Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குடி கெட்ட குடி.... 8

அதிரைநிருபர் | June 26, 2011 |

பணிக்குப்பின் பள்ளிக்கூடம் வந்து
என்னை பாசத்துடன் அழைத்து சென்று
வேண்டிய திண்ப‌ண்ட‌ம் வாங்கித்த‌ருவாய் என‌
தேட்ட‌மாய் இருந்து உன்னைத்தேடினேன்.

மாறாக‌ நீ காத்துக்கிட‌க்கிறாய்
சாராய‌க்க‌டையின் முன் சகதியாய்!
நான் வ‌ந்து அழைத்துச்செல்வேன்
உன்னை ப‌த்திர‌மாக‌ வீடு சேர்ப்பேன் என்று.

குடித்து விட்டு இப்ப‌டி க‌விழ்ந்து கிட‌க்கிறாயே!
என் எதிர்கால‌ க‌ன‌வுக‌ளை இப்ப‌டி க‌விழ்த்துவிடாதே!
வாழ்வில் வேத‌னையும், சோத‌னையும் எவ‌ர்க்கில்லை?
குடி பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வ‌ல்ல, தொட‌க்க‌ம் என‌ அறிய‌மாட்டாயா?

அம்மாவும் உன் வ‌ருகைக்கு ஆசையுட‌ன் காத்திருப்பாள்
அல்வாவுடன் ம‌ல்லிகைப்பூவின் ந‌றும‌ண‌த்திற்காக‌ அல்ல
சேதாரமில்லாத உன் பாதுகாப்பான‌ வ‌ருகைக்காக‌
த‌ம்பியும், த‌ங்கையும் உன் கைப்பையின் திண்பண்ட‌த்திற்காக‌

குடித்து, குடித்து நீ எந்த‌ப்பிர‌ச்சினையை தீர்த்தாய்?
க‌ட‌ன் வாங்கி குடும்ப‌த்தை திண்டாட‌ வைத்த‌து தான் மிச்ச‌ம்.
எங்க‌ளுக்கு வேண்டிய‌தை வாங்கித்த‌ரும் ஆசைத்த‌ந்தையாய்
நீ என்று மாற‌ப்போகிறாய் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் ந‌ல்ல‌ த‌ந்தைய‌ரைப்போல்?

வேண்டாம‌ப்பா குடித்த‌து போதும் இன்றே நிறுத்தி விடு!
நினைத்த‌தை சாதிக்க‌ உழைப்பின் ப‌க்க‌ம் திரும்பி விடு!
மாட‌ மாளிகையில் ம‌ன‌ப்புழுக்க‌த்துட‌ன் வாழ‌ வேண்டாம்
குடிசையில் குடும்ப‌த்துட‌ன் கொண்டாட்ட‌மாய் வாழ்ந்திடுவோம்.

நான் உன்னிட‌ம் ஆசைக்க‌திக‌மாக‌ என்ன‌ அப்ப‌டி வாங்கி கேட்டேன்?
நீ குடிக்கு கொடுக்கும் காசில் ந‌ம் குடும்ப‌மே சாப்பிட்டு விட‌லாம‌ல்ல‌வா?
ம‌ற்ற‌ குழ‌ந்தைக‌ளைப்போல் காரில் ப‌வ‌னி வ‌ர‌ ஆசை இருந்தும்
உன்னை நல்ல‌‌ அப்பாவாக‌ நாள் தோறும் பார்க்க‌ ம‌ட்டுமே ஆசைப்ப‌டுகிறேன்.

எங்கோ சென்று கொண்டிருக்கும் அவ‌ச‌ர‌ உல‌கில்
நீ ம‌ட்டும் ஐந்த‌றிவு பிராணியாய் இப்ப‌டி
குடித்து சாக்க‌டையில் க‌விழ்ந்து
என்ன‌ சாதித்தாய்? சிந்திக்க‌மாட்டாயா?

வெந்த‌ புண்ணில் வேலைப்பாய்ச்சாதே!
இந்த‌ பிஞ்சு ம‌ன‌சிற்கு வேத‌னையை கொடுக்காதே!
குடியால் உன் துக்க‌ம் அரை ம‌ணி நேர‌ம் தீரலாம்
குடிக்காத‌ ந‌ம் வீட்டின‌ர் தீர துக்க‌த்தில் மூழ்கும்.

உன் ஆரோக்கியக்கேடு ஒட்டு மொத்த‌ குடும்ப‌த்தின் கேடு
உன் ந‌ல‌னே எங்க‌ளின் லாபம் தரும் முத‌லீடு
நீ ந‌ல்ல‌ த‌ந்தையாய் என‌க்கும்
ந‌ல்ல‌ த‌லைவ‌னாய் அம்மாவிற்கும் என்றும் வேண்டும்.

இன்று ச‌ர்வ‌தேச‌ போதை ஒழிப்பு தின‌ம் ஆத‌லால் த‌மிழ் இணைய‌ த‌ள‌மொன்றில் வெளியான புகைப்ப‌டத்தை வைத்து ஏதாவ‌து எழுத‌ வேண்டுமென‌ எண்ணி எழுத‌ப்ப‌ட்ட‌வைக‌ளே மேலே வ‌ரைய‌ப்ப‌ட்ட‌ வார்த்தைக‌ள். என்றோ குடியின் கேடுக‌ளை ஆணித்த‌ர‌மாக‌ எடுத்துரைத்த‌ ந‌ம் மார்க்க‌ம் இன்று தான் உல‌க‌ம் அத‌ன் கேடுக‌ளை மெல்ல‌, மெல்ல‌ உண‌ர‌த்தொட‌ங்கி இருக்கிற‌து.

ஒரு கால‌த்தில் ப‌ள்ளி, க‌ல்லூரிக‌ளை க‌ட் அடித்து விட்டு சாதாரன ப‌ட‌ம் பார்த்து‌ வ‌ந்தாலே பெரும் குற்ற‌மாக‌ குற்ற‌ உண‌ர்வுட‌ன் உண‌ர‌ப்ப‌ட்ட‌ மாண‌வ‌ர்க‌ள் இருந்த‌ அக்கால‌த்தில் இன்று போதை பழ‌க்க‌ம் மாண‌வ‌ர்க‌ளையும் மெல்ல‌, மெல்ல‌ ஆட்கொண்டு வ‌ருவ‌து அதிர்ச்சி த‌ரும் ஆய்வின் முடிவாக‌ உள்ள‌து.

போதை பொருட்க‌ள் ஒழிப்பை எவ‌ர் முன்னின்று ந‌ட‌த்தினாலும் நாம் அதில் தாராள‌மாக‌ க‌ல‌ந்து கொண்டு இத‌ன் தீமைக‌ள் ப‌ற்று ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌தொரு விழிப்புண‌ர்வை கொடுக்க‌லாம்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

8 Responses So Far:

அதிரைநிருபர் said...

அதிரையில் குடி போதைக்கு அடிமையானவர்கள் இளம் வயதினரே என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி வருவது மிக வருத்தமே. இது தொடர்காக விரைவில் நம் அதிரைநிருபர் வலைப்பூவில் ஒர் பதிவு வெளிவரும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//போதை பொருட்க‌ள் ஒழிப்பை எவ‌ர் முன்னின்று ந‌ட‌த்தினாலும் நாம் அதில் தாராள‌மாக‌ க‌ல‌ந்து கொண்டு இத‌ன் தீமைக‌ள் ப‌ற்றி ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌தொரு விழிப்புண‌ர்வை கொடுக்க‌லாம். //

ஆம் ! "குடி"மகன்களின் போதை(ப்)பாதை அடைக்கப்பட வேண்டும் !

"குடி"காரனுங்களை விட பொடி"குடி"யன்கள் தலையெடுத்து தள்ளாடுவது ஊரில் கலக்கத்தை ஏற்படுத்திவருவது வேதனைக்குரியதே...

ஒன்றுபட்டு குடியோடு வெளியேற்ற வேண்டும் !

விழிப்புணர்வு ஆக்கம் தந்த MSM(n)க்கு நன்றி !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நாயன் காப்பத்தனும்.

> மேலுமொரு கெட்ட செய்தி;அதிரையில் மற்ற எல்லா நாட்களையும் விட பெருநாளன்று மது விற்பனை 30% ஜாஸ்தியாம்.இதற்கும் விழிப்புணர்வு தேவை.

sabeer.abushahruk said...

போதை ஒரு புற்றுநோய்
பூமியைப் பிடித்ததொரு தொற்று நோய்!

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
இப்போதைக்கு அடிமையாகாதே மானிடா!
இப்போதைக்கு மட்டுமல்ல எப்போதைக்கும். எப்பொழுதும்.
மது தீமைகளின் தாய் என்பது எம் பெருமானார் (ஸல்)அவரிகளின் வாக்கு!
தீமையை சுவைப்பதேன் உன் நாக்கு?
தீமையின் பாதையில் உன் போக்கு!
கேட்டால் சொல்வது பொய்சாக்கு!
மனக்கவலை அதனால் குடிக்கிறேன் என்பாய்! அனால்
குடியல்லவா நிரந்தரமாய் துன்பம் கொண்டிருக்கிறது.
பிறன் மனை நோக்கி பிற மாதுவிடம்
விழுவதும், கால்லிடறி மதுவிடம் விழுவதும்
கரையேராவிடாமல் உன்னை
அதிலேயே மூழ்கடித்து விடும் வி(ஷ)டம் அது.
விழித்துக்கொள்வாய்! சகோதரனே!
இறைவழிபற்றி, பாவமன்னிப்பு தேடுவாய்
தேருவாய்!!!.

Yasir said...

நல்ல விழிப்புணர்வு கவிதை....தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சாரயக்கடைகளிலும் ஒட்டவேண்டிய,பிரசுரமாக வினியோகிக்க வேண்டிய கவிதை...குடியால் குடி கெடும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சகோதரரே...

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின் அஞ்சல் வழி கருத்து
--------------------------

அஸ்ஸலாமு அலைக்கும் .

சகோ. யாசிரே:

மு.செ.மு வின் குடி போதை கட்டுரையை சாராய கடைகளில் ஓட்டினால் குடி (மஹா )காரர்கள்.நோட்டிசை நோக்க மாட்டார்கள்.அவர்களின் கண்கள் பாட்டிலை நோக்கியே இருக்கும்.ஒவ்வொரு குடி (மஹா)காரர்களின். மனதில் இந்த அருமையான கவிதையை ஆழமாக விதைக்க வேண்டும் .அப்பத்தான் தெளிவு பெறுவார்கள் இல்லையெனில்.போதையில்தான் இருப்பார்கள் .

Mohamed Abubucker

Yasir said...

வ அலைக்கமுஸ்ஸலாம் சகோ.முஹம்மது அபூபக்கர்...சில பேர் பாசிட்டிவ்வாக திங்க் பண்ணுவார்கள் சிலபேர் நேகடிவ்வாகவே திங்க் பண்ணுவார்கள்....நீங்கள் இரண்டாம் வகை என்று நினைக்கின்றேன் ..குடிகாரர்களை சந்திக்க அப்பாய்மெண்ட் எடுத்து வீட்டிற்க்கு செல்லமுடியாது...அவர்களை அவர்கள் கூடும் இடத்தில்தான் சந்திக்க வேண்டும்...சிந்திக்க சொல்லவேண்டும்... அட்டீஸ்ட் 1000 பேரில் 2 பேர் அந்த நோட்டீசை படிப்பார்கள் நிச்சயம் என்ற விதத்தில் சொன்னேன்...குடிகாரர்களில் 50% பேர் பிலேசர்கக்காக குடிக்க வரவில்லை வாழ்க்கையின் பிரஸ்ஸர்க்காகதான் வருகிறார்கள்..சோ அவர்களை சிந்திக்கவைப்பது கடினம் அல்ல...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு