இலவசம்... இலவசம்... இலவசம்... அனுமதி இலவசம் என்ற கணீர்குரலில் அதிரை இளைஞர் கால்பந்துக்கழகம் நடத்தும் எழுவர் கால்பந்து தொடர்ப்போட்டியில் இறுதிப்போட்டி என்று ஐடிஐ மைதானத்தில் நடைபெறும் என்று இன்று காலை முதல் ஒலிப்பெருக்கி மூலம் ஒலித்துக்கொண்டே இருந்தது.
அதிரை AFFA அணிக்கும் காலிகட் கேரளா அணிக்கும் கால்பந்து இறுதிப்போட்டி நடைப்பெற்றது. தொடக்கவிழாவில் இரு அணிகளில் அணிவகுப்பு மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. அதனைத் தெடர்ந்து காவல்துறை அதிகாரிகள் திரு. அசோக் குமார், திரு. செம்மலக்கண்ணன் மற்றும் மற்ற விருந்தினர்கள் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.
விருவிருப்பாக நடைப்பெற்ற இவ்வாட்டத்தின் முதல் பகுதியில் இரு அணிகளும் கோல் ஏது போடாமல் மிகச்சிறப்பாக விளையாடினார்கள். ரசிகர்கள் ஆராவாரம் மிகவும் விருவிருப்பான ஆட்டத்தின் மூலம் ஐடிஐ மைதானத்தையே விழாகோலம் கொண்டிருந்தது. முதல் பகுதி நேரம் ஆட்டம் வரை கால்பந்தாட்ட ரசிகர்கள் மிக ரசனையுடன் கண்டு ரசித்தனர்.
இரண்டாம் பகுதிநேர ஆட்டத்தில் கேரளா அணி ஒரு கோல் அடித்து தங்களின் எண்ணிக்கையை துவக்கினர். இப்போது தான் கேரளா அணிக்கு ஆதரவு தந்து வரும் ரசிகர்கள் யாருமே எதிர்ப்பாராத வகையில் சக்திவாய்ந்த வெடிகளை வெடித்து தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடியதோடு அல்லாமல் ஏதோ ஒரு வகை மீன் பெயர் சொல்லி மீன் வியாபாரம் செய்வது போல் சத்தம் போட்டுக்கொண்டே இருந்தது அநேக மக்களுக்கு எரிச்சலூட்டியது.
இறுதியில் ஆட்ட முடிவில் 2- 1 என்ற கோல் கணக்கில் கேரளா அணி அதிரை AFFA அணியை வீழ்த்தி சுழல் கோப்பையை வென்றது.
இன்றைய ஆட்டம் எல்லோரும் எதிர்ப்பார்த்து போல் விருவிருப்பாக இருந்தாலும், கால்பந்தாட்ட ரசிகர்கள் பல அநாகரீகமாக தங்களின் செயல்பாடுகளில் ஈடுபட்டதால் இன்றைய கால்பந்தாட்டப்போட்டி அநேக ரசிகர்களிடையே மிக எரிச்சலூட்டிக்கொண்டே இருந்தது.
ஆட்டத்தில் வெற்றித்தோல்வி என்பது சகஜமே என்றாலும் ஒரு அணிக்கு ஆதரவு என்ற பெயரில் ஒட்டுமெத்த அதிரையின் அமைதிக்கு வேட்டு வைக்கு விதமாக இருந்தது ஒரு சில விசமத்தனமான அதிரை கால்பந்தாட்ட ரசிகர்களின் செயல்பாடுகள். ஏதோ ஒரு மீன் பெயரை சொல்லி ஒரு சாராரை சாடுவது, எல்லோரையும் எரிச்சலூட்டும் தேவையற்ற விசில் சாதனங்கள் மூலம் சத்தத்தை ஏற்படுத்துவம் என்று மாறி மாறி தங்களின் எனர்ஜ்ஜியை வீணடித்துக்கொண்டிருந்தது தான் மிச்சம். இவர்கள் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டிருந்ததில் சாதித்தது என்ன? எமக்கு தெரிந்தது இவர்கள் சாதித்தது மேலும் பகைமையே..
கேரளா அணி வெற்றி பெற்று தனக்கான பரிசை எடுத்துக்கொண்டு தங்களின் ஊருக்கு சென்று விடுவார்கள். விளையாட்டில் ஒரு அணியை ஆதரிப்பதும், ரசிப்பதும் என்பது ஒரு வகை, இது எல்லா இடங்களில் நடப்பதே. அதுவும் செந்தஊர் சார்ந்த அணி விளையாடினால் எதிர்ப்பலைகள் அதிகம் இருக்காது. ஆனால் இன்று அதிரை AFFA அணி விளையாடியிருந்தும் எதிர்ப்பலைகள் மிக அதிகமே. காரணம் ஏனோ தெளிவாக தெரியவில்லை.
அடுத்த பதிவில் இதற்கான காரணத்தை பற்றி விளக்குவோம்.
மிக முக்கியமான மேட்டர் என்னவென்றால். ஆட்டம் முடிவடைந்து மஃரிப் தொழுகைக்கு பாங்கு சொல்லியும் பரிசளிப்பு விழா நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அட்லீஸ்ட் தொழுகை முடிவடையும் நேரம் வரையிலாவது நிறுத்திவிட்டு பிறகு இந்த விழாவை நடத்தியிருக்கலாம். காரணம் ஒலிபெருக்கி சத்தம், அதிரையில் அநேக பள்ளிகளின் மஃரிப் தொழுகைக்கு இடையூராக இருந்தது மட்டும் எல்லோராலும் உணரப்பட்ட உண்மை. திருந்துவார்களா...
அடுத்து ஒரு அதிரை செய்தியில் தொடர்ந்து சந்திக்கலாம்....
அதிரைநிருபர் குழு.
காணொளி மற்றும் புகைப்படங்கள்: Mohamed, SIS Computers, Adirai. Phone: + 919842653248
புகைப்படங்கள்:
இளம் கால்பந்து ரசிகர்கள்
மேடையில் முன்னால் கால்பந்து வீரர் ஜனாப். கோடை இடி காசிம் அவர்கள்.
13 Responses So Far:
இந்த கால்பந்து விளையாட்டு செய்திகள் மற்றும் மேலும் புகைப்படங்கள், காணொளிகள் நாளை வெளியிடப்படும்.
விளையாட்டு(க்கள்) விளையாடுமிடங்களோடு இருந்திட வேண்டும் அவற்றின் மனம் கவர்ந்த விளையாட்டையும் நினைவுகளையும் அசைபோடுவதில் என்றுமே ஆனந்தம் தான் !
ஊர்நலனுக்கும், பந்தாட்ட வீரார்கள் சார்ந்திருக்கும் பகுதிகளை முன்னிருத்தி பிரித்தாலும் கோஷங்களிலும் வஞ்சக சூழ்ச்சிகளில் சிக்காமல் take it easy ஆக இருப்பதே இளைஞர்களுக்கு நல்லது !
எத்தனை நாட்களுக்குத்தான் இப்படிச் சாடிக் கொண்டிருப்பது !?
ம்ம்ம்ம் அடுத்து வேற என்ன விடுமுறைகள் என்றோ கழிந்து விட்டது... அடுத்து மாணவர்கள் தங்களை படிப்பிலும் அவராவர்கள் பள்ளி சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில் ஜொலிக்க வேண்டும் அங்கும்தான் உங்களின் விளையாட்டுப் போட்டிகளுக்கு அங்கீகாரம் முழுமையாக கிடைக்கும் !
புகைப்படங்கள் "பளிச்" ! கானொளிக்கும் "ஒரு சொட்டு" ! SIS-Computer well done !
நல்ல காட்சிகளும் வேண்டுகோளும் விழிப்புணர்வும்.
20 ஆண்டுகளுக்கு முன் இதே விளையாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களால் அடைந்த பேரிழப்பை எண்ணி ஆதரவு,ரசிப்பு, எதிர்ப்பு எல்லாமே அளவோடு அதோடு முடித்துக்கொள்ள வேண்டும்.
Well done on your video shooting in Foot ball match in Adirai Nirubar. It is a good video to remember. Next time if you take crowd , walk little slow with camera so that we can see all the people. The sound disturbance won't be there if you focus the camera with the flow of wind.
நேரில் பார்த்ததைவிட காணொளியில் பார்ப்பதே மிக பிரமாதமாக உள்ளது.
நன்றி SIS-Computer
காலம் காலமாக அதிரைக்கும் கால்பந்தாட்டத்துக்கும் ஏதோ நெருங்கிய தொடர்புண்டு, எத்தனையோ போட்டிகள் FIFA வுக்கு சமமான முறையில் நடந்தேறிருக்கு. பொழுதுப்போக்கவும், ரசிக்கவும் தானே தவிற பகைமை பாராட்டுவதிலிருந்து தவிர்க்க வேண்டும். மேலும் உலகத்தரத்துக்கு இனையாக இனி வரும் போட்டிகள் நடைபெற வாழ்த்துக்கள். மிக சிறந்த காணொளி :)
கால் பந்தாட்டத்தின் வீடியோ மற்றும் புகை படம் அருமை அதிரை நிருபரில் கலக்கல் ஆட்டம்தான் போங்க
மிக சந்தோசம் அதிரையில் நடந்த கால்பந்து இறுதி போட்டியில் நாம் முதல் பரிசை அடையவில்லையென்றாலும் நம்மூர் மக்கள் சில நபர்களை தவிர அதிகமானவர்கள் அதிரை A F F A வின் மீது மரியாதை வைத்திருக்கிறாகள்
By
Zubair (AFFA) From AlBAraha
welldone adirai nirubar
//மேடையில் முன்னால் கால்பந்து வீரர் ஜனாப். கோடையாடி காசிம் அவர்கள்.//
கோடையாடி அல்ல. கோடை இடி!
சமீபத்தில் வஃபாத் ஆன எங்கள் அப்பா OKM நெய்னா முஹம்மது அவர்களும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்+நடுவர்.
சகோதரர் அதிரைக்காரன் : எழுத்துப் பிழையை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி அதனை திருத்தம் செய்திட்டோம்.
OKM அவர்களைப் பற்றி கேள்விபட்டிருக்கிறோம் அவர்களையும் இங்கே நினைவு கூர்ந்தமைக்கும் நன்றி !
அஸ்ஸலாமு அலைக்கும். கால்பந்து ஆட்டசெய்தி மகிழ்வில் ஆழ்தினாலும் சில பார்வையாளர்களின் கோனல் பார்வையால் நம் சமூகத்தின் ஒற்றுமை உதைக்கப்படுமோ என அஞ்ச வேண்டியதாகிவுள்ளது. கால்பந்து முடியும் வரை நம் சமுகத்தை காபந்து பன்ன வேண்டிய நிலையில் நாம் இருப்பது துரதிஸ்டமே. இனி வரும் காலங்களில் இதை மனதில் நிருத்தி நம் பார்வையாளர்கள் கண்ணியம் காப்பார்களா?
நேரில் பார்த்த உணர்வு ..விளையாட்டை விளையாட்டாக எடுத்துகொள்ள வேண்டும்..வாழ்த்துக்கள் அதிரை நிருபர்
Post a Comment