Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

cmp லைன் வாய்கால் முறையாக சீர் செய்யப்படுமா? 8

அதிரைநிருபர் | June 25, 2011 | , ,

நீங்கள் கீழே பார்த்து கொண்டு இருக்கும் புகைப்படங்கள் (24.06.2011 எடுத்தது) CMP லைன் வாய்காலின் நிலை?



தமிழ்நாட்டில் தேர்தல் வரும்போது நமது தொகுதியில் அதிகமாக பேசபடுவது இந்த வாய்காலைதான். நமது தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் என்னை வெற்றி பெற வையுங்கள் நான் இந்த வாய்காலை சீர் செய்யுவேன் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு செல்வர்கள். இன்னும் ஒரு சில மாதத்தில் உறுப்பினரக போட்டியிட தயாராகும் வேட்பாளர்கள் என்னை வெற்றி பெற வையுங்கள் நான் இந்த வாய்காலை சீர் செய்யுவேன் என்ற சொல் தாரக மந்திரமாக இருக்கும். இங்குள்ள வாய்காலை ஒரு மாதத்திற்கு முன் அதிரை பேரூர் நிர்வாகம் தூர்வாரினார்கள். ஆனால் தூர்வாரிய பின்பு அங்கு உள்ள கழிவுகளை அப்படியே விட்டுச் சென்றுள்ளார்கள். வாய்கால் தூர் வாருவதற்கு முன்பு கூட இவ்வளவு மோசமாக இல்லை ஆனால் தற்போது இருக்கும் சூழல் அங்குள்ள மக்களுக்கு டெங்கு காலரா போன்ற கொடிய நோய் வரும் அபாயம் உள்ளது.

ஆகவே இந்த பகுதி வார்டு கவுன்சிலர் அவர்களும், பேரூராட்சி நிர்வாகமும் இதில் மிக அக்கரை எடுத்து வாய்க்கால் தூர்வாரிய பகுதிகளில் இருக்கும் குப்பைகளை உடனே அகற்றி இதனால் ஏற்படக்கூடிய கொடிய நோயிலிருந்து காப்பாற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இன்னும் சில நாட்களின் இதை சுத்தம் செய்யவில்லை என்றால் மக்கள் சாலை மறியல் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கசியத்தொடங்கியுள்ளது.

மேலும் அதிரையில் குவிந்துள்ள குப்பைகள் அவ்வப்போது எடுக்கபடாததால் அப்பகுதி மக்களே அதற்கு தீ வைத்துவிடுகிறார்கள். இதனால் பெரிய விபரீதங்கள் ஏற்பட காரணமாகிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. வார்டு உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுமாறு அதிரைநிருபர் குழு அனைத்து அதிரை மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறது.

-- அதிரைநிருபர் குழு

8 Responses So Far:

Meerashah Rafia said...

சிறு வயதில் நான் வேட்டியில் மீன் பிடித்து சமைத்துத்தின்ற அந்த ஆற்றங்கரையா இன்று சாக்கடையாகி கிடக்கின்றது?!?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சுகாதார சீர்கேட்டிற்கு வாய்க்களை வலைய வைத்து விடாதீர்கள் ! தயவு செய்து அப்பகுதி மக்கள் வார்டு உறுப்பினரையும் பஞ்சாயத்து அலுவலகத்தையும் உசுப்பி எடுங்கள் !!!

அதைவிட மிக முக்கியம் நாமும் எங்கே குப்பைகளை கொட்ட வேண்டும் என்றும் தெளிவாக இருக்க வேண்டும் கேட்பாரற்று இருக்கும் எவ்விடத்திலும் குப்பைதானே என்று கொட்டி விட்டுச் சென்றால் அதன் பாதிப்பு நமக்கும் நமது பிள்ளைகளுக்கும்தான் அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்...

ஊருக்கென்று செய்ய பனிகள் ஏராளம் இருந்தும், அவர்கள் செய்வார்கள் இவர்கள் செய்வார்கள் என்று கைகாட்டிக் கொண்டிருக்காமல் அரசின் ஆக்கபூர்வமான நியாமான முறையில் பெற்றிட களம் கானுங்கள் சுகாதாரம் பேனுவோம்... இயக்கம்தான் தயக்கம் என்றால் விட்டெறிந்து விட்டு வீட்டுக் அருகில் இருக்கும் குப்பைகளுக்கு முடிவு கட்டுங்கள் உறவுகளே !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அத்தியாவசியமான கோரிக்கை.

பல மாதமோ வருடமோ இந்த இடக் காட்சி இப்படித்தான் உள்ளது.

// சில நாட்களின் இதை சுத்தம் செய்யவில்லை என்றால் மக்கள் சாலை மறியல் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கசியத்தொடங்கியுள்ளது.//

கசிய வேண்டாம் அ.நி. சார்பாக பகிரங்கப் படுத்துங்கள்.

// இயக்கம்தான் தயக்கம் என்றால் விட்டெறிந்து விட்டு வீட்டுக் அருகில் இருக்கும் குப்பைகளுக்கு முடிவு கட்டுங்கள் உறவுகளே !//

இது தான் உண்மை நாளை வர இருக்கும் தேர்தலில் மீண்டும் சீட்டை கைப்பற்றனுமே, இயக்கத்துக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாதே என்ற தன்னலம் தான் இந்த அவலநிலைக்கு முழுக் காரணம்.

crown said...

meerashah சொன்னது…
சிறு வயதில் நான் வேட்டியில் மீன் பிடித்து சமைத்துத்தின்ற அந்த ஆற்றங்கரையா இன்று சாக்கடையாகி கிடக்கின்றது?!?
--------------------------------------------------------------------
அஸ்ஸலாம் அலைக்கும். ஆம் சகோதரனே! உம்மை போலவே ஆற்றாமை எனக்கும்"உண்டு. முன்பு மீன் பிடித்து "உண்டு வந்த இடம் மீண்டு வருமா?கண்ணீர் வரும் . தண்ணீர் வருமா? தூர் வாரியும் துர்னாற்றம் போகவில்லை. கவுன்"சிலர்" இப்படித்தான் பதவியை வைத்து குப்பை கொட்டுகிறார்களோ? சப்பை கட்டுகிறார்களே!
ஆற்றுக களப்பணி! ஆற்றுவதோ கழகப்பணி!அதனால்தான் எம்மை போன்றவர்களு இன்னும் கலக்கம். ஏன் எந்த சுனக்கம்? ஓட்டுக்கு மட்டும் தொகுதி மக்களிடம் வைக்க முடியும் வணக்கம். பின் பணி முடிக்கவில்லை யென்றுகேட்டாள் சப்பை கட்டு விளக்கம்.இப்படியே காலம் கழித்து போனால் எப்படி துலங்கும்,விளங்கும்? ஆற்றில் தண்ணீர் ஓடியது போய் சேற்றில் தேங்கும் சாக்கடைத்தண்ணீர்.இதில் அரசியல் சாக்கடை வேரு.எப்படி மருபடியும் வரும் ஆறு? 'வாய்காலில் ஆறு ஓடுமா? 'கால்வாய் தண்ணியாவது கிடைக்குமா? ஆற்றாமையில் என்னைப்போல பலர்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வாய்கால் தூர் வாருவதற்கு முன்பு கூட இவ்வளவு மோசமாக இல்லை ஆனால் தற்போது இருக்கும் சூழல் அங்குள்ள மக்களுக்கு டெங்கு காலரா போன்ற கொடிய நோய் வரும் அபாயம் உள்ளது எனபது முழுக்க முழுக்க உண்மை.

உடணடி நடவடிக்கை தேவை..

Yasir said...

நம் ஊரின்/நாட்டின் மிகப்பெரிய சுகாதர கேடே இந்த வாய்க்கால்களை ஒழுங்குபடுத்தாமையே..நோய்பரவலை பற்றிபேசும் அரசு அதற்க்கான காரணங்களை கண்டறிந்து அகற்றவேண்டும்..அதற்க்கு அந்த தொகுதி கவுன்சிலர்கள் கவலை கொள்ளவேண்டும்...

Yasir said...

கிரவுனே...சாக்கடைமேட்டரில் கூட இப்படி சரமாரியா விளையாட முடியுமா...வார்த்தை விளையாட்டு மன்னன்

//கவுன்"சிலர்"// SUPERB

அப்துல்மாலிக் said...

இது மாதிரி ஊரில் அதிகமான தெருக்களில் இதே அவலம் தொடருது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு