அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.
''நல்லதை
ஒருவர் பிறருக்கு அறிவித்துக் கொடுத்தால், அதை செய்தவனின்
கூலி போன்றது அவருக்கும் உண்டு'' என நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: (அபூமஸ்ஊத் என்ற) உக்பா இப்னு அம்ரூ அல்அன்சாரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 173)
'தான் விரும்பியதை
தன் சகோதரனுக்கும் விரும்பும் வரை உங்களில் ஒருவர் இறை விசுவாசியாக மாட்டார்''
என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 183)
'உங்களில்
ஒருவர் தீமையைக் கண்டால் தன் கையால் அதைத் தடுக்கட்டும்,
அதற்கு இயலாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும் அதற்கும் இயலாவிட்டால்
தன் இதயத்தால் (வெறுக்கட்டும்). இது, இறை நம்பிக்கையில்
மிக பலவீனமானதாகும்'' என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ
(ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 184)
''பாதைகளில் உட்காருவதை உங்களுக்கு
எச்சரிக்கிறேன்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பாதைகளில் சிறிது நேரம்
பேசுவதற்காக உட்கார வேண்டியது ஏற்படுகிறது' என்று கூறினார்கள். 'உட்காரும் நிர்பந்தம்
ஏற்பட்டால் பாதையில் அதற்குரிய உரிமையை வழங்கி விடுங்கள்' என்று நபி(ஸல்) கூறியதும்
'இறைத்தூதர் அவர்களே! பாதையின் உரிமை என்றால் என்ன?' என்று கேட்டார்கள். ''பார்வையை தாழ்த்துவது, இடையூறு தருவதை நீக்குவது ஸலாமிற்கு
பதில் கூறுவது, நல்லதை ஏவுவது, தீயதை விட்டும் தடுப்பது தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஸயீத் குத்ரீ(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 190)
'என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!
நீங்கள் நல்லதை ஏவுங்கள். தீயவற்றிலிருந்து தடுங்கள். இல்லையெனில் உங்கள் மீது தனது
தண்டனையை அல்லாஹ் இறக்கி வைப்பான். பின் அவனை அழைத்தாலும், அவன் உங்களுக்கு பதில் கூறமாட்டான்' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) அவர்கள் (திர்மிதீ). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 193)
''போரில்
மிகச் சிறந்தது, அநீதிக்கார
அரசனின் முன் நீதத்தை எடுத்துக் கூறுவதுதான்'' என் நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் குத்ரீ (ரலி) அவர்கள் ( முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 194)
'மறுமையில்
ஒருவர் அழைத்து வரப்பட்டு, நரகிலும்
போடப்படுவார். அப்போது அவரின் வயிற்றுக் குடல்கள் சரிந்து விடும். அவர் அந்த நிலையிலேயே
கழுதை செக்கைச் சுற்றுவது போல் சுற்றுவார். அவரிடம் நரகவாசிகள் அனைவரும் வந்து,
இன்னாரே! உனக்கு என்ன நேர்ந்தது? நீ நல்லதை ஏவி,
தீயதை விட்டும் தடுத்துக் கொண்டு இருந்தீர்தானே? என்று கூறுவார்கள். அதற்கு அவர்,
ஆம் நல்லதை ஏவிக் கொண்டிருந்தேன். அந்த நன்மையை நான் செய்ய வில்லை.
தீயதை விட்டும் தடுத்தேன். ஆனால் அந்த தீமைகளை நான் செய்தேன்''
என்று கூறுவார் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: (அபூஸைத் என்ற) உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 198)
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து
நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
(அல்குர்ஆன் : 3:104)
நம்பிக்கை கொண்டோரே!
உங்களை காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர் வழி நடக்கும் போது வழி கெட்டவனால் உங்களுக்கு
எந்தத் தீங்கும் தர முடியாது. (அல்குர்ஆன்: 5:105)
வேதத்தைப் படித்துக்
கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க
வேண்டாமா?
(அல்குர்ஆன் :2:44)
யாரேனும் நல்லறம் செய்தால் அது அவருக்கே நல்லது.
(அல்குர்ஆன் : 45:15 )
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபி(ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
-S.அலாவுதீன்
20 Responses So Far:
//''போரில் மிகச் சிறந்தது, அநீதிக்கார அரசனின் முன் நீதத்தை எடுத்துக் கூறுவதுதான்'' என் நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் குத்ரீ (ரலி) அவர்கள் ( முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 194)//
நண்பர் அலாவுதீன் அவர்களே! இந்த தளத்தில் நம்மில் பலர் இதைத்தான் செய்து வருகிறோம் என்ற திருப்தி இருக்கிறது. Then, we will maintain.
//"நல்லதை ஒருவர் பிறருக்கு அறிவித்துக் கொடுத்தால், அதை செய்தவனின் கூலி போன்றது அவருக்கும் உண்டு" என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: (அபூமஸ்ஊத் என்ற) உக்பா இப்னு அம்ரூ அல்அன்சாரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 173)//
நபிமொழியையே எனது உணர்வாக இங்கே பதிகிறேன்... !
உங்களின் இந்த அற்புத எழுதுப்ப பணிக்கு !
/// ''பாதைகளில் உட்காருவதை உங்களுக்கு எச்சரிக்கிறேன்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பாதைகளில் சிறிது நேரம் பேசுவதற்காக உட்கார வேண்டியது ஏற்படுகிறது' என்று கூறினார்கள். 'உட்காரும் நிர்பந்தம் ஏற்பட்டால் பாதையில் அதற்குரிய உரிமையை வழங்கி விடுங்கள்' என்று நபி(ஸல்) கூறியதும் 'இறைத்தூதர் அவர்களே! பாதையின் உரிமை என்றால் என்ன?' என்று கேட்டார்கள். ''பார்வையை தாழ்த்துவது, இடையூறு தருவதை நீக்குவது ஸலாமிற்கு பதில் கூறுவது, நல்லதை ஏவுவது, தீயதை விட்டும் தடுப்பது தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஸயீத் குத்ரீ(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)////
அஸ்ஸலாமு அலைக்கும் அலவுதீன் காக்கா,
இந்த நபிமொழியை ஒவ்வொரு தெரு முனைகளிலும் எழுதவேண்டும்.
அலாவுதீன் எடுத்துக்கொண்ட முயற்சி மிகவும் நல்ல விசயம்.
அலாவுதீனுக்கு ஒரு request
ஏதாவது ஒரு தலைப்பில் உள்ள ஹதீஸ்களுடன் விளக்கம் தந்தால் இன்னும் நல்ல தொகுப்பாக இருக்கும். அத்துடன் நமது மக்கள் எவ்வாறு அந்த ஹதீஸை தனது அன்றாட வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக பயன் படுத்த முடியும் என்பதையும் விளக்கவும்
வாழ்க்கையில் வொவ்வொரு நிமிடமும் ..வொவ்வொரு
அசைவுகளும் நபிகளாருடைய வாழ்வில் வந்ததாக இருக்கவேண்டும் .
அமைதியற்ற வாழ்விற்கு அரும்மருந்து என்ற தலைப்புக்கேற்ற ..
அற்புதமான ஹதீஸ்களை தேர்ந்தெடுத்து வழங்கி வருவதை
வரவேற்கிறேன் ..குறிப்பாக வழி தடங்களில் உட்கார்ந்து இருப்பது
கூடாது என்பது எவ்வளவு சிறந்த அறிவுரை ..வருவோர் ..போவோர்
பலர் அவர்கள் செல்லும்போது இடையு ராக இருக்கும்போது சிலர்
ஒன்றும் சொல்லாது சென்று விடுவர் சிலரோ நாகரீகமாக எடுத்துரைப்பர்
சிலரோ கடினமாக எடுத்துரைப்பர் இந்த நேரத்தில் கருத்து மோதல்
கை கலப்பில் போய் முடியும் எனவே நபிகளாரின் வொவ்வொரு
அறிவுரைகளும் ஆயிரம் பலன் தரும் ....,மாஷா அல்லாஹ்
எழுத்தாளன் ..,சிறந்த பார்வையாளன் ., ஒரு விசயத்தை
தனது கண்ணோட்டத்தில் விளக்குகின்ற போது ,அது
நன்மையாக போய் சேர வேண்டும் .., அந்த விசயத்தில்
சகோ அலாவுதீனின் பார்வை அற்புதம் ...,
இங்கே இம்மை மறுமைக்கு நல் மருந்து
அடுத்து நாவிற்கு நல் விருந்து.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்."
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
சகோ அலாவுதீன் அவர்களுக்கு, மார்க்கத்தை எத்தி வைக்கும் பணியை அல்லாஹ் பொருந்திக்கொண்டு,அளப்பரிய அருளை உங்கள் மீது பொழிவானாக,வீணான எல்லாவற்றிலிருந்தும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக,ஆமீன்
The way of writing and method of exposing here of Alavudeen kaka about our holy Qur'anic words and it's hadees all are very fine and superb. Ya, Allah! whatever we heard your words through various sources all those have to be customized/adhered in our daily life in order to get fruitful life here and in the hereafter. Aameen.
அஸ்ஸலாமு அலைக்கும்.
100 % கலப்படமில்லாத விலை மதிக்க முடியா அருமருந்து இது கசக்குது என்று துப்புபவன் பெரும் நஷ்டவாலியே!
12 .அருமருந்து சாப்பிட்டும் எந்த அளவுக்கு குணமாகி இருக்கிறது என்று நமக்கு நாமே பரிசோதனை செய்ய கடமைப்பட்டுள்ளோம்.
அலாவுதீன் காக்கா ஜஜாக்கல்லாஹ் ஹைரன் .
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
ZAKIR HUSSAIN சொன்னது… அலாவுதீனுக்கு ஒரு request : : ஏதாவது ஒரு தலைப்பில் உள்ள ஹதீஸ்களுடன் விளக்கம் தந்தால் இன்னும் நல்ல தொகுப்பாக இருக்கும். அத்துடன் நமது மக்கள் எவ்வாறு அந்த ஹதீஸை தனது அன்றாட வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக பயன் படுத்த முடியும் என்பதையும் விளக்கவும்
****************************************************************************
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இமாம் அபூ ஜக்கரிய்யா யஹ்யா பின் ஷரஃப் அந்-நவவீ (ரஹ்)அவர்கள் ரியாளுஸ்ஸாலிஹீன் என்ற நபிகளாரின் பொன்மொழி தொகுப்பில் தலைப்பு வாரியாகத்தான் நான் இங்கு பதிந்துள்ள ஹதீஸ்களை தொகுத்திருக்கிறார்கள்.
நான்தான் தலைப்பை போட மறந்து விட்டேன் (தலைப்பு பற்றிய எண்ணமே வரவேயில்லை). அடுத்த பதிவில் தலைப்போடு பதிவு செய்கிறேன்.
இன்ஷா அல்லாஹ்!
மேலும் நபி(ஸல்)அவர்களின் ஹதீஸ்கள் சுருக்கமாக இருந்தாலும் படிக்காதவர்களுக்கும் புரியும் விதமாக விளக்கம் தெளிவாக இருப்பதால் நான் மேற்கொண்டு விளக்கம் கொடுக்கும்படி இருக்காது.
விளக்கம் கொடுக்க வேண்டும் என்றால் அதற்காக ஆய்வும் வேண்டும்.
அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து என்ற தலைப்பு மட்டும் நான் தேர்ந்தெடுத்தேன்.
என்னுடைய வேலை அவர்களின் தொகுப்பை பார்த்து டைப் செய்வது மட்டும்தான். அதனால் தாங்கள் அனைவரின் துஆவும் இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் மற்ற இமாம்களுக்கும், இமாம் அபூ ஜக்கரிய்யா அவர்களுக்கேச் சேரும்.
ஜாகிர்! கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
சகோ. அலாவுதீன் அவர்களின் “மார்க்க விளங்கங்களுடன் கூடிய கட்டுரைகளை” சைலண்டா படிக்கும் வாசர்களில் நானும் ஒருவன்
தொடருங்கள்............................
//'உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் தன் கையால் அதைத் தடுக்கட்டும், அதற்கு இயலாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும் அதற்கும் இயலாவிட்டால் தன் இதயத்தால் (வெறுக்கட்டும்). இது, இறை நம்பிக்கையில் மிக பலவீனமானதாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 184)//
//நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் : 3:104)//
இது போன்ற ஒருசில ஹதீஸ் மற்றும் குர்ஆன் வசனங்களை போட்டுவிட்டு அதற்கு எதிராகவும் மாற்றமாகவும் நம்சமுதாயத்தில் நடக்கின்ற பித்அத்களையும் ஷிர்க்களையும் எழுதினால் நன்றாக இருக்கும்
சகோதரர் அலாவுதீன் அவர்களின் மின்னஞ்சல் முகவரியை தெரிவிக்கமுடியுமா?
அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்களின் இம்முயற்சிக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!
சென்ற வாரம் ஸஹீஹுல் புகாரி ஆங்கில மொழி பெயர்ப்புப் படிக்கத் துவங்கினேன். அதன் முன்னுரையில் ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கட்கு அல்லாஹ் வழங்கிய அற்புதங்களை வரிசைப் படுத்தியிருந்தார்கள். அதில் ஒன்று:
ஒரு சஹாபி கிறித்துவராகியிருந்து முஸ்லிமாகி ரசூலுல்லாஹ்(ஸல்)அவர்கட்கு இறங்கும் வஹி வசனங்களை எழுதுவது அவரது பணியாகும்; பின்னர் அவர் மீண்டும் கிறித்துவ மதத்திற்கு மாறிவிட்டு, ரசூலுல்லாஹ்(ஸல்)அவர்கள் மீது அவதூறு பரப்பி வந்தார் இவ்வாறாக, “நான் தான் எல்லாம் கற்றுக் கொடுத்தேன்” என்பதாக! பின்னர் அந்த கிறித்துவர் இறந்து விட்டார்;அவரை மண்ணறையில் புதைத்து விட்டு வந்ததும் காலையில் அவர் உடல் தூக்கி வீசப்பட்டது; இது போல் மூன்று முறைகள் ஏற்பட்டன; அப்பொழுது “இது முஸ்லிம்களின் ஏற்பாடு” என்பதாகக் குற்றஞ்சாட்டினர் அக்கிறித்துவர்கள். ஆனால், மிகவும் ஆழமாகப் புதைக்கப்பட்டப் பின்னரும் இறுதியில் அவ்வாறே உடல் தூக்கி வீசப்பட்டது கண்டு தான் அவர்கள் தெளிவடைந்தனர்;பின்னர் அவ்வுடலை அப்படியே விட்டு விட்டனர். இதனைப் படித்தது முதல் எனக்கு மண்ணறைப் பற்றிய பயம் மேலோங்கி விட்டது!
எனவே, அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்கள் ஜாகிர் அவர்களின் ஆலோசனைப்படி, வாரம் ஒரு தலைப்பின் கீழ் ஹதீஸ்களைத் தொகுத்து வழங்கினால் அவற்றைக் கோப்பில் இட்டு வைத்துப் படிக்கலாம்.
குறிப்பாக,மண்ணறை வேதனைகள் பற்றிய ஹதீஸ்களை அறியத் தாருங்கள்.
//எனவே, அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்கள் ஜாகிர் அவர்களின் ஆலோசனைப்படி, வாரம் ஒரு தலைப்பின் கீழ் ஹதீஸ்களைத் தொகுத்து வழங்கினால் அவற்றைக் கோப்பில் இட்டு வைத்துப் படிக்கலாம்.//
வழி மொழிகிறேன்.
//குறிப்பாக,மண்ணறை வேதனைகள் பற்றிய ஹதீஸ்களை அறியத் தாருங்கள்.//
அன்புள்ள காக்கா அபுல் கலாம் அவர்களுக்கு,இந்த வலைத் தளத்தில் http://www.tamililquran.com/ நீங்கள் தேட வேண்டிய சொல்லை எழுதி,தேடினால் அந்த குறிப்பிட்ட குரான்,ஸஹீஹ் புகாரி செய்திகள் நமக்கு கிடைக்கும்,மிக பயனுள்ள தளம் அது.
35:22 அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், மண்ணறைகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
THE QURAN
1374. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 'இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என்று முஹம்மத்(ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்..."அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்" என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்...
நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் 'இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என அவனிடம் கேட்கப்படும்போது 'எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' எனக் கூறுவான். உடனே 'நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை" என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்."
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :23
http://www.tamililquran.com/quransearch.php?q1=%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%88+&Submit=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95
http://www.tamililquran.com/bukharisearch.php?q=%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%88
LINKS FOR மண்ணறை IN QURAN AND HADEETH
//அந்த நன்மையை நான் செய்ய வில்லை. தீயதை விட்டும் தடுத்தேன்.// யா அல்லாஹ் இத்தகைய வேதனையைவிட்டும் எங்களை காத்தருள்வாயாக...எதனை நாங்கள் சொல்கிறோமோ அதனை நாங்கள் நடைமுறைபடுத்தி வாழ வழிசெய்வாய் நாயனே
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அன்புச்சகோதரர்கள் : ஜாகிர், ஜூபைர், அபுல் கலாம், அர அல தாங்கள் கேட்டுக் கொண்டபடி ஹதீஸ் தலைப்பின் கீழ் விளக்கத்துடன் தனியொரு பதிவாக எழுத முயற்சி செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்!
தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
லேட்ட வந்து மருந்து சாப்பிட்டாலும் இந்த மருந்துகளுக்கு எக்ஸ்பரி டேட் கிடையாது எக்காலத்திற்கும் உகந்த மருந்து
Post a Comment