(*) உலகில் சிறியது
அணுவா?
ஆண்டு விடுமுறையா?
பதில் தேடும் பிஞ்சுகள்..
(*) இமை துடிக்கும்
இம்மி பொழுதாமோ
இந்த விடுமுறை நாட்களும்?
வினா தொடுக்கும்
விடலைகள்.
(*) தேர்வு முடிந்ததும்
சோர்வும் முடிந்தது,
விடுமுறை நாட்களில்
வீடே மறந்தது..!!
(*) எப்படி கழியும்
விடுமுறை? என்பதல்ல வருத்தம்.
மறுபடி பள்ளி
திறப்பார்களே என்பதே
மாபெரும் வருத்தம்!!
இருப்பினும்...
(*) நகரத்து பிள்ளைகளுக்கு
பாட்டிகளும், சொந்த ஊரும்
நினைவுக்கு வரும்
நாட்கள் இவை!!
போய் வருவர்
பாட்டிவீடு..
பல ஊரு..விடுமுறையை
சாட்டி செல்லும்
சுற்றுலாக்கள்.
(*) உள்ளூர் பொடிசுக்கோ..
கால்பந்து, கைபந்து
குடும்பத்து
கல்யாணம்,
மட்டை பந்து,
மாங்காய்த் திருட்டு-இவை
விடுமுறை நாட்களின்
விழாக்கோலம்.
(*) வீட்டு வாசலில்
மிட்டாய்க் கடை,
முறுக்கு, கடலைமிட்டாய்
மோர், இல்லையேல் சர்பத் சப்ளை.
குறைந்த முதலீடு
கொள்ளை சந்தோஷம்!!
(*) பட்டம், பளிங்கு
பம்பரம், கில்லியோடு
கிட்டி கம்பு,
கேரம் பலகை.
பட்டியலில் சில
பழக்கத்தில் இல.
(*) சைக்கிள் வாடகை,
சறுக்கி வீழ்தல்,-இன்று
பைக்-கும் வாடகைக்கு-
வீழ்தல் மட்டும் அப்படியே!!
(*) தேர்வு முடிவுக்கான
தேதி வரும்...
தபால்காரர் வழி முடிவு
தேடி வரும்..
(*) முடிவுகள் தேர்வுகளுக்கானதேயொழிய
திறமைகளுக்கு அல்ல என்னும்
தெளிவு என்று வரும்?
(*) பரீட்சை முடிவுக்கும்
பள்ளி மறுதிறப்பிற்கும்
இடைப்பட்ட நாட்கள்..
விடுமுறையின் கணக்கை விட்டும்
விலக்கப்பட்டவை.
(*) அடுத்த வகுப்பிற்கு
ஆயத்தம்.
புது சீருடை,
புதுத்தகம்,
புது காலணி,
புது இருக்கை,
புது வகுப்பு,
புது ஆசிரியர்,
வாப்பாவுக்கு மட்டும்
பழைய வருமானம்!!
(*) எல்லாம் இருக்கட்டும்.
யாருக்கேனும் பதில் தெரியுமா
என் கேள்விகளுக்கு?
மருத்துவம் பொறியியலுக்கு
நுழைவுத்தேர்வு உண்டா? இல்லையா?
பள்ளிகள் திறந்தும் நாங்கள்
படிக்கப் போவது
சமச்சீரா இல்லையா?
சரி.. சரி...
குறைந்தபட்சம் சொல்லுங்கள்,
"சமமும்" "சீரும்"
சமமா இல்லையா?
- அதிரை என்.ஷஃபாத்
பள்ளிக்கூடம் போலாமா ? | 22 |
உமர் தமிழ் தட்டசுப் பலகை
|
|
உமர் தமிழ் தட்டசுப் பலகை
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
22 Responses So Far:
சமச்சீர் புத்தகங்கள் படிக்காமலே கிழிக்கப்படுகின்றன !
//(*) எல்லாம் இருக்கட்டும்.
யாருக்கேனும் பதில் தெரியுமா
என் கேள்விகளுக்கு?
மருத்துவம் பொறியியலுக்கு
நுழைவுத்தேர்வு உண்டா? இல்லையா?
பள்ளிகள் திறந்தும் நாங்கள்
படிக்கப் போவது
சமச்சீரா இல்லையா?//
அச்சுக்கு சென்றும் செல்லாமலும் இருக்கும் பாடப் புத்தங்களும் பாலகர்களைவிட பெற்றவர்களின் பரிதவிப்புதான் அதிகம்.
தம்பி ஷஃபாத் நிசமான வரிகள் !
(*) உலகில் சிறியது
அணுவா?
ஆண்டு விடுமுறையா?
பதில் தேடும் பிஞ்சுகள்..
(*) இமை துடிக்கும்
இம்மி பொழுதாமோ
இந்த விடுமுறை நாட்களும்?
வினா தொடுக்கும்
விடலைகள்.
(*) தேர்வு முடிந்ததும்
சோர்வும் முடிந்தது,
விடுமுறை நாட்களில்
வீடே மறந்தது..!!
------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அணு,அணுவாய் ரசித்து எழுதியதா? நான் ருசித்துப்பார்கிறேன்.பழ ரசம் அது.விடுமுறை நாட்கள் விரைவாய் நகர்ந்திடும் பாதரசம்?(பாதரசம் என்பதால் தான் வேகமாக ஓடுகிறதோ விளங்கியவர்கள் சொல்லவும்).தேர்வு முடிந்ததும் சோர்வு முடிந்தது....அஹா!பரவசம் அது மாணவர்கள் வசம்.
மாணவர்களின் சந்தோசதை கடைவிரித்திருக்கிறாய். எல்லாம் இனிய பதார்தம். அவ்வளவும் எதார்த்தமான வரிகள். கவிக்கடையில் மொய்க்கும் ஈக்களாய் அந்த பாக்களை பருக நாங்கள் இருக்கிறோம். தொடரும் உன் வார்தை ஜாலம் ஒஹோ,ஒஹோஹோ(மார்மயோகியே எங்கே ஆளேளேய கானோம்?).
(*) முடிவுகள் தேர்வுகளுக்கானதேயொழிய
திறமைகளுக்கு அல்ல என்னும்
தெளிவு என்று வரும்?
-----------------------------------------------
தம்பி! நல்லா கேட்டாய்! இதைதான் நானும் என்னுள்கேட்டு,கேட்டு இன்னும் விடை தெரியவில்லை. ஞானிகள் ,மேதைகளும் வழி சொல்லக்கானோம். எல்லாம் இந்த பொல்லாத காலத்தின் கோலம். தேர்வில் தேறிவிடவனேல்லாம் தேறி விட்டதாய் ஒரு
தவறான புரிதல் இன்னும் தொடர்வது. நாம் கற்றது இவ்வளவுதானா?ஆனால் கற்பிதவர்களும் சரியா கற்பிக்கவில்லையா?
அடுத்த வகுப்பிற்கு
ஆயத்தம்.
புது சீருடை,
புதுத்தகம்,
புது காலணி,
புது இருக்கை,
புது வகுப்பு,
புது ஆசிரியர்,
வாப்பாவுக்கு மட்டும்
பழைய வருமானம்!!
----------------------------------------------------
இந்தியாவின் அதீக விழுக்காடில் இந்த நிலையில் தான் ஒவ்வொரு மாணவனின் குடும்பச்சூழலும் உள்ளது. ஏற்றம் என்பது , பொருளாதர உயர்வு மாற்றத்தில் தான் என தெரிந்தும் அன் நிலையை அடையமுடியாத துரதிஸ்டவாதிகள் நடுத்தரவர்கத்தினராகிய நம்மைபோன்றோர்.
எல்லாம் இருக்கட்டும்.
யாருக்கேனும் பதில் தெரியுமா
என் கேள்விகளுக்கு?
மருத்துவம் பொறியியலுக்கு
நுழைவுத்தேர்வு உண்டா? இல்லையா?
பள்ளிகள் திறந்தும் நாங்கள்
படிக்கப் போவது
சமச்சீரா இல்லையா?
சரி.. சரி...
குறைந்தபட்சம் சொல்லுங்கள்,
"சமமும்" "சீரும்"
சமமா இல்லையா?
-------------------------------------------------
பொதுப்பிரட்சனை அரசியல் ஆக்கப்பட்டதால், படிக்ககூடிய துறையில் நுழைய என்ன செய்யனும்?. விளங்காத கேள்வியுடன் மாணவர்கள். விடைசொல்லாமல் விலகினிற்கும் ஆட்சியாளர்களின் மெத்தன அலட்சிய போக்கு!.ஏந்தாம் போட்டோம் இவர்களுக்கு வாக்கு?
என தமக்குள் கேட்டு கொள்ளும் நிலையில் நாம்.
---------------------------------------------------------
சரி.. சரி...
குறைந்தபட்சம் சொல்லுங்கள்,
"சமமும்" "சீரும்"
சமமா இல்லையா?
------------------------------------
அஹாஹாஹா.... இப்ப ஏதும் சீராகவும் இல்லை. சிறப்பாகவும் இல்லை. சமச்சீர் கூட சமம் இல்லையா? என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு ஒரு நிலையான கொள்கையும் இல்லை.
ஆம் என்பது ஆம் தான் என்பதை ஆம் என்று சொல்ல யாரும் இல்லை.... எல்லாம் நம் விதி!
மதிகெட்டா(ன்)ள் ஆள நாம் தானே வழிவிட்டோம்.
//மறுபடி பள்ளி
திறப்பார்களே என்பதே
மாபெரும் வருத்தம்//
திறந்தும் என்ன செய்ய பாடமே நடத்த ஏதுமில்லையென சந்தோசம் ஒருபக்கம்
அது வந்ததும் அது எப்படி இருக்கும் ஈஸியா கஸ்டமா என குழப்பம் மறுபக்கம்
சனிக்கிழமை பள்ளி திறக்க திடீர் தடா போட்டு அலைகழிக்கப்பட்டது ஒருபக்கம்
இதெல்லாமல் கட்டணத்தில் குறியாயிருக்கும் கல்விநிறுவன போக்கு மறுபக்கம்
(மொத்தத்தில் கல்வியே அரசாலும், பணத்துக்காகவும் விளையாடப்படுகிறதே!)
உம்மாமர்களின் கோபம் உச்ச்சத்தில் இந்த சனியனுவோ ஏந்தான் லீவெல்லாம் விடுறானுவோனு அந்தளவுக்கு செய்யும் அட்டகாசம் தாங்கமுடியாது இந்த லீவுநாட்களில்
என்ன சஃபாத்..ஸ்கூல் யூனிபார்ம்மே போட்டுக்கிட்டு அனுபிவித்து எழுதுனாப்லே தெரியுது...கலக்கல் கவிதை நாங்கெலல்லாம் பேக் டூ பழைநினைவுகள்...வாழ்த்துக்கள் தம்பி
அலுவலக பணிகளின் சுமையால் பள்ளிக்கூடம் (போகலாமா) வரவில்லை, நமதூரில் நடக்கு மாலை நேரக் கல்விக்கூடத்திற்கு ஏதோ பெயர் இருக்காமே அந்த நேரத்தில் வருவதாககச் சொல்லச் சொன்னார்கள்... கவிக்கு கவிக் காக்கா வரலைன்னா... எப்புடி !?
sabeer.abushahruk சொன்னது…
Gentlemen,
The scheme that I have had earlier is through and I am with an i-phone which does not connect me to the world of net. I will certainly join another scheme when I’d be back from Adirai on 06th July 2011 after having 6 complete days with my Mom from 30th of this month.
Till then, please bear with me for the delays in comments. However, I assure my presence on each article but with limits.
Thanks dear.
Sabeer Ahmed
தம்பி ஷஃபாத்,
//உலகில் சிறியது
அணுவா
ஆண்டு விடுமுறையா
பதில் தேடும் பிஞ்சுகள்..//
...என அற்புதமாகத் துவங்கி
//தேர்வு முடிந்ததும்
சோர்வும் முடிந்தது,
விடுமுறை நாட்களில்
வீடே மறந்தது..!!//
...என்று அசதலாகத் தொடர்ந்து
//குறைந்த முதலீடு
கொள்ளை சந்தோஷம்!!//
...என கலக்கி
//பட்டியலில் சில
பழக்கத்தில் இல.//
...என புனைந்து
//முடிவுகள் தேர்வுகளுக்கானதேயொழிய
திறமைகளுக்கு அல்ல//
...என்று அறிவுறுத்தி
//வாப்பாவுக்கு மட்டும்
பழைய வருமானம்!!//
...என்றெல்லாம் சிலிர்க்க வைத்த நீங்கள் கவிதையின் நடுப்பகுதியிலிருந்து அவசர அவசரமாக எழுதி முடிக்க முயன்றமாதிரி ஒரு தோற்றம் ஏற்படுவது ஏன்?
நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. வாழ்த்துகள்!
shafath,
எனக்குத் தெரிந்து, 'சமம்' ஒருமித்த அளவு, தன்மை போன்றவற்றையும், 'சீர்' ஒழுங்கையும் குறிக்கிறது.
சமச்சீர் என்பது சமமான ஒழுங்கை (equal arrangement / equal discipline ஐக்) குறிக்கிறது
sabeer.abushahruk சொன்னது…
shafath,
எனக்குத் தெரிந்து, 'சமம்' ஒருமித்த அளவு, தன்மை போன்றவற்றையும், 'சீர்' ஒழுங்கையும் குறிக்கிறது.
சமச்சீர் என்பது சமமான ஒழுங்கை (equal arrangement / equal discipline ஐக்) குறிக்கிறது.
-------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா! நலமா? நீங்கள் சொல்வதும் சரி. சீருக்கு சமன் என்ற பொருளும் உண்டு. இந்த சாமானியனின் பதில்லில் திருப்தி அடைவீர்கள் என நம்புகிறேன். சமம் - உலகு சீர்பெற விருந்தான் (கம்பராமாயணம் அகத். 40)
மேலும் சீர் சமம் என ஒரு பொருள் கொண்டாலும். பல சந்தர்ப்பங்களில் பொருள் விளக்கத்துக்காக அன்றி, ஓசை நயத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன.இங்கே வேடிக்கை யாதெனில் சீர்கள் சீரான வரிகளில் ஒருகுறிப்பிட்ட இலக்கணத்தில் அமைவதில்லை என்பதை இக்கணத்தில் பதிகிறேன். மேற்கொண்ட தகவளுக்கு அகவையிலும்,மொழிஆற்றலிலும் மூத்த அகமது சாட்சாவிடம் கேட்கவும்.( நான் தப்பித்தேன்).
//சமம் - உலகு சீர்பெற விருந்தான் (கம்பராமாயணம் அகத். 40) //
கிரவ்ன்(னு): நீ ஏன்(டா)ப்பா அங்கே போறே ? சீருடைக்கும் - சமஅளவு உடைக்கும் வித்தியாசம் தான் காக்கா சொன்னவைகள் !
சீர் = ஒழுங்கு முறை
சமம் = ஒரே கோட்டில் ஒத்துப் போவது !
சிறுசுக்கும் - பெருசுக்கு நடுவால இருப்பவனின் கருத்த(டா)ப்பா !
shafath,
ஒரு ச்சின்ன ஆலோசனை: குறியீடுகளைக் (punctuations) குறைத்துக்கொள்ளுங்கள்.
இவ்வாரத் திண்ணையில் நான் எழுதியதையும் வாசித்துவிடுங்கள்.
தியாகச் சுமை:
நகர
போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி
நகர
அனுமதிக்கும் விளக்கின்
பச்சைக்காகக் காத்திருக்கயில்…
பல
வேலை நிமித்தம்
சிலர்
சாலை கடந்தனர்!
கடந்தவர்களில்
ஆண்களோ
அலைபேசி அடிமைகளாய்
தலை சாய்த்து
முடங்கி நடக்க
பெண்களில்
பத்துக்கு எட்டுபேர்
எதையாவது
சுமந்துகொண்டே
நடந்து கடந்தனர்…
தோல்பை
கைப்பை
பணப்பை
வழவழ காகிதத்தில்
தடிநூல் பிடிகொண்டபை
மினுக்கும் அலைபேசிப்பை
ஒருமுறை பிரயோகத்திற்கான
பாலித்தீன் பை
என
எதையாவது சுமந்துகொண்டு…
எஞ்சிய
இருவரும்கூட
கர்ப்பினிப் பெண்டிர்!
இந்த கொஞ்ச நேர சிக்னல் கேப்பில இவ்வ்வ்வ்வ்வ்ளோவையுமா கவனிக்கிறீங்க ???? நான் செல்லும் வழியில் சிக்னலே இல்லையே காக்கா !
அபுஇபுறாஹீம் சொன்னது…
//சமம் - உலகு சீர்பெற விருந்தான் (கம்பராமாயணம் அகத். 40) //
கிரவ்ன்(னு): நீ ஏன்(டா)ப்பா அங்கே போறே ? சீருடைக்கும் - சமஅளவு உடைக்கும் வித்தியாசம் தான் காக்கா சொன்னவைகள் !
சீர் = ஒழுங்கு முறை
சமம் = ஒரே கோட்டில் ஒத்துப் போவது !
சிறுசுக்கும் - பெருசுக்கு நடுவால இருப்பவனின் கருத்த(டா)ப்பா !
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். இடைனிலை காக்கா(சும்மா தமாஸ்). நான் சபிர்காக்கா சொன்ன து தவறாக சொல்லவில்லை அப்படி சொல்ல நான் என்ன பைத்தியமா?ஒரு மொழி ஆற்றல் உள்ளவரின் கூற்று பொய்பதில்லை என்பதை வழிமொழிந்து பின் பிற பொருள் தரும் சொல்லாகவும் சீர் என்பது விளங்குகிறது என்பதையும் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே! இந்த சிறியவன் செயல் சின்னத்தனமா பட்டா பெரிய மனசு பன்னி மன்னிசுக்குங்கோ!
//பெரிய மனசு //
அதுசரி, கால்பந்தாட்டத்தில் பரிசு கொடுக்க ஏன் இன்னும் மேடையேறல ?
கிரவுனைவிட உண்மையிலேயே எனக்கு தமிழ் வொகாபுலேரி தெரியாது வாத்யாரே. ஒரு ட்ரையல்தான்.
இங்கே யாருக்காவது வாப்புச்சா நெனப்பிருக்கா?
sabeer.abushahruk சொன்னது…
கிரவுனைவிட உண்மையிலேயே எனக்கு தமிழ் வொகாபுலேரி தெரியாது வாத்யாரே. ஒரு ட்ரையல்தான்.
இங்கே யாருக்காவது வாப்புச்சா நெனப்பிருக்கா?
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சபிர்காக்காவின் சபை அடக்கம். சிறந்த ஞானிகள் எல்லாம் பெற்றும் .எதும் தெரியாததுபோல இருப்பதுபோலவே சபிர் காக்காவின் இவ்வகை அடக்கம்.அவையாவும் இந்த அவை அடக்கம்.
Post a Comment