Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் தர்கா கந்துரியும் கோவில் திருவிழாவும் 7

அதிரைநிருபர் | June 15, 2011 | , , ,

அன்பான வாசக நேசங்களே..

ஒரு சிறிய துவக்கமாக அதிரை பருவகால நிகழ்வுகளை தொகுத்தளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை வாசக நேசங்கள் அறிவீர்கள். கால்பந்தாட்டம் நிகழ்வுகளை உங்கள் யாவரின் பார்வைக்கு கண்ணோட்ட காட்சிகளாய் கொண்டு வரும் முயற்சியில் தொகுப்பு தகவல்கள் உங்களை கவர்ந்திருக்கலாம்.

அதிரையில் நடைப்பெறும் சில பருவகால நிகழ்வுகளை உங்கள் கண்முன்னே கொண்டுவரும் தொடர் முயற்சியே கீழ் கானும் செய்திகள்.

அதிரை மேலத்தெரு மற்றும் கீழத்தெரு சந்திப்பில் இருக்கும் ஹாஜா அலாவுதீன் அப்பா வலியுல்லாஹ் (காட்டுப்பள்ளி) கந்தூரி நிகழ்வும். அதிரை கரையூர் தெரு மாரியம்மன் கோவில் திருவிழா என்ற நிகழ்வும் நடைப்பெற்றது. இதற்காக ஊரின் இரு பகுதிகளிலும் எவ்வித அசம்பாவிதங்கள் நடைப்பெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் இருந்தது. இதுவும் முக்கியம் தான் காரணம் இது போன்ற நிகழ்வுகளே சமூக விரோதிகள் தங்களின் குறுக்கு புத்திக்கொண்ட சமூக விரோத செயல்கள் அரங்கேற்றும் பயிற்சி களங்கலாக இருந்திடும். கந்தூரியாகட்டும் திருவிழாவாகட்டும் மக்கள் அதற்கு செல்வது சரியா தவறா என்ற வாதம் ஒரு புறமிருந்தாலும். இவற்றை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் அதிரையில் நிகழ்ந்தேறியது முந்தைய காலங்களில் என்பதை யாரும் மறுக்க முடியாது. சரி முக்கிய விசயத்துக்கு வருவோம்...

இரண்டு நாட்களாக மெயின் ரோடு, பேருந்து நிலையம் அருகில் இருக்கும் அல்-அமீன் பள்ளி அருகில் பக்திப்(?) பாட்டும், சினிமா பாட்டு ஒலி பெருக்கி சத்தமே அதிகம் கேட்கிறது. காரணம் கரையூர் தெரு மாரியம்மன் கோவில் திருவிழாவாம். இது எத்தனை நாட்களுக்கு தொடரும் என்று தெரியவில்லை. திரைப்பட பாடகர்களின் வருகை என்பதால் அறிவிப்புகள் அலற வைப்பது போல் இருந்தது. பக்தகோடிகளுக்கு அல்லாமல் பொது மக்களுக்கும் அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார் அறிவிப்பாளர். காரணம் பொதுவான சினிமா பாடகர்கள் மனோ மற்றும் கங்கை அமரன் வருகையே!.

அவ்வழியே கடந்து செல்லும்போது ஒலிபெருக்கியின் சத்தத்திற்கிடையே சிறிது நேரம் கழித்து ஓர் பேச்சாளர் பேச ஆரம்பித்தார். ஓம் நமச்சியவாயம் என்ற சொல்லே உலகின் தலைச்சிறந்த சொல், இது தங்களின் மதத்திற்கு பெருமை சேர்க்கிறது. இந்த சொல்லாலே தங்களின் மதம் உலகிலேயே தலைச்சிறந்த மதமாக திகழ்வதாக கூறினார். ஆச்சரியமான அந்த சொல் எப்படி அவர்களின் மதத்தை உலகின் தலைசிறந்த(?) மதமாக உருவாக்கியது என்பதை அந்த பேச்சாளார் விளக்கிச் சொல்லுவார் என்று எதிர்ப்பாத்து நடை தளர்த்தி காத்திருந்ததால் நம் நேரம் விரையமானதே மிச்சம். கடைசிவரையில் அந்த மனுசன் சொல்லவே இல்லை.

வார கணக்கில் அதிகாலை முதல் நல்லிரவு வரை இப்படி சினிமா பாட்டையும், பக்திப் பாட்டையும் ஒலிபரப்பி அடுத்தவர்களுக்கு இடையூறு தருகிறோம் என்ற ஒரு துளிச் சலனம் கூட இதன் ஏற்பாட்டாளர்களுக்கு இருக்குமா என்பது தெரியவில்லை. இறைவன் தான் இது போன்ற மக்களை நேர்வழி படுத்தனும்.

இதே நிலை தான் காட்டுப்பள்ளி கந்தூரிவிழாவிலும். ஒருவாரமாக காலை முதல் நல்லிரவு வரை E.M. ஹனிபா பாடல்களும் மவ்லூது அரபிக் கவிபாடல்களும் இசைத்துக் கொண்டே இருந்தார்கள். இவைகளின் அர்த்தங்கள் மக்களுக்கு புரிந்ததோ இல்லையோ செவிச் சுவர் கிழியும் சத்தம் மட்டும் அதிரையின் பாதி பகுதிகளில் உள்ள மக்களின் செவிகளை கிழித்துக்கொண்டிருந்தது என்று சொல்லுமளவுக்கு இருந்தது. காட்டுப்பள்ளியில் தொடர் மவ்லுத் ஓதி வரும் ஒரு சகோதரரை சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது. இதன் அர்த்தங்கள் தங்களுக்கு தெரியுமா என்று கேட்டால், அதற்கு அவர் "நல்லதை தானே ஒதுகிறேன் எனக்கு அர்த்தம் தெரியும் வரை இதை ஓதிக்கொண்டிருப்பேன், இங்கு ஓதுனா நார்ஸாவும் காசும் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். யா அல்லாஹ் இவர்களுக்கு மார்க்க தெளிவை தந்தருள்வாயாக என்று துஆ செய்ய மட்டுமே முடிந்தது.

நாட்கணக்கில் அதிகாலை முதல் நல்லிரவு வரை இப்படி ஹனீபா பாட்டையும், மவ்லுது பாட்டையும் போட்டு சாதராணமாக மக்களுக்கு தொந்தரவு தருகிறோம் என்ற ஒரு துளி சலனம்கூட இதன் ஏற்பாட்டாளர்களுக்கு இருக்குமா என்பது தெரியவில்லை. அவர்களின் (அகப்)பார்வையில் இச்செயல்கள் நற்செயலாக இருந்தாலும் எவ்வித நற்செயல்(?)களுக்கும் ஒர் அளவு உள்ளது இப்படியா மணிக்கணக்கில் ஒலிப்பெருக்கி ஒசையில் அடுத்தவர் காதுகிழிய இசைப்பது?

நிறைவாக ! இந்த வருடம் கந்தூரி நடத்துவதை நிறுத்தும் முயற்சியில் அதிரையில் உள்ள மார்க்க அறிஞர்கள் (!!) முயற்சி செய்தார்கள் அது தோல்வியில் முடிந்தது காரணம். கந்தூரியை ஷரீயத் முறையில் நடத்த அனுமதி (!!!) அளிப்பதாக ஊரில் உள்ள ஒரு பெரிய ஆலிம் சொல்லிவிட்டார்களாம். வழக்கம் போல் எந்த மாற்றமும் இல்லாமல் நடத்தது காட்டுப்பள்ளி கந்தூரி. அட ! இதுதான் ஷரீயத் முறைப்படி நடைப்பெறும் கந்தூரியா ???

இந்த வருடம் கந்தூரி கூ(ட்)டு இரவை முன்னிட்டு அதிரையில் உள்ள அநேக ரொஸ்டொரன்டுகளில் ஸ்பெஷல் கொத்துரொட்டி /கொத்துப்பரோட்டா போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. காட்டுப்பள்ளி முதல் போஸ்டாபிஸ் வரை கிட்டத்தட்ட 10 கடைகளுக்கு மேல் கொத்துப் புரோட்டா போடும் கொத்துச் சத்தம், கரையூர் தெரு கோவில் திருவிழா ஒலிபெருக்கி சத்தத்தைவிட அதிகமாகவே இருந்தது. ஒரு சில வீடுகளில் நேற்று முன்தின இரவில் இரண்டு வகை சாப்பாடுகள் 1) கந்தூரி சாப்பாடு (கொத்துப் புராட்டா) 2) non கந்தூரி சாப்பாடு.

ஒரு (மார்க்க) கேள்வி(தாங்க) ! ஷிர்க்கை மூலதனமாக கொண்ட கந்தூரி விழாவை முன்னிட்டு ஸ்பெஷலாக கந்தூரிக்கென்று பெயரிட்டு செய்யப்பட்ட உணவை காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவது கூடுமா? கூடாதா?

மீண்டும் மற்றொரு சொல்லத் தூண்டும் அதிரை நிகழ்வுகளோடு சந்திக்கலாம்.

-அதிரைநிருபர் குழு.

7 Responses So Far:

அதிரைநிருபர் பதிப்பகம் said...

இரண்டு விழாக்களிலும் வேற்றுமையில் ஒற்றுமையைப் பார்க்கிறேன்!

- வாவன்னா

அதிரை முஜீப் said...

//கந்தூரியை ஷரீயத் முறையில் நடத்த அனுமதி (!!!) அளிப்பதாக ஊரில் உள்ள ஒரு பெரிய ஆலிம் சொல்லிவிட்டார்களாம்.//

இவ்வாறு அனுமதியளித்த அந்த ஆலிம் யார்?. இவரின் வீட்டில் இறந்தவர்களுக்கு ஏன் அந்த ஆலிம், இதே போல் ஷரியத் அடிப்படையில் கந்தூரி எடுக்கவில்லை?. இது போன்று அனுமதியளிக்கும் ஆலிம்கள் என்றேனும் இந்த கந்தூரி விழாவிற்கு சென்று மார்க்க பயான் செய்ததுண்டா?. இதுபோன்ற ஆலிம்கள் தான் அப்பாவி மக்களை இன்றளவும் ஷிர்க்கின் பக்கம் துணை நிற்க தூண்டுகின்றார்கள்!.

இந்த கந்தூரிக்கு செலவழித்த பணத்தில் எத்தனை எத்தனை ஏழைக்குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தந்திருக்க முடியும்!. யோசித்தார்களா?.

மேலும் இது போன்ற விழாக்களுக்கு இன்னும் பொருளாதார உதவி செய்யும் நபர்களை எண்ணித்தான் நம் உள்ளம் வேதனையடைகின்றது!. கல்விக்காகவும், ஏழைகளின் மருத்துவத்திற்க்காகவும், சுன்னத் போன்ற காரியங்களுக்காகவும், பள்ளிவாசல் கட்டிட நிதி உதவி என்று கேட்டு சென்றாலும், வழங்க முன்வராத இந்த பாழடைந்த உள்ளங்கள் இது போன்ற அனாச்சாரங்களுக்கு மட்டும் உடனே வாரி வழங்குவது இன்றளவும் தொடர்கதையாகிவிட்டது.

எத்தனையோ தவ்ஹீது பிரசாரங்கள் செய்தும் இன்றளவும் அந்த பிரசாரங்களை எல்லாம் இது போன்ற விழாக்கள் விழுங்கி விடுகின்றது. இன்னும் வீரியத்துடன் தவ்ஹீது பிரசாரங்களை முன்னெடுத்து செல்ல வேண்டிய சமுதாய இயக்கங்கள் அவர்களுக்கு இடையிலே குரோதங்களை வளர்த்து அடித்து கொள்வதும் இந்த தவ்ஹீது பிரசாரத்தை பின்னோக்கி இட்டு சென்று கொண்டிருகின்றது.

இதை அறிந்தும் அறியாதவர்களாக இதன் தலைவர்களும், அவர்களை அப்படியே பின் பற்றும் அதன் தொண்டர்களும் இருப்பதும் நாளை மறுமையில் நான் உட்பட அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.மீண்டும் ஒரு முறை இந்த ஏகத்துவ எழுச்சி ஆரம்ப நிலையில் ஒரே தலைமையின் கீழ் எப்படி செய்யப்பட்டதோ அது போன்ற ஒரு கட்டத்தை அடைய எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரியட்டும்!.

//ஒரு (மார்க்க) கேள்வி(தாங்க) ! ஷிர்க்கை மூலதனமாக கொண்ட கந்தூரி விழாவை முன்னிட்டு ஸ்பெஷலாக கந்தூரிக்கென்று பெயரிட்டு செய்யப்பட்ட உணவை காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவது கூடுமா? கூடாதா?//

கடையில் காசு கொடுத்து வாங்கி உண்ணும் பொருளுக்கும், கந்தூரி என்ற பெயரில் தர்காவில் வழங்கப்படும் சந்தானம், பூ, மற்றும் நார்சாவிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு!. எனவே இதை போட்டு குழம்பி கொள்ளவேண்டாம்.

எனவே தாராளமாக நீங்கள் ஆட்டையை போடாமல் காசு கொடுத்து வாங்கி திங்கலாம். முடிந்தால் எனக்கும் ஒரு கொத்து பரோட்டா பார்சல்!.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கந்தூரிக்கென்று பெயரிட்டு செய்யப்பட்ட உணவை காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவது கூடுமா? கூடாதா?

அருமையான ஐயம்,
சிந்தனை சொல்லும் பதில்,
அது எந்தெப்பேரா இருந்தா நமக்கென்ன- டேஸ்டா,ஹலாலா இருந்தா நல்லா சாப்ட்டுட்டு அல்ஹம்துலில்லா சொல்லவேண்டியது தானே!

Yasir said...

இரண்டு திருவிழாக்களின் கான்செப்ட் ஒன்றுதான்..செய்தவங்கதான் வெவ்வேறு....கொத்துபரோட்டா எங்கே போட்டாலும் ஹாலால இருந்தா இரு கை பார்த்துட வேண்டியதுதானே....காசு கண்டிப்பா கொடுக்கணும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

same = same !! ஆனால் நமக்குத்தான் shame Shame !!!!!!

அப்துல்மாலிக் said...

கரையூர் தெரு ஊர்கோடியில் உள்ள கோயில் விழாவுக்கு அமீன் பள்ளிக்கருகில் ஒலிப்பெருக்கி வைக்கிறார்கள், அதை அகற்றும்படி கேட்கலாம் ஆனால் அதையே அவர்களும் திருப்பிக்கேட்டால்.....?
நம்மவீட்டை சுத்தம் செய்துட்டு அடுத்தவீட்டை சுத்தம் செய்ய சொல்லலாம். இதற்காக வாயை மூடிக்கிட்டு இருப்பதால் நாளை அவர்களின் (கரையூர் தெரு விழா) ஒலிப்பெருக்கு தக்வாபள்ளிமுனை வரை வர வாய்ப்பிருக்கு, அப்பவும் இதே மனநிலையில் காதைப்பொத்திக்கிட்டு போகவேண்டியதுதான்.

அப்துல்மாலிக் said...

அதிரை முஜீப் சொன்னது… இது போன்ற விழாக்களுக்கு இன்னும் பொருளாதார உதவி செய்யும் நபர்களை எண்ணித்தான் நம் உள்ளம் வேதனையடைகின்றது!// முற்றிலும் உண்மை, இதுக்கு பிடிவாதமும் ஒரு காரணம், இவர்களுக்குதான் முதல் தெளிவு பிறக்கவேண்டும். இந்த செலவுகளை ஏழைகளின் கல்விக்காக செலவுசெய்தால் பிற்கால சந்ததிகள் பயனடைய வாய்ப்பிற்கு

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு