Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஏற்றத் தாழ்வு(கள்) - சிந்திப்போம் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | June 03, 2011 | ,


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அவசர உலகம்!
இயந்திர வாழ்க்கை!

உள்ளங் கையில்
உலககை வைத்து
உருட்டிப் பார்க்கும்
தொழில் நுட்பம்!

வேற்றுக் கிரகத்தில்
வீட்டு மனை தேடும்
வானிலை ஆராய்ச்சி!
இருந்தும்..

எதுகை மோனையாய்
ஏற்றத் தாழ்வுகள்
பேசித் திறிவோரும்
இருக்கத்தானே செய்கிறார்கள்!?!?

எவ்வளவு தான் உலகம் வேகமாய் முன்னேறிச் சென்றாலும் இன்னும் மனிதர்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வுகள் பேசித்திறிவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்! இவ்வாறு ஏற்றத் தாழ்வுகள் பேசித் திறிவோரில் ஏக இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட இறை மார்க்கமாம் இஸ்லாமைப் பின்பற்றுவோரும் சிலர் இருப்பது மிகவும் வேதனைக்குறியது. இவர்களின் நிலை நிச்சயமாக அறியாமையின் வெளிப்பாடே அன்றி வேறில்லை.

"மனிதர்களே! உங்களுடைய ரப்பை அஞ்சிக்கொள்ளுங்கள்; அவன் தான் உங்களை ஒரே ஒரு ஆத்மாவிலிருந்து படைத்தான், மேலும் அதிலிருந்து அதன் ஜோடியைப் படைத்தான், மேலும் அவற்றிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் வெளிப்படுத்தினான்".

மேலே சொல்லப்பட்டுள்ள செய்தி ஒன்றும் நான் உதிர்த்த தத்துவமில்லை, அருள் மறையாம் குர்ஆனில் அல்லாஹ் மனித சமுதாயத்தை நோக்கி சொல்லுகிற கட்டளை. சூரா அந்நிஸா-வின் முதல் வசனத்தின் முதல் பகுதி. நாமெல்லாம் பல முறை இவ்வசனத்தை ஓதி இருப்போம்! பல முறை செவியுற்றிருப்போம்! ஆனால் அதன் மொழிபெயற்பை எத்தனை பேர் படித்திருப்போம்? அதன் பொருளை எத்தனை பேர் உணர்ந்திருப்போம்? அதனாலல்லவா முஸ்லிம்களிலும் ஏற்றதாழ்வுகள் பேசித் திறிவோர் சிலர் இன்னும் இருக்கின்றனர்!

அல்லாஹ் சிலரை சிலரை விட இவ்வுலகில் மேன்மையாக்கி வைத்திருக்கிறான்; சிலருக்கு செல்வத்தை கணக்கின்றி கொடுக்கிறான், இன்னும் சிலருக்கு அளவாகக் கொடுக்கிறான், இன்னும் சிலரை ஏழைகளாகவும் ஆக்கிவிடுகிறான்; மேலும் அல்லாஹ் தான் நாடியோருக்கு ஆட்சி அதிகாரங்களை வழங்குகிறான்; அல்லாஹ் சிலருக்கு குழந்தைச் செல்வங்களைக் கொடுக்கிறான், சிலரை மலடாகவும் ஆக்கிவிடுகிறான்; இன்னும் சிலருக்கு அனைத்தையும் கொடுக்கின்றான் இவை அனைத்தும் அல்லாஹு ரப்புல் ஆலமீனின் அதிகாரத்தில் உள்ளவையாகும். இவை அனைத்தையும் அவன் கொடுப்பதும் தடுப்பதும் உங்களில் யார் செயலால் அழகானவர் என்பதை சோதித்து அறிவதற்காக!

 الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். சூராஹ் அல்முல்க் (67:2)

ஆனால் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களில் சிலர் தான் தன்னிறைவு பெற்றுவிட்டோம் என்ற இறுமாப்பின் காரனமாக ஏழைகளிடத்தில் ஏற்றத் தாழ்வுகளோடு நடந்துகொள்வதும், அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதும், குடும்பம் கோத்திரம் பாரம்பரியம் என்று பிறரை ஏளனம் பேசி பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் கற்பிப்பதும் மிகவும் கன்டனத்திற்குறியது.

நாம் ஒன்றை இங்கே சிந்தித்துப் பார்க்க வேண்டும்! அல்லாஹ் ஒரே ஒரு ஆத்மாவிலிருந்துதான் உங்கள் அனைவரையும் படைத்தேன் என்று சொல்கிறான், அப்படி என்றால் பிறப்பால் அனைவரும் சமம் என்று அல்லாஹ் சொல்லும் போது இல்லை இல்லை ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறது என்பது போல் எவரேனும் நடந்துகொள்வாராயின் அவர் ஈமான் கொன்டவர் என்ற பட்டியலிலிருந்து வெளியாகி மறுப்பாளர் பட்டியலில் சேர்ந்துவிடும் ஆபத்து உள்ளதைய் உணர்ந்துகொள்ள வேண்டும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

மேலும் கேலி கின்டல் பேசி பிறர் உள்ளங்களை நோகடிப்போர், புறம் பேசித் திறிவோர் உங்களின் ரப்பாகிய அல்லாஹ் கூறுவதை சிந்தியுங்கள்.

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக). ஸூரத்துல் ஹுமஜா(புறங்கூறல்) 104:1 - 104:9.

இஸ்லாம் என்பது மிகவும் உள்ளார்ந்த உணர்வுகளோடும் வாழ்வியலோடும் கலந்த மார்க்கம். சாதாரனமாக எந்த முக்கியத்துவமுமின்றி நாம் பேசுகிற சொற்களும் பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்...) அவர்கள் தங்களின் தோழர்களிடத்தில் "ஒரு மனிதன் தான் என்ன பேசினோம் என்று கூட அறியமாட்டான், ஆனால் தான் பேசிய அந்த வார்த்தையின் தீங்கின் காரனமாக நாளை மறுமையில் அவன் கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள இடைவெளி அளவிற்கு நரகின் ஆழத்திற்கு சென்றுவிடுவான்" என்று எச்சரிக்கை செய்தார்கள்

அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள் "பேசினால் நல்லதையே பேசுங்கள், இல்லை என்றால் வாய் மூடி இருங்கள் அதுவே சிறந்தது" என்று.

மேலும், ஒருமுறை அன்னை ஆயிஷா ரலி... அவர்கள் ஒரு பெண்ணை சுட்டிக் காட்டும் போது "அந்த கட்டச்சி" என்று சொன்னதும் அல்லாஹ்வின் தூதரின் முகம் சிவந்துவிட்டது! கடும் கோபம் கொண்டவர்களக "ஆயிஷாவே! நீ சொன்ன இந்த வார்த்தையை கடலில் கரைத்தாலும் உன் பாவம் தீராது" என்று சொன்னார்கள்.

இறை நம்பிக்கையாளர்களே! நாம் அனுதினமும் எத்தனையோ கேலி பேசுவோம், யூகமான பேச்சுக்கள் பேசுவோம், புறம் பேசுவோம், வீனான பேச்சுக்கள் பேசுவோம், வீனான காரியங்களில் ஈடுபடுவோம் அத்தனையும் நாளை மறுமையில் நமக்கு எதிராக வந்து நிற்கும் என்பதை உணர்ந்து நம்முடைய நாவைப் பேனிக்கொள்ள வேண்டும்.

யார் இரு தாடைக்கு இடையிலுள்ள உறுப்பையும், இரு தொடைக்கு இடையிலுள்ள உறுப்பையும் பேனிக்கொன்டாரோ அவருடைய சொர்க்கத்திற்கு நான் உத்திரவாதம் என்று அல்லாஹ்வின் தூதர் நன்மாராயம் கூறினார்கள்.

எனவே, இறை நம்பிக்கையாளர்களே! கடந்த காலங்களிலே நாம் செய்துவிட்ட தவறுகளுக்காக அல்லாஹ்விடத்திலே பாவ மன்னிப்பு கோறுவோமாக! மேலும், இனி வரும் காலங்களில் அல்லாஹ்வுடைய அவனது தூதருடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக! மேலும், அனைத்து நிலைகளிலும் அல்லாஹ்வுக்கு அடிபனிந்து அவனுக்கு நன்றி செலுத்தி வாழக்கூடிய வாழ்க்கையை வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ஆமீன்.

நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!

ம'அஸ்ஸலாம்

- அபு ஈஸா

6 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நீர் யார் எமக்குச் சொல்வது என்று எதிர்வாதம் செய்வதை விட நீரோடையாக அழகுற சொட்டு நீர் மாதிரி தாகம் தீர்க்க தொண்டைக் குழிக்குள் இறங்கினால் இலகுவாக ஜீரனிக்கும் !

மற்றுமொரு ஆக்கம் சிந்தனையைத் கட்டியிழுக்கும் பதிவு !

அடிக்கடி இல்லாவிடினும் சந்தர்பங்கள் வசப்படும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதும் அபு ஈஸாவின் ஸ்பெஷலே !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். மிக அருமையான சிந்தனையின் தூவல். அதை இறைமறையாம் திருகுரான் வழி நின்று தீனின் வெளிச்சம் கொண்டு கருத்து பாய்ச்சியது எதனினும் மேன்மையான ஆக்கம். அபுஈசா அப்பப்ப வந்தாலும் அள்ளித்தரும் அழகியல் கூடிய எழுத்துக்கள் வாழ்துக்கள். அல்லாஹ் எல்லா வளமும் தந்தருள்வானாக. ஆமீன்.

Shameed said...

அபு ஈசாவின் ஏற்றத் தாழ்வு கட்டுரை படித்ததும் பளீர் என புரியும் படியும் விவரங்கள் விளா வாரியாகவும் இருந்த்தது

ZAKIR HUSSAIN said...

To Bro அபு ஈஸா

//ஆனால் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களில் சிலர் தான் தன்னிறைவு பெற்றுவிட்டோம் என்ற இறுமாப்பின் ..........//

பொதுவாகவே இன்னொருவருடன் ஒப்பிட்டுதான் சிலர் தான் பெரிய பணக்காரன் என்று சந்தோசப்பட்டுக்கொள்கிறார்கள்...இது பில்கேட்ஸ், அம்பானி, புருனை சுல்தான் பக்கத்தில் இல்லாதவரை Possible.

Meerashah Rafia said...

நன்மையை அள்ளக்கூடிய அழகிய பதிவு.

நம் வாழ்க்கையில் பல நாள், நமக்காக வாழ்வதைவிட பிறர்காகத்தான் அதிகம் வாழ்கின்றேன்.

சிலர், நம்மை தாழ்த்தி பார்த்திடுவார்களோ என்ற தாழ்வு மனப்பான்மையோடும்,

ஒருசிலர், நம்மை உசத்தி பேசவேண்டும் என்ற பேராசை மனத்தோடும்..

மொத்தத்தில் நாம் நமக்காக வாழ்வது குறைவு.

Yasir said...

சகோ.அபு இஷாவின் சிந்தனையை தூண்டும் பதிவு...பட்டபெயர் வைத்து அழைப்பது ”பாவம்” என்பது தெரியும் ஆனால் நபி(ஸல்) இந்த அளவிற்க்கு சொல்லி உள்ளார்கள் என்பது உங்கள் கட்டுரையை படித்தவுடன்தான் தெரிந்தது..அல்லாஹ் நாம் அனைவரையும் அவனுக்க்கு பொருத்தமான வழியில் வாழ்வதற்க்கு அருள் செய்வானக...ஆமீன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு