"பாலைவனத்தில் ஒரு சோலைவனம்”
(A DESERT SAFARI memories)
சோலையென ஏதுமின்றி
பாலைவனம் படுத்திருக்க
சேலையென செம்மணலை
மேலேயது போர்த்தி யிருந்தது!
நாலு சக்கர உந்தலிலே
நகர்ந்தன ஊர்திகள்
நாட்ப்பட்ட கனவோடு
நாங்களும் ஊர்தியுள்ளே!
நீர்கிழிக்கும் விசைப்படகாய்
மணல் விலக்கிய வாகனம்
வளைந்து நெளிந்த ஓட்டத்தில்
மணல் பொழிந்தது மழையெனவே!
மணல் முகட்டு உச்சியிலே
தலைகீழாய் வீழ்வதுபோல்
திகிலடித்தது நெஞ்சுக்குள்ளே!
பைத்தியம் பிடித்ததுபோல்
பாம்பெனவே நெளிந்தபோது
குடல்புறட்டி குமட்டினாலும்
குதூகலம்தான் ஊர்திக்குள்ளே!
பாலைவனப் பயணம்
பரவசமாய் முடிய
இளைப்பாறும் கூடாரத்தில்
மெல்லச் சிவந்தது கீழ்வாணம்!
ஒட்டக ஏற்றமும்
மகிழ்ச்சியில் திளைக்க
பாலை பசுமையானது!
அரிக்கேன் விளக்குகளால்
அலங்கரித்த அரங்கமும்
அதைச் சுற்றியமைந்த
அரேபிய இருக்கைகளும்!
பிரமிடு நாட்டுக்காரனின்
பிரமிப்பூட்டும் நடனமும்
உணவும் உற்சாகமுமாய்
உலகம் வித்தியாசப்பட்டது!
உடலை உதிர்த்துப் போட்டதுபோல்
அங்கங்கள் வலித்தாலும்
உள்ளமெல்லாம் இனித்தது அந்த
பாலைவனப் பயணத்தில்!
-சபீர்
Sabeer abuShahruk,
18 Responses So Far:
> அதிரைக்கு அந்திமாலை தந்த எமக்கு போட்டியாக பாலைவனத்துக்கும் அந்திமாலையா?அங்கே வாடா, மல்லியப்பூ, சூடான வறுத்த கடலையெல்லாம் கிடையாதா?சிட்டுக்குருவிக்கு பதில் பாலவனத்தில் காவா குறுக்கிடுமே!
> பாலைவனத்தில் பதித்த பாதச்சுவடுகளால் கால் வலி(பல்வலி மேட்டர் இருக்க)புழுதியாய் பறந்திருக்கனுமே!எப்படியோ பாலைவனக்கவியும் புகைப்படக் கலையும் சூப்பர்தான்.
> அடுத்து இதனால் எற்பட்ட அங்க வலி தொடர்பான நகைசுவை மேட்டர் கட்டுரையையும் எதிர்பார்க்கிறோம்.
கவிதை நன்று ! அருமை என்று சொல்வதைவிட வரிகளோடு அனுபவப்பட்டனில் ஒருவனாக இருப்பதில் தித்திப்பே !
------ மீள்-பின்னூட்டம் ----- மலேசிய மழையும் டிராஃபிக்ஃ ஜாமும் ---- துபாயின் தீஞ்ச வாடைக் காற்றிலிருந்து....
///[எதோ தீஞ்ச வாடை வருதே,,,,துபாயில் வெயிலில் அவதிப்படும் ஆட்களின் வயத்தெரிச்சலா...'கடும் மழை' என்ற வார்த்தையை படித்த பிறகு...]//
நேற்று டெஸர்ட் சமையல் கட்டில் நின்றது நீங்கதானா காக்கா ? தீஞ்சிருந்தாலும் செம டேஸ்ட் காக்கா !
உங்க காட்டில் மழை என்றால் நாங்களிருக்கும் நாட்டில் மணல் மலைகள்... ஏறினோம் இறங்கினோம்... ஆனால் டிராஃபிக் ஜாம் இல்லை !
இனிப்பு சாப்பிடலாம் வாங்க காக்கான்னு கவிக் காக்கவை அழைத்தேன் இனிப்போடுதான் இருக்கிறேன் என்றார்கள் எறும்பு மொய்க்காம பார்த்துகிட்டுன்னு சொன்னது டெஸர்ட் ஹூமர் !
டெஸர்ட் சஃபாரி(குதிரை)யிலிருக்கும்போது என் தம்பி மகன் சொன்னான் ஓட்டுநருக்கு வழி தெரியவில்லை அதான் இங்கேயே சுத்திகிட்டு இருக்கார்னு !
எங்களைப் பார்த்து பயப்படாத ஒட்டகம் ரொம்பவே பிடிச்சிருந்தது ஆனால் ஏறி உடகார்ந்து சவாரி செய்தால் எந்திருக்காதோ என்று எங்களுக்குத்தான் பயம் இருந்தது !
யாசிரின் மகன் மணல்மேட்டு எட்ஜிலிருந்து என்ஜாய் என்று ஓடும் மணலை ஓரங்கட்டப்பார்த்தார் !
இடுப்பை மடிக்க/ஒடிக்க ஆரம்பித்ததும் துடிப்பானவங்க அங்கேயிருக்கட்டுமென்று மணல் படிக்கட்டில் வந்து அமர்ந்து கொண்டேன்...
எங்களோடு வாந்தியும் வருமென்று இடம் ஒதுக்கி வைத்திருந்தோம் ஆனால் வர மறுத்து விட்டது...
இதுக்குன்னு ஒரு பதிவு போடனும்... அங்கே மழைன்னு சொன்னதும் எங்க பாலை(விசிட்) கண்ணுக்கு முன்னாடி வந்து கண்ணாடி மாட்டிடுச்சு காக்கா !
ஆகவே... மழை பேய்ந்ததும் காய்ந்திடும்... எங்க வெயில் என்னைக்குமே வெயில்தான் காக்கா !
இப்படி பாலைவனப்படங்கள் எல்லாம் "பயாஸ்கோப்" மாதிரி எப்படி வரவைப்பது?...ரொம்ப வேகமாக மாறுவதை எப்படி சரி செய்வது?
// "பயாஸ்கோப்" மாதிரி எப்படி வரவைப்பது?...ரொம்ப வேகமாக மாறுவதை எப்படி சரி செய்வது? //
அசத்தல் காக்கா: இதில் ஏராளமான மென்பொருள்கள் இருக்கின்றன, இங்கே ஏற்றப்படிருக்கும் GIF அனிமேஷன் ஃபல் போட்டோஷாப்பில் உருவக்கப்பட்டது... அப்படி உருவாக்குவது ஒன்றும் பர்ஜ்கலிஃபாவுக்கு அஸ்திவாரம் போடும் வேலையல்ல ரொம்ப சிம்பிள் என் மகனுடைய அ.ஆ.இ.ஈ... வை எப்படி காப்பியடிப்பதோ அதேபோல்தான்.
வந்து மறையும் படத்தின் வேகத்தை குறைக்கலாம் அதிலிருக்கும் ஃபிரேம் ஒவ்வொன்ன்றையும் 0.5செகண்டு இருக்கு அதனை 1 அல்லது 2 அல்லது அதற்குமேல் மாற்றினால் ஆங்காங்க நின்று உங்களையும் டெஸர்ட் சஃபாரி அழைத்தும் செல்லலாம்... :)
சஃபாரி செஞ்சதை கூட இப்படி கவிதை வடிவில் சரமாரியாக வடிக்க முடியுமா ? வியக்கவைக்கிறது உங்கள் கவித்திறன் கவிக்காக்கா....அருமையான வரிகள் உவமானங்கள்......கடைசியில் வயிறு ஆட்டம்போட்ட விளாதிமிர் புட்டினின் திறமையை நீங்கள் எழுதாமல் விட்டது தப்பு காக்கா
//விளாதிமிர் புட்டினின் திறமையை நீங்கள் எழுதாமல் விட்டது தப்பு காக்கா //
அதுவரைதான் அ.நி. எல்லை ! :) அதுதானே ஸ்பெஷாலே அ.நி.க்கு !
//
அரிக்கேன் விளக்குகளால்
அலங்கரித்த அரங்கமும்
அதைச் சுற்றியமைந்த
அரேபிய இருக்கைகளும்!/// ரம்மியமான தருணம்
ஒன்றுமறியா என் 3 1/2 வயது மகள்.அந்த லேண்ட் குருஸர் பாலைவன மேடுகளின் தவளைபோல் குதித்து குதித்து சென்று கொண்டு இருக்கும்போது...டிரைவரை பார்த்து ”அன்கிள் உங்களுக்கு ஓட்டத் தெரியவில்லை...ரோட்டில் வண்டியை ஆட்டாமல் ஓட்டி போங்கள்” என்று மழலை கலந்து சொன்னதும்...அந்த God's Own Country-(அப்படித்தானே சொல்றாங்க அவருக )யை சேர்ந்த ஓட்டுனர் கலகலவென சிரித்துவிட்டார் அருவருக்கு தமிழும் அறியும்மாம்ம்
//”அன்கிள் உங்களுக்கு ஓட்டத் தெரியவில்லை...ரோட்டில் வண்டியை ஆட்டாமல் ஓட்டி போங்கள்” என்று மழலை கலந்து சொன்னதும்...//
மழலைகளின் டைமிங் கமெண்ட்ஸ்தான் அங்கே ஆளுமை செய்தது ! மெய்யே...
எனது தம்பி மகன் சொன்னான் "அதோ ஒரு பில்டிங்க் தெரியுது என்று !"
"நானும் அட எங்கே(டா)ப்பா இங்கே அப்படி ஒன்றுமில்லை ஏன்(டா)ப்பா சும்மா சொல்கிறாய்"" என்றேன்..
அதற்கு "உங்களுக்கெல்லாம் பக்கத்தில் சென்றால்தான் தெரியும் எங்களுக்கு எங்கிருந்தாலும் தெரியும்" என்று ! (பாலைவன மணல் மேடுகளினூடே)
///அதுவரைதான் அ.நி. எல்லை ! :) அதுதானே ஸ்பெஷாலே அ.நி.க்கு !//அதனால் தானே இன்று எல்லையில்லாமல் அனைவரிடமும் அ.நி அந்நியோன்மாக சென்றடைந்து கொண்டு இருக்கிறது...keep it up A.N...i was just pulling kavikakka leg :)
சோலையென ஏதுமின்றி
பாலைவனம் படுத்திருக்க
சேலையென செம்மணலை
மேலேயது போர்த்தி யிருந்தது!
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். முதல் பந்திலேயே சிக்ஸ்சர்.
பாலை நிலத்தை பற்றி கவி ஊற்றாய் வார்தைகளும் . பாலையை பாவையாய் பாவித்து, செம்மணலை அவள் மேல் போர்த்தியிருக்கும் சேலையாய் வர்னித்த விதம் சோலையாய் சுகந்தம் வீசுது.
நாலு சக்கர உந்தலிலே...........
பாலைவனப் பயணம்
பரவசமாய் முடிய
இளைப்பாறும் கூடாரத்தில்
மெல்லச் சிவந்தது கீழ்வாணம்!
------------------------------------------------------------
குதூகலமாய்(முன்காணப் பொருளைக் காண்டால் வரும் மகிழ்ச்சி)!தொடங்கிய காலைப்பொழுது பின் அவஸ்தையுடன் கூடிய பேரின்பம் பின் ஓய்வை நோக்கும் உடல் நிலை குடிலில் இருந்து பார்த்தால் மெல்ல சிவக்கும் கீழ்வானம் அது குடிலுக்கே தாவாரமாய் காட்சிதரும் அழகு நல்லதொரு மாடல் ,ஆடலுக்கும், பாடலுக்கும் ஆனாலும் அந்த அனாச்சார சமாச்சாரம் தவிர்துவிட்டு கானும் போதில் பாலையும் இதமாய் இதயம் நிரம்பும்.
ஒட்டக ஏற்றமும்
மணல் வண்டி ஓட்டியும்
மகிழ்ச்சியில் திளைக்க
பாலை பசுமையானது!
அரிக்கேன் விளக்குகளால்
அலங்கரித்த அரங்கமும்
அதைச் சுற்றியமைந்த
அரேபிய இருக்கைகளும்!
பிரமிடு நாட்டுக்காரனின்
பிரமிப்பூட்டும் நடனமும்
உணவும் உற்சாகமுமாய்
உலகம் வித்தியாசப்பட்டது!
உடலை உதிர்த்துப் போட்டதுபோல்
அங்கங்கள் வலித்தாலும்
உள்ளமெல்லாம் இனித்தது அந்த
பாலைவனப் பயணத்தில்!
------------------------------------------------------------------
பாலை நிலத்திலும் இயல்பான ஒட்டக ஏற்றம் , மணல் வண்டி ஓட்டியு வாட்டம் போக்கும் அருமையான காட்சிகள். சுவையான் இரவு உணவும் ரம்மியமான விளக்கின் ஒளியும். அமைதியாய் அமர்ந்து இன்பம் பருக வேண்டிய பொழுதும் ,மெய்வருத்த கூலியாய் நல் பொழுபோக்கும் பாலையை வன பயணத்தை பழுமையாய் ஆக்கிய விதம் நல்ல தொரு கவியால் நலமாய் விவரிக்கப்பட்டுள்ளது. இங்கே புகைப்பட கவிதையும் இலவச இணைப்பாக கல்யாணவீட்டில் கொடுக்கப்படும் பூவந்தியெனும் கற்கண்டு பொதையுண்ட லட்டு திகட்டாத பேரின்பம்.
கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு
வா.. வின் ஓவியம்
அதிரை வாசி,
அதிகம் வாசி!
அறிவை நேசி!
ஆழ்ந்து யோசி!
அளந்து பேசி,
அடக்கம் நேசி!
அறிவாய் உனக்குத்
துன்பம் தூசி!
உமர்தம்பிஅண்ணன்
நன்றி : (உமர்)தென்றல்...
அதிரையில் வசி
அழகியல் ரசி
அடுப்பவர் பசி
ஆற்றி பின் புசி
உக்காந்துப்போனதுக்கே இப்படி குதூகலிக்கும்போது தானே வண்டியை ஓட்டிப்போனால் மனது எப்படியிருக்கும், சான்ஸ் கிடைக்கும்போது அனுபவித்துப்பாருங்க..
அருமையான வரிகளில் உள்ளமும் அந்த அரேபிய ஆட்டத்தினூடே
அஸ்ஸலாமு அலைக்கும்,
சபீர் காக்கா மற்றும் அதிரைநிருபர் வாசக நேசங்களே...
ஓராண்டு பாலைவனத்தின் பசுமை நினைவுகளை சுமந்து, இன்று அதிரை வந்திறங்கிட்டேன். அல்ஹம்துலில்லாஹ்.
எல்லா பதிவுகளையும் படிக்க முடிந்தது ஆனால், பயண நேரமென்பதால் கருத்திட முடியவில்லை.
பாலைவனத்து பயணம் கவிதை மீண்டும் ஒரு முறை ல பாலைவனத்துல பயணம் செய்த உணர்வை தந்து காக்கா. நன்றி
Post a Comment