Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை கால்பந்து விளையாட்டுச் செய்தி: 13-06-2011 7

அதிரைநிருபர் | June 13, 2011 | ,

நேற்று மேலனத்தம் என்ற ஊரில் நடைப்பெற்ற கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை வென்ற அதிரை AFFA அணியினர் இன்று வேலங்குடி அணியினரை எதிர்த்து விளையாடுகிறது என்ற செய்தி பரபரப்புடன் பேசப்பட்டது இன்று அதிரை கால்பந்து ரசிகர்கள் வட்டத்தில்.

ஆட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்க வேண்டும் என்பதில் விளையாட்டு கமிட்டி வழக்கம்போல் மைக்கில் ஞாபகப்படுத்திகொண்டே இருந்தார்கள், AFFA அணியின் பயிற்சியாளரும் தலைவரும் தங்கள் அணிக்கான யுக்திகளை ஆட்டம் தொடங்கும் முன் சக வீரர்களுக்கு தெரிவித்துக்கொண்டிருந்தனர்


ஆட்டம் குறித்த நேரத்தில் தொடங்கியது. இரு அணிகளுமே நல்ல பலம் வாய்ந்த அணிகள் என்பதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது, ஆனால் ஆரம்பமே மிக மந்தமாக இருந்தது. AFFA வீரர்கள் ரொம்ப சோர்ந்த நிலையில் தங்களின் ஆட்டத்தை தொடங்கியது, அதிரை கால்பந்தாட்ட ரசிகர்களை கொஞ்சம் கவலையுற செய்தது, ஒரு சிலரோ இந்த வருடம் அதிரை கால்பந்தாட்ட போட்டியில் AFFA அவ்வளவுதான் என்ற முனுமுனுக்க தொடங்கினர். முதல் பகுதி நேராம் முடிவதற்கு முன்பு அதிரை அணியின் ரொனால்டோ சைபுதீன் மிக அற்புதமான ஓரு கோலை அடித்துமே ஐடிஐ மைதானத்தில் பட்டாசு வெடிக்கும் சத்தம் மட்டுமே மீதி. அடேங்கப்பா அவ்வளவு ஆராவாரம் அதிரை கால்பந்தாட்ட ரசிகர்களிடம். அதிரை அணி விளையாடினாலே ரசிகர்களின் சத்தம் ரொம்ப அதிகம் தான். முதல் பகுதி நேர முடிவில் 1-0 என்ற கணக்கில் அதிரை AFFA முன்னனியில் இருந்தது.

இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் வேலங்குடி அணியின் ஆதிக்கம் முதலில் இருந்து AFFA அணியை கொஞ்சம் தினறடித்துக்கொண்டிருந்தது. இருந்தாலும் AFFA அணியின் சூப்பர் ஸ்டார் ஹைதர் அலி இப்போது தான் தன் சூப்பர் ஆட்டத்தை காட்ட ஆரம்பித்தார். குறிகிய நேரத்தில் AFFA அணியின் சூப்பர் ஸ்டார் ஹைதர் அலி இரண்டு கோல்கள் அடித்து தன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆட்ட நேர முடிவில் அதிரை AFFA 3-0 கோல் கணக்கில் வேலங்குடி அணியை வீழ்த்தி அடுத்த நிலைக்கு முன்னேறியது.

மொத்தத்தில் இன்றைய ஆட்டம் விருவிருப்பு குறைவாகவே இருந்தது என்றாலும் அதிரை கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு மாலை பொழுது மகிழ்ச்சியாகவே கழிந்தது.

கால்பந்தாட்ட போட்டி தொடங்குவதற்கு முன்பு சினிமா பாடல்கள் அல்லாமல் வேறு ஏதாவது அறிவிப்புகள் மட்டும் செய்துக்கொண்டிருக்கலாமே. கொஞ்சம் மாத்தி யோசிங்கப்பா ! இன்னும் அதே பழைய பழக்கத்தை மாற்றித்தான் பாருங்களேன்.

-- அதிரைநிருபர் குழு





7 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கால்பந்தாட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு சினிமா பாடல்கள் அல்லாமல் வேறு ஏதாவது அறிவிப்புகள் மட்டும் செய்துக்கொண்டிருக்கலாமே. கொஞ்சம் மாத்தி யோசிங்கப்பா ! இன்னும் அதே பழைய பழக்கத்தை மாற்றித்தான் பாருங்களேன்.///

அட நல்ல யோசனைதான் ! நம் கனவு(வும்) மெய்ப்பட வேண்டும் பள்ளிக்கூட மைதானத்தில் மையம் கொண்டிருக்கும் இளசுகளின் எண்ணங்களிலும் அவர்க்ளின் படிப்பிலும் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// பள்ளிக்கூட மைதானத்தில் மையம் கொண்டிருக்கும் இளசுகளின் எண்ணங்களிலும் அவர்க்ளின் படிப்பிலும் !//
படிப்பு மேட்டருக்கு உரிய புயல் நாளை அவசரமாக கரையை கடக்கச் செய்கிறார்களாம் நீதி மன்றத்தின் மூலம்.
சர்ச்சைப் புயல் மத்தியில் மையம் கொண்டிருக்காம்.

sabeer.abushahruk said...

கேட்கவே சந்தோஷமா இருக்கே...பார்க்க முடிந்தால்...

அதிரை என்.ஷஃபாத் said...

/*கேட்கவே சந்தோஷமா இருக்கே...பார்க்க முடிந்தால்.*/

சபீர் காக்கா, காணொளியையும் பதிய வேண்டும் என்பது தானே உங்கள் மறைமுக வேண்டுகோள்? தாஜ்தீன் காக்காவுக்கு இன்னேரம் புரிந்து இருக்கும் (ஸ்ஸ்.. அப்பாடா, நம்ம வேண்டுகோளை சபீர் காக்காவின் பேரு போட்டு பதிஞ்சாச்சு!!) :D

தாஜுதீன் (THAJUDEEN ) said...

/*கேட்கவே சந்தோஷமா இருக்கே...பார்க்க முடிந்தால்.*/

காணொளியையும் பதிய முயற்சி செய்கிறோம்.

தம்பி ஷஃபாத் தங்களின் ஆர்வத்தை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

Abdul Majid said...

Assalamu alaikum,
AFFA'vin thodarattum. photo'kaludan seithi thantha ADIRAINIRUBAR'ku enathu manamara nanrigal. Mudintha alavu namathur vilayadum potti'galai video update seithal engalai pondra velinattil ullargaluku Namathu oor vilayadum potiye partha thirupthi irkum... Ungal seivai thodarattum..

By
Abdul Majid (AFFA)

அப்துல்மாலிக் said...

மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு