Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இலவசம் யார் வசம்? 25

அதிரைநிருபர் பதிப்பகம் | June 05, 2011 | , , ,



கல்வி, புத்தகம் இலவசம்;
உணவு, சீருடை இலவசம்;
லேப்டாப், சைக்கிள் இலவசம்;
கல்வியின் உயிர் யார் வசம்?

விவசாய மின்சாரம் இலவசம்;
சமையல் எரிவாயு இலவசம்;
தொலைக் காட்சியும் இலவசம்;
2-ஜி மெகா ஊழல் யார் வசம்?

அரிசி இருபது கிலோ இலவசம்;
ஆடுகள், மாடுகள் இலவசம்;
மிக்சி, கிரைண்டர் இலவசம்;
சொத்துக் குவிப்பு யார் வசம்?

வேட்டி, சேலை இலவசம்;
திருமண உதவி இலவசம்;
தங்கத் தாலி இலவசம்;
குடும்ப அரசியல் யார் வசம்?

உமர்தம்பிஅண்ணன்
நன்றி : (உமர்)தென்றல்

25 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இப்போது மு.க.வின் சுவாசம் !
கூடாநட்பின் கை வசம் !

அம்மா என்றுமே பரவசம் !
முன்னாள் செயல்திட்டங்கள் துவம்சம் !

ZAKIR HUSSAIN said...

கல்வியின் உயிர் யார் வசம்?
2-ஜி மெகா ஊழல் யார் வசம்?
சொத்துக் குவிப்பு யார் வசம்?
குடும்ப அரசியல் யார் வசம்?///..........

இதையெல்லாம் சிந்தித்தால் தமிழ்நாடு ஏன் இப்படி இருக்கப்போகிறது...அப்படியே சிந்தித்தாலும், திரைப்படங்களிலும் , கதைகளிலும் வரும் கதாநாயகன் மாதிரி யாராவது நல்லவன் தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைக்காமலே போய்விட்டான்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

Sஹமீது சொன்னது…

இப்படியோ இலவசம் கொடுத்துகொண்டிருந்தாள் இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் தமிழ் நாட்டில் சோம்பேறிகள் இலவசமாக திரிய ஆரம்பித்துவிடுவார்கள்

Yasir said...

கண்ணாடி போட்டவர் வந்து இலவசங்களை வாரி கொடுத்து மக்களை முக்கா சோம்பெறி ஆக்கினார்....இந்த அம்மா எல்லாத்தையும் இலவசமாக கொடுத்து முழு சோம்பெறி ஆக்கி விடுவார் போலிருக்க்கு....இலவசங்கள் நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும் கெடு

அதிரை என்.ஷஃபாத் said...

ஆட்சி மாறலாம் இவர் வசம்
அசதி சேரலாம் அவர்வசம்.
சூழ்ச்சி செய்திடும் அரசியல் வாழ்விலே
ஊழல் என்பதும் பெரும்விஷம்..

ஆயிரம் கொடுப்பதாய் அறிவித்தோம் இலவசம்.
கோடியாய் எடுக்கலாம் என்பதில் பரவசம்.
ஆயினும் வாக்குகள் மக்களின் கைவசம்,
ஆட்சியை மாற்றுதல் அரசியல் சாகசம்.

ஆளுவது எவரெனினும் அடியாரைக் காத்திடுதல்
எம்மிறைவா உன் வசமே..
நாளும் நம் நலனுக்காய் வேண்டிடுவோம்
நண்பர்களே..இது நெசமே...

========================================================
அன்புடன்,
அதிரை என்.ஷஃபாத்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இலவசங்கள் எவர் வசமும் இருக்கட்டும்...

அழகிய கவிதைகளும் கருத்தாழம் கொண்ட வரிகளும் எம்மவர்(கள்) வசம் !

தம்பி ஷஃபாத் ! கலக்கல் !

கவிதைக் கலக்கல் என்று ஒரு தொடர் ஆரம்பிக்கலாமான்னு ஒரு ஜில்லு தட்டுது ! செய்திடலாம் !? விட்ட இடத்தில் தொடங்கத்தான் தம்பிகள் இருக்கிறார்களே.. காக்காமார்களே !

Yasir said...

ஷஃபாத் உங்கள் கவிதை ஒரு பழசர்பத்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஆட்சி மாற்றம் காட்சி மாற்றம்
மக்கள் பாடோ திண்டாட்டம்
ஆண‌வ‌ம் யார் வ‌ச‌ம்?
ம‌த‌துவேச‌ம் அவர் வ‌ச‌ம்?
ப‌ழிக்குப்ப‌ழி சிறைவாச‌ம்?
ம‌னித‌ நேய‌ம் எவ‌ர் வ‌ச‌ம்?

அப்துல்மாலிக் said...

வேலைய கொடுங்கப்பா
உழைக்க கற்றுக்கொடுங்கப்பா

“இலவசம்” அறிவாளிங்களுக்கு பிடிக்காத வார்த்தை எனக்கும்தான் :))

ZAKIR HUSSAIN said...

ஷஃபாத் உங்கள் கவிதை ஒரு பழசர்பத் //

யாசிர் ஏன் நீங்கள் கொஞ்சம் "பூசினாப்ல' இருக்கீங்கனு இப்பதான் தெரியுது...

Ya.. Sir!!! யாசிருக்கு பதில் இப்படி ஷஃபாத் எழுதக்காரணம் ...கிரவுன் பக்கத்தில் இருப்பதுதான்...சத்தியமாக..நிச்சயமாக் ..என் தமிழின் மீது ஆணையாக....
[ நீ யாருடா தமிழுக்கு எல்லாம் ஆணையிடனு சபீர் எழுதமாட்டான் என்ற தைரியத்தில்...ZAKIR HUSSAIN]

Ahamed irshad said...

அலுவ‌ல‌க‌ இல‌வ‌ச‌ இணைய‌ இணைப்பில்,இல‌வச‌ ப்ளாக்க‌ர் த‌ள‌த்தில், இல‌வ‌ச‌த்தை ப‌ற்றி பேச‌லாமா # ட‌வுட்ங்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அலுவ‌ல‌க‌ இல‌வ‌ச‌ இணைய‌ இணைப்பில்,இல‌வச‌ ப்ளாக்க‌ர் த‌ள‌த்தில், இல‌வ‌ச‌த்தை ப‌ற்றி பேச‌லாமா # ட‌வுட்ங் //

கிளியரிங் then ஹியரிங் : இல்லை இல்லவேயில்லை(ன்னு) சொன்னாலும் நம்பவா போறாங்க ! இருப்பினும் இலவசங்கள் அவய்ங்களுக்குத்தான் இங்கே எல்லாமே இவர்கள் வசமிருப்பதால்தான் இப்புடி !

அலுவலக இணையமோ / வீடுகளிலிருக்கும் இணையமோ அவர்கள் வசமிருந்தாலும் :: ELIGIBLE for இலவசம் ! (தமிழண்டா(ன்னு) சொல்லுவோம்ல)

Ahamed irshad said...

கிளியரிங் then ஹியரிங் : இல்லை இல்லவேயில்லை(ன்னு) சொன்னாலும் நம்பவா போறாங்க ! இருப்பினும் இலவசங்கள் அவய்ங்களுக்குத்தான் இங்கே எல்லாமே இவர்கள் வசமிருப்பதால்தான் இப்புடி !

அலுவலக இணையமோ / வீடுகளிலிருக்கும் இணையமோ அவர்கள் வசமிருந்தாலும் :: ELIGIBLE for இலவசம் ! (தமிழண்டா(ன்னு) சொல்லுவோம்ல) //




காக்கா..ஒன்னுமே புரிய‌ல‌ நீங்க‌ சொன்ன‌து..

Yasir said...

//யாசிர் ஏன் நீங்கள் கொஞ்சம் "பூசினாப்ல' இருக்கீங்கனு இப்பதான் தெரியுது../// கண்டுபிடிச்சிட்டீங்களா !!!எல்லாம் அவகோடா (avakoda) ஜூஸ் செய்யும் மகிமைதான் காக்கா...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//காக்கா..ஒன்னுமே புரிய‌ல‌ நீங்க‌ சொன்ன‌து..//

தம்பி ஊரிலுள்ளவங்க மட்டும்தான் இலவசத்திற்கு எலிஜிபிலா ?

அப்ப நாமா (பிரச்சாரம் கேட்டோமே ஏன் செய்தோமே)?

அதான் இப்புடி, கிடைக்கின்ற இலவசங்களை(யும்) / ஏன் காசு கொடுத்தும்தான் (மொபைல் நெட்) e(ல)வசம் பேசுறோம் !

ZAKIR HUSSAIN said...

Avocado...நல்ல பழம்..இங்கும் குறைவான அளவில் விளைகிறது. இனிப்பு 'சுள்'னு தூக்கலா இல்லாததாலே ஆர்ட் ஃபிலிம் மாதிரி அதிகம் பேசப்படுவதில்லை [ திண்ணப்படுவதில்லை]

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Avocado...நல்ல பழம்..//

அட "அவகோட" இதுக்குமா பழங்க(லைகள்) இருக்கு !

அசத்தல் காக்கா : உங்களுக்கு (இப்போதே) தூண்டில் போடுகிறேன்... சீக்கிரத்தில் தனி மின்னஞ்சலில் சந்திக்கிறேன் !.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அட பாவி தம்பி சபாத்! உன்னிடம் இந்த கவிதை வந்திருப்பதைப்பற்றி சொன்னதே நாந்தான் . எவ்வளவு நேரம் பேசியிருப்போம். அப்பகூட சொல்லவேயில்லை இப்படி ஒரு பதில் கவிதை புனையப்போவதை. இப்படி அருமையான கவிதை எழுதி கமுக்கமாய் பதிந்துவிட்டாய்.அவ்வளவும் திகட்டாத மிட்டாய். நான் என்ன வார்தைகள் எழுத ஒத்திகைப்பார்திருந்தேனோ? அதை சற்று ஒத்திவைத்திருந்தேன் நீ எப்படி என் இதயத்தில் உள்ளதை படித்து இப்படி எழுதினாய்?? தவறு,தவறு நீ யாரையும் பார்த்து எழுதுறவன் அல்லன் நீ திருடும் கல்லன் அல்லன். உன் சிந்தைனையும் என் சிந்தனையும் சேர்ந்திருப்பதே இது போல் வெளிவரக்காரணம். தம்பி சாபாத் நம் சிந்தனைபோலவே ஒரே அலைவரிசையில் சிலர் துபாயில் திருந்து கொண்டிருக்கின்றனர் என்பதை அறிவாயா? வாழ்துக்கள்.

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…

Avocado...நல்ல பழம்..இங்கும் குறைவான அளவில் விளைகிறது. இனிப்பு 'சுள்'னு தூக்கலா இல்லாததாலே ஆர்ட் ஃபிலிம் மாதிரி அதிகம் பேசப்படுவதில்லை [ திண்ணப்படுவதில்லை]
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். சகோ.ஜாஹிர் அவங்ககூட நான் ஒத்துபோகிறேன். அவகூட சொல்வாள்(வீட்டுக்காரி) பட்டர் புரூட் பெட்டரா இல்லைன்னு. இனிப்பு தூக்கள் குறைவுதான். ஆனால் நான் சொல்வது அவகோடா அவள் பண்ணும் ஜூஸ் என்பதால் இனியவைதான்.சுவையானதுதான்.(அப்பாடா! அவ இத படிப்பா என்பதால் இப்படி எழுதி நல்ல பெயர் வாங்கியாச்சு)இதை அவகூட ஒத்துக்கொள்வாள்.

crown said...

யாரங்கே கவிகாக்காவின் வருகையில் ஏன் தாமதம் ? என்பதை(அவகோடா அரிந்து) அறிந்து வரவும்.......

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//யாரங்கே கவிகாக்காவின் வருகையில் ஏன் தாமதம் ? என்பதை(அவகோடா அரிந்து) அறிந்து வரவும்....... //

தூதுவன் உறங்குவதால் (இறுபத்தில் ஏழாம் புலிகேசி அரண்மனையில்) நான் வந்தேன் இங்கே !

(ஃ)பிஸியோ (தெரஃபியில்) இருப்பதானாலும், ஹைட்ராலிக் வேலைப் பளு அதிகமென்பதாலும் அதைவிட கையடக்க கண்பேசி (ஐஃபோனுக்கு என்னர்த்தம்) அயர்ந்திருப்பதாலும் தாமதங்கள்... விரைவில் அதிவிரைவில் அதிவேக விரைவில் வருவார்கள் கவிக் காக்கா...(பராக் பராக் பராக்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அவகூட சொல்வாள்(வீட்டுக்காரி) //


வாடகைக்கு இருக்கும் விட்டைத்தானே சொல்றே !? (இதனையும் படிப்பாங்க தானே)

Yasir said...

Avocado திருத்தலுக்கு நன்றி அசத்தல் காக்கா...அவ என்று வந்ததால் கொஞ்சம் மதி மயங்கிட்டேன்....நல்ல கொழுப்புகள்(HDL)நிறைந்த பழம் அப்படியென்று கேள்விப்பட்டு உள்ளேன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு