இன்று ஒரு தகவல் !
வழங்குபவர் நம்மகட்சி அதிரைப்பட்டினத்தான் !
Kopi Luwak
தலைப்பை படித்ததும் கேட்வாக் பற்றி கற்பனையில் போய்விடாதீர்கள் எனக்கு தெரிந்த ஒருவர் இந்தோனேசியா போய்விட்டுவந்தார்,வந்ததிலிருந்து லுவாக் லுவாக் என்று சொல்லி கொண்டு இருந்தார் ,சரி மனுசன் வாக்கிங் போறதைதான் இந்தோனேசியா மொழியில் இப்படி சொல்றார் என்று நினைத்தால். அது அவர் அங்கு குடித்த காபியின் பெயராம் (நான் அதை என்னேண்டு கேட்கணுமாம் அதான் இந்த பில்ட்டப், ஒசிலதான் குடித்திருப்பார், அவர் அங்கு போய் பார்த்த ஆள் வெயிட்டனாவர்) அதைப்பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி செய்தபோது கிடைத்த சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று இங்கு தொகுக்கின்றேன் படிங்களேன்.
உலகத்துலேயே விலை அதிகமானது லூவா காபிதாங்க (Kopi Luwak) (நேத்துதான் இது தெரிந்தது), வெல கொஞ்சம்தாங்க ஒரு கிலோ 3,00,000 இந்தியன் ரூபிஸ் தாங்க (உள்ளூர் வரிகள் தனி), இது இந்தோனேசியாவுல தயாரிக்கப்படுது. எப்படி தயாரிக்கறாங்கன்னு தெரிஞ்சா கொஞ்சம் சங்கோஜபடுவீங்க. ஆனால் தெரிந்து கொள்வது நல்லதுதானே இது ஒன்றும் சீனத்து வித்தை கிடையாது என்று யாரவது சொன்னால் அது சரிதாங்க
மரநாய் (Paradoxurus hermaphroditus) கேள்விப்பட்டு இருக்கிங்களா.. இப்பவும் எங்கவீட்டு தென்னை மரங்களை குத்தகைக்கு எடுத்து பதம் பார்த்து கொண்டு இருக்கிறது... வாப்பா இதுவரைக்கும் 5 நாய்களை கொன்று எங்க உம்மாவிடம் நல்ல பெயர் வாங்கி இருக்கிறார்கள். மரநாயின் இருப்பிடமே ஆதவற்ற கிடக்கும் எங்கே பக்கத்து வீடான சூடுதண்ணி மரைக்கா வீடுதான், இந்த மரநாய் தெற்காசிய நாடுகள் எல்லாத்துலேயும் பரவலாக காணப்படுது. இவை வாசனைத்திரவியம் எடுக்கப்படும் புனுகுப் பூனை ஜாதியை (Civet cats) சேர்ந்தவை. இந்த மரநாய்க்கும் காபிக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கிறீங்களா.. சம்பந்தம் சம்பந்திகள் அளவு இருக்கு.
படங்காட்டிய விளங்கவைக்கிறது எங்களுக்கு கண்வந்த கலை... கண்ண திறந்துகிட்டு, மூக்கை மூடிகிட்டு அப்படியே ஒவ்வொருபடமா பாருங்க... காபி தாயாரிக்கும் மெயின் பேக்டரியின் லொக்கேஷனை தெரிந்து கொள்ளலாம்.
இதுதான் அந்த மரநாய் ( நம்ம ஊரு மரநாய் சாயல் இல்லேதான் )
மரநாய் காபி பீன்சை சாப்புடுது
நிறைய மரநாய்களை புடிச்சி வெச்சு காபி பீன்ச சாப்புட வைக்கிறாங்க
காபி பீன்ச சாப்புடுற மரநாய், கொட்டைகளை மட்டும் அப்பிடியே கழிந்து வைத்துவிடும்.
அதன் கழிவில் இருந்து காபி கொட்டைகளை எடுத்து சுத்தம் பண்ணினா...
காஸ்ட்லி காபி kopi luwak ரெடி....!
நான் சொன்னதை நம்பலையா...... கூகிள்ல போயி கண்ணாடி போட்டுக்கிட்டு தேடிப்பாருங்கோ கண்ணாபின்னா தகவல் வரும்....
மரநாயின் வயிற்றில் உள்ள செரிமான என்சைம்களால் மாற்றங்களுக்கு உள்ளாவதால் காபிக் கொட்டைகளின் கசப்பு குறைந்து சுவை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. கிடைச்சா ஒருதடவ குடிச்சுப்பாருங்க.. மலேசியா,ஜப்பான்ல இருக்கிறவங்க சுவைத்து பார்த்து இருக்கலாம்
தகவல் தொகுப்பு : யாசிர்-துபாய்
உதவி : என் நண்பர் / கூகிள்
17 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்.
காபிக்கு தூயதமிழ் "கொட்டை வடி நீர்" கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் மர நாய் பழம்திண்ணு போட்ட கொட்டை வடி நீர்ன்னு இப்பத்தான் தெரிந்தது.இதை கேட்டு("cat"u)எழுதிய யாசிருக்கு ஒரு ஜே! இன்று ஒரு தகவல் மிகவும் அருமை! தென்கச்சி சுவாமினாதனிடம் "cat"tathu போல இருக்கு.
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் யாசிர்,
புதிய தகவல். பகிர்வுக்கு மிக்க நன்றி.
இதை மரநாய் மருந்து காப்பி என்று அழைக்கலாமே.
காஸ்ட்லியான இந்த காப்பி ஏதாவது ஒரு நோயிக்கு நிவரணம் தரும் போல் தான் தெரிகிறது. மருந்து வகைகளின் expert ஜாஹிர் காக்கா அவர்கள் விளக்கம் தருவார்கள் என்று எதிப்பார்க்கிறோம்.
இன்று ஒரு தகவலாக இருந்தாலும் என்றும் அறிந்துக்கொள்ளக்கூடிய தகவல்.
/*மரநாயின் வயிற்றில் உள்ள செரிமான என்சைம்களால் மாற்றங்களுக்கு உள்ளாவதால் காபிக் கொட்டைகளின் கசப்பு குறைந்து சுவை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. கிடைச்சா ஒருதடவ குடிச்சுப்பாருங்க.. மலேசியா,ஜப்பான்ல இருக்கிறவங்க சுவைத்து பார்த்து இருக்கலாம்*/
தென்கச்சி சுவாமினாதன் 'இன்று ஒரு தகவல்'ஐ முடிக்கும் போது, ஒரு நகைச்சுவையோடு முடிப்பார், அது மாதிரி மேலே உள்ள கட்டுரையின் கடைசி வரிகளும் காமெடி கீமெடி இல்லையே??? :)
லுவா காஃபி யா? இல்லை "ஊ...வே" காஃபியா? இங்கே போயி பாருங்க...
http://www.youtube.com/watch?v=1Q7IYpLYQ7Q
இங்கேயும் சில தகவல் இருக்கு..
http://en.wikipedia.org/wiki/Kopi_Luwak
தம்பி யாசிர் : தேடித் தந்த நல்ல தகவல் ! உங்க நண்பர் சரியா வெயிட்டான பார்ட்டிதான் (கூகிலானந்தா ஆசிரமத்திலேயிருந்துல தகவல் வந்திருக்கு)
தம்பி ஷாஃபாத் கேட்கும் நகைச் சுவைக்கு பின்னால் வருபவர்களின் பாடு என்று விட்டிருக்கலாம் !
பொருத்திருந்துதான் பார்போமே !
இது காபி அல்ல!. (கக்)காபீ!.
ரொம்ப ஸ்ட்ராங்க்!. தரம் சுவை மனம் நிறைந்தது!. டீலர்கள் தேவை என்று நல்ல வேலை, நம் சகோதரர் யாசீர் விளம்பரம் செய்யாமல் இருந்தாரே!!!.
//தென்கச்சி சுவாமினாதன் 'இன்று ஒரு தகவல்'ஐ முடிக்கும் போது, ஒரு நகைச்சுவையோடு முடிப்பார்.// அதான் நீங்லெல்லாம் இருக்கீங்ளே என்று என்று விட்டுவிட்டேன்.... //ஊ...வே" காஃபியா? இங்கே போயி பாருங்க// இதைவிட ஒரு நகைச்சுவை வேண்டுமா ??
பன்மொழிப்புலவனே...பழமொழிகளின் வார்த்தைகளை பந்தாடும் வித்தகனே.. கிரவுனே...உ(ங்க)ன் கருத்தோடு தொடங்க என் ஆக்கம் கொடுத்து வைத்து இருக்கவேண்டும்
Yasir சொன்னது…
பன்மொழிப்புலவனே...பழமொழிகளின் வார்த்தைகளை பந்தாடும் வித்தகனே.. கிரவுனே...உ(ங்க)ன் கருத்தோடு தொடங்க என் ஆக்கம் கொடுத்து வைத்து இருக்கவேண்டும்.
------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.எல்லா புகழும் அல்லாஹ் மட்டுமே உரித்தாகுக. சகோ. சரியான வடிகட்டின (கொட்டை வடி நீர்=காப்பி)என்னைப்பார்த்து இத்தனை நம்பிக்கைகளா? அன்பா? சும்மா காப்பி குடிச்சமாதிரி உரு உசுப்பு ,உசிப்பி விட்டிடீங்க யாசிர். நல்ல தொரு தகவல், நகைச்சுவை ! பாவம் நம்ம கனிமொழிக்குத்தான் இதுபோல் சத்தான காப்பி தேவைபடுகிறது. ஒருக்கால் கலைஞர் நாளை இப்படி எழுதலாம். நம் ராச,ராச சோழன் இமயம் வென்றான், காடாரம் கொண்டான் பின் இந்தோனேசியவில் அவனின் அரசாட்சி பதிந்த அன்னாளில் உருவாக்கப்பட்டதுதான் இந்த "லுவாக்" என்னும் கொட்டை வடி நீர் அது திராவிடனின் சொத்து" அதை நாங்கள் அடுத்த முறை ஆட்சிக்கு வரும் போது அதை மீட்டெடுத்து அந்த கொட்டையின் மூலத்தை அந்த அரிய பழத்தை தமிழ் நாடெங்கும் விதைத்து வீட்டுக்கு ஒரு மரம் வீதம் நாம் இலவசமாய் காப்பி பருக்க ஏற்பாடு செய்யப்படும்.மரத்தமிழன் ஒவ்வொரு வீட்டிலும் மர நாய் வளர்க்கப்படும்.
யாசிர்...இப்படி மலேஷியாவில் உள்ளவர்களையும் வம்புக்குஇழுப்பது சரியில்லை..[ இத்தனை விதமான காஃபி இருக்கும்போது இந்த "வ் உவே" காஃபி யாராவது குடிப்பார்களா....இந்த மாதிரி அயிட்டம் எல்லாம் கதாநாயகனின் அப்பனுக்கு தெரு ஜன்க்சனில் வைத்து ஊரார் முன்னிலையில் வம்புடியாக வாயில் ஊற்றி ..இதில் க்லோஸப் சாட் வேறு...பிறகு கதாநாயகன் பலி வாங்க காரணமான பானம் இது தான் என்று க்லைமாக்ஸ்ஸில் காட்டுகிற விசயத்தை இப்படி ஏதோ Coffee Bean / StarBucks Coffee / SanFrancisco Coffee ல் உட்கார்ந்து குடிப்பதுபோல் எழுதியிருப்பது அனியாயம்.
அதிரை முஜீப் சொன்னது..
இது காபி அல்ல!. (கக்)காபீ!. //
தாறுமாறான ரிப்பீட்ட்ட்ட்ட்டு..
//இது காபி அல்ல!. (கக்)காபீ!.// ஹாஹாஹா.....இந்த பேர வைச்சுகிட்டு விளம்பரத்துக்கு போன “தல” நீங்கதான் பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம் செஞ்சுதரணும்... அந்த அளவிற்க்கு மங்களகரமான பெயர் வைத்து இருக்கிறீர்கள்
//மரநாய் (Paradoxurus hermaphroditus) கேள்விப்பட்டு இருக்கிங்களா.. இப்பவும் எங்கவீட்டு தென்னை மரங்களை குத்தகைக்கு எடுத்து பதம் பார்த்து கொண்டு இருக்கிறது//
"அதான் உங்க வீட்டு காபி டேஸ்டா இருந்த்ததா"
நல்ல,[அசிங்கமான (காப்)பீ] தகவல்.
காலையில் குடிக்க... சாரி படிக்க வேண்டியதை இப்பதான் படிக்க முடிகிறது. ஐஃபோன் ஸ்கீம் முடிஞ்சதும் பொய் ஃபோன் ஆகிப்போனது. (i wont have frequent access to the net until i join a scheme)
யாசிரின் காஃபி 'உவேக்' என்றாலும் அழகான சுவாரஸ்யமான எழுத்து நடையில் குடிக்க வைத்துவிடுவார் போலிருக்கிறது . ஆக்கம் super!.
ட்டர்கிஷ் காஃபியும் கஃவாவும் எனக்குப் பிடிக்கும். தவிர, தினமும் ஒரு முறையாவது கொதிநீரில் காஃபி மட்டும் கலந்து ( நோ ஷுகர், நோ மில்க்) கசப்பாக குடிக்க வில்லையெனில் எனக்கு கைகால் உதறும்.
மற்றபடி, முஜீபின் மூக்கைப்பிடிக் வைக்கும் காப்பீக்கு இர்ஷாத்தின் ரிப்பீட்லாம் கொஞ்சம் கலீஜாக்கீதுப்பா.
கருத்து சொன்ன அனைவரும் காபி குடிக்க “பர்ஜுமான் செண்டர்” வந்துருங்க....கக்காபி இல்லை... "Havana Cafe " தான்...லுவாக் குடிக்கிற அளவிற்க்கு இன்னும் வசதி வரலை
இதுக்கு மேலேயும் இத குடிக்கனுமா?
Post a Comment