( Towards Islamic Banking )
தற்காலத்தில் அசுர வேகத்தில் வளர்ந்திருக்கும் வட்டி அடிப்படையிலான வங்கிகள் (Commercial Banks) அவற்றின் ‘சேவைகளால்’ பிரபலமடைந்திருப்பது நிதரிசனமாகும். அவற்றுக்கு எதிராக நமதூரில் வட்டியின் வாடையே இல்லாத – வட்டியின் நிழலே படியாத – இஸ்லாமிய வங்கிச் சேவையின் முதல் அத்தியாயம், ‘கர்ழன் ஹஸனா’ – அழகிய கடன் அறக்கட்டளை என்ற பெயரில் தொடங்கிவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை இதன் மூலம் அறியத் தருகின்றோம்.
ஊரின் எல்லா ஜுமுஆப் பள்ளிகளிலும் நோட்டீஸ் மூலம் அறிவிப்புச் செய்து, இம்மாதம் முதல் இச்சேவை தொடங்கியுள்ளது. முதலில், வட்டியின் மூலம் பெரிதும் பாதிப்படையும் சிறுதொழில் செய்வோர், தள்ளுவண்டி வியாபாரிகள், குடிசைத் தொழில் செய்பவர்கள் போன்றவர்களைக் கவனத்தில் கொண்டு, அவர்களுக்குப் போதுமான சிறு தொகையைக் கடனாக வழங்கி, முதலில் வட்டிக் கொடுமையிலிருந்து அவர்களை விடுவிப்பது இவ்வமைப்பின் முதல் நோக்கமாகும்.
இஸ்லாமிய வழிகாட்டலில் நமது பொருளாதாரத் திட்டத்தை அமைக்க வேண்டும்; அதைப் பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய அனைவரும் இந்தப் புனிதச் சேவையில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தும் வாய்ப்பாக, ஒவ்வொருவரும் ரூ 1000 (ஆயிரம் ரூபாய் மட்டும்) செலுத்தி, தம்மை இதன் ஆயுள் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கோருகின்றோம். விருப்பமும் ஆர்வமும் வசதியும் உள்ளவர்கள், இதைவிடக் கூடுதலான தொகையைச் செலுத்தித் தம் பங்களிப்பைப் பெரிதாக்கிக் கொள்ளலாம்.
நமதூரில் மார்க்க அறிஞர்கள், கல்வியாளர்கள், சமூகச் சிந்தனையாளர்கள், வசதி பெற்ற வணிகர்கள், மார்க்கப் பற்றுள்ள இளைஞர்கள், மற்றும் கல்வி கற்ற ஆண்-பெண் பொதுமக்கள் நிறையப் பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தமக்குரிய பங்களிப்பை இந்த ‘அழகிய கடன் அறக்கட்டளை’க்கு வழங்கி, நன்மையிலும் இறையச்சத்திலும் உதவியாளர்களாக இணையுமாறு கோரப்படுகின்றார்கள். இதோ, அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்:
تعاونوا على البر واتقواى ولا تعاونوا على الإثم
والعدوان
“நன்மைக்கும் இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் வரம்பு மீறலுக்கும் நீங்கள் உதவியாளர்களாக இருக்காதீர்கள்!” - (05:02)
மேற்கொண்டுள்ள விவரங்களுக்கு இணைப்பு நோட்டீசைப் பார்க்கவும்.
-அதிரை அஹ்மது
37 Responses So Far:
பணம் எப்படி அனுப்புவது? வங்கிக் கணக்கு விவரம் இல்லையே? இன்ஷா அல்லாஹ் விடுமுறையில் தாயகம் வந்தால் நேரில் தரலாமா? என்னை ஆயுள் உறுப்பினராகப் பதிவு செய்ய விழைகின்றேன்.
அதிரை நிருபர் மூலம் இந்த மகிழ்ச்சியான செய்தியை நமக்கு அறியத் தருபவர் அதிரை அஹ்மது காக்கா அவர்கள்.
ஆனால்! இங்கு இணைக்கப் பட்டுள்ள இணைப்பு நோட்டீசை பார்க்கும்போது, இது ஓர் அதிகாரப் பூர்வமான, ஆதாரமான தகவல் நிறைந்த செய்தியாகத் தெரியவில்லை.
இதை முதன்மையான முக்கிய அறிவிப்பாக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனில், அனைத்து அலுவலக அதிகாரிகளின் பெயர்கள் இதில் எழுதப் பட்டிருக்க வேண்டும். இன்றேல், கண்டிப்பாக தலைவர், செயலர், பொருளர் பெயர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் நானும் ஆயுள் உறுப்பினராஹா .விழைகிறேன் ..எப்படி பணம் அனுப்பி வைப்பது விவரம் தேவை வட்டியில்லா வங்கிக்கு வருமானதுற்கு வழி உண்டா ...?
If this is an establishment registered under " Islamic Banking System", i presume in India it has to be registered and authorised by the RBI, hope the organizers done necessary ground works before it is started.
Islamic banking system has been recently applauded and given assurance to Indians by PM Manmohan Singh in the recent [ last year] economic forum in Malaysia. I think Malaysia and Pakistan show interest in establishing islamic banking / insurance [ Takaful ] in India
தம்பி அபுல்கலாம் அவர்களுக்கு:
நீங்கள் ஊர் வரும்போது சேர்ந்துகொள்ளலாம்.
தம்பி நூர் முஹம்மது அவர்களுக்கு:
நோட்டீஸ் அதிகாரப்பூர்வமானதுதான். ஐயமிருந்தால், அதில் கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, சந்தேக நிவர்த்தி பெறலாமே?
தம்பி சித்தீக் அவர்களுக்கு:
உங்கள் உறவினர் மூலம், நோட்டீசில் உள்ள எண்களில் தொடர்பு கொள்ளச் செய்து இணைந்துகொள்ளலாம்.
To brother Zakir:
This trust is registered, but not registered with RBI yet. At the moment, it is a simple starting. Please pray for its development.
Islam expressly prohibits a fixed or predetermined return on financial transactions. The basic principle that helps a person become debt free at the earliest can be called the most outstanding feature of these kinds of organizations. And motivating as small or large self businessmen. When the debtor grows his business in a particular stage, his business gain will push to pay financial help to the interest free organization. Eventually our community can avoid wholly the other Bank’s communication and will feel as an Islamic based business life. I am asking dua to the planners to clutch this organization as an immortal.
Abdul Razik
Dubai
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
காக்கா நூர் முஹம்மது அவர்கள் கேட்பதில் எந்த தவரும் இல்லையே நீங்கள் கொடுத்த அலைபேசி எண்களில் தொடர்பு கொள்வதை விட தாங்கள் விபரங்களை நோட்டிசில் போட்டுஇருக்கலாம் அல்லது கேட்டவர்களுக்கு அழகான பதிலை கொடுத்திருக்கலாம் அதைவிட்டு விட்டு அலைபேசியில் தொடப்புகொள்ளுங்கள் என்றால் என்ன நியாயம் தயவுசெய்து அனைத்து அலுவலக அதிகாரிகளின் பெயர்கள் தலைவர் செயலர் பொருளர் பெயர்கள் கொடுப்பதற்கு தயக்கமேன்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அருமையான திட்டங்கள் வளர வாழ்த்துக்கள்.
அதிரை பைத்துல்மாலிலும் வட்டி இல்லா கடன் கொடுக்கிறார்கள்.ஆனால் வட்டிக்கு பணம் வாங்குவது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டேதான் போகின்றன. இதற்க்கு காரணம் என்ன?
நாம் நல்லவற்றை மட்டும் செய்து கொண்டே இருக்கிறோமே தவிர தீயவற்றை பகிரங்கமாக தடுப்பதில்லை.
வட்டியை பகிரங்கமாக தடுக்காத வரையிலும் எத்தனை வட்டி இல்லா சேவையகம் வந்தாலும் வட்டியை ஒழிப்பது என்பது பாலை வனத்தில் கிணறு தோன்றி தண்ணீர் எடுக்க நினைப்பதாக தான் இருக்கும்.
கால் வைக்காத தெருவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஃபைனான்சி காரன்களின் கைவரிசைகள் தலைவிரித்தாடுகின்றன.
வட்டியின் கடும் தண்டனையை தெரிந்தும்.நல்ல குடும்பத்திலுள்ளவர்களும் கூட நரகத்தின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறார்கள்.பெரும் வேதனைக்குரிய விஷயம்.
இது போன்ற செயலால் அல்லாஹ் சுனாமி,நிலநடுக்கம் போன்ற பீதியை நம்மை அடைய செய்கின்றானோ என்று என்ன தோன்றுகிறது.
இந்த சமுதாயத்தை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
தலையே போற காரியமாக இருந்தாலும் வட்டியின் பக்கம் செல்லாமல் நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் ஆமீன்.
//அனைத்து அலுவலக அதிகாரிகளின் பெயர்கள் தலைவர் செயலர் பொருளர் பெயர்கள் கொடுப்பதற்கு தயக்கமேன்?//
தயக்கமொன்றுமில்லை.
தலைவர்: அலி அக்பர், நடுத்தெரு (முன்னாள் அபுதாபி இஸ்லாமிக் டெவெலப்மென்ட் பேன்க் ஊழியர்.
செயலர்: ஜமால் முஹம்மது, இந்தியன் பர்னீச்சர் முதலாளி.
பொருளாலர்: மஹ்பூப் அலி சார், கா.மு.பள்ளி ஆசிரியர்
நமதூருக்கு தேவையான ஒன்று, இதன் வளர்ச்சிக்கு நாம் ஒவ்வொருவரும் உறுதுணையாக இருப்போம்
ஆசைகள் பெருகும்போதுதான் பணத்தேவைகளும் பெருகும், அந்த பணத்தை பெற நகைகளை விற்க மனதில்லாமல் அடகு வைக்க வங்கிகளை அனுகுகின்றோம்...
கடன் பெறுவதற்கு சட்டத்திட்டங்கள் இருக்கா (யாரெல்லாம் வாங்களாம், அதிகபட்சம் எவ்வளவு, அதை பெறுவதர்குண்டான டாக்குமென்கள் etc..)
கடன் பெறுபவர் குறிப்பிட்ட காலத்தில் திரும்ப செலுத்த வேண்டும் ,அப்படி இல்லாத பட்சத்தில் என்னென்ன நடவடிக்கையில் இறங்கலாம், இப்படி நிறைய கலந்தாலோசித்து செயல்படவேண்டியது நம் பொறுப்பு.
பைத்துல்மால் மூலம் கடன் வாங்கிக்கொடுத்து அதை திரும்ப வாங்க பட்ட போராட்டங்கள் கண்முன்னே இன்றும் நிற்கிறது... :(
என் ஐயங்களை இங்கே பதிவு செய்தேன். பிரசுரமானதாகத் தெரியவில்லையே
//என் ஐயங்களை இங்கே பதிவு செய்தேன். //
சகோதரர் புஹாரி அவர்களுக்கு:
தாங்கள் பதிவு செய்ததாக குறிப்பிடும் கருத்தாய்வு/ஐயம் பதியப்பட்டதாக தெரியவில்லை, திரைக்குபின்னும் சரிபார்த்திட்ட்டோம் அப்படி ஏதும் பதிந்தாக தடயம் இல்லை.
திறந்த தட்டச்சு புத்தகமான காருத்தோட்ட மேடை இது, தாரளமாக மீண்டும் பதியலாம்.
இஸ்லாமிய வங்கி முறையில் எனக்கு நிறைய ஐயங்கள் உள்ளன. அது பற்றி நான் நிறைய வாசித்துத் தெரிந்துகொண்டதில்லை என்பது உண்மை.
ஆனால் என் அடிப்படைக் கேள்விகளுக்கு இங்கே விடை கிடைத்தால் பெரிதும் மகிழ்வேன்.
1. இஸ்லாமிய வங்கியில் இடப்படும் பணம் வேறு வங்கிகளில் இட்டு வட்டி பெறப்படுகிறதா?
2. வங்கியை நிர்வகிக்க ஆகும் செலவை இஸ்லாமிய வங்கி எதன் வழியாகப் பெறுகிறது.
3. சொத்து இல்லாதவர்களின் தேவைக்கு இஸ்லாமிய வங்கி கடன் தருமா. அப்படி கொடுத்தபின் திரும்பிப் பெறமுடியாத கடனை எப்படி சமாளிப்பார்கள்?
4. வங்கிக்கணக்கு திறப்பதற்கும் அதனை நிர்வகிப்பதற்கும் கணக்காளர் மாதா மாதம் கட்டணம் செலுத்த வேண்டுமா? எவ்வளவு?
5. RBI யில் பதிவு செய்யாத வங்கிகள் பாதுகாப்பான வங்கிகளாகக் கருதப்படுவதில்லை. அம்மாதிரி வங்கிகளில் இடப்படும் பணத்திற்கு யார் உத்திரவாதம் தருவார்கள்?
அன்புடன் புகாரி
என் ஐயங்களைத் தீர்ப்போர் இங்கு யாருமில்லையா ?
அன்புடன் புகாரி
//என் ஐயங்களைத் தீர்ப்போர் இங்கு யாருமில்லையா ?
அன்புடன் புகாரி//
வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி... என்றிருப்பதால், 'ஐ யம்' ரீடிங் !
அன்பின் அபுஇபுறாகிம்,
எனக்கு விளங்கவில்லையே நீங்கள் கூறுவது. சற்று விளக்கமாகக் கூறுவீர்களா? நன்றி
அன்புடன் புகாரி
அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரை பைத்துல்மாலின் முக்கிய சேவைகலில் வட்டி இல்லா கடன் மிக முக்கியமான ஒன்ரு, மிக சிரப்பாக செயல்பட்டுவருகிரது தர்ப்பொலுது அதிகபச்சமாக ஒரு லச்சம் ரூபாய் வரய் கொடுத்துகொன்டு இருக்கிறார்கள்.
இதை அதிரை பைதுல்மாலுடன் சேர்ந்து இன்னும் கூடுதலாக செய்யலாமே? ஏன் இதிலும் போட்டி.
அதிரை பைத்துல்மால்க்கு வட்டில்லா கடன் கொடுபதில் நல்ல அனுபவம் உண்டு ஏண் அதை பயன்படுத்தகூடாது.
இது என்னுடய சொந்த கருத்து தயவுசெய்து தவருதலாக புரியவேண்டாம் ஒற்றுமை மேலும் பழம்மூட்டும்
ஜெ. முகமது புகாரி தமாம்
அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரை பைத்துல்மாலின் முக்கிய சேவைகலில் வட்டி இல்லா கடன் மிக முக்கியமான ஒன்ரு, மிக சிரப்பாக செயல்பட்டுவருகிரது தர்ப்பொலுது அதிகபச்சமாக ஒரு லச்சம் ரூபாய் வரய் கொடுத்துகொன்டு இருக்கிறார்கள்.
இதை அதிரை பைதுல்மாலுடன் சேர்ந்து இன்னும் கூடுதலாக செய்யலாமே? ஏன் இதிலும் போட்டி.
அதிரை பைத்துல்மால்க்கு வட்டில்லா கடன் கொடுபதில் நல்ல அனுபவம் உண்டு ஏண் அதை பயன்படுத்தகூடாது.
இது என்னுடய சொந்த கருத்து தயவுசெய்து தவருதலாக புரியவேண்டாம் ஒற்றுமை மேலும் பழம்மூட்டும்
ஜெ. முகமது புகாரி தமாம்
"முதலில், வட்டியின் மூலம் பெரிதும் பாதிப்படையும் சிறுதொழில் செய்வோர், தள்ளுவண்டி வியாபாரிகள், குடிசைத் தொழில் செய்பவர்கள் போன்றவர்களைக் கவனத்தில் கொண்டு, அவர்களுக்குப் போதுமான சிறு தொகையைக் கடனாக வழங்கி, முதலில் வட்டிக் கொடுமையிலிருந்து அவர்களை விடுவிப்பது இவ்வமைப்பின் முதல் நோக்கமாகும்."
கட்டுரையில் இடம்பெற்ற இவ்வரிகளைப் படித்தால், பைத்துல்மாலுக்குப் போட்டியா என்ற கேள்வியே எழாது. This is only a simple starting.
இதைத்தான் பைத்துமால் கடந்த 20 வருடமாக செய்துவருகிறது உங்கலை போன்ற அனுபவம் மிக்கவர்கள் பைத்துல்மாள் கூட துனையாக இருந்தாள் இன்னும் நன்றாக இருக்கும்.
ஜெ. முகமது புகாரி தமாம்.
To brother Buhari,
visit this weblink for more islamic banking principles.
http://www.bankinginfo.com.my/_system/media/downloadables/islamic_banking.pdf
நன்றி சாகிர் ஹுசைன்
இஸ்லாமிய வங்கியின் சாராம்சமாக நான் கண்டவை கீழே:
1. வங்கி உங்கள் பணத்தைப் பாதுகாப்பதற்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கும்
2. நீங்கள் இட்டு வைத்திருக்கும் பணத்திற்காக வங்கி உங்களுக்கு இனாமாகப் பணம் தரக்கூடும்
3. வங்கி உங்கள் பணத்தை வியாபாரத்தில் இட்டு லாபம் சம்பாதிக்கும்.
3. ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்
4. வங்கி வட்டியில்லா கடன் தரும்.
5. உங்களின் தரம் பார்த்துத்தான் கடன் தரப்படும். எல்லோருக்கும் கடன் கிடைக்காது.
6. கடன் பெற்றவர் விரும்பினால் தான் பெற்ற கடன் தொகையைவிட கூடுதல் பணத்தை வங்கிக்கு செலுத்தலாம்
இதில் கவனிக்கப்பட வேண்டியவை கீழே:
1. ஏழை எளியவர்களுக்கு உதவுவதே இஸ்லாமின் நோக்கம். ஆனால் கடன் அப்படி வழங்கப்படுவதில்லை
2. கடன் பெற்றவரிடமிருந்து வட்டி என்ற பெயர் இல்லாமல் வேறு பெயரில் அதிக பணம் பெற வங்கி எப்போது முயலும்
3. கடன் தொகை திரும்பி வராத நிலையில், கடன் பெற்றவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள். இதை இஸ்லாம் விரும்புவதற்கு வழியில்லை
4. திரும்பி வராத கடன்கள் பணம் இட்டவரின் நஷ்டக்கணக்கில்தான் வர இயலும்
5. பணத்தை வியாபாரத்தில் இடுவோம் என்பது நிழலான விசயமாக இருக்கிறது. இதன் செயல்பாடுகள் வெள்ளையாக அனைவருக்கும் காட்டப்படுமா என்பது கேள்விக்குறி
6. அடிப்படையில் இங்கேயும் பணம் பணம் ஈட்டவே பயன்படுகிறது
இஸ்லாம் விரும்புவது கீழே:
1. இஸ்லாமிய வரிப்பணத்தை ஏழைகளுக்குச் செலவிடவேண்டும்
2. உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இலவசமாக பணம் தரவேண்டும். (சகாத்)
3. ஏழை எளியவருக்கு கடன் தருவதைவிட இனாமாகக் கொடுத்து உதவினால் சொர்க்க பதவி கிடைக்கும்
4. அரசு தன் வளங்களைக் கொண்டு ஏழ்மையை அழித்தெடுக்க வேண்டும்
5. மக்கள் உழைப்பை நம்பி இருக்க வேண்டும் கையேந்துவதை அல்ல
6. உழைபப்வர்களுக்கு சரியான உதியத்தை மிக உடனேயே தரவேண்டும்
ஆகவே, என்னால் இஸ்லாமிய வங்கியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அது ஏழைகளுக்கு உதவப் போவதில்லை. பணம் வரும் வழியைத்தான் அது பார்க்கும். இல்லாவிட்டால் அது நஷ்டமடைந்து திவாலாகிவிடும்.
அன்புடன் புகாரி
சிலரால் இஸ்லாமிய வங்கி முறையை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், அதற்கு இந்த வங்கி முறை பொறுப்பாகாது. அவர்கள இன்னும் இது பற்றி விரிவாக ஆராய வேண்டும், ஆர்வமிருந்தால்.
இதிலுள்ள 'தக்காக புல்' முறையின் பயனை உணர்ந்த உலகின் பிரபலமான வங்கிகளான National Commercial Bank, City Bank முதலானவை கடந்த பல ஆண்டுகளாக இஸ்லாமிய வங்கி இயலின் தனிப பிரிவு ஒன்றைத் தமது Operational Systemகளுள் ஒன்றாக வைத்திருப்பதே இதன் சிறப்பிற்குக் கட்டியம் கூறுவதாகும்.
'Takkaful'
இஸ்லாமிய வங்கி முறைகள்,செயல்பாடுகள் பற்றி சகோதரர்கள் அதிரை அஹமது சாச்சா,ஜமீல் காக்கா,அலாவுதீன் காக்கா,இபுறாஹீம் அன்சாரி காக்கா,ஜாகிர் காக்கா அல்லது இது குறித்த விவரம் தெரிந்தவர்கள் தனியாகவோ,கூட்டாகவோ - குரான்,ஹதீஸ் அடிப்படையில் ஒரு தொடராக எழுதலாமே?
கனடாவிலிருந்தும் இஸ்லாமிய வங்கிமுறையை நோக்கி வங்கிகள் பயணப்படுகின்றன.
இதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது:
Deposit யாருக்குச் செல்ல வேண்டும் என்பது வங்கிகளுக்கு இடையேயான பனிப்போர். அதற்காக எதையும் செய்வார்கள் வங்கி நிறுவனர்கள்.
இஸ்லாமியர்கள் எல்லோரும் பணத்தைக் கொண்டுவந்து கொட்டுவார்கள் என்றால், வங்கிகளுக்குக் கொண்டாண்டம்தான்.
காரணம், அவர்களுக்குச் செலவு குறைவு வரவு அதிகம்.
எந்த வாடிக்கையாளருக்கும் வட்டிதரவேண்டாம், ஆனால் அவர்கள் இட்ட பணத்தை வைத்துக்கொண்டு, வட்டிவாங்கிக் குவிப்பார்கள்.
இந்த சிட்டிபேங்க் போல இதுவரை வட்டியிலேயே ஓடிக்கொண்டிருந்த வங்கிகள், திடீர் என்று ஒரு சிறப்புப்பகுதியை இஸ்லாமிய வங்கிமுறை என்று திறக்கிறார்கள் என்றால் நாம் யோசிக்க வேண்டும், அவர்களின் நோக்கம், வட்டியில்லா கடன் கொடுத்து ஏழ்மையை அகற்றுவது அல்ல, அவர்களின் லாபத்தை வட்டிமூலம் அதிகரித்துக்கொள்வதுதான்.
உலகின் பெரும் பணம் இஸ்லாமிய வங்கிமுறைக்கு மாற்றப்பட்டதும் மிகவும் கவலை கொண்டுவிட்டவர்களின் நடவடிக்கைதான் இஸ்லாமிய வங்கிமுறை என்ற சிறப்புப் பிரிவைத் துவங்குவது.
எல்லாம் ஏமாற்றுவேலைதான். இஸ்லாமை வாழவைப்பதல்ல அவர்களின் நோக்கம், தங்களை வாழவைப்பது.
இதனால்தான் இஸ்லாமிய நாடுகளெல்லாம் இஸ்லாமிய வங்கியை ஆதரிக்கும்போது, ஓமன் நாட்டு கவர்னர் தடைவிதித்தார். அவரின் கூற்றுப்படி, மற்ற வங்கிகளுக்கும் இதற்கும் ஏதும் வித்தியாசம் இல்லை என்பதுதான்.
இஸ்லாமிய வங்கிகள் என்ற பெயரில் பல நிழலான நடவடிக்கைகள் இஸ்லாமிய வங்கிகளிடம் உண்டு. இதைப்பாருங்கள்:
It should be pointed out that all the figures on the size and growth of Islamic banking must be treated with a degree of caution. As stated by Mahmoud Al-Jamal, a professor of Islamic economics at Rice University (Texas), no official authority is able to provide the International Monetary Fund with credible data on the financial and investment products of the Islamic banks. As he says, there are no "clear statistics about the activities of the Islamic banks, their number, and their branches." [9]
வட்டி என்று பெயரிடாமல் கடன்பெற்றவர்களிடம் வட்டிவாங்குகின்றன இந்த வங்கிகள்.
தங்களிடம் உள்ள பணத்தை பிற வங்கிகளில், நிறுவனங்களில் வட்டிக்குவிட்டு பணம் குவிக்கின்றன. இஸ்லாமியர்களின் பணம்தான் இப்படிப் பயன்படுகிறது.
இதையும் கொஞ்சம் பாருஙக்ள்:
After 15 years of studying the Islamic banks, Dr. Mohammad Ibrahim Al-Rumaithi, a professor of Islamic economics at the University of the United Arab Emirates, has concluded that there are three types of Islamic banks: those that adhere to the shari'a and are less preoccupied with making profit; those that ignore the shari'a completely, and those that only carry the title "Islamic." All three, Al-Rumaithi maintains, violate the shari'a in various ways."
http://islamizationwatch.blogspot.ca/2009/10/islamic-banking-financial-smoke-and.html
கடனட்டையின் வரலாறு:
http://www.thehistoryof.net/history-of-credit-cards.html
1950 marked the real beginning of the credit card most of us are familiar with today. Diner’s Club, Inc. introduced the first credit card that could be used at a variety of stores and businesses. This card was established primarily for businessmen to use for travel and entertainment expenses. The Diner’s Club gave its cardholders up to 60 days to make payment in full. Merchants were eager to accept the card because they found that credit card customers usually spent more if they were able to “charge it”.
The first bank to implement this system was the Franklin National Bank in New York. In 1951, after screening applicants, they issued the Charge-It card to those approved for credit. This card could be used by consumers at local retail establishments. It worked much like the credit card systems of today – the consumer made a purchase using the card; the retailer obtained authorization from Biggins Bank, and closed the sale. The Bank reimbursed the retailer and collected the debt from the consumer at a later date.
அன்புடன் புகாரி
Dear brother Buhari,
I appreciate your effort in finding out the practical difficulties in the Islamic Banking system. You have also presumed the 'motives' of the interest-based banks resorting to Islamic Banking. However, in our native's case, these are all far reaching difficulties which we may not encounter during our effort to alleviate the sufferings of small business ventures from the clutches of local interest agents. So, please go hand-in-hand with this new set up and spare what ever you can.
-adiraiahmad@gmail.com
நான் இப்பதிவில் தொட்டுக் காட்டிய வட்டி வங்கிகள் (National Commercial Bank, City Bank) எல்லாம் இஸ்லாமிய வங்கியியலின் பக்கம் வருகின்றன என்பது, அதன் அருமையை அவர்களும் உணர்கின்றார்கள்; அவர்களின் முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்குச் சேவை புரிய ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டவே. மற்றபடி, வேறு காரணமில்லை.
இஸ்லாமிய உலகில், நமது சம காலத்தில் சஊதியின் Islamic Development Bank, Faisaliya Bank, (UAE) Dubai Islamic Bank, மற்றும் மலேசியா, துருக்கி, பாகிஸ்தான், இந்தோனேசியா முதலான நாடுகளில் அமைந்து, வெற்றிகரமாக நடந்துவரும் இஸ்லாமிய வங்கிகள் நமக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகும்.
'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்பதற்கொப்ப, தலைப்பைக் கொஞ்சம் கவர்ச்சியாக இட்டேன். அதனால், கிடைத்த பலன்? அருமைச் சகோதரர்களின் அரிய கருத்தாடல்கள்! இதுவும் நன்மைதானே?
கவிதைக்கு கவர்ச்சியுண்டு, அதுதான் அணிகள். ஆனால், கட்டுரையின் கவர்ச்சியால் கருத்தே மாறிவிட்டதே.
அழகிய கடன் திட்டம் அதிரை பைத்துல்மாலின் அயராத உழைப்பால் 20 ஆண்டுகளாக செய்து வரும் சேவைகள் பலவிருக்க, கவர்சியான இந்த நோட்டிசையும் கட்டுரையையும் கட்டு கலங்கியவர்களில் நானும் ஒருவன்.
20 ஆண்டுகள் அனுபவமுள்ள அதிரை பைத்துல்மால் //( Towards Islamic Banking )// என்று கூற முழு தகுதி பெற்றிருந்தும், அதை கூற அவர்கள் விரும்பவில்லை.
அதிரை பைத்துல்மாலின் சேவைகள் தொய்வின்றி நலமுடன் செயல்பட வல்ல இறைவன் அருள்புரிவானாக.
அதிரை பைத்துல் மாலுடன் இணைத்து செய்தால்,இன்னும் வலுவாகும்.இன்ஷா அல்லாஹ்
assalamu alaikum thank you for comments we will appreaciate your encouragement NAME: AZAHIYA KADAN ARAKKATTALAI CURRENT A/C NO: 1201201001056 CANARA BANK, ADIRAMPATTTINAM BRANCH SUPPOSE IF YOU WOULD LIKE TO SENT THROUGH NET BANKING PLEASE FOLLOW THIS IFSC CODE (CNRB 0001201) WASSALAM
Sir mudinja enakku konjam help pannunga sir enna nambi 30members irukanga vattiyala romba kasta pattu kitu iruken sir
Assalamu Alaikkum bhai...
Help me please poor family naga romba kastapadrom
Post a Comment