்கள்தான் என்பதை புரிந்து குர்ஆனும் நபிவழியும்தான் மார்க்கம் என்று விளங்க ஆரம்பித்தார்கள்.

இதன்பிறகு இளைஞர்களால் (ஒரு காலத்தில் முதியவர்களுக்கு மட்டும்தான் தொழுகை என்றிருந்தது) பள்ளி நிரம்பியது. உண்மையான மார்க்கத்தை அறிந்து கொள்ள நிறைய இளைஞர்கள் தங்களின் நேரங்களை ஒதுக்கிக் கற்றுக்கொண்டார்கள். வல்ல அல்லாஹ் தன் கருணையால் ஏகத்துவம் (ஓரிறைக்கொள்கை) மட்டுமே மார்க்கம் என்பதை மக்களுக்கு விளங்க வைத்து அருள் புரிந்தான். அல்ஹம்துலில்லாஹ்!.

பிளவுகள்:
தமிழ்நாட்டில் இஸ்லாத்தின் பெயரால் சிறு, சிறு ஷைத்தானிய  கூட்டங்கள், பலவிதமான அமைப்புகள், மார்க்கப் பிரிவுகள், குர்ஆன் மொழி பெயர்ப்புகள் உள்ளது. யாரைப் பின்பற்றுவது? எந்த மொழி பெயர்ப்பை படிப்பது? இவர் சரியா? அவர் சரியா? இவர்கள் அவர்களையும், அவர்கள் இவர்களையும் குறை சொல்கிறார்கள். மக்களை ஏன் குழப்புகிறீர்கள் என்பது நீண்ட கால வாதமாக இருந்து வருகிறது.

ஏகத்துவம் மக்களுக்கு விளங்கிய பிறகு நிறைய பிளவுகள் வந்து விட்டது என்பது ஒரு சாரார் கருத்து.(மத்ஹபுகள் இருந்தபொழுது பிளவுகள் இல்லை என்பார்கள்) இன்று ஒரு சங்கத்தையோ, அமைப்பையோ தொடங்குகிறார்கள் என்றால் சிறிது காலம் கழித்து கருத்து வேறுபாட்டால் பிளவு ஏற்படுகிறது. பிளவு ஏற்படுவது இயல்பு. பிளவு இல்லாமல் ஆரம்பித்த நாள் முதல் அப்படியே இருக்கிறது என்று ஒரு சங்கத்தைக் கூட நாம் காட்ட முடியாது. இயல்பை இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஒற்றுமை:
ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் என்று சில வருடங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில் நம் சமுதாய அமைப்புகள் அனைத்தையும் அழைத்துப் பேசினார்கள். எல்லோரும் சொன்னது ஒற்றுமை வேண்டும்தான் என்று. ஆனால் எல்லா அமைப்பைகளையும் கலைத்து விட்டு ஒரு குடையின் கீழ் ஒரு தலைவரின் கீழ் வருவோம் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. எல்லோருக்கும் தன் தலைமை பொறுப்பை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

அல்குர்ஆன் :
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக! (அல்குர்ஆன் : 49:16)

அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.(அல்குர்ஆன் : 42:21)

நபிமொழி:
''உங்களை இரவும் பகலைப் போன்ற வெள்ளை வெளேர் என்கின்ற தெளிந்த நிலையில் விட்டுச் செல்கின்றேன். தெளிவான இம்மார்க்கத்திலிருந்து எனக்குப் பின்னர் அழிந்து நாசமாகுபவனைத் தவிர வேறு எவனும் வழி கெட மாட்டான்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (இப்னு மாஜா)

''நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது (இறைவனால்) நிராகரிக்கப்படும்'' என்று நபி (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

மரியாதைக்குரிய இமாம்களின் கருத்து:
இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறியுள்ளார்கள் : எவன் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உண்டாக்கிஅதை பித்அத்து ஹஸனா (அழகிய பித்அத்து) என்று  சொல்கிறானோ அவன் புதிதாக ஒரு மார்க்கத்தையே  உண்டாக்கி விட்டான்.

இமாம் அபூஹனிபா (ரஹ்) கூறியுள்ளார்கள்: நீங்கள் ஹதீஸ் ஆதாரங்களையும், நபிதோழர்களின் நடை முறைகளையும் பற்றிப் பிடிப்பவர்களாய் இருங்கள். மார்க்கத்தில் புதிதாக தோன்றியவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அனைத்தும் பித்அத்துக்களும் வழிகேடுகளேயாகும்.

இமாம் மாலிக் (ரஹ்) கூறியுள்ளார்கள்: மார்க்கத்தில் பித்அத்தை உண்டாக்கி அதற்கு பித்அத்து ஹஸனா என்று எவன் பெயர் சூட்டுகின்றானோ, அவன் நபி(ஸல்) அவர்கள் தனது ரிஸாலத்தில் (தூதுவப் பணியில்) மோசடி செய்து  விட்டார்கள் என்றே கருதுகிறான். ஏனென்றால், அல்லாஹ், “அல்யவ்ம அக்மல்து லக்கும் தீனுக்கும்……என்று சொல்லிவிட்டான். அன்று மார்க்கமாக இல்லாதது இன்றும் மார்க்கமாக இருக்க முடியாது.

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) கூறியுள்ளார்கள்:    எங்களிடம் சுன்னாவின் அடிப்படையாவது: நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் இருந்த வழியை உறுதியாகப் பற்றிப் பிடித்து, அவர்களைப் பின்பற்றி பித்அத்துக்களை விடுவதேயாகும். ஏனென்றால் பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளேயாகும். 

நூல்:அஸ்ஸுன்னத்து வல் பித்ஆ

குர்ஆனில் வல்ல அல்லாஹ் கூறியதும், நபிமொழியும், மரியாதைக்குரிய இமாம்களின் கருத்துக்களும் தெளிவாக இருக்கிறது. அவர்களும் நபிவழியைத்தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். மேலும் புதிது புதிதாக மார்க்கத்தில் எதையும் நுழைப்பதற்கு அனுமதி இல்லை என்பதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.

நாம் செய்ய வேண்டியது என்ன?
நம்மை ஷைத்தான் வழி கெடுக்க என்னேரமும் (அவனுடைய பட்டாளங்களுடன்) தயாராக இருக்கிறான். மார்க்கத்தில் ஏகப்பட்ட பிளவுகள் வந்து விட்டது. நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்லாத்தில் இல்லாத காரியங்களை இஸ்லாத்தில் கொண்டு வந்து சேர்த்ததில் யூதர்கள், ஷியாக்களின் பங்கு அதிகம் இருக்கிறது. (இஸ்லாத்தில் நுழைந்த அத்தனை வழிகேடுகளையும் வாய்ப்பு கிடைக்கும்பொழுது அலசுவோம். இன்ஷா அல்லாஹ்!).

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! நம் வாழ்நாளில் நமது நேரங்களும், செல்வங்களும் நல்வழியிலும், வீண் விரயமாகவும் செலவழிக்கப்படுகிறது. நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆயுள் எவ்வளவு காலம் என்று தெரியாது. குறுகிய கால வாழ்க்கை, எந்நேரமும் நமது உயிர்  பிரியக்கூடியதாய் இருக்கிறது. அதனால் அங்கு பிளவு, இங்கு பிளவு, ஒற்றுமையில்லை, அவர் சரியில்லை, இவர் சரியில்லை, என்று விவாதம் செய்து காலத்தை வீண் விரயம் செய்வதை விட குர்ஆனையும்,(எந்த மொழி பெயர்ப்பை தேர்ந்தெடுப்பது என்பது அவரவர் விருப்பம்) நபிவழியையும் நம் சக்திக்கு உட்பட்டு ஆய்வு செய்து, தெளிந்து, உண்மை என்னவென்பதை அறிந்து நாமும் பின்பற்றி நம் குடும்பத்தாருக்கும் எடுத்துச் சொல்லி நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நாம் புரிந்ததை எடுத்துச் சொல்லும் கடமையைச் செய்து, இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற்ற மக்களாக மாற முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ்! (என்னால் முடிந்தவரை சுருக்கியும் இந்த அத்தியாயம் நீண்டு....... விட்டது).

அனைத்தையும் அறிந்தவன் வல்ல அல்லாஹ்! அவனிடம் நேர்வழியை கேட்டும், நம் சமுதாய ஒற்றுமைக்காகவும் துஆச் செய்து கொண்டே இருப்போம்.

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் : 2:256)

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! (அல்குர்ஆன்: 3:103)

வாசகர்களுக்கு ஒரு கேள்வி: மார்க்கம் காட்டித்தரவில்லை என்று நன்கு தெரிந்த பின்னும், நம் இரத்த பந்த உறவுகள் கோபித்து! கொள்வார்களே என்று பெண் வீட்டில் கைக்கூலி பெற்று நடைபெறும் திருமணங்களில் கலந்து கொள்வது சரிதானா?


இன்ஷாஅல்லாஹ் வளரும் ...
-S.அலாவுதீன்

31 Responses So Far:

Shameed said...

//பள்ளியை ஒட்டியிருக்கும் தர்காவிலும் கையேந்தி துஆ கேட்கிறார்கள்.(இது நான் நேரில் கண்ட காட்சி) இது தவறு என்று தொழ வைத்த இமாமால் தடுக்க முடியவில்லை.//

அவர் எப்படி தடுப்பார் தொழுகை முடிந்ததும் முதல் ஆளாக இமாம் தானே தர்ஹாவில் நிர்ப்பார் வருமானத்தை எதிர்ப்பார்த்து !

Noor Mohamed said...

//தாங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் முன்னோர்களை (இறந்தவர்களை குறை சொல்வதை மார்க்கம் தடுத்துள்ளது) குறை சொல்லாதீர்கள். வல்ல அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.//

போற்றுதற்குரிய நல்ல கருத்து. இதை ஏற்றுக் கொண்டால், மூட முன்னோர்கள், முன்னோர்களின் முரண்பாடு என்ற பேச்சுக்கே இடமே இல்லை. அங்கே அவர் அப்படி செய்தார், இங்கே இவர் இப்படி செய்தார் என்பதெல்லாம் ஆங்காங்கே நடைபெறும் ஷைத்தானின் திருவிளையாடல்களே, அது தர்காவாதியாக இருந்தாலும், தவ்ஹீத்வாதியாக இருந்தாலும் ஷைத்தான் யாரையும் விட்டு வைக்கமாட்டான்.

//வாசகர்களுக்கு ஒரு கேள்வி: மார்க்கம் காட்டித்தரவில்லை என்று நன்கு தெரிந்த பின்னும், நம் இரத்த பந்த உறவுகள் கோபித்து! கொள்வார்களே என்று பெண் வீட்டில் கைக்கூலி பெற்று நடைபெறும் திருமணங்களில் கலந்து கொள்வது சரிதானா?//

இக்கேள்வியில் குறிப்பிட்டுள்ள கைக்கூலி என்பது எதைக் குறிக்கிறது? குறிப்பாக வீடு, நகை, பணம், சீர் வரிசைகள் மற்றும் etc.

அதிரை சித்திக் said...

இஸ்லாத்தின் கொள்கை ..

இறைவன் ஒருவனே ..முஹம்மதுநபி இறையின் தூதர் ....

இதை உலகத்தில் உள்ள அணைத்து மதத்தினரும் அறிந்துள்ளனர் அதில் உடன்பாடு உள்ளவர்கள் தன்னை அதன் கொள்கையின்பால் ஈடு படுத்திக்கொள்கிறார்கள் ..ஆனால் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இஸ்லாத்தின் அடிப்படை அறியாது ;;இருளில் மூழ்கியுள்ளனர் ..இதற்க்கு சரியான வழி ..10 வது படிக்கும் இளம் வயது மாணவர் களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்தல் அல்லது அவகளிடம் சென்றடைய ஏதாவது சிறப்பு அணுகுமுறை மூலம் நம் இஸ்லாத்தை காக்க வேண்டும் .இப்படிதான் தொழவேண்டும் அப்படிதான் தொழவேண்டும் என்ற சர்ச்சைகளை புறம் தள்ளி முதலில் தொழவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் பள்ளிவாசளுடன் என்றும் தொடர்பு உள்ளவனாக மாற்ற வேண்டும் இந்த விஷயம் வாழ்வில் வந்து விட்டால் .படி படியாக எல்லா விசயமும் நன்மையாக அமையும் என்பதே திண்ணம் ....

இந்த தருணத்தில் ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் ..தப்லீக் ஜமாத்தார்கள் இந்த அடிப்படையில் மட்டுமே உலகின் அணைத்து பகுதியிலும் ஈடுபட்டு வருகிறார்கள் பல இடங்களில் பல தர பட்ட மக்கள் இதில் வந்து செல்வதால் பல புகார்கள் வருகின்றன ...ஆனால் தப்லீகில் எந்த உள்கொள்கைகளும் இல்லை பள்ளியின்பால் அழைப்பது தொழுகை தினமும் அனுசரித்து தொழசெய்வது எனவே அன்புள்ளம் கொண்ட என் இனிய சகோதரர்களே உங்களின் இஸ்லாதி பற்றிய கவலை நிச்சயம் உங்களை நல்வழி படுத்துவதுடன் நம் அணைத்து இஸ்லாத்தின் சகோதர சகோதரிகளையும் நேர் வழிப் படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை .நீங்கள் எண்ணிய எண்ணத்திற்கு அல்லாஹ் எழுத எத்தனித்த அக்கணமே உங்களுக்கு நன்மையை உங்கள் ஏட்டில்பதிந்து இருப்பான் உங்களின் நர்ப்பிரசாரம் தொடரட்டும் ......

Canada. Maan. A. Shaikh said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சிந்திக்க வேண்டிய கட்டுரை

தொழ வைத்த இமாம்கு நாம் முறையான சம்பளம் கொடுக்க தவறிவிட்டோம் நம் முக்கியஸ்தர்கள் முயற்சித்து முறையான சம்பளம் கொடுத்தால் அவர்களும் தர்கா வழிபாட்டை எதிர்த்து பிரச்சாரம் சைவர்கள்

இப்னு அப்துல் ரஜாக் said...

சித்தித்து,செயல்பட வேண்டிய கட்டுரை.


மார்க்கம் காட்டித்தரவில்லை என்று நன்கு தெரிந்த பின்னும், நம் இரத்த பந்த உறவுகள் கோபித்து! கொள்வார்களே என்று பெண் வீட்டில் கைக்கூலி பெற்று நடைபெறும் திருமணங்களில் கலந்து கொள்வது சரிதானா?

சரியில்லை.

அதே சமயம் நூர் முஹம்மதாக்கா சொல்வதையும் கேளுங்கள்.அது பற்றியும் விளக்குங்கள்

இன்ஷா அல்லாஹ்,ஒருநாள் வரும்.அரசு அறிவிப்பு இப்படி:இன்று முதல் இந்தியாவில் உள்ள தர்ஹாக்கள் இடிக்கப்பட்டு,பள்ளிக்கூடம்,மருத்துவமனைகள் காட்டப்படும் என்று.

இப்னு அப்துல் ரஜாக் said...

சாரி,கட்டப்படும் என வாசிக்கவும்.

Anonymous said...

நாம் தர்காக்களுக்கு போகக்கூடாது என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் போறவங்க போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள் ஆலிம்கள் எவ்வளவு பயான் பண்ணுனாலும் நம்ம ஊர் பெண்கள் கேட்பதில்லை.

அதிரை சித்திக் said...

போலீஸ் அதிகாரிக்கு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் லஞ்சம் இல்லாமல் வாழ்க்கை ஓடாது அதே போல நம்ம so an so வஹையாராகள் பாத்தியா வகைகளை விட மாட்டார்கள் பள்ளி இமாம் என்கிற பதவி தேவையா ,,,

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆகவே... அமைதியா உட்கார்ந்து கவனமா வாசித்து கொண்டு இருக்கிறேன்...

ஆய்வுகளை நேசிக்க ஆரம்பித்தாவிட்டது இப்போவெல்லாம்.. கூடுதலாக, ஆதாரங்களை எப்படி தேடுகிறார்கள் என்றும் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்...

அது சரிங்க, அந்த கைக்கூலி : யாருக்குங்க ? (மணமகனுக்கா ? / அவனது பெற்றோருக்கா ? / பகட்டுக்கா ? / திருமணச் செலவுக்கா ?)

எனக்குத் தெரிந்து தேங்க வெட்டியவருக்கும், வாய்க்காலுக்கு தண்ணீர் பாய்ச்சியவருக்கும் கொடுப்பதுன்னுல நெனச்சு கிட்டு இருந்தேன்... (நம்மூரில)

அபூ இஸ்ரா said...

புதிதாக நமதூரில் “ஒரு” குறிப்பிட்ட தெருவைச் சார்ந்த “தர்ஹா” வில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் பகல் 2 மணியிலிருந்து 4 மணி வரை “பெண் இமாமை”க்கொண்டு “கூட்டுதுவா” நடைபெற்றுக்கொண்டிருகிறது. இதில் ஏரளாமான பெண்கள் பங்குபெருகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால்.....................

குடும்பத்தில் சிக்கல் உண்டானால் “இடியாப்பமும்”
திருமணம் சீக்கிரம் நடைபெற “மருதானியும்”
வெளிநாட்டு விசா விரைவில் கிடைக்க “முட்டையும்”
நோய் நொடிகள் நீங்க “வாழைப்பழம்மும்”
கணவன் நீண்ட நாள் வாழ “மல்லிகைப்பூ”வும்
பணம் வந்துசேர “பேரிட்சைப் பழமும்”
நகை நட்டுகள் கிடைக்க “திராட்சைப் பழமும்”

இப்படியாக அனைத்துப் பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் வாழும் சகோதரர்களே.........அங்கே என்ன செய்து கொண்டுருக்கிறிர்கள் ?

எழுந்துருங்கள்.......புறப்படுங்கள்........தயாராகுங்கள்......இதுபோன்ற மூட நம்பிக்கைகளைத் தடுப்பதற்கு.......

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அண்டத்தை படைத்து இடைவிடாது அணு அணுவாக எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற.வல்ல ரஹ்மானுக்கு.இடை தரகர்களை வைத்து கேட்டு பெறுகிறோம் என மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் மூடர்களை அலசிய விதம் அருமை.

மார்க்கத்தை சரியாக தெரிந்து கொள்ளாத இமாம்களையே காலம் முழுவதும் வஞ்சித்துக்கொண்டே இருக்கிறோமே தவிர. அவர்களை மார்க்கத்திற்கு புறம்பான காரியங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைக்கும் முட்டாள் முன்னாக்களை ஓரங்கட்ட தவறி விடுகிறோம்.

நம் அனைவருக்கும் அல்லாஹ் ஹிதாயத்தை தர அவனிடம் கெஞ்சி கொண்டே இருப்போம்.

Noor Mohamed said...

//தொழ வைத்த இமாம்கு நாம் முறையான சம்பளம் கொடுக்க தவறிவிட்டோம் நம் முக்கியஸ்தர்கள் முயற்சித்து முறையான சம்பளம் கொடுத்தால் அவர்களும் தர்கா வழிபாட்டை எதிர்த்து பிரச்சாரம் சைவர்கள்//

இது பற்றி யாரும் சிந்திப்பதே இல்லை. தொழுகை நடத்தும் இமாம்களுக்கு முறையாக நல்ல சம்பளம் கொடுத்து, சில கண்டிஷனும் கொடுத்து, மீறினால் வேலையை விட்டு நீக்குவோம் என்றால், நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையை இழக்க நேரிடும் என்ற பயத்தில் கண்டிப்பாக தவறு செய்யமாட்டார்கள்.

சாதரணமாக இப்போது கோவிலில் தமிழில் தேவாரம் திருவாசகம் திருவருட்பா ஓதும் ஒருவர் மாத சம்பளம் 40 ஆயிரம் ரூபாய் வரை பெறுகிறார். ஆனால் நம் பள்ளிகளில் தொழுகை நடத்தும் இமாம்கள் மாத சம்பளம் 4 ஆயிரம் ரூபாய் கூட பெறுவதில்லை என்பதுதான் வருந்தத்தக்க ஒன்றாகும். இது பற்றி எந்த இயக்கமும் யாரும் சிந்திப்பதே இல்லை.

Shameed said...

அபூ இஸ்ரா சொன்னது…
//குடும்பத்தில் சிக்கல் உண்டானால் “இடியாப்பமும்”
திருமணம் சீக்கிரம் நடைபெற “மருதானியும்”
வெளிநாட்டு விசா விரைவில் கிடைக்க “முட்டையும்”
நோய் நொடிகள் நீங்க “வாழைப்பழம்மும்”
கணவன் நீண்ட நாள் வாழ “மல்லிகைப்பூ”வும்
பணம் வந்துசேர “பேரிட்சைப் பழமும்”
நகை நட்டுகள் கிடைக்க “திராட்சைப் பழமும்”

இப்படியாக அனைத்துப் பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் வாழும் சகோதரர்களே.........அங்கே என்ன செய்து கொண்டுருக்கிறிர்கள் ?

எழுந்துருங்கள்.......புறப்படுங்கள்........தயாராகுங்கள்......இதுபோன்ற மூட நம்பிக்கைகளைத் தடுப்பதற்கு......//


இத்தனை விபரம் சொன்ன நீங்கள் அது எந்த தர்ஹா என்பதையும் பளிச்சென சொல்லி இருக்கலாம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//அங்கு பிளவு, இங்கு பிளவு, ஒற்றுமையில்லை, அவர் சரியில்லை, இவர் சரியில்லை, என்று விவாதம் செய்து காலத்தை வீண் விரயம் செய்வதை விட குர்ஆனையும்,(எந்த மொழி பெயர்ப்பை தேர்ந்தெடுப்பது என்பது அவரவர் விருப்பம்) நபிவழியையும் நம் சக்திக்கு உட்பட்டு ஆய்வு செய்து, தெளிந்து, உண்மை என்னவென்பதை அறிந்து நாமும் பின்பற்றி நம் குடும்பத்தாருக்கும் எடுத்துச் சொல்லி நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நாம் புரிந்ததை எடுத்துச் சொல்லும் கடமையைச் செய்து, இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற்ற மக்களாக மாற முயற்சிப்போம் //

இதுதான் இப்போதைக்கு தேவை.
----------

வினவலுக்கு வாசகராகிய எனது பதில்:
அந்தத் திருமணங்களில் கட்டாயம் கலந்துகொண்டு பின் அதன் தீமைகளை விளங்கும்படி எடுத்துச் சொல்வதே நாளைய நல் வழிக்கு தீர்வாக அமையும். புறக்கணிப்பு என்பது அவர்கள் வழி அவர்களுக்கு நம் வழி நமக்கு என்பதாகி தீர்வு கிடைக்காது.

அபூ இஸ்ரா said...

Shameed சொன்னது…

// இத்தனை விபரம் சொன்ன நீங்கள் அது எந்த தர்ஹா என்பதையும் பளிச்சென சொல்லி இருக்கலாம் //

பள்ளியை ஒட்டியிருக்கும் “தர்ஹா”

அப்துல்மாலிக் said...

//நபிவழியையும் நம் சக்திக்கு உட்பட்டு ஆய்வு செய்து, தெளிந்து, உண்மை என்னவென்பதை அறிந்து நாமும் பின்பற்றி நம் குடும்பத்தாருக்கும் எடுத்துச் சொல்லி நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நாம் புரிந்ததை எடுத்துச் சொல்லும் கடமையை//

முடிந்தளவு நாம் முயற்சி செய்வோம், நல்லாஹ் நேர்வழி காண்பிக்கட்டும், ஆமீன்

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//வாசகர்களுக்கு ஒரு கேள்வி: மார்க்கம் காட்டித்தரவில்லை என்று நன்கு தெரிந்த பின்னும், நம் இரத்த பந்த உறவுகள் கோபித்து! கொள்வார்களே என்று பெண் வீட்டில் கைக்கூலி பெற்று நடைபெறும் திருமணங்களில் கலந்து கொள்வது சரிதானா?//

நிச்சயமாக சரியில்லை.

சகோ. MHJ சொல்வது திருமனத்திற்கு முன் செய்யவேண்டியவை.

Abu Easa said...

//தொழ வைத்த இமாம்கு நாம் முறையான சம்பளம் கொடுக்க தவறிவிட்டோம் நம் முக்கியஸ்தர்கள் முயற்சித்து முறையான சம்பளம் கொடுத்தால் அவர்களும் தர்கா வழிபாட்டை எதிர்த்து பிரச்சாரம் சைவர்கள்//

தொழுகை நடத்த கூலிக்கு எதற்கு ஒரு ஆள்?

தொழுகை என்றால் என்னவென்றே தெரியாத மக்களுக்கு வேண்டுமானால் தொழுகை நடத்த ஒரு இமாம் தேவை. ஆனால் அதிரை போன்ற ஊர்களுக்கு தொழுகை நடத்த இமாம் எதற்கு?

மேலும் வருமானம் குறைவென்பதால் இணைவைக்கவும், மார்கத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடவும் துணியும் நபர்களுக்கு இமாமாக இருக்க என்ன தகுதியிருக்கு?

Muhammad abubacker ( LMS ) said...

சகோ.அபு ஈஷா சொன்னது;

// மேலும் வருமானம் குறைவென்பதால் இணைவைக்கவும், மார்கத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடவும் துணியும் நபர்களுக்கு இமாமாக இருக்க என்ன தகுதியிருக்கு?

ஆ வலிக்குது நெத்தியில் அடித்தது போல் இருக்கிறது சகோதரரே!

Muhammad abubacker ( LMS ) said...

சகோ.அபு ஈஷா சொன்னது;

// மேலும் வருமானம் குறைவென்பதால் இணைவைக்கவும், மார்கத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடவும் துணியும் நபர்களுக்கு இமாமாக இருக்க என்ன தகுதியிருக்கு?

ஆ வலிக்குது நெத்தியில் அடித்தது போல் இருக்கிறது சகோதரரே!

Yasir said...

காரசாரமான ஆக்கம்...நரகத்தின் எரிகட்டைகளை ஒரு பிடி பிடித்து இருக்கின்றீர்கள்......

Yasir said...

//பள்ளியை ஒட்டியிருக்கும் “தர்ஹா”// ஆஹா சாவன்னா காக்கா...சகோ.அபூ இஸ்ரா சொல்வது நம்ம தெரு போலல்லவா தெரிகிறது....இதையும் ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா....உடனடியாக ஒழிக்கபடவேண்டிய விசயம்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ. அலாவுதீன் அவர்கள் எடுத்துக்கொண்ட விசயம் சாதாரன விசயமல்ல. மவுத் வரை சாட்டை எடுத்து சுழற்றப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டிய விசயம். இப்பொழுதுள்ள உலக சூழ்நிலையில் நாம் மாற்று மத நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் நம் மார்க்கத்தை பற்றி அறிய பல முயற்சிகளில் ஈடுபடுவதை விட (தவறொன்றுமில்லை) நம்மடவனை ஒழுங்கு படுத்தி சீராக கட்டிக்காத்து கொண்டு செல்வதே பெரும் உலகப்போர்களை களத்தில் நின்று சந்தித்ததற்கு ஒப்பானதாக இருக்கும்.

முரீத், பையத்து என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறார்களே? ஒன்றும் புரியவில்லை. இறை நேச அவுலியாக்கள், நாதாக்கள் வாழ்ந்து மறைந்தது உண்மையாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்குப்பின் அவர்களின் பெயரால் நடாத்தப்படும் அநியாய, அடூழியங்களும், காமக்களியாட்டங்களும் தான் வெறுத்து ஒதுக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌வைக‌ள்.

Noor Mohamed said...

Abu Easa சொன்னது…
//தொழுகை நடத்த கூலிக்கு எதற்கு ஒரு ஆள்?
தொழுகை என்றால் என்னவென்றே தெரியாத மக்களுக்கு வேண்டுமானால் தொழுகை நடத்த ஒரு இமாம் தேவை. ஆனால் அதிரை போன்ற ஊர்களுக்கு தொழுகை நடத்த இமாம் எதற்கு?//

சிந்தனைக்குரிய ஒன்றே.

ஆனால்! நம் அதிரைக்காரர்கள் பலர், பணம் பார்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, அரபு நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிகா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு பறந்து சென்று விடுகிறோம். பணத்திற்காக நாம் பறந்தது சென்று விடுவதால், அதிரையில் பள்ளிவாசல்களை பராமரிக்க பணம் கொடுத்து இமாம்கள் மற்றும் முஅத்தின்கள் கண்டிப்பாக தேவை.

sabeer.abushahruk said...

கேள்விக்கான என் பதிலில் நான் MHJவை ஒத்துப்போகிறேன்.
காரணம், இந்த நடவடிக்கையே ஆக்கபூர்வமானது.

புறக்கணிப்பு "எந்த காலத்திலேயும்" அவர்களைத் திருத்தாது. மேலும் மேலும் குரோதத்தையே அது வளர்க்கும். அவர்களைக் கஷ்டப்படுத்தி திருத்த முயல்வது எதிர் விளைவையே உருவாக்கும். அவர்கள் செய்வது தவறுதான் எனினும் இணைவைத்தல் போல மாபெரும் தவறல்ல. எனவே, கலந்துகொண்டு அவர் காரியம் நடந்துகொண்டு இருக்கும்போதே எடுத்துச் சொல்லி திருத்த வேண்டும்.

அன்பே ஜெயிக்கும்.

sabeer.abushahruk said...

அன்பே ஜெயிக்கும்.

அடாவடி செய்தால் இயக்கங்களாகப் பிரிந்து போகும். எடுத்தேன் கவிழ்த்தேன், நான் சொல்வதே சரி என்றெல்லாம கடுசா நடந்தால் அறிவுஜீவிகளைப் போலவே பிரிந்துபோக நேரிடும். இஸ்லாமிய அறிஞர்களின் அறிவு வாழ்க. குடும்பங்களுக்குள் இயக்கங்களைக் கற்பனை செய்யவே பயமாயிருக்கிறது.

Shameed said...

Yasir சொன்னது…


//பள்ளியை ஒட்டியிருக்கும் “தர்ஹா”// ஆஹா சாவன்னா காக்கா...சகோ.அபூ இஸ்ரா சொல்வது நம்ம தெரு போலல்லவா தெரிகிறது....இதையும் ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா....உடனடியாக ஒழிக்கபடவேண்டிய விசயம் //

சமிபத்தில் தான் நான் ஊர் சென்று வந்தேன் தர்காவிற்கு அருகே அமைந்துள்ள மதரசாவில் பெண்களுக்காளுக்காக குரான்தான் ஓதிக்குடுக்கின்றார்கள் இப்படி குடும்பத்தில் சிக்கல் உண்டானால் “இடியாப்பமும்”
திருமணம் சீக்கிரம் நடைபெற “மருதானியும்”
வெளிநாட்டு விசா விரைவில் கிடைக்க “முட்டையும்”
நோய் நொடிகள் நீங்க “வாழைப்பழம்மும்”
கணவன் நீண்ட நாள் வாழ “மல்லிகைப்பூ”வும்
பணம் வந்துசேர “பேரிட்சைப் பழமும்”
நகை நட்டுகள் கிடைக்க “திராட்சைப் பழமும்”
கொடுப்பதாக தெரியவில்லையோ
இது பெரிய இடியப்ப சிக்கலா இருக்குதே !!!

M.I.அப்துல் ஜப்பார் said...

தவறுகளை தவறு என்று தெரியாமல் செய்பவர்கள் குறைவு தவறுகளை தவறு என்று தெரிந்துக்கொண்டு செய்பவர்கள் தான் அதிகம் தன் மகனுக்கும் தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வரதட்சணை வாங்காதவர்கள், திருமணத்தை எளிமையாக முடிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் கூட வரதட்சனை மற்றும் ஆடம்பர திருமணங்களில் கலந்துக்கொள்கிறார்கள்.

தகடு, தாயத்து, மவ்லுத், ஹத்தம், பாத்திஹா போன்றவைகள் கூடாது ஷிர்க் என்று தெரிந்துக்கொண்டுதான் இதையை பிழைப்பாக நடத்தும் பள்ளி இமாம்களை பின்பற்றி தொழுகிறார்கள். இவர்களின் பின்னால் தொழுவதை புறக்கனித்துவிட்டு நமதுரில் நிறைய பள்ளிகளி்ல் இணை வைப்பு காரியங்களில் ஈடுபடாத இமாம்கள் இருக்கிறார்கள் அந்த பள்ளிகளுக்கு நாம் சென்று தொழவேண்டும்.

தீமையை தடுக்காமல் இருப்பது மார்க்கத்தில் தவறு என்பது இவர்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் நினைவூட்டளுக்காக தீமையை தடுப்பது (யார் செய்தாலும் சரியே) ஒவ்வோரு முஃமின் மீது கடமை என்பதை விளக்கும் குர்ஆன் ஹதீஸ்கள் இதே,

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.

"அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் "உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' எனக் கூறினர்.

கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம்.
அல்குர்ஆன் (7: 163-165)

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
///Noor Mohamed சொன்னது…இக்கேள்வியில் குறிப்பிட்டுள்ள கைக்கூலி என்பது எதைக் குறிக்கிறது? குறிப்பாக வீடு, நகை, பணம், சீர் வரிசைகள் மற்றும் etc. ///

''நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.'' அல்குர்ஆன் : (4:4)

''இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான். '' அல்குர்ஆன் : (4:24)

வல்ல அல்லாஹ் மஹரை கொடுங்கள் என்றுதான் சொல்கிறான். பெண்களிடம் இருந்து கைக்கூலி பெறுங்கள் என்று சொல்லவில்லை. அதனால் வீடு, நகை, பணம், பொருள், சீர், பணியாரங்கள் எதுவாக இருந்தாலும் அது கைக்கூலியிலேயே சேரும். இன்ஷா அல்லாஹ்! இதுபற்றி விரிவாக அடுத்த தொடரில் விரிவாக அலசுவோம்.

கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அதிரை சித்திக் said...

எல்லா தர்காவையும் கல்வி நிலையங்களாக மாற்றி கந்தூரி வைபவங்களுக்கு பதிலாக சுதந்திதிர தினங்களை கொண்டாட வைத்து ஸ்டைலையே மற்றிடனும் ..தர்ஹா நிர்வாகிகளுக்கு வருமானந்தில் தௌய்வு ஏற்படாது

அதிரை சித்திக் said...

உன் பிடரிக்கு அருகாமையில் இருக்கிறேன் என்கிறான் இறைவன் ,,,

எனவே ..தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் என்னிடம் உதவி கோருங்கள் என

இறைவன் கூருகிறான் ...துஆ கேட்கும் முறை அதிரை ஆலிம் ,,இணைய தலத்தில் விரிவாக உள்ளது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு