Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை கால்பந்து விளையாட்டுச் செய்திகள் 22-06-2011 3

அதிரைநிருபர் | June 22, 2011 | , , ,

அரங்கின் வடக்கு பகுதியில் சிகப்பு வண்ணச்சீருடையில் காலிகாட் கேரளா அணியினரும் அரங்கின் தெற்கு பகுதியில் ஊதா நீள வண்ணச்சீருடையில் AFC ஆலத்தூர் அணியினரும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள், ஆட்டம் இன்னும் சிறுது நேரத்தில் ஆரம்பிக்க இருப்பதால் ஆங்காங்கே வருகைத்தரும் கால்பந்தாட்ட ரசிக பெருமக்கள் வெகுவிரைவாக மைதானத்தை நோக்கி வாருமாறு அன்புடன் வரவேற்கின்றோம் என்று அறிவிப்பு அரங்கத்தில் கூட்டம் நிரம்பிருந்தும் ஒலித்துக்கொண்டிருந்தது. நாமும் அரங்கின் உயரமான பகுதியை தேடிப்பிடித்து முன்னால் அதிரை கால்பந்து வீரர்களுடன் விளையாட்டை பார்வையிட சென்றோம்.


பிறகு நடுவர்கள் அரங்கினுல் இறங்கிவிட்டார்கள், டாஸ் போடுவதற்காக இரு அணித்தலைவர்களும் அழைக்கப்படுகிறார்கள் என்ற அறிவிப்பு மூன்று முறை வந்தும் தான் இரு அணித்தலைவர்களும் ஏதோ ஆஸ்கர் விருது வாங்க செல்வது போல் ரொம்ப பந்தா பண்ணிக்கிட்டு நடுவரை நோக்கி வந்தார்கள். வழக்கம் போல் டாஸ்போடப்பட்டது ஏதோ ஒரு அணி டாஸில் வென்றது, இடமாற்றம் ஏதுமில்லை. ஆட்டம் காலிகட் கேரளா அணிக்கும் நம்ம தமிழ் நாட்டிலிருக்கும் ஆலத்தூர் அணிக்கும் சரியாக மாலை 05-40 மணித்துளியில் ஆரம்பமானது.

அதிரை இளைஞர் கால்பந்துக்கழகம் நடத்தும் 17ம் ஆண்டு எழுவர் கால்பந்துப்போட்டியில் இன்று விருவிருப்பாகவே தொடங்கிய இன்றைய காலிறுதியாட்டம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது காரணம் இரு அணிகளும் மிகத்திறமையான வீரர்களை கொண்ட அணிகள். ஆட்டம் தொடங்கிய ஒரு சில வினாடிகளிலே கேரளா இரண்டு கோல் போட்டு முன்னனியில் இருந்தது. கேரளா அணிக்கு இன்னும் அதிரையில் நிறைய செல்வாக்கு உள்ளது என்னவோ உண்மை என்பதை என்றைய ஆட்டத்தில் கேரளா அணியை ஆராவாராத்துடன் ஆதரிக்கும் ரசிகர்களைவிட ஆராவாரமில்லாமல் ஆதரித்த ஒரு சில ஆர்வமிக்க கேரளா மண்ணின் மைந்தர்களின் வருகை ஊர்ஜிதப்படுத்தியது.


முதல் பகுதி நேர ஆட்டத்தில் தமிழ்நாட்டு கடற்கரையோற பகுதியில் கேரளத்து காற்றே வீசியது என்றாலும். இரண்டாம் பகுதிநேர ஆட்டத்தில் தமிழகத்தின் காற்று ஆலத்தூர் அணியின் வடிவில் வந்து ஒரு கலக்கு கலக்கியது ஐடிஐ மைதானத்தை. இருப்பினும் கேரளா அணி தன் மூன்றாவது கோலையும் ஆட்டம் தொடங்கியவுடன் போட்டது. விருவிருப்பாக இருந்த இரண்டாம் பகுதிநேர ஆட்டத்தில் ஆலத்தூர் அணி தொடர்ந்து இரண்டு கோல்கள் போட்டு கேரளா அணியை கொஞ்சமல்ல ரொம்பவே திணரடித்தது. ஆலத்தூர் அணியில் 5 விளையாட்டு வீரர்கள் பார்வேடில் வந்து விளையாடியது ரசிகளுக்கு மிக உற்சாகத்தை அடிக்கடி ஏற்படுத்திக்கொண்டே இருந்தது.

இறுதியில் கேரளா அணி உஷாராக விளையாடி மேலும் ஒரு கோல் அடித்து 4 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

மொத்தத்தில் இன்றைய ஆட்டம் விருவிருப்பாக இருந்தாலும், வெற்றிபெற்ற அணி கேரளாவாக இருந்தாலும், இன்றை போட்டியில் மிகச்சிறப்பாக இரண்டாம் பகுதிநேரத்தில் ஒரு கலக்கு கலக்கிய ஆலத்தூர் அணியே வெற்றிபெற வேண்டிய அணி. கால்பந்தாட்டத்தில் கோல் தானே வெற்றியை நிர்ணையிக்கக்கூடியது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

கடைசிய ஒரு மேட்டார் சொல்லனும்ல. டீசன்டா இன்னைக்கு கால்பந்தாட்டத்தை ரசித்த விளையாட்டு ரசிகர்கள், அதிரை AFFA அணி விளையாடும் ஆட்டத்திலும் எந்தவித பாகுபாடுமில்லாமல் நாகரீகமாக ஆட்டத்தை கண்டு ரசிப்பார்களா? என்பதே உண்மையான கால்பந்தாட்ட ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு. செய்வார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.

மீண்டும் அடுத்த ஒரு விளையாட்டுச் செய்தியில் சந்திக்கலாம்.

-- அதிரைநிருபர் குழு

3 Responses So Far:

Shameed said...

கால் பந்து செய்தியை படித்ததும் கடற்கரைத் தெரு ஜனாப் C.M.இப்ராகிம் அவர்களின் குரல் நினைவுக்கு வந்தது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கொஞ்ச நக்கல்,நடுநிலை,வேண்டுகோள் என வருணித்த விதம் இனிமை.
அதோடு இறைவனின் இயற்கை தந்த அழகிய அந்திமாலைக் காட்சிகளும்,வெள்ளைகளும் சூப்பர்தான்.

அதிரைநிருபர் said...

இன்று நடைப்பெற்ற இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில். காலிகட் கேரளா அணியும், கலைவானர் ஸவன்ஸ் கண்டனூர் அணியினரும் மோதினர். 4:1 என்ற கோல் கணக்கில் கேரளா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.

நாளைய தினம் அதிரை AFFA அணியும் காலிகட் கேரளா அணியும் விளையாடுகிறார்கள் என்பதை பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்ற அறிவிப்பு இறுதியாக வந்தது.

நாளைய தினம் (24.06.2011) நாமும் கால்பந்துவிளையாட்டு செய்தியுடன் உங்களை சந்திக்கிறோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு