Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தோழனும் தோழியும் ! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | June 12, 2011 | , , ,

தோழனோடு தோழனும்
தோழியோடு தோழியும்
தொன்றுதொட்டு நட்பு

தோழனோடு தோழியும்
தோழியோடு தோழனும்
தொடுப்பதென்றால் தப்பு

பஞ்சோடு பஞ்சு
பாந்தமான நட்பு
நெருப்போடு நெருப்பு
நேர்த்தியான நட்பு
பஞ்சோடு நெருப்போ
பற்றிக்கொள்ளும் நடப்பு

தோழனுக்கும் தோழிக்குமே
தூய்மையான நட்பானாலும்
தனியறையைத் தவிர்
மூன்றாவதா ஷைத்தானுமே
மறைந்திருப்பான் உணர்!

அறத்துப் பாலும்
பொருட் பாலும்
பால் கலக்காப்
பழக்கத்தில் சாத்தியம்

பால் கலந்த பழக்கத்தில்
காமத்து பால் மட்டும்
பெரும்பாலும் சத்தியம்!

ஒன்றிரண்டு நட்புகளும்
உண்மையோடு பழகும்
பாதிக்குமேல் நட்புகளில்
பால் கலந்தால் திரியும்

தாய்மைக்கும் நட்புக்கும்
தூரம் ரொம்பு குறைவு
தரம் கெட்ட நட்பில்
துரோகம் மட்டும் வரவு

தோழன் தோழியையும்
தோழி தோழனையும்
உடன்பிறப்பாய் கருது

சகோதரத்துவ மெனும்
ஒழுக்கமான வாழ்க்கைக்கே
காத்திருக்கும் விருது

- சபீர்

27 Responses So Far:

அதிரை என்.ஷஃபாத் said...

"ஒன்றிரண்டு நட்புகளும்
உண்மையோடு பழகும்
பாதிக்குமேல் நட்புகளில்
பால் கலந்தால் திரியும்"

--ஆஹா... "பால்" திரிவதை "பா"வால் உரைத்த விதம் அருமை!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தொன்றுதொட்டு <நட்பு

தொடுப்பதென்றால் தப்பு

கவிக் காக்கா : இதற்குமேல் என்சொல்ல !? உங்களின் வரிகளே வைரமாக மிளிர்கிறது ! தீட்டவும் / திருத்தவும் என்றே !

Meerashah Rafia said...

அறத்துப் பாலும்
பொருட் பாலும்

பால் கலக்காப்
பழக்கத்தில் சாத்தியம்

பால் கலந்த பழக்கத்தில்
காமத்து பால் மட்டும்
பெரும்பாலும் சத்தியம்!


அஹா
கவி'ப்பால்..
பாலிய வயது தவிப்பை..
சொ(கொ)ட்டுதப்பா!!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அருமை அறிவுரைக் கவிதை,ஓடுகாலி(காலன்)க்கும் ஏற்ற அறிவுரை

அபு ஆதில் said...

//தோழன் தோழியையும்
தோழி தோழனையும்
உடன்பிறப்பாய் கருது

சகோதரத்துவ மெனும்
ஒழுக்கமான வாழ்க்கைக்கே
காத்திருக்கும் விருது//.

ஏதோ ஒன்று குறைகிறதே என்று மனம் நினைக்கும் போதெல்லாம் உங்கள் கவிதையால் மனம் நிறைகிறது.
நல்ல நட்பையும், கூடா நட்பையும் சொல்லிய விதம் அருமை.

Yasir said...

கவிக்காக்கா...புருவங்கள் உயர்கின்றன் உங்கள் கவிப்பாலை அருந்தியபிறகு....சுவையால் மட்டுமல்ல...”ஒழுக்கத்துடன் கூடிய நட்பை” இவ்வளவு இலகுவாக, அழகாக, ஆழமாக சொல்லமுடியுமா என்று...சமுதாய அக்கறை உள்ள ஆக்கம் காக்கா..சமச்சீர் கல்வி புத்தகத்தில் வரவேண்டிய கவிதை
//அறத்துப் பாலும்
பொருட் பாலும்
பால் கலக்காப்
பழக்கத்தில் சாத்தியம்

பால் கலந்த பழக்கத்தில்
காமத்து பால் மட்டும்
பெரும்பாலும் சத்தியம்!// வரிகள் அல்ல வாழ்க்கையின் தத்துவம்

crown said...

தோழனோடு தோழனும்
தோழியோடு தோழியும்
தொன்றுதொட்டு நட்பு
---------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த நட்பு இயல்பு,இதில் திரிபு இல்லாதது.
*****************************************
தோழனோடு தோழியும்
தோழியோடு தோழனும்
தொடுப்பதென்றால் தப்பு
------------------------------
திரிபு உண்டாககூடியது.திரிபு என்பதே மொழிவிகாரம்.அதுபோலவே இந்த நட்பிலும். நாளடைவில் தடம் மாறி கற்பிழப்பது,
கண்ணியம் காக்க வொன்னா செயலாக மாறுவது. புண்ணியம் கெடும்.பின் பெண்ணியம் என்பது ஏட்டளவாகும்.

crown said...

பஞ்சோடு பஞ்சு
பாந்தமான நட்பு
நெருப்போடு நெருப்பு
நேர்த்தியான நட்பு
பஞ்சோடு நெருப்போ
பற்றிக்கொள்ளும் நடப்பு.
--------------------------------------------------
ஆண்,பெண் நட்பு பற்றும் , எப்படியும் இந்த தீ பற்றும் பின் தினம் தொற்றும். இது ஒருவித பசி .
(மானம்,குலம்.கல்வி,வண்மை ,அறிவுடைமை ,தானம்,தவம் ,உயர்ச்சி ,தாளாண்மை) இப்படி சொல்லப்பட பண்புகள் எல்லாம் மறையும்.பசி வந்தால் பத்தும் பறக்கும். இந்த புற்றுக்கு தொப்புள் கொடி பற்றும் அற்று போகும். உறவுகள்,பந்தங்கள் இறக்கும்.
பின் எங்கே அவர்கள் குலம் சிறக்கும்????

crown said...

தோழனுக்கும் தோழிக்குமே
தூய்மையான நட்பானாலும்
தனியறையைத் தவிர்
மூன்றாவதா ஷைத்தானுமே
மறைந்திருப்பான் உணர்!
-----------------------------------------------------------
நம் உயிரினும் மேலான நபிகளார்(ஸல்) வாக்கு என்றும் பொய்க்காது.எனவே கவனம் என்றும் அவசியம்.அப்படி கவனமின்றி இருப்பதாலேயே
சைத்தான் நம்மை வசியப்படுத்தி,வாழ்வை பாழ் படுத்தும் பாதையில் இட்டுச்செல்வான். அல்லாஹ் எல்லாரையும் காப்பானாக ஆமீன்.

crown said...

அறத்துப் பாலும்
பொருட் பாலும்
பால் கலக்காப்
பழக்கத்தில் சாத்தியம்

பால் கலந்த பழக்கத்தில்
காமத்து பால் மட்டும்
பெரும்பாலும் சத்தியம்!
------------------------------------------------------------------

நிதர்சன உண்மை.இதை எல்லாம் பொருட்படுத்தி பார்த்தால் எந்த வித கசப்பான செய்கையும் நடக்காது. அதற்கும் அப்பால் எல்லை தாண்டினால். நிச்சயம் உறுதியின் தாழ் பால் உடையும், அசிங்கம் அரங்கேறும்.காலமெல்லாம் ஈனம். இதை விடுத்து நட்பை பேனும் போது கவனம் அவசியம் கொள்ளனும்.

Yasir said...

//இந்த புற்றுக்கு தொப்புள் கொடி பற்றும் அற்று போகும். உறவுகள்,பந்தங்கள் இறக்கும்.
பின் எங்கே அவர்கள் குலம் சிறக்கும்????/// அருமை அருமை கிரவுனாரே !!! வியக்கவைக்கும் விளக்கவுரை

crown said...

ஒன்றிரண்டு நட்புகளும்
உண்மையோடு பழகும்
பாதிக்குமேல் நட்புகளில்
பால் கலந்தால் திரியும்.
----------------------------------------------
பாலாறி தோன்றும் ஆடையும், இருபாலர் கலப்பில் ஆடை இழப்பும் நிகழும் கொடுமை! பால் திரிந்தால் அந்த பால் கெடுவதுடன் பாத்திரம் துற்னாறம் ஏற்பட்டு கெடும் அதை சுத்தம் செய்துவிடலாம். ஆனால் இருபாலரும் ,கலக்கும் கல்லத்தன கலப்பில் பாத்திரம் போல் கோத்திரம்,குலம், குடும்பம் பெயர் கெடும் பின் எதை கொண்டும் சுத்தம் செய்ய இயலாத நிலை வரும். நிலை தடுமாறும்.

crown said...

தாய்மைக்கும் நட்புக்கும்
தூரம் ரொம்பு குறைவு
தரம் கெட்ட நட்பில்
துரோகம் மட்டும் வரவு

தோழன் தோழியையும்
தோழி தோழனையும்
உடன்பிறப்பாய் கருது

சகோதரத்துவ மெனும்
ஒழுக்கமான வாழ்க்கைக்கே
காத்திருக்கும் விருது.
-----------------------------------------------------
இந்த நிகழ் கால நோய்க்கு சகோதரத்துவமே நல் மருந்து என்று கவிவிருந்து படைத்த கவிஞரே!உமக்கு விருது வல்ல அல்லாஹ்வின்
கையில் கிடைக்கும் மருமையில் இன்சா அல்லாஹ். நல்லதொரு அலசல். காலத்தின் தேவை கருதி எழுப்பிய சுருதி ,வெற்றி தரும் உறுதி என இறுதியில் வல்ல அல்லாஹ்விடன் வேண்டியவனாக முடிக்கிறேன்.

sabeer.abushahruk said...

//மானம்,குலம்.கல்வி,வண்மை ,அறிவுடைமை ,தானம்,தவம் ,உயர்ச்சி ,தாளாண்மைஇப்படி சொல்லப்பட பண்புகள் எல்லாம் மறையும்.பசி வந்தால் பத்தும் பறக்கும். இந்த புற்றுக்கு தொப்புள் கொடி பற்றும் அற்று போகும். உறவுகள்,பந்தங்கள் இறக்கும். //

என்னவொரு புலமை!!! கிரவுன், உங்களுக்கு லைட்டா உடம்பு சரியில்லாமல்போனா அது என் கண்ணூறுதான். சொல்லிட்டேன்பா.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//தோழனோடு தோழனும்
தோழியோடு தோழியும்
தொன்றுதொட்டு நட்பு


தோழனோடு தோழியும்
தோழியோடு தோழனும்
தொடுப்பதென்றால் தப்பு

தோழன் தோழியையும்
தோழி தோழனையும்
உடன்பிறப்பாய் கருது


சகோதரத்துவ மெனும்
ஒழுக்கமான வாழ்க்கைக்கே
காத்திருக்கும் விருது//

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா,

இன்றைய காலத்துக்கு ஏற்ற அவசியமான அட்வைஸ்....

கிரவுண்டுக்கு போயிட்டு வந்து இன்னொரு ரவுண்டு வர்ரேன் காக்கா...

நட்புடன் ஜமால் said...

அழகான “பா” கொண்டு கவியமைத்து
மெய் சொன்ன காக்கா ...



[[தோழனுக்கும் தோழிக்குமே
தூய்மையான நட்பானாலும்
தனியறையைத் தவிர்
மூன்றாவதா ஷைத்தானுமே
மறைந்திருப்பான் உணர்!]]

பா-ங்கோடு ஹதீஸையும் இணைத்தது மிக அருமை

Shameed said...

காலத்திற்கு ஏற்ற கலக்கலான கவிதை

sabeer.abushahruk said...

கேர்ள் ஃபிரண்ட் மேட்டரில் என்னோடு ஒத்து கருத்துப் பதிந்த தோழர்களுக்கு நன்றி.

ஜாகிர், முஜீப், இர்ஷாத், எம் எஸ் எம்மெல்லாம் டைம் கிடைக்காமல்தான் கருத்திடவில்லையே தவிர கேர்ள் ஃபிரண்டோடு சுத்தவெல்லாம் போகலை என்று ஸ்ட்ராங்காக நம்புகிறேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//ஜாகிர், முஜீப், இர்ஷாத், எம் எஸ் எம்மெல்லாம் டைம் கிடைக்காமல்தான் கருத்திடவில்லையே தவிர கேர்ள் ஃபிரண்டோடு சுத்தவெல்லாம் போகலை என்று ஸ்ட்ராங்காக நம்புகிறேன்.//
அப்ப நீங்க கருத்திடாச்சமயம் எல்லாம் நீங்கள் அந்தப் பக்கம் போய்ட்டீங்க என்று நாங்கள் நினைத்துக்கொள்ளலாமா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஜாகிர், முஜீப், இர்ஷாத், எம் எஸ் எம்மெல்லாம் டைம் கிடைக்காமல்தான் கருத்திடவில்லையே தவிர கேர்ள் ஃபிரண்டோடு சுத்தவெல்லாம் போகலை என்று ஸ்ட்ராங்காக நம்புகிறேன். ///

நானும் அப்படித்தான் காக்கா நம்புகிறேன் (என்னைய நம்புங்க) !

sabeer.abushahruk said...

//அப்ப நீங்க கருத்திடாச்சமயம் எல்லாம் நீங்கள் அந்தப் பக்கம் போய்ட்டீங்க என்று நாங்கள் நினைத்துக்கொள்ளலாமா//

அப்ப, என் வாக்கியத்தை இப்படி மாற்றிக்கொள்கிறேன்:
ஜா, மு, இ, நெ எல்லோரும் தப்லீக்ல போயிருப்பாங்களோ? இப்ப என்னையும் அந்தமாதிரிதான் நெனக்கனும் (அப்பாடி சேஃப்)

//நானும் அப்படித்தான் காக்கா நம்புகிறேன் (என்னைய நம்புங்க) !//
"அப்பன் குதிருக்குள் இல்லே"

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//அப்ப, என் வாக்கியத்தை இப்படி மாற்றிக்கொள்கிறேன்:
ஜா, மு, இ, நெ எல்லோரும் தப்லீக்ல போயிருப்பாங்களோ? இப்ப என்னையும் அந்தமாதிரிதான் நெனக்கனும் (அப்பாடி சேஃப்)//
அப்ப அவங்க எதுவும்(கிரவ்ன் ஆவக்கா மேட்டர் மாதிரி)தப்பா நினைக்கக் கூடாதென்று சேப்டி ஆகிட்டியலோ!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இது அப்போ புத்தகத்தில் படித்தது

திருக்குறள்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.


இப்போ இருந்திடும் சூழலை இப்படி எழுதச் சொல்கிறது !

திரு(ட்டுக்)குறள்

உடுக்கை அவிழ்ப்பவன் கைபோல ஆங்கே
இழிவைத் சேர்த்திடும் கூடாநட்பு !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//திரு(ட்டுக்)குறள்

உடுக்கை அவிழ்ப்பவன் கைபோல ஆங்கே
இழிவைத் சேர்த்திடும் கூடாநட்பு !//

//அப்ப, என் வாக்கியத்தை இப்படி மாற்றிக்கொள்கிறேன்:
ஜா, மு, இ, நெ எல்லோரும் தப்லீக்ல போயிருப்பாங்களோ? இப்ப என்னையும் அந்தமாதிரிதான் நெனக்கனும் (அப்பாடி சேஃப்)//

ரெண்டு பேரும் தப்பிக்க வார்த்தை வழிகள் நல்லாதான் தெரிந்து வைத்திருக்கீங்க! வாழ்க!

Ahamed irshad said...

ஜாகிர், முஜீப், இர்ஷாத், எம் எஸ் எம்மெல்லாம் டைம் கிடைக்காமல்தான் கருத்திடவில்லையே தவிர கேர்ள் ஃபிரண்டோடு சுத்தவெல்லாம் போகலை என்று ஸ்ட்ராங்காக நம்புகிறேன்.//

ச‌பீர் காக்கா..அவ்வ்வ்வ்

இங்கே இருக்கிற‌ கேர்ள் ஃப்ரெண்ட் வெயில்தான்..செம்ம‌ ஹாட்.. :))


கான‌ல் நீர் தூர‌த்திலிருந்து பார்த்தா நெளிஞ்ச‌ புருவ‌ம் மாதிரி தெரியுது..


(முன்நெற்றியை பார்த்த‌ பிற‌குமா ) நெய்னா காக்காவையும் லிஸ்ட்'ல‌ கொண்டுவ‌ந்துட்டீங்க‌ளே :))

Yasir said...

//இங்கே இருக்கிற‌ கேர்ள் ஃப்ரெண்ட் வெயில்தான்..செம்ம‌ ஹாட்.. :))// இர்ஷாத் சான்ஸ்சே இல்லே இத மாதிரி திங் பண்ணறதுக்கு....சூப்பரப்ப்பு.........

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு