சகோதரர் யாசிர் எழுதி அண்மையில் அதிரை நிருபரில் வெளிவந்த "லூவாக் காப்பி" கட்டுரையை படிச்சதும் ஏஹப்பட்ட சந்தேகம் வர ஆரம்பிச்சிடிச்சி. அதுனாலெ ஒரு சின்ன கட்டுரையெ எழுதி இங்கெ கொளுத்தி போட்டாச்சு. அப்புறெமென்னா படிக்க வேண்டியது தானே....
லூவாக் காப்பி (அதான் லுவாக் என்னும் மரநாய் முன்னாடி திண்டு பின்னாடி போட்ட காப்பிக்கொட்டையிலிருந்து செய்யப்படும் விலையுயர்ந்த காப்பி) போல் நம் நாட்டில் உற்பத்தியாகி சந்தையில் விற்கப்படும் எண்ணற்ற பல பொருட்களின் மூலப்பொருட்கள் எவ்வாறு வருகின்றன என்ற பல சந்தேகங்களுக்கு சில உதாரணங்களுடன் கீழே உங்களின் சிந்தனை சிரிப்பிற்காகவும், யூகத்திற்காகவும் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் பொருட்கள் உங்களுக்கு ஞாபகம் இருந்து இங்கு விடுபட்டிருந்தால் அதை மறக்காமல் பின்னூட்டம் மூலம் தொடருங்கள்.
"புலிமார்க் சீயக்காய் தூள்" எப்படி செய்வார்கள் என்றால் சில புலிகளை பிடித்து கூண்டுக்குள் அடைத்து அதற்கு வேறெதுவும் திண்ண கொடுக்காமல் அது கடும்பசியில் இருக்கும் சமயம் சீயக்காயை கொடுத்து திண்ண வைத்து பிறகு அது போடும் விட்டையில் வரும் சீயக்காயை எடுத்து சுத்தம் செய்து அரைத்து தரப்படும் தூளாக இருக்குமோ? "புலி பசித்தாலும் புல்லைத்திண்ணாது" என்பார்கள் (ஆனால் எங்கள் விளம்பரப்புலி எதைப்போட்டாலும் திண்ணுமுள்ளெ..)
"மீசைக்கார தைலம்" எப்படி செய்கிறார்கள் என்றால் இரண்டு பேர் சேர்ந்து நீண்ட மீசையைக்கொண்ட மீசைக்காரரின் மீசையை பிடித்து முறுக்கி அதன் வலி தாங்காமல் வேதனையால் அவர் இடும் கண்ணீரிலிருந்து (கண்ணூரு தண்ணி) செய்வார்களோ என்னவோ? யாருக்கு தெரியும்?
"கோடாலி சோப்பு தைலம்" எப்படி செய்கிறார்கள் என்றால் மரம் வெட்டிய கோடாலியை நன்கு சோப்பு போட்டு கழுவும் பொழுது வரும் நுரையிலிருந்து செய்வார்களோ?
"பச்சைக்கிளி தைலம்" எப்படி செய்கிறார்கள் என்றால் கொஞ்சம் பச்சைக்கிளிகளை பிடித்து அறுத்து வெயிலில் காய வைத்து பிறகு அதை அடுப்பில் சூடுகாட்டும் சமயம் வரும் எண்ணெயிலிருந்து செய்வார்களோ?
"மான் மார்க் குடை" எப்படி செய்கிறார்கள் என்றால் மான்களை பிடித்து அதன் கொம்புகளை உடைத்து அதை மான்மார்க் குடைகளின் கைப்பிடிகளுக்கு வைப்பார்களோ?
"பொன்வண்டு சோப்பு" வயல்வெளியில் பறந்து மேயும் பொன்வண்டுகளை பிடித்து அதன் முட்டையிலிருந்து வரும் ஒரு விதமான திரவத்திலிருந்து தயாரிப்பார்களோ?
"டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி" ஆமை போடும் சாணிப்பியை எடுத்து நன்கு வெயிலில் காய வைத்து பிறகு பொடியாக்கி அதை எந்திரத்தில் போட்டு முறுக்கு போன்று திரித்து எடுக்கிறார்களோ என்னவோ?
"உடும்புத்தைலம்" நெசமா உடும்பிலிருந்து தான் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
"டைகர் பாம்" புலிகள் போடும் பாம்களை(கெட்ட காற்று) அப்படியே பிடித்து அதனை ஆராய்ச்சி கூடத்தில் வேதியியல் மாற்றத்திற்கு மாற்றி அதன் மூலம் செய்கிறார்களோ?
"குதிரை மார்க் லுங்கி" குதிரையின் நீண்ட வால் முடியை நறுக்கி அதை இயந்திரத்தில் பிண்ணி லுங்கியாக நெய்து விற்கிறார்களோ? அப்போ "சங்கு மார்க் லுங்கி" என்று யாரோ கேட்பது போல் தெரிகிறது. கடல் சங்கை எடுத்து நல்லா பொடியாக்கி அதுக்கப்புறம் எழுத வரமாட்டிக்கிது......சங்கு தான் போங்க...
"முதலை மார்க் பனியன், ஜட்டிகள்" செத்துப்போன முதலைகளை சேகரித்து நன்கு வெயிலில் காய வைத்து அதை நார்,நாராக கிழித்து அந்த நாரிலிருந்து செய்யப்படுவதாக சொல்லாமல் சொல்லப்படுகிறது.
பக்கத்துலெ இருக்கும் முதுமலைக்காட்டிற்கே போக முடியவில்லை. அமெரிக்காவின் அமேஜான் காட்டில் விளையும் அரிய வகை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருத்துவ குணம் வாய்ந்த எண்ணெய் என்று கூறி நம்மூர் டி.வி. விளம்பரத்தில் ஒரு எண்ணெய் விற்கப்படுகிறது என்றால் நம்மக்களின் யோசிக்காத தன்மையை எப்படியெல்லாம் விளம்பர உலகம் பயன்படுத்தி தன் சந்தை பொருட்களை விற்பனை செய்ய பல யுக்திகளை கையாளுகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். "கேக்குறவன் கேனையனா இருந்தா எறும்பு கூட ஏரோப்ளேன் ஓட்டுமாம்" என்ற கிராஃபிக்ஸ் கலந்த பழமொழி தான் இங்கு ஞாபகத்து வருது.
இதுக்கு மேலே எழுதுனா நீங்க படிக்க மாட்டியெ...சடப்பா வந்துடும்..அதுனாலெ இத்தோடு விட்டுர்ரேன்....
படிப்பவர்களின் பின்னூட்டம் மூலம் இங்கு மேலும் பல பொருட்கள் விளம்பர சந்தைக்கு வர இருக்கின்றன என்ற எதிர்பார்ப்புடன் என் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் இன்னொரு கட்டுரையில் சந்திப்போம்.
- மு.செ.மு. நெய்னா முஹம்மது.
12 Responses So Far:
"ஏன் கரைபடுறது நல்ல விஷயம் தானே !?"
"ஸ்வேதா அந்தப் பக்கம் போகாதே அம்மா பார்த்த..."
"காசு வசூல் செய்யப் போகுமிடத்தில் அலைந்து அலைந்து செருப்பு தேய்ஞ்சதை சொல்லவும் ஒரு செருப்பு விளம்பரரம் அங்கே !??"
இப்படியான விளம்பரங்களுக்குமிடையேயும் சுண்டியிழுக்கும் சில துளி வினாடிகளில் பிம்பங்களின் ரசனையும் விளம்பரங்களின் உண்டுதானே !
MSM(n) ஆராய்ச்சியும் அதன் அசத்த்லும் சிரிக்கவே வைக்கிறது !
ஸ்.......ஸ்................ஸ்ஸபா... முடியலை , கண்ணை கட்டுது
அதிரைக்காரவுகனு நிரூபிச்சிட்டிய போங்க!
நல்லவேளை இதப்பற்றியெல்லாம் எழுதல:
இதயம் நல்லெண்ணெய்:நல்லெண்ணம் கொண்டவர்களைக் கொன்று அவிங்க இதயத்தை செக்கில் ஆட்டி...( என்னா வில்லத்தனம்)
அணில் ரவா: அணிலின் வாலை நறுக்கி அவாட்ட கொடுத்து பண்ணிய ரவா...
அஸ்ஸலாமு அலைக்கும்,
வீட்டில படிச்சுக்காட்டியதும் ஒரே சிரிப்பு சத்தம் தான் போங்க...
இப்படியும் யோசிப்பீங்களா?
யாசிரே, இந்த பதிவுக்கு நீங்க தான் பொறுப்பு... நெய்னா மறந்த மீதி பெருட்கள் பற்றிய விபரம் நீங்க தான் சொல்லனும்.
கீழ்கண்ட பதிவு சிந்தித்து சிரிப்பதற்காக... அல்ல!. மாறாக ஊடகத்தின் வலிமையை முஸ்லிம்களின் முன் ஆழமாக வைத்து, முஸ்லிம்கள் சிந்திப்பதற்காக!.
படியுங்கள்!. ஊடகத்துறையை முஸ்லிம்கள் எந்தளவு புறந்தள்ளப்பட்டு, அதன் மகிமையை அறியாமல் உள்ளனர் என்பதை ஆணித்தரமாக விளக்கும் கட்டுரை.
//சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முஹம்மத் அவர்கள் ஓர் ஆழமான கருத்தைச் சொல்லி யிருந்தார்.
“யாருடைய கரங்களில் கப்பல் படை இருந்ததோ அவர்கள்தான் 19ஆம் நூற்றாண்டில் சக்திவாய்ந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். விமானப்படை வைத்திருந்தவர்கள் 20ஆம் நூற்றாண்டின் பலசாலிகளாக திகழ்ந்தார்கள். யாரிடம் ஊடக பலம் இருக்கிறதோ அவர்கள்தான் 21ஆம் நூற்றாண்டின் சக்தியாக இருப்பார்கள்.” //
இது சத்தியம்! மற்றும் நிதர்சனம்!!. கூடுதல் விரங்களுக்கு:
ஊடகத்துறை ஒரு புனிதமான பணி!.
http://adiraimujeeb.blogspot.com/2011/06/blog-post_18.html
கோடாலி சோப்பு" அல்ல கோடாலி ச்சாப்பு ...மலேசிய மொழியில் Chop என்றால் ரப்பர் ஸ்டாம்ப் என்று அர்த்தம். தமிழ்நாட்டில் "மார்க்' என்று சொல்வதுபோல்...[ வர வர நான் பேராசிரியர் நன்னன் மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டேனா]
ஒரு கட்டுரையில் இத்தனை மிருகங்களை வதைத்திருப்பதால் - Bro மு.செ.மு. நெய்னா முஹம்மதுக்கு Blue Cross லிருந்து மிரட்டல் வரலாம்.
நல்லவேளை நெஸ் காபி பற்றி சொல்லாமல் விட்டுடீங்க சொல்லி இருந்தா நாறிபோய் இருக்கும்.
"நாம்
அறிந்த அதிரையைவிட
நெய்னா
அறிவித்த அதிரையே அழகு"
என நான் அபிப்பிராயப்பட்டதை மறக்கலாமா?
இதை சபீர் காக்காதான் ஞாபகப்படுத்தினார்கள் அதே தான் இதுக்கும்
லுவா காப்பி குடித்த உணர்வா இல்லெ படித்த உணர்வா!
நமது சிந்திக்கும் திறனைவிட
நெய்னாவுக்கு வரும்
சிந்தனைத்திறனே தனி"பவர்" தான்.(போங்க!)
லுவாகாஃபி இருக்கட்டும்.. அதெல்லாம் நாடு விட்டு நாடு நடக்குற விஷயம். நம்ம ஊரு கடைத்தெருவு-ல ஒருத்தர், புணுகு பூனை வளர்த்து வந்ததையும், அதன் "பின்னாடி" இருக்கும் அந்த "வாசமான" கதையையும் பற்றி யாருக்கேனும் முழு விபரம் தெரிஞ்சா சொல்லுங்களேன்..!!!
லூவாக்காபி இந்த அளவிற்கா வேலை செய்து இருக்கிறது...சகோ.நெய்னா கலக்குறீங்க....
அப்ப பால்பாய்ண்ட் பேனாவெல்லாம் பாலை காய்ச்சி ஒரு பாய்ண்ட்டுக்கு வந்தவுடன் ஒரு பிளாஸ்டிக் குழாய்க்குள் ஊத்திதான் தயாரித்து இருக்காங்க போல
காளிமார்க் சோடா விட்டுட்டியேப்பா, அப்போ உள்ள ஒரே பாட்டில் பானம் அது அதை குடிச்சிட்டு காளிப்பயலுவ உடைச்சு கையிலே வெச்சிக்கிட்டு கலாட்டா பண்ணுவதால் அந்த பேரு வந்ததா இருக்கலாம்.
நெய்னா கேம்லே உள்ள ரூம் அல்லாம தனியா ஒரு ரூம் போட்டு யோசிப்பியோ...
Post a Comment