Adirai Friends Football Association, AFFA கால்பந்து அணி இன்று மேலனத்தம் என்ற ஊரில் நடைப்பெற்ற கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் பிச்சினிக்காடு (தஞ்சாவூர் வீரர்களை கொண்ட) அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று முதன் முறையாக இந்த வருடம் கோப்பையை வென்றது.
அதிரையை அடுத்துள்ள மதுக்கூருக்கு அருகில் உள்ள கிராமம் தான் மேலானத்தம். கடந்த 40 ஆண்டுகளாக கால்பந்து தொடர்ப்போட்டி வருடா வருடம் நடைப்பெற்று வருகிறது. கடந்த ஒரு வாரகாலமாக நடைப்பெற்றுவரும் ஆட்டங்களில் நமதூரைச் சேர்ந்த நம்பர் 1 கால்பந்து அணியான AFFA கடந்த சில தினங்களாக விளையாடி அதிரையிலும், மேலனத்தத்திலும் அதிக வரவேற்பை பெற்றது.
அதிரையில் உள்ள விளையாட்டு திடல்கள் தரத்திற்கு இல்லாவிட்டாலும், கால்பந்து விளையாட தகுதியான இடத்தில் தான் இறுதிப்போட்டி நடைப்பெற்றது. உள்ளூர் ரசிகர்களைவிட அதிரை கால்பந்தாட்ட ரசிகர்களே அரங்கத்தை சூழ்ந்திருந்தனர்.
இறுதி போட்டி என்பதால், முக்கியஸ்தர்கள் ஆட்டதை துவக்கிவைத்தனர். AFFA அணியில் முக்கிய வீரர்களான ஜமால், ஹைதர் அலி, அஸ்ரப், புகாரி ஆகியோர் களமிறங்கினர். போட்டி ஆரம்பித்தது முதல் அதிரை அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ஆட்டம் ஆரம்பித்த 10வது நிமிடத்தில் அதிரை அணி தலைவர் அஸ்ரப் மிகச் சிறப்பான முறையில் தன் அணிக்கான முதல் கோலை அடித்தார். 12 வது நிமிடத்தில் பிச்சினிக்காடு அணியினர் பதிலுக்கு தங்களின் முதல் கோலை அடித்தனர். அதிரை ரசிகர்களிடையே ஒரே பரப்பரப்பு. அதிரை அணியின் சூப்பர் ஸ்டார் சீனியர் வீரர் ஹைதர் அலி தனக்கு கிடைத்த அருமையான FREE KICK வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்தி அதிரை அணிக்காக இரண்டாவது கோலை போட்டதும் அதிரை ரசிகர்களின் உற்சாக சத்தம் மேலனத்தையே உலுக்கியது என்று சொல்லுமளவுக்கு இருந்தது. முதல் பகுதி நேர ஆட்டத்தின் முடிவில் அதிரை அணி 2-1 கோல் கணக்கில் முன்னனியில் இருந்தது.
இடைவேளை நேரத்தில் ஒரு சில முன்னால் அதிரை கால்பந்து விளையாட்டு வீரர்கள் தங்களின் ஆலோசனைகளை அதிரை AFFA அணி வீரர்களிடமும், பயிற்சியாளரிடமும் பகிர்ந்துக்கொண்டனர்.
இரண்டாம் பகுதிநேர ஆட்டத்தில் அதிரை AFFA அணியில் முழு ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களின் அதிரையின் ‘ரொனால்டோ’ சைபுதீன் மிக அற்புதமான ஒரு கோலை அடித்து தன் அணியின் வெற்றியை உறுதி செய்தார். பிச்சினிக்காடு அணியினர் ஒரு சில மாற்றங்கள் செய்தும் அவர்களால் மேலும் கோல்கள் எதுவும் போட முடியவில்லை. காரணம் அதிரை அணியில் DEFENCE PLAYERS 3 பேரும் மிக திறமையாக தங்களின் ஆட்டத்தை வெளிபடுத்தினார்கள். இளம் நட்சத்திர வீரர் முபீஸின் ஆட்டம் குறிப்பிட்டு சொல்லும்படியாக இருந்தது, அதிரை அணியின் சூப்பர் ஸ்டார் ஹைதர் அலிக்கு மேலும் கோல் போடுவதற்காக 3 எளிதான வாய்ப்புகள் கிடைத்தது ஆனால் பிச்சினிக்காடு அணியினார் தங்களின் DEFENCE திறமையால் தடுத்துவிட்டனர். இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் AFFA அதிரை அணி பிச்சினிக்காடு அணியினரை தோற்கடித்து வெற்றிக்கோப்பையை தட்டிச்சென்றது.
மொத்தத்தில் இன்றைய கால்பந்துப் போட்டி அதிரை AFFA அணியின் ஆளுமையே போட்டியில் இருந்ததால் இந்த வருடத்தின் முதல் கோப்பையை மேலனத்ததில் வென்றுள்ளனர். இந்த தொடர்போட்டியின் சிறந்த விளையாட்டு வீரராக அதிரை அணியின் தலைவர் அஸ்ரப் தேர்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
விளையாட்டு போட்டி நடைப்பெறும் போதும் சரி, பரிசளிப்பு விழா நடைப்பெறும் போதும் சரி அதிரை விளையாட்டு ரசிகர்கள் மிகவும் கண்ணியமாக நடந்துக்கொண்டதை மேலனத்தம் ஊர்வாசிகள் வெகுவாக பாராட்டினார்கள். வெற்றியின் சந்தோசத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் அனைத்து அதிரை அணி வீரர்களும் ரசிகர்களும் ஊர் திரும்பும்வரை சில முன்னால் விளையாட்டுவீரர்கள் உடன் இருந்து எல்லோரையும் வழியனுப்பி வைத்தனர் என்பதை இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
வெற்றிபெற்ற அதிரை AFFA அணியினரை அதிரைநிருபர் குழு சார்பாக பாராட்டுகிறோம். எல்லா விளையாட்டும் விளையாடுங்க ஆனால் படிப்பை மட்டும் கோட்டை விட்டுடாதிய இளம் விளையாட்டு வீரர்களே என்ற வேண்டுகோள் செய்தியுடன் மீண்டும் ஒரு கால்பந்து விளையாட்டுக் கண்ணோட்டத்தில் சந்திக்கலாம்.
-- அதிரைநிருபர் குழு.
புகைப்படங்கள் இதோ...
15 Responses So Far:
imthiaz. uk. my best wishes to AFFA team
AFFAரம்!
வாவன்னா
*விளையாட்டு நல்லாத்தான் போவுது,வாழ்த்துக்கள்,கட்டுரை தொகுப்புக்கும்,வெற்றியாளர்களுக்கும்.
*கல்வித்துத்துறையுமுலோ இப்போ மாணவர்களிடம் விளையாடிக்கொண்டிருக்கு!
//*கல்வித்துத்துறையுமுலோ இப்போ மாணவர்களிடம் விளையாடிக்கொண்டிருக்கு! //
தம்பி ஜஹபர் சாதிக் : சரியான டைமிங் கமெண்ட்(ஸ்ஸூ) !
உயர் நீதி மன்றமா ? உச்ச நீதிமன்றமா ? ஒரு வேலை சிறப்பு நீதி மன்றம் அமைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை !
--------------------
யார் அந்த பெரிய மனுஷன் முதல் புகை படத்தில், வருங்கால அணித்தலைவரா?
வாழ்த்துக்கள் வீரர்களே
என்னப்பா அ.நி....கமெண்டரிலையும் கலக்குறியலஒய்..அப்படியே கண்முன் கால்பந்து நடப்பது போன்று இருக்குதுஓய்....வாழ்க உதையுடன்( கால்பந்து உதை தாங்க)
நம்மூர் விலையாட்டும் படிப்பும் மேம்பட வாழ்த்துக்கள்
இறுதிப்போட்டியை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய காட்சிப்பதிவு எனலாம்.
/**எல்லா விளையாட்டும் விளையாடுங்க ஆனால் படிப்பை மட்டும் கோட்டை விட்டுடாதிய இளம் விளையாட்டு வீரர்களே என்ற வேண்டுகோள்**/
மேலே மேற்கோளிட்டு காட்டப்பட்டிருக்கும் இரண்டு வரிகளும், சரியான தருணத்தில் ஞாபகப்படுத்தப்பட வேண்டிய விஷயம். !! விளையாட்டில் ஆயிரம் படிப்பினைகள் இருக்கலாம், ஆனால் படிப்பை விளையாட்டாக்கி விடக்கூடாது!!.
மேலநத்தம் ரெ.இயலரசன்...
மிக்க நன்றி.சேவை தொடர வாழ்த்துக்கள்...!-
மேலநத்தம் ரெ.இயலரசன்.
சிங்கப்பூர்.
My heartly wishes to my AFFA team...!!! I am proud be a AFFA player.. Unfortunately i am in saudi arabia.. I missed all the games in this year...
by
Abdul Majid..
1994 ம் வருடம் MAHIYA என்ற பெயரில் இதே விளையாடு மைதானத்தில் வின்னர் கப் வாங்கியதை இங்கே பெருமையுடன் நினைவு கூறுகிறேன். அப்போ கப் க்கு பதிலாக 1000 ரூபாய் பணம் பரிசாக கிடைத்தது.
அஸ்ஸலாமு அலைக்கும்,
நேற்றைய போட்டிகளை நேரில் சென்று பார்த்தவர்களில் நானும் ஒருவன்.
இளம் விளையாட்டு வீரர் முபீசின் சிறப்பான டிபன்ஸ் ஆட்டமே AFFA அதிரை அணியை வெற்றிப்பாதைக்கு தூக்கிச்சென்றது.
வாழ்த்துக்கள் AFFA அணிக்கு.
கலக்கல் வர்ணனை அசத்தலான புகைப்படங்களோடு.
மேலனத்தத்தில் நடைப்பெற்ற கால்பந்து இறுதிப்போட்டியின் காணொளி இதோ உங்கள் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது. ஆடியோ இல்லை.
சகோதரர் ஷாஃபாத் மற்றும் மாஜி ஆகியோரின் வேண்டுகோளுக்கு இனங்க இந்த முயற்சி.
கானொளி தந்த அதிரை நிருபர்'க்கு நன்றி...
Post a Comment