அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).
பள்ளி கோடை விடுமுறையில் நமது சமுதாயத்தில் நிறைய வரதட்சணை திருமணங்கள் நடக்க இருக்கிறது. அதனால் இந்த அத்தியாயத்தை வரதட்சணையிலிருந்து தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என்பதால்: வரதட்சணை, கைக்கூலி என்ற பெயரை யார்??? கண்டுபிடித்திருப்பார்கள்!!! இந்த வார்த்தை எங்கிருந்து வந்திருக்கும். இதன் சரியான விளக்கம் என்ன என்று யோசித்து... விடை கிடைக்காமல் இணையத்தில் தேடினேன் கடைசியில் விக்சனரி என்ற தமிழ் தளத்தில் கீழ்க்கண்ட விளக்கம் கிடைத்தது:
வரதட்சணை:- திருமணத்தின் போது மணமகள் மணமகனுக்குத் தரும் (அல்லது மணமகன் மணமகளுக்குத் தரும்) பணம், நகை முதலிய சீர் வரிசை.
- நாட்கூலி
- லஞ்சம்
- அடியாள்
- கையிலே கொடுக்கும் விலைப்பொருள்
- வரதட்சணை; மணக்கூலி; மணமகனுக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் தொகை
மொழிபெயர்ப்புகள்:
ஆங்கிலம்- daily wages
- bribe
- agent; underling
- cash payment
- money paid by the parents of the bride to the bridegroom
விளக்கம்
· 'கைக்கூலி'- இந்தச் சொல்லுக்கு கையூட்டு, லஞ்சம் என்ற அர்த்தமும் உண்டு. வரதட்சிணை என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு தமிழில் சரியான வார்த்தை கைக்கூலி என்பதுதான்.
(விக்சனரி தளத்திற்கு நன்றி!)
வரதட்சணை பெயர் வந்த விபரம்:
மேற்கண்ட விளக்கத்தில் வரதட்சணை என்ற சொல் சம்மஸ்கிருதத்தில் இருந்து வந்துள்ளது. வரதட்சணை என்ற சொல்லுக்கு தமிழில் கைக்கூலி என்று பெயர். (கைக்கூலிக்கு : லஞ்சம் என்ற பெயராம்) இந்த வரதட்சணை என்ற பழக்கம் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு சொந்தக்காரர்களான இந்தியாவின் பூர்வகுடி மக்களிடமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. (பிறகு எங்கிருந்து? வந்தது!).
இந்தியாவிற்குள் ஆரியர்களின் வருகை:
மத்திய ஆசியப்பகுதியிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் காட்டித் தந்த பழக்கமாக இந்த வரதட்சணை இருக்கிறது. (வரும் தட்சணை - வரதட்சணையாக மாறி இருக்குமோ? ) ஏனென்றால் தட்சணை தட்டில் நீங்கள் எதையும் போடவில்லை என்றால் காரியம் நடக்காது. தர்காவிலும் ஒன்றேகால், பதிணொன்றே கால் இப்படி தட்சணையை அவர்கள் வைத்திருக்கும் தட்டில் போடவில்லை என்றால் கையில் இருக்கும் விளக்கமாறு போன்ற மயில் இறகால் ஆசி கிடைக்காது, பாத்திஹா என்ற சடங்கும் நடக்காது. ஆக இந்த தட்சணை பல வழிகளில் இறை மறுப்பாளர்களிடம் குடி கொண்டுள்ளது. (தட்டில் தட்சணை வாங்குவதால் அதை பிச்சை என்றும் அழைக்கலாமா?).
ஆட்டையும், மாட்டையும் மண்ணின் மைந்தர்களின் கையில் கொடுத்து விட்டு அவர்களின் வசதிக்காக மக்களை பல ஜாதிகளாக பிரித்து ஆண்டான், அடிமை என்ற நிலையை உருவாக்கி அவர்கள் மட்டும் உயர்ந்த ஜாதி என்று இந்தியாவின் வளங்களை தங்களுக்குச் சொந்தமானதாக ஆக்கிக் கொண்டு வரலாறு நெடுகிலும் மனித இரத்தங்களை கொடூரமான முறையில் சிந்த வைத்து எத்தனை விதமான கொடுமைகள் இருக்கின்றதோ? அத்தனையையும் செய்து மனித விரோத அராஜகமான ஆட்சியை அன்று முதல் இன்று வரை செய்து வருகிறார்கள் ஆரியர்கள். ( 3 சதவீத ஆரியர்கள் 97 சதவீத இந்திய மண்ணின் மைந்தர்களை அடிமைகளாக வைத்து அவர்களின் வளங்களை அனுபவித்து வருவது கொடுமையல்லவா??? )
ஆரியர்கள் இந்தியாவிற்குள் குடியேறியது போல் இத்தாலி, கிரீஸ், ஜெர்மன் போன்ற நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்கள். அங்கெல்லாம் இந்தியாவில் உருவாக்கியது போல் வர்ண பாகுபாடு, ஜாதிபாகுபாடு என்ற கொடுமையெல்லாம் அவர்கள் செய்யவில்லை. இந்தியாவின் அப்பாவியான மண்ணின் மைந்தர்களை வர்ண பாகுபாட்டால் பிரிப்பது அவர்களுக்கு சுலபமாகிவிட்டது (அவர்களின் பரம்பரை உறவுகள் மற்ற நாடுகளில் இருப்பதால்தான் இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்து விட்டு அந்த நாடுகளின் விசுவாசிகளாக மாறி விடுகிறார்கள்).
(என்ன காக்கா சிந்து சமவெளி நாகரீகத்திற்கு போய்விட்டீர்களே! நாங்கள் அந்த பாடத்தை வாத்தியார் நடத்தும்பொழுதே கவனிக்கவில்லையே! என்று சொல்பவர்களும், தூங்கிவிட்டவர்களும் இப்பொழுது பெஞ்சின் மேல் ஏறி நிற்க வேண்டும். முட்டி போடும் சிரமத்தைத் தரவில்லை. (பெஞ்ச் இப்பொழுது இல்லையே! நாற்காலிதான் இருக்கிறது என்றால் அதன் மேலாவது ஏறி நிற்க வேண்டும். இன்னும் தொடர்ந்து வரலாறு வர இருப்பதால் லீடர்: அபுஇபுறாஹிம் பெஞ்சில் மீது நிற்பவர்கள் இறங்கி விடாமல் பார்த்துக் கொள்ளவும், வாத்தியார் திரும்பி வரும் வரை).
ஆரியர்களின் வரலாற்றுப் புரட்டு:
ஆரியர்களை வந்தேறிகள் என்ற வார்த்தைகளால் அழைப்பது அவர்களுக்குப் பிடிக்காத காரணத்தால், குள்ளநரிகள் நீண்ட காலமாக யோசித்து வந்தார்கள். ஆட்சி அவர்கள் கையில் வந்தவுடன் உடனடியாக வரலாற்றுத்துறையை தங்கள் வசம் எடுத்து எப்படி புரட்டு வேலை செய்யலாம் என்று திட்டமிட்டு (பூர்வ குடி மக்களை) மண்ணின் மைந்தர்களை வந்தேறிகளாகவும், ஆரியர்கள்தான் உண்மையான மண்ணின் மைந்தர்கள் என்றும் வரலாற்றை மாற்றி எழுத ஆரம்பித்து விட்டார்கள் (என்ன புரட்டு செய்தாலும் உண்மையை மறைக்க முடியுமா?).
இந்தப்புரட்டுக்கார ஆரியர்கள் மனித குலத்திற்கு அன்று முதல் இன்று வரை செய்த, செய்து கொண்டு இருக்கின்ற துரோகத்தை எழுத ஏடு போதாது, இதுவே தொடராகி விடும். அதனால் வரலாறு முழுவதும் மனித குலத்திற்கு துரோகம் செய்தே வாழ்ந்து வருகின்ற இவர்களைத் தட்டிக் கேட்கும் பொறுப்பை வல்ல அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டு, வரதட்சணை என்ற பழக்கம் இஸ்லாத்திற்குள் நுழைந்தது எப்படி என்பதை இனி பார்ப்போம்.
இந்தியாவில் இஸ்லாம் ஒளி வீச ஆரம்பித்த விபரம்:
அய்யாமுல் ஜாஹிலிய்யா (அறியாமைக்காலம்) அரபுகளிடமும் பெண்களிடம் பணமும், தங்கமும், வீடும் கை நீட்டி வாங்கும் பழக்கம் இருந்ததில்லை. பிறகு எப்படி நுழைந்தது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் யாரும் பரம்பரை முஸ்லிமும் கிடையாது. நமது முன்னோர்கள் இரண்டு, மூன்று தலைமுறைக்கு (அதற்கு மேலும் இருக்கலாம்) முன்பாக பல தெய்வ நம்பிக்கைக்கு உரியவர்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். (இந்த பல தெய்வ நம்பிக்கையை கொண்டு வந்ததும் ஆரியர்கள்தான் என்று தெரிகிறது).
ஆரியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் மக்களை பல ஜாதிகளாக பிரித்து அடிமையாக வைத்திருந்தார்கள். மண்ணின் மைந்தர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்து வந்த நிலையில் ஜாதிப் பாகுபாட்டால் சம உரிமை, கடவுளை வழிபடும் உரிமை, சுதந்திரமாக வாழும் உரிமை எதுவும் இன்றி விடுதலையை எதிர்பார்த்து மிகப்பெரிய ஏக்கத்துடன் நடைப்பிணமாக வாழ்ந்து வந்த நிலையில்; அரபு வணிகர்கள் இந்தியாவிற்குள் வர ஆரம்பித்தார்கள். வல்ல அல்லாஹ்வின் அருளால் இஸ்லாம் ஒளி வீசு ஆரம்பித்தது.
இந்த அரபு வணிகர்களின் நேர்மை, வாக்குத்தவறாமை, இறைவனை வழிபடும் முறைகள், சகோதரத்துவம் போன்றவைகளால் கவரப்பட்டு இஸ்லாமே சிறந்த மார்க்கம் என்று ஆரத் தழுவிக் கொண்டார்கள். (ஆரம்ப காலங்களில் பயான் செய்யவில்லை, வாள் கொண்டு மிரட்டவில்லை, கட்டாயப்படுத்தவில்லை, சுயவிருப்பத்தின் அடிப்படையில் இந்திய மண்ணின் மைந்தர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்). (அன்று முதல் இன்று வரை இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையை, சகோதரத்துவத்தை கண்டு வியந்து நேர்வழி பெற்றவர்கள்தான் அதிகம். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஆதாரங்கள் மலைபோல் குவிந்துள்ளது ).
பிறகு ஏன்? இஸ்லாத்தை வாளால் பரப்பினார்கள் என்று இந்த ஆரியப்பண்டாரங்களும், உலகப்பண்டாரங்களும் அலறுகிறார்கள். எல்லாப்பண்டாரங்களுக்கும் இஸ்லாம் நல்ல மார்க்கம் என்பது தெளிவாகத் தெரியும். மனமுரண்டின் காரணமாக வெறுக்கிறார்கள். (இறை மறுப்பில் இருந்த அக்கால அரபுக்கள் குர்ஆன் ஓதப்பட்டால் காதில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக காதை அடைத்துக் கொள்வார்களாம். காதில் நுழைந்து விட்டால் இஸ்லாம் தம்மையும் ஈர்த்து விடும் என்ற பயத்தில்) வெறுப்பதற்குக் காரணம் இஸ்லாம் வந்து விட்டால் முதலில் அடி வாங்குவது இவர்களின் சொகுசு வாழ்க்கை. மனிதர்கள் அனைவரும் சகோதரர்களாகி விட்டால் யாரையும் அடிமைப்படுத்தி இவர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்ள முடியாது. இவர்களின் பதவிகளும் பறிக்கப்படும், உண்மையான ஜனநாயகம் ஆட்சிக்கு வரும்.
முன்னோர்களிடம் வரதட்சணை :
இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட முன்னோர்களிடம்; ஆரியர்கள் இவர்களுக்கு காட்டித் தந்த பழக்கங்களில் ஒன்றான வரதட்சணையை இஸ்லாத்திற்குள்ளும் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள்.
நம்மிடம் உள்ள வரதட்சணை பழக்கம்:
மலேசியா மாப்பிள்ளை, ரங்கூன் மாப்பிள்ளை, இலங்கை மாப்பிள்ளைகளுக்கு எல்லாம் சந்தை விலை மிக மிக குறைவாகத்தான் இருந்து வந்துள்ளது. அரபு நாடுகளுக்கு 1975 ஆம் வருடத்திற்கு பிறகு நம் சமுதாய இளைஞர்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். இதன் பிறகுதான் மாப்பிள்ளைகளின் சந்தை விலை உயர ஆரம்பித்தது
அரபு நாட்டுக்குச் சென்ற கப்பலுக்கு போன மச்சான்களின் சந்தை விலை ராக்கெட் வேகத்தில் சந்திர மண்டலத்தைத் தொட்டு விட்டது. வருடா வருடம் வித விதமான பெயர்களில் பெண்களின் வீட்டில் பகல் கொள்ளை பல விதங்களில் நடைபெற்று வருகிறது.
பிற மதங்களில் 7 பவுன் 10 பவுன் வரதட்சணை கொடுத்தாலே அதிகமாம். இஸ்லாமிய திருமணங்களில் 50 பவுன், 100 பவுன் வரதட்சணையாக கொடுப்பது மிக மிகக் குறைவாம்.
வரும்! - தட்சணையும் வேண்டாம். சீ! - தனமும் வேண்டாம்.
''அல்லாஹ்'' அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன்: 5:104)
நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர் வழி நடக்கும் போது வழி கெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீங்கள் அனைவரும் மீள்வது அல்லாஹ்விடமே. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான். (அல்குர்ஆன் : 5:105)
வாசகர்களுக்கு ஒரு கேள்வி?: நம் முன்னோர்கள் மார்க்கத்திற்கு முரணாக நமக்கு காட்டித் தந்த வழி முறைகளை அவசியம் பின்பற்ற வேண்டுமா???
25 Responses So Far:
ASSALAMU ALAIKKUM WARAHMATHTHULLAHI.
DEAR BROTHER JANAB. S. ALAUDEEN,
வரலாற்றுச் சுவடிகளின் பக்கங்களின் துணையோடு தொடர் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பாராட்டுக்கள்.
வஸ்ஸலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
சகோதரர் S.அலாவுதீன் அவர்களுக்கு,
தொடர் இன்றைய நம் சமுதய பெண்கள் நிலை மற்றும் அவர்களுக்கான அறிவுரைகள் நிறைந்து இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் இருந்தேன், மாஷா அல்லாஹ், பண்டைய காலம் தொட்டு தொடர் எடுத்துக்காட்டுகள் எடுத்துக் கொண்டு வருகிறது.
மேலும் ஆர்வத்தை கூட்டுகிறது, தொடருங்கள் நிறைய உண்மைகளை குர்ஆன் மற்றும் நபிவழி வாயிலாக ஆராய்ந்தும் சொல்லுங்கள் இன்ஷா அல்லாஹ்..
தரமான கட்டுரைகளை வாசிக்கும் திருப்தி.
//வாசகர்களுக்கு ஒரு கேள்வி?: நம் முன்னோர்கள் மார்க்கத்திற்கு முரணாக நமக்கு காட்டித் தந்த வழி முறைகளை அவசியம் பின்பற்ற வேண்டுமா???//
வேண்டவே வேண்டாம். ஆனால்!
ஒற்றுமை பற்றி போதிக்கும் உன்னத மார்க்கம் இஸ்லாம் ஒன்றே!
1982 ல் தமிழகத்தில் ஏகத்துவம் என்ற பெயரில் பிடித்த கொடி, இன்று ஏகப்பட்ட பிரிவுகளாகப் பிரிந்து, 20 ஆண்டுகளில் 20 க்கும் மேற்பட்ட பிளவுகளாக பிளந்து, மக்களை குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறோமே அதற்கு தீர்வுதான் என்ன?
ஏகப்பட்ட ஏகத்துவ வாதிகள் ஒற்றுமையை போதிக்கும் உன்னத மார்க்கமாம் இஸ்லாத்தை பின்பற்றி ஒருங்கிணைவது எப்போது?! அப்போதுதான் நம் முன்னோர்கள் மார்க்கத்திற்கு முரணாக செயல்பட்டார்களா? என்பதையும் ஆய்வு செய்ய முடியும்.
குறிப்பு: இன்றைய இளைஞர்கள்தான் எதிர்கால முன்னோர்கள். 50 ஆண்டுகளுக்குப் பிறகு, "நம் முன்னோர்கள் ஏகத்துவம் என்ற பெயரில் ஏகப்பட்ட பிளவுகளாக பிளந்து, ஒற்றுமையை இழந்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வந்தார்களே அவர்களை பின்பற்றலாமா?" என வருங்கால நம் பேரன்மார்கள் சந்ததியினர் எழுப்பும் வினாக்களுக்கு என்னதான் பதில்???!!!
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஜஸக்கல்லாஹ் ஹைரன்.. அலாவுதீன் காக்கா...
வரதட்சனை தொடர்பான வரலாற்று செய்திகளை பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றி காக்கா..
தொடருங்கள் உங்கள் சேவையை.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பான நூர் முஹம்மது காக்கா,
உங்களின் ஆதங்கமே என்னுடைய ஆதங்கமும். நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரிவினைகள் பற்றி விரிவாக தனிபதில் விவாதிக்கலாம்...
சமூக சீர்கேடுகளை களையும் நல்ல எண்ணத்தில் பதியப்பட்டுள்ள இந்த பதிவு தொடர்பாக கருத்திடலாமே....
//வாசகர்களுக்கு ஒரு கேள்வி?: நம் முன்னோர்கள் மார்க்கத்திற்கு முரணாக நமக்கு காட்டித் தந்த வழி முறைகளை அவசியம் பின்பற்ற வேண்டுமா???//
இந்த கேள்விக்கு பதில் சரி அல்லது தவறு என்றால் தெளிவாக விளக்கம் தரலாமே,
கேள்விக்கு கேள்விகள் கேட்டு இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாத விவாதத்திற்கு இழுத்துச்செல்வது சரியா? ஏற்கனவே இருக்கும் பிரிவினைகள் போதாதா?
இன்ஷா அல்லாஹ் விரிவாக மற்றொரு பதில் விவாதித்து தெளிவுபெறலாம். அதுவரை தயவுசெய்து காத்திருக்கலாமே காக்கா....
நம் ஒற்றுமைக்காக அல்லாஹ்விடம் மட்டுமே நாம் துஆ செய்ய முடியும்.
வழக்கத்தை விட வீரியம் நிறைந்ததாக உள்ளது சகோ. அலாவுதீன் அவர்களின் இத்தொடர். வாழ்த்துக்கள்.
"மார்க்கத்தில் பல பிரிவுகளுக்கும்/பிளவுகளுக்கும் ஊட்டப்படும் ஊட்டம், சத்துக்குறைவான ஒற்றுமைக்கு கொடுக்கப்படுவதில்லையே ஏன்?"
நபி ஈஸா அலைஹி...அவர்கள் உலகுக்கு திரும்பும் வரை இது தொடருமா? இல்லை அதற்கு முன் ஓரணியில் திரளுமா? அந்த அல்லாஹ்வுக்கே எல்லாம் விளங்கும்.
ஒட்டு மொத்த நம்ம ஊரும் (என்னையும் சேர்த்துத்தான்) மார்க்கத்திற்கு புரம்பான வகையில் திருமணத்திற்கு பின் மனைவி வீட்டில் வசித்து வருவதால் என்னதான் ஐங்காலத்தொழுகை தொழுது வந்தாலும், ரமழான் நோன்பு தவறாது பிடித்து வந்தாலும், உம்ரா, ஹஜ் செய்து வந்தாலும், இன்னும் பிற நல்ல அமல்கள் செய்து வந்தாலும் தூய இஸ்லாத்தின் இன்பத்தை இது வரை சுவைக்க/அனுபவிக்க இயலாமல் தவித்து வருவதாகவே உணரப்படுகிறது. (ஒரு சிலர் இதில் விதிவிலக்காக இருக்கலாம். அது அவரவர்களுக்குத்தான் தெரியும்).
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ.,அலாவுதீன் உங்களின் தொடர் ஆரம்பம் தெளிந்த விளக்கங்களுடனும் அழகிய நடைகளுடனும் அமர்க்களப்படுகிறது.வாழ்த்துக்கள். நிற்க,// வாசகர்களுக்கு ஒரு கேள்வி?: நம் முன்னோர்கள் மார்க்கத்திற்கு முரணாக நமக்கு காட்டித் தந்த வழி முறைகளை அவசியம் பின்பற்ற வேண்டுமா???//
தன் சந்ததியினருக்கு முதலில் மார்க்கத்தைத்தான் போதிப்பார்கள்.மார்க்கத்திற்கு முரணானதை போதிக்க மாட்டார்கள்.மேலும்,
முன்பெல்லாம் எதையும் முஸ்லீமானவர்கள் தொடங்குமுன்,பிஸ்மில்லாஹ்..
அல்லாஹ் துணை என்றுதான் எழுதவோ படிக்கவோ செய்வார்கள் ஆனால்
நீங்கள் ஆரம்பிப்பதோ அல்லாஹ்வின்திருப்பெயரால்..என்று நாளை உங்களை முன்னோராக கொண்ட சந்ததி ஏதாவது ஒரு விண்ணப்பத்திற்கு...
எழுத வேண்டிய தருணம் வரும்போது,உயர்திரு ஐயா என்று எழுதினால்.....
அந்த சந்ததி எல்லாம்வல்ல அல்லாஹ்வுக்கே வெறும் திருதானே என் முன்னோர் காட்டித்தந்தனர் என்று வியக்காதோ.............?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மாஷா அல்லாஹ்! இத்தொடர் சமூகத்தின் அனைத்து அசுத்தங்களையும் துடைத்தெறிந்து தூய்மையான இஸ்லாமிய சமுதாயம் உருவாக வழிகோலட்டும்!
//வாசகர்களுக்கு ஒரு கேள்வி?: நம் முன்னோர்கள் மார்க்கத்திற்கு முரணாக நமக்கு காட்டித் தந்த வழி முறைகளை அவசியம் பின்பற்ற வேண்டுமா???//
முன்னோர்கள் மட்டுமல்ல, இன்னோர்களானாலும், பின்னோர்களானலும் அவர்கள் காட்டித்தரும் வழி அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாற்றமாக இருந்தால் அதைத் தூக்கி எறிந்துவிட்டு அல்லாஹ் மற்றும் அவனது தூதர் காட்டித்தந்த வழிமுறைகளைப் பின்பற்றுவோரே முஸ்லிம்கள்(அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்கள்) எனப்படுவர்.
அல்லாஹ் மிக்க அறிந்த்தவன்!
ம அஸ்ஸலாம்
அபுஈசா
முதலில் ஆண்கள் சரியாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் வரதட்ச்சனை கொடுமையை ஒழிக்கலாம். எல்லாம் பெண்கள் இஸ் ட்டத்தில் நடப்பதால் தான் வரதட்ச்சனை கொடுமையை ஒழிக்க முடிய வில்லை நம் அதிரை நகரில்.
பெண்கள் கேட்கிறதையெல்லாம் கொடுக்க பொய் தான் வரதட்ச்சனை கொடுமை மிக அதிகமாக உள்ளது. ஆண்கள் சரியாக இருக்க வேண்டும் வெளிநாட்டில் வேலை பார்த்து எல்லா பணம்,காசுகளைஎல்லாம் அப்படியை வீட்டிற்கு அனுப்பிவிடுகிறார்கள் ஆதலால் தான் வரதட்ச்சனை நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே போகுது.
வரதட்ச்சனையை தடுப்பதற்கு ஆண்கள் உறுதியாக இருங்கள்.
//வாசகர்களுக்கு ஒரு கேள்வி?: நம் முன்னோர்கள் மார்க்கத்திற்கு முரணாக நமக்கு காட்டித் தந்த வழி முறைகளை அவசியம் பின்பற்ற வேண்டுமா???//
"முரணாக" என்று கேள்வி இருப்பதனால் நிச்சயமாக அப்படி பின்பற்ற மார்க்கம் அனுமதிக்க வில்லை அதனையும் நம் முன்னோர் சொல்லித் தந்திருக்கிறார்கள்...
முன்னோர்கள் நமக்கு முரணாக சொல்லித் தந்திருக்க மாட்டார்கள் என்றே அதுநாள் வரையிலும் இருந்தோம், நாம் சுயமாக அறிந்து ஆராயும் வரையில்.
நமது புரிதலில் முரண் இல்லாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக !
நல்ல விளக்கங்களுடனும்,சிறப்பாகவும் ”சகோதரி’ வீறு நடை போடுகின்றார் வாழ்த்துக்கள் காக்கா
அபுஇபுராஹிம் காக்காவின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்...எனக்கு தெரிந்து நம் மூதாதையர்கள் மார்க்கத்திற்க்கு”முரணான” செயலை செய்யுமாறு வழியுறுத்தவில்லை என்றே நினைவில் உள்ளது...
வரதட்சனை வேண்டாம், வாங்காதே, ஏழைக்குமர்களின் கண்ணீர் கதை இப்படி எந்த வகையில் கத்தி கத்தினாலும் நம் தொண்டைதான் வரட்டுமே தவிர இந்த வரட்டும் கவுரவம்(?) (வரதட்சனையின் விலையை பொறுத்து கவுரவம் வருதாம்) விட்டு வெளிவர மறுக்குறாங்க நம் சமுதாயம்... அல்லாஹ்தான் நேர்வழி காமிக்கனும்..
உன் கட்டுரைக்கு ஆதாரங்களோடு தகவல்களைப் பதிவதில் உன் உழைப்பு தெரிகிறது. "சகோதரியே" நல்லபடியாக தொடர அல்லாஹ் ஆத்திக் அஃஃபியா, இன்ஷா அல்லாஹ்.
வாழ்த்துகள்.
//வாசகர்களுக்கு ஒரு கேள்வி?: நம் முன்னோர்கள் மார்க்கத்திற்கு முரணாக நமக்கு காட்டித் தந்த வழி முறைகளை அவசியம் பின்பற்ற வேண்டுமா???//
மார்க்கத்தில் மட்டுமல்ல, எல்லா காரியங்களிலும் நல்லதுக்கு முரணாகவோ; நன்மைக்கு முரணாகவோ; சொர்க்க நாட்டத்திற்கு முரணாகவோ; ஆரோக்கியத்திற்கு முரணாகவோ மூதாதையர்கள் மட்டுமல்ல நானோ நீயோ; இவரோ அவரோ யார் சொன்னாலும் கேட்கவேண்டியதில்லை.
நம் முன்னோர்களுக்குத் தெரிந்திருக்கிறது அவர்கள் பின்பற்றிய வழி ஈடேற்றம் தராது என்று. எனவேதான் அவர்களின் முன்னோர்கள் காட்டித்தந்த வழிமுறைகளை விட்டு, கலிமாச் சொல்லி இஸ்லாத்தை ஏற்றனர். எனக்கு இந்த மார்க்கத்தைப் பிறப்பிலேயேத் தந்துதவி என் இம்மை வாழ்க்கையைச் செம்மையாக்கினர். புத்தியிற் சிறந்த என் முன்னோர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களைத் தூற்றி நன்றி கெட்டவனாவதிலிருந்தும் அல்லாஹ் என்னைப் பாதுகாப்பானாக.
அலாவுதீன், ஒரு காரியம் முரணானது என்று தீர்மாணிப்பது எது அல்லது யார் என்பதில்தான் பிரச்னையேத் தவிர; முன்னோர்கள் பெரும்பாலும் நன்மையையேக் காட்டித்தந்துள்ளனர்.
ஆயினும் நாம் மட்டும் எல்லாம் அறிந்துவிட்டவர்களா என்ன? நம்மைப் போலவே நம் முன்னோர்களும் தத்தமக்குத் தெளிவில்லாத விஷயங்களை அப்படியே பின்பற்றியிருக்கலாம். அவற்றையெல்லாம் ஆய்வு செய்யாமல் அப்படியே எடுத்துக்கொள்கிறோமா என்ன? இல்லையே!
நமக்கு தர்கா வழிபாடு தவறு என தெரியுமுன் நாமும் உண்டியலில் காசு போட்டுதானே வாழ்ந்தோம். அதுபோல், எல்லாவற்றையும் யாவரும் புரிந்துகொள்வதற்கு முன் முன்னோர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் சொன்ன மூடர்கள் என்பது நம் அறிவீனத்தையேக் காட்டுகிறது.
அவர்களுக்குப் புரிந்ததை அவர்கள் செய்தனர். இஸ்லாத்தை ஏற்றனர் எனும் மாபெரும் பகுத்தறிவு நடவடிக்கைக்கு முன்னால் சில்லறை விஷயங்கள் அடிபட்டேப் போகும்.
உலகம் உருண்டை என்பது அறியப்படும்வரை தட்டை என்பதே சரி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டதாக விஞ்ஞானம் சொல்கிறது. டார்வின் கொள்கை நம் தலைமுறையில்தான் மறுத்தொதுக்கப்பட்டுள்ளது.
முத்தாய்ப்பாய் சொல்லவேண்டுமென்றால் திருடனுக்கு போலீஸ் முரண்; போலீஸுக்குத் திருடன் முரண்; நல்லவனுக்கு கெட்டவன் முரண்; கெட்டவனுக்கோ நல்லவனே முரண்.
எனவே, ஒட்டுமொத்தமாக முன்னோர்கள் என்று முத்திரைக் குத்துவதை விடுத்து “மார்க்கத்திற்கு முரணாக நமக்கு காட்டித்தரும் வழி முறைகளை அவசியம் பின்பற்ற வேண்டுமா?” என்று கேள்வி கேள்
என் பதில் “கண்டிப்பாக கூடாது!”
சகோதரியே சகலமும் அறியத்தரும் நல்ல தொடர்.
உங்கள் கேள்வியிலேயே மார்க்கத்திற்கு முறணான என்றிருக்கும்போது அதை பின்பற்றுவது அவசியமில்லை என்றே தெளிவாக்கி இருக்கும் போது நாங்கள் என்ன சொல்வது!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தாங்கள் அனைவரின் கருத்திற்கும் கேள்விக்கான விளக்கத்திற்கும் என்னுடைய பதிலை அடுத்த தொடரில் தெரியப்படுத்துகிறேன். இன்ஷா அல்லாஹ்!
தற்பொழுது மின்சாரத்தைப் பற்றி ஒரு ஆக்கமும்,
இஸ்லாத்தை தழுவிய ஒரு சகோதரரின் அனுபவத்தையும் தயார் செய்து கொண்டு இருப்பதால் இப்பொழுது (விளக்கம் பெரிதாக இருப்பதால்)விளக்க முடியவில்லை. ஏற்புரை சரியாக அளிக்க முடியாததற்கு வருந்துகிறேன்.
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!
கருத்திட்ட சகோதரிக்கும் நன்றி!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
சகோதரி கைபர், போலன் கணவாய் வழியாக புகுந்து புறப்படுவதை பார்த்தால் (மூத்த) பெரிய சகோதரியாய் வலம் வரும் போல் தெரிகின்றது வாழ்த்துக்கள்
//வாசகர்களுக்கு ஒரு கேள்வி?: நம் முன்னோர்கள் மார்க்கத்திற்கு முரணாக நமக்கு காட்டித் தந்த வழி முறைகளை அவசியம் பின்பற்ற வேண்டுமா???//
கண்டிப்பாக நாம் பின்பற்றக் கூடாது.அப்படி பின்பற்றினால் நரகம் என்று அல்லாஹ்வும்,நம் மாமனிதர் நபிகள் ஸல் அவர்களும் சொல்லியுள்ளார்கள்.அது மட்டுமல்ல நம் உண்மையான முன்னோர்கள் என்பது எல்லா நபிமார்களையும்,சஹாபாக்களையும் என நாம் எடுத்துக் கொண்டால் - இன்ஷா அல்லாஹ் நாம் வழி தவற வாய்ப்பு இல்லை.காரணம் நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவர்கள்,நம் தலைவர் நபிகள் ஸல் அவர்கள் கடைசி நபி மற்றும் அவரகளுடன் வாழ்ந்த உத்தம சஹாபாக்கள் - அல்லாஹ்வும் - நம் தலைவர் சொன்னதையும் ஏற்று நடந்தவர்கள்.
ஆனால் மற்றவர்களை நாம் முன்னோர்களாய்க் கொண்டு - எங்கள் முன்னோர் சொன்ன படி நடப்போம் என்றால்,நரக படு குழி தான் என்பதில் சந்தேகம் இல்லை.அவர்களின் மற்றும் நம் பிழை பொறுக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்,
// நம் உண்மையான முன்னோர்கள் என்பது எல்லா நபிமார்களையும்,சஹாபாக்களையும் என நாம் எடுத்துக் கொண்டால் - இன்ஷா அல்லாஹ் நாம் வழி தவற வாய்ப்பு இல்லை.காரணம் நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவர்கள்,நம் தலைவர் நபிகள் ஸல் அவர்கள் கடைசி நபி மற்றும் அவரகளுடன் வாழ்ந்த உத்தம சஹாபாக்கள் - அல்லாஹ்வும் - நம் தலைவர் சொன்னதையும் ஏற்று நடந்தவர்கள்.
ஆனால் மற்றவர்களை நாம் முன்னோர்களாய்க் கொண்டு - எங்கள் முன்னோர் சொன்ன படி நடப்போம் என்றால்,நரக படு குழி தான் என்பதில் சந்தேகம் இல்லை.அவர்களின் மற்றும் நம் பிழை பொறுக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்,//
நம் தமிழ் நாட்டில் ஏகத்துவம் என்று சொல்லிக் கொள்பவர்கள் சகாப்பாக்களை பின்பற்றலாமா என்பதையே சர்ச்சைக்கு கொண்டு வந்து விட்டார்கள். அப்படி இருக்க, ஹதீஸ் தொகுப்புகளைத் தந்த கண்ணியத்திற்குரிய இமாம் புகாரி(ரஹ்) போன்றவர்கள் வாழ்ந்த காலம், ரசூல்(ஸல்), சகாப்பாக்கள்(ரழி), தாபியீன்கள், தபு தாபியீன்கள் காலத்திற்குப் பின் வாழ்ந்தவர்கள். அந்த இமாம்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளலாமா?
அலாவுதீன்....வரதட்சினை ஒழிப்புக்காக வண்டி வண்டியாக நிறைய பேர் எழுதியாகிவிட்டது. ஏதாவது கடுமையான ஒரு அப்ரோச் நம் ஊரைப்பொருத்தவரை தேவை. ஆனால் நான் கேள்விப்பட்ட வகையில் இப்போது அந்த அளவு இல்லை என்பது கேள்வி...
Is that true?
//நம் தமிழ் நாட்டில் ஏகத்துவம் என்று சொல்லிக் கொள்பவர்கள் சகாப்பாக்களை பின்பற்றலாமா என்பதையே சர்ச்சைக்கு கொண்டு வந்து விட்டார்கள். அப்படி இருக்க, ஹதீஸ் தொகுப்புகளைத் தந்த கண்ணியத்திற்குரிய இமாம் புகாரி(ரஹ்) போன்றவர்கள் வாழ்ந்த காலம், ரசூல்(ஸல்), சகாப்பாக்கள்(ரழி), தாபியீன்கள், தபு தாபியீன்கள் காலத்திற்குப் பின் வாழ்ந்தவர்கள். அந்த இமாம்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளலாமா?//
இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.
அல்லாஹ்வின் அருள் வேதம் அல்குரான்
என் இனிய சகோதரர் நூர் முஹம்மத் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். சஹாபாக்களை (ரலி) அஜ்மயீன் பின்பற்றலாமா என்று தாங்கள் வினவினால், எந்த ஒரு முஸ்லிமும் எந்த பிரிவை சார்ந்த முஸ்லிமும் இல்லை என்று சொல்லமாட்டார்கள். ஏதேனும் ஒரு சஹாபியின் (ரலி) பெயரைக்குறிப்பிட்டு இவரைப் பின்பற்றலாமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். காரணம்: குரானை முழுத்தொகுப்பாக கொண்டு வந்து நபி (ஸல்) அவர்களின் வபாத்துக்குப்பிறக்கும் கூட ஒரு சஹாபி (ரலி) மு'அவ்வத தைன் என்று புனைபெயரில் அழைக்கப்படும் சூரா குள் அஊது பிறப்பில் falak , குள் அஊது பிறப்பின் நாஸ் என்ற சூராக்கள் குர் ஆனோடு சேர்ந்தது அல்ல. அவற்றை நபி ஸல் அவர்கள் து'ஆக்கள் போல்தான் ஓதி வந்தார்கள் என்று வாதிட்ட சஹாபி (ரலி) உண்டு. இதுபோலவே, நோன்பு முறிவதற்கு திரவ, திட உணவைத்தான் சாப்பிடக்கூடாதென்று இருக்கிறது. பனிக்கட்டி நீரும் அல்ல. திடப்பொருளைய்யும் சாராது எனவே அதை உட்கொள்வதால் நோன்பு முறியாது என்று வாதிட்ட சஹாபியும் உண்டு. எனவே தனியொரு சஹாபி (ரலி) கருத்தாக இருந்தாலும், குர்'ஆண், ஹதீஸ், மற்றும் அக்காலத்தில் வாழ்ந்த சஹாபா (ரலி) அஜ்மயீன் ஒட்டு மொத்த சஹாபாக்களின் ஒருமித்த கருத்தின் படி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஷரீ அத்தைத்தான் நாமும் முழுமையாக பின்பற்றவேண்டும்.
முஹம்மத் தமீம்
//இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.//
இதைத்தான் நம் கண்ணியத்திற்குரிய முன்னோராகிய மூதாதயர்கள் நமக்கு கற்றுத் தந்தார்கள்.
உங்கள் சிந்தனைக்கு சில குறிப்புகளை தருகின்றேன்.
ரசூல்(ஸல்) அவர்களின் காலம் கிபி 6 ஆம் நூற்றாண்டு.
ஹதீஸ் தொகுப்புகளை தந்த பெரும்பாலான இமாம்கள் காலம் கிபி 9 ஆம் நூற்றாண்டு.
குர்ஆன், ஹதீஸ் இவற்றுக்கு விளக்கம் தரும் விரிவுரையாளர்களான முஃபஸ்ஸிரீன் முகத்திஸீன் பெரும்பாலர்களின் காலம் கிபி 14 ஆம் நூற்றாண்டு.
தவ்ஹீத் எனும் தலைப்பை தந்த இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் காலம் கிபி 18 ஆம் நூற்றாண்டு.
மேற்கண்ட இமாம்கள் அவர்களின் ஆதரவாலேயே குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களை விரிவாக அறிஞர் பெருமக்கள் ஆய்வு செய்கின்றனர்.
இதில் தவ்ஹீத் எனும் பாடத்தை போதித்த இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள், ரசூல்(ஸல்) அவர்களின் காலத்திற்கு 1200 ஆண்டுகளுக்கு பின்னும், நம்முடைய காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னும் வாழ்ந்த நமக்கு முன்னோரான மூதாதயர்.
நீங்கள் இந்த முன்னோரான மூதாதயர் அவர்களை எந்த பட்டியலில் வைத்துள்ளீர்கள்? இவர்களின் கூற்றை ஏற்பது சரியா?
அடுத்து மிக முக்கியமான ஒன்று: நம்முடைய முன்னோரான மூதாதயர், அதிரையில் வாழ்ந்த அருங்குணச் செம்மல் மர்ஹூம் ஷைகுனா(ரஹ்) அவர்கள்(1856 - 1945) சன்மார்க்க கல்வியை கேரளாவில் கற்று, பிறகு புனித மக்கமாநகர் சென்று மேற்கல்வி பயில வேண்டும் என்ற அடங்காத ஆவலால் உந்தப்பட்டு, மக்கா சென்று அங்கு தொடர்ச்சியாக பத்து ஆண்டுகளுக்கு மேல் தங்கி கல்வி கற்றார்கள்.
அருங்கல்வி கற்று அறிஞராகத் திகழ்ந்த ஷைகுனா(ரஹ்) அவர்கள் சில ஆண்டுகள் மக்காவில் மார்க்கக் கல்வியை பயிற்றுவிக்கும் ஆசானாகவும் பணிபுரித்து வந்தார்கள்.
ஷைகுனா(ரஹ்) அவர்கள் மக்காவில் படித்தது, பயிற்றுவித்தது யாவும் மத்ஹபு பாடத்திட்டமே. பிற்காலத்தில்தான் வஹ்ஹாபி பாடத்திட்டம் மக்காவிலுள்ள மதரசாக்களில் கொண்டுவரப்பட்டது.
நம் முன்னோரான மூதாதயர் ஷைகுனா(ரஹ்) அவர்கள் மக்காவில் படித்து பயிற்றுவித்த மத்ஹபு பாடத்திட்டம் சரியானதா? அல்லது இப்போது மக்காவில் பயிற்றுவிக்கும், 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முன்னோரான மூதாதயர் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் வஹ்ஹாபி பாடத்திட்டம் சரியானதா?
இங்கே எந்த மூதாததையர் பயிற்றுவித்த பாடம் மார்க்கத்திற்கு முரணானது என்பதை உங்கள் ஆய்வு கொண்டு பதில் தருவீர்களாக!
நூர் முஹம்மது.
>>>>>>>>>>>கையில் இருக்கும் விளக்கமாறு போன்ற மயில் இறகால் ஆசி கிடைக்காது<<<<<<<<<<<<<<<<
தொடர்ந்து பல நிமிடங்கள் வாய்விட்டுச் சிரித்தேன் :)
அன்புடன் புகாரி
Post a Comment