இன்றைய திகதியில்
குடும்பம் ஆகட்டும் அல்லது ஒரு நிறுவனம் ஆகட்டும் அல்லது ஒரு சின்ன கடை ஆகட்டும்
எங்கெங்கும் நிறைந்திருக்கும் பயம் அல்லது புலம்பல்... நமக்கு இருக்கும் பொறுப்பு
நமக்கு கீழ் இருப்பவர்களுக்கு இல்லை என்பதே, சரி பொறுப்பு என்பது தன்னால் வந்து விடுவதற்கு
இது ஒன்றும் 2 1/2 மணியில்
காண்பிக்கப்படும் சினிமாவோ, அல்லது தினம் 30 நிமிட மணித்தியாளத்தில் காண்பிக்கப்படும் சீரியலோ
அல்ல. இது வாழ்க்கை, வீட்டில்
பெரியவர்கள் / அல்லது ஒரு நிறுவனத்தின் மேனேஜர் மேற்குறிப்பிட்டபடி புலம்ப காரணம்
தனது டீமை சரியாக வழி நடத்த முடியாத அந்த "திறமையற்ற' சூழல்தான். இப்படி எழுதிய
உடன் மேளாளர் சமூகம் என்னிடம்" எனக்கு கீழ் உள்ளவன் ஒரு சப்பெ பார்ட்டிப்பா, அதுக்கு என்னெபோய் குறை சொல்றே.." என பொங்க வேண்டாம். உங்களுடைய பதவியே “Manager” ..that means
you must know how to manage. இப்படி பட்ட வார்த்தைகள்
ஒரு
leadership qualityயை சார்ந்தது அல்ல.
பொறுப்புகளை
உணர்த்தி வேலை வாங்க தெரிவது ஒரு கலை. ஆனால் சில சாம்பார் பார்ட்டிகளுக்கு வேலை
வாங்க தெரியாததால் “அய்யோ பாவம்- அவன் என்ன செய்வான் - அவன் பச்சை மண்ணுப்பா” என்று அவர்கள் தலையில் உள்ளதை எல்லாம் ஊருக்கு
எடுத்துச்சொல்வார்கள்.
இது போன்று
நிர்வகிக்க தெரியாத ஆட்கள் குடும்பத்தில் இருந்து விட்டால் அவர்களின் பிள்ளைகளும்
அவ்வாறே உருவாகிறார்கள். இப்படி உருவாகும் ஆண்பிள்ளைகளை நம் ஊர் மாதிரி உள்ள
இடங்களில் வைரசோடு பெண் வீட்டுக்கு அனுப்பிவிடுவதால் பெண் வீட்டிலும் பொருளாதார
ரீதியாக ஒரு "ஸ்லோ" வை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
இதற்கு காரணம் பிள்ளைகளை
தனது நல்ல முடிவுகளை எடுக்க சின்ன வயதிலிருந்து பழக்க தவறுவது . உங்களது
மேற்பார்வை இருக்க வேண்டும். ஆனால் அவனது வேலைகளை நீங்கள் பார்க்க கூடாது . இந்த
சின்ன Fine line தெரிந்தால் உங்களுடைய பல நேரங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
முன்பு நான்
குறிப்பிட்ட S.W.O.T analysis மாதிரி இன்னொரு முக்கிய விசயம்
4D Formula.
Delegate / Destroy / Delay / Do It Your Self
DELEGATE
இது
ஜப்பானியர்களின் கார்ப்பரேட் ட்ரைனிங்கில் அதிகம் போதிக்கப்படுவது. இது ஒரு
குடும்பமாக இருந்தாலும் இது பயன்படும். முன்னேற முடிவெடுத்தவர்கள் முக்கியம் செயல்படுத்த
வேண்டிய விசயம்.
நிறுவனங்களில் அல்லது ஏஜென்சிகளில் ' இதை அவன் செய்ய முடியாது என்று மேல் நிலை பதவிகளில் உள்ளவர்கள் கீழ்நிலை வேலையில் உள்ளவர்களுக்காக செயல்படுவது... அல்லது "பொதிசுமப்பது" அந்த நிறுவனத்தின் Productive Timeஐ "சாப்டப்படும்".
குடும்பங்களில் சின்ன வயதினருக்கு தரப்படாத வாய்ப்பு தொடர்ந்து அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வர்க்கமாகவே மாற்றி விடுகிறது.
தனது உடலும், எண்ணமும், சேர்ந்து செயல்படும்போது மனிதன் தன்னை நம்ப ஆரம்பிக்கிறான். ஒருவனுடைய முதல் வெற்றி அவனது அடுத்த வெற்றியின் முதல்படி.
The best motivation is always “ your own result”
நம் ஊர் போன்ற
சின்ன இடங்களில் பாசத்தை காரணமாக்கி இளைஞர்களை சோம்பேறியாக்குவதில் மிகப்பெரிய
பங்கு வகிப்பவர்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்தான். பெரும்பாலான சமயங்களில் ஒரு
மகன் தனது பிள்ளைப் பருவத்திலிருந்து இளைஞன் ஆகிவிட்டான் என்பதை உணராமல் அவனுக்கு
எப்படி இவ்வளவு பெரிய வேலை செய்யத் தெரியும் என்று அவன் போட்டிருக்கும் துணிமனிகளை
துவைப்பதை கூட பெண்களே செய்து பிறகு அவன் தனியாக வேலை செய்யும் போது அல்லது
படிக்கும்போது உடல் வளையாமல் கஷ்டப்படுத்துகிறார்கள்.
எனவே வேலைகளை
பங்கிட்டு தர வீட்டிலிருந்து பழக்கம் ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஒரு
நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது குமுதம் / ஆனந்த விகடன் படிக்க அனுமதிக்கவில்லை
என்று முதலாளியை குறை சொல்லிவிட்டு நீங்கள் கொடுத்து அனுப்பிய ஊறுகாய் பாட்டிலைகூட
திறக்காமல் வீடு வந்து சேர்ந்துவிடுவான்.
ஒரு பிசியான தொழிலில் இருப்பவர் எனக்கு செல்ஃப் டிரைவிங்தான் பிடிக்கும் என்று அடம் பிடிக்காமல் தனக்காக ஒரு டிரைவர் வைத்துக்கொள்வதும் ஒரு Delegation தான்.
Destroy
இது பேப்பர்
மேனஜ்மென்ட்டில் முக்கியமானது. சில வேலைகளில் பேப்பர் அதிகம் நிரம்பி வழியும்
வேலைகளும் உண்டு. அதை அடிக்கடி 'கைபார்க்காமல்"
இருந்தால் எது தேவைப்படுமோ அந்த பேப்பர் நம் கண்ணில் சத்தியமாக அகப்படாது.
சிலர் தனது
பாக்கெட்டில் ஒரு கட்டு, பேப்பர் சிட்டை
என்று அலங்கோலமாக வைத்துக்கொண்டு 6 மாதத்துக்கு ஒரு
முறைகூட அதை பார்க்காமல் வைத்துக்கொண்டு தேவைப்பட்டதை எடுக்க தெரியாமல் திணறுவதை
பார்த்திருக்கலாம். இப்போது அது கொஞ்சம் விஸ்வரூபம் எடுத்து இ-மெயில்களில் திறந்து
பார்க்காத இ-மெயில் 1500வரை தாண்டும். அது சரி எத்தனை இ-மெயில்கள் சம்பந்தமில்லாதவர்களுக்கு வருகிறது. சிலரின் இ-மெயிலை
திறந்தால் 2009 - 2010 வருடங்களில்
மலிவான ஏர்டிக்கட் தருவதாக வந்த பட்ஜெட்
ஏர்லைனில் இ-மெயில்கள் இன்னும் திறக்கப்படாமலேயே "எதற்கும் தேவைப்படும்
என்று 'இருக்கும். அலுவலகங்களில்
தேவை இல்லாத பேப்பர்களை வீசத்தெரியாமல் வைத்திருக்கும் நபர்கள் ஒரு தடைக்கல்.
இவர்கள் காலம் போனது தெரியாமல் இன்னும் எம்.ஜி.ஆருக்கு ஒட்டுபோடுவதாக பேசுவார்கள்.
நீதி: தேவை இல்லாத
பேப்பரை கடாசுங்கப்பா....
Delay it
சில முடிவுகள்
அவசரப்படுவதால் கெடுவதும் உண்டு. தொழிலை பொறுத்தவரை போட்டிகள் வரும்போது எதிரியின்
வியூகம் தெரியாமல் எதிரியின் நண்பனிடமே உளரிக்கொட்டுவது. இது அலுவலகங்களில்
நடக்கும் அரசியலில் 'சகஜமப்பா". மற்றும் சில ப்ராடக்ட்கள் வெளியிடப்படும்போது
அதை மிஞ்ச சிறந்த இன்னொன்று வெளியிட சில கால தாமதம் தேவை. இது Financial Sectorல் தவிர்க்க முடியாதது. அவசரப்பட்டால் நாம்
வெல்ல முடியாது.
Do it Yourself
Delegation க்கும் Do it yourself க்கும் ஒரு razor edge அளவு தான் வித்தியாசம். Delegation என்று சோம்பேறியாகி விடக்கூடாது. அதே
சமயம் Do it your self என்று பொதி கழுதையாகி விடக்கூடாது.
இருப்பினும் உங்கள்
அனுபவம் உங்கள் செயல்திறன் சில வேலைக்கு நிச்சயம் தேவைப்படும், அதை நீங்கள் தான் செய்தாக வேண்டும். சில
வேலைகளை நீங்களே செய்தால்தான் உங்களுக்கும் திருப்தி இருக்கும். சில சமயங்களில்
விடுமுறை தராத சந்தோசத்தை வேலைகள் தருவதன்
காரணமும் அதுதான்.
இப்போதெல்லாம் மாணவர்களிடையே "காப்பி & பேஸ்ட்' கலாச்சாரம் அதிகமாகிவிட்டது. அது பரீட்சை எழுதும்போது நிச்சயம் பிரச்சினைகளை தரும். நீங்கள் படிக்க வேண்டியதை நீங்கள் மட்டும்தான் படித்து புரிந்துகொள்ள முடியும்.
தொழிலில் நீங்கள்
செய்ய வேண்டியதை கணக்கு தெரியாத ஆட்களிடம் கொடுத்து விட்டு “நான் எப்படி வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைத்தது
இந்த காசு தெரியுமா?” என்று உங்கள் ஃப்ளாஷ்
பேக் கதைக்கு எல்லாம் மரியாதை இருக்கும் என்று எப்படி இன்னும் 'அப்ரானி'யாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு
தெரியவில்லை.
குடும்பத் தலைவனாக
எடுக்க வேண்டிய முடிவுகளை தவற விட்டு விட்டு பிறகு பெண்கள் / பிள்ளைகள் ஏற்படுத்திய
பிரச்சினைகளை அகற்றவே பல பேருடைய ப்ராணன் போவது இப்போது ட்ரன்ட்.
So… take charge… accept your responsibilities first.
See you in next episode..
-ZAKIR HUSSAIN
14 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்.
படிக்கட்டு 12 .ல் கவனமாக கால் எடுத்து வைக்க வேண்டியுள்ளது.
// தொழிலில் நீங்கள் செய்ய வேண்டியதை கணக்கு தெரியாத ஆட்களிடம் கொடுத்து விட்டு “நான் எப்படி வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைத்தது இந்த காசு தெரியுமா?” என்று உங்கள் ஃப்ளாஷ் பேக் கதைக்கு எல்லாம் மரியாதை இருக்கும் என்று எப்படி இன்னும் 'அப்ரானி'யாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. //
இந்த இடத்தில் பூசி சாரி உரசி பார்க்கவேண்டிய விஷயம்.
கணக்கு பார்க்க தெரிந்தும் வியாபாரம் செய்ய தெரியாமலும்.வியாபாரம் செய்ய தெரிந்தும் கணக்கு தெரியாதவர்களும்.இருக்கத்தான் செய்கிறார்கள்.
// இப்போதெல்லாம் மாணவர்களிடையே "காப்பி & பேஸ்ட்' கலாச்சாரம் அதிகமாகிவிட்டது.//
உண்மையான விஷயம் காக்கா அவசர உலகத்தி நிறையபேர்.பல்லுக்கு பேஸ்ட் போடாமல் காப்பிகுடிக்க கூடியவர்கள் அதிகமாகிட்டே வர்றாங்க.
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஜாஹிர் காக்கா,
4D formulaவை எடுத்துரைத்தவிதம் அருமை காக்கா.... கார்ப்பெரேட் டிரைனிங்கை விட்டில் அமுல்படுத்துவது தவிர்க்க முடியாததுபோல் தான் தெரிகிறது.
//நம் ஊர் போன்ற சின்ன இடங்களில் பாசத்தை காரணமாக்கி இளைஞர்களை சோம்பேறியாக்குவதில் மிகப்பெரிய பங்கு வகிப்பவர்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்தான். பெரும்பாலான சமயங்களில் ஒரு மகன் தனது பிள்ளைப் பருவத்திலிருந்து இளைஞன் ஆகிவிட்டான் என்பதை உணராமல் அவனுக்கு எப்படி இவ்வளவு பெரிய வேலை செய்யத் தெரியும் என்று அவன் போட்டிருக்கும் துணிமனிகளை துவைப்பதை கூட பெண்களே செய்து பிறகு அவன் தனியாக வேலை செய்யும் போது அல்லது படிக்கும்போது உடல் வளையாமல் கஷ்டப்படுத்துகிறார்கள்.///
முழுக்க முழுக்க உண்மை காக்கா... இது போன்ற பிற்போக்கு சிந்தனையே எத்தனையோ நம் சமுதாய இளைஞர்களை சோம்பேறிகளாக்கியுள்ளது, இன்னும் தொடர்கிறது பல வீடுகளில்....
ஜாஹிர் காக்கா சொல்வது முற்றிலும் சரியே. நான் வேலை செய்யும் டாக்குமெண்ட் கண்ட்ரோலிங் டிப்பார்ட் மெண்டில் கொஞ்சம் அசந்தாலும் நிறுவனத்தின் ப்ராஜெக்ட் ஆவணங்கள் வந்து மேசையில் குவிந்து விடும். அசதி,மசதிகளை பார்க்காமல் அன்றாட ஆவணங்களை அன்றே சரி பார்த்து முறையே கோப்பிலிட்டால் எல்லாமே சரியாக இருக்கும். மூணு வருசத்துக்கு முன்னாடி உள்ள டாக்குமெண்ட்டை யாராவது வந்து கேட்டால் கூட டக்குண்டு எடுத்து கொடுத்து விட முடியும். ஆடிட்டிங்கிற்காக வரும் ஆடிட்டரும் பழைய ஆவணங்கள் எப்படி முறையாக கோப்பிலிடப்பட்டுள்ளன? என்று தான் பார்க்கிறார்கள்.
ஆவணங்களை அவ்வப்பொழுது சரிபார்த்து கட்டுக்கோப்பாக வைக்கவில்லையெனில் பிறகு ஆவணங்கள் நம்மை கட்டுப்படுத்தி வீட்டிற்கு அனுப்ப காரணமாகி விடும்.
"அஞ்சி நிமிசம் கூட மூத்திரைத்தை அடக்கி கட்டுப்படுத்த முடியாத நீ, எப்படி வருடம் முழுவதும் வர இருக்கும் ஆவணத்தை கட்டுப்படுத்தி ஆவணக்கட்டுப்பாட்டாளராக பணி செய்ய போகிறாய்?" என முன்பு நான் ஒருவனிடம் கேட்டது போல் பலர் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.
முன்னேற முத்தான வழிகளும் அறிய வேண்டிய அரிய விசயங்களும்!
தாரளமாய் தாருங்கள் உங்களின் உயரிய கருத்துக்களை!
அசத்தல் காக்கா.....................
//இது பேப்பர் மேனஜ்மென்ட்டில் முக்கியமானது. சில வேலைகளில் பேப்பர் அதிகம் நிரம்பி வழியும் வேலைகளும் உண்டு. அதை அடிக்கடி 'கைபார்க்காமல்" இருந்தால் எது தேவைப்படுமோ அந்த பேப்பர் நம் கண்ணில் சத்தியமாக அகப்படாது.//
இத இதத்தான் செய்தேன் இன்று ! :)
மத்தவங்களுக்கு செய்தி இருக்கோ இல்லையோ எனக்கு இதிலும் நிறைய சூடு இருக்கு !
உண்மையை ஒத்துக்கத்தான் வேனும், அதோடு திருத்திக்கவும் வேண்டும் என்றும் கற்றுக் கொண்டேன்.
மாஷா அல்லாஹ் படித்ததும் ஒரு “ரெட் புல்லை “ ஃபுல்லா குடித்தால் ஏற்படும் புத்துணர்ச்சி மனதில்....ரெட் புல்லின் புத்துணர்ச்சி சிறிது நேரத்தில் மங்கிவிடும்....ஆனால் உங்கள் ஆக்கம் தந்த உத்வேகம்....என் வேலையில் நிச்சயம் ஒரு வேகத்தை ஏற்படுத்தும்.........4D மெட்டர் இர்ஷாத் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் “செம “
//எனவே வேலைகளை பங்கிட்டு தர வீட்டிலிருந்து பழக்கம் ஏற்படுத்த வேண்டும்/// இப்படி செய்தால் அவன் வாழ்வில் சந்திக்கும் முக்கால்வாசி பிரச்சனைகளை சாமளிக்கதெரிந்துவிடும்......
எனக்கு தெரிந்த ஒரு கம்பெனியின் CEO சொல்லுவார் "Don't come to me with problems, come to me with solutions " இதனை வீட்டில் இருந்தே பழக்கவேண்டும்....
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
படிக்கட்டுகள் ஏற்றம் 12 -
Delegate / Destroy / Delay / Do It Your Self
முழுவதும் நல்ல தேவையான
அறிவுரை! வாழ்த்துக்கள்! ஜாகிர்!
//எனவே வேலைகளை பங்கிட்டு தர வீட்டிலிருந்து பழக்கம் ஏற்படுத்த வேண்டும். //
இது என் தந்தையின் அட்வைஸ்.சரியா சொன்னீங்க காக்கா.ஒரு பானை சோற்றுக்கு,ஒரு சோறு பதம், இந்த ஒரு வார்ஹ்த்தை
மன்னிக்கவும்.வார்த்தை என வாசிக்கவும்
To Bro Abu Bakar,
//இந்த இடத்தில் பூசி சாரி உரசி பார்க்கவேண்டிய விஷயம்.
கணக்கு பார்க்க தெரிந்தும் வியாபாரம் செய்ய தெரியாமலும்.வியாபாரம் செய்ய தெரிந்தும் கணக்கு தெரியாதவர்களும்.இருக்கத்தான் செய்கிறார்கள்.//
நான் குறிப்பிட்டது கணக்கு தெரியாதவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து பிறகு அவர்கள் செய்யும் "ஒலப்பலுக்கு" நாம் புலம்புவது.
To Bro Thajudin,
//இது போன்ற பிற்போக்கு சிந்தனையே எத்தனையோ நம் சமுதாய இளைஞர்களை சோம்பேறிகளாக்கியுள்ளது, இன்னும் தொடர்கிறது பல வீடுகளில்.... //
பிற்போக்கு என்று தெரிந்தும் இன்னும் விடாமல் இருப்பதுதான் கொடுமை.
To Bro MSM Naina Mohamed
//மூணு வருசத்துக்கு முன்னாடி உள்ள டாக்குமெண்ட்டை யாராவது வந்து கேட்டால் கூட டக்குண்டு எடுத்து கொடுத்து விட முடியும்.//
நன்று ....இதைத்தான் நானும் என் மேனேஜரிடம் கற்றுக்கொண்டேன்.
Yasir....don't drink RED BULL very often...the root they are using in the drink can develop some health problem.
சகோ அலாவுதீன், MH JahabarSadik & அர அல ...உங்கள் கருத்துக்களும் இப்போது சாகுல் கமென்ட் மாதிரி [ ஹத்து] ரொம்ப சின்னதா ஆயிடுச்சி....ரொம்ப பிசியா???
அபு இப்ராஹிம்...ஏதாவது காமெடியா எழுதனும்னு கை அரிக்குதே...ஏதாவது தலைப்பு கொடுங்களேன்....தலையை பிச்சுக்கிற மாதிரி தலைப்பு இருக்க கூடாது...
//அபு இப்ராஹிம்...ஏதாவது காமெடியா எழுதனும்னு கை அரிக்குதே...ஏதாவது தலைப்பு கொடுங்களேன்....தலையை பிச்சுக்கிற மாதிரி தலைப்பு இருக்க கூடாது...//
சபுராளிங்க கிட்டே காமெடியப் பத்தி கேட்கிறீங்களே காக்கா, அவங்களே காமெடியாத்தான் தெரிவாங்க கரு அவங்க தான்னு வச்சுக்குங்களேன் :)
எனது உறவினர் என்னிடம் படிக்கட்டுகள் ,,ஏற்றம் .
கட்டுரை படித்து பாருங்கள் அற்புதமாக இருக்கிறது ..
அவர் கூறியது மிக சரியே ..இது போன்ற கருத்துக்கள்
மின் பிம்பத்தில் மட்டுமில்லாது புத்தகங்களாக
அச்சாக வேண்டும் ...சிலருக்கு வியாபாரம் தெரியும்
கணக்கு தெரியாது ..மிக சரி வியாபாரம் பெருகி கணக்கு தெரியாமல்
திண்டாமல் உண்மையான ஊழியரை நியமித்தால் ..
/நம் ஊர் போன்ற சின்ன இடங்களில் பாசத்தை காரணமாக்கி இளைஞர்களை சோம்பேறியாக்குவதில் மிகப்பெரிய பங்கு வகிப்பவர்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்தான். //
இன்னிக்கு வேலையென்று வெளியே போகும்போது அவர்கள் படும் கஷ்டம் சொல்லிமாளமுடியாது, இதுக்காகவேண்டிய பார்த்துக்கொண்டிருக்கும் வேலையையும் விட்டுவிட்டு ஊர் வந்தவங்க நிறைய...
4D விளக்கம் அருமை காக்கா
//குடும்பங்களில் சின்ன வயதினருக்கு தரப்படாத வாய்ப்பு தொடர்ந்து அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வர்க்கமாகவே மாற்றி விடுகிறது.
இதனால் இவர்களின் மேனேஜிங், முடிவெடுத்தல் திறமையும் மழுங்கிவிடுகிறது...
Thanx to brother Adirai Siddik & Abdul Malik, we will meet in next episode.
Post a Comment