சவுதி இன்டர் நேஷனல் இந்தியன் ஸ்கூல் மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வில் மகத்தான வெற்றி!
சவுதியில் உள்ள ரியாத், ஜித்தா, தம்மாம் நகரங்களில் இருக்கும் இந்தியப் பள்ளிக் கூடங்களில் பயிலும் 10ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இன்டர் நேஷனல் இந்தியன் ஸ்கூல் - தம்மாம் (100 சதவிகிதம் / தேர்வு எழுதியோர் 836 மாணவ, மாணவியர்)
இன்ட்ர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் / ஜுபைல் (100 சதவிகிதம் / தேர்வு எழுதியோர் 194 மாணவ, மாணவியர்)
இன்ட்ர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் / ஜித்தா (100 சதவிகிதம் தேர்வு எழுதியோர் 709 மாணவ, மாணவியர் )
இன்ட்ர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் / ரியாத் (100 சதவிகிதம் 293 +431 மாணவ, மாணவியர்)
அல்வுரூத் இன்டர்நேஷனல் ஸ்கூல் / ஜித்தா (100 சதவிகிதம் தேர்வு எழுதியோர் 53 மாணவ, மாணவியர்)
இன்ட்ர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் / புரைதா (100 சதவிகிதம்)
அதிரைப் பையன் இர்ஃபானுத்தீன் 10ஆம் வகுப்பு சிபிஎஸ்சி (Central Board of Secondary Education - CBSE ) தேர்வுகளில் முன்னிலை மாணவனாகத் தேர்ச்சி.
அல்வுரூத் இன்டர்நேஷனல் பள்ளியில் 5 மாணவர்கள் 10 மதிப்பீட்டையும், இப்ராஹீம் மஃபாஸ், நபின், சஞ்சய் ராஜேந்திரன், ஜுவைரிய்யா ஃபாருக்கி, ரம்யா, ஷனா சிதிதீகி, முபர்ரா மன்ஸூர், இர்ஃபானுத்தீன், ஸமீர் அப்துல் ஹமீத், ஷீஸான் அஷ்ரஃப், அலெக்ஸ் ஜெர்ரி ஆகீய 9 மாணவ, மாணவியர் 9+ மதிப்பீட்டையும் தரத்தையும் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் இர்ஃபானுத்தீன் எனும் மாணவர் அதிரை புலவர் அஹ்மது பஷீர் ஹாஜியார் அவர்களின் சகோதரர் ஹாஜி முஹம்மது முஹ்யித்தீன் அவர்களின் மகன் ஷஃபீ அஹ்மது (ஜித்தா) அவர்களின் மகன் ஆவார்.
அதிரை ஊர் மக்களுக்குப் பெருமை தேடித்தந்த மாணவர் தம்பி இர்ஃபானுத்தீனுக்குப் பாராட்டுக்கள்!
இச்செய்தி சஊதி அரேபியா பத்திரிகையான அரப் நியூஸ் ஆங்கில இதழின் இணையதளத்தில் வெளியிடப்பெற்றுள்ளது.
தகவல்
அஹ்மது ஆரிஃப்
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்
சென்னை.
www.arabicinstitute.in
6 Responses So Far:
அதிரை ஊர் மக்களுக்குப் பெருமை தேடித்தந்த மாணவர் தம்பி இர்ஃபானுத்தீனுக்குப் பாராட்டுக்கள்!
இர்பானுதீன் இன்னும் நன்கு படித்து நாளை இந்திய அரசின் உயர்பதவியிலும் இடம்பெற அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்!
well done Irfanudeen,...wish you all the best for your future achievements.
என் தமையனும் இந்த அல்வுரூத் பள்ளியில் படிக்கின்றான் என்பதில் சந்தோசம்.
இது இந்த ஊர் இமாம் சாபி மாதிரி.
எல்லாம் காக்காமார்களும், செடான் மார்க்களும்தான்.
அஸ்ஸலாமு அலைக்கும். இர்பான் தன் தகப்பனார் சகோ. நண்பர் ஷபி அஹமதுபோல்தானே திறமையாக இருப்பான்! இதில் ஏதும் ஆச்சரியம் இல்லை. அவனுக்கு வாழ்துக்கள்.
எனது மகன் மற்றும் மகள்கள் இந்த ஸ்கூல்லில் (இன்டர் நேஷனல் இந்தியன் ஸ்கூல் தம்மம்) படிக்கின்றார்கள் என்பதில் மகிழ்ச்சியோ
Post a Comment