Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் கால்பந்து சு(ஜு)ரம்.. 18

அதிரைநிருபர் பதிப்பகம் | June 17, 2011 | , ,

ஊரெல்லாம் கொண்டாட்டம்
காரணம் கால்பந்து ஆட்டம்

திடலை நோக்கி ரசிக கடல்
அலையலையாய் மனித தலைகள்

அதிரையில் ஒரே வெள்ளமாய்
ஆனந்த வெள்ளம்.....

மகிழ்சியில் பொங்கும் உள்ளம்
விளாயாட்டு வீரனின் ஒரே
குறி - "கோல்" ஆக்குவது

------------------------------

குறிக்-GOAL தான் !
குறிக்கோள் உள்ளவர்களின்
எண்ணங்களும் அதுவே !

மைதானத்தில் !
நேருக்கு நேர் மோதும்போது
விளையாட்டை நினைக்கனும்

உணர்வோட்டத்தில் !
சண்டை இல்லாமல்
சமாதானம் இருக்கனும்

வலையில் !
சிக்கிடும் மீன்களினால்
மீனவனுக்கு கொண்டாட்டம்

வலையினில் !
விழும் ஒவ்வொரு "கோல்"களும்
பந்தாட்ட வீரனுக்கு பேரானந்தம்

சிதறிகிடக்கும் !
ரசிக வின்மீன்களோ
சரியும் மாலை வெயிலில்

காய்ந்து கருவாடாகி
ரசிக்கும் ஆராவரமே அழகு !
ஆரவாரத்தில் திடலே அதிரையில்
அதிரையில் (நம்மூர்)திருவிழா !

பார்க்கும் போதும்
செய்தியில் படிக்கும்போதும்
அதிரை மைந்தர்களுக்கு
பரவசம் இலவசம் !

- CROWN

18 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இது கிரவ்னின் (கவிப்)பந்தாட்டம் !

சொல்லவா வேனும் வரிகளுக்கு, நான் என்ன புதுசா எழுதிடப் போறேன் அதான் எல்லாத்தையும் சொல்லிட்டிய(டா)ப்பா !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரையில் கொண்டாட்டம்,இணையத்தில் கவியாட்டம்.
அங்கே பார்க்க பர(இல)வசம், இங்கே படிக்க பரவசம்.!

Unknown said...

சிதறிகிடக்கும் !
ரசிக வின்மீன்களோ
சரியும் மாலை வெயிலில்
-------------------------------
Class!!!!!!!!!!!!!

sabeer.abushahruk said...

கொண்டாட்டம் பந்தாட்டம்
திடல் கடல்
அலை தலை
வெள்ளம் உள்ளம்
குறிக்கோல் குறி கோல்
பரவசம் இலவசம்

சந்தோஷமாயிருந்தது வாசிக்க...அதுதானே இந்த கவிதையில் உங்கள் குறிக்கோல்? நீங்கள் குறிவைத்த கோல்?

sabeer.abushahruk said...

//ரசிக வின்மீன்களோ
சரியும் மாலை வெயிலில்//
எனக்கு தெரியும் ஹார்மீஸ் இதை க்ளாஸ் என்பார் என்று...
நானும் ஒத்தூதுகிறேன்.
...அல்லது ஜால்ரா அடிக்கிறேன் சப்தமாக! (இதில் ஒன்றும் மர்மமில்லை, என் யோகம் மட்டுமே)

sabeer.abushahruk said...

கிரவுன்,
உண்மையைச் சொல்லுங்கள்... கவிதையினூடே ஒரு ரகசியப் பெருமூச்சு ஊடுருவுகிறதே...பார்க்கமுடியவில்லையே என்றுதானே???!!! ஊரில் இருக்கும்போது அது அட்டு கேமாக இருந்தாக்கூட ஒரு மேட்ச் விடாமல் ஆஜராகும் எனக்கும்தான். அந்த உற்சாகத்தின் இடையே வேர்க்கடலை கொரிப்பதும் சுகம்தான்.

அதிரை என்.ஷஃபாத் said...

/*ஆரவாரத்தில் திடலே "அதிரையில்"
"அதிரையில்"*/

ஆச்சர்யத்தால் "அதிர" வைக்கும் அதிரை வரிகள் !!

sabeer.abushahruk said...

ஷஃபாத்,
நான் அதைத்தான் குறிப்பிடப் போனேன். நீங்கள் குறுக்கால வந்து முந்திக்கொண்டீர்கள்.

அதிரையில் அதிரயில் என்பதில் ரானாவும் ரைய்யன்னாவும் கொஞ்சுகின்றன.

அதிரை என்.ஷஃபாத் said...

ரானாவும் ரையன்னாவும் கொஞ்சிக்கொள்வது, எங்க நானா (காக்கா கிரவுன்) அவர்களின் பேனா செய்யும் வார்த்தை வித்தை :)

crown said...

எல்லாதலைக்கும் அஸ்ஸலாமுஅலைக்கும்.
எனக்காக "கோல்"போட்ட அனைவருக்கும் நன்றி! அதிலும் என் தம்பி சபாத் போட்ட கோலுக்கு சிறப்பு நன்றி காரணம் ச(ப்)பாத்!(காலனி)அணிந்து போட்டால் தான் துணிந்து ஆடமுடியும். கோல் போட முடியும் இல்லைனா மிதிபடனும்.
இன்னும் பார்வையாளார்களாக இருந்து விசில் அடித்து ஆதரவு சொன்னவர்களுக்கும் நன்றி.அடுத்து வருவது பள்ளிகூடம் பற்றிய தம்பி சபாத்தின் கவிதையில் என்னை மறந்திடாதியோ!

ZAKIR HUSSAIN said...

ஒரு காலத்தில் கால்பந்து ஆட்டம் நம் ஊர் ஆட்களை ஒற்றுமைப்படுத்த ரொம்ப உதவியது...இப்போது எப்படி? கொஞ்சம் அப்டேட் செய்யுங்க ....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இப்போது எப்படி? கொஞ்சம் அப்டேட் செய்யுங்க//

பிரச்சினைகள் என்று வராத வரை ஒற்றுமை தெளிந்த நீரோடையாக இருக்கிறது... ஆங்காங்கே பிரச்சினைகள் உருவெடுக்கும்போதுதான் நிலை எப்படி இன்றையச் சூழலில் என்று முழுமையாக தெரியவில்லை.. நிச்சயம் நிலவரம் அறிந்தவர்கள் இங்கே பதிவார்கள் என்று நம்பலாம் !

அப்துல்மாலிக் said...

இதெல்லாம் நேரில் பார்க்கவும் பங்குகொள்ளவும் முடியாதது நினைத்து வருத்தமே, தொடரட்டு இந்த தொண்டு தொட்ட விளையாட்டு

Yasir said...

அதிரையில் கால்பந்து பரவசம்,இலவசம் இதையெல்லாம் அழகாக எழுதி எங்களையெல்லாம் உங்கள்வசப்படுத்திவிட்டீர்கள்...

Yasir said...

//உணர்வோட்டத்தில் !
சண்டை இல்லாமல்
சமாதானம் இருக்கனும்/// இதை இதைதான் எல்லோரும் விரும்புகிறோம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ஒரு காலத்தில் கால்பந்து ஆட்டம் நம் ஊர் ஆட்களை ஒற்றுமைப்படுத்த ரொம்ப உதவியது...இப்போது எப்படி? கொஞ்சம் அப்டேட் செய்யுங்க .... //

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாஹிர் காக்கா,

நீங்கள் கேட்பதற்கு முன்பே இது தொடர்பான அருமையான ஆக்கம் தயார்நிலையில் உள்ளது விரைவில் புதிய சூவாரஸ்யமான இது தொடர்பான செய்திகள் அதிரைநிருபரில் வெளிவரும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் கிரவுன்,

கால்பந்து கவிதையில், கவிவரிகளை பந்தாடி இருக்கிறீர்கள்.

பந்து மேட்ச் கவிதை எழுதப்போறேன் என்று சொன்னது உண்மை தானா...

Super Goallllllllllllllllllllllllllllllll

Shameed said...

பீஈ பீஈ பீஈ பீஈ

நான்தானுங்க நடுவர் அதான் ஆட்டம் முடியும் வரை ஒன்னும் சொல்ல முடியலே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு