Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிராம்பட்டினமும் ஆங்கிலக் கல்வியும் 11

அதிரைநிருபர் பதிப்பகம் | June 06, 2011 | ,

உயர் வகுப்பாரும் வசதி படைத்தவர்களும் படிக்கவேண்டும் என்பதற் காக கொண்டு வரப்பட்ட கல்வித் திட்டம்தான் மெட்ரிகுலேஷன், C.B.S.E. இதில் பெற்றோர் பிள்ளைகளைச் சேர்ப்பதன் முக்கிய நோக்கம் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் பேசவேண்டும் என்பதற்காக. அப்படிப் பேசுகிறார்களா என்றால் அதுதான் இல்லை. அப்படிப்பட்ட பயிற்சி தரப்படும் அறிகுறியுமில்லை.

நம்முடைய ஆங்கிலப் பள்ளிகளில் L.K.G., U.K.G. நடத்தும் ஆசிரியைகள், வேறு வேலை கிடைக்கும் வரை அல்லது திருமணம் ஆகும் வரை இந்த வேலையில் இருக்கலாம் என்ற அடிப்படையில் தான் பணி புரிகிறார்கள். அவர்கள் ஆங்கில வழிக்கல்வி கற்றவர்களுமல்லர், பயிற்சி பெற்றவர்களும் அல்லர்.

நம்மூரில் ஆங்கிலப்பள்ளி தோன்றி முப்பத் தைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன, அதன் பின் பல பள்ளிகள் தோன்றின. இங்கு ஆங்கிலத்தைக் காண முடியவில்லை. இப்படிப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நகரங்களிலும் வெளிநாடுகளிலும் பள்ளிகளில் இடம் கிடைப்பதில்லை. துவக்கத்திலிருந்தே மாணவர் ஆசிரியர் தரத்திற்கேற்ப எளிய புத்தகங்களை வைத்து தரத்தை படிப்படியாக உயர்த்தி இருக்கவேண்டும்.

நம்மூர் ஆங்கிலப் பள்ளி மாணவர்களிடம் ஆங்கிலத்தில் பேசினால் நம்மைப் பார்ப்பதைத் தவிர்க்கிறார்கள். அந்த அளவுக்கு ஆங்கிலம் இங்கிலாந்து தூரம். பெற்றோர் கனவு நனவாவது எப்போது? போதாததற்குத் தமிழையுமல்லவா தொலைத்துவிடுகிறார்கள்.

பெற்றோர் என்ன நோக்கத்திற்காக அப்பள்ளிகளில் சேர்த்தார்களோ, அந்த நோக்கம், அதாவது சரளமாக ஆங்கிலம் பேசுவது வந்துவிட்டால் அப்பள்ளியின் வேறு குறைபாடுகளை மறந்துவிட வாய்ப்பு உண்டு.

சமச்சீர் கல்விப் புத்தகங்கள் வந்தபின் மற்ற சாதாரண பள்ளிககளோடு ஒப்பிடும்போது மெட்ரிக் பள்ளிகளின் தரம் தாழ்ந்து காணப்படுமோ எனத்தோன்றுகிறது. அதனால்தானோ என்னவோ மெட்ரிக் பள்ளிகள் சமச்சீர் கல்வியை எதிர்க்கின்றன.

எது எப்படியோ வாங்கும் பணத்திற்கு ஆங்கிலம் தந்தால் சரி!

- உமர்தம்பிஅண்ணன்
நன்றி : (உமர்)தென்றல்

11 Responses So Far:

Yasir said...

//நடத்தும் ஆசிரியைகள், வேறு வேலை கிடைக்கும் வரை அல்லது திருமணம் ஆகும்.........../// உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்....டெடிக்கேட்டட் டீச்சர்கள் இல்லாதவரை இந்த நிலைதான்...பணம் விரையுமாகும் தவிர பயன் இருக்காது...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// எது எப்படியோ வாங்கும் பணத்திற்கு ஆங்கிலம் தந்தால் சரி! //

இப்படியும் இருந்திடத்தான் முடியுமா !?

தரமான கல்வி எங்கிருக்கிறது என்று தேடிச் செல்லத்தானே செய்வார்கள் பெற்றோர்கள் !

தருமா இந்தப் பள்ளி என்று ஏங்கித்தான் நிற்கின்றனர் பெற்றோர்கள் !

அயல்நாட்டில் முகம் காட்டிட
ஆங்கிலத்தால் அகம் காட்டிட வேண்டுமே !

ஆதங்கம் அதிரையிலே !
ஆங்கிலப் பள்ளியொன்று ஆளுமை செய்யவில்லையே !

இவைகள் (பள்ளிகளை) புண்படுத்த வல்ல சொல்லியவைகள்... பட்டவர்களின் (அனு)பரிவர்த்தனை மட்டுமே ! பாடம் படிப்பது பள்ளியில் மட்டும்தானா ?

அப்துல்மாலிக் said...

இதனாலேதான் நிறைய பெற்றோர்கள் வெளியூர்களுக்கு படையெடுக்கிறார்கள் ஆங்கில அறிவால் தாம் பட்ட இன்னல் தன் பிள்ளைகளும் படக்கூடாது என்று. ஆசிரியர்களுக்கும் IELTS, TOEFL, TOEIC, and the Cambridge ESOL exams such as CAE, FCE, and PET போன்ற தேர்வுகள் வைத்து அதில் தேரியவர்களை நியமித்தால் அதற்கான அறுவடை கிடைக்கும்

நட்புடன் ஜமால் said...

ஆங்கிலம் பேசி விடுவதால் மட்டும் எல்லாம் நிறைவடைந்துவிடாது தானே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆங்கிலம் பேசி விடுவதால் மட்டும் எல்லாம் நிறைவடைந்துவிடாது தானே!//

மெய்யே ! அவற்றின் தாக்கம் தான் அதனை(யும்) (தேவைக்கேற்ற)படி என்ற உந்துதல் இருக்கத்தானே செய்கிறது !

நிகழ்வில் கண்டு(ம்) கொண்டோம் தானே !

அதிரைநிருபர் பதிப்பகம் said...

Sஹமிது சொன்னது...

நமதூர் ஆங்கில கல்வி பள்ளிகூடத்தில் பைலும் மாணவ மாணவியரின் நிலை என்னவென்றால் know விற்கும் no விற்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் தான் உள்ளார்கள் இது மாணவர்களின் குற்றமா ? அல்லது ஆசிரியர்களின் குற்றமா ? என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்

sabeer.abushahruk said...

சார் அவர்கள் பேச்சு மொழிபற்றி குறைபடுகிறார்கள் என்றே எண்ணுகிறேன்.

காரணம், எழுத்து மொழியில் சார் குறிப்பிடும் பள்ளியில் படித்த பல குழந்தைகள் நன்றாகவே எழுத கண்டிருக்கிறேன்.

பள்ளி வளாகத்துக்குள் மட்டுமாவது கட்டாயமாக ஆங்கிலத்தில் மட்டும்தான் பேச வேண்டும் என விதி செய்தால் கனவு மெய்ப்படும்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இந்த கட்டுரை மூலம் நமதூர் பள்ளிகளின் ஆங்கில தரம் பற்றி வாவன்னா சாரின் வருத்தம் கலந்த குற்றச்சாட்டை முழு மனதுடன் வழி மொழிகிறேன்.

நன்கு படித்து வந்திருந்தும் சில வாத்தியார்மார்களே அவர்கள் பாடம் நடத்தும் சமயம் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட சிரமப்படும் பொழுது அவர்களிடம் பாடம் பயிலும் மாணவர்களிடம் எப்படி ஆங்கில தரத்தை நாம் எதிர்பார்க்க முடியும்?

என் பள்ளி, கல்லூரி அனுபவத்திலிருந்து திறந்த புத்தகமாக இங்கு ஒன்றை பதிய விரும்புகிறேன். நாம் பள்ளியிலும், கல்லூரியிலும் ஆங்கிலம் பாடம் படிக்கும் பொழுது ஏதோ வர இருக்கும் பரிச்சை எழுதி தேர்ச்சி பெரும் நோக்கத்திற்காக மட்டும் தான் படிக்கிறோம் என்று மாணவர்கள் மத்தியில் உள்ள தவறான கண்ணோட்டத்தை களைய ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் முன் வர வேண்டும். ம‌திப்பிற்குரிய‌ ஹாஜி முஹ‌ம்ம‌து சார் ஆங்கில‌ இல‌க்க‌ண‌ம் ந‌ட‌த்தும் பொழுது சொல்வார்க‌ள் "டேய் இந்த‌ இங்கிலீஸ் இல‌க்க‌ண‌ம் வெறும் ப‌ரிச்சைக்கு ம‌ட்டும் என்று நினைக்காதீர்க‌ள். உங்க‌ள் வாழ்நாளில் க‌டைசி வ‌ரை இந்த‌ இல‌க்க‌ண‌ம் ப‌ய‌ன்ப‌டும் ம‌ற்றும் ஒரு போதும் கால‌த்திற்கேற்ப‌ இது மாறாது என‌வே மிக‌வும் க‌வ‌ன‌ம் தேவை" என்று எச்ச‌ரித்து உப‌தேசிப்பார்க‌ள்.

உண்மையில் ஒரு சில‌ வாத்தியார்க‌ளின் சிற‌ப்பான‌ பாட‌ம் ந‌ட‌த்தும் முறையை த‌விர‌ அதிக‌ம் நான் விவேகான‌ந்தா க‌ல்வி நிறுவ‌ன‌த்தின் புத்த‌க‌ங்க‌ள், ரெபிடெக்ஸ், லிஃப்கோ ஆங்கில‌ அக‌ராதி மூல‌ம் தான் நிறைய‌ விச‌ய‌ங்க‌ளை க‌ற்றுக்கொண்டேன். ந‌ம‌தூர் க‌ல்லூரியில் கூட‌ ஆங்கில‌த்தில் தேர்வு எழுதினால் தேர்வில் த‌வ‌றிவிடுவோமோ என்ற‌ அச்ச‌ம் தான் நான் ப‌டிக்கும் கால‌த்தில் நில‌வி வ‌ந்த‌து.

எப்ப‌டி ஒரு ம‌னித‌னின் சீரான‌ பார்வைக்கு இரு க‌ண்க‌ள் மிக‌வும் இன்றிய‌மையாத‌தோ அதுபோல் ஆங்கில‌மும், தாய் மொழி அறிவும் மிக‌,மிக‌ அவ‌சிய‌மான‌ அத்தியாவ‌சிய‌மான‌ ஒன்றாகி விட்ட‌து எப்பொழுதும். வாவ‌ன்னா சார் சொல்வ‌து போல் ந‌ம்மூரில் ப‌டிக்கும் மாண‌வ‌ர்க‌ள் தாய் மொழியையும் தொலைத்து, ஆங்கில‌த்தையும் தொலைத்து இறுதியில் அவ‌திப்ப‌ட்டுவ‌ருவ‌தை நாமே க‌ண்கூடாக‌ காண‌ முடியும் ப‌ர‌வ‌லாக‌.

ந‌ம்மூரில் ப‌ல‌ மாண‌வ‌ர்க‌ள் எம்காம், எம்.எஸ்.சி., என்று முதுக‌லைப்ப‌டிக்கிறார்க‌ள் ப‌டித்து முடித்தும் இருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் ஆங்கில‌த்தில் ஒரு ம‌னு எழுதிக்கேட்டால் த‌டுமாறுகிறார்க‌ள் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் உத‌வியை நாடுகிறார்க‌ள் என்றால் ந‌ம‌தூர் க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளின் ஆங்கில‌ த‌ர‌த்தை ந‌ம்மால் உண‌ர‌ முடிகிற‌து.

என‌வே நாம் ஆங்கில‌த்திற்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்தால் வாழ்வில் முன்னேறுகிறோமோ இல்லையோ ஆனால் வேத‌னைப்ப‌ட‌ மாட்டோம் என‌ உறுதியாக‌ ந‌ம்புகிறேன்.

பிள்ளை படித்து ஃபெயிலாப்போனாலும் ப‌ர‌வாயில்லை ந‌ல்ல‌ ஆங்கில‌ த‌ர‌ம் வாய்ந்த‌ த‌னியார் க‌ல்வி நிறுவ‌ன‌த்தில் ப‌டித்தால் போதும் என்ற‌ ம‌ன‌ நிலைக்கு பெற்றோர்க‌ள் த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர் என்ப‌தே நித‌ர்ச‌ன‌மான‌ உண்மை.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

அகமது அஸ்லம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நான் பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்துவிட்டு, பதினொன்றாம் வகுப்பில் ஆங்கில வழியில் சேர்ந்தேன்(கணினி அறிவியல் பாடப்பிரிவிற்காக). ஆனால் இயற்பியல் பாடம் நடத்திய லியாகத் அலி சார் மட்டும்தான் முழுதாக ஆங்கிலத்தில் பாடங்கள் நடத்தினார். முதல் பருவ இடைத்தேர்வு வரை கண்ணை கட்டி காட்டில் விட்டது மாதிரி இருந்தது. LKG முதல் ஆங்கில வழியில் படித்தவர்கள் கூட அத்தேர்வில் வெற்றி்பெறவில்லை. வேறு வழியில்லாமல் அவரும் தங்கிலிஷில் பாடங்களை நடத்த ஆரம்பித்து விட்டார். அப்பொழுதுதான் தெரியும் நமதூரில் தமிழ் வழியில் படிப்பவர்களுக்கும் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் ஆங்கில அறிவில் பெரிய அளவு வேற்பாடு இல்லை என.

Unknown said...

நம்மூருக்கே உள்ள குறைபாட்டைக் காக்கா அவர்கள் சுட்டிக் காட்டிய விதம அருமை; உண்மை அது. நான் ஏ.எல்.எம். பள்ளியின் Hon. adviser ஆகச் செயல்படத் தொடங்கியபோது, ஓரிரு முறை பள்ளி ஆசிரியைகளைக் கூட்டி, "இனி ஆங்கிலத்தில்தான் பாடம் நடத்த வேண்டும்; ஆங்கிலத்தில்தான் பிள்ளைகளிடம் பேசவேண்டும்" என்று (தமிழில் அல்ல, ஆங்கிலத்தில்) சொன்னபோது, அதைக் கேட்டுக்கொண்டிருந்த பட்டிக்காட்டு டீச்சர்களின் தலைகள் மட்டுமே ஆடின. அக்கூட்டத்தில் HM மற்றும் நமதூர் ஆசிரியை ஒருவர் மட்டுமே அதில் மேற்கொண்டு ஆர்வம காட்டினர். அதன் பின்னர் நான் வகுப்புகளைக் கண்காணித்து வந்தேன். "சித்தன் போக்கு, சிவன் போக்கு" என்பார்களே, அது போன்றுதான் ஆகியிருந்தது. அதன் பின்னர் 'கைவிட்ட அனாதைக் குழந்தை' போல் ஆகிவிட்டது ஆங்கிலம்.

இமாம் ஷாஃபியாக இருந்தாலும் மற்ற கல்வி நிலையங்களாக இருந்தாலும் இதே நிலைதான். என்ன செய்ய? Village is village.

இது போன்ற குறைபாட்டைப் போக்கத்தான், சென்ற கோடைகாலப் பயிற்சி முகாமின்போது, அடிப்படை ஆங்கிலமும் Spoken English பயிற்சியும் தனித்தனியாகப் பாடம் நடத்தினோம். ஓரளவு பயனையும் கண்டோம். இது போன்று சிறப்புப் பயிற்சிகள் மட்டுமே இப்போதைக்கு மாற்றுப் பரிகாரம் எனப்படுகிறது.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் . நல்ல அலசல் . அஹமது சாச்சா எழுதிய கருத்தைபார்த்தா எனக்கு தோன்றுவது இளம் ஆசிரிய,ஆசிரியர்களுக்கு பரகத் சார் போன்றவர்கள் ஆக்கிலபயிற்சி வகுப்புகள் நடத்தினால் நல்லது. இதில் ஈகோ உள்ளவர்களை நீ போ என சொல்லி அவர்களை தகுதி வரும் வரை ஆசிரிய பணியிலிருந்து தற்காலிகமாகவோ,திறமையை நிருபிக்கும் வரையோ பணியில் இருந்து விடுப்பு விடவும். எல்லா ஆசிரியர்களும் திறமையானவர்களும் இல்லை. எல்லா மாணவர்களும் விபரம் தெரியாதவர்களும் இல்லை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு