Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவசியமான அறிவிப்பு ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | June 11, 2011 |

சென்ற 29/05/2011 அன்றையப் பொதுக்குழுக் கூட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலரால் ஒரு நல்ல பரிந்துரை முன்மொழியப்பட்டது. அதன்படி, சென்ற 07/ 06 / 2011 அன்று சங்கக் கட்டிடத்தில் ஒரு சிறப்பு அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், நமதூரில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் வார விடுமுறையான வெள்ளிக்கிழமைகளில் நடைபெறாமல் செய்யவேண்டும் என்ற தீர்மானம் எடுப்பதற்காகக் கான்ட்ராக்டர்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுத்து, அவர்களிடம் கருத்துரைகள் பெறப்பட்டன.

ஏறத்தாழ எல்லாக் கான்ட்ராக்டர்களும் கலந்துகொண்ட அக்கூட்டத்தில், அனைவருமே ஒரு மனதாக இப்பரிந்துரையை ஏற்றுக்கொண்டனர். அதனையடுத்து, அங்கு வர வாய்ப்பிழந்த கான்ட்ராக்டர்களும் பொதுமக்களும் அறிந்துகொள்வதற்காக, சங்கம் ஒரு தீர்மானத்தை எழுதி, அதனைப் பொது அறிவிப்பாக எல்லாப் பள்ளிவாசல்களிலும் ஒட்டி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நல்ல தீர்மானத்தை வரவேற்ற நமதூரின் இதர சங்கங்களும், தம்மையும் ஏன் இதில் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்று ஆர்வம் மிக்க கருத்தை வெளியிட்டதன் பேரில், இன்று (11/06/2011)ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாகக் கீழ்க்காணும் நமதூர் சங்கங்களுக்கும் உரிய முறையில் வேண்டுகோள் விடுத்து ஆதரவைப் பெறப்பட்டுள்ளது:

தாஜுல் இஸ்லாம் சங்கம், மேலத்தெரு
அல்மத்ரசத்து நூருல் முஹம்மதியா சங்கம், கீழத்தெரு,
மிஸ்கீன் சாஹிப் பள்ளிக் கமிட்டி, புதுத்தெரு,
கடற்கரைத்தெரு முன்னேற்ற சங்கம்,
முகைதீன் பள்ளிக் கமிட்டி, தரகர் தெரு,
எம்.எஸ்.எம். நகர் முஹல்லா,
பிலால் நகர ஐக்கிய ஜமாஅத்,
மஆதினுல் ஹசனாத்தில் இஸ்லாம் சங்கம், நெசவுத்தெரு,

விரும்பத் தகாத நிகழ்வுகளும் அசம்பாவிதங்களும் நடப்பதைத் தவிர்ப்பதற்காக, நம் சமுதாய ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, ஊரின் எல்லா மஹல்லா ஜமாஅத்துகளுக்கும் கட்டுப்பட்ட பகுதிகளில் கட்டிடப் பணிகளுக்கு வெள்ளிக் கிழமையை வார விடுமுறையாக்கி ஒத்துழைப்புத் தருமாறு அனைவரையும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

"நீங்கள் யாவரும் ஒன்று சேர்ந்து, அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்; பிரிந்துவிடாதீர்கள்" எனும் அருள்மறை (4:103) குர்ஆனின் பொன்மொழியுடன் இந்த அறிவிப்பு நிறைவு பெற்றது.

- அதிரை அஹ்மது

7 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நல்லெண்ண முயற்சிகள் யாவற்றையும் வரவேற்போம் ஒத்துழைப்போம் இன்ஷா அல்லாஹ்...

inthiaz said...

imthiaz .uk . try to united well done

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//விரும்பத் தகாத நிகழ்வுகளும் அசம்பாவிதங்களும் நடப்பதைத் தவிர்ப்பதற்காக, நம் சமுதாய ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, ஊரின் எல்லா மஹல்லா ஜமாஅத்துகளுக்கும் கட்டுப்பட்ட பகுதிகளில் கட்டிடப் பணிகளுக்கு வெள்ளிக் கிழமையை வார விடுமுறையாக்கி ஒத்துழைப்புத் தருமாறு அனைவரையும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் கேட்டுக்கொள்கிறது.//

அஸ்ஸலாமு அலைக்கும்,

கட்டுமானபணிக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விசயத்தில் ஒன்றினைந்துள்ள அனைத்து அதிரை சங்கங்களும், எல்லா விசயத்திலும் ஒன்றினைய வேண்டும் என்பது அதிரைவாசிகள் அநேகரின் ஆவல்.

நல்ல முயற்சி..

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல முடிவு.இன்ஷா அல்லாஹ் இதுவே ஊர் ஒற்றுமைக்கு நல்ல தொடக்கமாகவும்,நம் எதிரிகளுக்கு சாவு மணியாகவும் இருக்கட்டும்.

அப்துல்மாலிக் said...

மஷா அல்லாஹ் ஊரின் ஒற்றுமைக்கு இது ஒரு நல்ல ஆரம்பம், இது மாதிரி அனைத்து நல்ல காரியங்களை ஒரு மனதோடு நிறைவேற்ற முயற்சி செய்யவேண்டும்

Yasir said...

நல்ல முடிவு.இன்ஷா அல்லாஹ் இதுவே ஊர் ஒற்றுமைக்கு நல்ல தொடக்கமாக இருக்கட்டும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு