Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

திருட்டை தடுக்க சில யோசனைகள்... 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 23, 2011 | , ,


நம் ஊரில் திருமணமான இளைஞர்களும், பெரியவர்களும் பெரும்பாலும் அயல்நாடுகளுக்கு சென்று பொருளீட்டக்கூடியவர்களாக இருந்து வருகிறோம். அதனால் ஆண்களின் சதவிகிதம் பெண்களுடன் ஒப்பிடும் பொழுது நமதூரில் குறைவாகவே இருக்கும். இந்த தவிர்க்க முடியாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு சில சமூக விரோதிகளும், தீய எண்ணம் கொண்ட கயவர்களும், திருடர்களும் அவர்களின் கை வரிசையை எந்த நேரத்திலும் யார் வீட்டிலும் சமயம் பார்த்து அரங்கேற்ற முயற்சிக்கலாம். அதை முறியடிக்க‌ அல்லது தடுப்பதற்கு சில யோசனைகள் இதோ:

1. முதலில் நாம் எங்கு வசிக்கிறோமோ நம் வீட்டிற்கு அக்கம்பக்கத்து வீட்டினர்களுடன் அது யார் வீடாக இருந்தாலும் சரி நல்லுறவை வைத்து அதை மென்மேலும் வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ வேண்டும். அவ‌ர்க‌ளுட‌ன் ப‌ர‌ஸ்ப‌ர‌ம் கொடுக்க‌ல், வாங்க‌ல் வைத்துக்கொள்வ‌துட‌ன் அவ‌ர்க‌ள் தேவை அறிந்து நாமே சென்று உத‌வுத‌ல் அல்ல‌து ந‌ம் தேவைய‌றிந்து அவ‌ர்க‌ள் வ‌ந்து உத‌வுத‌ல் போன்ற‌ ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ள் மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் ச‌மூக‌ விரோதிக‌ளிட‌மிருந்து.

2. இர‌வில் ப‌டுக்கும் முன் வீட்டின் அனைத்து க‌த‌வுக‌ளும், பூட்டுக‌ளும் முறையே பூட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌வா என்ப‌தை ச‌ரிபார்த்துக்கொள்ள‌ வேண்டும்.

3. பெண்க‌ள் ம‌ட்டும் இருக்கும் வீடுக‌ளில் இர‌வில் ஏதேனும் திருட‌ன் நுழைந்து அச‌ம்பாவித‌ங்க‌ள் நிக‌ழ‌ இருக்கின்ற‌ன‌ என்ற‌ அச்ச‌ம் வ‌ந்தால் இது போன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்களை எதிர்கொள்வதற்கு முன்ன‌ரே வீட்டின் கொல்லைப்புற‌மோ அல்ல‌து வெளிவாயிலின் உய‌ரமான‌ இட‌த்தில் யாருக்கும் தெரியாவ‌ண்ண‌ம் "விட்டு விட்டு எரியக்கூடிய சிக‌ப்பு விள‌க்கு ஒன்றை பொருத்தி அத்துட‌ன் ஒரு அவ‌ச‌ர‌ ஊர்தி போல் ச‌ப்த‌ம் த‌ரும் காலிங் பெல் பேட்ட‌ரியில் இய‌ங்கும் ஒரு அழைப்பு ம‌ணியை பொருத்தி அத‌ன் பொத்தானை ந‌ம் வீட்டின் த‌னிய‌றையில் யாருக்கும் எளிதில் தெரியா வ‌ண்ண‌ம் பொருத்திக்கொண்டால் அது மிக‌வும் ப‌யனுள்ள‌தாக‌வும், பாதுகாப்பான‌தாக‌வும் இருக்கும் இது போன்ற‌ அச்ச‌ உண‌ர்வு ஏற்ப‌டும் ச‌ம‌ய‌ம் அதை ப‌ய‌ன்ப‌டுத்தி அக்க‌ம்ப‌க்க‌ வீட்டின‌ருக்கு ஒரு எச்ச‌ரிக்கையுட‌ன் கூடிய‌ விழிப்புண‌ர்வை எந்த‌ நேர‌த்திலும் கொடுக்க‌ இய‌லும்". ச‌மூக‌ விரோதிக‌ளும் திடீர் ச‌ப்த‌ம் கேட்டு அக்க‌ம்ப‌க்க‌த்தின‌ர் வ‌ரும் முன் த‌ப்பித்து ஓடி விடுவ‌ர் இல்லை அவர்களால் பிடிப‌டுவ‌ர்.

4. மேற்க‌ண்ட‌ சிக‌ப்பு விள‌க்கு அல்ல‌து அழைப்பு ம‌ணி பொருத்த‌ப்ப‌டுவ‌தால் குறைந்த‌து இர‌ண்டாயிர‌ம் அல்ல‌து மூவாயிர‌ம் ரூபாய் செல‌வாக‌லாம். அத‌னால் வீட்டின் ப‌ல‌ ல‌ட்ச ம‌திப்பிலான‌ பொருட்க‌ளும், விலை ம‌திப்பிட‌ முடியாத‌ பொக்கிச‌ பெண்களும் பாதுகாக்க‌ப்ப‌ட‌லாம் அல்ல‌வா?

5. தீபாவ‌ளி ச‌ம‌ய‌ம் க‌டைக‌ளில் விற்கும் சிறிய ரக‌ ச‌ர‌வெடிகளை சில‌ பாக்கெட்க‌ள் வாங்கி வீட்டில் சிறியவர்களுக்கு எளிதில் தெரியாத‌ இட‌த்தில் ப‌த்திர‌மாக‌ ம‌றைத்து வைத்திருந்தால் இர‌வு நேர‌ங்க‌ளில் வீட்டில் திருட‌ர்க‌ள்/கொள்ளைய‌ர்க‌ள் நுழைந்து விட்டார்க‌ள் அவ‌ர்க‌ளை எதிர்கொள்ள‌ இய‌லாம‌ல் ப‌ய‌ந்து போய் ச‌ப்த‌மும் செய்ய முடியாமல் உரைந்து போய் இருக்கும் பெண்க‌ள் அந்த‌ ச‌ம‌ய‌ம் தான் முன்பே வாங்கி யாருக்கும் தெரியாம‌ல் பாதுகாத்து வ‌ந்த‌ அந்த‌ ச‌ர‌வெடிக‌ளை கொத்தாக‌ வைத்து அத‌ன் திரியை கொளுத்தி ஜ‌ன்ன‌ல் வ‌ழியே போட்டு விட்டால் அது தொடர்ந்து வெடித்து அக்க‌ம்ப‌க்க‌த்தின‌ரை எழுப்பி திருட‌ர்க‌ளை த‌லைதெறிக்க‌ ஓட‌ச்செய்து விடும் அல்ல‌வா? இது கொஞ்ச‌ம் க‌டின‌மான‌ முய‌ற்சி தான் பெண்க‌ளை பொருத்த ம‌ட்டில்.

6. இல்லை எனில் டேப் ரெக்கார்ட‌ரில் கொஞ்ச‌ம் க‌ன‌மான‌ த‌டித்த‌ ஆண் குரலை (அல்லது பேய், பிசாசு போன்ற சிரிப்பொலியை) ப‌திவு செய்து வைத்து திருட‌ன் வ‌ரும் ச‌ம‌ய‌ம் போட்டு விட்டால் அவன் அது கேட்டு ஓடி விடுவான்.

7. இது போன்ற‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் நாம் வீட்டின் க‌த‌வுக‌ளை உட‌னே திற‌ந்து கொண்டு தக்க துணையின்றி வெளியில் வ‌ருவ‌தை த‌விர்த்துக்கொள்வ‌து ந‌ல்ல‌து.

8. இது போன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் எல்லாம் மின்சார‌ம் துண்டிக்க‌ப்ப‌ட்ட‌ இர‌வு நேர‌ங்க‌ளில் தான் அதிகம் ந‌ட‌க்க‌ வாய்ப்பு இருக்கிற‌து. என‌வே பேட்ட‌ரி மூல‌ம் இய‌ங்கும் பொருட்க‌ளுக்கு (உதார‌ண‌ம் டார்ச் லைட்) முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌து ந‌ல்ல‌து.

9. முக்கிய‌மாக‌ அக்க‌ம்ப‌க்க‌த்து வீட்டில் உள்ள‌ பெரிய‌வ‌ர்களின் (ஆண்க‌ளாய் இருந்தால் அடுத்த வீட்டு ஆண்க‌ளின் அல்லது பெண்க‌ளாய் இருந்தால் அடுத்த வீட்டு பெண்க‌ளின்) மொபைல் போன் ந‌ம்ப‌ர்க‌ளை வாங்கி போனில் ப‌திந்து வைத்து கொள்ள‌ வேண்டும். திருட‌ர்க‌ள் வீட்டில் நுழைந்து விட்டார்க‌ள் என்ற‌ அச்ச‌ம் இருந்தால் உட‌னே அவ‌ர்க‌ளுக்கு எவ்வித‌ ப‌த‌ட்ட‌மும் இல்லாம‌ல் அமைதியாக‌ போன் செய்து விவ‌ர‌த்தை சொல்லி அவ‌ர்க‌ளின் உத‌வியை நாட‌லாம்.

10. மேற்க‌ண்ட‌ சில‌ ஏற்பாடுக‌ள் வீட்டில் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌தை ப‌ர‌ஸ்ப‌ர‌ம் அக்க‌ம்ப‌க்க‌த்து வீட்டின‌ருட‌ன் ர‌க‌சிய‌மாக‌ த‌னியே பேசி முன்பே ப‌கிர்ந்து கொள்வ‌து ந‌ல்ல‌து. திடீரென‌ அவ‌ர்க‌ளின் உத‌வியை நாடுவ‌து அவ‌ர்க‌ளுக்கு அசொள‌க‌ரிய‌மாக‌ இருக்க‌லாம். அதனால் முன்பே சில‌ த‌க‌வ‌ல்க‌ளை சொல்லி வைப்ப‌து ந‌ல்ல‌து.

11. இது போன்ற‌ இக்க‌ட்டான, பதட்டமான‌ சூழ்நிலையில் ந‌ம‌க்கு (ஆணாக‌ இருந்தாலும் ச‌ரி பெண்ணாக‌ இருந்தாலும் சரி) முத‌லில் கை கொடுத்து உத‌வுவ‌து "ம‌ன‌ திட‌ம்/தைரிய‌ம்" தான். அதை அந்த‌ நேர‌த்தில் வ‌ர‌ வைத்து அதை முறையே ப‌க்குவ‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்வ‌து பெரும் அச‌ம்பாவித‌ங்க‌ள் நம் வீட்டிலும் அல்லது அக்கம்பக்கத்து வீட்டிலும் ந‌டைபெறுவ‌தை த‌டுக்க‌லாம்/த‌விர்க்க‌லாம்.

12. இந்த காலத்தில் திருட‌ர்க‌ள் எந்த‌ ரூப‌த்தில் ந‌ம் வீட்டிற்குள் நுழைவார்க‌ள் என்று நாம் எதை வைத்தும் ஊர்ஜித‌ம் செய்ய‌ இய‌லாத‌ நிலை உள்ள‌து. எதிலும் க‌வ‌ன‌மும், விழிப்புண‌ர்வும் வேண்டும். ம‌ற்ற‌வைக‌ளை ந‌ம்மைப்ப‌டைத்து ப‌ரிபாலிக்கும் இறைவ‌ன் பார்த்துக்கொள்ள‌ போதுமான‌வ‌ன்.

13. கால‌மெல்லாம் நாம் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு (பொருள், ஆயுட்காலம், ஆசாபாசங்களை தியாகம் செய்து, ஊரின் இன்ப,துன்பங்களில் பங்கெடுக்காது, வியர்வை சிந்தி) ச‌ம்பாதித்து, சேமித்து வைத்திருப்பதை தன் தீய குணத்தாலும், திருட்டுத்தனத்தாலும் நொடிப்பொழுதில் அடைந்து விட‌ க‌ய‌வ‌ர்க‌ள் கூட்டம் (அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்) எந்த‌ நேர‌த்திலும் முய‌ற்சித்துக்கொண்டிருக்கும். அதை முறிய‌டித்து ந‌ம் உட‌மைக‌ளையும், வீட்டின‌ரையும் பாதுகாப்ப‌து ந‌ம் ஒவ்வொருவரின் தலையாய க‌ட‌மையும், பொறுப்பும் ஆகும்.

இந்த‌ ப‌திவு எழுதுவ‌த‌ற்கு கார‌ண‌ம் என்ன‌வெனில் ச‌மீப‌கால‌மாக‌ தொலைக்காட்சி செய்திக‌ளில் முதன்மைச்செய்தியாக வரும் க‌ண‌வ‌ன் முன் ம‌னைவி ந‌கைக்காக‌ வெட்டிக்கொலை, ப‌ண‌த்திற்காக‌ ம‌னைவி முன் கொள்ளைய‌ர்க‌ளால் க‌ண‌வனை வெட்டிக்கொன்ற கொடூரம், பூட்டி இருந்த‌ வீட்டில் பீரோவை உடைத்து துணிக‌ர‌க்கொள்ளை, வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை க‌ட்டி வைத்து விட்டு பீரோவை உடைத்து ப‌ண‌ம், ந‌கை கொள்ளை, ப‌ண‌த்திற்காக‌ மாண‌வ‌ன்/மாண‌வி க‌ட‌த்த‌ல், வ‌ய‌தான‌ க‌ண‌வ‌ன், ம‌னைவி மீது மிளகாய்ப்பொடி தூவி கொள்ளை, விருந்தினர் போல் வீட்டிற்கு வந்து துணிகரக்கொள்ளை, என்று அன்றாட‌ம் ந‌ம் நாட்டில் குறிப்பாக‌ த‌மிழ‌க‌த்தில் ந‌ட‌ந்தேறும் கொள்ளைச்ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும், அத‌னால் ஏற்ப‌டும் கொலைக்குற்ற‌ங்க‌ளையும் அடுக்கிக்கொண்டே போக‌லாம்.

எல்லாவ‌ற்றிற்கும் காவ‌ல்துறையின் உத‌வியை ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌தும் நாடுவ‌தை விட‌ ந‌ம‌க்கு நாமே குறைந்த‌ ப‌ட்ச‌ பாதுகாப்பு தேவைக‌ளை ஏற்ப‌டுத்திக்கொள்வ‌து சால‌ச்சிற‌ந்த‌து.

இத‌ற்கு ஒரு விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்த‌வும், த‌டுக்க‌ சில‌ வ‌ழிமுறைக‌ளும் மேலே த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. இன்னும் மேல‌திக‌ விவ‌ர‌ங்க‌ளையும், யோச‌னைக‌ளையும், வ‌ழிமுறைக‌ளையும் படிப்பவர்கள் த‌ங்க‌ளின் பின்னூட்ட‌ம் மூல‌ம் தாராள‌மாக‌ த‌ந்து இந்த‌ ச‌மூக சீர்கேட்டிலிருந்து சிற‌ப்பான‌ விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்த‌லாம்.

- மு.செ.மு.நெய்னா முஹம்மது

மேலே பதியப்பட்டுள்ள ஆக்கம் கட்டுரையாளரின் தன்னார்வத்தாலும், ஊர் நலன் கருதியும் அவரால் சேகரிக்கப்பட தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

12 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n): பனுள்ள ஆலோசனைகள் ! இங்கே கூறப்பட்டிருக்கும் சில யோசனைகளில் அலார்ம் நடைமுறையிலும் இருப்பதை கண்டிருக்கிறேன் (உனக்கு எப்படித் தெரியும்னு கேட்கப்படாது - வீட்டிலுள்ளவங்களே அழைத்துச் சென்று காட்டியது எப்படி பொறுத்தப்பட்டிருக்கிறது என்று) !

சரி ! ஒரு சொடுக்கு கேள்வி: திருட்டு என்றால் கண்களுக்கு புலப்படும் பொருட்கள் மட்டும் காணாமல் போவதா இல்லை இன்னுமெ வேறு வகைகள் உண்டா MSM(n) ?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உருப்படியான யோசனைகள்.
பெரும்பொருட்செலவில் வீட்டை கட்டும்போது அலாரம் போன்ற பாதுகாப்பு முறைகளுக்கும் செலவை ஒதுக்கி நம் 'டென்சனை'குறைத்துக் கொள்ளலாமே!

பட்டாசு,டேப்ரிக்கார் செய்தி சிரிப்பா இருந்தது.

// கேள்வி: திருட்டு என்றால் கண்களுக்கு புலப்படும் பொருட்கள் மட்டும் காணாமல் போவதா இல்லை இன்னுமவேறு வகைகள் உண்டா MSM(n) ?//

கற்பையும் சொல்லலாமே!

இதை தவிர்க்க மார்க்கக் கல்வியோடு இணைந்த படிப்புகள் அவசியம்.எந்நேரமும் இஸ்லாமிய அணுகுமுறையோடு வாழ்வதும் அவசியம்.

Yasir said...

நல்ல பயனுள்ள யோசனைகள்...இந்த செய்தி எந்த திருடர்கள் பார்வைக்கும் போய்விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்

Yasir said...

மிளகாய் பொடி வைத்தியமும் பெண்களுக்கு பேரளவில் உதவி செய்யும் இந்த மாதிரி தருணங்களில்...எல்லார் விட்டீலும் எப்போதும் இருக்கும் பொருள்..உபோயகப்படுத்தும் போது நம் கண்ணில் பட்டு விடாமல் இருக்க கொஞ்சம் பயிற்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்

அதிரை முஜீப் said...

திருட்டு தொடர்பாக நானே ஒரு விழிப்புணர்வு கட்டுரை எழுதவேண்டும் அதன் மூலம் நம்மூர் மக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று என்னிகொண்டிருந்த வேலையில் இதுபோன்ற சிறந்த கட்டுரையை சகோதரர் மு.செ.மு.நெய்னா முஹம்மது எழுதி என்னை முந்தி கொண்டதற்கு பாராட்டுகள்!. ஏனெனில்.......!

என் வீட்டிலே மூன்றுமுறை ஹேட்ரிக் திருட்டு!. ஒருமுறை பூட்டு மற்றும் பீரோ இரும்பு கதவை உடைத்து நகையுடன் பட்டுப்புடவை மற்றும் சில பொருட்களையும் ஆட்டையைபோட்டு சென்றுவிட்டான். போலிஸ் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள்(?) எல்லாம் வந்து வழக்கம்போல் சென்றுவிட்டனர். இது அணைத்து தொலைகாட்சி மற்றும் பத்திரிக்கையிலும் வந்தது. ஆனால் திருடனும் வழக்கம் போல் கடந்த இரு வாரத்திற்கு முன்பும் விருந்தாளி போல்வந்து தன் விடாமுயற்சியை தொடர்ந்துள்ளான். போலீசில் மீண்டும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயன் ஏதும் இல்லை!.

அதனால் சென்னையில் உள்ள வக்கீல் மூலம் மொத்த அதிரையையும் கவனத்தில் கொண்டு, அதிரை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு அதிரையில் இதுவரையில் நடந்த திருட்டுகள் எத்தனை?. அதில் எத்தனைக்கு முடிவு எட்டப்பட்டுள்ளது என்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் அவர் ஈடு பட்டுள்ளார். முயற்சிகள் தொடர்கின்றன. ஆனால் நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களை நம்பி பயன் இல்லை!.

மேலும் கும்பகோணத்தில் நம் சகோதரர் ஒருவர் திருடர்களை காட்டிகொடுக்கும் கருவி ஒன்றை விற்பதாக ஒரு தகவல் உள்ளது. அதை நம் வீட்டில் பொருத்திவிட்டால் (movement detecting sensor) பூட்டிய வீட்டில் அன்னியர்களின் நடமாட்டம் இருக்கும் போது நாம் ஏற்கனவே பதிவு செய்த மூன்று நபர்களுக்கு குறுந்தகவல் தானாகவே அனுப்பிவிடும்.

அதிரை முஜீப் said...

அதுபற்றிய கூடுதல் தகவல்:
ஆளில்லாத வீடு மற்றும் கடைகளில் அல்லது வீட்டில் ஆட்கள் இருந்து அவர்கள் இரவில் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில் திருடன் புகுந்து கைவரிசை காட்டும்போது அவனது நடமாட்டத்தை (movement) இக்கருவி detec செய்து, இதில் நீங்கள் முன்கூட்டி பதிவுசெய்து வைக்கும் மூன்று தொலைபேசி எண்களை autodial செய்து அழைத்து, ஆறு வினாடிகள் அளவிலான பிரி-ரெகார்டட் மெஸேஜினை (உதாரணம்: ”வீட்டில் அன்னியர்களின் நடமாட்டம் இருப்பது டிடெக்ட் ஆகியுள்ளது. உடனே வீட்டிற்கு வரவும்”) ரீபிளே செய்யும் ஆற்றல் கொண்டது. மூன்று எண்களுக்கு அழைப்பு போகும்போது மூவரில் உங்கள் வீட்டுக்கு அருகாமையிலுள்ள ஒருவராவது உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து சென்று ஆவன செய்து திருடனை பிடிக்க முடியும்.
கூடுதல் அம்சமாக, 125dB ஒலி அளவில் உரக்க (அல்ட்ரா-லவ்ட்) சைரன் ஒலி எழுப்புகிறது. இந்த சைரன் சப்தத்தில் திருடன் வெறுண்டோடுவதோடு வீட்டில் அயர்ந்து உறங்கிக்-கொண்டிருப்பவர்களும் எழுந்து நிலைமையை உணர்ந்து தக்க நடவடிக்கை எடுக்க முடியும். இந்த கருவி பொருத்தவும் இயக்கவும் சுலபமானது. இதனை படித்தவர் படிக்காதவர் யாரும் சிரமமின்றி கையாளலாம். வெரி பிரில்லியண்ட் ப்ராடக்ட். ஒரு வருட உத்திரவாதமுண்டு.
வீடு புகுந்து திருடுவது, நகை கடை பெட்டிகடை என்ற பாகுபாடில்லாமல் கதவை உடைத்து திருடுவது, தனித்திருக்கும் பெண்கள் மற்றும் முதியோர்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து உண்டாக்குவது என்பதெல்லாம் இன்று அடிக்கடி நடக்கும் பேரதிர்ச்சி தரும் நிகழ்வுகள். இப்படியொரு சூழ்நிலையில் இதுபோன்ற பாதுகாப்பு ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு கடைக்கும் மிகமிக அவசியமானது.
வெளிநாட்டில் இருப்பவர்கள் +919629403994 என்ற எண்ணில் அல்லது என் ஈமெயிலில் தொடர்புகொண்டு ஆர்டர் செய்தால் அவர்களின் விலாசத்தில் இக்கருவியை சேர்பித்து இதனை பொருத்துவது, இயக்குவது, செய்யகூடியது, செய்யகூடாதது போன்ற எல்லா விபரங்களும் சொல்லிகொடுத்து உங்கள் வீட்டாரிடமே இதற்கான தொகையை பெற்றுகொள்வேன். கும்பகோணம் பெரியத்தெரு பிஸ்மி சில்க்ஸ் கட்டிட முதல் மாடியிலுள்ள என் அலுவலகத்திற்கு வந்து பெற்றுகொள்ளலாம்.
குவைத்திலும் சவூதி அரேபியாவிலும் (அல்குபர்) எனக்கு பிரதிநிதிகள் உள்ளார்கள் (குவைத் பிரதிநிதியின் எண்: +96599812433; சவூதி பிரதிநிதியின் எண்: +966551886782) இந்த இரு நாடுகளிலும் வாழும் அன்பர்கள் தங்கள் ஆர்டர்களை அங்குள்ள என் பிரதிநிதிகளிடம் தந்து பணமும் அங்கேயே செலுத்தி விடலாம். சவூதி பெரிய நாடு என்பதால் அங்கு இன்னும் பல பிரதிநிதிகள் தேவையுள்ளார்கள், ஆர்வமுள்ளவர்கள் என்னுடன் தொடர்புகொண்டு விபரங்கள் அறியலாம். இதன் சில்லரை விலை ரூ4000 மட்டும்.
அக்பர் +919629403994
எல்லம் சரிதான்!. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது தான் உண்மை!!.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நல்ல பயனுள்ள யோசனைகள்...இந்த செய்தி எந்த திருடர்கள் பார்வைக்கும் போய்விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

சகோதரர் முஜீப் அவர்களின் தகவலுக்கு மிக்க நன்றி.

sabeer.abushahruk said...

யோசனைகள் நல்லாத்தான் இருக்கு. ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

ZAKIR HUSSAIN said...

திருட்டை தடுக்க உள்ள யோசனைகள் சில விசயங்கள் "முன் ஜாக்கிரதை முத்தண்ணா" மாதிரி இருக்கிறது.

திருடனை ஏதொ பஞ்சாயத்து தேர்தலில் ஜெயித்தமாதிரி பட்டாசு கொழுத்தி வரவேற்பது. பிறகு டேப் ரெக்கார்டரில் தடித்த குரலில் பாட்டு போடுவது [ அடுத்த தடவை நல்ல பாட்டுப்போடுங்கப்பு என நேயர் விருப்பம் மாதிரி கேட்காமல் இருந்தால் சரி] இப்படி எல்லாம் "ஜபர்தஸ்த்து' பன்ன எங்கே நேரம் இருக்கப்போகிறது.

#ஏன் யாரும் காப்புறுதி [BURGLARY INSURANCE] ஏதும் எடுத்து வைப்பதில்லை.

# ஒரு காலத்தில் எங்கள் தெருவிலும் இந்த திருட்டு பிரச்சினை இருந்தது, நாங்கள் எல்லாம் ஒரு டீம் மாதிரி இருந்து ஒரு 10 நாள் பனியில் காவல் காத்து அந்த திருடனை பிடித்து போலிஸில் ஒப்படித்தோம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//#ஏன் யாரும் காப்புறுதி [BURGLARY INSURANCE] ஏதும் எடுத்து வைப்பதில்லை.//

அதுல தான் திருட்டுத்தனம் அதிகம்.

ZAKIR HUSSAIN said...

I am against this opinion, that means the entire population will not buy the Burglary insurance. Do you mean to say some millions of people made a wrong choice?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

Zakir kaka, thanks for your immediate response.

There is no power in adirai for few hours, thats why i could not reply your feedback.

In general, most of the people were forced to take insurance policies by Insurance company's sales Team rather than volunterly knowing the policies. People who does't know fully about the advantage and disadvantages of their insurance scheme. Infact when it comes to claim, so much of hidden procedures will come in to play and makes insurer crazy, may be few exception.

The above one line comment does't mean that millions of people made wrong choice. I would like to insist the point that many people were forced to take insurance scheme because of strong sales team of insurance companies. This is reality. Thats why i said அதுல தான் திருட்டுத்தனம்.

Any way i might me wrong.. Let us see in detailed article very soon in Adirainirubar.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு