Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவனம் ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | June 17, 2011 | , ,

'ந‌ம் கையிலிருக்கும்
பொருளை த‌ன்
முழு ப‌ல‌த்தையும்
திர‌ட்டி பிடுங்க‌
முய‌ற்ச்சித்த‌ குழ‌ந்தை

அப்பொருள் கிட்டாத‌
ப‌ட்ச‌த்தில் அதை
விட்டுவிட்டு வேற‌
ஒன்றிற்கு க‌வ‌ன‌த்தை
திருப்பிவிடுகிற‌து

நாம்தான் அதையே
நினைத்துகொண்டிருப்போம்..'

- அஹ்மது இர்ஷாத்

இந்தக் கவிதையை ஆனந்த விகடனுக்காக எழுதியது அங்கே அனுப்புவதற்கு பதிலாக நம்மூர் அதிரை(விகடன்)நிருபருக்கு அனுப்பி அங்கே மிளிர்வதை காண்பதில் மகிழ்ச்சியே ! - அஹ்மது இர்ஷாத்.

11 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்:
அட! இப்படி கூட எழுத முடியுமா? என்னமோ போங்க நம்ம ஊரில் கவிஞர்கள் அதிகம் ஆகிவிட்டார்கள். சபிர்காக்கா,அப்துற்றஹ்மான்,சபாத்,இப்ப இர்ஸாத். நடக்கட்டும் , நடகட்டும் சிறக்கட்டும்,எட்டுத்திக்கும் நம் ஊரின் சிறப்பு பறக்கட்டும்.
கவனதை கவர்ந்த கவிதை!
குழந்தைகள் என்னவோ தெளிவாகத்தான் இருக்கின்றன
நாம் தான் குழப்பத்தில் கடந்த காலத்தில் நடந்த
தோல்விகளையும், நடக்காமல் இருந்த சந்தர்பங்களையும்
இன்னும் பிடித்துக்கொண்டு தீர்கமான முடிவு எடுக்காமல்
குழப்பதிலேயே நிகழ்கால வாய்புகளையும் வீனடிக்கிறோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

திரும்பிப் பார்க்க வைக்கும் கவிதை !

கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைவதனால் "அபிவிருத்தி" உண்டாகிறது !

வறட்டுப் பிடிவாதமும், முன்பகையும், மூட்டிவிட்ட பகையும் முண்டாசு கட்டவிடாமல் குழைந்தைகளின் கவனம் திரும்புவதைப் போல் திரும்பிட வேண்டியதே சரி !

sabeer.abushahruk said...

குழந்தையை வைத்து 
பெருசுகளுக்கு ஆப்பு
இந்த உணர்வைத் தர
எதுக்குங்கானும் யாப்பு?

அருமையான வார்ப்பு!

இர்ஷாத். கோபித்துக்கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கையில், கொஞ்சம் கொத்துவேலை...


ந‌ம் 
கையிலிருக்கும் பொருளை 
த‌ன்
முழு ப‌ல‌த்தையும்
திர‌ட்டி
பிடுங்க‌ முய‌ற்ச்சித்த‌ 
குழ‌ந்தை...

அப்பொருள் 
கிட்டாத‌ ப‌ட்ச‌த்தில் 
அதை விட்டுவிட்டு 
வேறு ஒன்றிற்கு 
க‌வ‌ன‌த்தை
திருப்பிவிடுகிற‌து

நாம்தான் 
அதையே
நினைத்துகொண்டிருப்போம்..!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

..நாம்தான்
அதையே
நினைத்துகொண்டிருப்போம்..! //

அதானே கொத்து வேலையை எல்லாம் ஞாபகத்தில் வைத்திருக்க மாட்டோமே !

அருமை கவிக் காக்கா !

பி.கு.ல் சொல்லியது பொருத்தமா ?

sabeer.abushahruk said...

//பி.கு.ல் சொல்லியது பொருத்தமா ?//

எஸ்.

அதிரையின் ஆனந்த விகடன். (விகடன் தாத்தா ஃபோட்டோவில கடைசிப் பின்னூட்டமிடுபவரைப் போட்டுடலாம்)

sabeer.abushahruk said...

வெல்கம் இர்ஷாத் தாத்தா, நீங்கதான் கடைசி!

அப்துல்மாலிக் said...

அருமை, நாலுவரியில் நிறைய பொருளடங்கியிருக்கு

Yasir said...

நினைத்து கொண்டிருப்பதால் தானே ல்லாவற்றையும் இழந்து காலத்தையும் வீணாக்கிகொண்டு இருக்கிறோம்...”நச்” என்ற கவிதை

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நாளைந்து வரியாக இருந்தாலும் நச்சுண்டு இருக்கு தம்பி இர்ஷாத்.

அ நி என் கவனம் கொஞ்சம் குறைவு இரண்டு நாளா அதான் பின்னூட்டமிடம் தாமதம்.

Ahamed irshad said...

வெல்கம் இர்ஷாத் தாத்தா, நீங்கதான் கடைசி!//

காக்கா...க‌டைசியிலே தாத்ஸ் ஆக்கிட்டீங்க‌ளே..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு