Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்று(ம்) - அல்ஹம்துலில்லாஹ் ! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | June 20, 2011 | , , , , , ,



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

அளவிலா அருளும் நிகரிலா புகழும் உரித்தான ஓர் இறை அல்லாஹ்வின் பேரருளாலும் தன்னிகரற்ற வல்லமையின் நாட்டத்தினாலும் அதிரைநிருபர் வலைத்தளம் முதலாம் ஆண்டு நிறைவை எட்டி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இச்சூழலில் எங்கள் யாவரின் உள்ளம் கவர்ந்த வாசக நேசகங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி மட்டுமல்ல நன்றிப் பெருக்குடன் அல்ஹம்துலில்லாஹ்! சொல்லிக் கொள்வதில் உவகை கொள்கிறோம்!

அயர்ந்திருந்த தருனத்தில் ஆசுவாசப்படுத்திட ஆரம்பிக்கப்பட்டதல்ல அதிரைநிருபர் வலைத்தளம். ஆராவரிக்கும் வாதங்கள், விமர்சனங்கள் உருவெடுத்த தருனத்தில் அன்பையும் அரவனைப்பையும் காட்டியவர்களோடு களம் கண்டிடுவோமே என்று அதிர்வலைகள் அதிகம் ஏற்படுத்தாமல் அமைதியின் ஆளுமையாக அதிரையின் வலைதளங்களில் ஒன்றோடு ஒன்றாக இருந்திடாமல் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையால் உந்தப்பட்டு இணையக்கடலில் தடம் வைத்தது 2010ம் வருடம் ஜூன் திங்கள் 21ம் தேதி அன்று.

இது பெருமையடித்துக் கொள்ள எழுதப்பட்டதல்ல, பொறுமைகாத்து, சகிப்புத்தன்மையால் பக்குவப்பட வைத்த தருனத்தை நினைவு கூறுவதிலும் அத்தருனத்திலும் இன்றளவும் எள்ளலவும் குறையாமல் மென்மேலும் அன்பும் ஆதரவும் அள்ளித்தரும் சகோதர சகோதரிகள் யாவருக்கும் எங்கள் அதிரைநிருபர் குழுவின் நன்றியை உரித்தாக்குகிறோம்.. அல்ஹம்துலில்லாஹ் !

சுருக்கமாக இதுவரை...

495 பதிவுகள்
7,563 பின்னூட்டங்கள்
282,195 செல்ல அடிகள்

கடந்த ஏப்ரல் மாதம் 2011 வரை அலெக்சா இணைய தர வரிசையில் 226,310 என்ற நிலையை எட்டியது ! இதனூடே ஏற்ற இறக்கமிருக்கும் அவ்வப்போது... இதுநாள் வரை அதிரைசார்பு வலைத்தளங்களிலேயே முதன்மையிடம் !

கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக்கு தடம் அமைத்து வெற்றிகரமாக நடந்திட அதிரைநிருபர் முன்னின்று பங்காற்றியது !

7 தொடர்கள்

அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்ட சகோதரர் அலாவுதீன் அவர்கள் எழுதிய "கடன் வாங்கலாம் வாங்க" தொடர், இதனை அதிரைநிருபரே புத்தகமாக வெளியிட பொறுப்பேற்று அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது.

சகோதரர் அலாவுதீன் அவர்கள் எழுதிய "பரீட்சைக்கு படிக்கலாம்" அதிரைநிருபரில் வெளிவந்த கட்டுரையை - நான்கு பக்க பிரசுரமாக அதிரை மற்று வெளியூர் மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் வெளியிட்டு மாணவர்கள் மற்று பெற்றோர்களின் வரவேற்பை பெற்றது.

அதிரைநிருபர் வலைத்தளம் அதிரை சகோதர சகோதரிகளோடு மட்டும் சுழன்றிடாமல் உலகளாவிய இணையக் கடலில் பயனிக்கும் அனைத்து வாசக நேசங்களின் மனங்களை வென்று அமைதியின் ஆளுமையை நிருபித்தது.

அதிரைநிருபர் வலைத்தளத்தின் பங்களிப்பாளர்கள் ஒவ்வொருவராக பெயரிட்டு நன்றி சொல்வதில் தனித்தனியாக பிரித்துப் பார்க்காமல் எங்கள் குழுவோடு ஒன்றினைந்து எல்லாவகையான ஒத்துழைப்பையும் ஆலோசனைகளைம் நேரிலும், மின்னஞ்சல் வழியாகவும், அலைபேசிவாயிலாகவும் பெரிதும் அளித்து உதவியவர்களுக்காக எங்களின் துஆ என்றும் அதோடு நன்றியும் நிலைத்திருக்கும் இன்ஷா அல்லாஹ்!.

- அதிரைநிருபர் குழு



ஒரு கால்வாயில் இரு நதிகள்

அதிரை நிருபர்
ஆரம்பித்து
ஐந்தாண்டுகள் ஆகிவிட்டனவா?

அதற்குள் எப்படி
ஆறாண்டுகளுக்கான
ஆக்கங்கள்
ஏழாண்டுகளுக்கான
எத்திவைப்புகள்
எட்டாண்டுகளுக்கான
கட்டுரைகள்
ஒன்பதாண்டுகளுக்கான
நண்பர்கள்
பத்தாண்டுகளுக்கான
கவிதைகள்
பதினோறு ஆண்டுகளால் சாத்தியப்படும்
விழிப்புணர்வு மாநாடு
என சாத்தியப்பட்டது?

என்னது...?
ஓராண்டு நிறைவுறுகிறதா?
அதுசரி...
வாழ்த்துகள்ப்பா!!!

-- சபீர்
Sabeer abuShahruk


ரோசத்தில் பிறந்த
அக்னிகுஞ்சு!

நேசத்தில் வளர்த்த
வாசக, வாசகியர்களின்
பாசத்தில் திளைத்து

ஒருவருடம் ஓடியதே
தெரியாத பிள்ளையாய்
எல்லாராரலும் தாலாட்டப்பட்டு
இன்று!

நாளைய !
சமுதாயத்துக்கு தோள்
கொடுக்க வளரும்
பிள்ளையாய் அடியெடுத்து
வைக்கும் நாளில்.

நல்லுளங்களோடு பங்கெடுக்கும்
சாமானிய வாசகனாக
உவகை கொள்வதுடன்.

இந்த குழந்தையுடன்
நானும் சேர்ந்து
நடந்து இருக்கிறேன்

எனக்கு
பேரானந்தத்தை தருகிறதே !
மேலும் மேலும்
சமுதாய சிந்தையுடன்

சிறப்புடன் செயலாற்ற
அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.

"யா அல்லாஹ்!
எங்கள்
செயலையும்
எண்ணத்தையும்
உனக்குப் பிடித்தமான
வாகையில்
அமைய
அருள் புரிவாயாக.

-- CROWN

முதலாம் ஆண்டின் நிறைவில் அதிரை நிருபர்....

இணைய கடலில் இனிமையாய்
பயணித்து வரும் அதிரை நிருபரே!
ஒரு வருட காலத்தில் நீர்
பெரும் கடலையே தாண்டிவிட்டீர்!

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து
மாநாடொன்று நடத்தி வெற்றிபெற்றீர்!
கவிதைக்கு முக்கியத்துவம் தந்து
பல கவிப்பாக்களை இங்கு தந்தீர்!

மார்க்கத்திற்கு முக்கியத்துவம் தந்து
மனிதநேயம் மலரச் செய்தீர்!
போட்டியின்றி நீர் புரட்சி செய்தீர்!
அமைதியாய் அதிரையை ஆட்கொண்டீர்!

கடந்த கால வரலாறெழுதி எம்
கண் முன்னே கொண்டு வந்தீர்!
வயதுகள் கடந்து அனைவரின்
வாழ்த்துக்கள் பல பெற்றீர்!

கடிவாளமிட்ட குதிரையாய்
அடக்கத்துடன் ஆளுமை செய்தீர்!
அநாகரிக எழுத்துக்களை அறவே வெறுத்தீர்!
அதனால் அனைவரின் கவனத்தை பெற்றீர்!

உம் அரவணைப்பில் எம் அனைவரையும்
கால்கடுப்பின்றி வரிசையில் நிற்கவைத்தீர்!
பரிட்ச்சை எழுதி தேர்வு முடிவுக்கு ஏங்கும்
மாணவனாய் எம்மை ஆக்கி வைத்தீர்!

உற்சாக மிகு உம் வார்த்தைகளால்
எம்மை கயிறின்றி கட்டிப்போட்டீர்!
தொலைந்து போன எம் உறவுகளை
இங்கு கொண்டு வந்து சேர்த்தீர்!

எங்கோ இருக்கும் அவருக்கும்
இங்கே இருக்கும் எனக்கும்
இணைப்பு பாலத்தை சிரமமின்றி
இணையக்கடலின் மேல் கட்டிதந்தீர்!

ஊரின் முக்கிய நிகழ்வுகளை
உற்சாகமாய் வழங்கித்தந்தீர்!
காணொளி மூலம் எம்மை
ஊருக்கே கொண்டு சென்றீர்!

பசுமையான நினைவுகளை
கட்டுரை மூலம் வார்த்துதந்தீர்!
படைத்த இறைவனை என்றும்
நினைவில் கொண்டீர்!

நம்மூர் கடைத்தெரு நிகழ்வுகளை கூட
கலிஃபோர்னியா வரை கொண்டு சேர்த்தீர்!
பாலைவனத்தில் இருக்கும் எம்மை
சோலைவனத்திற்கே அழைத்து சென்றீர்!

கவிக்காக்கா மூலம்
கவிதைகள் பல தந்தீர்!
விஞ்ஞானி காக்கா மூலம்
அறிவியல் சிந்தனைகளை தந்தீர்!

மருத்துவ காக்கா மூலம்
பல சிகிச்சைகளை செய்தீர்!
கீரீட(க்ரவ்ன்)சகோதரன் மூலம்
சொல்விளையாட்டை கற்று தந்தீர்!

அதிரை அஹ்மது சாச்சா மூலம்
அறிவுப்பூர்வமான தகவல் பல தந்தீர்!
சகோ. அலாவுதீன் மூலம்
அழகிய கடனை கற்றுத்தந்தீர்!

சகோ. அபுஈசா மூலம்
அன்றாட பிரச்சினைக்கு தீர்வுகண்டீர்!
தம்பி ஷஃபாத் மூலம்
வார்த்தை விளையாட்டை சொல்லித்தந்தீர்!

மச்சான் ஜஹபர் சாதிக் மூலம்
பின்னூட்ட ஊட்டம் தந்தீர்!
அபுஇபுறாகீம் காக்கா மூலம்
உற்சாகத்தை அள்ளித்தந்தீர்!

சகோ. தாஜூத்தீன் மூலம்
தலை சிறந்த கருத்தை தந்தீர்!
தம்பி இர்ஷாத் மூலம்
கிச்சிகிச்சி காட்டினீர்!

மகன் மீராஷா மூலம்
கிராஃபிக்ஸில் விண்ணில் பறக்கச்செய்தீர்!
சகோ. ரஃபியா மூலம்
முக்கிய பல நிகழ்வுகளை தந்தீர்!

சகோ யாசிர் மூலம்
விலையுயர்ந்த காப்பியும் போட்டு தந்தீர்!
நண்பன் அப்துல் ரஹ்மான் மூலம்
கி.மு. விற்கே எம்மை கொண்டு சென்றீர்!

வாவன்னா சார் மூலம்
வாழ்க்கை பாடம் நடத்தினீர்!
எஸ்.கே.எம். ஹாஜாமுஹைதீர் சார் மூலம்
பள்ளி நினைவுகளுக்கு பந்தலிட்டு வரவேற்றீர்!

ச‌கோ. அதிரை முஜீப், மீரா மூல‌ம்
எம‌க்கு உய‌ர்க‌ல்விக்கு வ‌ழிகாட்டினீர்!
அன்பின் அப்துல் மாலிக் மூல‌ம்

ஆக்க‌ப்பூர்வ‌மான‌ த‌க‌வ‌ல் ப‌ல‌ த‌ந்தீர்!

(எம்.எஸ்.எம்) என் மூலம்
பழைய நினைவுகளுக்கு வர்ணம் பூசினீர்!
இங்கு விடுபட்ட பலர் மூலம்
பல விந்தைகளை செய்து முடித்தீர்!

கருத்துப்பரிமாற்றத்தில் கலைகட்டினீர்!
கல்வி, மார்க்கம், அறிவியல், கவிதை
ஊர் நலன், சமூக சீர்திருத்தம்,ஆரோக்கியம்
என கண்ட துறையிலும் கொடிகட்டிப்பறந்தீர்!

சப்தமின்றி சாதனை பல படைத்தீர்!
அடக்கத்தால் அனைவரின் அன்பை பெற்றீர்!
பள்ளி ஆசிரியர்களிடம் பேட்டி பல கண்டு
எம்மை வகுப்பறைக்கே அழைத்து சென்றீர்!

கப்பலின்றி இணையக்கடலில் கரை சேர்ந்து விட்டீர்!
படிப்பவரெல்லாம் தொடர்ந்து படிக்க என்ன வசியம் செய்தீர்?
பாராட்டு புகழனைத்தும் படைத்தவனுக்கே என்றுரைத்தீர்!
பல்லாண்டு நீர் சிறப்புடன் பயணிக்க எல்லோரின் பிரார்த்தனையையும் நீர் பெற்றீர்!

இன்னும் சிறப்புடன், செம்மையுடன் உம் தடையற்ற பயணம் இனிதே தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தவனாக..

-- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

வாழ்த்தும் நெஞ்சங்களோடு இன்னும் எங்களின் முயற்சிகள் தொடர்ந்திட உங்கள் யாவரின் துஆ என்று எங்களுக்கு(ம்) இருந்திட நம்மை படைத்து பாதுகாத்து வரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நாங்களும் பிரார்த்திக்கிறோம் !

நன்றியுடன் !

- அதிரைநிருபர் குழு

25 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அல்ஹம்துலில்லாஹ்!ஒரு வயது குழந்தை பிரமாதம்!


வாழ்த்தும் நெஞ்சங்களோடு இன்னும் முயற்சிகள் தொடர்ந்திட நம் யாவரின் துஆ என்றும் அனைவருக்கும் இருந்திட நம்மை படைத்து பாதுகாத்து வரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் யாவரும் பிரார்த்திப்போம்.

மென்மேலும் வளர்க வானோங்கி!

sabeer.abushahruk said...

எத்திரையும் மறைக்காமல்
அதிரை நிருபர் பிரகாசிக்கட்டும்!
மப்ரூக்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ச‌கோ. அதிரை முஜீப், மீரா மூல‌ம்
எம‌க்கு உய‌ர்க‌ல்விக்கு வ‌ழிகாட்டினீர்!
அன்பின் அப்துல் மாலிக் மூல‌ம்
ஆக்க‌ப்பூர்வ‌மான‌ த‌க‌வ‌ல் ப‌ல‌ த‌ந்தீர்!

விடுப‌ட்ட‌ என் வ‌ரிக‌ள்......

வாழ்த்தும் நெஞ்ச‌ங்களும், அதை வாங்கிக்கொள்ளும் அதிரை நிருப‌ரும். நீர் ஒரு ந‌டுநிலையான‌ நிருப‌ர் என‌ நிரூபித்து விட்டீரே!!!

வாழ்த்துக்க‌ள் எம் இறை பிரார்த்த‌னையுட‌ன்

எம்.எஸ்.எம். நெய்னா முஹ‌ம்ம‌து.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அல்ஹம்துலில்லாஹ்.

அதிரைநிருபர் மென்மேலும் வளர்ந்து அமைதியின் ஆளுமையாக திகழ படைத்தவனிடம் கையேந்துவோம்.

அதிரைநிருபர் said...

//Naina Mohamed சொன்னது… விடுப‌ட்ட‌ என் வ‌ரிக‌ள்......//

ச‌கோ. எம்.எஸ்.எம். நெய்னா முஹ‌ம்ம‌து, விடுபட்ட வரிகள் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

அப்துல்மாலிக் said...

நேற்றுதான் சந்தித்து அதிரை நிருபரை எப்படி செயல்முறைப்படுத்துவது என்பது பேசியதுபோல் இருக்கிறது, அதற்கிடையில் இப்போ 2ம் ஆண்டிலா, என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள், எல்லா புகழும் இறைவனுக்கே..

அதிரையின் மணம் பரப்பியும்
ஏகத்துவத்தை இனிதாய் எடுத்துரைத்தும்
அரசியலில் அளவாய் அடியெடுத்துவைத்தும்
குறும்பாய் வாழ்ந்த வாழ்க்கையை நினைவுகூர்ந்தும்
கல்விக்கு தக்க வழிகாட்டும் கண்ணாய் இருந்தும்
கருத்துப்போர் இருந்தாலும்
அடிவருடிகளுக்கு சொம்புதூக்காமலும்
பிரிவினை பாராமல் அனைவரையும் அரவணைத்தும்
ஒரு நண்பனாகவும், சகோதரனாகவும், பெற்றோராகவும்
ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டவனாகவும்
அயல்நாட்டில்வாழும் அதிரைவாசிகளுக்கு
24 மணிநேர செய்தி சேனலாகவும்
இருக்கும் அதிரை நிருபர் வலைத்தளம்
மென்மேலும் மெருகூட்டி
நல்லவற்றை சிந்தித்து, உண்மையாய் இருந்து
பல ஆண்டுகள் சமுதாய சிறப்பாற்ற
என் வாழ்த்துக்கள், அல்லாஹ் போதுமானவன்....

அதிரை முஜீப் said...

அதிரை நிருபருக்கு அல்ஃப் மப்ரூக்!.

முன்பு முதலாமாண்டு ஆனதால், நீ
தவழ்ந்தும், நடந்தும் வளர்ந்திருப்பாய்!.

இனி உனக்கு இது இரண்டாம் வருடம்!.

எனவே இனி நீ, சகோதர வாஞ்சையுடன், சமரசம் தான் தாங்கி,
முத்தான ஆக்கத்தையும், அதில் முக்கியமாய் கல்வியையும்,
அரசியல் விழிபுனர்வில் அடிமட்டம் வரை சென்று
அனுதினமும் ஆற்ற வேண்டிய, அயரா பல பணியும்,

இதயம் போல் இனி இயங்க, அதில் ஓடும் தூய இரத்தம் போல்,
உன் பணி இனியாண்டு முதல், இனி அது அதிமுக்கியமானது!.

ஆன்றோரும் சான்றோரும், இங்கு அயராது வரும் வேளை,
ஆக்கமதை பலர் இயற்றி, தாக்கமதை சிலர் தந்து,
உக்கமதை உரமாய் ஊரறிய இடுகின்றாய்!.

உயர் கல்வி வழிபுணர்வே, உயிர் மூச்சு இனி என்று,
நம் இனத்தின் கல்லாமை எனும், இருளை இல்லாமையாக்கிட,
இனி வீறுகொண்டு நீ எழுந்து, வீர நடை போட்டிடனும்!.

அரட்டையும், அடைமொழியும், இனி அப்பப்ப
தொட்டுக்கிட இருந்திடனும்!.

இனி வழிப்புணர்வே இன்றியமையா உணவாய்
இனிமேலும் இருந்திடனும்!!.

அதிரைபெயரில் ஒரு இணையதளம்,
நிருபரோடு அதில் இணைந்து, நாடு முழுதும்
பேரும் புகழும், பெரும்பான்மை பெற்று
வாழ நானும் வாழ்த்துகின்றேன்!.

உன்னை வாழ்த்தும் அடுத்த குழந்தை!
www.adiraimujeeb.blogspot.com

அதிரை முஜீப்:

குறிப்பு: வாழ்த்துப் பாவில் என்னையும் இணைத்த சகோதரர் மு.செ.மு. நெய்னா முஹம்மது அவர்களுக்கும் நன்றிகள் பல!

Yasir said...

ஒரு வருடம்தான் ஆகிறதா ??....அப்போ குழந்தை சிறிது சிறிதாக அல்லவா நடக்கவேண்டும்...ஆனால் இந்த அதிரை நிருபர் என்ற குழந்தை மிக சீக்கிரத்தில் வளர்ந்து நடந்து ஒடி அப்பப்பா ஒரு கல்வி மாநாட்டையெல்லவா நடத்து முடித்து...அதை மற்ற ஊர்களுக்கும் ஒரு முன்மாதிரியை அல்லவா உருவாக்கி உள்ளது.....கவிக்காக்கா சொன்னது போல் 16 வருடங்களில் சாதிப்பதை 1 வருடங்களில் சாதித்து காட்டி இருக்கிறது...ஒற்றுமையாக சிந்திக்ககூடிய மனிதர்கள் ஒன்று கூடி ஒரே குறிக்கோளுடன் ஈடுபட்டதே இந்த இமாலய வெற்றிக்கு காரணம்

Yasir said...

சகோ.முஜீப் சொன்னமாதிரி...”விழிப்புணர்வே “ நம்முடைய முக்கிய உணவாக இருக்க வேண்டும்...அப்பொழுதுதான் நாம் முன்னேற முடியும்

Meerashah Rafia said...

நான் சவூதி அரேபியாவிற்கு காலடி எடுத்து வைத்தும் சரியாக ஒரு வருடம் ஆகிற்று (ஜூன் 2010 -ஜூன் 2011 ). ஆனால் நான் இங்கு வந்ததும் அதிரை நிருபருக்கு நுழைகையில், வலை வடிவமைப்பாளன் என்ற முறையில் எனக்குள் CONTENT ANALYSING செய்து பார்த்ததில், கண்டிப்பாக இந்த தளம் குறைந்தது இரண்டு வருடத்துக்குமுன்(2008) ஆரம்பிக்கப்பட்டதாகவே கருதினேன்..கிட்டத்தட்ட ஆறு/எட்டு மாதத்திற்கு பிறகுதான் வருடங்கள் கூட ஆகவில்லை என்று தெரியவந்தது..

அமீரகத்தை தலைமையிடமாக இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை 'KNOWLEDGE VILLAGE'ஆக வைத்திருக்கிறீர்கள்.


வாழ்துக்கள்..

MSM(MR)

Shameed said...

அதிரை நிருபருக்கு ஒரு வருசமா ! ஆச்சர்யமாக உள்ளது ,

இந்த ஒருவருடகால வெற்றி நடைக்கு நான் கண்ட காரணங்கள்

கோபங்களை தணிப்பதில் அதிரை நிருபர் எடுக்கும் ஆக்கபுர்வமான நடவடிக்கைகள்

வாசக வட்டாரத்தில் உற்ச்கத்தை ஏற்படுத்துதல் (அதாங்க உசுபெத்தல்) தொடர்பில் இருத்தல்

வாசகர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் அதிரை நிருபருக்கு ஒரு தனி திறமைதான் போங்க !

ஆக்கங்களுக்கு (கிடா வெட்டாமல்) பெயரிடும் திறமை

ஆக்கங்களுக்கான போட்டோ தேர்வு ( பல முறை என்னை ஆச்சர்யப்பட்ட வைத்துள்ளது போட்டோ தேர்வு )

அநாகரிக பின்னுட்டங்களை உடனுக்குடன் நீக்குவது பிழைகளை உடன் சரி செய்வது

இதற்கெல்லாம் மேலாக நாம் நம் மக்கள் நமதூர் நல்லா இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணங்களே அதிரை நிருபர் இந்த வீர நடைபோட்டதற்க்கு காரணங்களாக என் முன் நிற்கின்றன

இது போல் இன்னும் நிறைய சொல்லலாம் மற்றவர்களும் சொல்ல வேண்டும் என்பதற்காக அவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பாக்கியை பிறகு தொடருகின்றேன்

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின் அஞ்சல் வழி கருத்து
=======================

பிறந்ததிலிருந்தே எங்கள் ஊரான அதிராம்பட்டினத்தில் மேல்நிலைப் படிப்பு வரை இருந்தோம் அப்புறம் ஹாஸ்டல் வாழ்க்கை அதன் பின்னர் திருமணமென்று நாங்கள் வேறு ஊர்களுக்குச் சென்றாலும் இளமைகால நட்புகளை மறக்கவில்லை அதற்கு முத்தாய்ப்பாகவும் ஏதேச்சையாகவும் எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட அதிரைநிருபர் எங்கள் போற்றுதலுக்குரிய ஆசான்களை எங்களோடு பேச வைத்ததும் ஆழ்ந்து வாசிக்க அராம்பித்ததும் அப்படியே கட்டிபோட்டது என்னை.

இது மிகைப்படுத்திச் சொல்லவில்லை, பழைய நினைவுகள், நிகழும் சம்பவங்கள் என்று தொடர்ந்து கட்டுரையாகவும் கவிதையாகவும் எச்சரிக்கையாகவும் வெளிவருவது ஆரோக்கியமான பத்திரிக்கை தர்மமே.

எனக்கு இந்த வலைப் பூவை அறிமுகம் செய்து வைத்த என் பள்ளிகூட நண்பருக்கு என் நன்றி.

வாழ்க வளமுடன், சுற்றமும் சூழ நட்பு பாராட்டுவது தொடரட்டும்.

வாழ்த்துக்கள்

P.S.
கோவையிலிருந்து....

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!

அமைதியாய் ஆளுமை
அன்பான தோழமை
நிறைவான போதனை - என்றும்
நிலைக்கட்டும் உன் சாதனை...

மஅஸ்ஸலாம்
அபுஈசா

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின் அஞ்சல் வழி கருத்து
========================

Assalamu alaikkum!

First of all please accept my congratulations on completion of first year.

A.H.AMANULLAH
BAHRAIN

ZAKIR HUSSAIN said...

wish you all the best "Adirai Nirubar", let we feel this is the beginning to bring better changes

mohamedali jinnah said...

அல்ஹம்துலில்லாஹ்!
The Messenger of Allah (peace and blessings be upon him) said, "If good is done to someone and then they say "Jazak Allahu khayran" to the one who did the good, they have indeed praised them well." [Tirmidhi]
Jazak Allahu khayr جزاك اللهُ خيراً

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்னுடைய தனி மின்னஞ்சலாக வந்ததில் சில இங்கே :-

"Congratulations on completion of first year" - by Umm-Hisham

"Wish you all the best" - by Asha (US)

"எது எப்படியிருந்தாலும் சாதிக்கும் நோக்கமே முன்னால் நிற்கிறது உங்களிடம்" - by Raghu

Unknown said...

அல்ஹம்துலில்லாஹ் ......மென்மேலும் பல சாதனைகளை
புரிய நல வாழ்த்துக்கள் .................

inthiaz said...

imthiaz. uk. WIHS YOU ALL THE BEST ADIRAI NIRUBAR.BRING THE BETTER CHANGES IN FUTURE AND BEST WISHES TO ADIRAI NIRUBAR EDITORS ALSO.ALLAH WIL SO THE RIGHTPATH TO EVERYONE .WASALAM

நட்புடன் ஜமால் said...

நல்ல விடயங்களை நன் முறையில் மென்மேலும் கொடுத்திட வல்ல ஏகன் அல்லாஹ் நம் அனைவருக்கும் துணையிருப்பானாக - ஆமீன் ...

அலாவுதீன்.S. said...

சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

‘’செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’’ (ஹதீஸின் ஆரம்பம்) (அறிவிப்பாளர் : உமர் பின் கத்தாப்(ரலி) அவர்கள், நூல்: ஸஹீஹூல் புகாரி பாகம் 1 எண் : 1)

அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

அதிகமான வேலைப்பளுவுக்கு நடுவில் அதிரை நிருபரை தரமாக கொண்டு சென்றதற்கு வாழ்த்துக்கள்!

நல்ல உள்ளங்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டியதற்கு வாழ்த்துக்கள்!

சமுதாய சேவையை மட்டும் குறிக்கோளாக கொண்டு தளத்தை நடத்தி சென்றதற்கு வாழ்த்துக்கள்!

வரும் காலங்களில் இன்னும் சமுதாயத்திற்கு பலன் தரும் ஆக்கங்களை தந்து சேவை செய்ய வல்ல அல்லாஹ் அதிரை நிருபர் குழுவுக்கு எல்லாவகையிலும் நல்லருள் புரியட்டும்.

பங்களிப்பார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்!.

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 110:1,2,3 - அந்நஸ்ர் - உதவி)

Mohamed Meera said...

பல வருடங்கள் தேவை படும்
செயல்பாடுகளை எல்லாம், ஒரு வருடத்தில் செய்து
முடித்ததால் அதிரைநிருபர் அகில உலக நிருபராக உயர்ந்து நிற்கின்றது.

ஒரு வருடம் தான் ஆகிறதா? நம்பமுடியவில்லை!
உங்கள் இணையத்தோடு ஒன்றிவிட்டதால் , நீண்ட நாட்கள் போன்று இருக்கின்றது.

இரண்டாம் வருடத்தில் -அதிரைநிருபரின் சிந்தனை/செயல்பாடுகளை எப்படி அமைத்துக்கொள்வதாக எண்ணம்?

அரட்டைகளை சிறிது குறைத்து - ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கு ஆர்வமூட்டுவோம்.

மிக சிறந்த பங்களிப்புகளை வழங்கிய- அதன் மூலம் பல அறிய விடயங்களை நாங்கள் அறிய உதவிய அனைத்து சகோதரர்களுக்கும்

நன்றிகள்.....

அதிரைநிருபரின்
பணிகள் தொடர வாழ்த்துகள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அல்ஹம்துலில்லாஹ் !

எல்லாப்புகழும் எம்மை படைத்த ஓர் இறைவனுக்கே !

அதிரைநிருபர் வலைத்தளத்தின் பங்களிப்பாளர்களில் ஒருவன் என்ற உரிமையில் என்னுடைய தனிப்பட்ட நன்றியினை இங்கு பதிவுகள் தந்த அதைத் தொடர்ந்து கருத்திட்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் அல்ஹம்துலில்லாஹ் !

புதுமை கண்டது இங்கே(தான்) தொலைத்த நட்புகளை மீட்டெடுக்க உதவியது இவ் வலைப்பூ !

நாளொரு பொழுதும் ஏதோ ஒரு வகையில் புத்துயிருட்டியது !

ஒன்றுபட்ட கருத்துக்களால் நட்புகளை கட்டுக்குள் இழுத்து கலாய்க்க வைத்தது !

1996லிருந்து தனிப்பட்ட வலைப்ப்பூ / தனிக்குடில் என்று எழுதிப் பழக தளம் தன்னிச்சையாக வைத்திருந்தாலும் அவைகளில் அவ்வப்போது கிட்டிய சிறு சிறு சந்தோஷத்தை விட இங்கே ஒருங்கினைந்த அதிரை நட்புகளோடு சுவாசிக்கும் போது கிட்டும் இன்பமே அலாதிதான் !

சமீபத்தில் மிகப் பிரபலமான ஒரு பத்திரிக்கையில் கண்ட பேட்டியில் (பேட்டி கொடுத்தவரின் ஊடகத்தின்பால் உண்பாடில்லா விட்டாலும்) அங்கே சொன்னது எனக்குப் பிடித்திருந்தது "பிறப்பதை விட - பிரவச்விக்கிறதே சுகம்" அதனைத்தான் இங்கே அதிரைநிருபரில் ஒவ்வொரு பதிவும் வெளிச்சத்துக்கு வரும்போது ஏற்படும்.

அதே பேட்டியில் மற்றொன்றும் என்னைக் கவர்ந்தது "நண்பர்கள் பிரிந்தால் விவாதிப்பதில் அர்த்தமிருக்கும் காரணம் ஏன் / எப்படி என்று அலசுவதில் ! ஆனால் நண்பர்கள் சேர்ந்தேயிருந்தால் ஏன் சிலருக்கு சகிக்க மாட்டேங்கிறது" இது அவர் சொன்ன ஊடகத்தினுடே இருந்தாலும் இங்கேயும் பொருந்தும் தானே !

அமைதியை ஆளுமையாக தேர்ந்தெடுத்த அதிரைநிருபர் அதனைக் கொண்டே குழுவுக்குள்ளே ஒருவரையொருவர் அமைதிப் படுத்த தாரக மந்திரமாக இருந்தது என்னவோ மெய்யே !

பெரும்பாலான சகோதரர்கள் குறிப்பிட்டதுபோல் "விழிப்புணர்வே நமது வேட்கை" கவ்லியாகட்டும் சுகாதாரமாகட்டும் இன்ஷா அல்லாஹ் அதில் உறுதியுடன் இருப்போம் என்றும்.

ஆக்கம் படைத்தவர்களும் அதனைத் தொடர்ந்து கருத்துக்களால் கலங்கரை விளக்காக நிமிர வைத்தவர்கள் (A to Z) அனைவரின் நலனுக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்காகவும் எங்கள் பிரார்த்தனை என்றும் இன்ஷா அல்லாஹ்.

- abu-Ibrahim

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கவ்லியாகட்டும் // என்பதை "கல்வியாகட்டும்" என்று சரிசெய்து வாசிச்"சுடுவீங்க"தானே !!

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இறைவனுக்கே எல்லா புகழும்...

கருத்துக்களுடன் வாழ்த்துரை மற்றும் ஆலோசனைகள் பதிந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மிக்க நன்றி. உங்கள் அனைவரின் பங்களிப்பே நம் அதிரைநிருபரின் வளர்ச்சி. இந்த பதிவை படித்து கருத்திடமுடியாத வாசக நேசங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

படைத்தவனின் உதவியுடன் சக பங்களிப்பாளர்களின் ஆர்வமிகுந்த பங்களிப்பும், வாசக நேசங்களின் உற்சாகமான பின்னூட்டங்களும் நம் அதிரைநிருபர் வலைத்தளத்தை ஓர் சரியான பாதையில் இணையக்கடலில் மிதக்க வைத்துள்ளது என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறோம்.

அதிரைநிருபர் வலைப்பூ சர்ச்சைக்குரிய விடையங்களில் கவனம் செலுத்தாமல் தனக்கென்றே ஒர் வழியை தேர்ந்தெடுத்து சகோதரத்துவத்தால் மட்டுமே நல் உள்ளங்களை இணையத்தின் மூலம் இணைக்க முடியும் என்பதை நிரூபித்து தமிழ் வலைப்பூ உலகில் தனித்தன்மையுடன் திகழ்ந்து வருகிறது என்பதை நம் அதிரைநிருபர் பக்கம் வந்து செல்லும் வாசக நேசங்கள் அனைவரும் அறிவர். கோடான கோடி விமர்சனங்கள் (மர்மமாக) வந்தாலும், நல்ல செய்திகளை பகிர்ந்துக்கொண்டு இணையத்தின் மூலம் நல்ல இதயங்களை இணைக்க முடியும் என்பதை சாதித்துக்காட்டியுள்ளது நம் அதிரைநிருபர் வலைத்தளம். அதில் மிக உறுதியாக உள்ளது.

கல்வி, மருத்துவம், இஸ்லாம் இவைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, சர்ச்சைக்குரிய விடையங்களுக்கு துளியளவும் முக்கியத்துவம் கொடுக்காமல் நல்ல செய்திகளை, குறிப்பாக அதிரை மக்கள் சார்ந்த செய்திகளை நம் மக்களிடையே பகிர்ந்தளித்து, சகோதரத்துவத்தை முன்னிறுத்தி இணையத்தின் மூலம் இணைத்த வாசக நேசங்களை தக்கவைத்தும், இனி புதிதாக நிறைய நல்ல உள்ளங்களை ஒன்றிணைக்கும் வண்ணம் எங்கள் செயல்பாடுகள் இருக்கும் என்பதை இந்த இரண்டாம் ஆண்டில் கால் எடுத்துவைக்கும் இத்தருணத்தில் உறுதியுடன் சொல்லிக்கொள்கிறோம்.

அல்லாஹ் போதுமானவன்.

தொடர்ந்து இணைந்திருங்கள்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு