Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 11 9

அதிரைநிருபர் | April 12, 2012 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.

'ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு வைத்து, (அது வளர்ந்து) அந்த மரத்திலிருந்து காய்க்கும் கனிகளை ஏதேனும் சாப்பிட்டால் அது அவருக்கு தர்மமாக பதிவு செய்யப்படும். அதிலிருந்து பிறரால் திருடப்பட்டு எடுப்பவையிலும் அவருக்கு தர்மம் (செய்த கூலி) உண்டு. ஒருவர் அதன் கனிகளை பறித்துக் குறைத்தாலும், அவருக்கு தர்மம் (செய்த கூலியாகவே) தவிர இருப்பதில்லை''  என்று  நபி(ஸல்) கூறினார்கள். (ஜாபிர்(ரலி).

மற்றொரு அறிவிப்பில் (பின்வருமாறு) உள்ளது : -
ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு, விவசாயம் செய்து அதிலிருந்து ஒரு மனிதன்,மிருகம் மற்றும் ஏதேனும் ஒன்று சாப்பிட்டால் அவனுக்கு அது தர்மமாகவே அமையும். என்று  நபி(ஸல்) கூறினார்கள். (அனஸ்(ரலி), அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) , அனஸ்(ரலி) அவர்கள்  (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 135)

''பேரீத்த பழத்(தின் பாதியை தர்மம் செய்) தேனும், நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்''என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

இவ்விரண்டு நூல்களின் மற்றொரு அறிவிப்பில்(பின்வருமாறு உள்ளது:-

''உங்களில் எவரும் தன் இறைவனிடம் (மறுமையில்) பேசாமல் இருக்கமாட்டார். அவனுக்கும், அவருக்குமிடையே மொழி பெயர்ப்பாளர் இருக்கமாட்டார். தனது வலது புறம் பார்ப்பான். அங்கே தான் முன்பு அனுப்பி வைத்த (செயல்களை)த் தவிர வேறொன்றை பார்க்க மாட்டான். பின்பு இடது புறம் பார்ப்பான். தான் முன்பு செய்திட்டவற்றைத் தவிர (வேறான்றையும்) பார்க்க மாட்டான். தனக்கு முன்னே பார்ப்பான். அங்கே முகத்துக்கு நேராக நரகத்தைத் தவிர (மற்றதைப்)பார்க்கமாட்டான். எனவே பேரீத்தம் பழத்(தின் பாதியை தர்மம் செய்)தேனும் நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். அது கிடைக்கவில்லையானால், நல்ல வார்த்தையைப் பேசி (தர்மம் செய்யு)ங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ இப்னு ஹாதம் (ரலி) அவர்கள்  (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 139)

'ஒரு வேளை உணவை சாப்பிட்டு, இதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தும், அல்லது தண்ணீர் குடித்து விட்டு இதற்காக அல்லாஹ்வைப் புகழ்(ந்தும் வாழ்)கின்ற ஒரு அடியானைக் கண்டு அல்லாஹ் திருப்தியடைகிறான்.''என்று  நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள்  ( முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 140)

''ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தர்மம் செய்வது கடமையாகும் என நபி(ஸல்) கூறினார்கள். 'தர்மம் செய்ய பொருள் - வசதி எதையும் பெற்றுக் கொள்ளவில்லையானால், அவர் என்ன செய்வது? என்று கேட்டேன். 'அவர் தன் கைகளால்  உழைத்து, தானும் பயன்பெற்று, பிறருக்கு தர்மம் செய்வார்' என்று நபி(ஸல்) கூறினார்கள். ''இதற்கும் இயலாதவர் குறித்து என்ன கூறுகிறீர்கள்'' என்று கேட்டேன். ''கவலையுடன் உள்ளவரின் தேவைக்கு உதவுவார்' என்று நபி(ஸல்) கூறினார்கள். இதையும் அவர் செய்யாவிட்டால் என்ன செய்வது? என்று கேட்டேன். 'தீமையை விட்டு தன்னைத் தடுத்துக் கொள்வார். இதுவும் தர்மம் (போல்)தான்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) அவர்கள்  (புகாரி,முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 141)

'நிச்சயமாக மார்க்கம், எளிமையானதாகும். மார்க்கத்தை மறைத்து வைக்க எவர் முயற்சித்தாலும் அவரை அது வெற்றி காணும். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். நடுநிலையைக் கடைப்பிடியுங்கள். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் கூறிக்கொள்ளுங்கள். காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரத்திலும் (வணங்குவதற்கு) பயன்படுத்திக் கொள்ளுங்கள்''என்று  நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)   அவர்கள்  (புகாரி). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 145)

'உங்களில் ஒருவர், தொழும் நிலையில் தூங்கினால், தன்னை விட்டும் தூக்கம் நீங்கும் வரை அவர் தூங்கட்டும்! உங்களில் ஒருவர் தூங்கிய நிலையில் தொழுதால், 'அவர் தன்னை மன்னிக்க வேண்டுகிறாரா? அல்லது தன்னைத் திட்டுகிறாரா' என்று அறிய மாட்டார் என்று  நபி(ஸல்) கூறினார்கள்.                               (அறிவிப்பவர்அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்   (புகாரி,முஸ்லிம்).(ரியாளுஸ்ஸாலிஹீன்: 147)

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! ''இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே'' என்று அப்போது (மனிதன்) கூறுவான். (அல்குர்ஆன் : 63:10 )

தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.
(அல்குர்ஆன் : 20:74)           

...அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான். (அல்குர்ஆன் :2:185 )

நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்! (அல்குர்ஆன் : 2:172 )

யாரேனும் நல்லறம் செய்தால் அது அவருக்கே நல்லது.
(அல்குர்ஆன் : 45:15 ) 

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபி(ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

 '' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

-S.அலாவுதீன்

9 Responses So Far:

Yasir said...

வெள்ளிக்கிழமை இரவுமா (நம்மூர் கணக்குப்படி) நல்ல நல்ல அருமருந்துகள்..மரம் வளர்ப்பை பற்றி இறைவனே சொல்லி இருப்பது...மிகுந்த வியப்பைதருகிறது

அதிரை சித்திக் said...

நல்ல உள்ளங்களின் நல்ல முயற்சி .... நல்ல கருத்துக்களை தாங்கி வரும் தங்களின் வலை தளம் நல்லதை நாவில் மட்டுமே பேசும் எத்தனையோ புரவலர்களை என் வாழ்வில் பார்த்திருக்கிறேன் இளஞ்சர்கள் பேசுவதும் எழுதுவதும் நல்ல விசயங்கள் என்கின்ற போது நிச்சயம் எழுத்தின் தாகம் செயலிலும் இருக்கும் என்பதில் சற்றும் ஐய்யம் இல்லை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உலக மாந்தர்கள் அனைவருக்கும் ஏற்ற அருமருந்து...

//...அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான். (அல்குர்ஆன் :2:185 )//

ஜஸாக்கல்லாஹ் காக்கா !

Ebrahim Ansari said...

Assalamu Alaikkum. Janab. S. Alaudeen,

உங்களை இனி ஒரு டாக்டர் என்றே அழைக்க வேண்டும்.

இன்றைய மனிதனின் தேவை அமைதிதான். அந்த அமைதி தரும் இறைவனும் அவனது அன்புத்தூதரும் தந்த அரு மருந்துகளை தேடி, திரட்டி, அரைத்து , அமைத்துதரும் டாக்டர் நீங்கள். அதுவும் நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட வெள்ளிக்கிழமை இந்த மருந்து குடிக்க மிகவும் ஏற்ற நாள். குடிக்கவும் உள்ளத்தில் சேர்க்கிறது- உடனே குணப்படுத்துகிறது.

வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

ஜஸாக்கல்லாஹ் கஹைர்!

Shameed said...

//ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு வைத்து, (அது வளர்ந்து) அந்த மரத்திலிருந்து காய்க்கும் கனிகளை ஏதேனும் சாப்பிட்டால் அது அவருக்கு தர்மமாக பதிவு செய்யப்படும். அதிலிருந்து பிறரால் திருடப்பட்டு எடுப்பவையிலும் அவருக்கு தர்மம் (செய்த கூலி) உண்டு//

நிறைய மரம் நட்றேன் அது இப்பொது காய்த்து நிறைய பேருக்கு பலன் தருகின்றது இந்த ஹதீஸை படித்ததும் மனதுக்கு நிறைவாக உள்ளது

KALAM SHAICK ABDUL KADER said...

அமைதி எனும் மூலச்சொல்லை தன் பெயரில் கொண்ட, அமைதி மட்டும் கொள்கையாய்க் கொண்ட “இஸ்லாம்” எனும் இனிய-எளிய மார்க்கம் நம் கையில் கிடைத்தும் தவற விட்டு விட்ட வேளையில், புதிதாய்ச் சிந்திக்கும் மக்கள் இவ்வமைதி நாடி துபை அமைதி விழாவில் கூட்டம் கூட்டமாய் இணைவதைக் கண்டும் இரு கண்களும் நீரை வார்த்தன்!

அமைதி என்பது எண்ணம், இரத்தம், இருதயம், மூளை வழியாக நம்மை ஆட்கொள்ளும் ஓர் அற்புத அருட்கொடை! இதனை செல்வம்- காசுகள் தரா; அல்லாஹ்வின் அருள்மறையாம் அல்-குர்-ஆன் மற்றும் கண்மணி முஹம்மத் (ஸள்) அவர்களின் வாழ்வியல் மட்டும் தான் காட்டும்!

ஏன் மார்கம் வேண்டும்? அமைதி என்பதை அடைவதை எப்படி? பிறந்த மதத்தினை விட்டு விட்டு இஸ்லாத்தில் மட்டும் ஏன் இணைய வேண்டும் என்ற வினாக்களை விடுக்க வந்தவர்கள் விடையாக “ஷஹாதத்” எனும் கலிமாவைச் சொல்லி உடன் இஸ்லாத்தில் இணைந்த அக்காட்சிகள் என்னை உறங்க விடாமல் உருக்கி விட்டன! அமைதி தரும் அருமருந்தாம் இஸலாம் நமக்கு பிறப்பின் வழியாகக் கிட்டியும் அருமையினை அறியா அறிவிலிகளாகி விட்டோமே!!! ஆனால், புதிதாய்ச் சிந்திப்போர் எப்படி வேகமாக உணர்கின்றார்கள்! உடனே ஏற்று நடைமுறைப் படுத்து உத்வேகம் எப்படி அவர்கட்கு மட்டும் சாத்தியமானது?! பசித்தவன் தான் பசியின் அருமை அறிவான்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு