Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரியல் எஸ்டேட் - சிந்திப்போம் ! [தொடர் - 2] 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 14, 2011 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

முந்திய பதிவில் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பணம் சம்பாதிப்பதற்காக நிலங்களை வர்த்தகப் பொருளாக்கி வாங்குவதும், விற்பதுமாக நிலம் பல கை மாற்றப்படுவதும், புதிய மனைகள் விற்பனைக்கு வரும்போது 4, 5 மனைகளை வாங்கிப் பதுக்கி வைப்பது பற்றியும் எழுதி இருந்தேன். நிலங்கள் பல கை மாறுவதால் ஒவ்வொரு முறையும் இலாபம், மற்றும் செலவுகள் நிலங்களின் கொள்முதல் விலையோடு சேர்க்கப்பட்டு அதன் விற்பனை விலை உயர்த்தப்படுகிறது. மேலும் ஒருவர் 4, 5 மனைகளை வாங்குவதால் அதற்கான தட்டுப்பாடு ஏற்பட்டு தேவை அதிகரிப்பின் காரனமாகவும் நிலங்களின் விலை உயர்கிறது. இதனால் மனைகளின் அவசியத் தேவையுள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினர் பாதிப்படைகின்றனர்.

புதிய மனைகள் போடப்பட்டாலும் நாளை நல்ல இலாபம் கிடைக்கும் என்று அவசியமில்லாதவர்களும் மனைகளை வாங்குவதற்கு போட்டி போடுவதால் எப்படியும் விற்றுத் தீர்ந்துவிடும் என்று நில உரிமையாளர்கள் எண்ணம் கொள்வதற்கும், ஆரம்பத்திலேயே விலையை உயர்த்தி நிர்ணயம் செயவதற்கும் வழி வகுத்துவிடுகிறது. இதனாலும் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினரின் உரிமை பாதிக்கப்படுகிறது.

நிலம் வியாபாரப் பொருள் என்ற நிலையை அடைந்துவிடுவதால் அதை விலை ஏறும் வரை வைத்திருப்பது பதுக்கலாகிவிடும்.

இது போன்ற காரனங்களால் அவசியமில்லாமல் நிலங்களை வாங்குவதும், விலை ஏறிய பின் விற்கலாம் என்று வைத்திருப்பதும் இஸ்லாத்தின் பார்வையில் தடுக்கப்பட்டதே - நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன் - என என்னுடை நிலைபாட்டையும் பதிந்திருந்தேன்.

"இவ்வாறு அவசியமில்லாமல் நிலங்களை வாங்குவது கூடாது என்றால் அவசியமில்லாதவருக்கு நிலங்களை விற்பதும், அதற்கு தரகராக இருப்பதும் தடுக்கப்பட்டதே!"

அவ்வாறு அவசியமில்லாமல் நிலங்களை வாங்குவது கூடாது எனும் நிலைபாட்டை நாம் எடுக்கும் போது ஒரு மனிதன் எவ்வாறு தன்னுடைய வளங்களைப் பெருக்கிக் கொள்ள முடியும்? எவ்வாறு சொத்து சேகரிக்க முடியும் போன்ற கேள்விகள் எழ வாய்ப்புள்ளது அதற்கான விளக்கமாக இப்பதிவு அமையும் இன்ஷா அல்லாஹ்!

*********************************************************************************

இங்கே புரிந்துகொள்வதற்காக முந்தைய பதிவில் மேற்கோல் காட்டிய உதாரனத்தை மீன்டும் எடுத்துக் கொள்வோம். அதாவது நாய் விற்ற காசு குரைக்குமா?

எந்து ஒரு விசயத்தையும் நாம் பகுத்துப் பார்க்கப் பழகிக் கொன்டால் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அதன் நிலை என்ன என்பதையும் அல்லாஹ்வின் உதவியால் இன்ஷா அல்லாஹ் புரிந்து கொள்ளலாம்.

நாய் விற்ற காசு குரைக்குமா என்ற கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்னால் நாய் சம்பந்தமாக இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். அதாவது இஸ்லாம் நாயை செல்லப் பிரானியாக வளர்ப்பதைத் தடை செய்கிறது. அதே சமயம் நாயை வேட்டைக்கு மற்றும் காவலுக்குப் பயன்படுத்துவதை அனுமதிக்கிறது.

எனவே தடுக்கப்பட்ட ஒரு காரியத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவது கூடாது என்ற அடிப்படையில் நாய் செல்லப் பிரானியாக விற்கப்பட்டால் அந்த காசு குரைக்கும் மற்றும் வேட்டைக்கு அல்லது காவலுக்கு விற்கப்பட்டால் அந்த காசு குரைக்காது என்பதை வேறுபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் மார்க்கத்தில் சொத்து சேர்ப்பதற்கோ வளங்களைப் பெருக்கிக் கொள்வதற்கோ எந்த தடையும் இல்லை. எனவே செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக நிலங்களை வாங்குவதும், விற்பதும் அனுமதிக்கப்பட்டதே!

மனைகளை வாங்கி வைப்பவரும் தன்னுடைய வளங்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றுதானே வாங்கி வைக்கின்றார்! பின் அதை மட்டும் ஏன் கூடாது? என ஒரு கேள்வியும் இங்கே எழ வாய்ப்புண்டு.

*********************************************************************************
சொத்து (ASSET)

பொதுவாக சொத்துக்களை அசையும் சொத்து அசையா சொத்து என இரு வகைகளாகப் பிரிக்கலாம். இவ்விரண்டையும் வேறுபடுத்தத் தெரிந்து கொன்டால் எந்த வகையான சொத்து வாங்கலாம், எந்த வகையான சொத்து வாங்கக் கூடாது என்பதை புரிந்து கொள்வதும் எளிதாகிவிடும், இன்ஷா அல்லாஹ்.

அசையும் / அசையாச் சொத்துகளைப் பட்டியலிட்டுத மனனம் செய்து தெறிந்து கொள்வதைவிட அதன் பன்பின் அடிப்படையில் வேறுபடுத்தித் தெறிந்து கொன்டால் அதை இனம் கான்பது எழிதாகிவிடும்.

இப்போது நாம் வனிகவியல் பாடத்திற்கு வருகிறோம்!

அசையும் சொத்து (CURRENT ASSET):

அசையும் சொத்து என்றாலே அதன் உரிமை மாறிக்கொன்டே இருக்கும். உதாரனமாக ஒரு கார் தொழிற் சாலையில் கார் உற்பத்தி செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த கார் அவர்களுக்கு அசையும் சொத்து. ஏனெனில் அது விற்பனை செய்ய (உரிமை மாற) வேண்டும் என்பதற்காக உற்பத்தி செய்யப்படுகிறது. அதை ஒரு மொத்த வியாபாரி கொள்முதல் செய்து விற்பனைக்காக வைத்திருக்கிறார். இங்கேயும் கார் ஒரு அசையும் சொத்தாகவே கருதப்படும்.

சுறுங்கக் கூறின் "ஒரு வாணிபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கிற சொத்து அசையும் சொத்து" ஆகும்.

அசையாச் சொத்து (FIXED ASSET):

தன்னுடைய பயன்பாட்டிற்காக வாங்கப்படுகின்ற சொத்து அசையா சொத்து எனப்படுகிறது. மேற்படி உற்பத்தியாளருக்கும், வியாபரிகளுக்கும் அசையும் சொத்தாக இருக்கின்ற கார் நுகவோரிடத்தில் வரும் போது அசையா சொத்தாக மாறிவிடுகிறது. காரனம் நுகர்வோர் காரை விற்பனைக்காக வாங்கவில்லை, மாறாக பயன்பாட்டிற்காகவே வாங்குகிறார்.

இப்பொழுது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்கான நுட்பம் புறிந்திருக்கும் என நம்புகிறேன்.

*********************************************************************************

இங்கே நாம் தடுக்கப்பட்டதென சொல்வது விற்கும் நோக்கத்தோடு (அசையும் சொத்தாக) நிலங்களை வாங்கி விலை ஏறும் வரை சில கால அலவிற்கு விற்காமல் வைத்திருக்கும் வாணிபத்தை.

விற்க வேண்டும் என்பதற்காக வாங்குகிற சரக்கை எந்த ஒரு வியாபாரியும் விற்காமல் வைத்திருக்க மாட்டார். அதை வாங்குவதற்கான நுகர்வோர் இல்லை என்றாலும் எப்பாடியாவது விற்க வேண்டும் என்பதற்காக விளம்பரம் கொடுப்பார், பல வியூகங்களை வகுப்பார். அவருடைய நோக்கம் எப்பாடியாவது வாங்கிய சரக்கை விற்க வேண்டும் என்பதாகவே இருக்கும்.

அதே போல் ஒரு வனிகர் தன்னுடைய சரக்கை வாங்குவதற்கான நுகர்வோர் இருந்தும் விற்பனை செய்யாமல் விலை ஏறிய பின் விற்பனை செய்யலாம் என்று வைத்திருந்தால் அதனைப் பதுக்கல் என்றே சொல்வோம். எனவே நிலங்களை விற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வாங்கி அதை விலை ஏறும் வரை வைத்திருப்பது பதுக்கல். ஆகாவே இஸ்லாமின் பார்வையில் இது ஹராம் (தடுக்கப்பட்டது/ பாவம்) என முந்தைய தொடரில் குறிபிடிருந்தேன்.

அதே சமயம் நம்முடைய தேவைக்காக (அசையா சொத்தாக) வாங்கப்படும் நிலம் மற்றும் ஏனைய சொத்துகள் வாங்குவதும் விற்பதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே. மேலும் ஒரு மனிதன் எவ்வளவு சொத்துக்களைச் சேர்த்துக்கொள்ளலாம் என்பதற்கு எல்லையும் இல்லை. ஒரே ஒரு நிபந்தனை என்னவெனில் சொத்துக்களுக்கான செல்வ வரியை (ஜகாத்) தகுதியானவருக்குக் கொடுத்து விட வேண்டும்.

அசையா சொத்துக்களும் தானே விறகப்படுகிறது என்ற ஒரு கேள்வி எழவும் வாய்ப்புண்டு. இருப்பினும் அசையா சொத்துகள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக வாங்கப்படுகிறது. மேலும் அதன் விற்பனை சூழ்நிலையின் காரானமாகவே தவிர ஏற்கெனவே திட்டமிடப்பட்டதள்ள.
செயலுக்கான கூலி எண்ணததின் அடிப்படையிலேயே அமையும் என்பதே மார்கத்தின் நிலைபாடு!

மேலும் அசையா சொத்து நிலையான சொத்தாக வாங்கப்படுவதால் அது அடிக்கடி கை மாறவும் அதனால் விலை ஏறவும் வாப்பில்லை.

எனவே "நிலங்களை நிலையான சொத்தாக வாங்கிக் கொள்வது கூடும், வியாபாரச் சரக்காக வாங்கி விலை ஏறும் வரை விற்பனையை தாமதிப்பது கூடாது என்பதே என்னுடைய நிலைபாடு"

நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!

யா அல்லாஹ் ஹலாலானவற்றைக் கொன்டு எங்களுடைய தேவையைப் பூர்த்தி செய்வாயாக! ஹாராமானவற்றின் தேவையை விட்டும் எங்களைப் பாதுகாத்துக் கொள்வாயாக!

அல்லாஹ் நாடினால் பெண் பிள்ளைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் நமதூரின் பழக்கத்தையும் தொடர்ந்து அலசுவோம்!

ம'அஸ்ஸலாம்

அன்புடன்
- அபுஈசா

மேலே பதியப்பட்டுள்ள ஆக்கம் கட்டுரையாளரின் தன்னார்வத்தாலும், அவரால் சேகரிக்கப்பட தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

12 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தொடர்ந்து படித்து வருகிறேன்... தொடரட்டும் சிந்தனை !

Unknown said...

நமதூரில் தேவைக்கு மனை வாங்குவது போய் முதலீட்டுக்காக வாங்குவது அதிகரித்துவிட்டது.
இது நமக்கு நாமே வைக்கும் ஆப்பு .இதுவரை எப்படியோ இனிமேல் வெறும் முதலீட்டுக்கு மட்டும்
நம்மூரில் மனை வாங்குவதை தவிர்ப்பது நல்லது .அப்படி வாங்குவதால் பாதிக்கப்பட்ட நிறைய பேர் வீடு கட்ட
திணறி கொண்டிருப்பதை நாம் மனதில் கொள்வது நலம் .
அவசியமான கட்டுரை .

அதிரை என்.ஷஃபாத் said...

/** எனவே நிலங்களை விற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வாங்கி அதை விலை ஏறும் வரை வைத்திருப்பது பதுக்கல். ஆகாவே இஸ்லாமின் பார்வையில் இது ஹராம் (தடுக்கப்பட்டது/ பாவம்) என முந்தைய தொடரில் குறிபிடிருந்தேன்**/

மார்க்க ரீதியில் இது உண்மையில் தவறானதா? என்பதை மார்க்க அறிஞர்களிடம் கேட்டு தெளிவு பெற வேண்டும். "பதுக்கல்" என்பது உணவு பொருள்களில் செய்வதைத் தான் இஸ்லாம் ஹராமாக்கி இருக்கின்றது என்பதாக படித்து இருக்கின்றேன். வீட்டு மனை விஷயத்தில் "வாங்கிப் போடுவதும், பிறிதொரு நாள் விற்பதும்" பதுக்கலின் கீழ் வருமா? என்பது எனக்கு ஐயமாக இருக்கின்றது. இதற்கான விளக்கத்தினை மார்க்க அறிஞர்களிடம் கண்டிப்பாக கேட்டு, அதனை ஆதாரத்துடன் பதிந்த்தால், நிச்சயமாக பலன் அளிக்கக்கூடியதாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அதிரை என்.ஷஃபாத் said...

சொத்துக்களை அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் என எதை வைத்து பிரிக்கப் படுகின்றது என்றால், சொத்தினுடைய இயல்புத்தன்மையையும், அவற்றின் இடம்பெயரும் தன்மையையும் வைத்துத் தான் என்பது, குறிக்கப்படும் பெயர்களிலேயே எளிதாக விளங்குகின்றது..மேலும், எவை எவை அசையும் சொத்துக்கள், எவை எவை அசையா சொத்துக்கள் என்பதை சிறிய தேடுதலில் எனக்கு கிடைக்கபெற்ற விபரம் இதோ:

அசையும் சொத்துக்கள்.

சொந்தமான கார், பஸ், (ரயில் தனியாருக்கு சொந்தமானதாக இருந்தால்) கப்பல், விமானம், மற்றும் ஆடு - மாடு கோழிப் பண்ணைகள்.

அசையா சொத்துக்கள்.

சொந்த வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள், ஹோட்டல்கள், சொந்தக் கடைகள், வாடகைக் கட்டிடங்கள், விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், சுரங்கங்கள்.

எந்த நோக்கத்திற்காக வாங்கப் படுக்கின்றது என்பதை வைத்து அவற்றை அசையும் அல்லது அசையா சொத்துக்கள் என்று பிரிப்பது உண்மையில் வழக்கத்தில் இருக்கின்றதா?

நண்பர்களே, சகோதரர் அபு-ஈசா அவர்களின் இந்த ஆக்கம் நமதூரின் முக்கிய பிரச்ச்னைகளுள் ஒன்றைப் பற்றியது. இதற்காக கட்டுரையை ஆசிரியருக்கு நன்றிகள். ஆரோக்கியமான/மார்க்க ரீதியிலான கருத்துக்களும் விவாதங்களும் நிச்சயம் பலன் தரும் இன்ஷா அல்லாஹ்.. உங்களது ஆக்கப்பூர்வமான கருத்துக்களைக் கண்டிப்பாக பகிர்ந்துகொள்ளுங்கள்.

sabeer.abushahruk said...

அபு ஈஸா,
நான் ஒரு கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கி
மனைபோட்டு ஒரு மனை இவ்வளவு என்று விற்கக் கூவுகிறேன். எல்லோரும் விலை அதிகமென ஒதுங்க ஐந்து வருடங்கள் கழித்துத்தான் விற்கவே முடிகிறது.

நான் பதுக்கினேனா?

பி.கு.:
நான் விற்கத்தான் வாங்கினேன். யாரும் வாங்காததால் விற்கவில்லை.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

Mr,அபு ஈஸா,
சிறு பெண் குழந்தை ஒன்று இருக்கிறது.கிடைத்த ஓய்வூதியம் மற்றும் வேறுஇருந்த பணங்களை வைத்து வீடுகட்டத்தேவையான அளவுக்கு மனைகளை வாங்கி இருக்கார், இன்னும் 10 வருசம் கழித்து தான் அதைவிற்று வீடு கட்டுவாராம்.அந்த பணத்தை வைத்து சொந்தமாக தொழில் செய்ய அவருக்கு திறமையில்லை.இந்த மனையை வைத்து இன்றுகூட வீட்டை கட்ட முடியும்.ஆனால் பிள்ளையும் வளர்ந்து அந்த நேரத்தில் மனையும் விலை ஏறி இருக்கும்.கட்டுமானப்பொருள்களும் விலை ஏறி இருக்கும்........இது பதுக்கலில் சேருமா?
தங்கம் வாங்கி சேர்ப்பது பதுக்கலில் சேருமா?

ZAKIR HUSSAIN said...

Fixed assets, also known as a non-current asset or as property, plant, and equipment (PP&E), is a term used in accounting for assets and property which cannot easily be converted into cash. This can be compared with current assets such as cash or bank accounts, which are described as liquid assets. In most cases, only tangible assets are referred to as fixed.

FROM WIKIPEDIA..

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புச் சகோதரர்களுக்கு,


நிலத்தை விற்பனைக்காக வாங்கி விலை ஏறும் வரை வைத்திருந்து விற்கும் வானிபத்தை பதுக்கல் வானிபம் என்றும் அது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்றும் நான் விளங்கிய மாத்திரத்திலே, அதற்காக பரிசீலிக்கப்ப்ட்ட காரியங்களையும் மேற்கோல் காட்டி என் ஆக்கத்தை மக்கள் மன்றத்திலே சமர்பித்திருக்கிறேன்.

என் நோக்கம் சர்ச்சையான, சந்தேகமான, புழக்கத்தில் இருக்கின்ற விசயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே. இது தவறு என்பது என் உள்ளத்தில் மட்டும் உதித்திருக்கவில்லை என்பதற்கு இங்கே இடப்படும் பின்னூட்டங்களே சாட்சி.

நான் இதை பாவமாகவே கருதுகிறேன். மேலதிக விளக்கத்திற்கு தெளிவான சிந்தனையாளர்களை, மார்க்க அறிஞர்களை அனுகி நம்முடைய காரியங்களைச் சரி செய்து கொள்வது நம் ஒவ்வொருவர் மீதும் கடமை.

மேலும் உணவுப் பொருளை மாத்திரமல்ல பொதுவாகவே தாமதித்து விற்கும் வியாபாரத்தை மார்கம் அனுமதிக்கவில்லையோ? என்றே எண்ணத்தோன்றுகிறது இந்த ஹதீசைப் பார்க்கும்போது

பாகம் 2, அத்தியாயம் 34, எண் 2060
அபுல் மின்ஹால்(ரஹ்) அறிவித்தார்.

"நான் நாணய மாற்று வியாபாரம் செய்து வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் இப்னு அர்கம்(ரலி), பராஉ இப்னு ஆஸிப்(ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்; அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம். அதற்கு 'உடனுக்குடன் மாற்றினால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் அது கூடாது!" என அவர்கள் பதிலளித்தார்கள்!' என்றார்கள்!" (நன்றி சித்தார்க்கோட்டை.காம்)

நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!

ம'அஸ்ஸலாம் நாணய
அன்புடன்
அபு ஈசா

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சபீர் காக்கா,
//நான் ஒரு கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கி மனைபோட்டு ஒரு மனை இவ்வளவு என்று விற்கக் கூவுகிறேன். எல்லோரும் விலை அதிகமென ஒதுங்க ஐந்து வருடங்கள் கழித்துத்தான் விற்கவே முடிகிறது.//

"நிச்சயமாக அல்லாஹ் உள்ளத்தில் மறைத்து வைத்திருப்பதையும், வெளிப்பத்தியதையும் நன்கு அறிகிறான் - அல் குர்ஆன்
அல்லாஹ் மனிதர்களின் உள்ளத்தைப் பார்த்தே செயல்களுக்கானா கூலியை வளங்குகிறான் என்பதே இஸ்லாத்தின் நிலைபாடு.

//செயலுக்கான கூலி எண்ணததின் அடிப்படையிலேயே அமையும் என்பதே மார்கத்தின் நிலைபாடு!// என்பதை ஏற்கனவே மேற்கோல் காட்டி இருக்கின்றேன்.

நீங்கள் எண்ண நோக்கத்தோடு விலையை ஏற்றி நிர்னயம் செய்கிறீர்கள் என்பதையும் அல்லாஹ் அறிந்தவன்.

மேலும் கொல்லை இலாபம் வைப்பதை மார்க்கம் தடை செய்கிறது.

//நான் பதுக்கினேனா? பி.கு.: நான் விற்கத்தான் வாங்கினேன். யாரும் வாங்காததால் விற்கவில்லை//

நீங்கள் விற்பதற்கு தயாராக இருக்கின்றீர்கள்! ஆனால் அது விற்கவில்லை என்பதால் பதுக்கலாகாது.

நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!

ம'அஸ்ஸலாம்
அன்புடன்
அபு ஈசா

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

Mr. M.H. ஜஹபர் சாதிக்

அன்புச் சகோதரரே,

நீங்கள் சொல்லும் நபர் நாளை வர இருக்கின்ற அவருடைய தேவைக்காக இன்று முதலீடு செய்து வைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. மேலும் அந்த மனைகளை அவர் தன் பிள்ளைக்கு வீடு கட்டுவதற்காகவும், அதற்கான செலவினங்களுக்கு உதவியாகவும் இருக்கும் என்பதற்காகவே வைத்திருக்கின்றாரே தவிர அதை ஒரு வானிபப் பொருளாக(stock) நாளை நல்ல இலாபம் கிட்டும் என்று விற்காமல் வைத்திருக்கவில்லை. எனவே அதை பதுக்கலாகக் கருதமுடியாது.

அதே போல் தங்கம் வாங்கி வைப்பதும் குற்றமில்லை.

பொதுவாகவே சொத்து சேர்ப்பதன் நோக்கம் நாளைய தேவைக்கு உதவியாக இருக்கும் என்பதே. ஒருவர் தங்கம் வாங்கி வைத்திருக்கிறார். அதை விற்பதற்கான சூழ்நிலை இல்லாவிடில் அதை விற்க மாட்டார். எனவே அதை பதுக்கலாகக் கருதமுடியாது.

அதே சமயம் தங்கம் வாங்கி விற்பவர் விலை ஏறும் வரைக் காத்திருந்தால் அது கூடாது.

இதற்காகவே அசையும்(Current) மற்றும் அசையா(Fixed) சொத்துக்கான விளக்கத்தை பதிந்திருந்தேன். அசையும் சொத்து என்பது விற்பனைக்காக வாங்கி வைக்கப்படுகின்ற பொருள். அது வீடு, நிலம், தங்கம் என்று எதுவாகவும் இருக்கலாம். சபீர் காக்கா சொன்னது போல் ஒரு பெரிய நிலத்தை வாங்கி மனை போட்டு விற்பனைக்காக வைத்திருந்தால் அது நிலம் என்பதற்காக அசையா சொத்தாகிவிடாது! அசையும் சொத்தாகவே கருத்தப்படும்! காரனம் அந்த நிலம் அவர்களிடத்திலே சரக்கு(stock) என்ற நிலையில் தான் இருக்கிறது. அதே போல பெரிய பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்பகளைக் கட்டி விற்பவர்களுக்கு அதுவும் அவர்களுடைய அசையும் சொத்தாகவே கருதப்படும். காரனம் அவர்களுடைய வானிபத்தில் கட்டிடம் தான் சரக்கு(stock). அவர்களே தங்களுடைய அலுவலகதிற்காக ஒரு கட்டிடத்தை வைத்திருந்தாலோ அல்லது வாடைக்கு விடுவதற்காக வைத்திருக்கின்ற கட்டிடமோ அசையா சொத்தாகும். இதெல்லாம் அசையா சொத்து என்று எந்த பட்டியலும் தயார் செய்ய முடியாது. எதற்காக என்கின்ற பன்பின் படியே அது அசையும் மற்றும் அசையா சொத்து என்ற தன்மையை அடைகிறது. பொதுவான புரிதலுக்காக பள்ளிக்கூட பாடங்களில் நிலம், கட்டிடம், இயந்திரம் போன்றவை அசையா சொத்து என்றும்; சரக்கு, ரொக்கம், கடனாளிகள் போன்றைவை அசையும் சொத்து என்றும் பட்டியலிடப்பட்டிருக்கும்.

அசையா சொத்தாக பட்டியலிடப்பட்டவை ஒரு வியாபரத்தில் சரக்காக(stock) இருக்கும்போது அதை அசையா சொத்தாக எப்படி கருத முடியும்?

ஒரு தொழிலில் விற்பனைக்காக வாங்கப்படுகிற பொருளை அசையும் சொத்தாகவும், அவர்களுடைய தேவைகளுக்காக/ சொத்துக்களாக (property) வாங்கப்படுதை அசையா சொத்தாகவும் வகைப்படுத்தலாம்

Abu Easa said...

நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!

ம'அஸ்ஸலாம்
அன்புடன்
அபு ஈசா

அப்துல்மாலிக் said...

ஆக மொத்தத்தில் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர மக்களே, வருகின்ற சூழலில் நமதூரில் பணக்காரர்கள் மட்டுமே வாழுவதற்கு தகுந்த சூழல் அமைய வாய்ப்பிருக்கிறது, ஏழைகள் வாடகைவீடுதான். இந்த நிலமை மாறவேண்டும் ஊர் மக்களின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு. எல்லோருக்கும் நிலம் கிடைக்கக்கூடிய சூழல் வரவேண்டும் அதர்கு விலையில் கொஞ்சம் மார்றம் வரவேண்டும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு