Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

(பணம் + அதிகபணம் )2 = சொத்து2 + வியாதி2 – (நிம்மதியான வாழ்க்கை)6 19

அதிரைநிருபர் | June 26, 2011 | , , , ,

கடல்கடந்து, கண்டம் கடந்து, கண்டெய்னரில் தன் உயிரேயே பணயம் வைத்து பணத்திற்காக, தன்னை சார்ந்து இருப்பவர்களின் நலனுக்காக செல்லும் சகோதரர்களுக்கு இதனை படித்து தப்பாக நினைக்கவேண்டாம், இது ஒரு சிந்தனை கட்டுரை அன்றி யாரையும் புண்படுத்துவதற்க்காக அல்ல, சமீபத்தில் வியாபார விசயமாக லண்டன் சென்றிருந்தபோது சந்தித்த ஒருவருரின் கதையை கேட்டபிறகு இந்த கட்டுரை எழுத விழைந்தேன்

பணம்

பணம் என்றால் பிணமும் வாயைப்பிளக்கும்,பணம் பாதாளம்வரை பாயும், பணமில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற வார்த்தைகள் மூலம் பணம் பணம் என்று நாம் மனமும்,மைண்ட்டும் செட்டாகி அது எங்கு கிடைத்தாலும் ஓட,ஆட வைக்கிறது.பணம் ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும் மாயப்பொருள்தான் அதில் டவுட் இல்லை,ஆனாலும் அதிகப்படியான “பணம்” நம்மை குஷிப்படுத்துமா அல்லது நம் மகிழ்ச்சியை குதறுமா என்பதுதான் என் கேள்வி....அலசிபார்ப்போமே..இந்த கட்டுரைக்கு 100% தகுதி படைத்தவன் நானும் அல்ல என்பதை நினைவுபடுத்துகின்றேன்

தன்னிறைவு

தன்னிறைவு என்ற வார்த்தையில் உள்ள அர்த்தத்தை நாம் அவசியம் அறிந்து கொள்ளவேண்டும்,பட்டுக்கோட்டையில் ஒரு நிலமும்,சென்னை ஜார்ஜ் கோட்டைக்கு பக்கத்தில் ஒரு பலமாடி கட்டிடமும் இருந்தால்தான் தன்னிறைவு என்று எண்ண கூடாது,ஒருவர் உயிர்வாழ என்ன அடிப்படை தேவைகள் அது எந்த சிரமும் இல்லாமல் பூர்த்தி ஆகுதோ அதனைதான் தன்னிறைவு என்று கொள்ளவேண்டும்.அடிப்படை வசதிகளைப் பெற பணம் முக்கியம்தான். ஆனால் அதுவே வாழ்க்கையாகி விடாது. ஒருவருக்குப் பணம் வந்தவுடனேயே பாதுகாக்க வேண்டிய அவசியமும் வந்து விடுகிறது. அதனால் பல சமயங்களில் நிம்மதி போகிறது. நிம்மதி போய் ராஜாமடம் ஆற்றுப்பாலத்தில் மனதை ஆற்ற விட்டவங்களும் உண்டு

ஒரு ஊரில் நடுத்தரகுடும்பத்தை சேர்ந்தவர், ஒரு சிறிய வீட்டைக்கட்டி அமைதியாக வாழ்ந்துவந்தார், நிம்மதியான தூக்கமும் இருந்தது, திடீரென அவருக்கு ஒரு பணக்காரர் வந்து , இறைவன் என் கனவில் வந்து இந்த வைரக்கல்லை உங்களிடம் கொடுக்க சொன்னார், அமானிதத்தை ஒப்படைப்பது என் கடமை எனவே இதை ஏற்றுக்கொள்ளுங்கள்,மனிதனுக்கு தலை,கால் புரியவில்லை சந்தோசமாக பெற்றுக்கொண்டார் ஆனால் அதனை பெற்றுக்கொண்ட நாள் முதல் அதனை எப்படி பாதுகாப்பது என்ற சிந்தனையிலயே அவர் தூக்கம் மறந்து நிம்மதி இழந்து பேயாக மாறிப்போனார்..இவ்வாறுதான் நாம் வாழ்க்கையும் கொடுத்ததை கொண்டு நிறைவடையாமல், மேலும் எடுத்து கொள்ள நினைக்கிறது, நிம்மதியை அணைக்கின்றது,ஆகையால் தன்னிறைவு தன்னம்பிக்கை தரும் வாழ்க்கையை செழிப்பாக்கும்.

வாழ்நாள் சாதனை

வாழ்க்கையில் நாம் என்ன சாதித்து இருக்கிறோம் என்பதற்க்கு நம் அக்கவுண்ட் பேலன்ஸ்/நிலம்/வீடு வாசல்/ கார் போன்றவற்றைதான் அளவு கோளாக எடுத்து இருக்கின்றோம்,யாரவது நாம் செய்துள்ள நற்காரியங்கள், உறவுகள், நண்பர்கள், பொதுநலப் பணிகள் போன்றவற்றை அளந்து வாய் பிளந்து இருப்போமென்றால் மிகக்குறைவுதான் மனிதனுடைய வாழ்க்கை என்னவோ அதிகபட்சமாக 65 வயதுவரைதான், அதுவும் இப்போதெல்லாம் 35 வயசுக்கு பிறகு படுக்கையில் எழுப்பிவிடுவதற்க்குட ஒர் ஆள் தேவைபடும் அளவிற்க்கு நோய்கள் மொய்க்கின்றன (அல்லாஹ் காப்பாதணும் ),வாலிபத்தை தொலைப்பதும் வாழ்வின் தோல்வியே

பணம் என்ற உப்புத் தண்ணியைக் குடிக்கக் குடிக்கத் தாகம் எடுத்துக் கொண்டேதான் இருக்கும். தாகம் தீரும் வரை காத்திராமல் மற்ற மகிழ்ச்சி தரும் விசயங்களில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வைத் தொடரப் பழக வேண்டும். அதற்க்காக தேடலை நிறுத்திவிட்டு ஊரில் வெட்டியாக சுற்றவேண்டும் என்பதில்லை..எதற்க்கும் ஒரு எல்லையை வரையறை செய்து கொள்ளவேண்டும்,உண்மையான மகிழ்ச்சி எதில் உள்ளது என்பதை கண்டெறிய வேண்டும்..அதுவே நம் இலக்காக இருக்கவேண்டும்.

நாம் எது அதிக மகிழ்ச்சி என்பதில் தெளிவாக இருந்தால் நமக்குப் பணத்தின் மீதிருக்கிற பற்று குறையும், பொருள் தேடல் என்ற கடலில் நம்மையும் தொலைத்துவிட்டு, வாழ்க்கையும் தொலைத்து விடுகிறோம்..தெரிந்த நண்பர் ஒருவர் ஜப்பானுக்கு சென்று 8 வருடங்கள் கழித்து வந்தார்.. பணம் அவரிடம் வந்தது..ஆனால் வாழ்க்கை விலகி ஓடிவிட்டது...அவரிடம் நான் அதைப்பற்றி கேட்டபோது அவர் வெறுத்து சொன்ன வார்த்தயை இங்கு எழுத முடியாது …ஆனால் அந்த பணம் அவரின் இழந்த வாழ்க்கையை திருப்பி தர முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

As they say ,everyone is fighting their own battle, to be free from their past, to live in their present and to create their future...

ஆகையால் இந்த போரை நடத்தி கொண்டிருக்கவேண்டியதுதான், அந்த போரில் வெற்றிபெற உதவுவது உழைப்பு ..உழைப்பால் பணம் வரவு மட்டும் இல்லை, உடலும் ஆரோக்கியமடைகிறது....உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் மன ஆரோக்கியம் முக்கியம் ,அந்த மன ஆரோக்கியத்திற்க்கு மருந்து மகிழ்ச்சி தரும் மற்ற விசயங்கள்தான் பணமல்ல….

என்ன நினைக்கிறீங்க நண்பர்களே !!!


இப்படிக்கு

முகமது யாசிர்
துபாய்

19 Responses So Far:

அதிரை முஜீப் said...

பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை!. அதே போல அருள் இல்லாதோருக்கு அவ்வுலகம் இல்லை!!.

இந்த ஒற்றை வரியை அலசி ஆராய்ந்து, தான் சந்தித்த தன் நண்பர்களின் வாழ்க்கையை அதற்கு ஆதாரமாக காட்டி, இம்மை வாழ்கையை சந்தோசத்துடன் வாழும் அதே சமயம் மறுமைக்கும் நாம் தயாராக செல்லவேண்டும் என்ற கவலையோடு சகோதரர் யாசிர் வெளிப்படுத்தியுள்ள நல்ல கட்டுரை!.

நமக்கும் கணக்கிற்கும் ரொம்ப தூரம்!. (பணத்தை எண்ணுவதில் மட்டும் நான் கெட்டியாக்கும்!) அதுனாலே யாராவது கொஞ்சம் இந்த தலைப்பின் சூத்திரத்தை சொல்லித்தந்தால் தேவலை!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி யாசிர் சொல்லியிருக்கும் தலைப்பு சூத்திரம் (கணக்கு) பற்றி விளக்கிட இங்கே மூத்தவங்களெல்லாம் வருவாங்க தானே !

//ஆகையால் இந்த போரை நடத்தி கொண்டிருக்கவேண்டியதுதான், அந்த போரில் வெற்றிபெற உதவுவது உழைப்பு ..உழைப்பால் பணம் வரவு மட்டும் இல்லை,//

மிகச் சரியான அனுபவ அலசல்... !

சிந்தனையை தட்டி எழுப்பும் அருமையான ஆக்கம் !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் யாசிர், வித்யாசமான அலசல். வாழ்த்துக்கள்.

//பணம் என்ற உப்புத் தண்ணியைக் குடிக்கக் குடிக்கத் தாகம் எடுத்துக் கொண்டேதான் இருக்கும்.//

மிக சரியான உதாரணம், உப்புத் தண்ணியை குடித்துக்கொண்டே இருந்தால் நோய் நொடிகளே அதிகம் என்ற எண்ணம் எனோ நம்மில் பலருக்கு ஏற்படுவதில்லை.

தலைப்பு பார்முலாவுக்கு கொஞ்சம் விளக்கம் தாருங்கள் யாசிரே...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சரியான கணக்கீட்டில் எழுதப்பட்ட கட்டுரை. லேனாதமிழ்வாணன் கட்டுரை படித்த மாதிரி ஒரு தோற்றம்.இரண்டு மனம் கொண்டிருந்தால் ரெண்டாங்கெட்டான் நிலைதான் என்பதையும் அதனால் ஆறாத ரணம் நிச்சயம் எனவே ஆறறிவு கொள்.முடிவெடி,செயல் திறம் கொண்டு முடி! அதிக பேராசை பேரழிவு என்பதின் கூட்டல்,கழித்தல் வாழ்வில் உள்ளது என்பதை மனது கணக்க,கணக்கு போட்டு சொல்லிய விதம் வாழ்கையே ஒரு கணக்கில் தான் அடங்கும் என்பதையும் எழுதிய விதம் அப்பப்பா, மிக அனாவசியமாக இப்படி எழுத வல்லர் என்பதை இதன் மூலம் மறுபடியும் நீரூபித்த சகோதரை வாழ்துகிறேன். எல்லாப்புகழும் அல்லாஹுக்கே.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து (ஆங்கில எழுத்துக்களால் இருந்தததை அப்படியே தமிழ் எழுத்துருக்கு மாற்றிப் பதிகிறோம்...
====================================================

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பிற்குரிய! சகோதரர் முஹம்மது யாசிர் தன் கட்டுரயை ஃபார்முலாவை கொண்டு உலக மக்கள் அனைவருக்கும். பொருந்தக்கூடிய வகையில் எழுதிய பணமில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற வார்தை பொருந்தக்குடிய வார்த்தையல்ல.

ஆதம்(அலை வஸ்ஸல்லாம்) அவர்கள் சொர்க்கதில் தவறு செய்த காரணத்தல்தான் இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் மூலம் மனிதர்களை பெருக செய்த அல்லாஹ் தன் திருமறையில் பல இடங்களில் கூறுகிறான்.

"உங்களை படைக்கப்பட்டதின் நோக்கம் என்னை வணங்குவதற்காக அன்றி வேறில்லை" என்று சொல்லிவிட்டு நம்மை சும்ம விட்டுவிட வில்லை நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான எண்ணி முடிக்க முடியாத பல நிஃக்மத்களை நமக்கு வழங்க்கியுள்ளான் அதில் ஒன்று தான் தண்ணீர் என்ற அருட்கொடை அல்லாஹ் தண்ணீரை மட்டும் இவ்வுலகுக்கு இல்லாமல் ஆக்கி விட்டால்...... பணம் என்றால் பினமும் வாயைப்பிளக்கும் என்பார்கலே அந்த பணமும் கூட பினமாகிவிடும்.

-Mohamed Abubucker

sabeer.abushahruk said...

ஆக்கபூர்வமான கட்டுரை எழுதுவது என்பது ரொம்ப சிரமமான விஷயம். இதில் யாசிர் நாளுக்கு நாள் வாளுக்கு நிகராக கூராகி வருகிறார்.

நிறைய பகிர்ந்துகொள்ளத் தூண்டும் ஆக்கம். நேரம் வாய்த்தால் மீண்டும் வருவேன்.

Yasir said...

கருத்து சொன்ன /படித்த கண்ணியவான்களுக்கு எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொள்கிறேன்....

தலைப்பில் ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் லாஜிக் இல்லை...பணம் அது கூட அதிகபணம் சேர்ந்தால் என்ன செய்வோம் சொத்து வாங்குவோம் சொத்தை வாங்கி சுகத்தை இழப்போம்...அதை மெயிண்ட்ன் பண்றதுக்குல ப்ர்ஸ்ஸர் ஏகிறி அதுல ஒரு பிரச்சனை என்றால் தூக்கமின்றி தவித்து அது சம்பந்தமான வியாதிகள் வரும்...அதனாலே என்ன போகும் நிம்மதி பல மடங்கு நம்மைவிட்டு போகும் --அதற்க்காக ஏழைகளுக்கு ஒன்னும் வியாதி இல்லையா என்று கேட்கும் சகோதர்களுக்கு கொஞ்சம் கம்மிதான் தூக்கம் சம்பந்தமான வியாதிகள் ரொம்ப கம்மி..எண்ணங்கள் தூய்மையாக உள்ள ஏழைக்கு அந்த வியாதிகள் கூட ரொம்ப ரொம்ப கம்மிதான்..இவ்வளவு சாமாளிஃபிக்கேஷனுக்கு பிறகும் “ இது என்ன தலைப்பு” என்று கேட்டும் தலைகளுக்கு...கணக்கு ஃபார்முலாவை கொஞ்சம் கணக்குபண்ணி இப்படி மாத்தியிருக்கேன்...மற்றபடி நான் ராமானுஜத்தின் பக்கத்து வீடேல்லாம் கிடையாது

Yasir said...

வ அலைக்கமுஸ்ஸலாம் சகோ.முஹம்மது அபூபக்கர்....அந்த மாதிரி எண்ணங்களை சிறுவயதிலயே விதைக்கின்றார்கள் என்பதைதான் நான் சொல்லி இருக்கின்றேன்..தவிர அது தவறு என்பதை கட்டுரையின் கடைசியில் உள்ளர்த்துடன் சொல்லி இருக்கின்றேன்....பணம் மட்டும் மகிழ்ச்சியில்லை சொந்ததிற்க்கும் / மற்றவருக்கும் /சமுதாயத்திற்க்கும் செய்யும் சேவையில்தான் மகிழ்ச்சி உள்ளது என்பதையும் குறிப்பிட்டு இருக்கின்றேன்..
கடைசியாக “ அல்லாஹ் நமக்கு அதிகப்படியாக கொடுக்கும் ரிஜ்க் நமக்குமட்டும்தான் என்று எண்ணாமல் நம்மை சுழ்ந்து இருப்பவர்களுக்கும் நம்மூலம் சேர்த்து கொடுக்கப்படுகிறது “ என்பதை ஆணித்தரமாக மனதில் பதிந்து விட்டால் நாம் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு சந்தோசமாக இருக்கலாம் மற்றவர்களையும் அதில் சேர்த்துக்கொள்ளலாம்

அலாவுதீன்.S. said...

சகோ. யாசிர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே!
பணம் என்னடா பணம் குணம்தானடா நிரந்தரம்!
பணம் இல்லாருக்கு இவ்வுலகு இல்லை! அருள் இல்லாருக்கு அவ்வுலகு இல்லை (மறுமை)
இதெல்லாம் நாம் கேள்விபட்ட வரிகள்.

வல்ல அல்லாஹ் அல்குர்ஆனில் கூறியது அதிகம் பேர் மனதில் இல்லை:

அத்தியாயம் : 102 -- அத்தகாஸுர் -- அதிகம் தேடுதல்

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது.(102: 1,2)
அவ்வாறில்லை! அறிவீர்கள். பின்னரும் அவ்வாறில்லை! மீண்டும் அறிவீர்கள். (102: 3,4)
அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள்.(102:5,6)
பின்னர் மிக உறுதியாக அறிவீர்கள்.(102:7)
பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.(102:8)

மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். அவனே இதற்குச் சாட்சியாக இருக்கிறான். அவன் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறான்.(அல்குர்ஆன் : 100: 6,7,8)

/// sabeer.abushahruk சொன்னது…
ஆக்கபூர்வமான கட்டுரை எழுதுவது என்பது ரொம்ப சிரமமான விஷயம். இதில் யாசிர் நாளுக்கு நாள் வாளுக்கு நிகராக கூராகி வருகிறார்.///

சபீரின் கருத்தை வழிமொழிகிறேன். சகோ. யாசிர் வாழ்த்துக்கள்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தலைப்பு சூத்திரம் போலிருக்கு.

+அதிகமானால்
அனைத்துமே - தான்
அதிக பண பேராசை தான்
அநிம்மதி,
அசெளகரியம்,
அநாகரீகம் என
அனைத்து
அவல நிலைக்குமே
அச்சானி

சகோ.யாசிர் ஆக்கம் நல்ல அனுபவ அலசல்.
அதுசரி எல்லா நிருபர்களும் வரும் பெருநாளில் அதிரையில் மீட்டிங் நடத்த இருக்கும் போது நீங்கள் இங்லாந்து வரும் போது தெரியாமல் போனது ஓர் இழப்புதான்.

ZAKIR HUSSAIN said...

யாசிர் எழுத்தில் இவ்வளவு பெரிய முதிர்ச்சி தெரிகிறது.நான் யாசிரை பார்த்ததில்லை [போட்டோவில் பார்த்திருக்கிறேன்] , இதுவரை சின்ன வயதாக நினைத்திருந்ததால் ஒரு சமயம் இப்படி ஆச்சர்யப்படுகிறேன் என நினைக்கிறேன்.

பணம் சம்பாதிப்பதின் அளவீடு என்று ஒரு சிஸ்டம் இதுவரை இல்லாததால் பிரச்சினைகள் இருக்களாம்.ஆனால் பணம் சம்பாதிப்பதில் சிரமங்கள் , கால அளவுகள் இருந்தாலும் அதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

பார்க்கும் வேலையை நேசிப்பவனுக்கு பணம் சம்பாதிக்க்கும் கஸ்டம் தெரிவதில்லை.

பர்ஸில் வெயிட் குறையும்போது தத்துவமும், பணம் வந்தவுடன் மார்ச்பேரட் மாதிரி நடப்பதும் மனிதனின் குணம்...இதற்காக மனிதனை திட்டமுடியாது.

பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தெளிந்த நீரோடை மாதிரி வாழ்க்கையை கொண்டுபோகத் தெரிந்தவன் மகான்.

sabeer.abushahruk said...

அதெல்லாம் சரி. 

" பொருள் இல்லாதோருக்கு இவ்வுலகில்லை" என்பதுதானே முதுமொழி. இதைத்தான் யாசிர் எடுத்தாண்டிருக்கிறார்.
இது எவ்வகையில் குரான் வசனங்களிலினின்றும் எங்கு முரண்படுகிறது?

//அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது//
"அதிக" என்பதை நான் அடிக்கோடிடுகிறேன். பொருள் இல்லாருக்கு இவ்வுலகில்லை என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது. சொர்க்கமில்லை என்றோ ஆகிரத்து வாழ்க்கையில்லையென்றோ ஈடேற்றமில்லையென்றோ சொல்லப்படவில்லையே?

என் தரப்பு வாதம் என்னவெனில், பொருள் இல்லாதோருக்கு இவ்வுலகில்லைதான். தண்ணீர் மட்டுமல்ல காசு பணம்கூட அல்லாஹ்வின் நிஃமத்துதான். வடிவம்தான் வேறு.

பண்டமாற்று காலத்தில் காசேது பணமேது? சகோதரர்களே மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் ' காசில்லாமல் காற்றைத்தவிர இவ்வுலகில் எதையும் வாங்க முடியுமா? (உடனே பாசத்தை வாங்கலாம், அன்பை வாங்க பணம் எதற்கு என்றெல்லாம் படுத்திவிடாதீர்கள். நான் சொல்வது பொருட்களை, உணர்வுகளையல்ல.) எனில், இவ்வுலகில்லைதானே? அதிக பொருள் இல்லாதோருக்கு இவ்வுலகில்லையென்று சொல்லப்படாததாலும் இஸ்லாம் "அதிக"ப்பொருளுக்குத்தான் ஆசைப்படவேண்டாமென்று சொல்வதாலும்... முரண்பாடில்லை.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சகோ. யாசிரின் இந்த ஆக்கப்பூர்வமான கட்டுரையை இப்பொழுது தான் படிக்க நேரம் கிட்டியது. தாமதமான கருத்தாக இருந்தாலும் இதை இங்கு சொல்லியே தீர வேண்டும் என்ற ஆசையில் இதை குறிப்பிடுகிறேன்.

உங்கள் கட்டுரை 91,92 களில் +1, +2 வகுப்புகளில் ஹாஜி முஹம்மது சாரின் பொருளாதார வகுப்பில் கவனச்சிதைவு ஏதுமின்றி கூர்ந்து ஒரு நல்ல பாடத்தை கவனித்த‌ அனுபவம் கிடைத்தது. லுவாக் காப்பி தராமலேயே ஒரு நல்ல சுறுசுறுப்பான கலக்கல் பாடம். தொடருங்கள் உங்களின் கட்டுரையை. நிச்சயம் ஆவலாக இருக்கும் உங்களின் அடுத்த கட்டுரையை படிக்கும் வரை இன்ஷா அல்லாஹ்.


மு.செ.மு. நெய்னா முஹம்மது.

Yasir said...

அலாவுதீன் காக்கா,சகோ.ஜஹபர் சாதிக்,ஜாஹிர் நானா,சபீர் காக்கா,சகோ.மு.செ.மு. நெய்னா முஹம்மது உங்கள் அனைவரின் வாழ்த்துதலுக்கும் ஆர்வமூட்டுதலுக்கும் நன்றி..இன்ஷா மற்றொரு தலைப்பில் சந்திப்போம்...கூடிய விரைவில்...

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

சகோதரர் யாசிரின் கட்டுரை இக்கால மனிதனின் அவலத்தைச் சுட்டிக் காட்டுகிறது. இக்காலத்தில் மனிதன் ஹலாலான (அனுமதிக்கப்பட்ட) வியாபாரத்தைக் கூட ஹராமாக (தடுக்கப்பட்டதாக) செய்து கொன்டிருக்கிறான் தன்னுடைய பேராசையின் காரனமாக!?

யா அல்லாஹ் நேர் வழி இன்னதென்று தெளிவாகத் தெறிந்த பின்னும் எங்களுடைய மனம் வழி கேட்டின் பக்கம் சென்றுவிடாமல் பாதுகாத்துக் கொள்வாயாக! உன் தீனிலே என்களுடைய உள்ளங்களை உறுதியாக்கி வைப்பாயாக!

ம அஸ்ஸலாம்
அபு ஈசா

Yasir said...

my sincere thanks to Bro.Mujeeb,Abu Iburahim kakka,Bro.Tajudeen,Lanuageking Crown,Bro.Mohamed Abubacker and to all A.N readers

Shameed said...

பொருள் தேடும் அவசரத்தில் பின்னுட்டம் இட தாமதமாகி விட்டது

( ஊருக்கு போக சாமான்கள் வாங்குவதை சொன்னேன்)

Yasir said...

//Shameed சொன்னது…
பொருள் தேடும் அவசரத்தில் பின்னுட்டம் இட தாமதமாகி விட்டது //

அது சரி பின்னூட்டம் எங்கே காக்கா ??

Shameed said...

Yasir சொன்னது…
//அது சரி பின்னூட்டம் எங்கே காக்கா ?? //

பின்னுட்டம் எல்லாம் பொருளாய் மாறிவிட்டது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு