அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ் ! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் சென்ற மூன்று வருடங்களைப் போன்றே இவ்வருடமும் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 30ம் தேதிவரையில் கோடைவிடுமுறை மார்க்கப் பயிற்சி முகாம் இரண்டு இடங்களில் தனித் தனியே சின்ன நெசவுக்காரத் தெருவிலிருக்கும் பெண்கள் மதரஸாவில் மாணவிகளுக்கும், மரைக்கப் பள்ளியில் மாணவர்களுக்கும் மிகச் சிறப்புடன் நடந்தேறியது.
காலை 9 மணி முதல் நன்பகல் 12 மணி வரை மவ்லவி பட்டம் பெற்ற ஆலீம் உஸ்தாதுகளால் வகுப்புகள் நடைபெற்றது, காலை 11 மணி வரையில் குர்ஆன் தஜ்வீத் முறைப்படி பார்த்து ஓதுதல், சிறிய சூராக்கள் மனப்பாடம் செய்தல், நன்கு பார்த்து ஓதத் தெரிந்த மாணாவமணிகளுக்கு யாசீன், வாகிஆ, தபாரக்கல்லதீ போன்ற நீண்ட சூராக்களை மனப்பாடம் செய்ய வைப்பதும் அதனைத் தொடர்ந்து மாணவமணிகளின் வயதிற்கு தகுந்தார்போல் மார்க்க (அகீதா) கொள்கை சட்டங்கள் மற்றும் அன்றாட நடைமுறைக்குத் தேவையான முக்கிய துஆக்கள், இஸ்லாமிய வரலாறுகள் என்று தொடர்ந்து நல்ல முறையில் போதிக்கப்பட்டது. கோடை விடுமுறக்கென்று தயாரிக்கப்பட்ட பாடநூல்கள் சென்னையிலிருந்து வரவைக்கப்பட்டு மாணவமணிகளுக்கு வழங்கப்பட்டது.
நமதூரிலுள்ள பெரும்பாலான தெருக்களிலிருந்து 100க்கு மேற்பட்ட மாணவர்களும் 50க்கு மேற்பட்ட மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர். குறிப்பாக சென்னை போன்ற வெளியூர்களில் குடும்பத்தோடு இருக்கும் மாணாவமணிகள் தங்களது விடுமுறையை ஊரில் செலவிட வந்த தருனத்தை இந்த அருமையான பயிற்சியினை பயண்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. மாணவமணிகளுக்கு போதனைக்கிடையே தினமும் 11 மணியளவில் குளிர்பானங்கள், மற்றும் பகல் நேர சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டது.
நிறைவில் அதுநாள் வரை போதிக்கப்பட்ட அனைத்து தலைப்புக்களிலும் பரீட்சை வைப்பக்கப்பட்டு முதல் ஐந்து இடத்தைப் பெற்ற மாண்வர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியே சிறந்த பரிசுகள் வழங்கப்பட்டது.
இதேபோன்று வரும் வருடங்களிலும் மென்மேலும் இப்பணி தொடர்ந்திட தாங்கள் யாவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடன் துஆ செய்வதுடன் எல்லா வகையான ஒத்துழைப்பயும் நல்கிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
இவண்
மவ்லவி, ஹாபிழ் P.அப்துல் காதர்
மரைக்காப் பள்ளி
அதிராம்பட்டினம்
8 Responses So Far:
நல்ல விசயம்...உழைத்தவர்களுக்கு துவாக்களும் / வாழ்த்துக்களும்
தொடரட்டும் இவ்வகை நற்பனி(கள்) மென்மேலும் இன்ஷா அல்லாஹ்...
என்றும் எங்களின் ஆதரவும் தொடர்ந்திடும் வழமையாக !
மாஷா அல்லாஹ், கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் செலவிட வைத்தமை பாராட்டத் தகுந்தது!! அல்லாஹ் இனி வரும் வருடங்களிலும் இது போன்ற வகுப்புகள் நடைபெற எல்லா உதவிகளையும் செய்வானாக, ஆமீன்..
மாஷா அல்லாஹ், கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் செலவிட வைத்தமை பாராட்டத் தகுந்தது!! அல்லாஹ் இனி வரும் வருடங்களிலும் இது போன்ற வகுப்புகள் நடைபெற எல்லா உதவிகளையும் செய்வானாக, ஆமீன்..
தொடரட்டும் இவ்வகை நற்பனி(கள்) மென்மேலும் இன்ஷா அல்லாஹ்...
தொடரட்டும் இவ்வகை நற்பனி(கள்) மென்மேலும் இன்ஷா அல்லாஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்ஹம்துலில்லாஹ். மிக அருமையான பணி அல்லாஹ் இதில் ஈடுபட்ட அனைவருக்கும் பயன் தருவதுடன் இதற்காக உழைத்வர்களுக்கு
நற்கூலி வழங்குவானாக ஆமீன். நம் சமுதாயம் முன்னேற மிகச்சிறந்தவழி இது. இனி எல்லாம் நல்ல படி அமையும் என்பதை இது போல நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன.
இது போன்ற கோடைகால தீனியாத் பயிற்சி வகுப்புகள் நிறைய நடந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.
அதிரையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மக்தப் மதர்ஸாக்கள் தொடர்பாக விரைவில் ஓர் பதிவு வெளியிடப்படும்.
Assalamualikum.
www.tamilnirubar.org
தினக்ஸ்: பேச்சு போட்டியின் செங்கோட்டையை சேர்ந்தவர் பாத்திமா. அங்கன்வாடி ஊழியர். இவரது மூத்த மகள் ஹலிமா தர்வேஷ் (20). நெல்லை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் .....
Post a Comment