ரிலாக்ஸ் ப்ளீஸ்ன்னு பார்த்ததும் ஹாயாக கை கால்களை விரித்துக் அசந்து விடாதீர்கள், இங்கே தலைப்பில் இடப்பட்டிருக்கும் "கிளிக்"க்கை வாசிக்கும்போது வாயில் ஈரப்பசை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஏன்னா அங்கே "ழி" என்ற உச்சரிப்பு வந்து விட்டால் அப்புறம் எங்கள்பாடு கிழிக்கப்பட்டு விடும்.
என்ன இவய்ங்களுக்கு வேற வேலையில்லையான்னு கேட்கவும் வேண்டாம் ப்ளீஸ். ரொம்ப சிம்பிள் Sஹமீத் காக்கா மாதிரியெல்லாம் ப்ரிக்ஸில்ஸ், ஃப்ரேம் ரேட், ஸட்டர், ஜூம் ஆங்கில், டஸ்ட் நாய்ஸ், கிளவுட் லைட், கிளார் ஷேட் என்ற வார்த்தைகளைச் சொல்லி உங்ளை குழப்பாமல், இலகுவாக எப்படி கணினித் திரையில் இருக்குமிடத்திலிருந்து கொண்டு அரந்தாங்கி ரோட்டையும், அதன் கிளை ரோட்டையும் கிளிக் செய்யலாம்னு சொல்லித் தரப்போகிறேன்.
கிளிக் செய்ய ஆயத்த நிலைகள்...
டவல் எடுத்துக் கொள்ள வேண்டாம்,
தலையில் கவ்பாய் தொப்பி தேவையில்லை...
இரண்டு வாரமெல்லாம் ஷேவிங் செய்யாமல் இருக்க வேண்டியதில்லை...
கழுத்தில் கயிறு தொங்க வேண்டியதில்லை....
கேன்வாஸ் ஷூவெல்லாம் அவசியமில்லை...
இடுப்பில் பெல்ட் ஏதும் போட வேண்டியதில்லை...
சரி அப்போ என்னாதன் செய்யனும் கேட்கிறீங்களா ?
இங்கே... கரும்பலகையாக இருக்கும் படத்தின் நடுவில் இருக்கும் நிக்கான் D90 கேமராவின் மேல் மவுஸ்ஸை நகர்த்தி ஸ்டெடியா உட்கார்ந்து கொண்டு ஒரு கிளிக் செய்யுங்கள்... நீங்களும் ஃபோட்டோ கிராஃபர் தான்.
என்னடா இவய்ங்க ஒரு ஃபோட்டோ போட்டுவிட்டு இப்படி எழுதியிருக்காய்ங்கன்னு புலம்ப வேண்டாம் சீக்கிரம் பேசும் படம் படையெடுக்கும். அதெல்லாம் சரி, எல்லா ஃபோட்டோவையும் நீங்களே எடுத்துட்டா அப்போ நாங்க எப்போ பெயர் போட்டுக்கிறதாம் ?
வதந்திகளை நம்பாதீர்கள் !
"அதிரை வலைத்தளங்களில் தொய்வு" - "ஒரு சில வலைத்தளங்களை திறந்தால் தூசி பறக்கிறது அதனால் தும்மல் வருகிறது" என்ற வதந்தி பரவி வருகிறது... :)"
-அபுஇபுறாஹிம்
-புகைப்படம் : Sஹமீத்
11 Responses So Far:
ஃபோட்டோவெல்லாஞ்சரிதான்.
ஆனா, நான் ட்டையெல்லாங் கட்டிக்கிட்டு செயற்கை புன்னகையோடு ஸ்மார்ட்டா குந்திக்கிட்டு க்ளிக் செஞ்சா... ஃபோட்டோவ்ல நான் குடை பிடிச்சிண்டு சைக்கிள்ல போற மாதிரில ப்ரின்ட் போடுது!?
குசும்பின் மன்னனே எங்கள் அண்ணனே,கிராஃபிக்ஸ் சிங்கமே எங்கள் தங்கத்தின் தங்கமே அபுஇபுராஹிம் காக்காவே ...இது உங்களுக்கே கொஞ்சம் ஒவரா தெரியல...கவிக்காக்காவேற 15 நிமிஷம் மேக்கப்புக்காக செலவு செய்ததாக உறுதிபடுத்தமுடியாத தகவல்கள் கூறுகின்றன...
ரிலாக்ஸ்'ன்னு சொன்னதுக்காக இப்புடியா ?
என்ன கொடுமைங்க !
மின்னஞ்சலில்தான் வந்தந்தி கிளம்பிடுச்சுன்னு இங்கே வந்தா கிளப்பி உட்டதோட சரியா ? யாரையுமே கானோமே !?
ஒன்னும் புரியல ,,,இதுக்கெல்லாம் ரூம் போட்டுசிந்திக்க வேனும்,,,,,,
//இதுக்கெல்லாம் ரூம் போட்டுசிந்திக்க வேனும்,,,,,,//
அதுக்கு அவசியமே இல்லை... பதியப்பட்டிருக்கும் படத்தின் நடுவில் சுட்டினால் நீங்களும் ஃபோட்டோகிராஃபர்...
இருங்க ரூம் வாடகையை கொடுத்திட்டு வந்திடுறேன்...
ஆகா எல்லோரும் இப்படியோ கிளிக்கிட்டா நம்ம கிளிக்குக்கு மருவாதை கொறைஞ்சிடும் ஆகையால் அடுத்த ஆக்கத்தில் வச்சிகிடுறேன்!!
மனிதனாகிய என்னை கிளிக் செய்தால் மரம் தானுங்கோ தெரியுது அது யாங்கோ?
கிளிக்கியாச்சு! கிளிக்கியாச்சு! எத்தனை கிளிக்கு?
ரூம் வாடகை கொடுத்தாச்சா?
அற்புதம் காக்கா
ஒரு சிலர் கிராபிக்ஸ் தந்திரத்தால் கிளிக் செய்தவுடன் தன் முஹரகட்டை பேய் முஹரகட்டையாக மாற்றிட செய்வர் நானும் ஒரு மித பயத்துடன் பார்த்தால் அழகிய நிழல் தரும் மரங்களின் காட்சி வியந்தேன்...வடிவமைத்த காக்காவிற்கு வாழ்த்துக்கள்...
//ரூம் வாடகை கொடுத்தாச்சா?//
வாங்க மாட்டேன்னுட்டாங்க... இங்கே வராதவங்க கணக்குல எழுதிக்கிறேன்னு சொல்லிட்டாங்க !
Post a Comment