Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு... 2

அதிரைநிருபர் பதிப்பகம் | June 03, 2011 | ,

அன்பிற்கினியவர்களே !

சகோதரர் அபுஈஸாவின் வேண்டுகோளுக்கினங்க ஏற்கனவே "சும்சுல் இஸ்லாம் சங்கத்தின்" பொதுக்குழு சம்பந்தப்பட பதிவில் கருத்தாகப் பதியப்பட்ட இவ்வக்கத்தினை மீள்பதிவு செய்கிறோம்...

- அதிரைநிருபர் குழு

|==|----------------------------|==|

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பொதுக் கூழு கூட்டப்பட்ட செய்தியை அதிரை நிருபரின் மூலமாக அறிந்தோம்; மகிழ்ச்சி! ஒற்றுமையும், கட்டுப்பாடும், கூட்டு வாழ்க்கையும் இஸ்லாம் போதிக்கின்ற முக்கிய அம்சங்கள். இறை நம்பிக்கையாளர்களிடையே இருக்க வேண்டிய நறபன்புகள். இப்பன்புகள் நம்மிடையே மேலோங்க அல்லாஹ் அருள் புரிவானாக!

மேலும் நம்முடைய அனைத்துக் காரியங்களையும் இறையச்சத்தோடு அமைத்துக்கொள்ளும் போது அல்லாஹ்வின் உதவியும், மக்களின் ஆதரவும் நிச்சம் கிடைக்கும்.

பொதுவாகவே நம் கூட்டு வாழ்க்கை பலப்பட வேண்டுமெனில் ஏழை பனக்காரன் என்ற ஏற்றத் தாழ்வில்லாமல்; குடும்பம், கோத்திரம், பாரம்பரியம் என்று பாகுபாடு பேசித் திறியாமல் அனைவரையும் சமமாகப் பாவித்து அனைத்து தரப்பு மக்களின் நன் மதிப்பையும் சங்கமும், சங்க நிர்வாகிகளும் பெற வேண்டும். அப்போதுதான் தங்களுடைய பிரச்சனைகளை தீர்த்துக்க்கொள்ள சங்கத்தை நோக்கி அனைவரும் வருவார்கள் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு.

இங்கே கடந்த காலத்து சங்கத்தின் செயல்பாடு ஒன்றை மேற்கோல் காட்ட விறும்புகிறேன். அதாவது வரதட்சனை திருமனங்களுக்கு ஆதரவு கொடுத்து வரதட்சனை இல்லாத மேலும் சுன்னத்தான முறைகளிலே நடத்தப்படுகிற திருமனங்களுக்கு ஆதரவு கொடுக்காமை!? இச்செயல் நிச்சயமாக நகைப்புக்குறியதே. எனவே புதிய நிர்வாகம் இது போன்ற செயல்களில் பழையபடி இறங்கிவிடாமல் எழுச்சியோடு செயல்பட வேண்டும் என்பதே நல்லுள்ளம் கொண்ட அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

எனவே, சங்கம் தனது செயல்பாடுகளை இஸ்லாத்திற்கு உட்பட்டு, இந்திய நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அமைத்துக்கொள்ள வேண்டும். ஒரு போதும் தீமைக்கு துணை போய்விடக் கூடாது. சங்கத்தின் செயல்பாடுகள் மக்களுக்கு மத்தியில் ஒற்றுமையை மேம்படுத்தும் முகமாகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முகமாகவும் அமைய வேண்டும். ஒரு குறுகிய செயல்பாட்டுத் திட்டத்தோடு தங்களுடைய பனிகளை சுருக்கிக்கொள்ளாமல் விரிவான செயல்பாட்டுத் திட்டங்களோடு செயல்பட வேண்டும். உதாரனத்திற்கு:-

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது; அரசாங்கம் அறிவிக்கும் நலத் திட்டங்களை உறியவர்களுக்கு பெற்றுத்தர வழி வகை செய்வது.

மக்களின் கல்வித் தரத்தை உயர்த்த புதிய வியூகங்களை வகுத்து செயல்முறைப் படுத்துவது.

குர்'ஆன், சுன்னாஹ் அடிப்படையில் மக்களுக்கு போதனை செய்ய ஏற்பாடுகள் செய்வது போன்ற பல தரப்பிலும் சங்கம் செயலாற்றி அல்லாஹ்வின் திருப் பொறுத்தத்தையும், மக்களின் நன் மதிப்பையும் பெற வேண்டும். அல்லாஹ் அருள்புரிவானாக்!

முஃமின்களே!... இன்னும் நன்மையிலும், இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; மேலும் பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கட்மையாகத் தண்டிப்பவன். - அல் குர்'ஆன் 5:2

நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!

ம'அஸ்ஸலாம்

அன்புடன்
- அபு ஈசா

2 Responses So Far:

Shameed said...

அபு ஈசா கோரிக்கை நியாமானதும் ஏற்றுகொள்ளக்கூடிய கோரிகையும் ஆகும் சங்க நிர்வாகிகள் தெரு பாகு பாடு குடும்பம், கோத்திரம், பாரம்பரியம்.பணம் உள்ளவன் பணம் இல்லாதவன் என்று பாராமல் முஸ்லிம் என்ற ஒரே கண்ணோட்டத்தில் தங்கள் பார்வையை செலுத்தி இஸ்லாத்திற்கும் இஸ்லாமியருக்கும் நன்மைகள் செய்ய முயற்சிகள் செய்ய வேண்டும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

புத்தியென்று நினைத்தால் எரிச்சல் வரும்... அதுவே நன்மையை நாடியே சுட்டிக் காட்டப்பட்டிருகிறது என்று நினைத்தால் செயல் திட்டங்களாக தெளிவும் இருக்கும் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு