Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

(சமூக) எல்லை தாண்டும் பயங்கரவாதிகள் 18

அதிரைநிருபர் | June 10, 2011 | , , , ,


அன்பான வாசக நேசங்களே,

சகோதர வலைத்தளத்தில் வெளியான இந்த பதிவு கட்டுரையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க நம் அதிரைநிருபரில் மீள்பதிவு செய்யப்படுகிறது. நமதூர் நிகழ்வுகளை மையமாக வைத்து சமூக அக்கறையுடன் எழுதப்படுள்ளதால், பயனுள்ள கருத்துபரிமாற்றம் செய்து, சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

-- அதிரைநிருபர் குழு.

சில நிகழ்வுகளைக் கேள்விப்படும்போது நமதூர் இளம் தலைமுறைமீதான அச்சமும்,நமது பொறுப்பற்ற தன்மையையும் நினைத்தால் எழும் ஆதங்கத்தை யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை.

"
கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிப்போகலாமா?இல்லே ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா?"
என்ற சமூக விரோத சினிமா பாடல்வரிகளுள் ஒளிந்து இருக்கும் கலாச்சாரச் சீரழிவு எத்தனை பேரின் கவனத்தை ஈர்த்திருக்கும் என்று தெரியவில்லை. சொல்ல வரும் விசயம் இந்தப்பாடல் வரிகள் குறித்தல்ல.இந்த அவலங்கள் நமதூரில், நமது சமகாலத்தில் நம் கண்முன்னே, அடிக்கடி நடந்தேறி வருகின்றன என்பதைப் பற்றிய கவலையும் இதைக்களைவதற்கான வழிவகைகள் யாவை? என்பதைக் கண்டறிய வேண்டும் என்ற அக்கறையும் இப்பதிவின் கருவாகும்.
தயவு செய்து இவ்விசத்தை ஒரு குடும்பத்தோடோ அல்லது தனிநபருடனோ தொடர்பு படுத்திப் பார்க்காமல்,ஊர்நலன் சார்ந்த சமூக அக்கறையுடன்கூடிய விசயமாகக் கருதவும்.
நமதூரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக,மிகச்சில 'ஓடுகாலி'களைப் பற்றிய நிகழ்வுகள் நடந்தேறியது. மாமாங்கத்திற்கு ஒன்று அல்லது இரண்டு என்று அரிதினும் அரிதாக நடந்த இந்த அவலம், தற்போது மாதம் ஒன்று என்ற அளவில் அதிகரித்துள்ளது சற்று கவலை தரக்கூடிய விசயம்.

'
ஓடிப் போகும்' நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் எல்லாம் திருமணம் தாமதமான முதிர்கன்னிகளோ,வறுமையின் கோரப்பிடியில்சிக்கியுள்ளவர்களோ அல்லர். திருமணம் நிச்சயிக்கப்பட்டவர் முதல் வசதியான கணவருடன் சில வருடங்கள் வாழ்ந்து இல்லற இன்பத்தைச் சுவைத்தவர்களும் உள்ளனர் என்பதிலிருந்து நம்மையறியாமல் எங்கோ தவறு நிகழ்ந்துள்ளது.
கடந்த 20-30 ஆண்டுகளாக இக்கொடுமை நடந்துவந்தாலும் அவற்றிலிருந்து நாம் படிப்பினை பெறவில்லை. இத்தகைய நிகழ்வுகளால் குடும்ப உறவுகளில் ஏற்படும் தீவிரத்தையும் பின்விளைவுகளையும் பற்றி நாம் உணரவில்லையே என்பது வருத்தம் தருகிறது.
முந்தைய ஓடுகாலிகளின் பின்னணியில் முஸ்லிம் அல்லாதவர்களே இருந்ததை வைத்துப் பார்க்கும்போது,முஸ்லிம்களைக் கருவறுக்கும் பாசிச சக்திகளின் நீண்டகாலத் திட்டம்,நம்தூரில் கொஞ்சம் கொஞ்சமாக நடந்தேறி வருகின்றதோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. (தலித் ஆட்டோ ஓட்டியின் பின்னணியில் நமதூர் RSS இருந்ததும், அதுகுறித்த வழக்கை நடத்தியதும் வெளிப்படையாக அறிந்த விசயம்.) சமீப மாதங்களில் நடந்த சம்பவங்களில் இருதரப்பிலும் முஸ்லிம்களே சம்பந்தப்பட்டுள்ளனர் எனபதால்,சாதி,மதம்கடந்த ஒருவகை எல்லை தாண்டும் பயங்கரம் நம்மைச்சூழ்ந்துள்ளது தெரிகிறது.
அதிரையில் பன்முக கலாச்சாரத்தைப்பின்பற்றுபவர்கள் கலந்திருந்த போதிலும் பிறமதப் பெண்ணுடன் முஸ்லிம் ஆண் ஊரைவிட்டே ஓடியதாக ஒரேயொரு சம்பவம்கூட நம் கவனத்தில் வரவில்லை. அப்படி ஓடினாலும்கூட அவரைத் தேடிப்பிடித்து ஆட்கடத்தல் முதல் தீவிரவாத வழக்குகள்வரை புனையப்பட்டுச் சிறையிலடைக்கப்படுவர் என்பது வேறு விசயம்.
அறிஞர்களும் கல்வியாளர்களும் நிறைந்துள்ள அதிரையில், நம் சமுதாயத்தின் பெயரை ஒட்டுமொத்தமாகச் சீரழிக்கும் இந்த சட்டமீறல் நடவடிக்கைகளை யாரும் கண்டுகொள்ளவில்லையா? அல்லது அதைவிட முக்கிய விசயங்களில் அவர்கள் மூழ்கியுள்ளனரா?
இவர்கள்தான் பாராமுகமாக உள்ளார்களெனில், தமிழகத்தின் பெரும்பாலான முஸ்லிம் இயங்கள் அதிரையில் கிளையோ குறைந்தபட்சம் கொடிக்கம்பமோ வைத்துள்ளனர். அவர்களும் இதில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. (ஓடுகாலிகளைத் தேடிப்பிடிக்க இந்த அமைப்புகளின் கிளைகளுக்கு தகவல் கொடுத்தாலே போதும். ஓடிப்போனவர்களை வலைவீசித் தேடும்வேலை பாதி மிச்சமாகும்.அரசியல்,அதிகார மட்டங்களின் தொடர்பும் இயக்கத்தவர்களுக்கு இருப்பதால் இவர்களுக்குச் சட்டபாதுகாப்பும் அதிகம்.)
இவ்வாறு எல்லைதாண்டும் ஓடுகாலிகளிடம் எத்தகையை நியாயங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.இவர்களின் துர்நடவடிக்கைளால் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படுகிறது.ரோசப்பட்ட பெற்றோர் ஒருசிலர், ஓடுகாலிக் குற்றவாளிகளை தண்டிக்கவும் முடியாத வகையில் நமது சட்ட நடைமுறைகள், உணர்வுகளையும் கைகளையும் கட்டிப்போட்டுள்ளன.(சமீபத்தில், "கவுரவக் கொலையாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும்" என்று உச்சநீதி மன்றம் பரிந்துரை செய்தது நினைவிருக்கலாம்.)
தமது சகோதரி/மகள் கல்யாணச் சந்தையில் கண்ணியமாக கரையேறவேண்டும் என்பதற்காக தமது இளமையை அடமானம் வைத்து விட்டு விமானம் ஏறும் எமது சகோதரர்களின் உணர்வுகளையும்,குடும்பத்தாரின் கவுரவத்தையும் ஒரு பொருட்டாகக் கருதாமல்,திருமண கட்டுப்பாடுகளையும்,சமூக கடமைகளையும் புறந்தள்ளிவிட்டு, எல்லை தாண்டும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்புதான் என்ன?
எனக்குத் தெரிந்த சில தீர்வுகளை முன்வைக்கிறேன்.மேலும் அறிந்தவர்கள் தங்கள் பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்:

1)
சமூகக் கட்டுப்பாடுகளை தகர்த்து, தமது சுயநலத்திற்காக ஊரை விட்டு ஓடுபவர்கள், சமூக விரோதிகளாகக் கருதப்பட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

2)
ஓடியவர் திருமணமானவராக இருப்பின் முறையற்ற உறவு, விபச்சாரம், குடும்ப வன்முறை (Domestic Violence) சமூக ஒற்றுமைக்குக்கேடு விளைவித்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின்கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.

3)
ஓடியவர் நகை மற்றும் பணத்துடன் ஓடியிருப்பின் திருட்டு வழக்கிலும் சேர்க்க வேண்டும்.

4)
குடும்பத்தார நம்பவைத்து ஏமாற்றி ஓடிச்சென்றதால் நம்பிக்கை மோசடி வழக்கிலும் சேர்க்க வேண்டும்
.
பிடிக்காத கணவரை அடுத்த நிமிடமே குலா எனும் மணவிலக்கு செய்யும் உரிமையையும், விரும்பியவரோடு திருமண வாழ்க்கைப்படுவதற்கு வசதியாக பிடிக்காத வரனுக்கு எதிராக திருமணத்திற்குமுன்னரே மறுப்பு தெரிவிக்கும் உரிமையை மணப்பெண்ணுக்கு மார்க்கம் வழங்கியுள்ளது.
மார்க்கம் பரிந்துரைக்காத மணப்பெண்ணுக்கு வீடு முதல் அனைத்துவகையான வாழ்வாதார வசதிகளையும் வழங்கி,குண்டாமாத்து திருமண உறவுக்காக தங்கள் எதிர்பார்ப்புகளை தியாகம் செய்த பிறகும்,அதைப்பற்றிய கவலையின்றி ஓடும் இந்த சுயநலமிகள் சட்டப்படி தண்டனைக்குறியவர்களே.
சமூகக் கட்டமைப்புக்கு வேட்டுவைக்கும் இந்த விசயத்தில் அந்தந்த முஹல்லா பிரதிநிதிகள் கூடி,மார்க்கம் மற்றும் வல்லுனர்களின் சட்ட ஆலோசனைகளுடன் செயல்பட்டு இனிவரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓடுகாலிகள் தங்கள் சமூக எல்லை தாண்டலுக்கான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு, தமது தரப்பில் நியாயம் எதுவும் இருப்பின் நிரூபித்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் ஓடித் தொலையட்டும்.உன்னத இஸ்லாம் மார்க்கம் வழங்கியுள்ள விவாகம்/விவாக ரத்து மற்றும் வாழ்வுரிமைகளை உணராமல் சிற்றின்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து பேரிடரில் வீழத்துடிக்கும் ஓடுகாலி / ஊரோடிகளுக்கு இதைவிட அதிகமாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை

-- அதிரைகாரன்.

18 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சாமூக பொறுப்புடனும் அக்கரையுடனும் எழுதிய அதிரைக்கார"ர்"ஐ பாராட்டுகிறேன்.

இது அதிரைகார(ர்)ருடையது மட்டுமல்ல அதிரைகாரர்களின் யாவரின் ஆதங்கமும் வேதனையும் கூட, இங்குப் பதியப்பட்டுள்ளவையில் சமீபத்தில் உலுக்கிய அவை அதிர வைக்கின்ற செய்திகளே.

இவைகள் இன்று நேற்றல்ல நடந்தேறுகிறது என்று சும்மா இருந்திடவும் முடியாது, நான் சிறுவனாக இருந்த காலத்தில் அப்போது ஊரிலிருக்கும் பெரியோர்கள் கூடி தெருவுக்குத் தெரு ஒரு முக்கியமானவர் வீட்டைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வீட்டிலிருந்து டோக்கன் வாங்கிக் கொண்டுதான் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாட்டு ஓரிரு மாந்த்தங்களில் கட்டுப்பாடற்று போனாது அப்போது இதே பிரச்சினை எல்லை தாண்டிய அனாச்சாரங்கள்.

கட்டுப்பாடுகளுக்கா தட்டுப்பாடு !

அவசியம் சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை.

பெண்களுக்கான மார்க்க விளக்கங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும், கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஆலோசனைகளளப் போன்றே தயவு தாட்சனையின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டால் எவ்வகை பின்விளைவுகள் ஏற்படுத்தும் என்று பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.

பாத்திமா ஜொஹ்ரா said...

குரான் - ஹதீஸ் படி பெண்களுக்கு மார்க்க விளக்கம் போதியுங்கள்.
பிடிக்காத மாப்பிள்ளையை மணமுடித்து வைக்காதீர்கள்
மனைவியை தவிக்க விட்டு விட்டு,வெளிநாட்டில் காசு காசு என அலையாதீர்கள்.தனிமையில் அந்தப் பெண் எவ்வளவு கஷ்டப்படுவாள் என யோசியுங்கள்.
ஹலாலான முறையில் சம்பாதித்து-அவளுக்கு உணவூட்டுங்கள்.ஹராமான சம்பாத்தியம் மூலம் அவளுக்கு ஆண்கள் உணவூட்டி - அவள் சதையையும் நீங்கள் ஹராம் பண்ணும் அளவுக்கு ஆக்கிவிடாதீர்கள்.(சாராயக்கடை,லாட்டரி இன்னும் இதுபோன்ற வகைகளில் சம்பாதிக்கும் ஆண்களே இதும் உங்கள் பெண்களுக்கு எச்சரிக்கை.இவைகளை ஒரு பெண்ணாக இருந்து,மனம் வெதும்பி,சமுதாய நிலை எண்ணி எழுதுகிறேன்.

பாத்திமா ஜொஹ்ரா said...

* நாணமும் இறைநம்பிக்கையும் இணைந்தே உள்ளது. அதில் ஒன்று கெட்டுவிட்டால்
இன்னொன்றும் கெட்டுவிடும்.
* உங்களில் எவர் ஒரு தீய செயலைக்
காண்கிறாரோ, அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை அவர் தம் மனதால் வெறுக்கட்டும். இது இறை நம்பிக்கையில் மிகவும்
பலவீனமான நிலையாகும்.
* செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை
எண்ணுகின்றானோ அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்.
* இறைவன் உங்களில் சிலருக்கு சிலரை விட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ, அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு
அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப பங்கு உண்டு. மேலும் பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கு ஏற்ப பங்கு உண்டு. இருப்பினும் இறைவனிடம் அவனுடைய
அருளைக் கோரிய வண்ணம் இருங்கள்.
* செல்வ வளம் என்பது அதிக செல்வத்தைப்
பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே
உண்மையான செல்வமாகும்.

பாத்திமா ஜொஹ்ரா said...

* நாணமும் இறைநம்பிக்கையும் இணைந்தே உள்ளது. அதில் ஒன்று கெட்டுவிட்டால்
இன்னொன்றும் கெட்டுவிடும்.
* உங்களில் எவர் ஒரு தீய செயலைக்
காண்கிறாரோ, அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை அவர் தம் மனதால் வெறுக்கட்டும். இது இறை நம்பிக்கையில் மிகவும்
பலவீனமான நிலையாகும்.
* செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை
எண்ணுகின்றானோ அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்.
* இறைவன் உங்களில் சிலருக்கு சிலரை விட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ, அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு
அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப பங்கு உண்டு. மேலும் பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கு ஏற்ப பங்கு உண்டு. இருப்பினும் இறைவனிடம் அவனுடைய
அருளைக் கோரிய வண்ணம் இருங்கள்.
* செல்வ வளம் என்பது அதிக செல்வத்தைப்
பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே
உண்மையான செல்வமாகும்.

ஹதீஸ்

sabeer.abushahruk said...

தக்க சமயத்தில் பதியப்பட்டுள்ள இந்தக் கட்டுரை, கசப்பான உண்மைகளை கோடிட்டு கவலைகொள்ளச் செய்கிறது.

ஜமீல் காக்கா சொல்வதுபோல் பத்தியம் வைத்து வைத்தியம் செய்ய வேண்டுமே தவிர, அதிரைக்காரன் சொல்வதுபோன்ற தண்டனைகள் சற்றே அரபிக்காரன் தனமாக காட்டமாக இருக்கிறது.

நான் கேள்விப்பட்டு பிறகு விசாரித்த பல கேஸ்கள் பிறகு திருந்தி தீவிர ஒழுக்கத்தோடு வாழ்கிறார்கள். 

எனவே, தண்டனையைவிட சீர்திருத்தமே மனிதாபிமானமானது.


படுமுன் தெளிக!

ஒன்பதாம் வகுப்பு
பத்தாம் வகுப்போடு
ஓடிப்போனது...
பெற்றோருக் கிடை
வகுப்புக் கலவரம்!

போய்ச் சேர்ந்த இடத்தில்
தேடிச் சென்றது இல்லை -
வீட்டுப் பாடம் ஒன்றும்
விபரம் புரியவில்லை -
கோனார் உரையிலும்
குறிப்பெதுவும் இல்லை!

குறுஞ்செய்தியில்
முடங்கிய விரல்களால்...
வெறுங்கஞ்சிக்குக்கூட
வேலை யில்லை!

கண்கள் வழி 
கற்ற காதலும்...
காதலன் வழி
பெற்ற காமமும்...
வயிற்றுப் பசியில்
வெற்றாகிப் போனது!

கண்மனியும் பொன்மனியும்...
காவியமும் ஓவியமும்...
காசில்லா கதிகேட்டில்
காலாவதி யானது!

அவனுக்கு அவளும் -
அவளுக்கு அவனும் -
அலுத்துப் போன தொரு
அதிகாலையில்...

அரவணைக்க அம்மா,
ஆறுதலுக்கு அப்பா,
அந்தரங்கத் தோழியென
அவதரித்த அக்கா,
அம்மா சாயலில்
அருமைத் தம்பி,
இடுக்கன் களைய
இனியதொரு சகி,
இழந்ததெற் கெல்லாம்
ஏங்கியது மனது...!

மின்வெட்டு இரவொன்றின்
மிதக்கும் மின்மினி...
மழையற்ற தினமொன்றில்
புல்நுனியில் பனித்துளி...
என -
மிகைத்த காதல்;

முடியாத இரவு...
விடியாத வானம்...
படியாத உரவு ...
உலர்ந்த மலர்வனம்...
உருகாத மேகம்...
என -
எதிர்மறை எண்ணங்களில்
அஸ்தமித்தது!

ஏனோ...
பிடிமண் இடுகையில்
நொடிநேரம் காட்டும்
முகமொன்று -
குழிக்குள்...
மின்னி மறைந்தது!

முடிவைத் துவக்கமென்று
மயங்கும் பிஞ்சுகளே...
பழுக்கும் பருவம்வரை
பொறுத்தலே பகுத்தறிவு!

- சபீர்



 

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

.உலகக் கல்வியுடன் மார்க்கக் கல்வி மிக மிக அவசியம்.
.திருமணத்திற்கு முன்னர் கவுன்சல்லிங் (கலந்தாய்வு)மிக அவசியம்.
.திருமணத்திற்கு முன் அவளின் விருப்ப உணர்வுகளை பல்வேறு கோணங்களில் தெரிந்துகொள்ளனும்.பிடிக்காத சூழ்நிலைகளீல் தவிர்ப்பதே நல்லது.
.திருமணத்திற்கு பின் பிடிக்காச் சூழ்நிலைகள் என்றால் பல்வேறு கோணங்களில் பல்வேறு சமயங்களில் மார்கத்தினையும், முன் நடந்த சம்பவங்களையும் தெளிவாக எடுத்துக்கூறவேண்டும்.
.பிரிந்திருக்கும் போது(பிழைப்புக்காக) அவளின் மீது முழுகவனமும் அதே சமயம் எல்லாச்சூழ்நிலைகளிலும் கனிவும் காட்ட வேண்டும்.
.சந்தேகமென்று வரும்போது அவளின் நெருங்கிய உறவினர்/நட்பினர் மூலம் உசார்படுத்துவதுடன் மீரல் என்று வரும்போது மிரட்டியும் வைக்கவேண்டும்.

அபூ சுஹைமா said...

அன்புச் சகோ. அதிரைக்காரன்,

வெளிநாடுகளில் வசிக்கும் அதிரைவாசிகளின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளீர். உங்கள் எண்ணத்துக்கு கூலி தர அல்லாஹ் போதுமானவன்.

தலாக்! தலாக்! தலாக்! என்ற கட்டுரையில் (http://adiraixpress.blogspot.com/2011/01/blog-post_22.html) பெண்களுக்கு பெண்களால் கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தேன்.

ஐக்கிய ஜமாஅத்தை தூசு தட்டும் பணிகள் அண்மையில் துவங்கப்பட்டு நடைபெற்று வருவதாக அறிந்தேன். மஹல்லா தோறும் 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் ஊர் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.

ஐக்கிய ஜமாஅத் மறு சீரமைப்பு வரை காத்திராமால், இதுபோன்ற வழக்குகளைக் கையாண்டு வரும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம், பெண்களுக்கான கவுன்சிலிங்குகளை நடத்த முன்வரவேண்டும். கவுன்சிலிங் செய்யத் தகுதியான நமதூரைச் சேர்ந்த பெண்கள் இருவரை இன்ஷா அல்லாஹ் நான் அடையாளம் காட்ட முடியும்.

ஷம்சுல் இஸ்லாம் சங்கக் கட்டிடத்தை வாரம் ஒரு முறை பெண்கள் மட்டும் உபயோகிக்குமாறு செய்து, பெண்கள் தங்கள் பிரச்சனைகளை மனதிற்குள்ளேயே பூட்டி வைக்க இடம்தராமல், தங்களின் மன பாரங்களை வெளியே கொட்டித் தீர்க்க வழி ஏற்படுத்த வேண்டும்.

சமுதாயக் கவலையும் செயல்திறனும் மிக்கவர்கள்தான் தற்போதைய ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பொறுப்பாளர்களாக உள்ளனர். இதுபோன்ற பிரச்சனைகளை வரும் முன் தடுப்பதற்கு என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம் என்று திட்டமிடுவதற்கும் திட்டமிட்டவற்றைச் செயல்படுத்துவதும் பொறுப்பாளர்களின் பொறுப்பு என்பதையும் தங்களுடைய பொறுப்புக்காக நாளை அல்லாஹ்விடம் விசாரிக்கப்படுவார்கள் என்பதையும் நினைவுறுத்த வேண்டிய அவசியம் இல்லை.

விரைந்து செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரு வாரகாலமாக என் மனதில் ஓடிக்கொண்டிருந்தவைகளை அப்படியே எழுதியுள்ளீர்கள். மிகவும் வருத்தப்பட வைக்கும் விசயத்தை அலசியுள்ளீர்கள். நன்றி.

ஆண் பிள்ளையாகட்டும், பெண் பிள்ளையாகட்டும் இவர்கள் நல்லவர்களாக மற்றும் கெட்டவர்களாக உருவாகுவதற்கு முழு காரணம் பெற்றோர்கள், குறிப்பாக தாய்மார்கள்.

இஸ்லாமிய அடிப்படையில் குழந்தைகளை வளர்பதில் காட்டும் பொடுபோக்குத்தனமே இது போன்ற நிகழ்வுகளை அன்றாடம் காண்பது சகஜமாகிவிட்டது என்று சொன்னால் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்று எண்ணுகிறேன். தன் பிள்ளையை ஒருவனுக்கு கட்டிக்கொடுக்கும் வரை அனேக பெற்றோர் இன்று வரை தவறிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டு எல்லாம் தேவையில்லை.

நம் மக்கள் சினிமா டிவீ சீரியல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருவதும் இது போன்ற நிகழ்வுகளுக்கு மற்றுமொரு காரணமாகிறது. அதில் நடைப்பெறும் நிகழ்வுகளை சைத்தானின் தூண்டுதலில் நிஜமாக்க முயற்சிக்கிறார்கள். சீரழிக்கும் சீரியல்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு மாற்று வழிகளை நாம் தேடியாகவேண்டும்.நிச்சயம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

இவை எல்லாவற்றிற்கும் மேல் இஸ்லாமிய அடிப்படையில் ஒவ்வொரு குடும்பமும் இன்று வரை தன் பிள்ளைகளின் எதிர்கால குறிக்கொள்களை நிர்ணையிப்பதில்லை. இதுவே ஒவ்வொரு பெற்றோர்களும் செய்யும் தவறுகள்.இவற்றால் பிள்ளைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.

அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் சகோதரர் CMN சலீம் அவர்கள் கூறியது போல் இஸ்லாத்தை படித்த மக்களல்லாமல், இஸ்லாத்தை விளங்கிய மக்களாக நம் மக்களை உருவாகினால் தான் இது போன்ற நிகழ்வுகளிலிருந்து விடுபட்ட சமுதாயமாக நிறந்தரமாக நம் சமுதாயம் உருவாகும். இன்ஷா அல்லாஹ்.

அதிரைக்கு என்றே centralised counselling தொண்டு நிறுவனம் உருவாக வேண்டும். இஸ்லாமிய சிந்தனையுடன் கூடிய மனோதத்துவ ஆலோசனைகள் இதில் இடம்பெற வேண்டும்.

Decentralised Counselling அதிரை போன்ற ஊர்களில் குறிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களில் நடைப்பெற வைப்பது என்பது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே. இன்றைய சங்கங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் சொன்ன என் தனிப்பட்ட கருத்து.

அல்லாஹ் போதுமானவன்..

யா அல்லாஹ் உன் சமுதயாத்தை பாதுகாப்பாயாக...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அபூ சுஹைமா..

நீங்கள் குறிப்பிட்டு சொல்லியிருப்பது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தை பற்றி மட்டுமே. சகோதரர் அதிரைகாரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளது அதிரையின் ஒட்டுமொத்த பிரச்சினை. இதற்கு அதிரைக்கேன்றே கவுன்சிலிங் செய்வதற்கு என்றே ஒரு பொதுவான அமைப்போ அல்லது தொண்டு நிறுவனமோ இருந்தால் மட்டுமே சரியான தீர்வுகளை எட்டமுடியும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

இதில் நீதித்துறையிலும் நம் மார்க்க அடிப்படையில் குடும்ப நல பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவிகள் செய்யப்படுகிறது என்பதை சில மாதங்களுக்கு முன்பு ஊடகங்களில் படிக்க முடிந்தது. அந்நிகழ்ச்சியில் நம்மூர் வக்கில் ரஜாக் காக்கா அவர்களும் கலந்துக்கொண்டார்கள். இது தொடர்பாக மேலும் தகவல்கள் கிடைத்தால் இங்கு பகிர்ந்துக்கொள்ளலாமே.

அதிரைக்காரன் said...

வேண்டுகோளை ஏற்று மீள்பதிவிட்டதற்கு அதிரை நிருபர் குழுவிற்கு நன்றி.
பதிவின் பேசுபொருளை கோடிட்டுக்காட்டும் புகைப்படம் பொருத்தமானது. நச்!

இப்பிரச்சினைகள் குறித்து இருதளங்களிலும் முன்வைக்கப்படும் கருத்துக்களை தொகுத்து உள்ளூர் அமைப்பு/சங்கங்களுக்கு வெளிநாட்டுவாழ் அதிரைவாசிகளின் உணர்வுகளாக பெற்றோர்களின் சார்பில் வழங்கி உரிய முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டும்.

கல்வி விழிப்புணர்வு மாநாடுகளில் பெண்களுக்கான ஒருநாள் கவ்ன்ஸிலிங் ஏற்பாடு செய்யலாம். ஷிஃபா போன்ற மருத்துவ மனைகளில் பெண்களின் பிரச்சினைகளுக்கு உளவியல் விளக்கமளிக்கும் வகையில் இஸ்லாமியப் பின்னணி கொண்ட பெண் மருத்துவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து 3-6 மாதங்களுக்கொருமுறை உளவியல் முகாம்கள் நடத்தலாம்.

இவை எல்லாவற்றையும்விட எல்லைதாண்டும் எண்ணமுள்ளோரைப்பற்றி ஊர் ஜாமத்திற்கு உளவு சொல்லும் சமுதாய தன்னார்வலர்களும் அவசியம் உருவாக்கப்பட வேண்டும்.

jahir said...

அஸ்ஸலாமு அல்லைக்கும்,
நாம் இப்பொழுது செய்ய வேண்டியது என்னவென்றால் ஊர் ஜமாஅத் எல்லோரையும் ஒன்று படுத்தி மூன்று மூன்று ஜமாஅத்தாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி, உதாரணம் : கீழத்தெரு , மேலதெரு , நெசவுதெரு இது ஒரு அமைப்பு பின் நடுத்தெரு மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு கட்டுப்பட்ட தெருக்கள் பின் கடற்கரை தெரு , தரகர் தெரு , ஹாஜா நகர் இப்படியாக ஜமாஅத்தை உண்டாக்கி கீழத்தெருவில் ஒரு பிரச்சனை என்றால் மற்ற இரண்டு தெரு ஜமாஅத்தார்கள் முன்னிலையில் பிரச்சனை விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை பிரச்னை இல்லாத தெருவின் ஜமாஅத்தார்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் இதில் நாம் ஊர் பெரியவர்களின் ஆலோசனைகளை பெற்று இந்த அமைப்பிற்க்கான BY LAWS உருவாக்கப்பட்டு நாம் நம் சமுதாயத்தை நல் வழியில் கொண்டு போக முயற்சிக்க வேண்டும். இது ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம், இதை கையாள்வதில் மிகுந்த கவனமும் , கண்டிப்பும் அவசியம் என்பதை உணர்ந்து அதற்க்கேற்றார்போல் நாம் சில சட்ட திட்டங்களை உண்டாக்கி அதாவது சில நாடுகள் குற்றவாளிகளை பிடிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது போல் நாமும் நம் ஜமாஅத்தை ஒன்று படுத்தி செயல்பட்டால் அல்லாஹ் நம் நோக்கம் வெற்றி பெற உறுதுணை செய்வான் இன்ஷா அல்லாஹ். (குறிப்பு : இது என் சிறிய அறிவுக்கு பட்ட சிறிய ஆலோசனை இதில் எதாவது குறை கண்டால் விட்டு விட்டு நல்லதை மட்டும் (நல்லது இருந்தால்) எடுத்து நம் ஊர் சமுதாயம் இப்படி தலை குனிவதை தவிர்க்கலாம்)

Yasir said...

சகோ.அதிரைகாரனின் சமுக அக்கறையுள்ள ஆக்கம்....கவலையளிக்க கூடிய விசயங்களில் இது ஒன்று தவறுகள் எங்கே நடக்கின்றது என்ற ஆராய வேண்டும்...குடும்பதிற்க்காக தன் இன்பங்களையும் ஆசைகளையும் மூட்டைகட்டிவிட்டு தன்னை சார்ந்தவர்களின் நலன் கருதி கஷ்டப்படும் சகோதரர்களுக்கு துணைவியார்கள் தன்னை தூய்மையாக வைத்து அவனுக்காக வாழ வேண்டும்...கணவர்களும் பேங்க பேலன்ஸ்சை மட்டும் அதிகரிக்க முயற்ச்சி செய்யாமல்..மனைவியுடன் கூட இருக்கும் நாள்களையும் அதிகரிக்க முயற்ச்சி செய்யவேண்டும்..லட்சங்களை சேர்த்துவிட்டு லட்சியங்களையும்,மானத்தையும் விடுவது என்பது அறிவுடைமை அன்று..அல்லாஹ் நாம் அனைவரையும் இந்த கேடான செயல்களைவிட்டு பாதுகாப்பானக

Yasir said...

தண்டனைவழங்கும் விசயத்தில் நமது பக்கத்து ஊர்களில் என்ன நடக்கிறது என்று அறிந்து அதனை ஃபலோ செய்யவேண்டும்...முத்துப்பேட்டையில் அதனை சிறப்பாக செய்து வருகிறார்கள் என்று கேள்வி...இந்த வேலிதாண்டும் மெல்லாடுகள் தண்டிக்கபட வேண்டிய குற்றவாளிகளே

Yasir said...

கல்யாணம் ஆகாத கன்னியர்கள் தவறுவதற்க்கு முழுக்க முழுக்க பெற்றோர் நாம்தான் பொறுப்பு..
அவர்களை இஸ்லாமிய ஒழுக்க முறைகளுடன் வளர்க்காமை,
சிறு தவறுகள் செய்யும் போது அதை உச்சகட்ட லெவலுக்கு போய் அதை பெரிய தீங்காக எடுத்து கடுமையாக தண்டித்தல்
அவர்கள் ஒரு நல்லவிசயம் செய்யுபோது பாரட்டாமல் விடுதல்...அதனை அடுத்தவர் சொல்லும்போது ஒரு அட்ராக்‌ஷன் ஏற்படுவது இயல்பே
தன் மகள் அழகா இருந்தால் அதனை அவளிடம் ஒருதடவையாவது சொல்லவேண்டும்..அதனை மூன்றாவது நபர் சொல்லும்போது ஒருவித உணர்வு ஏற்படுவது பருவபிஞ்சுகளுக்கு தவிர்க்கமுடியாதது

அதிரைக்காரன் said...

இவ்விசயத்தில் முஹல்லாக்களையும் ஒருங்கிணைக்க ஜாஹிர் காக்காவின் பரிந்துரை சாத்தியப்படக்கூடிய ஒன்று.யார் பெரியவர் என்ற மனப்பான்மையை ஒதுக்கிவைத்து எதிர்கால சந்ததிகளின் நலனுக்காக சம்பந்தப்பட்ட முஹல்லா நிர்வாகிகள் விரைவில் கூடிப்பேசி குறைந்தபட்ச செயல்திட்டங்களை வகுத்து நல்ல தீர்வு காணவேண்டியது காலத்தின் கட்டாயம்.

ZAKIR HUSSAIN said...

உண்மையில் இது போன்ற விசயத்துக்காக ஒரு ஆர்டிக்கிள் எழுத ஆயத்தமாக இருந்தேன் [ எனது மச்சான் நிஜாம் முஹைதீனிடமிருந்து இதற்காக நிறைய "ப்ரஷ்ஷர்" கொடுக்கப்பட்டதுதான் இதன் காரணம் ]

ஊரில் முஸ்லீம்கள் அதிகம் இருந்தும் பிரச்சினைகளை டீல் பன்ன சரியான ஆட்கள் இருந்தும், ஒற்றுமை இல்லாமலும் பைத்தியக்காரத்தனமான தெரு பாகுபாடுகளும், பிரச்சினை என்று வந்துவிட்டால் ஆண்பிள்ளை மாதிரி எதிர்கொள்ளாமல் டிமிக்கி கொடுக்க முயற்சிப்பதும் எழுதாத விதியாக அதிராம்பட்டினத்தில் நடந்து வருகிறது.

ஊரில் நடக்கும் உள்ள மற்ற விசயங்களில் ஒற்றுமை இல்லாமல் போனாலும் முஸ்லீம் பெண்களுக்கு நடக்கும் அவமானங்களுக்கு எல்லா முஸ்லீம் சகோதரர்களும் ஒற்றுமையாக தீர்வுகானஒன்று கூட வேண்டும்.

சகோதரர் ஜாகிர் சொன்னதையும், Yasir சொன்னதையும் [ தெருவாரியான தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு..ஊர் தலைவர் என்று ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படும் விசயத்தில்..நாம் எல்லோரும் நலம் பெறலாம் ]

இதில் ஒற்றுமை இல்லாவிட்டால்..ஊர் நாசமாய்ப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என பத்திரத்தில் கையெழுத்து போட்டு தர நான் தயார்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

ஹலோ ஃபிரண்ட்ஸ் !

இதற்கு முன்னர் எங்களது பெரும் மதிப்பிற்குரிய ஆசான்களைப் பற்றி எழுதியிருந்த பதிவுகளில் கருத்திட்டிருக்கும் நான், இம்மாதிரியான உணர்வுபூர்வமான பதறவைக்கும் பதிவில் கருத்திட எத்தனித்தது காலத்தின் கட்டாயமே தவிற வேரொன்றுமில்லை.

நாங்கள் அதிராம்பட்டினத்தில் சகோதர மதத்தினர் சூழ்ந்திருக்கும் பகுதியில் வசித்திருந்தாலும் என்னுடன் படித்தவர்களும் எங்கள் குடும்பத்தோடு ஒட்டியுறவாடிய இஸ்லாமிய சகோதரிகளும் மென்மையானவர்களும் தன்மையானவர்களுமாக இருப்பர் இன்றளவும் அப்படியே.

ஏனோ காலச் சூழலும் சந்தர்பங்களின் சாடல்களும் பிரித்தாலும் சூழ்ச்சிகளும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சூடு போட்டுக் கொள்கின்றன இதனை விதியென்று புலம்புவதா அல்லது சதிகளை விதியாக்கும் முயற்சியான்னு தெரியவில்லை.

இங்கே கட்டுரையின் கருப் பொருள் இங்கு மட்டும் நடப்பதல்ல அதுவும் குறிப்பிட்ட மதத்தில் மட்டும் அல்ல, ஆதலால் ஊருக்கு மட்டும் கட்டுப்பாடு தமக்குள் ஒன்று கூடிப்பேசி தீர்க்கலாம் என்ற கருத்துக்கள் ஏற்புடையதே இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

அத்தியாவசியமாக, தனிமனித ஒழுக்கம் எந்த அளவுக்கு முக்கியம் என்று அவப் பெயர் உண்டாக்க எத்தனிக்கும் ஆணோ பெண்ணோ அந்தக் கனப் பொழுதில் சிந்தித்திருந்த்தால் இப்படியான சீரழிவுக்கு வழியேற்பட்டிருக்காது. தனிமனித ஒழுக்கத்தை சீர் குழைக்கும் காரணிகளாக கீழேயுள்ள சிலவற்றைச் சொல்லலாம்..

1. தனிமையும் (இஸ்லாம் சொல்வது போல் ஆணும் பெண்ணும் தனிமையிலிருந்தால் மூன்றாவதாக சாத்தான் அங்கே வருகிறான் என்று - இது எனக்கு எனது நண்பர்கள் படிக்கும் காலத்தில் சொல்லிக் காட்டியது)
2. பெற்றோர்கள் பிள்ளைகளோடு மனம் விட்டு கலந்து பேசாமிலிருப்பது, பெண் பிள்ளைகளின் தனித் தன்மைகளையும் அவர்களோடு பேசி நெருக்கத்தை ஏற்படுத்தாமை.
3. தவறொன்று கண்டால் உடணுக்குடன் களைந்தெரிந்து மூடி மறைக்காமல் அதன் பின்விளைவுகள் எப்படி என்று உணர்த்தப்படாமை !
4. சமகால அழிவுக்கு அடிகோலி, தொலைக் காட்சி சீரியல்கள்.. தகாத உறவானாலும், மாற்றான் தோட்டத்து மல்லிகையை பறிக்கும் செய்முறைகள், உறவுக்கரங்களுக்கு செய்யும் தூரோகம், போதைப் பொருட்கள் இன்னும் ஏரளமான கெடும் செயல்களை காட்சிகளாக வீட்டின் வரவேற்பறையில் அனைவரும் கண்டு கழிக்கும் அவலம்.

இப்படியாக சொல்லிக் கொண்டே போனாலும், இன்றைய காலகட்டத்தில் தொலைக் காட்சிகள் இல்லாத வீடுகளும் இல்லை அதன் தொடர்களில் மூழ்காத குடும்பங்களும் இல்லை எதுவுமே அளவுக்கு மீறினால் அவதிதான்!

ஏன் தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்காமல் இதுநாள் வரை மூத்தவர்கள் யாரும் வாழ்கை நடத்திடவில்லையா ?

நாங்களும் படித்தோம் பழகினோம் அன்றும் இதே புரளிகள் கிளப்பிவிடத்தான் செய்தார்கள், ஆனால் தெளிவாக இருந்தோம் பெற்றவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தோம் இன்றளவும் இருக்கிறோம்...

மனமாற்றமும், அதற்கான சூழலும் உருவாக்கித் தருவது ஒவ்வொரு குடும்பத்தலைவரின் / தலைவியின் தலையாய கடடமை சிந்திக்க வேண்டிய நேரம்...

என்றும் நட்புடன்,
உணர்வுகளில் பங்கெடுக்கும் சகோதரி

அப்துல்மாலிக் said...

சமூகத்தின் சீர்திருத்த கட்டுரை, தொலைநோக்கு விவாதம். முற்றிலும் வரவேற்கிறேன். புதிதாக ஏற்படப்போகும் ஐக்கிய சபையின் முழு ஒத்துழைப்புடன் ஒரு குழு அமைக்கப்பட்டு இது மாதிரி விசயங்கள் வெளியே கசிந்து வீண் பேச்சுக்கு ஆளாவதில் இருந்தும் பாதுகாக்க இந்த குழு சம்பந்தப்பட்ட பெற்றோர்/நெருங்கிய குடும்பத்தார்களை சந்தித்து எந்த வகையில் உண்மை என்பதை தீர்க்க ஆராய்ந்து அதற்கான தீர்வை எட்டவேண்டும். நம் சமூகத்துக்குள்ளேயே நடக்கும் ஒரு சில இதுமாதிரி ஓடிப்போகும் விசயங்கள் பெருமிகுஆண்களே அந்த குடும்பத்தின் மேல் உள்ள பகையாலும், காதலித்து ஏற்றுக்கொள்ளபடாததாலும், வேறு சில காரணத்தால திருமணம் நிறுத்தப்பட்டதாலும் இதனால் வெறுப்புற்ற ஆண்மகன் இதுமாதிரி வேண்டும் என்றே அந்த குடும்பத்தின் மேல்கலங்கத்தை ஏற்படுத்த முயல்வதும் முதல்வகை காரணமாக இருக்க வாய்பிருக்கு. குறிப்பாக இந்த விசயம் ஒளியை விட வேகமாக பரவி வீண் பேச்சுக்கு அந்த குடும்பமும் அந்த குமரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும். தேவையில்லாத வீண் வதந்தியை தடுத்தாலே நம் சமுதாயம் பாதியளவு முன்னேறிய சமுதாயமாக வளர வாய்ப்பிருக்கு, அல்லாஹ் நன்கறிந்தவன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு