அதிரைநிருபர் மற்றும் சகோதர வலைப்பூக்களிலும் வட்டியில்லா வங்கியை நோக்கி என்றொரு சேவை பற்றிய பதிவொன்று வெளியானது அதனைத் தொடர்ந்து கருத்தாடல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் அறிந்ததே...
இந்த தருனத்தில் ஏற்கனவே சென்னை மற்றும் பிற மாநில மாணவர்கள் மத்தியில் அறிமுகமான ஒரு மலேசிய பல்கலைக் கழகத்தினைப் பற்றிய அறிமுகமும் அதன் செயல்பாடுகளும் பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது.
இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி-நிர்வாகம் - Islamic Banking and Finance Management ஏன்றொரு பிரிவில் MBA பட்டம் பெற விரும்புபவர்கள் கீழே பதியப்பட்டிருக்கும் இன்ஸ்டியூட்டின் அறிமுகத்தினை கானலாம்.
இரண்டு பக்கங்கள் கொண்ட இந்த இமேஜ் (படம்) மேல் கிளிக் செய்தால் அடுத்த பக்கத்தினையும் பார்க்கலாம்.
நேரடியாக அதில் கொடுக்கப்பட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம்.
Click to turn page1/page2
-அதிரைநிருபர்குழு
6 Responses So Far:
இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமிய வங்கியின் அமல் இன்றியமையாதது, அது RBI யிடம் பதிவு செய்யப்பட்டால்மட்டுமே நம்பகத்தன்மை ஏற்படும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
// இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமிய வங்கியின் அமல் இன்றியமையாதது, அது RBI யிடம் பதிவு செய்யப்பட்டால்மட்டுமே நம்பகத்தன்மை ஏற்படும்.//
இதை நான் வழி மொழிகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் உரக்க வழிமொழிகிறேன்.
நம்பகத்தன்மை மட்டுமல்ல RBI பதிவு இல்லாத பேங்கிங் ஆக்டிவிடிஸ் தடை செய்யப்பட்டது.
// இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமிய வங்கியின் அமல் இன்றியமையாதது, அது RBI யிடம் பதிவு செய்யப்பட்டால்மட்டுமே நம்பகத்தன்மை ஏற்படும்.//
//நம்பகத்தன்மை மட்டுமல்ல RBI பதிவு இல்லாத பேங்கிங் ஆக்டிவிடிஸ் தடை செய்யப்பட்டது.//
Islamic Banking அமையும்போது,Reserve Bank of India எனும் அரசு மையவங்கியுள்ள இந்தியாவில் பதிவு பெறவேண்டும் என்பது சரிதான். ஆனால், இன்று பல்கிப் பெருகியுள்ள சேட் வட்டிக் கடைகள், கந்துவட்டிக் கடைகள், சகாய நிதிகள், சைக்கிள் வட்டிக்காரர்கள் போன்றோரை எந்த RBIயும் 'நம்பகத் தன்மை' இல்லை என்று தடை செய்யவில்லை எனும்போது, நமது இந்தச் சிறிய முயற்சிக்கு - நம்மூரை நோக்கமாகக் கொண்டு - சிறு வணிக முனைவோரை வட்டியின் கோரப் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்குடன் செயல்படத் தொடங்கியுள்ள 'அழகிய கடன் அறக்கட்டளை'யை நாம் ஏன் வரவேற்கக் கூடாது?
//நம்மூரை நோக்கமாகக் கொண்டு - சிறு வணிக முனைவோரை வட்டியின் கோரப் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்குடன் செயல்படத் தொடங்கியுள்ள 'அழகிய கடன் அறக்கட்டளை'யை நாம் ஏன் வரவேற்கக் கூடாது? //
இதை நேரடியாக 'அழகிய கடன் அறக்கட்டளை' என்ற தலைப்பிட்டு கட்டுரை எழுதி இருக்கலாம். மாறாக. //வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி..., ( Towards Islamic Banking )// என்ற தலைப்பில் கட்டுரை எழுதியதாலே படித்தவர்கள் குழப்பத்திற்கு ஆளானார்கள்.
இவ்வாறான தலைப்பில் கட்டுரையை பார்க்கும்போது, elementary school திறக்கும் ஒரு நிர்வாகம் அச்சடித்து வெளிவிடும் நோடீசில், (Towards IAS/IPS Coaching) என்று தலைப்பிட்டு நோடீஸ் வெளியிட்டால் எப்படி இருக்குமோ அவ்வாறே அ.நி. யில் வெளிவந்த நோடீசும் கட்டுரையும் அமைந்துள்ளது.
அதனால்தான் கட்டுரையையும் நோடீசையும் படித்த மக்கள் Islamic Banking பற்றியே கேள்வி எழுப்புகின்றனர்.
//இதை நேரடியாக 'அழகிய கடன் அறக்கட்டளை' என்ற தலைப்பிட்டு கட்டுரை எழுதி இருக்கலாம். மாறாக. //வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி..., ( Towards Islamic Banking )// என்ற தலைப்பில் கட்டுரை எழுதியதாலே படித்தவர்கள் குழப்பத்திற்கு ஆளானார்கள்.//
THIS IS THE REASON FOR OUR COMMENTS. OTHERWISE NO ISSUES. WE ALL MAY SUPPORT.
THANK YOU THAMBI NOOR MOHAMED.
Post a Comment